
அத்தியாயம்-43
பளபளத்த ஒளி மங்கிய நொடி கண்களைத் தேய்த்துக் கொண்டு இளநகையும், துருவனும் கண் திறக்க, அவர்கள் முன்னே பரந்து விரிந்திருக்கும் நீலக்கடல் தென்பட்டது.
“வாவ்!” என்று அந்த அழகிய மினுமினுக்கும் கடலின் அழகில் லயித்து இளநகை கூற,
“மத்தவங்கள காணும்?” என்று துருவன் கூறினான்.
அப்போதே சுற்றி முற்றி பார்த்தவள், “ஏ ஆமாமா.. எங்க அவங்கெல்லாம்?” என்று வினவ,
“நானும் உன்கூட தானடி இருக்கேன்.. எனக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி கூறினான்.
மேலே பளீரென்ற ஒளி உருவாக, “குழந்தாய்.. குழந்தாய்.. மேலே மேலே..” என்று ஒலி கேட்டது.
இருவரும் மேலே பார்க்க, ஒளியில் கண்களைக் கூசின!
“யோ.. மேல பாருனு சொல்லிட்டு இவ்ளோ ப்ரைட்னெஸ் வச்சா எப்புடியா பாக்குறது? ப்ரைட்னஸ குறைய்யா” என்று துருவன் கத்த,
“அடடா.. சாரி குழந்தாய்” என்று மன்னிப்பு வேண்டிய அசரீரியும் தனது ஒளியை குறைத்துக் கொண்டது.
“ம்ம்.. குட்” என்று துருவன் கூற,
“எங்க கூட இருந்த மத்தவங்கல்லாம் எங்க?” என்று இளநகை கேட்டாள்.
“அவர்கள் எல்லோரும் அந்தக் காட்டிலேயேயே உள்ளனர். இனி தொடரும் பயணத்தில் நீங்கள் இருவர் மட்டுமே பங்கு கொள்ள முடியும்” என்று அசரீரி கூற,
“ஏன்?” என்று இளநகை அதிர்ந்தாள்.
“ஆம்! இனி போகும் பாதையில் எந்த மந்திர சக்தியையும் பயன்படுத்தக் கூடாது. மந்திர சக்தியே இல்லாமல் பயணம் செய்தோரால் மட்டுமே தான் இவ்விடம் வர இயலும். அதனால் நீங்கள் இருவர் மட்டுமே தான் இனி சென்று புதையலை கண்டுபிடிக்க வேண்டும்” என்று அசரீரி கூற,
“நடுவுல டௌட் வந்தா நீ க்ளியர் பண்ணுவியா?” என்று துருவன் கேட்டான்.
‘ஸப்பா.. இப்பவே கண்ண கட்டுதே’ என்று அலுத்துக் கொண்ட அசரீரி, “போய்ப் புதையல கண்டுபிடிச்சா புடி.. இல்ல இங்கயே கிட” என்றுவிட்டு மறைய,
“ஏ..ஏ.. ஒரே ஒரு டவுட்டு.. கடலுக்குள்ள எப்படி போக?” என்று இளா கத்தியதெல்லாம் புல்லுக்குப் பாய்ந்த நீராய் சென்றது!
“என்ன துரு.. அதைப் பேசிப் பேசியே கடுப்படிச்சு அனுப்பிட்ட.. இப்ப நாம எப்படி கடலுக்குள்ள போறது? க்ளூபடி அடுத்த லைன்ல கடலுக்குள்ள ஏதோ புதிர் வச்சு கண்டுபிடிக்குறதா தான் இருக்கு. இப்ப நாம எப்படி கண்டுபிடிக்க” என்று பேசிக் கொண்டே போனவளை தடுக்க முயன்றவன் அவள் கன்னம்பற்றிக் கடலின் பக்கம் திருப்பினான்.
அங்குக் கடலில் இவர்களுக்காகவென்றே காத்திருந்தது, ஓர் நீர் மூழ்கிக் கப்பல்.
“வாவ்..” என்று கூறியவளது கன்னங்கள் அவன் விரலில் சிறைப்பட்டதன் பயனாய், குவிந்த அவள் அதரங்கள் அவன் விரல் உரசின!
சட்டெனக் கரமெடுத்தவன் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், முன்னே நடக்க, ஆடவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.
இருவருமாய் அந்தக் கப்பலின் அருகே வர, “இப்ப நாம கடலுக்குள்ள போகப்போறோமா?” என்று துருவன் கேட்டதும்,
“இல்ல.. ஹார்ட் ஆஃப் எர்த்துக்குள்ள போகப்போறோம்” என்று சிரிப்போடு கூறிய இளா அதனுள்ளே ஏறினாள்.
அவள் கூற்றில் தானும் சிரித்துக் கொண்டவன் அவளுடன் உள்ளே ஏறினான்.
உள்ளே அந்தக் கப்பலை நகர்த்த எந்தப் பொத்தானும் இல்லை.
“என்ன காலியா இருக்கு..?” என்று இளநகை கேட்க,
“தெரியலையே.. இதுல என்ன ஆப்பு வச்சிருக்கானோ?” என்றான்.
திடீரென அந்தக் கப்பல் குலுங்க “ஏ.. ஆ..” என்று கூச்சலிட்டு இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர்.
குலுங்கலுடன் அக்கப்பல் உள்ளே மூழ்க, இருவரும் சறுக்கிக் கொண்டு ஒரு ஓரமாய் கப்பல் சுற்றுச்சுவரில் இடிபட்டுக் கிடந்தனர்.
“ஆ.. ஆப்பு ஆரம்பிச்சுடுச்சோ” என்று தலையைத் தேய்த்துக் கொண்டே இளநகை வினவ,
“அப்படித்தான் நினைக்குறேன்” என்றான்.
உள்ளே மூழ்கிய கப்பலானது தன்போக்கில் சென்றுகொண்டே இருக்க, அதனுள் இருந்த இருவருக்கும் எழுந்து நிலையாய் நிற்பதற்கே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்தவள் அவனுக்குக் கரம் கொடுத்து உதவ, அதைப் பற்றிக் கொண்டு எழுந்தவன் நிலைதடுமாறி அவள் தோள்களைப் பற்றிக் கொண்டு நிலை பெற்றான்.
சில நிமிடங்களில் இருவரும் எழுந்து நிலையாய் நின்று “ஹப்பாடா” என்க, ‘சடன் பிரேக்’ அடித்து நின்ற கப்பல் இருவரையும் பொத்தென விழச்செய்திருந்தது.
“ஆ.. இடுப்பெலும்பு உடைஞ்சே போயிடும் போல.. எவன் அவன் கப்பலோட்டுறது” என்று இளநகை முனங்க,
“எல்லாம் அந்த மேஜிக்கா தான் இருக்கும்” என்று துருவன் அலுப்பாய் கூறிக் கொண்டான்.
இருவரும் எழுந்து எழுந்து எதற்குக் கீழேகீழே விழ வேண்டும் என அப்படியே அமர்ந்திட, மீண்டும் சில அடிகள் நகர்ந்த கப்பல் நின்றது.
அவர்கள் முன் இருந்த கண்ணாடி வழியே இரண்டு பாதைகள் இருப்பது தெரிய, “இப்ப இதுல ஒரு பாதைய நாமதான் சூஸ் பண்ணனுமா?” என்று இளநகை கேட்டாள்.
“சரியா சொன்னீங்க” என்று ஒரு இயந்திரப் பெண்ணின் குரல் கேட்க,
“யாருடா அது?” என்று துருவன் சுற்றி முற்றிப் பார்த்தான்.
“நாந்தான் நாந்தன்” என்று தங்கள் முன் இருந்த கப்பலின் சுவர் பகுதியிலிருந்து ஒலி கேட்க, இருவரும் கூர்ந்து நோக்கிய தருணம் அச்சுவரில் கண்களும் வாயும் மட்டும் தோன்றி, “ஹாஹா.. நாந்தான் நாந்தான்.. ஹாஹா” என்று சிரித்தது!
அதைக் கண்டு ‘ஞ?!’ என்ற பார்வையுடன் பார்த்தவன், “மாடர்ன் ஹாஸினி போல” என்க,
அவனைப் பாவைப் புரியாமல் நோக்கினாள்.
“பேச்சுக்குப் பேச்சு ஹாஹா ஹாஹானு சொல்லுதுல்ல?” என்று அவன் கூற,
தன் தலையில் அடித்துக் கொண்டவள், அச்சுவரின் புறம் திரும்பி, “நாங்க எப்படி எந்தப் பாதைனு கண்டுபிடிக்க?” என்று கேட்டாள்.
“ஹாஹா.. அது ரொம்ப சிம்பில்.. ஒரு சாம்பில் பார்ப்போமா?” என்று அச்சுவரில் உள்ள வாய் பேசிவிட்டு விசிலடிக்க, கப்பலின் கண்ணாடிப் பகுதியில் ஒரு புகைப்படம் தோன்றியது!
அதில் ‘சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன?’ என்ற வாக்கியம் மின்ன,
அதைக் கண்டு புருவம் சுறுக்கிய துருவன், “கண்?” என்று கேட்டான்.
“சரியான விடை” என்று பல வர்ண காகிதங்கள் அவர்கள்மேல் தூவப்பட, கப்பல் சரியான பாதையில் பயணித்தது.
“இப்ப உங்களுக்குப் புரிஞ்சதா?” என்று கப்பல் கேட்க,
“ஏ துரு.. இது நல்லாருக்கு.. இது தான் புதிர் பார்த்து வழி கண்டுபிடிக்குறது போல.. செம்ம” என்று இளா துள்ளலோடு கூறினாள்.
“குட். அடுத்தடுத்த பாதைகள்ல கேள்விகள் வரும். சரியான பதில் சொன்னா சரியான பாதைல போகும். தவறான பதில் சொன்னா கூடுதலா ஒரு சான்ஸ் கிடைக்கும். அதுவும் தப்பா சொன்னா கப்பல் மொத்தமா அப்படியே நகராம நின்றுடும். ஜாக்கிரதை” என்று அசராமல் அவர்கள் தலையில் குண்டை இறக்கிவிட்டு அந்தக் கண் மற்றும் வாய் மறைய,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சில நிமிட அமைதிக்குப் பின், “அதான் ரெண்டு சேன்ஸ் இருக்கே துரு.. விடுகதை எல்லாம் ஈசி தானே?” என்று இளா கூற,
அவள் துள்ளலைக் கண்டு புன்னகைத்தவனுக்கு மனதில் அவள் கூறுமளவு இது எளிதாக இருக்குமென்று தோன்றவில்லை!
இருப்பினும் அவளது சிரித்த முகத்தையும் நம்பிக்கையையும் கலைக்கத் தோன்றாது, அவளை ரசித்துப் பார்த்தவன் மெல்லிய புன்னகையோடு தலையசைத்தான்.
அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கப்பல் நின்றது.
இரண்டு வெவ்வேறு பாதைகளுக்கு நடுவே நின்ற கப்பலின் கண்ணாடியில் மீண்டும் ஒரு படம் ஒளிர்ந்தது.
“எனக்கு இதெல்லாம் பாக்க டோரா மாதிரி பீல் ஆகுது” என்று கூறியபடி அதைத் திரும்பிப் பார்த்தாள்.
“தவறான விடை” என்று கூறிய கப்பல், வேகமாய் இருமுறை சுழன்று நிற்க, இருவருக்கும் ஒரு நொடி குடலெல்லாம் கண்முன் வந்து சென்றதைப் போன்றானது.
இளா ஏதோ பேச வர, அவள் வாயைச் சட்டெனப் பொத்தியவன் திரையை நோக்கினான்.
‘ஓடெடுப்பான்,
பிச்சை ஒரு நாளும் கண்டறியான்; காடுறைவான், தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நால் உண்டு;
நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?’
என்று இருப்பதைக் கண்ட துரு ஒன்றும் புரியாமல் அவளைக் கண்டான்.
அவன் தன் வாயைப் பொத்தியதில் அவளுக்கு நடப்பது சற்றே புரிந்தது! கேள்வி வந்துவிட்டால் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தையே பதில். எனில் இருவரும் கலந்தாலோசிக்கவும் பேசிவிடக்கூடாது என்பது அவளுக்குப் புரிய, அவனை ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தாள்.
ஆமென்பதாய் கண்கள் மூடித் திறந்து அவள் வாயிலிருந்து கரமெடுத்தவன், திரையை நோக்கிக் கரம் நீட்டித் தனக்குத் தெரியவில்லை என்பதாய் கையசைக்க, தான் திரையை நோக்கினாள்.
அவளுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை! தன் நகத்தைக் கடித்தபடி யோசித்தவள் திரையையே நோக்க, துருவன் சாளரத்தின் அருகே சென்று வெளியே தெரியும் ஆழ் கடலில் அழகை ரசிக்கத் துவங்கியிருந்தான்.
‘கண்ட நேரத்துலதான் இந்த ரசனையெல்லாம் வரும் இவருக்கு’ என்று மனதோடு உரிமையாய் திட்டிக் கொண்டவள் யோசனையோடு இங்கும் அங்கும் நடக்க, அவ்வப்போது அவள் தோளை சுரண்டி, வெளியே தெரியும் பவளப்பாறைகள், புது வகையான மீன்களையெல்லாம் காட்டி அவள் முறைக்கும் பார்வையை பரிசாய் பெற்று ரசித்தான்.
அவன் கண்களை அங்கே நீந்தி வந்த மிகப் பெரிய ஒரு ஆமை கவர, “ஏ ஆமை..” என்று அதைப் பார்த்து அவன் கத்தவும் பதறிப்போன இளா, “துரு..” என்று அதிர்ந்தாள்.
அதில் திடுக்கிட்டுத் திரும்பியவன், “போச்சு” என்றபடி திரையை நோக்க,
“சரியான விடை” என்று கூறிய கப்பல் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
இருவரும் அதிர்ந்துபோய் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்கும் நொடிகளில் தான், அக்கேள்விக்கான பதில் ஆமை என்றே புரிந்தது.
“அட.. ஓடு இருக்கும் பிச்சை எடுக்காது.. ஆமைக்கு ஓடு இருக்குமே.. நாலு காலு, நிலத்துலயும் இருக்கும், நீர்லயும் இருக்கும், படுக்கும்போது மண்டைய ஓட்டுக்குள்ள வச்சுக்கும்.. ஆமைதான்” என்று இளா கூற,
தன் நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டவன், “பயந்தே போயிட்டேன்டி” என்றான்.
“ம்ம்.. இப்ப பதறுங்க” என்று லேசாய் அதட்டியவள் வாடிய அவன் முகம் கண்டு, “சரி விடுங்க துரு.. அதான் ஒன்னுமாகலையே.. இனி கேர்புல்லா இருக்கலாம்” என்று கூறினாள்.
“இது ரொம்ப ஈசியா இருக்குல?” என்று அவள் கூற,
“அதுதான் பயமாருக்கு.. முதல்லருந்து வந்த க்ளூஸ் எல்லாமே கஸ்டம்.. இதுதான் கடைசி போல இருக்கு.. இதெப்டி இவ்ளோ ஈசியாருக்கும்?” என்று கேட்டான்.
‘ஆமால?’ என்று அவள் யோசிக்கும் நேரம் அடுத்து மூன்று பாதைகளுக்கு நடுவே கப்பல் நின்றுவிட,
திரையில்,
‘கையில்லாதோனும் என்னை பிடித்திடுவான், ஆனாலும் நீடிக்க இயலாது;
என்னில் பலவகையுண்டு, அனைத்தையும் பிடித்தாலும், சுவைக்க இயலாது. நான் யார்?’
என்ற கேள்வியும்,
‘இரவில் சொல்லப்படாமல் வருவேன்,
பகலில் அள்ளப்படாமல் மறைவேன்.
ஒளியில் மினுமினுப்பாய் பிரகாசிப்பேன்,
ஆனாலும் நான் மினுமினுக்க மாட்டேன். நான் யார்?’
என்ற கேள்விகள் மின்னி இருவரையும் திருதிருக்கச் செய்தன.

