
பாகம் – 45
சக்தி, “சரி ஜெகதீஷ் எதுக்கு இப்போ உனக்கு போன் போட்டு காசு கேட்கிறான்?” என்றான்.
ஜெயலட்சுமி, “அது அவனோட குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி காசு கேட்டான். நீ வேலையை விட்டுட்டு போய் பல வருஷம் ஆகிடுச்சு”.
“இப்போ வந்து காசு கேட்கிற அதெல்லாம் தரமுடியாது” என்று சொன்னேன் என்னும் போது விக்ரம் யாரும் பார்க்காத வண்ணம் மும்முரமாக ஏதோ செய்துக் கொண்டு இருந்தான்.
நிலா, “சக்தி மாமா சொல்ற மாதிரி அன்னைக்கு நைட்டு சக்தி மாமா ரூமுக்கு வரவில்லை என்றால் ஜெகதீஷ் ஆக தான் இருக்கும் என்று எனக்கும் தோணுது” என்றாள்.
அனைவரும் நிலாவை பார்த்தார்கள் நிலா, “நான் எப்படி சொல்கிறேன் என்றால் அன்னைக்கு சித்தி பேசும் போது அங்க இருந்தவங்க கிட்ட நீ ஒழுங்கா இல்லைன்னா திரும்ப உன்னை ஊருக்கே அனுப்பி வைத்திடுவேன் என்று சொன்னாங்க”.
“அப்போ ஊரில் இருந்து வந்து எங்க வீட்டில் தங்கி இருந்தது சக்தி மாமா ஸ்கூல் லீவ் க்கு வந்து இருந்தாங்க அதுக்கு அப்புறம் சித்தியோட அடியால் ஜெகதீஷ் அண்ணா இருந்தாங்க”.
“இப்போ கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் அந்த ஜெகதீஷ் அண்ணனோட குடும்பத்துக்கு ஏதோ ஒரு பிரச்சனைன்னு சொல்லி இங்க இருந்து போயிட்டார்” என்றாள்.
விக்ரம், “எனக்கும் நிலா சொல்றது சரி என்று தான் தோணுது. இவ்வளவு நேரம் சக்தி தான் தப்பு பண்ணி இருக்கான்”.
“உங்க அக்காவே வாயை திறந்து சொல்லிட்டாங்க போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன்”.
“ஆனா இதை பற்றி பேசும் போது இந்த ஜெயலட்சுமி முகமே மாறிடுச்சு, பதட்டம் ஆச்சு அப்போவே எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு இவங்க பொய் சொல்றாங்களோ? என்று”.
“இப்போ நிலா சொல்றதை வைத்து பார்க்கும் போது கண்டிப்பா சக்தி இல்லை என்றால் அந்த இன்னொரு ஆளாக தான் இருக்கணும்” என்று இவர்கள் வாக்குவாதம் வெகு நேரத்தை தாண்டியது.
ஜெயலட்சுமி, கோபத்துடன் சத்தமாக, “எல்லாரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா. அன்னைக்கு ராத்திரி அந்த ரூமுக்கு போனது சக்தி தான்” என்றாள்.
அனைவரும் ஜெயலட்சுமியை பார்த்துக் கொண்டிருக்க வீட்டிற்குள் ஒருவன் “மேடம்… மேடம்... ஜெயா மேடம்” என்று உள்ளே நுழைந்தான்.
சக்தி, “ஜெகதீஷ் நீங்களா? இப்போ தானே போனில் பேசினீங்க அதுக்குள்ள நேரில் வந்து இருக்கீங்க” என்றான்.
ஜெகதீஷ், “மேடம் தான் அவங்க ஃபோனில் இருந்து எனக்கு மெசேஜ் பண்ணாங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீட்டுக்கு வா நீ கேட்ட காசு நான் தரேன் என்று சொல்லி அதான் வந்தேன்” என்றான்.
ஜெயலட்சுமி, “அட பைத்தியக்காரனே நான் எப்போ டா உனக்கு மெசேஜ் பண்ணேன்?”.
“உன்னை யாரு டா இங்க வர சொன்னது? முதலில் என் ஃபோன் எங்கே?” என்று தேடும் பொழுது அது விக்ரம் கையில் இருப்பதை பார்த்தார்.
ஜெயலட்சுமி அவனையே முறைத்துப் பார்த்தாள். அனைவரும் ஏன் ஜெயலட்சுமி இப்படி பதட்டமாக கத்துகிறாள் என்று அவளையே குறுகுறு என்று பார்த்தார்கள்.
விக்ரம் ரொம்பவே கூலாக, “இப்போ எதுக்கு நீங்க டென்ஷனா இருக்கீங்க?”.
“அவன் காசு தானே கேட்டான் அதுவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று. அதான் நான் மெசேஜ் பண்ணி வர சொன்னேன். இதுல என்ன பிரச்சனை இருக்கு?” என்றான்.
ஜெயலட்சுமி சமாளிப்பதாக நினைத்து, “ஆமா ஆமா காசு தான் கேட்டான்”.
“ஆனால் என்னை கேட்காமல் நீங்க எதுக்கு என்னோட ஃபோன்ல இருந்து அவனை வர சொல்லி மெசேஜ் அனுப்புனீங்க? உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது?” என்றாள்.
விக்ரம், “எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதான் அவர் கிட்டயும் கேட்டு கிளாரிபை பண்ணிக்கலாம் என்று நினைத்தேன்” என்றான்.
ஜெகதீஷ் ஒன்றும் புரியாமல் அனைவரும் மாற்றி மாற்றி பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஜெகதீஷ் அருகில் சென்ற விக்ரம், “உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்க போறோம் ஸ்ட்ரைட்டா பதில் சொல்லிடுங்க” என்றான்.
ஜெகதீஷ், விக்ரம் எதைப் பற்றி பேசுகிறான் என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான்.
விக்ரம், “சில வருஷத்துக்கு முன்னாடி நிலா கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணது நீங்க தானே” என்றான்.
ஜெகதீஷ், ஜெயலட்சுமியை பார்த்து திருத்திரு என விழித்தான். அதிலேயே விக்ரம் இவன் தான் என்று கன்பார்ம் செய்து விட்டான்.
விக்ரம் கோபமாக பளார் என்று ஜெகதீஷ் கன்னத்தை பதம் பார்த்து இருந்தான். அதில் ஜெகதீஷ் கண்கள் ஒரு நிமிடம் இருட்டி வந்தது.
கன்னத்தில் கை வைத்த படி ஜெகதீஷ், “நான் வேண்டும் என்று அப்படி பண்ண வில்லை. அப்போ அவ சின்ன பொண்ணு. அவ என்னை அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவா”.
“நான் எப்படி அவகிட்ட தப்பா நடந்துக்க முடியும். ஆனா இவங்க தான் என்னை அப்படி நடந்துக்க சொல்லி வற்புறுத்துனாங்க” என்று ஜெயலட்சுமியை பார்த்து கைகாட்டினான்.
ஜெகதீஷ் மேலும் பேச்சை தொடர்ந்தவன், “சும்மா பயம் காட்டுற மாதிரி நடித்தால் மட்டும் போதும் என்று சொன்னாங்க”.
“மத்தபடி தப்பாலாம் நான் நடந்துக்க வில்லை அவளுக்கு பயம் காட்டினாள் போதும் என்று இவங்க தான் சொன்னாங்க” என்றான்.
அடுத்த நொடி பளார் என்று ஒரு சத்தம் கேட்டது. அனைவரும் சத்தம் வந்த இடத்தை நோக்கி திரும்பி பார்த்தார்கள்.
அங்கு வேறு யாரும் இல்லை ஜெயலட்சுமி தான் கன்னத்தில் கை வைத்த படி நின்றிருந்தால்.
அடித்தது வேறு யாரும் இல்லை நம்ம சக்தி தான் அறைந்திருந்தான்.
ஜெயலட்சுமி அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். சக்தி, “ச்சீ…. நீ எல்லாம் ஒரு மனுஷியா உன்னை நான் அம்மா ஸ்தானத்தில் தான் வைத்திருந்தேன்”.
“ஆனா நீ இவ்ளோ அசிங்கமா நடந்துப்ப என்று நான் நினைக்கவே இல்லை. நீ தப்பு பண்ணுவ என்று தெரியும்”.
“ஆனா இப்படி ஒரு காரியத்தை பண்ணுவ என்று நான் நினைக்கவே இல்லை”.
“நீயும் ஒரு பொண்ணு வச்சிருக்க இல்ல அவகிட்டயும் இப்படித்தான் பண்ணுவியா” என்றான் ஆவேசமாக.
ஜெயலட்சுமி, “இல்லை அவன் பொய் சொல்கிறான். நான் அப்படி பண்ண வில்லை டா என்னை நம்பு” என்றாள்.
ஜெகதீஷ், “நீங்க சொல்லி தானே நான் அப்படி பண்ணேன் இப்ப இல்லன்னு சொல்றீங்க. நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்க” என்றான் கோபமாக.
“நிலா கிட்ட தப்பா நடந்துக்கோ அப்படின்னு தானே சொன்னீங்க. நான் தான் அவ சின்ன பொண்ணு என்னை அண்ணா அண்ணா வென்று கூப்பிடுவாள்”.
“அதனால் என்னால் அப்படி எல்லாம் நடந்துக்க முடியாது என்று சொன்னேன்”.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க? சரி இல்லை என்றால் நீ அவளுக்கு பயம் காட்டுகின்ற மாதிரி நடந்துக்கோ அப்படின்னு தானே சொன்னீங்க”.
“இப்போ இல்லவே இல்லைன்னு பொய் சொல்றீங்க. பிரச்சனை வந்ததும் என்னை மட்டும் தனியா மாட்டி விடலாம் என்று பார்க்கிறீர்களா?” என்றான்.
விக்ரம், ஜெகதீஷ் கன்னத்தில் அவன் கோபம் தீரும் வரை அடித்தான்.
பிறகு விக்ரம், “அவங்க சொன்னால் நீ அப்படியே செஞ்சுடுவியா. அவ உன்னை அண்ணா வென்று கூப்பிடுவாள் என்று சொன்னியே உனக்கு அசிங்கமா இல்லையா இப்படி பண்ண”.
“அவ உன்னை அண்ணனாக நினைச்சதா சொல்ற. நீயும் அவளை தங்கச்சியாக பார்த்ததா சொல்றியே அப்புறம் எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு”.
“உன் பொண்ணு கிட்டயும் நீ இப்படித்தான் நடந்துப்பியா யாராவது காசு கொடுத்து மிரட்ட சொன்னால். இப்படித் தான் அசிங்கமாக நடந்துப்பியா” என்றான்.
ஜெகதீஷ், “அழுதுக் கொண்டே இல்லை சார் என்னை மன்னிச்சிடுங்க. நான் இவங்க பேச்சைக் கேட்டு பண்ணது எல்லாமே ஒரு கட்டத்துக்கு மேல் தான் தப்பு என்று புரிந்தது”.
“என் பொண்ணுக்கு கேன்சர் வந்துடுச்சு பொழைக்குறதே கஷ்டம் சொல்லிட்டாங்க. அப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன்”.
“பெத்தவங்க பண்ற பாவம் புள்ளைங்க தலையில் தான் விடியும் என்று சொல்லுவாங்க அதே போல்”.
“இப்போ நான் பண்ண பாவத்துக்கு தான் என் பொண்ணுக்கு தண்டனை கிடைச்சிருக்கு என்று அந்த நிமிஷமே நான் இந்த தொழிலையே விட்டுட்டு என் பொண்ணுக்காகவும் என் பொண்டாட்டிக்காகவும் என்னோட ஊரோடவே போயிட்டேன்”.
“இப்பவும் என் பொண்ணுக்கு ஆப்ரேஷன் செலவுக்கு காசு தேவைப்பட்டுச்சு என்கிட்ட அவ்வளவு காசு இல்லை. அதுக்காக தான் இவங்க கிட்ட உதவி கேட்டு வந்தேன்”.
“நான் ஒத்துக்குறேன் நான் பண்ணது தப்பு தான் ரொம்ப பெரிய தப்பு தான் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை நான் ஏத்துக்குறேன். நான் நிஜமாகவே திருந்திட்டேன் சார்” என்று அழுதான்.
விக்ரம், “நீ என்ன சொன்னாலும் சரி உன்னை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுக்காமல் நான் விடமாட்டேன் டா” என்றான்.
நிலா, “விக்ரம் வேண்டாம் இவங்களை விட்டுடுங்க. இவங்க தப்பு பண்ணது உண்மை தான். ஆனால் அவங்களுக்கான தண்டனை கடவுளே கொடுத்துட்டார்”.
“அவங்களுக்கும் வாழறதுக்கு நம்ம ஒரு சான்ஸ் கொடுக்கணும். இவங்க மேல் கம்ப்ளைன்ட் கொடுக்காதீங்க”.
“இவங்க உள்ள போயிட்டாங்கனா அவங்க குழந்தையை யார் பார்த்துப்பா” என்றாள்.
அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் ஜெகதீஷ் நெஞ்சில் முள்ளால் குத்தியது போல் இருந்தது.
ஜெகதீஷ், “நிலா காலில் விழுந்து என்னை மன்னிச்சிடு மா. ஆயிரம் இருந்தாலும் நான் அப்போ அப்படி பண்ணிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான்”.
“ஆனா அப்போ புத்தி கெட்ட தனமாக காசு இருந்தால் போதும் என்ற மாதிரி யோசித்து அப்படி பண்ணிட்டேன்” என்று அழுதான்.
நிலா, “அண்ணா அதான் இப்போ நீங்க திருந்திட்டிங்க இல்ல எனக்கு கூட பொறந்தவங்க என்று யாருமே கிடையாது”.
“நான் தனியாக இந்த வீட்டில் இருக்கும் போது கண்ணம்மா மட்டும் தான் என்கிட்ட அன்பா நடந்துப்பாங்க. அதுக்கு அப்புறம் நான் உங்ககிட்ட தான் கொஞ்சம் நல்லா பேசிகிட்டு இருந்தேன்”.
“உங்களை உண்மையாவே அண்ணனாக தான் நினைச்சேன் அந்த பாசம் எனக்கு இன்னும் இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் என்னால் நம்ப கூட முடியலை”.
“நீங்களா அன்னைக்கு என்கிட்ட அப்படி நடந்து கிட்டிங்க. அத பத்தி பேச கூட எனக்கு விருப்பம் இல்லை ப்ளீஸ் இங்க இருந்து போயிடுங்க” என்றாள்.
பிறகு ஜெகதீஷ் அங்கிருந்து சென்று விட்டான். சக்தி, “விக்ரம் நீங்க போலீசுக்கு கால் பண்ணுங்க” என்றான்.
விக்ரம் அடுத்த நொடி போலீஸ்க்கு கால் செய்து கம்ப்ளைன்ட் கொடுத்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் ஜெயலட்சுமி வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
சக்தியே தன் அக்காவைப் பற்றி வாக்குமூலம் கொடுத்தான்.
சக்தி, “என்னுடைய அக்கா ஜெயலட்சுமி தான் நிலாவுக்கு சித்தி. நிலாவை சின்ன வயதில் இருந்தே ரொம்பவே கொடுமை பண்ணிக்கிட்டு இருந்தாங்க”.
“இப்போ வரைக்கும் அவகிட்ட தப்பா நடந்துக்க சொல்லி மத்தவங்க மூலியமாக காசு கொடுத்து அவளை கொடுமை பண்ணாங்க”.
“பல குடும்பத்தையே வட்டிக்கு விட்டு காசை திரும்ப வசூல் பண்ணுவதாக சொல்லி சாகடிச்சிருக்காங்க”.
“சில குடும்பம் இவங்களோட டார்ச்சர் தாங்காமல் தற்கொலை பண்ணி செத்து இருக்காங்க” என்று அவனுக்கு தெரிந்தவரை எல்லாவற்றையும் கூறி விட்டான்.
போலீஸ் ஜெயலட்சுமி கையில் விலங்கை போட்டு தெருவில் இழுத்துச் சென்றார்கள். அதை ஊரே வெடிக்கை பார்க்க ஜெயலட்சுமி கூனி குறுகி அசிங்கப்பட்டாள்.
ஜெயலட்சுமி மனதில் என்னையே இப்படி அசிங்கப் படுத்திட்டீங்க இல்ல நான் சீக்கிரமே வெளிய வந்து அதுக்கப்புறம் உங்க எல்லாரையும் பார்த்துக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு வழியாக ஜெயலட்சுமியை ஜெயிலுக்கு அனுப்பியதில் அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.

