Loading

பாகம் – 55

 

சுஜிதா, “இல்லப்பா தேட மாட்டாங்க எனக்கு என்று யாரும் இல்லை. நான் ஒரு அனாதை” என்றாள் கண்கள் கலங்கியபடி. 

 

மேலும் பேச்சை தொடர்ந்தாள், “நான் வர வழியில் உங்க கார் ஆக்சிடென்ட் ஆகி எரிஞ்சுகிட்டு இருக்கிறதை பார்த்துதான் உங்களை எல்லாம் காப்பாற்றினேன்” என்றாள்.

 

பிறகு, பத்மா அனைவருக்கும் இரவு உணவை வைத்துவிட்டு சாப்பிடுமாறு அழைத்தார். ராமலிங்கம் மற்றும் சுஜிதா இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 

 

சுஜிதா, “நீங்க தப்பா நினைக்க வில்லை என்றால் நான் ஒன்று சொல்லட்டுமா?” என்றாள் தயக்கத்துடன்.

 

பத்மா, “சொல்லு மா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீ எங்களுக்காக ஹாஸ்பிடலில் இருந்து ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்க”. 

 

“உனக்கு நாங்க ரொம்பவே நன்றி கடன் பட்டு இருக்கிறோம். உன்னை எப்படி நாங்க தப்பாக நினைப்போம்” என்றார்.

 

சுஜிதா, “நான் ரொம்ப தூரம் போகணும் இரவு நேரத்தில் போறதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்”. 

 

“அதனால் என்று தயங்கிய வாறு இன்னைக்கு நைட்டு மட்டும் நான் இங்கேயே தங்கிக்கவா? நாளைக்கு காலையில் போய்டுரேன்” என்றாள்.

 

ராமலிங்கம், “இது என்னமா கேள்வி உன் இஷ்டப்படி நீ தங்கிக்கோ” என்றார். 

 

பிறகு அனைவரும் உறங்க சென்று விட்டார்கள். சுஜிதா உறங்குவதற்காக பத்மா தன் மகளின் அறையை காட்டினார்.

 

உள்ளே சென்ற சுஜிதா அந்த அரையை சுற்றிப் பார்த்தாள். அங்கு ஒரு டேபிளின் மேல் புகைப்பட ஆல்பம் ஒன்று இருந்தது. 

 

அதை எடுத்து திறந்து பார்த்த சுஜிதாவுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. இவர்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை பற்றி.

 

ராமலிங்கம் மற்றும் பத்மா அவர்கள் மகளுடன் ரொம்பவே ஆனந்தமாக இருப்பது போல் நிறைய புகைப்படம் அங்கு குவிஞ்சுக் கிடந்தது. 

 

அது அனைத்தையும் பார்த்த சுஜிதா இந்த பெண்ணாக நான் இருந்து இருக்கக் கூடாதா. 

 

அந்த பெண் கொஞ்சம் நாள் வாழ்ந்து இருந்தாலும் ரொம்ப நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து இருக்கிறாள். 

 

இதை எல்லாம் நினைத்து வருத்தத்துடன் படுத்து தூங்குவதற்காக கண்களை மூடினாள். ஆனால், அவளுக்கு தூக்கம் தான் வர மறுத்தது. 

 

நாளை எங்கு செல்வது எப்படி வாழ்க்கையை வாழப் போகிறோம் என்ற பயம் அதிகரிக்க அவளுக்கு இரவு முழுக்க துங்கா இரவாக மாறிப்போனது.

 

சிறிது நேரம் கழித்து பத்மா தன் அறையை நோக்கி சென்றார். ராமலிங்கம் கட்டிலில் அமைதியாக தன் மகளை நினைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். 

 

அவர் அருகில் சென்ற பத்மா, “என்னங்க எனக்கு ஒன்னு தோன்றுது” என்றார். ராமலிங்கம், “என்ன சொல்லு?” என்றார். 

 

மேலும் பேச்சை தொடர்ந்த பத்மா, “அது வந்து என்று வார்த்தைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்த வாறு இந்த பொண்ணு சுஜிதாவை நம்ம வீட்டிலேயே இருக்க சொல்லலாமா?”.

 

“இப்போது நமக்கு என்றும் யாருமே இல்லை. அதேபோல் அந்த பொண்ணுக்கும் பெத்தவங்க என்று யாருமே இல்லை”. 

 

“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. அவளுக்கு அப்பா அம்மாவாக இருந்து நம்ம பொண்ணு மாதிரி அவளை சந்தோஷமாக பாத்துக்கலாமா?”. 

 

“நமக்கும் நம்ம பொண்ணு இறந்துட்டா என்ற கவலை கொஞ்சமாச்சும் குறையும்” என்றார்.

 

ராமலிங்கம், “என்ன பேச்சு பத்மா இதெல்லாம். அந்த பொண்ணு பெரிய மனசு பண்ணி நமக்கு உதவி பண்ணி இருக்கு”. 

 

“அது கிட்ட போயிட்டு நீ எங்க கூடவே எங்க பொண்ணாவே இருந்துருன்னு சொன்னால் அந்த பொண்ணு நம்பளை பற்றி என்ன நினைக்கும்”.

 

“உதவி பண்ணினால் இவங்க என்ன நம்பல இப்படி இங்கேயே இருக்க சொல்றாங்களே என்று தப்பாக நினைக்காதா?”. 

 

“நாளைக்கு அந்த பொண்ணு இங்க இருந்து கிளம்புறேன்னு சொல்லி இருக்கு. அது கிட்ட அடிக்கடி இங்க வந்து போ மா எங்களுக்கு என்றும் யாருமே இல்லை”. 

 

“நீ வந்து போனால் எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அப்படின்னு சொன்னால் ஆச்சு எப்போ ஆச்சும் வரும்”.

 

“இப்படி எங்க கூடவே இரு என்று சொன்னால். அந்தப் பொண்ணு இவங்க என்ன இப்படி எல்லாம் சொல்றாங்க என்று பயந்து போய் நம்ம வீட்டுக்கு வராமலே போயிட்டா என்ன பண்றது பத்மா”.

 

“நான் சொல்றது உனக்கு புரியும் நினைக்கிறேன். நீ சொல்வதெல்லாம் சரி பட்டு வராது”. 

 

“ஒழுங்கா படுத்து தூங்குகிற வேலையை பாரு” என்று ராமலிங்கம் மௌனமாக படுத்து விட்டார்.

 

ஆனால், ராமலிங்கம் மனதிற்குள்ளும் பத்மா சொல்வது போல் அந்த பொண்ணு மட்டும் இங்கேயே இருந்துவிட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இருக்காது. 

 

என்னோட பொண்ணு மறு ஜென்மம் எடுத்து வந்தது போல் இந்த பொண்ணை நான் ரொம்ப சந்தோஷமாக வைத்து பார்த்துப்பேன். 

 

ஆனால், அதெல்லாம் நடக்காத விஷயம் என்று தெரிந்தும் என் மனம் ஆசைப்படுகிறது என்று நினைத்துக் கொண்டே உறங்கினார்.

 

பத்மா, ராமலிங்கம் கூறியதில் மனம் உடைந்து மேலும் அழுது கொண்டே படுத்து இருந்தவர்.

 

அன்று சுஜிதா தன்னுடன் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் நினைத்துப் பார்த்தார். 

 

ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு அனைவரும் வந்து இறந்து போன என் பொண்ணை பார்த்துட்டு சென்று கொண்டு இருந்தார்கள். 

 

அந்த நேரத்திலும் சுஜிதா மட்டும் தான் டாக்டர் கொடுத்த மாத்திரையை கொடுத்து போடுமாறு அக்கறையாக கூறினாள். 

 

என்னோட பொண்ணு உயிரோட இருக்கும் பொழுதும் இதேபோல் என்னிடம் அக்கறையாக தான் நடந்து கொள்வாள் எனக்கு ஒன்னு என்றால் துடித்து விடுவாள். 

 

அதே போல் காலையில் சாப்பிடாமல் நான் மயங்கியவுடன் சுஜிதா, ‘என் கன்னத்தில் அம்மா அம்மா’ என்று தட்டி  ‘இதற்குத்தான் உங்களை சாப்பிட சொன்னேன்’ என்று பதட்டமாக கூறினாள்.

 

அந்த பதட்டத்துடன் சுஜிதா கூறிய வார்த்தைகள் எல்லாம் என்னுடைய பொண்ணு என்னிடம் திரும்ப வந்து விட்டது போல் ஓர்  உணர்வு தோன்றியது என்று நினைத்து அழுதாள்.

 

இப்படி அனைத்தையும் யோசித்துக் கொண்டு இருந்த பத்மா கடிகாரத்தை பார்க்க மணி 6 ஆகிவிட்டது. 

 

இரவு முழுக்க நான் தூங்காமல் இப்படியேவா விழித்துக் கொண்டு இருந்தேன் என்று நினைத்து  நேராக சுஜிதாவை பார்க்க சென்றார்.

 

சுஜிதா அரை கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். சுஜிதா நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். 

 

உள்ளே சென்று அவள் முடியை வருடி முத்தம் கொடுத்து விட்டு திரும்பிய பத்மா செவுற்றில் அழகாக புகைப்படம் ஆங்காங்கே மாட்டியிருந்தது. 

 

தன் மகள் எப்படி மாட்ட வேண்டும் என்று சொன்னாலோ அதேபோல்  இப்பொழுது மாட்டி இருந்தது.

 

அதைப் பார்த்த பத்மாவுக்கு மேலும் துக்கம் தொண்டையை அடைத்தது. நேராக ஓடிச்சென்று பதட்டமாக ராமலிங்கத்தை எழுப்பினார். 

 

ராமலிங்கம், “என்ன டி?. ஏன் பதட்டமாக இருக்க?” என்று அவசரமாக எழுந்து அமர்ந்தார். 

 

பத்மா, “அங்க நம்ம பொண்ணு அறையில் சுவற்றில் பாருங்க” என்று ராமலிங்கம் கையை பிடித்து அழைத்துச் சென்று அதை காண்பித்தார். 

 

ராமலிங்கத்திற்கு ஒரு நிமிடம் தன் மகளே வந்து இந்த புகைப்படம் அனைத்தையும் செவுற்றில் அடுக்கி இருப்பாலோ என்று தான் தோன்றியது.  

 

பத்மா, “பாத்திங்களா இந்த புகைப்படம் எல்லாம் சுவற்றில் மாட்டலாம் என்று நம்ம பொண்ணு சொல்லும் பொழுது எல்லாம் நீங்க வேண்டாம் வேண்டாம் என்று தான் சொல்லுவீங்க”. 

 

“ஆனால், நம்ப ஊருக்கு கிளம்பின அன்னைக்கு தான் இந்த புகைப்படம் மொத்தத்தையும் நம்ம பொண்ணு அலமாரியில் இருந்து எடுத்து இது எல்லாத்தையும் நான் சுவற்றில் மாட்டுகிறேன் அப்பாக்கு சர்ப்ரைஸ் தரலாம் என்று என்னிடம் கூறினால்”.

 

“அந்த நேரத்தில் தான் திடீர் என்று நீங்கள் போன் செய்து அவசரமாக வெளியில் போகனும் என்று கூப்பிட்டீங்க”. 

 

“அதனால் இது எல்லாத்தையும் அப்படியே போட்டுவிட்டு வந்துட்டோம். நம்ம பொண்ணு வந்த இடத்துல தான் ஆக்சிடென்ட் ஆகி நம்ம பொண்ணு நம்மை விட்டு போயிட்டா”.

 

“ஆனா, இப்போ இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா. இவளுக்கு முன்ன பின்ன இந்த ரூம் எப்படி இருந்தது என்று கூட தெரியாது”. 

 

“ஆனாலும் இந்த பொண்ணை பாத்தீங்களா. நம்ம பொண்ணு எப்படி  அடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னாலோ அதே போல் இந்த பொண்ணு அடுக்கி வச்சிருக்கா”.

 

“இதிலிருந்தே தெரியலையா வேறு உருவத்தில் கடவுள் நமக்கு இந்த பொண்ணை நம்ம பொண்ணாக திரும்ப கொடுத்திருக்கிறார். எனக்கு அப்படி தான் தோண்றுது” என்றாள் அழுதுக் கொண்டே.

 

ராமலிங்கம், “இங்கு பாரு பத்மா நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என்னும் பொழுதே.

 

பத்மா, “நீங்க எதுவும் பேச வேணாம். நான் முடிவு பண்ணிட்டேன் இந்த பொண்ணு கிட்ட நான் கட்டாயம் கேட்க தான் போகிறேன்” என்றார்.

 

ராமலிங்கம் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டார். பத்மா தன் மகளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் காலையிலே தடபுடலாக தயார் செய்தார்.

 

சுஜிதா எழுந்து அறையில் மாட்டி இருக்கும் புகைப்படம் அனைத்தையும் பார்த்துவிட்டு. 

 

நம்ம வேறு தேவையில்லாமல் அவசரப்பட்டு நைட்டு முழுக்க தூக்கம் வரவில்லை என்று இதையெல்லாம் மாட்டி வைத்து விட்டோம். 

 

இதை எல்லாம் பார்த்து இவங்க என்னிடம் கோபித்துக் கொள்வார்களா என்னவென்று  தெரியலையே என்ற பயத்துடனே வெளியே வந்தாள். 

 

பத்மா தன் மகளின் ஆடையில் இருந்து ஒன்றை எடுத்து சுஜிதாவிடம் கொடுத்து, “குளிச்சிட்டு இதை போட்டுக்கோமா” என்றார். 

 

சுஜிதா, “இல்ல வேண்டாம் மா. நான் கிளம்புகிறேன் மணி ஆகிடுச்சு” என்றாள். 

 

பத்மா, “நான் சொல்றதை கேளு. அம்மா சொன்னாள் கேட்க மாட்டியா போய் குளிச்சிட்டு இதை போட்டுட்டு வா” என்றவுடன் சுஜிதா மறு வார்த்தை பேசாமல்  உள்ளே சென்று விட்டாள். 

 

பத்மா தன் கணவரை பார்த்து சிரித்த வாறு, “பாத்தீங்களா நான் சொன்னவுடன் மறுவார்த்தை பேசாமல் உடனே போயிட்டா” என்று சந்தோஷமாக கூறினார்.

 

ஆனால், பத்மாவுக்கும் சிறு பதட்டம் இருந்துக் கொண்டே தான் இருந்தது. சுஜிதாவை இங்கேயே இருக்குமாறு கூறினாள். 

 

அதற்கு ஒற்றுக் கொள்வாளா? அல்லது நம்மளை தப்பாக நினைத்து விடுவாளா? என்ற பயம், டென்ஷன் என அனைத்தும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. 

 

சுஜிதா குளித்து தயாராகி வெளியே தன் பையுடன் வருவதை பார்த்த பத்மா மற்றும் ராமலிங்கத்துக்கு கண்கள் கலங்கியது. 

 

ஏனெனில், சுஜிதா அந்த உடையில் வருவது அவர்கள் கண்களுக்கு அச்சசல் தன் சொந்த மகளைப் பார்ப்பது போலவே தான் தோன்றியது.

 

அவள் தோற்றமும், நடையும், பாவனையும் என அனைத்தும் அவளைப் போலவே இருந்தது. 

 

அந்த நிமிடம் ராமலிங்கம் மனதிற்குள் பத்மா கூறியது போல் சுஜிதாவிடம் கேட்டு விடலாமா இங்கேயே  எங்களுடன் இருக்குமாறு என்று நினைத்தக் கொண்டார். 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்