Loading

பாகம் – 46

 

நிலா, “என்னை மன்னிச்சிடுங்க சக்தி மாமா. நான் உங்களை இத்தனை வருஷமாவும் தப்பா தான் புரிஞ்சுக்கிட்டு இருந்தேன்”.

 

“வேறு ஒருத்தவங்க பண்ண தப்புக்கு நான் உங்களை தப்பா நினைத்துக் கொண்டேன். இது சின்ன விஷயம் இல்லை உங்ககிட்ட அப்பவே நான் வந்து கேட்டு தெரிஞ்சுகிறதுக்கு”.

 

“இதைப் பற்றி எனக்கு மத்தவங்க கிட்ட கேட்க கூட தோன்ற வில்லை. நான் இது வரைக்கும் என் பிரண்டு சுஜிதா கிட்ட கூட இதைப் பற்றி எல்லாம் எதுவுமே சொன்னது கிடையாது”. 

 

“துருவ்கு கூட தெரியாது. இப்போ திடீர்னு சுஜிதா வந்து கேட்டதுனால் தான் நான் எல்லாத்தையும் சொன்னேன்”. 

 

“ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு அப்புறம் ரொம்ப பாதிக்கப்பட்டது என்றால் அது நீங்க தான்”. 

 

“நீங்க எத்தனையோ வாட்டி சின்ன வயதில் இருந்தே என்கிட்ட பாசமாவும் அக்கறையாவும் பேச வந்தீங்க”. 

 

“ஆனால் நான் தான் பயத்திலேயே உங்களை விட்டு விலகி போய்கிட்டே இருந்தேன்”.

 

“அது உங்களுக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுத்து இருக்கும் என்று என்னால் புரிஞ்சுக்க முடியுது”. 

 

“ஆனால் அந்த சூழ்நிலையில் என்னால் வேறு எதுவுமே பண்ண முடியலை மாமா” என்றால் கவலையாக.

 

விக்ரம் நிலா அருகில் சென்று அவள் கையைப் பிடித்து, “கவலைப்படாத இப்போ தான் உண்மை எல்லாம் தெரிந்து விட்டதே”. 

 

“இதுக்கு அப்புறம் நம்ம எல்லாருமே ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம்” என்றான். 

 

சக்தி, “என் மேலயும் தப்பு இருக்கு. நிலா நானும் நீ இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் என்கிட்ட பேசாம இருக்க என்று புரிஞ்சுக்காம உன்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன்”. 

 

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணது கூட எங்க அக்கா கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி நான் உன்னை சந்தோஷமா வச்சு பாத்துக்கணும் என்ற ஒரு எண்ணத்தில் தான் சொன்னேன்”.

 

“வேறு எந்த ஒரு காரணமும் கிடையாது எனக்கு சின்ன வயசுல இருந்தே உன்னை ரொம்பவே பிடிக்கும்” என்றான்.

 

பிறகு சக்தி, “விக்ரமை பார்த்து நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க உங்க கல்யாணத்தை நிறுத்துவதாக சொல்லி நான் உங்களையும் ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன்”. 

 

“ஆனா நீங்க அப்பவே உங்க காதல் விஷயத்தை பற்றி என்கிட்ட சொல்லி இருந்தால் கண்டிப்பா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பேன்”. 

 

“அவ்வளவு நாள் நீங்க எங்க வீட்ல இருந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருந்து இருக்காது. நானே நிலாவை கண்டிப்பா உங்க கூட அனுப்பி வைத்திருப்பேன்”. 

 

“என் அக்கா சொன்ன கதைப்படி தான் இந்த கல்யாணம் நடக்குது. கல்யாணத்துக்கு பிறகு நிலாவை நீங்க கஷ்டப் படுத்துவிங்க அதுக்காக தான் கல்யாணம் பண்றீங்க அப்படின்னு நினைச்சேன்”. 

 

“அதனால் தான் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நான் ரொம்பவே ஆர்வமாக இருந்தேன்” என்றான்.

 

விக்ரம், “நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிரதில் தப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன்”. 

 

“உங்க மேல் தப்பு இல்லாமலே ஒரு கட்டத்தில் நான் உங்களை அடிச்சிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க பிரதர்”. 

 

“இந்த பிரச்சனையை பற்றி எனக்கு தெரிஞ்ச அப்போவே நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம் என்று நான் கன்ஃபார்மே பண்ணி வச்சிருந்தேன்” என்று பேசிக் கொண்டே போக சுஜிதா அதற்கு மேல் பொறுக்க முடியாமல். 

 

சுஜிதா, “இங்க என்ன நடக்குது இப்போ எதுக்கு எல்லாரும் மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கீங்க”. 

 

“உண்மையாவே எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கணும் என்று ஆசைப்பட்டீங்க என்றால் இப்ப நடந்த எல்லாத்தையும் மறந்திடுங்க”. 

 

“இதுக்கு அப்புறம் எல்லாரும் ஹாப்பியா ஒன்னா இருக்கலாம்” என்றாள்.

 

விக்ரம், “சுஜிதா சொல்றதும் சரிதான் இதோடு எல்லாத்தையும் விடுங்க முடிஞ்சு போனதை பற்றி பேசி என்ன நடக்க போகுது”. 

 

“இதுக்கு அப்புறம் நம்ம லைஃபை நம்ம எப்படி வாழ்கிறோம் என்று பார்க்கலாம்”.

 

“இது வரைக்கும் மாத்தி மாத்தி எல்லாருமே தப்பான பீலிங்ஸ் வச்சுக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்ட வரைக்கும் போதும்‍” என்றான்.

 

பிறகு அனைவரும் சந்தோஷமாக சிறிது நேரம் பேசி விட்டு இரவு உணவையும் அங்கேயே ஒன்றாக சாப்பிட்டு விட்டு. பிறகு நிலா மற்றும் விக்ரம் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டார்கள். 

 

இவர்கள் எல்லாம் சென்ற பின் சக்தி சோகமான முகத்துடனே அமர்ந்திருந்தான். 

 

சுஜிதா சக்தி அருகில் அமர்ந்து, “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி சோகமா இருக்கீங்க?” என்றாள். 

 

சக்தி, “ஆயிரம் தப்பு பண்ணி இருந்தாலும் அவங்களை நானே ஜெயில்ல பிடிச்சு கொடுப்பேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை”. 

 

“என்ன இருந்தாலும் அவங்க என்னோட அக்கா தானே என்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தது அவங்க தானே அதை நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கு” என்றான்.

 

சுஜிதாவுக்கு புரிந்தது அக்காவை நினைத்து மிகவும் கவலை படுகிறான் என்று.

 

சுஜிதா, “அவங்க பண்ண தப்புக்கு தான் இந்த தண்டனை. ஆனா நீங்க அக்காவாகவே இருந்தாலும் கூட ரொம்ப நியாயமாக நடந்துக் கிட்டிங்க”. 

 

“அந்த விதத்தில் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அது மட்டும் இல்லாமல் எல்லாம் நல்லதுக்கு என்று நினைத்துக்கோங்க. இதுக்கு அப்புறம் அவங்க ஜெயில்ல இருந்து வரும் போது திருந்திடுவாங்க”.

 

“அவங்க வந்ததும் நம்ம எல்லாருமே திரும்ப ஒரே குடும்பமா ஒன்னாவே இருக்கலாம். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க” என்றாள்.

 

சக்தி மனதில் சுஜிதா எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்று எதார்த்தமாக கூறிய வார்த்தையே நிலைத்து இருந்தது. 

 

அதை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷ பட்டான். எல்லாரும் ஒன்னா இருக்கலாம் என்று சொல்லி இருக்கா. 

 

அப்போ அவளைக் கேட்காமல் அவள் கழுத்தில் நான் தாலி கட்டியதற்கு அவள் என்னை மன்னித்து விடுவால் என்னை விட்டு போக மாட்டாள் என்கிற மீனிங் தானே என்று நினைத்துக் கொண்டான். 

 

சக்தி, “நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என்றான். 

 

சுஜிதா, “அப்படியா நான் கூட உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அந்த சர்ப்ரைஸ் என்னன்னு தெரிஞ்சா நீங்க ரொம்பவே சந்தோஷப்படுவீங்க” என்றாள். 

 

பிறகு அன்றைய இரவு இருவரும் ஒவ்வொரு விதமான எண்ண ஓட்டத்துடன் உறங்கிப் போனார்கள். 

 

வீட்டை சென்று அடைந்த நிலா ஹாலில் ராஜலட்சுமி அமர்ந்திருப்பதை பார்த்து “அத்தை நீங்க இன்னும் தூங்கலையா?” என்றாள். 

 

ராஜலட்சுமி, “இன்னும் இல்ல மா நீங்க சாப்டீங்களா? இல்ல சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார்.

 

நிலா, “இல்ல அத்தை வரும் போதே சாப்பிட்டு வந்துட்டோம். சரி மாமா எங்கே?” என்றாள்.

 

ராஜலட்சுமி, “அவங்க இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலை மா. அவங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்” என்றார். 

 

நிலா, “அப்போ மாமா வர வரைக்கும் நான் உங்களுக்கு கம்பெனி தரேன்” என்று ராஜலட்சுமி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். 

 

அந்த நேரம் விக்ரம் காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தவன் நிலா ஹாலில் அமர்ந்து இருப்பதை பார்த்து அமைதியாக நின்றான். 

 

நிலா, “துருவ் நான் அத்தை கூட கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டு இருக்க போகிறேன். மாமா இன்னும் வரலையாம்”. 

 

“அவங்க வர வரைக்கும் நீங்க எங்க கூட கொஞ்சம் பேசிட்டு இருக்கீங்களா? இல்ல தூக்கம் வந்தால் நீங்க போய் தூங்குங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றாள்.

 

விக்ரம் ராஜலட்சுமியை பார்த்தான். ராஜலட்சுமி ஆவலாக அவன் தன்னுடன் வந்து அமர்ந்து பேசுவான் என்ற நம்பிக்கையோடு பார்த்தார்.

 

ஆனால் விக்ரம் எதுவும் பதில் கூறாமல் இரண்டு நிமிடம் ராஜலட்சுமி முகத்தையே பார்த்தவன் தூங்கு வதற்காக மேலே சென்று விட்டான். 

 

அதில் ராஜலட்சுமி முகம் மிகவும் வாடி போனது. அதை கவனித்து நிலா, “அத்தை நான் கேட்கிறேன் என்று நீங்க தப்பா நினைக்கலை என்றால் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றாள். 

 

ராஜலட்சுமி, “முகத்தில் கவலையை மறைத்த படி சிரித்துக் கொண்டே கேளுமா. எதுவாக இருந்தாலும் கேளு நான் சொல்கிறேன்” என்றார்.

 

நிலா, “அப்படி துருவ்க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? ஏன் நீங்க எல்லாம் பேசிக்கவே மாட்றீங்க?”. 

 

“அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்த்துக்கிட்டு போயிடுறாரு. நீங்களும் யாரும் சரியா பேசிக்கிறதே இல்லை. எல்லாருமே அவங்க அவங்க வேலையை பாக்குறீங்க” என்றாள்.

 

ராஜலட்சுமி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தால். நிலா, “ஒருவேளை பெரிய இடத்து வீட்டில் எல்லாம் எல்லாருமே இப்படித் தான் இருப்பாங்களா? பேசிக்க மாட்டாங்களா? என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கு”.

 

“ஆனா உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் நீங்க சொல்ல வேண்டாம்”. 

 

“உங்களை நான் வற்புறுத்த மாட்டேன் தெரிஞ்சுக்கலாம் என்று தான் கேட்டேன் அவ்வளவு தான்” என்றாள்.

 

ராஜலட்சுமி, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. நீயும் இப்போ இந்த குடும்பத்தில் ஒருத்தி ஆகிட்ட”. 

 

“உன்கிட்ட மறைச்சு நாங்க என்ன பண்ண போகிறோம். ஆனா இத பத்தி நீ விக்ரம் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோ‍” என்றார்.

 

நிலா மனதிற்குள் இவங்களுக்கு என்னிடம் சொல்ல விருப்பம் இல்லை என்று நினைத்து கொண்டு, “சரி அத்தை” என்றாள். 

 

ராஜலட்சுமி, “நான் எதுக்காக உன்னை விக்ரமிடம் கேட்டுக்க சொன்னேன் என்றால்? எனக்குமே முழுசாக காரணம் தெரியாது”. 

 

“அவன் எங்க எல்லார்கிட்டையும் நல்லா தான் பேசிகிட்டு இருந்தான்”.

 

“ஆனால், திடீரென்று எங்கள் அனைவரிடமும் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான். ஆதித்யா, மித்ரா கிட்ட மட்டும் தான் லைட்டா பேசுவான்”. 

 

“அதுவும் லாஸ்ட் டைம் அவன் ஃபங்ஷன் முடிஞ்சு திரும்ப நைட்டு வந்து பேசியதை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருந்துச்சு”.

 

“சின்ன வயசுல இவங்க மூணு பேரும் இப்படித் தான் எந்த ஒரு ஃபங்ஷன் முடிஞ்சாலும் பேசிகிட்டு இருப்பாங்க”. 

 

“பல வருஷத்துக்கு அப்புறம் அன்னைக்கு தான் திரும்ப என்னால் அந்த மாதிரி ஒரு காட்சியை பார்க்க முடிந்தது” என்றார் முகம் நிறைய புன்னகையுடன்.

 

நிலா, “ஏன் அத்தை வேறு எந்த காரணமும் இல்லையா? நீங்க சொல்றதை பார்க்கும் போது என்னால் நம்பவே முடியலை”. 

 

“இத்தனை வருஷமா உங்களுக்குமா காரணம் தெரியாது?” என்றாள் சந்தேகமாக. ராஜலட்சுமி சிறிது நேரம் மௌனமாக இருந்தவர், “சரி நான் சொல்கிறேன்”. 

 

“விக்ரம் பதினொன்னாவது படிக்கும் போது எங்க எல்லார்கிட்டயும் நல்லா தான் பேசிட்டு சந்தோஷமாக தான் இருந்தான்”. 

 

“ஆனால் அப்போ அவன் சின்ன பையன் ஸ்கூல் போற பையன். அந்த வயசுல என்கிட்ட வந்து ஒரு விஷயத்தை பற்றி கூறினான்”.

 

“அந்த விஷயத்தை கேட்டு எனக்கு ரொம்பவே கோபம் வந்துச்சு. அப்போ தான் முதல் முறையா நான் அவனை கை நீட்டி அடிச்சுட்டேன்”.

 

“அப்போ தான் அவன் லாஸ்ட்டா என்கிட்ட பேசுனது. அதோடு இப்போ வரைக்கும் அவன் என்னிடமும் பேசுறது இல்லை. இந்த குடும்பத்திலும் யாரிடமும் பேசுறது இல்லை”. 

 

“அது வரைக்கும் நான் அவனை அடிச்சதோ திட்டியதோ கிடையாது. அன்னைக்கு ஒரு நாள் ஒரே ஒரு வாட்டி நான் அடிச்சிட்டேன்”. 

 

“ஆனால், அதுக்காக இத்தனை வருஷமாக எனக்கு தண்டனை கொடுப்பான் என்று நான் நினைக்கவே இல்லை” என்றார்.

 

நிலா, “ஏன் அத்தை அவர் தான் சின்ன வயசா இருந்தாரு. சின்ன பையனா இருந்தார் என்று சொல்றீங்களே நீங்க பேச ட்ரை பண்ணி இருக்கலாமே. அதுக்கு அப்புறம்” என்றாள்.

 

ராஜலட்சுமி, “இவ்வளவு பாசமாக நான் இருக்கும் போது அவன் கிட்ட பேச ட்ரை பண்ணாமல் இருந்து இருப்பேன் என்று உனக்கு தோணுதா மா?. ட்ரை பண்ணேன் நிறையவே”. 

 

“இப்போ வரைக்கும் நான் அவன் கிட்ட பேசிகிட்டு தான் இருக்கேன். ஆனால், அவன் தான் என்னை கண்டுக்கவே மாட்டான்”. 

 

“இப்போ கூட பார்த்தியா அவன் என்னுடன் வந்து பேச உட்காருவான் என்று ஆசையாக நினைத்தேன்”.

 

“நானும் அவனைப் பாத்துக்கிட்டே இருந்தேன். ஆனால், அவன் என்னை பார்த்துட்டு அமைதியாக போயிட்டான்” என்றார் கவலையாக. 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்