Loading

அத்தியாயம்-38

 

‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்

அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில்

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூழேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே’ என்ற வரியை மாறி மாறி அனைவரும் வாசித்துக் கொண்டிருக்க, 

 

“ஈரைம்பதுனா நூறு அடி, ஓடுநீர்னா ஆறு.. இந்த ஏந்தல்னா என்ன?” என்று ப்ரியா கேட்டாள்.

 

“தெரியலையே ப்ரீ” என்று அகர்ணன் கூற, 

 

அனைவரும் அகநகையையே குறுகுறுவென பார்த்தனர்.

 

அனைவரும தன்னைப் பார்ப்பதைக் கண்டு பீதியான அகா, 

 

‘ஆத்தீ.. நம்மளைதான் பாக்குறானுங்க.. யோசி அகா யோசி..’ என்று மனதிற்கு கூறிக் கொண்டு யோசிப்பதைபோல் இங்கும் அங்கும் நடந்தாள்.

 

“அவ்ளோ சீனெல்லாம் வேணாம். நீ எதாச்சும் சொல்லுவியானு பாத்தோம்..” என்ற இளநகை “எனக்கு ஒன்னு தான் தெரியுது.. சூழேந்திய ஆண்னா பிரெக்னென்டா இருக்கும் ஆண்” என்க, 

 

“ஏதே?” என்று ஆடவர்கள் நால்வரும் அதிர்ந்தனர்.

 

அதில் வாய்விட்டு சிரித்தவள், “ச்சில்.. அது நீர்குதிரைய குறிக்குது. கடல் குதிரைல ஆண் இனம் தான் இனப்பெருக்கம் செய்யும்” என்று கூற, 

 

“சரி இப்ப முதல் வரி புரியுதுல? நாம இங்கருந்து நூறு அடி போகனும். போகும்போது எதும் ஐடியா கிடைக்குதான்னு பார்ப்போம்” என்று துருவன் கூறினான்.

 

சரியென்று அனைவரும் நடக்க, அனைவரும் மனதிற்குள் ‘ஒன்னு’ ‘’ரெண்டு’ ‘மூனு..’ என்று எண்ணிக் கொண்டே வந்தனர்.

 

ஒருவழியாய் நூறு அடிகளை கடந்திருக்க, சுற்றிலும் பார்த்தோருக்கு ஒன்றும் புலப்படவில்லை. 

 

“என்னங்கடா ஒன்னுத்தயும் காணோம்” என்று விஷ்வேஷ் கூற, 

 

அனைவருமே ஒன்றும் புரியாமல் தான் விழித்தனர்.

 

மீண்டும் அதை படித்துப் பார்த்த இளநகை, “ஓ காட்..” என்று தன் காலை தரையில் உதைத்துக் கொள்ள, 

 

அனைவரும் அவளை பதறிப்போய் திரும்பிப் பார்த்தனர்.

 

“இதுல நூறடினுதான் இருக்கு.. ஆனா எந்த பக்கத்துலருந்துனு இல்லையே.. நாலு திசையிருக்கு. நாம ஆளுக்கு ரெண்டு ரெண்டு பேரா நாலு திசைலயும் போயிருக்கனும்” என்று தலையில் கைவைத்து அவள் அமர்ந்துக் கொள்ள, 

 

அவள் தோளை சுற்றி கரமிட்ட துருவன், “சில் இளா.. ஒன்னுமில்ல நாம திரும்ப ரிட்டர்ன் போகலாம்..” என்று கூறினான்.

 

அகர்ணன் தன் குரலை செருமி நக்கலாய் சிரிக்க, அதில் வெட்கம் கொண்டு எழுந்தவன் “சரி நாம எல்லாருமே ரிட்டர்ன் நூறு அடி போயிட்டு அங்கிருந்து ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சுப்போம். அல்ரெடி இந்த திசைல வந்துடதால எக்ஸ்ட்ரா இருக்கு ரெண்டு பேர் மட்டும் பிரிஞ்சு வேற வேற க்ரூப் கூட ஜாயின் ஆகிக்கோங்க” என்று கூறினான்.

 

மீண்டும் ‘ஒன்னு, ரெண்டு, மூனு’ என எண்ணியபடியே பழைய இடத்திற்கு திரும்பினர். 

 

“யப்பா டேய்.. என்னால முடிலடா.. அல்ரெடி சோர்ந்துட்டேன். எம்பொண்டாட்டிகூட போனா நான் பேச வர்றத அவளுக்கு புரிய வைக்குறதுலயே எனக்கு பாதி சக்தி போயிடும். தயவு செஞ்சு அவளை அகா கூட அனுப்பிவிடுங்கடா.. ரெண்டும் சைகை பாசைலயே பேசிக்கிடுங்க” என்று மதி கெஞ்சினான்.

 

அதில் யாவரும் சிரிக்க, மதி-அகர்ணன், அகநகை-ஜான்-விஷ்வேஷ், இளநகை, ப்ரியா மற்றும் துருவன் என்று பிரிந்துக் கொண்டனர்.

 

அனைவரும் மீண்டும் வெவ்வேறு மூன்று திசைகளில் தங்கள் எண்ணிக்கையோடு பயணிக்கலாயினர்.

 

இங்கு அகநகையும் ஜான்விகாவும் சைகையிலேயே பேசிக் கொண்டு வர, 

 

“ச்ச.. அகா.. என் காதுக்கு எம்புட்டு திருப்தியா இருக்குது தெரியுமா? இப்படியே சைகைலயே பேசுங்க” என்று விஷ்வேஷ் நிம்மதியடைந்தான்.

 

அங்கு ப்ரியாவை தங்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு இளநகையும் துருவனும் அமைதியாகவே வந்தனர்.

 

‘ஏன் எல்லாரும் இருக்கும்போது நான் துருகூட பேசினதில்லையா? இன்னிக்கென்ன புதுசா தயக்கமெல்லாம்?’ என்று தன் மனதிற்குள் இளா சுய ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, 

 

துருவன் அவளாக பேசாது ஏதும் பேசிவிட தோன்றாமல் மௌனமாய் வந்தான். 

 

இவர்களுக்கு நடுவே நின்றிருந்த ப்ரியா தான் மௌனமாக அடிகளை எண்ணிக் கொண்டே வந்தாள்.

 

அங்கு அகர்ணன் மற்றும் மதி இருவரும் அடிகளை எண்ணிக் கொண்டே வந்துகொண்டிருக்க, எண்பதாவது அடியைத் தாண்டியதும் அவர்கள் எதனுள்ளோ ஊடுருவி நுழைந்ததைப் போல் உணர்ந்து திடுக்கிட்டனர்.

 

ஆகாயத்திலிருந்து பளீரென்ற ஒளி எழுந்து கண்களைக் கூச, 

 

“நான் தான் உங்க அசீரீ பேசுறேன்.. நீங்க ரெண்டு பேரும்தான் சரியான பாதையில வந்திருக்கீங்க. ஆனா இந்த தடயம் இருக்குமிடம் மாயத்தால் கட்டுப்பட்ட ஒரு விசித்திரமான இடம். இப்ப நீங்க மாயவலையத்தை தாண்டி உள்ள வந்துட்டீங்க. இங்கிருந்து நீங்க எத்தனை சத்தமா கூப்பிட்டாலும் வலையத்துக்கு வெளிய கேட்காது, அதே நேரம் வளையத்துக்கு வெளியருந்து உங்களை யாராலயும் பார்க்க முடியாது. இது மாயத்துக்கு கட்டுப்பட்ட இடம் என்பதால ரெண்டு பேருக்கு மேல இந்த இடத்துக்குள்ள யாராலயும் நுழைய முடியாது. நுழைந்தவங்க தடயத்தை அறியாம இங்கிருந்து போகவும் முடியாது. உங்க புத்தி சாதூர்யம் தான் இங்க எடுபடும்.. வர்டா மாமே டுர்ர்..” என்று பேசிவிட்டு சென்றது, அவ்வசரீரி.

 

முதலில் இருவரும் அதற்கு பெரிதும் அதிரவில்லை…

 

“சரி அப்ப நாமளே அந்த க்ளூவ எடுத்துட்டு சீக்கிரம் வெளியப்போவோம்” என்று மதி கூற, அகர்ணனும் அதை ஆமோதித்தான்.

 

இன்னும் இருபது அடிகளை எண்ணிக் கொண்டு வந்தவர்கள் முன் இருந்த அந்த குளம் இருவரையும் குழம்ப வைத்தது.

 

“என்ன குளமிருக்கு?” என்று மதி தலையை சொறிய, 

 

“உங்கிட்ட அந்த க்ளூ பேப்பர் இருக்கு தானே மதி? அதை எடுத்து பாரு” என்று அகர்ணன் கூறினான்.

 

“அட ஆமால்ல?” என்ற மதி, 

 

அந்த தகட்டிலிருந்து காகிதத்தில் எழுதி தன் கையில் வைத்துக் கொண்டதை எடுத்த வாசித்தான். 

 

“‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்..” என்று மதி வாசிக்க, 

 

“நூறு அடி தாண்டியாச்சு.. ஓடுநீர்னா ரிவர்” என்ற அகர்ணன் அந்த பகுதி மட்டும் குளத்தின் அமைப்பிலும் அதை தாண்டியும் அதற்கு முன்பும் ஆறு போல் இருப்பதையும் கண்டான்.

 

“ஏ மதி.. ஏந்தல்னா குளம்.. அந்த பாரு ஆறுபோல வந்து இந்த இடம் மட்டும் குளம் மாதிரி இருக்கு. ஓடுநீர் ஏந்தலாகும்” என்று அகர்ணன் கூற, 

 

“வாவ் சூப்பர் அகர்” என்ற மதி “அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில்

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூலேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே” என்று வாசிக்க அங்கு ஓர் டால்பின் குதித்து நீர் திவளைகளை தெரித்தது.

 

தன்மீது நீர்த்திவளை படவும் “ஆ… ஆத்தாடீ” என்று மதி கத்திக் கொண்டே தரையில் புரள, 

 

“போலீஸ் தொப்பி போட்ட டால்பீன்.. டேய் மதி.. ஆயிலைனா டால்பின் போல.. இதுதான் காவல் காக்குது” என்று அந்த கருப்பு தொப்பியுடனிருக்கும் டால்பினைப் பார்த்து அகர்ணன் உற்சாகமாய் கூறினான்.

 

“அடப்பாவி சண்டாளா.. இங்க ஒருத்தன் உயிர் போற வலில இருக்கேன்.. அதையெல்லாப் விட்டுபுட்டு” என்று நொந்தபடி மதி அமர, 

 

மண்ணெல்லாம் உடலெங்கும் ஒட்டி பார்ப்பதற்கே அகோரி போலிருந்தான்.

 

அவனைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்த அகர்ணன் கண்களில் நீர் வந்து சோர்ந்த பின்பே அமைதியாக, 

 

புசுபுசுவென கோபமூச்சுக்களை வெளியிட்ட மதி, “ரொம்ப சிரிக்காதய்யா.. தண்ணில எனக்கு கண்டம் நீங்கதான் போய் க்ளூவ தூக்கிட்டு வரனும்” என்று கூறினான்.

 

“ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூலேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே.. அப்படினா இந்த குளத்துல அந்த க்ளூவ இந்த டால்பின் தான் பாதுகாக்குது. ஒரு நாளுக்கு ஒரு முறை சூல் தாங்கிய ஆண்.. அதான் அந்த கடல் குதிரையோட கூடு மேல வரும்‌. அப்பதான் நம்மளால க்ளூவ எடுக்க முடியும்” என்று மதி கூற, 

 

“அப்ப இந்த டால்பின நீ தான் சமாளிக்கனும்” என்று கோபமாய் நின்றுகொண்டிருந்த தொப்பி போட்ட டால்பினை அகர்ணன் காட்டினான்.

 

“இதுவேறயா..” என்று நொந்துக் கொண்ட மதி, “சரி ஓகே” என்றான். 

 

இருவருமே கரையோரம் அமர்ந்துக் கொண்டு சொந்த கதை சோகக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அதிகம் பேசியதென்னவோ அகர்ணன் தான். இந்த அமைதியானவன் இத்தனை பேசுவானா என்று மதியே‌ அதிர்ந்துதான் போனான்.

 

அவன் பேசியது முழுக்க, நிஜ உலக்ததில் அவன் அகாவின் மீது காதலில் விழுந்த கதையையும், நிழல் உலகத்தில் அகா காதலித்த கதையை இங்கு வந்தபிறகு சொன்னவற்றையும் தான்.

 

அந்த கூட்டத்திலேயே அகர்ணன் அனைவருக்குமே மூத்தவன். அனைவரும் அவனையும் தங்கள் நண்பன் போலவே ஏற்றபோதும் மரியாதையாகவே அழைப்பர். ஆனால் மதி மட்டுமே ‘மாமே’ என்று அழைப்பதும் தன் வயதொத்தவனைப் போல் உரிமையாய் ‘டா’ போடுவதுமென‌ இருப்பான்.

 

அதனால் தானோ என்னவோ இன்று மதியிடம் நிறைய நிறைய பேசினான். 

 

அனைத்தையும் மதியும் புன்னகையுடன் கேட்க, திடீரென பூமி அதிர்ந்தது. 

 

அதில் திடுக்கிட்ட இருவரும் அதிர்ந்து எழ, அங்கு குளத்தின் மையப்பகுதி கொப்பளித்து தூண் போன்ற அமைப்பொன்று மேலே வந்தது.

 

அந்த தூணின் மேல் பகுதியில் ஒரு கூடு போல் இருக்க, அதில் ஒரு கடல் குதிரை அமர்ந்திருப்பது தெரிந்தது.

 

அதை கண்டு “ரைட்டு.. இப்ப அதை போய் எடுக்கனுமா? நீ அந்த டால்பின புடிச்சு வச்சுக்க மதி.. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று அகர்ணன் கூறினான். 

 

நீருக்குள் குதித்த அகர்ணன் அந்த தூணிடம் செல்ல, அவனை நோக்கி வேகமாய் நீந்திய டால்பினை விசிலடித்து அழைத்தான் மதி.

 

மதியின் சத்தத்தில் வேகமாய் அவனிடம் வந்த மீனோ, அத்தனை நேரமிருந்த ரௌத்திரம் மொத்தமும் வடிந்து குழந்தை போல் குளத்தினோரம் அமர்ந்து அவனைப் பார்த்தது.

 

அதில் சிரித்த மதி, அதனுடன் தன் பேச்சு வார்த்தையை நடத்த, பதட்டத்துடன் கரையேறிய அகர்ணன் “டேய் மதி..” என்று அழைத்தான்.

 

வெறுங்கையுடன் வந்திருக்கும் அகர்ணனைக் குழப்பமாய் பார்த்த மதி, “பெட்டியெங்க மேன்?” என்க, 

 

“அது எடுக்க முடியாதுடா. அந்த கூட்டோட சேந்திருக்குற தகடுல எழுதிருக்கு” என்று அகர்ணன் பீதியோடு கூறினான்.

 

“அப்ப அதை மனப்பாடம் பண்ணிட்டு வர…” என்ற மதிக்கு அப்போதே அகர்ணனால் படிக்க இயலாது என்று நினைவு வர, 

 

“ஓ..காட்” என்று தன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

 

“அந்த அசரீரீ ரொம்ப ஹாப்பியா வர்டா மாமேனு சொல்லும்போதே நெனச்சேன்.. எங்கயோ இக்கு வச்சுபுட்டான்னு” என்று அகர்ணன் கூற, 

 

“அய்யோ இது கிடைக்காம நம்மளாலையும் வெளிய போக முடியாது, மத்தவங்களாலையும் உள்ள வரமுடியாதே” என்று மதி கூறினான்.

 

சில நிமிடங்கள் மௌனமான பதட்டமே அங்கு நிலவ, “அது இன்னும் எவ்வளவு நேரம் மேலயே இருக்கும்னு அந்த டால்பின் கிட்ட கேளு” என்று அகர்ணன் கூற, 

 

அதேபோல் மதியும் கேட்டான்.

 

டால்பின் தனது மொழியில் விடைகூற, 

 

“நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும் முன்ன வரை இருக்குமாம்” என்று மதி கூறினான்.

 

“சூரியன் உதிக்குற வரையா? நாம இங்க வந்ததுலருந்து நாம இரவே பாக்கலை தானே? இங்க அஸ்தமனம் இருக்கா என்ன?” என்று அகர்ணன் கேட்கும்போதே வானம் இருட்டத் துவங்கியது.

 

“அட ஆமால்ல? ஒருவேள அந்த அசரீரீ சொன்னதுபோல இந்த இடத்துல மாயாஜாலம் இருக்குறதால இங்க மட்டும் இருட்டுதா?” என்று மதி வினவ, 

 

“இருக்கலாம்” என்று அகர்ணன் கூறினான்.

 

“அப்ப இருட்டிட்டா எப்படிடா அதை பார்க்க முடியும்?” என்று மதி வினவ, 

 

“இல்ல பார்க்க முடியும்னு தான் தோனுது. அதுல உள்ள எழுத்தெல்லாம் ஒருமாதிரி கண்ணாடி போல இருந்துது. மினுமினுக்குற பொருள் மாதிரி இருக்கு. ஆனா அதை பார்க்க யாராவது அங்க போகனும். உன்னால போக முடியாது, என்னால படிக்க முடியாது, நம்மால வெளிய போக முடியாது, வெளியருந்து யாராலயும் உள்ள வரவும் முடியாது. இப்ப என்ன பண்றது?” என்று அகர்ணன் கேட்டான்.

 

“ஹ்ம்.. இப்ப என்ன பண்ணனு தெரியலையே?” என்று மதி கூற, 

 

நிலவு மேலெழும்பி வந்து அவ்விடத்தை தன் ஒளியால் பிரகாசிக்க வைத்தது.

 

வானத்தை நிமிர்ந்து பார்த்த அகர்ணன் மனதில் எதுவோ தோன்ற, 

 

“மதி.. எனக்கு இந்த குளத்துலருந்து க்ளிட்டர் ஃபிஷ், ஜெல்லி ஃபிஷ் எதாவது இருந்தா வேணும்” என்று கூறினான்.

 

“அது எதுக்கு?” என்று மதி வினவ, 

 

“முதல்ல குடுடா” என்று கூறினான்.

 

மதியும் டால்பினிடம் கேட்டு ஒரு மீனை கூட்டி வந்து அகர்ணனனுடன் அனுப்பி வைக்க, 

 

மீண்டும் நீந்தி அந்த தூணிடம் சென்றான்.

 

மீனை கையில் பிடித்து அந்த கூட்டின் அருகே அகர்ணன் கொண்டு செல்ல, அங்கு ஒரு ஒளி உண்டானது.

 

மீண்டும் மீனை கீழே விட்டு நீந்தி கரைவந்த அகர்ணன் முகத்திலிருந்த தெளிவே அவன் எதையோ கண்டுவிட்டான் என்பதை மதிக்கு உணர்த்தியது.

 

“என் கெஸ் சரியா இருக்கு மதி. அது ரொம்ப வளுவளுப்பான பொருள் கொண்டு அச்சடிக்கப்பட்டிருக்கு. ஸ்மூத் சர்ஃபேஸோட இன்ஸிடென்ட் ரே அன்ட் ரிஃப்லக்ஷன் ரேவோட ஆங்கில் ஒன்னுபோல இருக்கும். அங்க அந்த கூட்டுல அந்த தகடு சாய்வா நிறுத்தி வச்சுருக்கு. அப்ப நிலா அதுக்கு எதிர்திசைக்கு வரும்போது அந்த எழுத்துக்களோட எதிரொளிப்பு அந்த தண்ணீர்ல தெரியும். நீ தான் வேகமா அதை நோட் பண்ணனும்” என்று அகர்ணன் கூற,

 

“மாமே.. உனக்கு இம்பூட்டு அறிவாடா?” என்று மதி வியந்தான்.

 

“சரி ஓகே.. திரும்ப உக்காந்து வெயிட் பண்ணுவோம் வா” என்று தனது ஈரக்கை கொண்டு அகர்ணன் மதியின் தோளில் தட்ட, 

 

“ஆ.. அடேய்.. எரியும்” என்று தோளை தட்டிக் கொண்டு தள்ளி நின்றான்.

 

அதில் வாய்விட்டு சிரித்த அகர்ணன் அமர, 

 

சற்றே இடைவெளி விட்டு தானும் அமர்ந்தான்.

 

அந்த குளமே நிலவொளியில் அடர் நீலநிறத்தில் தெரிய, “ச்ச! லொடலொடனு பேசுதேனு தொறத்திவிட்டேன். இப்ப இந்த இடத்த பாத்தா அவகூடவே வந்துருக்கலாமோனு இருக்கு” என்று மதி பெருமூச்சு விட, 

 

அகர்ணன் தன் கரங்களைத் தட்டிக் கொண்டு வாய்விட்டு சிரித்தான்.

 

சரியாக அகர்ணன் கூறியதைப் போல் நிலவொளி மெல்ல மெல்ல வந்து அந்த தகட்டில் பட, அதன் எதிரொளி குளத்தில் பிரதிபலித்தது.

 

“யாஹு.. அகர் யு மெய்ட் இட் மேன்” என்ற மதி வேகமாய் சட்டையிலிருந்த காகிதத்தையும் அதனுடனே வைத்திருந்த பேனாவையும் எடுத்தான்.

 

தலைகீழாக இருந்த எழுத்துக்களை சற்றே திணறி திணறி கண்டுகொண்டவன், அதை காகிதத்தில் வெற்றிகரமாக எழுதி முடித்து நிமிர, அகர்ணனும் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டான்.

 

மீண்டும் அது மறைவதற்குள் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்த மதி,

 

“பிணியறியா விருட்சம்

ஒன்றே கொண்ட சிகரத்து,

ஊடுறுவு பாதை சேர,

கோடுகளை கண்டறிக.

ஒளியுள்ள பாதைதனை

ஒலிகொண்டு அறிந்திடவே,

பார்கரன் துணை புரிய,

அடுத்த துப்பு கிட்டிடுமே!” என்று வாசித்தான்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்