
பாகம்- 57
விக்ரம், “நான் ஸ்டேஷனுக்கு போய் போலீசை கூட்டிட்டு அங்க வந்துடறேன்”.
“சக்தி நீங்க சீக்கிரமா சுஜிதா வீட்டுக்கு போயிட்டு கல்யாணத்தை நிறுத்த பாருங்க. நான் சீக்கிரமாகவே அங்க வந்துடறேன்” என்றான்.
சக்தி, “கோபமாக என் உயிரே போனாலும் அந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்” என்றான்.
நிலாவை திரும்பிப் பார்த்த விக்ரம் ஜாக்கிரதை என்று தலை அசைத்து விட்டு அங்கிருந்து வேறொரு காரில் ஏறி ஸ்டேஷனை நோக்கி சென்றான்.
போகும் வழி எல்லாம் சக்தி மண்டைக்குள் சுஜிதா டைரியில் எழுதி இருந்த வார்த்தைகளே ஓடிக்கொண்டு இருந்தது.
‘கட்டாயம் சக்தி என்னை தேடி வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவருக்காக தான் நான் காத்துக் கொண்டு இருப்பேன்’ என்ற வார்த்தைகள் அவனை ரொம்பவே வாட்டியெடுத்தது.
சக்தி மனதுக்குள் அப்போ சுஜிதா என்னை ரொம்பவே காதலிச்சு இருக்கா. அதை கூட புரிந்து கொள்ளாமல் நான் இருந்து இருக்கிறேன்.
என்னை மன்னிச்சிடு சுஜிதா என்று நினைக்கும் போதே காற்றோடு அவன் கண்ணீர் துளிகளும் கலந்து சென்றது.
சக்தி நான் செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது என் காதலை அவளிடம் கூறியது மட்டும் தான்.
நானும் அவளை காதலிக்கிறேன் என்று தெரிந்ததால் அவள் தைரியமாக எனக்காக காத்துக் கொண்டு இருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று நினைத்து கொண்டான்.
சக்தி மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்று ஈஸ்வரி வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.
அந்த வீடே திருவிழா கோலத்தில் ஆர்ப்பாட்டமாக இருந்தது. அதை பார்த்த நிலா, “இவ்வளவு பெரிய வீட்டிலயா இருந்து இருக்கா?” என்றாள்.
சக்தி, “ஆமாம், நிலா இவ்வளவு பெரிய வீட்டில் வசதியாக இருந்தவள் நம்ம வீட்டுக்கு வந்து எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கா. நான் அவளை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்” என்றான்.
பிறகு, சக்தி உள்ளே சென்று சுஜிதாவை தேட ஆரம்பித்தான்.
ஊர்காரர்கள் நிறைய பேர் கல்யாணத்திற்காக அங்கு வந்து கொண்டு இருந்ததால் இவர்கள் தனியாக அங்கு தெரியவில்லை.
சக்தி காதலோடு சுஜியை கண்களால் வலை வீசி தேடிக் கொண்டு சென்றான்.
எதிரில் ஒருவன் வருவதை கூட கவனிக்காத சக்தி அவன் மேல் மோதி நின்றான்.
எதிரில் இருந்தவன், ”உன்னை நான் எங்கேயோ பார்த்து இருக்கிறேனே” என்னும் பொழுதே சக்தி அவனை அடித்து இருந்தான்.
அவன் அங்கிருந்து அவசரமாக ஈஸ்வரியை நோக்கி ஓடினான்.
அவனை துரத்திக் கொண்டு ஓடும் போது வழியில் கல்யாண கோலத்தில் ஒருவன் நிற்பதை பார்த்த சக்திக்கு கோபம் கட்டுக்கடங்காம வந்தது.
கோபத்தில் நேராக சென்ற சக்தி மாப்பிள்ளை கோலத்தில் இருந்தவனை சரமாரியாக அறைந்து விட்டான்.
அங்கு இருந்த அவன் ஆட்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தியை அடிக்க சென்றார்கள்.
சக்தி அவர்கள் அனைவரையும் புரட்டி எடுத்துக் கொண்டு இருந்தான். நிலா ஒவ்வொரு அறையாக சுஜிதாவை தேடிக்கொண்டு சென்றாள்.
ஒரு வழியாக சுஜிதா இருக்கும் அரையை கண்டுபிடித்த நிலா, “சுஜி” என்று அழைத்தாள்.
சுஜிதா அழுத முகத்துடனும், கன்னம் பழுத்துப் போயும், கண்கள் எல்லாம் வீங்கிப் போயும் இருந்தது.
அவளை எந்த அளவுக்கு அடித்து இருக்கிறார்கள் என்று அவள் முகத்தைப் பார்க்கும் போதே நிலாவுக்கு தெறிந்தது.
சுஜிதா ஓடிச்சென்று நிலாவை கட்டியணைத்துக் கொண்டாள். நிலா, “நீ எதுக்கும் பயப்படாத நாங்க வந்துட்டோம்ல” என்றாள்.
சுஜிதா, “சக்தி வந்திருக்கானா?” என்று வார்த்தைகள் தந்தி அடித்தபடி பதட்டமாக கேட்டாள்.
நிலா ஆமா என்று தலை அசைத்தாள். பிறகு தான் சுஜிதாவுக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
சுஜிதா கையைப் பிடித்துக் கொண்டு நிலா, “வா இங்க இருந்து போகலாம்” என்னும் போது தான் அவள் கையில் இருக்கும் விஷ பாட்டிலை பார்த்தாள்.
அதிர்ச்சியாக நிலா, “என்ன டி இது?” என்றாள். மெல்லிய குரலில் சுஜிதா, “இங்க என்னை கூட்டிட்டு வந்தவுடனே எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க”.
“சக்தியுடன் என்னால் வாழ முடியாது என்ற சூழ்நிலையில் எனக்கு இதை தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை அதான்” என்றாள்.
நிலா, “பைத்தியமா டி நீ. எனக்கு நீ எவ்வளவு தைரியம் சொல்லி இருக்க”.
“எது சரின்னு படுதோ அதை தைரியமா சொல்லு சித்தியை எதிர்த்து பேசு அப்படி இப்படின்னு எவ்வளவு பேசி இருக்க”.
“உன்னை பார்த்து தான் நான் இப்போ எல்லாம் தைரியமாக இருக்க ஆரம்பித்தேன்”.
“ஆனால், உனக்கு ஏன் டி அந்த தைரியம் வராமல் போச்சு. நீ உங்க அம்மாவை எதிர்த்து பேச வேண்டியது தானே”.
“உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பி வர வேண்டியது தானே”.
“எதுக்காக அவங்களுக்கு அடிமை மாதிரி இங்கேயே இருக்கிற” என்று ஆத்திரமாக நிலா திட்டிக் கொண்டு இருந்தாள்.
சுஜிதா எந்த பதிலும் கூறாமல் மௌனமாகவே இருந்தால். அந்த நேரம் வெளியே இருந்து பயங்கரமாக சத்தம் கேட்டது.
பிறகு, நிலா மற்றும் சுஜிதா இருவரும் ஓடிச்சென்று வெளியே பார்க்க அங்கு சக்தி தனி ஆளாக அனைவரையும் புரட்டி எடுத்துக் கொண்டு இருந்தான்.
சுஜிதா வருவதை பார்த்த சக்தி அடிப்பதை நிறுத்தி விட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த சமயத்தை பயன்படுத்தி அந்த கல்யாண மாப்பிள்ளை சக்தி தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடித்து விட்டான்.
சக்தி தலையில் கை வைத்த படி முட்டிப் போட்டு அப்படியே அமர்ந்து விட்டான். அவன் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.
அந்த காட்சியை பார்த்த சுஜிதா ஓடி சென்று சக்தியை தாங்கிப் பிடித்தாள்.
சுஜிதாவை பார்த்த சக்திக்கு வலி எல்லாம் மரந்து அவன் உயிர் திரும்ப கிடைத்தது போல் இருந்தது.
சக்தி, “சுஜிதா கன்னத்தில் கை வைத்து ரொம்ப பயந்துட்டியா?” என்றான். சுஜிதா அவனை பார்த்து அழுதுகொண்டே இருந்தாள்.
ஈஸ்வரியை தேடி சென்ற அந்த அடியால் மொட்டை மாடியில் யாருடனோ தீவிரமாக ஈஸ்வரி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்.
அந்த அடியாள், “அம்மா கீழே பெரிய கலவரமே நடந்து கொண்டு இருக்கு” என்றான்.
ஈஸ்வரி புரியாமல் அவனைப் பார்த்து, “என்ன டா உளறிக்கிட்டு இருக்க” என்று கத்தினாள்.
மூச்சு வாங்கியபடி அந்த அடியாள், “கீழே நம்ப சுஜிதா ஓட காதலன் வந்து இருக்கிறான்” என்றான்.
ஈஸ்வரி கோபமாக, “இதெல்லாம் ஒரு விஷயமா டா. அவனை அடிச்சு வெளியே தூக்கி போட வேண்டியது தானே” என்றாள்.
அந்த அடியாள், “அம்மா அது வந்து அந்தப் பையன் தான் நம்ம ஆளுங்க எல்லாரையும் இழுத்து போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கிறான்” என்றான்.
கோவமாக சரசரவென கீழே இறங்கி சென்ற ஈஸ்வரி, “டேய்” என்று கர்ச்சனையாக குரல் கொடுத்தாள்.
அந்த சத்தத்தில் அந்த இடமே ஸ்தம்பித்து போய் இருந்தது.
ஆனால், அதை எல்லாம் சட்டை செய்யாமல் சுஜிதாவும் சக்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அதை பார்த்து கோபம் அடைந்த ஈஸ்வரி, சுஜிதா தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து தூரம் தள்ளினார்.
நிலா ஓடி சென்று சுஜிதாவை பிடித்தாள். சக்தி, “சுஜி பார்த்து” என்று கத்திக் கொண்டே எழுந்து நின்றான். ஈஸ்வரியை பார்க்க நிலாவுக்கும் பயமாக தான் இருந்தது.
நிலா, “சுஜி நீ எதுக்கும் பயப்படாத கண்டிப்பா சக்தி மாமா உன்னை இங்க இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போவாங்க” என்று அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
ஈஸ்வரி, “டேய் யாருடா நீ?. என் வீட்டுக்கு வந்து என்னோட ஆளுங்களையே அடிச்சுக்கிட்டு இருக்க. உனக்கு என்ன அவ்வளவு தைரியமா?” என்றாள்.
சக்தி காலரை தூக்கி விட்ட படி, “நான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும் என்றால் உங்க பொண்ணோட புருஷன்” என்றான் கம்பீரமாக.
ஈஸ்வரி, “அடச்சீ… நீ எல்லாம் என் வீட்டு மாப்பிள்ளையா? உனக்கு அதுக்கான அருகதையே கிடையாது”.
“நீயாக இங்க இருந்து போய் விட்டாள் உனக்கு நல்லது. உயிரோட ஆச்சும் இருக்கலாம் இல்லை என்றால் நானாக உன்னை இங்க இருந்து வெளியே அனுப்பினால் நீ பினமாக தான் போவ” என்று மிரட்டினார்.
ஆனால், அதற்கெல்லாம் அசரும் ஆள் இவன் கிடையாதே. சக்தி கண்களில் ஒரு துளி பயம் கூட இல்லை. அதை பார்க்கும் பொழுது ஈஸ்வரிக்கு கட்டுக்கடங்காமல் கோபம் தலைக்கு ஏறியது.
நிலா, “நீ எல்லாம் ஒரு அம்மாவா?. அம்மா என்பதற்கு அர்த்தம் தெரியுமா?. உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு”.
“உன் பொண்ணு என்று கூட பார்க்காமல் இப்படி அவள் வாழ்க்கையவே அழிக்க பாக்குற”.
“உனக்கு அசிங்கமா இல்லையா? பெத்த பொண்ணு என்று கூட பார்க்காமல் அவளை வைத்து வியாபாரம் பண்ண பாக்குறிங்க”.
“உங்களுக்கு தெரியுமா? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவள் புருஷனோடு சேர்ந்து இத்தனை நாட்களாக வாழ்ந்துகிட்டு இருக்கிறா” என்றாள்.
ஈஸ்வரி, “இப்போ என்ன இவன் கூட சேர்ந்து நாலு நாள் ஒண்ணா இருந்துட்டியா”.
“அதை பத்தி எனக்கு ஒன்னும் கவலை இல்லை” என்று கூறி முடிக்கும் போதே சக்தி கோபமாக ஈஸ்வரியை அடிக்க கையை ஓங்கினான்.
அதறகுள் நிலா ஈஸ்வரி கண்ணத்தை பதம் பார்த்து விட்டாள்.
நிலா செய்த காரியத்தில் கோபம் கொண்ட ஈஸ்வரி அவளை பளார் என அறைந்து அவளை பிடித்து கீழே தள்ளி விட்டாள்.
கீழே விழ சென்ற நிலாவை விழாமல் தாங்கி பிடித்தான் விக்ரம்.
ஈஸ்வரி, நிலாவை பிடித்து கீழே தள்ளி விட அந்த சமயம் சரியாக விக்ரம் வந்து விட்டான்.
விக்ரம் மற்றும் சக்தி ஒன்று சேர்ந்த அனைவரையும் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஈஸ்வரி, “ஏய் சுஜிதா என்ன டி ஆளுங்களை வச்சு என்னையவே அடிக்கரியா” என்றாள்.
அப்போது தான் போலீஸ் அரஸ்ட் வாரன்ட் உடன் உள்ளே நுழைந்தார்கள்.
போலீசை பார்த்தவுடன் ஈஸ்வரி கல்யாண மாப்பிள்ளை தான் போலீசை வர வைத்து இருக்கிறான் என்று தவறாக நினைத்துக் கொண்டாள்.
ஈஸ்வரி, “இவனுங்களை எல்லாம் முதலில் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போங்க” என்றாள்.
(ஹலோ மக்களே இந்த கதை இன்னும் இரண்டு அத்தியாயங்களுடன் முடிந்து விடும். கதை படிக்கும் அனைவரும் மறக்காமல் உங்கள் கருத்தை பகிருங்கள் நண்பர்களே.)

