Loading

பாகம் – 54

 

நிலா, “ஆமாம், மா கொஞ்சம் பிரச்சனை தான். சக்தி மாமா கிட்ட சண்டை போட்டுட்டு மாமாக்கு டைவர்ஸ் பத்திரத்தை கொடுத்திட்டு சுஜி வீட்டை விட்டு போயிட்டா” என்றாள்.

 

சக்தி காலரை பிடித்த ராமலிங்கம், “உன்னால் தான் டா அவ வாழ்க்கையே கெட்டுப் போச்சு”. 

 

“எங்க வீட்டில் ராணி மாதிரி வளம் வந்து கொண்டு இருந்த அவள் கழுத்தில் தாலியை கட்டி கல்யாணம் என்ற பெயரில் அவ வாழ்க்கையவே கெடுத்தது மட்டும் இல்லாமல் இப்போ அவளை வீட்டை விட்டே துரத்திட்டியா” என்றார்.

 

பத்மா, “நான் அப்போவே அவளிடம் சொன்னேன் இந்த வாழ்க்கை வேண்டாம் நம்ம வீட்டுக்கு வந்திடு என்று”. 

 

“ஆனால், அவ உன்னை விட்டுட்டு வரமாட்டேன் என்று எங்களிடம் சண்டை போட்டாள். இப்போ எங்க போனால் என்றே தெரிய வில்லையே” என்று அழுது புலம்பினார்.

 

நிலா, “அம்மா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்கள். உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கு”. 

 

“இப்போ நீங்க சக்தி மாமாவை திட்டுவதாள் மட்டும் ஒரு பிரியோஜனமும் இல்லை”. 

 

“இவங்க இரண்டு பேருமே இப்போ காதலிச்சுகிட்டு தான் இருக்காங்க. இவங்க கல்யாணம் பண்ண சூழ்நிலை வேண்டும் என்றால் வேறையாக இருக்கலாம்”.

 

“ஆனால், இவங்க இரண்டு பேரும் இப்போ மனசார காதலிச்சுகிட்டு தான் இருக்காங்க. திடீரென இப்போ எதுக்கு சுஜி டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்தாள் என்று தான் எங்களுக்கு புரிய வில்லை”.  

 

“யாரையோ வரவழைத்து அவர்களுடன் தான் போய் இருக்கா. அது யார் என்றும் எங்களுக்கு தெரிய வில்லை”. 

 

“சுஜி எங்க இருக்கா? என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா? உங்களிடம் ஏதாவது சொன்னாளா? உங்க சொந்தக்காரங்க யார் வீட்டுக்காவது போய் இருப்பாளா?” என்றாள்.

 

அவள் சொன்ன வார்த்தையில் அதிர்ச்சி அடைந்த பத்மா, “என்ன சொல்ற நீ. யாருடனோ போய் இருக்காளா? அது எப்படி முடியும்”. 

 

எங்களுக்கு அப்படி சொந்தம் பந்தம் என்று சொல்லிக்க யாருமே கிடையாது. நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் எங்களுக்கு என்று ஒரு ஃபேமிலி கிடையாது”. 

 

“எங்க குடும்பத்தில் நாங்களே தனியாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவள் யாருக்கு போன் போட்டு வரவைத்து இருப்பாள்” என்றார்.

 

பத்மா ராமலிங்கம் கையை இருக்கி பிடித்தார். ராமலிங்கம் அமைதியாக தன் பொண்டாட்டியை திரும்பி பார்க்க பத்மா, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றார்.

 

விக்ரம், “ஆன்ட்டி இந்த ஊரில் சுஜி க்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?” என்றான். 

 

பத்மா, “இல்லப்பா அவளுக்கு தெரிஞ்சவங்க என்று யாரும் கிடையாது. அவ நிலா கூட மட்டும் தான் நெருங்கி பழகுவா” என்றார். 

 

சக்தி, “கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க இத்தனை வருஷத்துல அவ வேறு யாரையாவது பத்தி உங்ககிட்ட பேசி இருக்காளா?” என்றான். பத்மா, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றார். 

 

சக்தி, “அவளுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கு அதனால் அவ ரூம் பில் வேண்டும் என்றால் தேடிப் பார்க்கலாம் ஏதாவது நமக்கு ஐடியா கிடைக்கும்” என்றான்.

 

பிறகு அனைவரும் சேர்ந்து சுஜிதா அறையை ஆராய்ந்தார்கள் அவர்கள் நினைத்தது போலவே நிலா கையில் ஒரு டைரியும் கிடைத்தது.

 

நிலா, “துருவ், சக்தி மாமா இங்க பாருங்க சுஜி டைரி இருக்கு கண்டிப்பா இதில் ஏதாவது நமக்கு க்குலு கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்று அனைவரும் படிக்க ஆரம்பித்தார்கள்.

 

சுஜிதா அந்த டைரியில்,

 

நான் சிறு வயதில் இருந்து வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கும் போது கருத்து தெரிந்து என் வீட்டில் நான் சந்தோஷமாக அம்மாவுடன் இருந்தது கிடையாது. 

 

அம்மா பாசத்திற்காகவும், அப்பா பாசத்திற்காகவும், நண்பர்கள் பாசத்திற்காகவும் ரொம்பவே ஏக்கத்துடன் இருந்து இருக்கிறேன். 

 

அப்பா, அம்மா கூட இருக்கும் பசங்களை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே பொறாமையாக இருக்கும்.

 

ஒரு தனி சிறையில் அடைத்து வைப்பது போல் எப்போதும் வீட்டில் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து இருப்பார்கள். 

 

என் அம்மா ஈஸ்வரியை பொருத்த வரை நான் ஒரு பொம்பள பிள்ளை என்பதால் எனக்கு திருமணம் செய்யும் வயது வந்த பிறகு அதிக பிசினஸ் செய்யும் ஆண்களே யார் பெண் கேட்டு வருகிறார்களோ அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து. 

 

அவர் பிசினஸை கைப்பற்றிக் கொண்டு என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வைத்திருந்தார். 

 

நான் பள்ளி பருவத்தை முடித்த பின் சிறுவயதில் இருந்து பணத்திற்காகவே என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த என் அம்மா ஈஸ்வரி எனக்கு 18 வயதை தொட்டவுடன் 43 வயது உள்ள ஒரு பணக்காரனை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார். 

 

அந்த கிழவனுடன் எனக்கு திருமணம் என்றவுடன் எனக்கு இதயமே நின்று விடுவது போல் இருந்தது. நான் ரொம்பவே பயந்து போய் இருந்தேன். என் அம்மா ஈஸ்வரியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியாது. 

 

நிலாவுடன் இருக்கும் பொழுது புலியை போல் இருந்த நான் ஈஸ்வரியுடன் இருக்கும் பொழுது பூனையைப் போல் தான் இருப்பேன். 

 

எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று தெரியாமல் அழுதுக் கொண்டு இருந்தேன். 

 

அப்போ கல்யாணத்திற்கு முந்தன நாள் இரவு நலங்கு முடிந்து அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

 

நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியே செவுற்றில் எகிரி குதித்து வெளியேறி விட்டேன். 

 

வெகுதூரம் ஓடிக் கொண்டே இருந்தேன். பிறகு ஒரு பஸ் வருவது போல் இருந்தது அது எங்கு செல்கிறது என்று ஒன்றும் தெரியாமலே ஏறிவிட்டேன். அந்த பஸ் நேராக சென்னை பஸ் ஸ்டாண்டில் நின்றது.

 

அங்கு இறங்கி எங்கு போவது என்று தெரியாமல் மறுபடியும் ஓட ஆரம்பித்தேன். 

 

விடியும் நேரம் என்பதால் வீதிகள் முழுக்க மிதமான வெளிச்சம் ஆங்காங்கே தெரு லைட் எரிந்து கொண்டும் இருந்தது. 

 

பயத்துடன் தனியாக ஓடிக் கொண்டு இருந்த போது எதிரில் ஒரு விபத்தை பார்த்தேன். ஒரு கார் மற்றும் லாரி எதிர் எதிரே மோதி இருந்தது. 

 

அன்னையில் இருந்து என் வாழ்க்கை முழுதாக மாறி விட்டது. நான் எது எல்லாம் எனக்கு கிடைக்க வில்லை என்று ஏங்கினேன்னோ.  

 

அது எல்லாமே என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்துவிட்டது.

 

‘என் கல்யாணத்தன்று தப்பித்து போகும் பொழுது தான் சென்னைக்கு வந்தேன். நான் ஆசைப்பட்டது போல் எனக்கு ஒரு குடும்பமும் கிடைத்தது. 

 

‘அம்மா பாசம், அப்பா பாசம், தோழி பாசம் இப்படி எல்லாமே கிடைச்சிடுச்சு. 

 

இன்னும் நான் காதலிக்கின்ற என்னுடைய சக்தி பாசமும் எனக்கு கிடைத்து விட்டால் போதும். 

 

என் வாழ்க்கையில் அதற்கு மேல் வேறு எதுவுமே தேவை இல்லை. ஆனால், அது நடக்கின்ற வரைக்கும் நான் இங்கு இருப்பேனா என்று எனக்கே தெரிய வில்லை. 

 

நான் இந்த ஊருக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் கண்டிப்பா என்னுடைய அம்மா ஈஸ்வரி என்னை கண்டுபிடித்து விடுவார்.

 

ஆளுங்களை அனுப்பி என்னை கூட்டிச்சென்று விடுவார் என்று எனக்கு தோன்றி கொண்டே இருக்கு.

 

அதனால் சீக்கிரம் என் காதலைப் பற்றி சக்தியிடம் நான் சொல்ல போகிறேன். சக்தி என் காதலை புரிந்துக் கொண்டு என்னை ஏற்றுக் கொள்வார். 

 

அதன் பிறகு எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் சக்தி வந்து என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. 

 

நான் முதல் முதலில் நிலாவை பார்க்கும் போது அவலும் என்னை போல் தான் வாழ்கிறாள் என்று எனக்கு புறிந்து விட்டது. 

 

நிலாவும் ஒரு கஷ்டமான வாழ்க்கையை சிறு வயதில் இருந்து வாழ்ந்ததால் நிலவுக்கும் எனக்கும் பொருந்தி விட்டது.

 

நிலாவை ஒரு கட்டத்தில் கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்பவே கட்டாயப்படுத்தி கொண்டு இருந்தார்கள். 

 

அதை பார்க்கும் போது எனக்கு என் வாழ்க்கை தான் ஞாபகம் வந்தது. எவ்வளவு கடினப் பட்டாலும் நிலா கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருந்தேன்.

 

நிலா புரியாமல் பத்மாவை பார்த்து, “அம்மா அப்போ நீங்க சுஜிதாவை பெத்தவங்க கிடையாதா? அப்புறம் எப்படி உங்களை அம்மா, அப்பா என்று கூப்பிடுகிறாள். 

 

நீங்க எப்படி அவளை மீட் பண்ணீங்க?” என்றாள். பத்மா, “அவ டைரிலேயே எழுதி இருந்தாலே மா. ஓர் கார் விபத்தை பார்த்ததாக. அங்கு நடந்த விஷயமே வேறு” என்று அழுகையுடனே பத்மா சொல்ல ஆரம்பித்தார்.

 

பத்மா, “நாங்க காரில் ஊருக்கு சென்றுக் கொண்டு இருக்கும் போது எதிரில் ஓர் லாரி வந்து எங்களை இடித்து விட்டது”. 

 

“அதில் எங்க இரண்டு பேருக்கும் ரொம்பவே அடிபட்டு இருந்துச்சு. எங்க கூட எங்களோட பொண்ணு ஒருத்தி இருந்தாள்”.

 

“ஆனால், அவ ரொம்ப சீரியஸ் ஆக இருந்தால் அப்போ சுஜிதா தான் எங்க மூன்று பேரையுமே கூட்டிச் சென்று ஹாஸ்பிடலில் சேர்த்தால்”.

 

“அது மட்டும் இல்லாமல் எங்கள் மெடிக்கலுக்கு தேவையான செலவு மொத்தத்தையும் அவலே பார்த்துக் கொண்டாள்”.

 

“இரண்டு நாள் கழித்து நாங்க மயக்கம் தெளிந்து கண் விழித்தோம். டாக்டர் சுஜிதா தான் எங்களை பார்த்துக் கொண்டதாக கூறினார்”. 

 

“டாக்டர் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஓர் நர்ஸ் வந்து எங்க பொண்ணு இறந்து போயிட்டதாக கூறினார்”. 

 

“நாங்க வாழ்ந்ததே அவளுக்காக தான் இப்போ அவளே இல்லை என்றவுடன் இதயமே நின்று விட்டது”.‌ 

 

“அவளோட சடங்கு பண்ணுவதற்காக நாங்க வீட்டுக்கு அவனை தூக்கிக் கொண்டு வந்தோம்”. 

 

“சுஜிதாவும் எங்க கூடவே தான் வந்தால். வீட்டுக்கு வந்து அவளுக்கு சடங்கு எல்லாம் பண்ணி முடிக்கிற வரைக்கும் அவ எங்க கூடவே தான் இருந்தாள்”.

 

“எல்லாம் முடிந்த பிறகு இதற்கு மேல் எங்களுக்கு என்று யாருமே கிடையாது நாங்க இரண்டு பேரும் ரொம்பவே தனிமையில் இருக்கும் போது தான் சுஜிதா அம்மா அழாதீங்க” என்றாள்.

 

பத்மா, “எப்படி மா அழாமல் இருக்க முடியும். என்னோட பொண்ணு என்னை விட்டுட்டு போயிட்டா”. 

 

“இதுக்கு அப்புறம் அவளை நாங்கள் பார்க்கவே முடியாது. அப்படி இருக்கும் போது எப்படி நான் அழாமல் இருக்க முடியும்” என்றார். 

 

ராமலிங்கம், “ஒரு வாரமாக எங்க கூடவே இருக்கியே மா உங்க வீட்ல யாரும் தேட மாட்டாங்களா” என்றார்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்