
அத்தியாயம் 42
இரவு ஒன்பது மணியை கடந்து கொண்டிருக்க, செவ்வந்தியும் சங்கரியும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
பார்கவியின் தோளைத் தட்டி அவர்களை அஸ்வந் காட்ட ,அவள் கண்களால் தெரியும் என்னும் வகையில் சைகை செய்தாள்.
அவர்கள் யூகித்ததை போன்று, செவ்வந்தி, அஸ்வந் அருகில் வந்தவர் “அஸ்வந் ஒன்பதரைக்கு முகூர்த்தம் குறிச்சாச்சு.. இப்பவே கிளம்பனும்…” என்று சொல்ல
“இந்த கிளம்பிட்டாங்க இல்ல.. எவன் எப்படி கல்யாணம் பண்ணாலும், அந்த முதல் ராத்திரிக்கு ஒரு சொம்பு பால் கொடுத்து அனுப்புறத விட மாட்டாங்க…” என்று அஸ்வந் பார்கவியிடம் சொல்ல
“சும்மா இருங்க இப்படி நடக்கும்னு அத்தைக்கு தெரியுமா என்ன.. கிளம்பலாம் எனக்குமே கால் வலிக்குது…” என்று பார்கவி சொல்ல
நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு பெரியவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.
முதலில் பூஜை அறையில் விளக்கேற்றி, பால்,பழம் கொடுக்கும் நிகழ்வுகள் நடந்தேறவே மணி ஒன்பதரையை கடந்து இருந்தது .
பர்விதாவை முதலிரவைக்காக அலங்காரம் செய்து கொண்டிருக்க,
அபர்ஜித்தோ நடிக்க வேண்டும் என்பதை மறந்து, துள்ளிக் குதித்து தனதறைக்குச் செல்ல,
“ம்க்கும்…” தொண்டையை செருமிய அஸ்வந் “இன்னுமே எதுவும் கிளியர் ஆகல ப்ரோ.. நடிப்ப கொஞ்சம் கண்டினியூ பண்ணு…” என்று சொல்ல கண் சிமிட்டி விட்டு உள்ளே சென்றான்.
பர்விதாவை தயாராக்கி, அவள் கையில் பால் கிளாஸை கொடுத்த செவ்வந்தி,
“அம்மாடி பர்வி,அவன் முகத்த தூக்கி வச்சிருந்தா பெருசா எடுத்துக்காத, எல்லாம் கொஞ்ச நாள்ல மாறிடும்.. கண்டிப்பா உன்ன ஏத்துப்பான்.. காலம் எல்லாத்தையும் மாத்தும்.. அதுக்கு உதாரணமே இதோ உன் அக்கா தான்.. கல்யாணமான புதுசுல எப்படி இருந்தா..
…இப்போ இவள் டேய் மாமா என்றதும்.. அவன் என்னடி பொண்டாட்டி என்றதும்.. இவங்க ரெண்டு பேருக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேனா இல்ல லவ் பண்ணி கல்யாணம் பண்ணினாங்களான்னு எனக்கே சந்தேகமா இருக்கு.. அவ்ளவு சந்தோஷமா, அன்யோனியம்மா வாழ்றாங்க..
…இவங்கள போல உன் வாழ்க்கையும் ஒரு நாள் மாறும்.. ஏதாவது அவனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானமா பழகப் பாரு…” என்று செவ்வந்தி அறிவுரைகளை வழங்கி கொண்டிருக்க
“அத்தை போதும்.. போதும்.. மீதிய அக்கா என்ற முறைக்கு, நானும் கொஞ்சம் சொல்லி, அறையில விட்டுட்டு வாரேன்.. நீங்க போய் தூங்குங்க…” என்ற பார்கவி பர்விதாவை அழைத்துக் கொண்டு அபர்ஜித் அறைவாசலில் விட்டவள், எதுவும் சொல்லாமல் “உள்ள போ…” என்று விட்டு திரும்பி நடக்க,
அறையினுள் வேகமாக வந்தவள், பால் கிளாஸை மேஜையில் வைத்துவிட்டு, அதே வேகத்தில் வெளியே வந்து, தனதறைக்கு சென்று கொண்டிருந்த பார்கவியை, பின்னிருந்து “அக்கா…” என்று அணைத்துக் கொண்டாள்.
பார்கவியின் கண்களில் லேசான கண்ணீர் எட்டிப் பார்க்க, இதழ்கள் மெலிதாக விரிந்தன.
அறைக்கு அவசரமாக வந்தவள், மீண்டும் வேகமாக வெளியேற, என்னவோ என்று பதறிய அபர்ஜித் வெளியே வந்து பார்க்க,
பர்விதா தமக்கையை கட்டிக்கொண்டு கண்ணீர் விடுவதை பார்த்தான். அவளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கூட அவனுக்கு தெரியும்.
பார்கவியை தேடி வெளியே வந்த அஸ்வந்தும், பெண்கள் இருவரையும் பார்த்துவிட்டு, அவர்கள் பின் அறைவாசலில் நின்ற அபர்ஜித்திடம் என்னவென்று கண்களால் வினாவ,
அவனோ எல்லாம் உனக்கு தெரிந்தது தான் என்பது போல், மேலும் கீழும் தலையை ஆட்டினான்.
தன் வயிற்றை சுற்றி, இறுக்கமாக கட்டியிருந்த பர்விதாவின் கையை பிரித்து விட்ட பார்கவி, அவள் புறம் திரும்ப, பர்விதாவிற்கு பேச்சு வரவில்லை. அழுகைதான் வந்தது.
தேம்பித் தேம்பி அழும் தங்கையை தேற்றும் விதமாக, அவள் தோள்களில் கையை வைத்து “பர்வி அழாத.. பர்வி என்னாச்சு இப்போ…” என்று கேட்க
“அக்கா.. நான்.. நான் உன்கிட்ட பேசணும்…” என்று அவள் விசும்ப
“சரி வா…” என்ற பார்கவி தங்கையை அழைத்துக் கொண்டு மொட்டை மாடி ஏற, ஆண்களும் அவர்களை பின்தொடர்ந்தனர்.
பார்கவி கையைக் கட்டிக் கொண்டு நின்று இருக்க, அவள் முன்பு குற்ற குறுகுறுப்புடன், தயக்கமாக கையை பிசைந்து கொண்டு, கண்ணீருடன் பர்விதா நின்று இருக்க, அவர்களை விட்டு சற்று தள்ளி நின்று இருந்தனர் அபர்ஜித்தும் அஸ்வந்தும்.
“என்ன பேசணும்…?” பார்கவி ஆரம்பிக்க,
“அது.. அது.. அவங்க லவ்.. லவ் பண்ணுனது…” பர்விதா தயங்க,
“உன்ன தானே.. எனக்கு தெரியும்…” என்று பார்கவி சொல்ல விழுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தாள் பர்விதா.
அபர்ஜித்தும் ஒரு நொடி அதிர்ந்தவன் அஸ்வந்தை பார்க்க, “நான் சொல்லல.. முன்னாடியே அவளுக்கு தெரியும்…” என்றான் ரகசியமாக
“எப்படி?…” என்க
“அவளே சொல்லுவா கேளு…” என்று அஸ்வந் சொல்ல
“அஸ்வந்த நேத்து இரவு கூப்பிட்டு, நான் லவ் பண்றது பர்விதாவத்தான்.. நாளைக்கு அறிவு என்ன வேணான்னு சொல்றது வெறும் நாடகம்.. அப்போ அம்மாவ ரொம்ப எமோஷனல் ஆகாம பாத்துக்கணும்னு சொல்லி இருந்தாங்க அபிஜித் மாமா..
…இவங்க ரெண்டு பேரும் தனியா பேச போனது எனக்கு தெரியும்.. என்ன விஷயம்னு நான் கேட்கல.. ஆனா என் புருஷன் எதையும் என்கிட்ட மறைக்க தோணாம எல்லாத்தையும் அப்பவே சொன்னான்..
…ஆனா அஸ்வந் சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு உண்மை தெரியும்…” என்றவள் பர்விதாவை மேலும் நெருங்கி, அவள் கழுத்தில் கிடந்த செயினை தூக்கி வெளியே போட்டவள்,
“நான் நம்ம வீட்டுக்கு வந்தப்போ இத பாத்துட்டேன்.. அபர்வி.. இதை யார் தந்திருப்பாங்கனு கண்டுபிடிக்க அவ்ளவு கஷ்டமா இல்ல.. அப்புறம் உனக்கே தெரியாம உன் ஃபோன செக் பண்ணுனேன்.. எல்லாமே கன்ஃபார்ம் ஆச்சு..
…ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு.. அப்புறம் கட்டாயம் ஆழமான ஒரு காரணம் இருக்கும்னு நம்புனேன்.. உன்ன தைரியமா லவ் பண்றவரு அதே தைரியத்தோட, எல்லார் முன்னாடியும் ஒத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கத்தான், அறிவுக்கும் அவருக்கும் கல்யாணம்னு சொன்னேன்..
…அப்பவும் வெளிப்படையா ஒத்துக்கல.. வேற ஏதோ திட்டம் போட்டுட்டாருன்னு புரிஞ்சது.. அது என்ன திட்டம்னு நேத்து தெரிஞ்சப்போ தான் எனக்கே சில விஷயம் தெளிவாச்சு.. உன்ன யாரும் தப்பா பேசக்கூடாதுனு நினைக்குறார்னு புரிஞ்சுது..
…இந்த சமூகத்தால அவதூறையும், பலிச் சொல்லையும், அவரும் தூக்கி சுமந்து இருக்காரு இல்லையா.. அந்த வேதனை உனக்கு வரக்கூடாதுனு அவர் நினைக்கும் போது..
…நான் உன் அக்காடி.. இந்த ஊர் உலகத்தால அதிகம் பாதிக்கப்பட்டவ.. அதே கஷ்டத்த என் தங்கச்சி அனுபவிக்க கூடாதுன்னு தான் தோணுச்சு.. உன் மேல சின்ன கலங்கம் கூட வரக்கூடாது என்கிற, மாமாவோட திட்டத்துக்கு நானும் துணையா இருக்கணும்னு தான் எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருந்தேன்..
…எவ்ளவு அவமான சொல் வந்தும்.. அவர் அம்மா கலங்கி நின்னும், உனக்கு ஒரு தவறான சொல் வரக்கூடாதுனு உறுதியாக இருந்தார்.. அவர் காதல் மேல ஒரு மதிப்பு வந்துச்சு.. அதுதான் நானா முன் வந்து, அப்பா, அம்மா கிட்ட பேசி உன்ன அவருக்கு கட்டி வெச்சேன்…” என்று சொல்ல தமக்கையை கேவலுடன் அணைத்துக் கொண்டாள் பர்விதா .
“மன்னிச்சிடு க்கா.. தப்புதான்.. உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும்.. தப்பு தான்.. ஆனா என்னால, நீ அப்போ இருந்த மனநிலையில உன் முகம் பார்த்து சொல்ல முடியல.. மன்னிச்சிருக்கா…” என
“பர்வி, என்னடி இது.. இத்தன மன்னிப்பு எதுக்கு.. நீ என் தங்கச்சிடி.. நான் பட்ட கஷ்டம் எதுவும் நீ படக்கூடாதுனு தான் நான் நினைப்பேன்.. உன்னை கஷ்டப்படுத்த நினைக்க மாட்டேன்.. அபர்ஜித் மாமா நினைக்கிற மாதிரி தான்.. நீ எந்த கலங்கச் சொல்லையும் சுமக்காம, எந்த சஞ்சலமும் இல்லாம, சந்தோஷமா வாழனும்…” என்று தங்கையின் முகம் தாங்கி சொன்னவள்
“சரி சொல்லு.. எப்ப இருந்து இந்த காதல்…” என்று கேட்க
அன்று மொட்டை மாடியில் நடந்த முதல் முத்தம் தொடக்கம்… இன்று வரை மொத்த கதையையும் சொல்லி முடித்தாள்.
கேட்ட பார்கவி இடிந்து போனாள்.
அஸ்வந்திற்கும் அதிர்ச்சி தான். இப்போது அவன் தமையனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தான். அவனால் தம்பியின் முகம் பார்க்க முடியவில்லை.
“நல்லவேள பர்வி.. பாட்டி இறந்து போகாம இருந்து இருந்தா குழப்பத்தோடயே மாமா என்ன கல்யாணம் பண்ணி இருப்பாரு.. அதுக்குப் பிறகு உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு சங்கடமான நாட்களா இருந்திருக்கும்.. நீ என்ன விட்டு மொத்தமா விலக நினைச்சு இருப்ப இல்ல..
…எனக்கும் அவருக்குமான உறவு கற்பனையால இணைக்கப்பட்டது.. ஆனா உனக்கும் அவருக்குமான உறவு நிதர்சனமான உண்மை உணர்வோட பிணைக்கப்பட்டது.. கற்பனைய கடந்து வந்திட முடியும்.. ஆனா நிஜத்தை கடக்க முடியாது.. இது அஸ்வந்தோட உண்மையான வாழ்க்கை வாழ ஆரம்பிச்ச பிறகு நான் உணர்ந்தது..
…இப்போ அபர்ஜித் மாமாவ பத்தி யோசிச்சா சினேகமான பேச்சுக்கள் மட்டும்தான் நினைவுல இருக்கு.. ஆனா உனக்கு அவர பத்தி யோசிச்சா அந்த முதல் முத்தம், அதுதானே நினைவுக்கு வரும்.. மாமா மட்டும் கல்யாணத்த நிறுத்தாம போயிருந்தா உன்னோட நிலைமை என்ன.. நம்ம மூணு பேர் வாழ்க்கையுமே கேள்விக்குறியாகி இருக்கும்…” என்றவள்
அபர்ஜித்தை எட்டிப் பார்த்து “நீங்க எனக்கு நல்லது தான் செஞ்சு இருக்கீங்க.. போலியான வாழ்க்கைய தராம உண்மையான நேசத்த காட்டித் தந்திருக்கீங்க…” என்றவள் கண்கள் அஸ்வந்தை காதலாக தழுவியது.
“தேங்க்ஸ் பார்கவி.. நீ புரிஞ்சுகிட்டதே நிம்மதியா இருக்கு…” என்று அபர்ஜித் சொல்ல
“புரிஞ்சுகிட்டது இப்பதான் மாமா.. ஆனா இதுக்கு முன்னாடி நான் பட்ட மன கஷ்டம் ரொம்ப அதிகம்.. அஸ்வந் கிட்ட அடிக்கடி சொன்னீங்களாம் அம்மாவ பார்த்துக்கிட்ட மாதிரி என்ன பாத்துக்க சொல்லி..
…அப்போ அத்தை மாமாவ இழந்து எந்த அளவுக்கு உடைஞ்சு இருந்தாங்களோ.. அதே அளவுக்கு நானும் உடைஞ்சு போவேன்னு யோசிச்ச நீங்க, ஆறு மாசம் நாள கடத்தாம, முன்னாடியே சொல்லி இருக்கலாம்… பாட்டிக்காக அழுத நான் இதுக்கும் சேர்த்து ஒரு மூச்சு அழுதுட்டு.. அவ்ளவுதான்னு கடந்து போயிருப்பேன்…” என்று பார்கவி சொல்ல
அஸ்வந்தோ “இல்ல பார்கவி அவன் சொல்லாததுக்கு காரணம் பர்விதாவோட சம்மதம் கிடைக்காததால மட்டும் இல்ல.. உன்ன இந்த வீட்டுக்கு கொண்டு வரணும்னு என்றதுக்காவும் தான்…” அனைவரும் அவனைப் பார்க்க
“இவன் ஒரு பக்கா கிருமினல்.. முன்னாடியே சொன்னா எங்க உனக்கு வேற மாப்பிள்ளை பாத்துடுவாங்களோனு ரெண்டாவது முறை கல்யாண ஏற்பாடு நடக்கிற வரைக்கும் அமைதியா இருந்திருக்கான்..
…இவன் திடீர்னு வந்து வேற பொண்ண லவ் பண்றேன்னு கல்யாணத்த நிறுத்த சொல்லும்போதே தெரியும், இவன் பிளான் தான் எல்லாமும்னு..ஏன்னா அதுக்கு முதல்லேயே திரும்பவும் கல்யாண ஏற்பாடு அம்மா பண்ணவானு கேட்டபோ அமைதியா இருந்தான்..
…இவனுக்கு தெரிஞ்சு தான் எல்லா ஏற்பாடும் நடந்தது.. இவன் கல்யாணத்த நிறுத்த சொன்ன முதல் நாள், நீ வீட்டுக்கு வந்தது, அம்மா வளையல் போட்டு விட்டது, எல்லாமும் சொன்னாங்க.. அப்பவும் அமைதியா கேட்டுட்டு இருந்தான்..
…சொந்தக்காரங்க எல்லாருக்கும் ஃபோன் பண்ணி விஷயத்த சொன்ன பிறகு வேணாம்னு சொன்னான்.. அப்பவே புரிஞ்சிடுச்சு, என்ன கோர்த்து விட முடிவு பண்ணிட்டான்னு.. அதே மாதிரி தான் அம்மாவும் என்கிட்ட கேட்டாங்க…”என்று அஸ்வந் அபர்ஜித்தின் திருகுதாளத்தை புட்டு புட்டு வைக்க,
தம்பியை முறைத்தவன் “இவன் பெரிய சி ஐ டி.. துப்பு துலக்குறாரு.. எனக்காக இது கூட செய்ய மாட்டயா?…” என்று கேட்க
“அடேய்! நான் யாரையும் லவ் பண்ணல அதனால தப்பிச்ச…”
“பண்ணி இருந்தா பிளான மாத்தி இருப்பேன்.. நீ யாரையுமே லவ் பண்ணலன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு தான் உன்ன கோர்த்து விட்டேன்.. உன்ன கண்மணி வன் சைடா லவ் பண்ணுது முதல் கொண்டு தெரியும்…” என்று சொல்ல
“பிராடு!.. ஒரு கிஸ்ஸ குடுத்துட்டு என்னவெல்லாம் பண்ணி இருக்க…”
“என்னடா பிராடு..எப்படியும் நான் பொண்ணு பார்த்து தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அது பார்கவி என்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்…”
“ஐயா சாமி! எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. கவிதான் எனக்கு கரெக்ட்…” என்றவன்
“வா கவி நம்ம போவோம்…” என்று பொண்டாட்டியை அழைக்க
“மனச போட்டு ரொம்ப குழப்பிக்காத.. சந்தோஷமா இரு…” என்று பர்விதாவின் தலையை தடவி விட்ட பார்கவி அஸ்வந்துடன் சென்று விட்டாள்.
பர்விதாவோ கண்ணீரைத் துடைத்தவள், அபர்ஜித்தை முறைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல,
“ஐயையோ!.. எதுக்கு இப்ப முறைச்சிட்டு போறா…” என்று பதறியவன் அவள் பின் சென்று, கதவை அடைக்க,
அவன் மீது வந்து விழுந்தது தலையணை. அதை கேச் பிடித்தவன் “ஏன்டி அடிக்கிற…?” என்று கேட்க
மேஜையில் இருந்த சிறிய அலங்கார பொருட்கள், அவன் ஃபோன் சார்ஜர் எல்லாவற்றையும் தூக்கி அவன் மீது எறிந்தாள்.
“ஏய் இருடி…”
“இரு…
“ஐயோ!… அம்மா!…” என்று அலறியவன் ஒரு வழியாக அவளை நெருங்கி, பின் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“அம்லு எதுக்குடி மாமா மேல கோபம்…” என்று கேட்க
“பிராடு.. அன்னைக்கு இன்னும் 20 நாள்ல அக்காவுக்கும் உங்களுக்கும் கல்யாணம்னு சொன்னதும்.. தெரியாதது போல எப்படி ஒரு ஆக்டிங்.. எனையவே ஏமாத்தி இருக்கீங்க.. எல்லாமே தெளிவா யோசிச்சு காய் நகர்த்தி இருக்கீங்க இல்ல…” என்று கோபமாக கேட்க
“அப்படி இல்லடி.. அப்போ எனக்கே முழு நம்பிக்கை இல்ல.. ஒருவேள பார்கவி, அஸ்வந் வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி அமையாம போனா.. அதுக்கும் நான் தான் காரணம்னு நீ என்ன ஒரேடியா வெறுத்து இருப்ப..
…அதான் எல்லாம் நல்லபடியா நடக்கிற வரைக்கும் எதுவும் வெளியில நான் சொல்லல.. அது மட்டும் இல்லாம நான் பண்ண போறது பாவம்னு தெரியும்.. அந்த பாவத்துக்கு என்னால பிராயச்சித்தம் பண்ண முடியாது..
…ஆனா அஸ்வந்தால முடியும்னு நினைச்சேன்.. அப்பான்னா அம்மாவுக்கு அவ்ளவு பிடிக்கும்.. அவர நாங்க இழந்தபோ அம்மா மொத்தமா உடைஞ்சிட்டாங்க.. அந்த சமயம் நான் வீட்டுக்கு பினான்சியல் சப்போர்ட் வேணும்னு பிசினஸ் படிப்புன்னு போயிட்டேன்..
…ஆனா அஸ்வந் அம்மா கூடவே இருந்து அவங்கள அந்த துயரத்துல இருந்து வெளிய கொண்டு வந்தான்.. அதனால தான் பார்கவிக்கு அஸ்வந் கரெக்டா இருப்பான்னு தோணுச்சு.. கொஞ்சம் பிளான் பண்ணி காய நகர்த்தினேன்..
…இப்போ பாரு என் நம்பிக்கை வீண் போகல.. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. பார்கவியும் நம்மள மனசார ஏத்துக்கிட்டா.. எல்லாமே சுபாமா முடிஞ்சிருக்கு.. இதுக்கு மேல வேற என்ன வேணும்…” என்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்து கேட்க
“பக்கா பிராடு.. பேசிப்பேசியே எல்லாரையும் கவுக்குறீங்க.. இப்போ எதுக்கு கோபப்பட்டேன்னு எனக்கே மறந்து போச்சு…” என்றவள் அவன் கைக்குள்ளாகவே திரும்பி, அவனை அணைத்துக்கொள்ள,
அவனும் அணைப்பை இறுக்க
“சரி, ஃப்ர்ஸ்ட் டைம் ஆக்சிடென்டா முத்தம் குடுத்திங்க.. ஆனா அதுக்கு பிறகு என்கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டதுக்கு பின்னாடியும் ஏதும் பிளான் இருக்கா?…” என்று அவள் கேட்க
அவன் திருட்டு முழி முழிக்க
“அடப்பாவி! பிளானா?…”
“அப்படி இல்லடி நீ பாட்டுக்கு ஒத்த கிஸ்தானேனு எல்லாத்தையும் மறந்துட்டு, என்ன டீல்ல விட்டா நான் என்ன பண்றது அதான் டீப்பா உன்ன டிஸ்டர்ப் பண்ணேன்…” என்க
அவள் முறைக்க,
அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் “நான் என்ன எல்லாம் பண்ணுனேனோ.. எல்லாம் உனக்காக மட்டும் தான் அம்லு…” என்று சொல்ல
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “தெரியும்.. ஆனா எனக்காக உங்கள நீங்களே தாழ்த்திகிட்டு.. அசிங்கப்படுத்திக்கிட்டத.. என்னால தாங்கிக்கவே முடியல.. அடுத்த பத்தாவது மாசமே ரெட்ட புள்ள பொறக்கணும்.. எல்லார் முகத்துலயும் கரிய பூசணும்..ம்ம் ஆரம்பிங்க…” என்று அவள் கண்மூடி நிற்க,
குனிந்து அவள் நெற்றியில் முட்டியவன், “மத்தவங்களுக்காக நாம எதுவும் பண்ண கூடாது.. நாம நமக்காக வாழலாம்…” என்றவன் கட்டிலில் படுத்துக்கொண்டு, கையை விரிக்க, அவன் ஒற்றை கைக்குள் அடங்கி, அவன் மார்பிலேயே தலையை வைத்து படுக்க
“இப்போ என் மனசுல ஒருவித திருப்தியும் நிம்மதியும் இருக்கு.. உனக்கும் அப்படித்தானே…” என்று கேட்க ஆம் என்று தலையை ஆட்டினாள்.
“நீ இப்போ என் பொண்டாட்டி.. இந்த வீட்டுல இப்போ சந்தோஷம் மட்டும்தான் நிரம்பி இருக்கு.. இந்த இதத்தை, உன்ன கைவளைவுல வச்சுக்கிட்டு, அனுபவிக்கணும்னு தான் தோணுது.. இத்தனை நாளா அலைபாய்ச்சிகிட்டு இருந்த என் மனசு இப்போ நிம்மதியா தூங்கணும்னு சொல்லுது.. அதனால இப்படி இறுக்கி அணைச்சுக்கிட்டு தூங்குவோம்.. மத்தத நாளைக்கு பாத்துக்கலாம்…” என்றவன் கண்களை மூடிக்கொள்ள,
அவளும் காதல் பொங்க அவனைப் பார்த்து இருந்தவள், கண்களை மூடி தூங்கினாள்.
*****
காலை செவ்வந்தி சமையலறையில் நின்று இருக்க, அவரைத் தேடி வந்த அஸ்வந் “அம்மா என் பொண்டாட்டி டயர்டா தூங்கிட்டு இருக்கா.. அதனால நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.. என்ன பண்ணட்டும்?…” என்று கேட்க
அவரிடம் பதில் இல்லை. என்னவென்று அவரைப் பார்க்க, தோசையை திருப்பி போட்டுக் கொண்டே, பார்வை அபர்ஜித் அறையில் இருக்க,
அவரை உலுக்கி “அம்மா!.. என்ன?..” என்று கேட்க
“இல்லடா உன் அண்ணன இன்னும் காணமே.. அதான் யோசனையா இருக்கு…” என்று சொல்ல
“அம்மா…” என்று அவன் ஏதோ சொல்ல வர
“புரியுது டா.. உன்கிட்ட கேட்ட மாதிரி அவன் கிட்ட எதுவும் கேட்கக் கூடாது.. மனசு மாற டைம் கொடுக்கணும்.. நான் நினைக்கிற மாதிரி எல்லாம் ஒரே நாள்ல மாறிடாது ,அதுதானே.. நான் அவன்கிட்ட எதுவும் கேட்கல..
…ஆனா நீ கல்யாணமான மறுநாள் இந்த நேரத்துக்கு முன்னமே வந்துட்ட.. அவன இன்னும் காணலையே.. ராத்திரி முழுக்க கவலைப்பட்டு தூங்காம இருந்து விடிஞ்சு தான் தூங்கி இருப்பானோ…” என்று கேட்க
“விடிஞ்சு தான் தூங்கி இருப்பான்.. ஆனா காரணம் வேற…” என்று அஸ்வந் சொல்ல
“வேற காரணமா! என்னது?..”
“அது.. எனக்கு என்ன தெரியும்.. அவன்கிட்டயே கேளுங்க.. ஆனா அவனா வெளிய வார வரைக்கும் போய் எழுப்பாதீங்க…” என்று சொல்ல
“சரி, சரி.. பார்கவி இவ்ளவு நேரம் தூங்க மாட்டாளே ரொம்ப களைச்சு போயிட்டாளா என்ன?…” என்று கேட்க
திருட்டு முழி முழித்தவன் “ஹா.. ஆமா.. எனக்கு பசிக்குது, தோசை ஊத்துங்க…” என்று அவரை திசை திருப்பி விட்டான்.
அவள் களைத்துப் போக அவன் தானே காரணம். நேரத்திற்கே எழுந்தவளை இரவு விட்ட தேடலை தொடங்கி, தேகத்தை கசக்கி, களைப்பாக்கி, தட்டி கொடுத்து தூங்க வைத்தது அவன் தானே.
இங்கோ அபர்ஜித் அறையில் அவர்கள் நினைத்தது போல் இருவரும் தூங்கவில்லை. இருவரும் போர்வைக்குள் கலவிப் போர் நடத்திக் கொண்டிருந்தனர்.
காலையில் நேரத்துக்கே கண்விழிதிருந்தாள் பர்விதா. அபர்ஜித்தின் கைவளைவில் இருந்தவள், அவன் தூக்கம் கலையாமல் மெதுவாக எழுந்து கொண்டாள்.
அவள் குளியலறை சென்று, குளிப்பதற்கு ஆடைகளை களைந்து, தயாரான போது, கதவு வேகமாக தட்டப்பட்டது
“ஹா, என்னங்க..? நான் உள்ள இருக்கேன்.. குளிச்சிட்டு வாரேன்…” என்று அவள் சொல்ல,
“ஐயோ, பர்வி அர்ஜென்ட்.. கதவ தொற…”
“அட என்னங்க.. நான் ட்ரெஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டேன்.. அப்படி என்ன அவசரம்…?”
“அடியே அம்லு.. அத உள்ள வந்து சொல்றேன் கதவ தொற…” என்று அவன் சொல்ல
என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால் புடவை கட்ட தெரியாது. புடவை தானே உடுத்தி இருந்தாள். அதை மொத்தமாக அவுத்து போட்டாயிற்று, மறுபடியும் ஜாக்கெட்டை அணிந்து, புடவையை சுற்றிக்கொண்டு செல்ல அலுப்பாக இருந்தது.
“ஓய் பர்வி, நான் வந்துட்டு டூ மினிட்ஸ்ல வெளிய வந்திடுவேன்..உன்ன பாக்க மாட்டேன்.. கண்ண மூடிட்டு வாரேன்.. ப்ளீஸ் செல்லம் கதவ தொற.. மாமனுக்கு அர்ஜென்ட் டி…” என்று அவன் சொல்ல
“சரி, சரி…” என்றவள் நீளமான டவலை எடுத்து, மார்பில் முடிந்து கொண்டு, சேலையை தோளைச் சுற்றி போட்டவள், கதவைத் திறந்தாள்.
உள்ளே வந்தவன் கதவை அடைத்து விட்டு, அவனது வேலையை பார்ப்பான் என்று பார்த்தால், அவளை நின்று நிதானமாக உற்றுப் பார்த்தான்.
அவன் இடையில் டவல் மட்டும் இருக்க, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது, என்று இவன் நேர்மையாக ஒரு விடயத்தை செய்து இருக்கின்றான்.
“கல்யாணமான முதல் நாளே தனியா குளிச்சா, அது தெய்வ குத்தம் ஆயிடும் தெரியுமா…” என்றவன்
அவளை பார்த்தபடியே பாத் டப் அருகே சென்றான். அதில் தண்ணீரை திறந்து விட,
பர்விதாவோ வெட்கத்தில் குளியலறையை விட்டு வெளியேற பார்க்க, புயல் போல் அவளை நெருங்கி, வயிற்றோடு ஒற்றை கையை போட்டு தூக்கியவன், அப்படியே கொண்டு சென்றான் பாத் டப் அருகே.
“எங்க ஓட பாக்கிற.. சேர்ந்து குளிக்கிறோம்…” என்று அவன் சொல்ல
“ஐயோ ப்ளீஸ்.. விடுங்களேன்…” என்றவள் அப்போதுதான் கவனித்தாள், அவன் சுழற்றி தூக்கும் போது, அவள் தோளில் இருந்த புடவை எப்போதோ விழுந்து இருந்தது.
வெறும் டவலுடன் தான் இருந்தாள். மார்பின் குறுக்கே சட்டென கையை வைத்துக் கொண்டாள்.
“மறைச்சுக்க.. மறைச்சுக்க.. எனக்கு இல்லாததா…” என்றான்.
“ம்க்ஹ்…” சிணுங்கியவள் “நைட்டு சமத்தா இருந்தீங்க.. இப்ப ஏன் இப்படி பண்றீங்க?…”
“அதுதான் நைட்டே சொன்னேன் இல்ல.. நாளைக்கு பாத்துக்கலாம்னு…”
“அதுக்குன்னு காலையிலேயே வா…” என்று கேட்க
அவள் கழுத்தில் முகத்தை புதைத்தவன் “காலையிலனா என்ன.. இரவுலன்னா என்ன.. நீயும் நானும் இருந்தா போதும்…” என்றான் கிறக்கமாக,
அவனது கை அவள் அடி வயிற்றில் இருக்க, அவன் திடகாத்திரமான மார்பில் இவள் பின் உடல் உரச, அவன் முகம் கழுத்தில் புதைந்திருக்க, பெண்ணவளுக்கு உடல் தூக்கி வாரி போட்டது.
உள்ளங்கால் இருந்து, உச்சந் தலைவரை ஒவ்வொரு செல்களிலும் பூ பூத்து விரிந்தது.
அவனது உஷ்ண மூச்சுக் காற்று கழுத்தின் பின்புறம் மோதி உணர்வுகளை தூண்டி விட, உள்ளங்கைகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.
“அ..து.. அது… ம்ஹூம்…” என்று நெளிந்தாள், அவன் கழுத்து சதையை பல்லால் கவ்வி பிடிக்க ,
பாத் டப்பில் தண்ணீர் போதிய அளவு நிரம்பியதும், அருகில் இருந்த ஷவர் ஜெல்லை எடுத்து அதில் கலந்தான்.
சோப் நுரைகள் பொங்கித்ததும்ப, அப்படியே அவளை தூக்கிக்கொண்டு அதனுள் இறங்கி விட்டான்.
முதலில் அவன் கால்களை நீட்டி, சாய்ந்து அமர்ந்து, அவளை தன் மீது அமர்த்திக் கொண்டான்.
தண்ணீருக்குள் இருவரும் மூழ்கிய அடுத்த நொடி, அவள் மார்போடு முடிந்திருந்த டவல் வெளியே வந்து விழுந்தது.
கண்களை விரித்து அதிர்ந்த நிலையில் இருந்தாள் பர்விதா.
மெல்ல மெல்ல முன்னேறினால் கூட பரவாயில்லை. அதிரடியாக மொத்தமாக அவள் மானத்தை மறைத்திருந்த டவலை உருவி விட்டான்.
அவன் உள்ளே வரும்போது சிறிய துண்டுடன் தான் வந்தான். அந்த துண்டும் வெளியே வந்து விழுந்தது.
பர்விதாவின் உடலில் பூகம்பம் வந்ததைப் போன்று நடுக்கம்.
அவளும், அவனும் ஒரே நிலையில்.
அவள் மானத்தை மறைத்த துண்டு வெளியே விழுந்தால் என்ன, அவன் இரண்டு கைகளும் மறைக்க வேண்டிய மலர் கலசங்களை பற்றி இருந்தது.
முதுகு தண்டில் மின்னல் வெட்டி சென்றது பர்விதாவிற்கு “ஹக்” என்று விக்கி கொண்டு, தொண்டைக் குழியில் ஏதோ வந்து அடைத்தது போன்ற உணர்வு .
அடிவயிற்றை உள் இழுத்துக் கொண்டாள், உணர்வுகளின் தாக்கம் தாள முடியாமல்.
அவனுக்கோ உணர்வுகளின் உச்சம், அவளது உடலும், அவனது உடலும் தண்ணீருக்கு அடியில் உரசிக்கொள்ள,
அவன் கைகளில் சிக்கியதை அழுத்தினானா, அளந்தானா அவனுக்கே வெளிச்சம்.
ஒரு கை மேலேயும், ஒரு கை கீழேயும் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அவளது மொத்த உடலையும் அவன் கைகள் தடவி, தழுவிக் கொண்டது.
மொத்தமாக உருகி குளைந்தாள் பாவை. அவள் கூட தொட்டுப் பார்க்க கூச்சப்படும் அவள் பாகங்களை, அவன் கைகள் தங்கு தடையின்றி தடவிப் பார்த்து வந்தது.
அவனது மார்புக்கும், அவளது முதுக்கும் இருந்த அந்த நூலளவு இடைவெளியை கூட விரும்பாதவன், அவள் அடி வயிற்றில் கையை கொடுத்து, பின்னுக்கு இழுத்து, தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.
அவனுடலில் மோகத்தினால் விளைந்து கொண்டிருந்த மாற்றத்தை அவளால் உணர முடிந்தது.
இவனது ஒவ்வொரு செய்கையிலும் அவள் தான் துடி துடித்தாள்.
இதயம் வெளியே வந்து விழுந்து விடுவேன் எனும் அளவிற்கு துடித்துக் கொண்டிருந்தது.
அவனுக்கோ மோகப்பித்து தைக்கு ஏற, இன்ப வேட்கை அவனைத் தாக்க, பெண்ணவளின் கழுத்தை சற்று வளைத்து, இதழ்களை கவ்வி கொண்டான்.
அழுத்தமான, ஆழமான இதழ் முத்தம். சற்று வன்மையாகவே இருந்தது. அவன் அவனாகவே இல்லை. தன்னிலை இழந்து இருந்தான்.
எத்தனை உணர்வுகளை தான் அவளும் கட்டுப்படுத்துவது, முடியாமல் முனகல்கள் வெளிபட்டது அவளிடம்.
முத்தமிட்டுக்கொண்டே அவளை குளிக்கவைத்தவன், அப்படியே அவளை தூக்கிக்கொண்டு, பாத் டப்பை விட்டு வெளியே வர,
கண்கள் மூடி மோனநிலையில் இருந்தவள் , திடுக்கிட்டு “ஐயோ!…” என்று முகத்தை மட்டும் மூடிக்கொண்டாள்.
வேறு என்னதான் செய்ய முடியும் அவளால். அப்படியே அவளுடன் சென்று சில நொடிகள் மட்டும் ஷவருக்கு அடியில் நின்றான்.
அவளோ அவன் கைகளில் குழந்தை போன்று, அவன் கண்கள் இம்மியும் அசையவில்லை அவளை விட்டு.
அவன் பெண் மயில், ஒட்டுத் துணி இல்லாமல் அவன் கைகளில் ஒயிலாக, அடி வயிற்றில் அவனுக்கு பிரளயமே வெடிப்பது போன்று இருந்தது.
“பர்வி! இவ்ளவு அழகா டி நீ!…” என்று கிறக்கமாக சொல்லவும்,
முகத்தில் இருந்து கைகளை எடுத்து பார்க்க, அவன் முகம் சிவந்து, கண்களில் மோகம் அப்பட்டமாக தெரிந்தது.
மறுநொடியே கண்களை மூடிக்கொள்ள “ஏன்டி என்ன பாக்கணும்னு ஆசையா இல்லையா…” என்று கேட்க
“ம்ஹூம்…” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“ரசனையே இல்லாதவள்டி நீ.. இதுக்குள்ள உனக்கு ரெட்ட புள்ள வேணுமோ…” என்று கேட்டவரே குளியலறையை விட்டு வெளியே வந்தான்.
அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. இவன் அதிரடியாக இறங்கினால், அவள் என்னதான் செய்ய முடியும். கூச்சத்தை உடனே துறந்து விட்டு அவனைப் போன்று அவளால் இருக்க முடியவில்லை.
அவனோ கூச்சம் என்றால் என்ன விலை என்று கேட்பது போல, கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு “பர்வி கண்ண திறந்து பாரேன்.. கண்ணாடியில நாம ரெண்டு பேரும் எப்படி இருக்கோம் தெரியுமா…” என்று கேட்க,
அவனது இம்சையில் அவள் உடல் மொத்தமும் சிவந்து போனது. அதிலும் அவன் இருக்கும் கோலம் என்ன, அவளை வைத்திருக்கும் கோலம் என்ன, கண்ணாடியில் நின்று ரசித்து கொண்டிருக்கின்றான் அவன்.
அவனால் அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளை கட்டிலில் மெதுவாக கிடத்தி, அவள் மீது படர்தான்.
“ஏங்க ப்ளீஸ்.. உண்மையா என்னால முடியாது.. போர்வையாவது போர்த்தி விடுங்க…” என்று அவள் கெஞ்சவும்
கொஞ்சமே கொஞ்சம் அவள் விருப்பத்திற்கு இணங்கியவன், பெரிய வெள்ளை நிறப் போர்வையை எடுத்து இருவரையும் மூடிக்கொண்டான்.
அவன் கைகள் சுகித்த சகத்தை, இப்போது அவன் உதடுகள் சுகித்தன.
உச்சகட்ட இன்பச் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் காரிகை.
அவன் தோள்களில் நகக்கண்களை பதித்தாள். விரல்களை நுழைத்து முடிகளை பிய்த்து எடுக்க பார்த்தாள், எதற்கும் அவன் கட்டுப்பாட்ட மாதிரியே தெரியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் அவன் இஷ்டம் என்று விட்டு விட்டாள், அவனும் இஷ்டம் போல் வளைத்தான், இவளும் வில்லாக வளைந்தாள்.
அவன் முத்த ஊர்வலத்திற்கே தொண்டை குழி வரண்டு போனது எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
அவனுக்கோ அவளை மொத்தமாக ஆட்கொள்ள வேண்டும், அவள் செவியை கவ்வி விடுவித்தவன்
“தாங்கிப்பியாடி…”என்று ஆழ்ந்த குரலில் கேட்க,
“ம்ம்ம்… என்றாள்.
மெதுவாக கீழ் இறங்கி மொத்தமாக ஊடுருவி விட்டான்.
அவளுக்கோ வலி உயிர் போனது. அலறினாள், பின் கீழ் உதட்டை கடித்து பொறுத்துக் கொண்டாள்.
அவனோ அவள் அடி வயிற்றை தடவிக் கொடுத்தான். குனிந்து இதழ்களில் முத்தம் வைத்து,”கொஞ்ச நேரம் தான் அம்லு…” என்றான்.
வேக மூச்சுடன் அவன் இயங்க ஆரம்பிக்க…
அவளுக்கோ மூச்சு முட்டியது…
சற்று நேரத்தில் உடலில் என்னென்னவோ மாற்றங்கள்… முனைகள்கள் அதிகமானது… அவனிடமும் அதே பரவச நிலை… இருவரும் ஒன்றாக மன்மத தேசம் சென்று வந்தனர்…
தோய்ந்து விழுந்தவன், அவள் வயிற்றில் தலையை வைத்து படுத்துக்கொண்டான்.
பர்விதாவிற்கு என்ன நடந்தது என்று நினைத்து பார்க்கவே, ஒரு மணி நேரம் பிடித்தது.
அந்த நேரம் அவனுக்கு போதுமே
மீண்டும் முத்தம் வைத்து…
அவளை சிணுங்க வைத்து…
சிவக்க வைத்து… மற்றும் ஒரு கூடலை முடித்து இருந்தான்.
*****
இரண்டு நாட்கள் கழிந்திருக்கும். அறிவழகி உர் என்ற முகத்துடன் அலுவலகத்திற்கு வந்தாள்.
அபர்ஜித் அவளைப் பார்த்துவிட்டு, அவள் பின்பு வந்த கார்த்திகேயனை மெல்லிய புன்னகையுடன் வரவேற்றான்.
“ஏய் அறிவு, உன்ன வீட்டு பக்கம் தான் கொஞ்ச நாளைக்கு வர வேணாம்னு சொன்னேன்.. நீ என்ன ஆஃபீஸ் பக்கமே வராம இருக்க…?” என்று கேட்க
“ஆஹா,.. இப்பயாச்சும் உங்களுக்கு என் மேல அக்கறை வந்துச்சே.. ஒருத்தி நம்ம வாழ்க்கைக்கு விளக்கேத்தி வச்சிட்டு போனாளே.. அவள் என்ன ஆனாள்னு ஏதாவது உங்களுக்கு விசாரிக்க தோணிச்சா சீனியர்…”
“ஏன் என்ன ஆச்சு?…” என்று கேட்க
“இதோ, இந்த காலகேயேன் எனக்கு தாலி கட்டிட்டாரு.. அதுவும் கட்டாய தாலி…”
“அறிவு…” அவன் அதட்ட
“சரி கார்த்திகேயன்…” என்று அவன் பெயரை மாற்றி திருத்தமாக சொல்ல
“அப்போ உனக்கு புடிக்காம, உன் கழுத்துல கட்டாய தாலி கட்டி இருக்காரு.. என்ன பண்ணலாம்…” என்று கேட்க
“கேஸ் போடணும்…”
“போடலாம்.. போடலாம்…” என்றவன் கார்த்திகேயனை பார்த்து “என்னாச்சு கார்த்தி…” என்று கேட்க
அவன் நடந்ததை சொல்ல,
“உண்மையாவே உனக்கு காத்திய பிடிக்கல, அப்படியா?…” என்று கேட்க அறிவழகியிடம் அமைதி
அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன், கார்த்திகேயனுக்கு கையை நீட்டி
“கங்கிராட்ஸ் கார்த்தி.. ஹாப்பி மேரீட் லைஃப்.. அறிவுக்கும் எனக்கும் என்ன உறவுன்னு ஒரு வார்த்தையில சொல்ல முடியாது.. சில நேரம் பிரண்ட்.. சில நேரம் ஜூனியர்.. சில நேரம் தங்கச்சி.. ஏன் சில நேரம் என் அம்மா இடத்த கூட புடிச்சிருக்கா.. அவ எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..
…நீங்க அவள உண்மையா லவ் பண்றிங்கனு தெரியும்.. அவளுக்கு அத புரிய வைங்க.. இவ ஒரு குழந்தை, ஏதாவது சின்ன ரீஷன வச்சுட்டு தான் உங்கள வேணாம்னு சொல்லுவாள்.. கண்டுபிடிச்சு என்னன்னு சரி பண்ணிடுங்க.. கண்டிப்பா உங்க லைஃப் நல்லா இருக்கும்…” என்று சொல்ல
“என்ன சீனியர்.. நான் கேஸ் போட சொல்றேன் நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்றீங்க…”
“உன்ன பத்தி விசாரிக்கலன்னு யார் சொன்னா.. உனக்கு கல்யாணமானது தெரியும்.. உன் வீட்ல தான் இப்போ கார்த்தி இருக்கார்ன்னும் தெரியும்…” என்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
” இப்போ என்ன உனக்கு கட்டாய தாலி கட்டுனதுக்கு கேஸ் போடணும்.. போட்டுலாம்…” என்று மெல்லிய சிரிப்புடன் சொன்னான்.
கார்த்திகேயனோ “இவங்க எப்படின்னு என்ன தவிர வேற யாராலயும் புரிச்சுக்க முடியாது.. இவங்கள சந்தோஷமா பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.. நீங்க கவலைப்படாதீங்க…” என்று சொல்ல
“அட என் கவலையே இவள் உங்கள என்ன பாடு படுத்தப் போறாளோ என்றது தான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க…” என்று கார்த்திகேயனின் தோளில் தட்டி சொல்ல
“நல்லதுக்கே காலம் இல்ல.. நான் கோவமா போறேன் சீனியர்…” என்றவள் எழுந்து செல்ல,
இரு ஆண்களும் அவளை பார்த்து மென்மையாக சிரித்துக் கொண்டனர்.

