Loading

அத்தியாயம்-45

 

கேள்விகளைக் கண்டதுமே துள்ளிக் கொண்டு எழுந்த இருவரும் ஒன்றுபோல் “முதலாவது கேள்விக்கான பதில் மையல்” என்று கூற,

 

திரை பச்சை நிறத்தில் ஒளிர்ந்து ‘சரியான பதில்’ என்றது. மேலும் இருவருக்கும் தலைமேல் சிவப்பு நிற சின்னச் சின்ன இதய காகிதங்கள் வந்து மழையாய் பொழிய,

 

அந்நொடியில் தன்னையும் மறந்து தன்னவனின் விழிகளில் ஜொலித்த காதல் மீதான எதிர்பார்ப்பை ரசித்து நின்றாள் பெண்!

 

அவளும் அவனும்.. அவர்களுக்கான காதல் மழையும்! 

 

“இந்தக் கற்பனை உலகமும் நல்லாதான் இருக்குல?” என்று தன் போக்கில் கூறியவன் தன்னை சுதாரித்துக் கொண்டு அவளை நோக்க,

 

அவன் பதட்ட விழிகளை ரசித்தவளாய், “ரொம்ப நல்லாருக்கு” என்றாள்.

 

“ஆங்?” என்று அவன் விழிக்க,

 

“அ..அது.. இந்த ஷவர சொன்னேன்..” என்றாள்.

 

பேசிவிட்ட பின்பே இருவரும் அதிர்ந்து போய்த் திரையைப் பார்க்க, அது அவர்கள் பேச்சைக் கணக்கில் கொண்டு ஏதும் செய்யாமல் இருந்தது.

 

“என்ன..பேசினாலே அதைப் பதிலா தானே எடுத்துக்கும்?” என்று துரு வினவ,

 

“அதெல்லாம் முதல்ல தான் பா. இது கடைசி கேள்விகள். அதனால ஆஃபர் போட்டுட்டோம்” என்று கப்பல் கூறியது.

 

“ஆஃபரா? சூப்பரு” என்று இளா கூற,

 

“ஆனா ரொம்ப சந்தோஷப்பட வேணாம்… இந்த ஆஃபருக்கு பதிலா ஒரு ஆஃபர கட் பண்றோம். எந்தக் கேள்விக்கும் ரெண்டாவது வாய்ப்பு கிடையாது. இந்தக் கேள்விக்கான பதில் இதுனு நீங்க எதைச் சொல்றீங்களோ அது பிக்ஸ்ட். தப்பா சொன்னா அடுத்த வாய்ப்புக் கிடையாது” என்று அசராமல் அடுத்த குண்டை வீசிவிட்டுச் சென்றது!

 

இருவருமே அரண்டு நிற்க,

 

“இதுக்கு அந்த ஆஃபர குடுக்காமலே இருக்கலாம்” என்று இளா கூறினாள்.

 

“சரி புலம்பி ஒன்னும் ஆவப்போறதில்ல.. வா அடுத்ததை எல்லாம் சீக்கிரம் கண்டுபிடிப்போம்” என்று துரு கூற,

 

“ம்ம்..” என்று அடுத்த கேள்வியைக் கண்டாள்.

 

“பலர் கேட்டதுண்டு,

எவரும் பார்த்ததில்லை!

சொல்வதையே சொல்லிடும்,

ஆனால் கிளிப்பிள்ளையுமில்லை!

அது என்ன?” என்று அவள் கேள்வியை வாசிக்க,

 

“அட.. இது எக்கோ” என்றான்.

 

“எக்கோவா?” என்றவள் கேள்வியைப் பார்க்க,

 

“ஆமாடா.. சத்தத்தைக் கேட்க முடியும். பார்க்க முடியாது. நாம சொல்றதையே திரும்பச் சொல்லும். எதிரொலிதானே?” என்று கூறினான்.

 

“அட ஆமா..” என்றவள் “ரெண்டாவது கேள்விக்கான பதில் எக்கோ” என்று கூற,

 

‘சரியான விடை’ எனக் கப்பல் பச்சை நிறம் காட்டியது.

 

“ஏ சூப்பர்.. இன்னும் ஒன்னே ஒன்றுதான்” என்று துரு குதூகலிக்க, 

 

“உருவென்று ஏதுமில்லை,

ஆனாலும் கற்பனை வடிவம் உண்டு!

அதுவன்றி யாக்கையில்லை என்பர்,

ஆனால் அம்மாயையன்றி உயிர்ப்பில்லை!

உண்மையை உரக்கச் சொல்லியும் அது நீதிமன்றமில்லை,

உணர்ச்சிகளை எடுத்துச் சொல்லியும்

அது மருத்துவரில்லை!

அது என்ன?” என்று வாசித்தாள்.

 

“உருவென்று ஏதுமில்லை கற்பனை வடிவம் உண்டு.. ஏ காற்று தானே?” என்று துரு குதூகலிக்க,

 

“அவசரப்படாதீங்க துரு.. நமக்கு வேற வாய்ப்புகூட கிடையாது. எல்லா வரிகளுக்குமே உங்க பதில் பொருந்துதானு பாருங்க” என்று கூறினாள்.

 

அடுத்தடுத்த வரிகளைப் பார்த்தவன், “ம்ஹும்.. அடுத்த வரிகளுக்குப் பொருந்தலையே” என்று கூற,

 

“ம்ம்.. வேற என்னனு யோசிப்போம்” என்றாள்.

 

“ஒருவேளை மூளையா இருக்குமோ? உண்மைய சொல்லுது.. உணர்ச்சிய சொல்லுதுனு வருதே?” என்று இளா யோசிக்க,

 

“ஆனா அதுக்கு உருவம் இருக்கேடா?” என்றான்.

 

“ம்ம்.. உண்மை தான்.. மாயைனு வேற வருது..” என்று அவள் யோசிக்க,

 

“இதுதான் கடைசி கேள்வி.. இதுக்கு மட்டும் பதில் கிடைச்சுட்டா நாம நம்ம உலகத்துக்குத் திரும்பிடலாம்” என்று துரு கூறினான்.

 

“ம்ம்..” என்று மெல்லொலியில் கூறியவள் யோசிக்கத் துவங்க,

 

“தராசா இருக்குமா?” என்று கேட்டான்.

 

“அது எங்கருந்து உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சொல்லப் போகுது?” என்று அவள் கேட்க,

 

“அதுவும்‌ சரிதான்” என்று யோசித்தான்.

 

“இப்ப இதுக்கு பதில் சொல்லிட்டா நாம வீட்டுக்குப் போயிடலாமா?” என்று மெல்லிய குரலில் இளநகை வினவ,

 

“அப்படி தான் நினைக்குறேன். இது கடைசி கேள்வி, அன்ட் இந்த க்ளூல மறைகை கிட்டும்னு போட்டிருக்கு. அப்ப இதுதான்னு தான் தோனுது” என்றான்.

 

“ஹ்ம்..” என்று அவள் கூற,

 

“என்னாச்சு?” என்றான்.

 

“இல்ல.. இந்த உலகம் ரொம்ப நல்லாருக்கு. நம்மள தவிர யாருமே இல்ல, எந்தச் சண்டையும் இல்ல, அடிதடி இல்ல, மாசு மறு இல்ல.. ரொம்ப அமைதியா அழகா இருக்கு” என்று அவள் கூற,

 

பதிலாற்றாது அவளையே பார்த்தான்.

 

“ஆனாலும் கூட இரைச்சலோட, தினம் ஒரு ஆதங்க செய்தியோட, மாற்றத்தை எதிர்ப்பார்த்துட்டே, அம்மா அப்பா கூடச் சண்டை போட்டுட்டு, அகா வயித்துல கை வச்சு பேபியோட மூவ்மென்ட்ஸ் பாத்துட்டு, விஜய் குட்டி கூட விளையாடிட்டுனு நம்ம உலகமே வேறல்ல? இந்த உலகம் பிடிக்காம இல்ல.. ஆனா இந்த மாதிரி அமைதியான உலகத்தில் எல்லாருமே வாழ்ந்தா நல்லாருக்கும்ல?” என்று அவள் கேட்க,

 

“எல்லாருமே இருந்தா இந்த அமைதி இருக்காதேடா” என்றான்.

 

“உண்மை தான்.. எல்லாரும் நல்லவங்களும் இல்ல எல்லாரும் கெட்டவங்களும் இல்ல.. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றப் போல மாறிக்குறது தான்.. ஆனா இப்படி இருந்தா நல்லாருக்கும்ல?” என்று அவள் கேட்க,

 

“ஹ்ம்.. நீயும் சுயநினைவோட 2074க்கு வந்திருக்கனும். அந்த உலகமே வேற.. ஆனா அதில் நிறைய நல்ல விஷயங்களும் இருந்தது” என்று கூறினான்.

 

“நம்ம அப்ப முன்னேறி இருந்தோமா?” என்று அவள் ஆசையாய் கேட்க,

 

“ம்ம்.. ஆனா சில முன்னேற்றம் அத்தனை அழகானதா இல்ல.. நீ சொன்னியே.. அகா வைத்துல கை வச்சு குழந்தையோட மூவ்மென்ட்ஸ் எல்லாம் ரசிக்குறது அழகுனு.. அங்க குழந்தையவே ஃபேக்டரில உருவாக்கித் தரானுங்க” என்று கூறினான்.

 

“ஆத்தீ..” என்று அவள் நெஞ்சில் கை வைக்க,

 

“ம்ம்.. ஆனா நிறைய நல்லதும் இருந்தது.. மாசு இல்லாத உலகம்” என்று கூறினான்.

 

“ம்ம்.. மாற்றமெல்லாம் நாம நினைச்சா வரும் தான்ல?” என்று அவள் கேட்க,

 

“மனசு வைக்கனும்டா” என்றான்.

 

“ஹ்ம்..” எனப் பெருமூச்சு விட்டவள் மண்டையில் மணி அடிக்க,

 

“துரு.. என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.

 

“நானா? என்ன சொன்னேன்?” என்று அவன் புரியாது கேட்க,

 

“இப்ப என்ன சொன்னீங்க?” என்று அவள் மீண்டும் கேட்கவும்,

 

“மனசு வைக்கனும்னு சொன்னத கேட்குறியா?” என்றான்.

 

“எஸ்.. ஐ காட் இட்” என்று குதூகலித்து எழுந்தவள் அவன் கைபற்றி, “துரு.. மனசு துரு.. உருவென்று ஏதுமில்லை,

ஆனாலும் கற்பனை வடிவம் உண்டு! நாம குடுக்குற ஹார்ட் இமோஜி..

அதுவன்றி யாக்கையில்லை என்பர்,

ஆனால் அம்மாயையன்றி உயிர்ப்பில்லை! மனசில்லாம வாழ முடியுமா சொல்வாங்க.. அதாவது மனசும் இதயமும் ஒன்னுங்குற நம்மளோட எண்ணம்.. இதயமில்லாம உடலில்லை. ஆனா.. இதயத்தின் மாயையா நினைக்கப்படுற மனசில்லாம தான் நம்மளால இருக்க முடியாது..

உண்மையை உரக்கச் சொல்லியும் அது நீதிமன்றமில்லை,

உணர்ச்சிகளை எடுத்துச் சொல்லியும்

அது மருத்துவரில்லை! நம்ம மனசாட்சிக்கு உண்மை எதுனு தெரியும். அன்ட் உணர்வுகள் அனைத்துமே அது சார்ந்தது.

அது என்ன?.. அதுதான் மனம்” என்று அவள் கூற,

 

“யூ ஆர் ஜீனியஸ் பேபி” என்றான்.

 

மிகுந்த சந்தோஷம் அடைந்தவள், “பதில சொல்லுவோமா?” என்க,

 

“ம்ம்” என்றவன் அவளுடன் திரையை நோக்கி அவளோடு சோர்ந்து, “மூன்றாம் கேள்விக்கான பதில் மனம்!” என்றான்.

 

ஆனால் எந்த எதிரொலியும் இன்றி கப்பலில் திடீரெனச் சூழ்ந்த அபார அமைதி, இருவரையும் வியர்க்க வைக்க, கோர்த்திருத்த கை வழி ஒருவர் உள்ளங்கை ஈரத்தை மற்றவர் உணர்ந்தனர்.

 

“என்னாச்சு?” என்று மெல்லிய குரலில் அவன் வினவ, 

 

பயத்துடன் அவன் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.

 

அவளது கரத்தின் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தவன் தானும் தன் அழுத்தத்தை அதிகரிக்க, “த..தப்பான ஆன்ஸரா?” என்று தந்தியடிக்கும் குரலில் கேட்டாள்.

 

அவன் மட்டும் என்னத்தை கூறிவிடுவான்? விடையறியா கேள்விக்கு ஏதோ விளக்கம் கூறுகிறாளே என்ற தெம்பில் தான் பதிலைக் கூறினான்.

 

“அ.. அப்படிலாம் இருக்காதுடா.. ப்..பயப்படாத” என்று கூறியவன் மூச்சை இழுத்து விட,

 

மனதின் படபடப்பு வெளியே கேட்பதைப் போல் உணர்ந்தவள் வேரொடிந்த மரமாய் அமர்ந்தாள்.

 

“ஏ..” என்று ஒற்றைக் காலைக் குற்றி அமர்ந்தவன் அவள் தோள்பற்றி, “இளாமா..” என்க, “பயமாருக்கு” என்று கண்கள் பனிய மொழிந்தாள்.

 

தன் கண்கள் சுரந்த கண்ணீரை இமை சிமிட்டி விரட்டியவன், “நான் உன்ன நம்புறேன்.. நீ சொன்னது தப்பாருக்காது.. எதுவானாலும் சேந்தே சமாளிப்போம்.. நான் இருக்கேன்” என்று அவளை நோக்கித் தன் உள்ளங்கை நீட்ட,

 

அதையே கண்ணீருடன் பார்த்தவள் இறுக பற்றிக் கொண்டாள்.

 

அடுத்த நொடி வேகமெடுத்த கப்பல் சட்டென மாயமாய் மறைய, இருவரும் ஏதோ சுழலுக்குள் மாட்டிக்கொண்டதைப் போன்று உணர்ந்தனர்.

 

எங்கோ இழுபட்டு செல்லும் உணர்வில் தத்தளித்தபோதும், கோர்த்திருந்த தங்கள் கரத்தின் அழுத்தம் குறைக்கவில்லை!

 

இழுபட்டு இருவரையும் பொத்தென்று காட்டிற்குள் அந்த மாயாஜாலம் வீச, அடுத்தடுத்து மற்ற ஜோடிகளும் அவர்கள் அருகே வந்து விழுந்தனர்.

 

“ஆ.. ஏன்டா சாவடிக்குறீங்க? இடுப்பெல்லாம் வலிக்குது” என்று ஜான் கத்த,

 

“அடியே ஜானு தூக்கிவிடுடி” என்று அவளுக்கு மேல் வயதானவனாய் இடுப்பை பிடித்துக் கொண்டு கைநீட்டி கொஞ்சினான் மதி.

 

அவனைத் திரும்பிப் பார்த்தவள், “நீயெல்லாம் புருஷனாடா? அந்தா பாரு.. அகாவை அகர் எப்படி தாங்கிட்டு இருக்காருன்னு.. உன்னை நாந்தேன் சுமக்க வேண்டியிருக்கு” என்று திட்டிய போதும் அவனைத் தூக்கிவிட்டு அவன் சட்டையில் உள்ள மண்ணைத் துடைத்து விட்டாள் பெண்!

 

“ஏ ஜான்.. உனக்குக் காது கேட்குது” என்று அகா கூற,

 

“ஏ அகா உனக்கு வாய்பேச வருதுடி” என்று ஜான் கூறினாள்.

 

“அட ஆமா..” என்று இருவரும் கோரசாகக் கத்த,

 

விஷ்வேஷ் தன் காதைக் குடைந்தபடி, “உஃப்.. நல்லதாபோச்சு” என்றான்.

 

“வானம் இப்பவே இடிஞ்சு கீழ விழனும்” என்று ப்ரியா கத்தி கூற,

 

அவள் தலையில் தட்டிய அகர், “டெஸ்டிங்கு சிறுசாலாம் சொல்லிப்பாக்க மாட்டியா? எதாவது எசக்கு பெசகா நடந்து தொலைச்சா என்ன பண்ண?” என்று கேட்டான்.

 

அவன் முகம்பற்றித்திருப்பிய அகா தரையில் எழுதியவற்றைக் காட்ட, “ஐ லவ் அகர்” என்று அதை வாசித்தவன் அவளை அணைத்து உச்சியில் இதழ் பதித்தான்.

 

“சூப்பரப்பு” என்று இளாவும் துருவும் ஒன்றுபோல் கூற,

 

“ஹே நீங்க வந்துட்டீங்களா?” என்ற பட்டாளம் அவர்களை ஓடி வந்து அணைத்துக் கொண்டது!

 

“எங்கள, அப்படியே காட்டுல உக்காந்து காக்கா விரட்ட விட்ருச்சு அந்த மேஜிக்கு… சரி எல்லா புதிருக்கும் பதில் சொல்லிட்டீங்களா?”

 

“எப்படி போச்சு?”

 

“கஷ்டமாருந்துதா ஈசியாருந்துதா?”

 

“ரெண்டு பேருமா சமாளிச்சுட்டீங்களா?”

 

“கடைசி நேரத்துல அந்த மேஜிக் இழுத்துட்டு வரும்போதுகூட அந்த கரடி இவன் கைய விடாம என்னா அழுக அழுதுச்சு தெரியுமா?”

 

“ரொம்ப முக்கியம்.. அவங்க போன பயணம் எப்படினு கேளுடி”

 

என்று பலதரப்பட்ட கேள்விகள் வரவும்,

 

ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோர், “எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்றனர்.

 

“காய்ஸ்..‌ அப்றம் ஏன் இன்னும் நாம காட்டுலயே இருக்கோம்?” எனப் ப்ரியா வினவ,

 

வானில் தோன்றிய அசரீரீ “புதையல் என்னனு தெரிஞ்சுக்க வேணாமா?” என்றது!

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்