
அத்தியாயம் – 4
ஜெயலட்சுமி சொன்னதால் நிலா வேறு வழியின்றி புடவையை செலக்ட் செய்து கொண்டு இருந்தாள்.
நிலா நீலம் நிறத்தில் கடல் அலை போல் வெள்ளை கலந்த ஜருகையுடன் ஓர் புடவையை கையில் ஏந்தியவள், “சுஜி இந்த புடவையை சித்தி கிட்ட கொடுத்திடு” என்று திரும்பும் பொழுது அங்கு சக்தி, ஓர் புடவை எடுத்துக் கொண்டு வந்து நின்றான் .
சுஜிதா, அவன் கையை உற்றுப் பார்த்துவிட்டு “இது…. இந்த புடவை யாருக்கு உனக்கா?” என்று யோசனை செய்வது போல் பாவனை காட்டி “கட்டிக்கோ கட்டிக்கோ நல்லா தான் இருக்கும் உனக்கு” என்று கேலி செய்தாள்.
சக்தியை கண்டாள் அனைவரும் பயப்படுவார்கள். ஆனால், சுஜிதா மட்டும் எதற்கும் அசர மாட்டாள் இவ்வாறு எல்லாம் எப்பொழுதும் அவனை வம்புக்கு இழுக்கும்படி கேலி செய்வாள்.
சுஜிதா, நிலாவின் தோழி என்பதால் சக்தி அவளை பெரிதாக திட்ட மாட்டான். அதனால் சுஜிதாவுக்கு சக்தியை கண்டு கொஞ்சமும் அச்சம் இல்லை.
சக்தி முரைத்துக் கொண்டே, “நான் என் நிலா குட்டிக்காக புடவை எடுத்து வந்தேன் எப்படி இருக்கு? ஆரஞ்சு நிறத்து புடவை என் நிலாவுக்கு பொருத்தமா இருக்கும் இல்ல” என்று சுஜிதாவை பார்த்து ஒற்றை புருவத்தை தூக்கி கூறினான்.
சுஜிதா, “அவனை முறைத்து தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்காத. அவதான் உன்ன வேண்டாம்னு சொல்லிட்டா இல்ல எதுக்கு சும்மா அவ பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க. நாங்க புடவை எல்லாம் எடுத்தாச்சு நீ கெளம்பு“ என்றாள்.
சக்தி விடாப்பிடியாக, “நான் எடுத்த புடவை தான் நிலா கட்ட வேண்டும். ஏனெனில், நானும் அவளும் தான் புருஷன் பொன்ஜாதியாக வாழ போகிறோம் அப்போ அவ என்னோட இஷ்டப்படி தான் நடந்துக்கணும்” என்றான்.
சுஜிதாவுக்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது அவன் முகத்தருகே தன் ஒற்றை விரலை நீட்டி, “நிலா கூட உனக்கு கல்யாணம் நடக்காது அப்படியே அன்னைக்கே உனக்கு கல்யாணம் நடந்தாலும் மனப் பெண் நிலா வா இருக்கவே முடியாது“ என்று சவால் விட்டு மிரட்டுவது போல் கூறினாள்.
சக்தி சிரித்து விட்டு, “என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா?” என்று அந்த விரலை பிடித்து ஆட்டி கொண்டு “ஆலையும், பேச்சையும் பார்த்தியா கத்திரிக்காய் மாதிரி இருந்துகிட்டு பேசுற பேச்ச பாரு இந்தக் கல்யாணம் என்கூட தான் நடக்கும்”.
“நான் தான் மாப்பிள்ளையா உட்காருவேன் மணமேடையில் உன்னால் முடிஞ்சா தடுத்து பாரு டி குட்டி கத்திரிக்கா“ என்று சிரிப்பது போல் கோபத்தோடு கூறிக் கொண்டு இருந்தான்.
அங்கு வந்த ஜெயலட்சுமி, “புடவை எடுத்துட்டீங்களா?” என்றார்.
சுஜிதா நீல நிற புடவையை காண்பித்து, “இந்த புடவை தான் சித்தி எடுத்து இருக்கிறோம்” என்றாள்.
சக்தி, “இல்ல இல்ல அக்கா இந்த புடவைதான் நிலா கட்டிக்கணும் திருமணத்துக்கு இதுதான் நல்லா இருக்கு பாருங்க” என்று காட்டினான்.
ஜெயலட்சுமி தன் தம்பியை பார்த்து முறைத்து, “உனக்கு எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை போயும் போயும் இவ பின்னாடி போய் சுத்தி என்ன நீ ரொம்ப அவமானப் படுத்துற இதோட இதெல்லாம் நிறுத்திக்கோ”.
“அவளுக்கு விக்ரம் கூட கல்யாணம் ஆகப்போகுது இனி விக்ரம் பார்த்துப்பான் அவளை. உன்கிட்ட நிலாவோட விஷயத்துல இனி தலையிடாதனு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன்”.
“ஆனா, நீ அவளுக்கு புடவை எடுத்துக்கிட்டு இருக்க நீ போய் உனக்கு டிரஸ் எடுக்க வேண்டியது தானே” என்று கூறி முறைத்து அங்கிருந்து சக்தியை அனுப்பி வைத்தார்.
ஜெயலட்சுமி நிலா கையில் வைத்திருந்த புடவையை வாங்கி விலையை பார்க்க அது ஒரு லட்சம் போட்டிருந்தது.
ஜெயலட்சுமி, “உன்னோட தகுதி என்னன்னு தெரியும் இல்ல உனக்கு இம்புட்டு விலையில் துணி தேவையா?“ என்று ஏளனமாக அவளைப் பார்த்து விட்டு.
அங்கு துணி எடுத்து போடும் ஆட்களிடம் ஒரு இருபது ஆயிரத்தில் புடவை எடுத்து காட்டுங்க என்று சொல்லி 10 ஆயிரத்தில் மெருன் கலரில் ஓர் புடவையை தேர்வு செய்தாார்.
நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் விலை ஒரு லட்சம் என்பது கூட நிலாவுக்கு தெரியாது.
வேண்டா வெறுப்பாக அங்கு இருந்து ஒரு புடவையை கையில் எடுத்து சுஜியிடம் கொடுத்தாலே தவிர அதை ஆசையாகவோ அழகாக இருக்கிறது என்றோ அவள் எடுக்க வில்லை.
மனம் வெறுத்து போன நிலா, சுஜியை பார்த்து, “கல்யாணமே நமக்கு பிடிக்காமல் தான் நடக்குது புடவை எல்லாம் ஒரு விஷயமே இல்ல” என்று மெதுவாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஜெயலட்சுமி அவளுக்கு வேண்டிய புடவையை எடுக்க தேர்வு செய்து கொண்டிருக்கும் பொழுது.
அங்கு வந்த விக்ரம், “மேடம் நீங்க ரொம்ப வசதியா இருக்கீங்க உங்க வீட்டு பொண்ணு நிலாவுக்கு என்ன கட்டிக் கொடுக்க நீங்க எப்படி ஆசைப்பட்டீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா? இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கா?“ என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்.
மேலும் பேச்சை தொடர்ந்தவன், “எனக்கு இருக்கிறதே ஒரு தம்பி தான் எனக்கு ஒன்னுனா அவனை பாத்துக்க கூட ஆள் கிடையாது”.
“அதனால் தயவு செஞ்சு உண்மைய சொல்லிடுங்க. இதுல ஏதாவது பிரச்சனை இருந்தா எனக்கு இந்த வேலையும் வேண்டாம் இந்த கல்யாணமும் வேண்டாம் இந்த இடத்தை விட்டே போயிடுறேன்” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
ஜெயலட்சுமி, “ஒரு நிமிஷம் உனக்கு வேலை கொடுத்து இருக்கேன். கூடவே பொண்ணையும் கொடுத்து இருக்கேன் இவ்ளோ பெரிய பிசினஸ் எல்லாம் நான் பண்றேன் எனக்கு தெரியாதா எது சரி எது தப்புன்னு”.
“உன்ன பத்தி நீ வேலை கேட்டு வந்த முதல் நாளே நான் விசாரிச்சுட்டேன். நீ பொறந்து வளர்ந்தது எல்லாமே செங்கல்பட்டுல உன் குடும்பமே ஒரு ஓட்டு வீட்ல தான் இருந்திருக்கீங்க”.
“அங்க மழை அதிகமா பேய்ந்ததில் வெள்ளம் வந்து உங்க வீட்ல இருந்தவங்க எல்லாருமே செத்துட்டாங்க”.
“இப்போ நீயும் உன் தம்பியும் மட்டும் தான் இருக்கீங்க. உன் தம்பி இப்ப படிச்சுக்கிட்டு இருக்கான்”.
“அவன் படிப்பு செலவுக்கு காசு தேவைப்படுது. அதனால், தான் இப்போ நீ இங்க வேலைக்கு வந்து இருக்க கூடவே நான் இந்த பொண்ண பற்றி சொன்னவுடன் இந்த பொண்ணும் நல்லா அழகா இருக்கானு நீயும் ஒத்துக்கிட்ட”.
“நல்லா வசதியான பொண்ணா இருக்காளே அப்படின்னு சொல்லிட்டு நீ கல்யாணத்துக்கு ஒத்து கிட்ட எனக்கு உன்னோட வாழ்க்கை வரலாறு மொத்தமாவே தெரியும்”.
“நான் எது செஞ்சாலும் அதுல எனக்கான தேவை ஒன்னு இருக்கும். அதுக்காக தான் நான் பண்ணுவேன் உன்னை இந்த வீட்டில் எங்க வைக்கணுமோ அங்க தான் வைப்பேன் புரிஞ்சுதா. நீ போய் உனக்கு தேவையான துணிகளை மட்டும் எடு”.
“நான் சொல்றதை மட்டும் நீ கேட்டினா உனக்கும் உன் தம்பி உயிருக்கும் நல்லது” என்று மிரட்டிவிட்டு தன் தலையில் போட்டிருந்த கண்ணாடியை எடுத்து கண்களில் மாட்டிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார்.
ஜெயலட்சுமி சென்ற இடத்தை பார்த்து மௌனமாக சிரித்து விட்டு அங்கிருந்து சென்ற விக்ரம் நேராக பட்டுப் புடவை செக்க்ஷனுக்கு யாருக்கும் தெரியாமல் நுழைந்தான்.
நிலாவுக்கு மெருன் கலரில் தங்க ஜரிகையால் ஆன புடவையை தேர்ந்தெடுத்து அந்த புடவை நிலாவுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று கற்பனையாலேயே கட்டி அழகு பார்த்து அதன் பிறகு செலக்ட் செய்தான்.
அந்த புடவையில் முந்தானை ஓரத்தில் “துருவ் வெட்ஸ் நிலா” என்று ஆங்கிலத்தில் பெயர் பதிக்க கூறினான்.
சுஜிதாவை கடையின் ஓரமாக இழுத்துச் சென்ற நிலா, “எனக்கு என்னமோ இந்த விக்ரம் கொஞ்சம் நல்லவனா இருப்பான்னு தோணுது டி” என்றாள்.
சுஜிதா, “என்ன டி சொல்ற அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா?” என்றாள்.
நிலா, “இந்த கல்யாணத்தில் எல்லாம் எனக்கு சம்மதம் இல்ல…. ஆனா, அவன் கேரக்டர் நல்லதா இருக்கும்னு சொன்னேன்” என்று காலையில் இவர்கள் தவறி இடிக்க வந்ததில் ஆரம்பித்து.
இப்பொழுது காரில் வரும் பொழுது இடிக்காமல் நகர்ந்து அமர்ந்து. சக்தி, நிலா மேல் கை வைக்க வந்ததை தடுத்தது முதல் கொண்டு கூறி முடித்தாள்.
இதையெல்லாம் கேட்ட சுஜிதா, “நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தால் அந்த விக்ரம் உன்ன வாட்ச் பண்ணிட்டே இருக்கான்னு நினைக்கிறேன்” என்று வேறு விதமாக சரியாக கூறினாள்.
நிலா, “அவனே படிக்காதவன் டி அவனுக்கு என்ன தெரியும் இத பத்தி எல்லாம்”.
“ஏதோ சித்தி வந்துட்டு பணம் தரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோ இந்த வீட்ல வேலைக்காரனா வேலை பாருன்னு சொன்னதுனால் ஒத்துக்கிட்டு வந்து இருப்பான்”.
“அவனுக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது முடிவெடுக்கிற மாதிரி அறிவும் கிடையாது. அப்புறம் எங்க இருந்து அவன் இதெல்லாம் யோசிச்சு பண்ணி இருப்பான்”.
“எதார்த்தமா அவன் பண்ணது எல்லாமே எனக்கு நல்லதா முடிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்” என்று நிலா வேறு புறம் யோசித்தாள்.
இவர்கள் இருவரில் யார் யோசித்தது சரி என்று கல்யாணத்தன்று தான் தெரியும்.
சுஜிதா, “எது எப்படியோ இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தனும்னு யோசிச்சோம். ஆனா, இவன் நல்லவனா இருப்பதால் நீ சந்தோஷமா இவனையே திருமணம் செய்துக்கோ” என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
நிலா அவள் தலையில் அடித்து, “பைத்தியம் மாதிரி பேசாத டி எனக்கு கல்யாணத்திலேயே இஷ்டம் இல்ல. அதுவும் இவன சுத்தமா பிடிக்கல”.
“எனக்கு சக்தியையும் பிடிக்காது அதேபோல் விக்ரமையும் பிடிக்காது” என்றவுடன் சுஜிதா, “அப்போ சக்தியும், விக்ரமும் உனக்கு ஒரே மாதிரினு சொல்ற அப்படித்தானே?” என்றாள் குறுகுறுவென அவளைப் பார்த்து.
நிலா இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தவள் கண் முன்னே வின்பமாய் விக்ரம் காலையில் அவளிடம் நடந்து கொண்ட முறை மற்றும் பெண் பார்த்ததிலிருந்து அவன் இந்த வீட்டிலேயே வேலை பார்த்தாலும் கூட நிலாவிடம் தவறாக ஒரு முறை கூட நடந்து கொள்ளாத விதமும்.
அவளை கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒழுக்கமாக இருந்த விதமும் அவள் கண்முன் வந்து சென்றது.
இதை எல்லாம் சிந்தித்து விட்டு நிலா, “இல்ல டி விக்ரம் வந்து கொஞ்சம் நல்லவன் தான்” என்றாள் மெதுவாக. சுஜிதா சிறித்திக்கொண்டே, “அப்படியா!” என்றாள் ஆச்சரியமாக கேட்பது போல்.
உடனடியாக நிலா, “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் பொதுவா சொன்னேன்”.
“அவன் நல்லவன் அவ்வளவு தான். அதுக்காக அவனை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது”.
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல அவ்வளவுதான்” என்று கூறி முடிக்கையில் நிலாவுக்கு எதிர்ப்புறம் இருந்து “மேடம்க்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?” என்று கர்ஜிக்கும் குரல் ஒன்று மேலோங்கியது.
இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி பார்க்க அங்கு நின்று இருந்தது வேறு யாரும் அல்ல ஜெயலட்சுமி தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


துருவ் வெட்ஸ் நிலா வா ?? என்னடா இது டுவிஸ்ட்