
பாகம் – 56
நேராக பத்மாவிடம் சென்ற சுஜிதா, “அம்மா ரொம்ப நன்றி மா. நேத்து நைட்டு என்னை இங்கேயே தங்க விட்டதற்கு”.
அப்புறம் இன்னொரு விஷயம் என்று தயங்கியபடி “நேற்று எனக்கு சரியா தூக்கம் வர வில்லை”.
“அதனால் அந்த அறையில் இருந்த புகைப்படம் எல்லாவற்றையும் நான் தான் அப்படி மாட்டி வைத்தேன்”.
“உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் கழட்டி வச்சிடுங்க” என்றாள்.
பத்மா, “சிரித்த படியே நீ அப்படி மாட்டி வைத்து இருக்கிறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு மா” என்றார்.
சுஜிதா மனதுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. பத்மா, “சரி சாப்பிட்டு போகலாம் வந்து உட்காரு மா” என்று டைனிங் டேபிளில் அமர வைத்தார்.
பத்மா அனைத்து உணவுகளையும் சுஜிதாவுக்கு பரிமாறினார். சுஜிதா மனம் சந்தோஷமாக இருந்தது.
இது போல் ஒரு குடும்பம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வருத்தத்துடன் கண்கள் கலங்கியபடி சாப்பிட ஆரம்பித்தாள்.
பத்மா, “இந்த சாப்பாடு எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கா மா?” என்றார்.
சுஜிதா, “எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு மா. நீங்க செஞ்சுருக்க இந்த பூரி சாம்பார், மசால் வடை, பொங்கல் எல்லாமே எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு” என்றாள்.
சுஜிதாவுக்கு சட்டென்று அவள் வீடு நினைவுக்கு வந்து சென்றது.
எப்போதும் தனி அறையில் அவர்கள் என்ன உணவு தருகிறார்களோ அதை தான் சாப்பிடுவாள்.
உணவு பிடித்து இருக்கிறதா? என்று யாரும் கேட்டது கிடையாது. பிடித்த உணவை சமைத்தும் கொடுத்தது கிடையாது.
சுஜிதா கண்கள் கலங்கியபடி வாய்விட்டே கூறிவிட்டாள், ”எனக்கு யாரும் இதுபோல் உட்கார வைத்து சமைத்து போட்டு பாசமாக பரிமாறினதே இல்லை”.
“என் மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு ரொம்ப நன்றி மா” என்று கண்களை தொடைத்தபடி சாப்பிட்டால்.
அந்த வார்த்தையில் ராமலிங்கத்திற்கும் மனம் வருத்தத்தை தான் உண்டாக்கியது.
திடீரென சுஜிதாவுக்கு புரையேரியது ராமலிங்கம் ஒரு புறம் சுஜிதா தலையை தட்டினார்.
மறுபுறம் பத்மா ஓர் டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார் இருவரும் ஒரு சேர “பாத்து சாப்பிடு மா” என்றார்கள்.
அந்தப் பாசத்தில் சுஜிதாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. மெல்லி புன்னகையுடன் சுஜிதா அங்கிருந்து எழுந்து விட்டாள்.
பத்மா, “ஏன் மா சாப்பிடாமல் பாதையிலேயே எழுந்துட்ட?” என்றார்.
சுஜிதா, “இல்ல மா எனக்கு போதும். மனசும், வயிறும் ரொம்பவே நிறைஞ்சு போச்சு”.
“இது போல் என்னை யாரும் பாசமாக பாத்துக்கிட்டதே கிடையாது. உங்க பொண்ணு ரொம்பவே கொடுத்து வச்சவங்க”.
“அதனால் தான் இந்த மாதிரி ஒரு அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு. நான் தான் என்ன பாவம் பண்ணேன் என்று எனக்கே தெரியவில்லை”.
“என் வாழ்க்கையில் எனக்கு” என்றவள் எதையோ யோசித்தபடி கண்களை துடைத்துக் கொண்டு, “சரி நான் கிளம்புறேன் மா” என்று இரண்டு அடி எடுத்து வைத்தவள் கையை எட்டிப் பிடித்தார் பத்மா.
சுஜிதா புரியாமல் திரும்பி பத்மாவை பார்த்தாள். பத்மா, “நான் கேட்கிறேன் என்று என்னை தப்பாக நினைக்காதே”.
“உனக்கு யாருமே இல்லை என்று சொன்னியே மா இனிமேல் அப்படி சொல்லாத மா உனக்கு நாங்க இருக்கிறோம் ஒரு அம்மா, அப்பாவாக”.
“நீ எங்களுக்கு பொண்ணா எங்க கூடவே இருக்கறியா?” என்றார். தாயக்கத்துடன்.
சுஜிதா, “என்ன மா சொல்றீங்க? என்று திகைத்து போய் அது எப்படி சரியாக வரும்” என்றாள்.
ராமலிங்கம், “எங்க பொண்ணு தான் எங்களை அனாதையாக விட்டுட்டு போய்ட்டா. நீ ஆச்சு எங்க கூடவே எங்க பொண்ணா இருக்கியா மா?” என்றார்.
சுஜிதா யோசனையாக என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்களைப் பார்த்தாள்.
பத்மா, “என் பொண்ணுக்கும் உன்னோட வயசு தான் இருக்கும். அவளும் பார்ப்பதற்கு உன்னை போல் தான் இருப்பாள்”.
“எங்களுக்கு என்று இந்த உலகில் யாரும் இல்லை. நீ எங்க கூட எங்க பொண்ணா இருக்கியா? உன்னை நாங்க நல்லா பார்த்துக்கிறோம்”.
“எங்க பொண்ணு இல்லை என்ற கவலை எங்களுக்கு கொஞ்சம் ஆச்சு குறையும் மா” என்று அழுதார்.
சுஜிதாவுக்கு அவர்களின் வார்த்தையில் உள்ள பாசம் நன்றாகவே புரிந்தது. இதுவரை தன் மேல் யாரும் இவ்வளவு பாசத்தை காட்டியது கிடையாது.
இவர்கள் பாசத்துடன் இப்படி கேட்கும்பொழுது இவர்களிடம் முடியாது என்று மறுப்பு கூறவும் வாய் வரவில்லை.
அது மட்டும் இல்லாமல் நான் இங்க இருந்தால் அவ்வளவு சீக்கிரம் ஈஸ்வரி அம்மாவால் என்னை கண்டுபிடிக்க முடியாது.
எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்த சுஜிதாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் தோன்றியது என்று யோசித்து சரி என்று ஒப்புக் கொண்டாள்.
ராமலிங்கத்திற்கும், பத்மாவுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை சுஜிதாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்கள்.
பிறகு, இவர்கள் ஒரே குடும்பமாகவே மாறியும் விட்டார்கள். அன்புக்கும், பாசத்திற்கும் ஒரு குறையும் இல்லாத வாறு அவளைப் பார்த்துக் கொண்டார்கள்.
இவள் சந்தோஷமே இவர்கள் சந்தோஷமாக மாறிவிட்டது. சுஜிதா எது வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ அது அவளுக்கு முழுமையாக கிடைத்து விட்டது என பத்மா மொத்தமாக கூறி முடித்தார்.
பிறகு, நிலா, “அப்படின்னா அவ இந்த ஊருக்கு வரும்போது கல்யாணத்தை நிறுத்திட்டு தான் வந்து இருக்கா”.
“இப்போ மறுபடியும் அவளை கூட்டிட்டு போய் இருக்காங்க என்றால் கண்டிப்பா அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்து வாங்க”.
“நம்ம அதுக்குள்ள அவளை காப்பாத்தியே ஆகணும்” என்றாள்.
சக்தி, “நான் இப்போவே போய் என் சுஜியை காப்பாற்றி கூட்டிக் கொண்டு வருகிறேன்”.
பத்மாவை பார்த்த சக்தி, “உங்களுக்கு அவளோட வீட்டு அட்ரஸ் தெரியுமா?” என்றான். நிலா, “இந்த டைரியில் இருக்கிறது” என்றாள்.
விக்ரம் அதை வாங்கி பார்த்தான். அதில் சுஜிதா, “நிச்சயமாக என் அம்மா நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து என்னை கூட்டிச் சென்று விடுவார்கள்”.
“அதற்குள் ஒருவேளை நான் காதலிக்கின்ற சக்தி என்னை கல்யாணம் செய்து கொண்டால் கட்டாயம் என்னை காப்பாற்ற சக்தி வருவார் என்ற நம்பிக்கையில் இந்த அட்ரஸை நான் எழுதி வைக்கிறேன்” என்று அவள் விலாசத்தை எழுதி இருந்தால்.
பிறகு, சக்தி அந்த அட்ரஸை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்.
விக்ரம், சக்தி தோள் பட்டையில் கை வைத்து, “ஒரு நிமிஷம் நானும் வரேன் உங்களுடன்” என்றான்.
சக்தி, “சரி வாங்க” என்றான். நிலா, “துருவ் நானும் வருகிரேன்” என்றாள். விக்ரம், “அதெல்லாம் வேண்டாம் இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணக் கூடாது. நீ இங்கேயே இரு” என்றான்.
நிலா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நானும் உங்க கூட வரேன். என்னோட உடம்பு நார்மலாவும், ஆரோக்கியமாகவும் இருக்கு என்று டாக்டர் சொல்லிட்டாங்க”.
“அதனால் எந்த பிரச்சினையும் இல்லை எனக்கு இங்க இருந்தால் ரொம்ப பயமாகவே இருக்கும்”.
“நானும் சுஜிதாவை பார்த்தே ஆகணும். அவளை அங்க என்ன கஷ்டப் படுத்துறாங்க என்று நினைத்தாலே ரொம்ப பயமா இருக்கு” என்று வம்பு பண்ணி இவர்களுடன் சேர்ந்து நிலாவும் கிளம்பினாள்.
இங்கு இவர்கள் மூன்று பேரும் நள்ளிரவில் சுஜிதாவை தேடி கிளம்பினார்கள்.
சுஜிதா தூக்கம் இல்லாமல் அழுது கொண்டு இருந்தாள். ஆனால், சக்தி கட்டாயம் காப்பாற்ற வருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தால்.
ஒருவேளை அவன் வரவில்லை என்றால் இந்த விஷத்தை குடித்து உயிரை விட்டுவிடலாம் என்ற எண்ணத்தோடும் இருந்தாள்.
அந்த விஷ பாட்டிலை பார்க்கும்பொழுது அவளுக்கு பழைய நினைவுகள் வந்து சென்றது.
ஒரு நாள் அவள் பள்ளிக்கூடம் முடித்து விட்டு திரும்பிய பொழுது அவள் அம்மா ஏதோ ஒரு ஆளுடன் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டால்.
ஈஸ்வரி, “இவ்வளவு சீக்கிரம் எல்லாம் அவளை கல்யாணம் பண்ணி வைக்க முடியாது”.
“இப்போ தான் ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருக்கா. இப்போவே கல்யாணம் பண்ணால் போலீஸ் கேஸ் ஆகிடும் என்ன புடிச்சு ஜெயில்ல போட்டுவிடுவாங்க”.
“அதனால் ஸ்கூல் புல்லா முடிக்கட்டும் அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று கூறினாள்.
எதிரில் இருந்த அந்த ஆள், “எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நீங்க வாக்கு மாறக்கூடாது. உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கவில்லை என்று எந்த ஒரு காரணமும் கூறக்கூடாது”.
“இதுவரைக்கும் நீங்க என்கிட்ட சொலையா பத்து கோடி வாங்கி இருக்கீங்க”.
“என்னைக்கு இருந்தாலும் உங்க பொண்ணு எனக்கு மட்டும் தான். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம் என்று நெனைக்காதிங்க”.
“அப்படி ஒரு என்னம் உங்க மனதில் இருந்தாலா நீங்க சந்திக்கிற பிரச்சனை ரொம்ப பெருசா இருக்கும்” என்று மிரட்டும் தோணியில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பிறகு, ஈஸ்வரி வேகமாக சுஜிதா அறையை நோக்கி சென்றார். அதை பார்த்து சுஜிதா ஓடிச்சென்று எப்பொழுதும் போல் கட்டில் மேல் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
உள்ளே சென்ற ஈஸ்வரி அந்த ஆள் மேல் இருக்கும் கோபத்தில் சுஜிதா கண்ணத்தில் பளார் என்று ஓர் அறையை வைத்தாள்.
அதில் பயந்து நடுங்கிய படி நின்று இருந்தால் சுஜிதா. ஈஸ்வரி, “நீ மட்டும் எனக்கு பையனாக பிறந்து இருந்தால் இது போல் கண்டவனும் என்கிட்ட திமிராக பேசி இருப்பானா?. சரி அதை எல்லாம் விடு”.
“இங்க பாரு டி இப்போவே மனசுல நல்லா பதிய வச்சுக்கோ நீ இந்த பள்ளிக்கூடத்தை முடித்த உடனே உனக்கு கல்யாணம் புரிஞ்சுதா”.
“நான் யாரை கை காட்டுறேனோ அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
அடுத்த நாள் சுஜிதா பள்ளிக்கூடம் சென்ற பொழுது தான் இந்த விஷத்தை வாங்கி அவள் பையில் வைத்தவள் இப்போ வரை இந்த பாட்டிலை அவள் கையிலே தான் தினமும் வைத்து இருக்கிறாள்.
ஏனெனில், அந்த கிழவனை திருமணம் செய்வதற்கு நான் செத்து விடலாம் என்று யோசித்தால்.
அதே சமயம் ஈஸ்வரி ஆட்களை அனுப்பி தன்னை கண்டுபிடித்து விட்டாள் மறுபடியும் கல்யாணம் என்ற பெயரில் தன்னை நரகத்தில் தள்ளி விடுவார்கள் என்ற சந்தேகத்தில் இந்த பாட்டிலை கையிலே வைத்திருந்தால்.
யாருக்கும் காத்து இல்லாமல் கதிரவன் தன் தலையை வெளியே நீட்டிட சுஜிதாவுக்கு ஒவ்வொரு நொடியும் உயிர் போய் உயிர் வருவது போல் இருந்தது.
ஈஸ்வரி ஆட்களை அனுப்பி சுஜிதாவை மனக்கோளத்தில் தயாரிக்க சொல்லிவிட்டாள். அதேபோல் சுஜிதாவை மணப்பெண்ணாக மாற்றி விட்டார்கள்.
கல்யாண ஏற்பாடு எல்லாம் வீட்டில் தடபுரமாக நடந்து கொண்டு இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சுஜிதா ஒரு புறம் அழுது கொண்டு இருந்தாள்.
அவள் மனதில் சக்தி வருவான் சக்தி வருவான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அவளுக்கு தைரியம் இழக்கும் போதெல்லாம் இதை சொல்லிக் கொண்டே இருந்தாள்.
சக்தி காரை புயல் வேகத்தில் ஓட்டிக்கொண்டு இருந்தான். அதில் கார் கொஞ்சம் குலுங்க நிலா ஸ்ஸ்ஆஆ என்று வாயை விட்டு முனங்கினாள்.
அந்த டென்ஷனிலும் சக்தி நிலாவை கவனித்து கொஞ்சம் மெதுவாக காரை ஓட்டினான்.
விக்ரம் அவனுக்கு தெரிந்த ஆந்திரா போலீஸ்க்கு போனில் தொடர்பு கொண்டு சுஜிதா வை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூறி இந்த கல்யாணத்தை நிறுத்துமாறு கூறினான்.
அந்த போலீஸ், “மச்சான் நீ சொல்றது பெரிய குடும்பம் ஆச்சே டா. நீ நேர்ல வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தாள் மட்டும் தான் அவங்களை தொடவே முடியும்”.
“நீ இப்படி போன்ல சொல்றது மூலியமா எல்லாம் என்னால் எந்த ஒரு ஆக்ஷன்னும் எடுக்க முடியாது சாரி டா” என்றான்.
விக்ரம், “சரி டா இன்னும் பத்து நிமிஷத்துல உன் ஸ்டேஷனில் நான் இருப்பேன்” என்று போனை துன்டித்தான்.
ஈஸ்வரி வீட்டில் ஐயர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.

