
அத்தியாயம் – 38
காலையில் விக்ரம் தூக்கம் கலைந்து கண்களைத் திறந்தான். நிலா அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
அந்த காட்சியை பார்த்த விக்ரமுக்கு சிறிப்பை அடக்க முடியாமல் சத்தமாகவே சிரித்து விட்டான்.
அவன் சிறிப்பு சத்தத்தில் தூக்கம் களைந்து கண் விழித்த நிலா, “இப்போ எதுக்கு சிரிச்சுகிட்டு இருக்கிங்க காலையிலேயே”.
“தூங்கும் போது யாராவது சிரிச்சுக்கிட்டே தூங்குவாங்களா” என்றாள் சிடுசிடப்பாக.
விக்ரம், “தூங்கும் போது யாரும் சிரிக்க மாட்டாங்க தான். ஆனா உன்னை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே” என்று மறுபடியும் சிரித்தான்.
அதில் நிலா கோவமாக எழுந்த அமர்ந்து, “ஏன் என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு ஏன் சிரிக்கறீங்க?” என்றாள்.
விக்ரம், “நைட்டு என்ன கட்டிலில் தூங்க கூடாதுன்னு சொல்லி ஒருத்தவங்க சண்டை போட்டு கீழ தொரத்தி விட்டுட்டாங்க”.
“ஆனா இப்போ அவங்களும் என் கூட சேர்ந்து கீழே தூங்குறாங்க” என்று மறுபடியும் சரிதான்.
நிலா, “அது வந்து நைட்டு எனக்கு தூக்கமே வரலை அதான் சரின்னு கீழ வந்து படுத்துக்கிட்டேன்” என்றாள் மெள்ளிய குரலில்.
விக்ரம், “சரி சரி பரவாயில்ல விடு நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது தனியா துறத்தி விடுவதற்கு”.
“நான் ரொம்ப பாசக்காரன்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட கிட்டே சென்றான்.
சட்டென்று அவனை பிடித்து தள்ளிவிட்ட நிலா, “இங்க பாருங்க நைட்டு தூக்கம் வரலைன்னு மட்டும் தான் வந்து உங்க பக்கத்துல படுத்தேன்”.
“மத்த படி நான் இன்னும் கோவமா தான் இருக்கேன்” என்று எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து விட்டால்.
விக்ரம், “ஏய் நில்லு டி. ஒரு நிமிஷம் பேசிட்டு போ. நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க” என்று குரல் கொடுத்தான்.
ஆனால் நிலா அது எதையும் சட்டை செய்யாமல் சென்று விட்டால்.
சக்தி, “நான் எந்த ஃபங்ஷனுக்கும் வரலை” என்று சுஜிதாவிடம் கூறிக் கொண்டிருந்தான்.
சுஜிதா, “நீங்க ஏன் வர மாட்டீங்க. நான் ஃபங்ஷனுக்கு போறேன் நீங்க எனக்கு புருஷனா என்கூட வர போறீங்க அவ்ளோ தான்” என்றாள்.
சக்தி எதுவும் கூறாமல் இருந்தான். சுஜிதா, “சொல்லுங்க ஏன் வர மாட்டீங்க? ஏதாச்சும் பேசுங்க” என்றாள்.
அப்பொழுது ஜெயலட்சுமி அந்த பக்கம் சென்றவள் சக்தியிடம் வந்து, “என்ன யார் வர மாட்டீங்க? எங்க வர மாட்டீங்க?” என்றார்.
சுஜிதா, “இல்ல உங்க தம்பி பங்க்ஷனுக்கு வரலைன்னு சொல்றாரு. இவர் வரலைன்னா அப்புறம் எல்லாரும் கேப்பாங்க இல்ல உங்க தம்பி ஏன் வரலைன்னு சொல்லி” என்றாள்.
ஜெயலட்சுமி, “ஏன் துரை என்ன ஆபிஸர் உத்தியோகம் ஏதாவது பார்க்க போறீங்களா? பங்ஷனுக்கு வராமல்”.
“நண்பன் கூட சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு எங்கயாச்சும் கிடப்பான் ஒழுங்கா போய் கெளம்புற வேளையை பாருங்க ரெண்டு பேரும்”
“இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடியாகி வெளியே வரன்னும்” என்று கூறிவிட்டு அவன் பதிலுக்கு கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டார்.
அதில் சுஜிதாவுக்கு கோபம் வந்தது. இவனுக்கு ஒரு சின்ன மரியாதை கூட கொடுக்காமல் வேலைக்காரனை விட மோசமாக பேசுறாங்களே.
இவங்க இந்த மாதிரி எல்லாம் பேசுறாங்க அப்டின்னா அதுக்கு காரணம் யாரு? இவன் தானே.
ஆரம்பத்துல் இருந்து இவன் ஒழுங்கா இருந்து இருந்தால் இவனுக்கு மரியாதை தானாக கிடைத்திருக்கும்.
இவன் ஊதாரி தனமாக சுத்திட்டு இருந்தால் எல்லாரும் இப்படி தான் பேசுவாங்க என்று யோசித்தவல் இந்த கோபம் மொத்தமும் சக்தி பக்கம் திரும்பியது.
சுஜிதா, “பாத்தீங்களா உங்க அக்கா எப்படி பேசிட்டு போறாங்க அவங்க தம்பி நீங்க அப்படின்ற மரியாதை கூட அவங்க உங்களுக்கு சுத்தமா தரலை”.
“ஒரு வேலைக்காரனை விட மோசமா பேசிட்டு போறாங்க. இதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா” என்றாள் கோபமாக.
சக்தி, “எனக்கும் அக்கா இப்படி பேசினா பிடிக்காது தான் ஆனா அக்கா எப்பவுமே இப்படித்தான் பேசும்” என்றான் சாதாரணமாக.
சுஜிதா, “அவங்க இப்படி பேசினதுக்கு காரணம் யாரு? நீங்க தானே தினசரி குடிச்சிட்டு வர வேண்டியது”.
“அப்புறம் வேற எப்படி பேசுவாங்க குடிகாரன் பொறுக்கி இப்படித்தான் பேசுவாங்க” என்றாள் கோபமாக.
சக்தி, “என்ன டி சும்மா எல்லாரும் மாத்தி மாத்தி குடிகாரன் குடிகாரன்னு சொல்றீங்க”.
“நான் ஒன்னும் குடிகாரன் எல்லாம் கிடையாது என்ன குடிக்க வச்சது யாரு அந்த நிலா தானே” என்றான்.
சுஜிதா அவனை முறைத்து பார்த்து, “நிலா தான் உங்களுக்கு கிளாஸ்ல ஊத்தி கொடுத்தாளா” என்றாள் பல்லை கடித்த படி.
சக்தி, “அவ கிளாஸ்ல ஊத்தி கொடுக்கலை ஆனா என் மனச உடைச்சிட்டா”.
“அவளை வாழ்க்கை ஃபுல்லா அழ விடாமல் ராணி மாதிரி வச்சு பார்த்துக்கணும் என்று ஆசைப்பட்டேன்”.
“அது தப்பா இல்லைன்னா அவளை அக்கா ரொம்ப கொடுமை பண்றாங்க அதனால் நான் அவளை கல்யாணம் செய்துக்கனும்”.
“யாரும் அவளை ஒரு வார்த்தை கூட தப்பா பேச விடாமல் அவளை சந்தோஷமா வச்சுக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டேன்”.
“ஒரு நாள் அவள் அழரதை நான் பார்த்தேன். அன்னைக்கே முடிவு பண்ணேன் இது எல்லாத்தையும். ஆனால் நிலா என்னை மதிக்க கூட இல்லை” என்றான்.
சுஜிதா, “சும்மா காரணம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தீங்க இல்ல”.
“அப்போத்தில் இருந்து இப்ப வரைக்கும் எனக்கு ஒரு பூ ஆச்சு வாங்கி கொடுத்திருப்பீங்களா? என் காச உங்ககிட்ட கொடுத்து வச்சிருக்கேன்”
“அதை வச்சு தான் நீங்க செலவு பண்ணி ஹனிமூனில் கூட எனக்கு வாங்கி கொடுத்தீங்களே தவிர நீங்க சம்பாதிச்சு பத்து ரூபாய்க்கு பூ வாங்கி கொடுத்து இருக்கீங்களா” என்றாள்.
மேலும் தொடர்ந்தவள் கோபமாக, “ஒரு புடவை எடுத்து கொடுத்து இருக்கியா உங்க காசுல சம்பாதிச்சு”.
“முதலில் வேலைக்கு போனால் தானே சம்பாதிக்கிறதுக்கு அதுக்கு அப்புறம் தானே வாங்கி தர முடியும்”.
“நீங்க தான் வேலைக்கே போறது கிடையாதே அப்புறம் எங்க இருந்து இதெல்லாம் நடக்கிறது” என்றாள் வருத்தமான குரலில்.
“நானும் எல்லா பொண்ணுங்க மாதிரி நிறைய ஆசையோடு தான் இருந்தேன் கல்யாணம் பண்ணனும்னு”
“ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் ஆசையில் ஒன்னு கூட நிறைவேவரலை” என்று கோபமாக கத்திவிட்டு சுஜிதா அங்கிருந்து சென்று விட்டாள்.
ஜெயலட்சுமி கூறியது போல் சக்தி பங்க்ஷனுக்கு தயாராகி 10 நிமிடத்தில் வந்து நின்றான்.
பிறகு அனைவரும் சேர்ந்து பங்ஷனுக்கு சென்றடைந்தார்கள். சக்தி, “நீங்கள் இரண்டு பேரும் இறங்குங்க நான் போய் காரை ஓரமாக நிறுத்திட்டு வரேன்” என்றான்.
இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைய நிலா, “இங்க பாரு துருவ் நான் உன்கிட்ட பேசமாட்டேன்”.
“நேத்து நைட்டு நீ என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட” என்று பொய்யாக கோபித்துக் கொண்டு இருந்தாள்.
நிலா இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைவதை பார்த்து ஓடி சென்று சுஜி என்று அவலை கட்டி அணைத்தாள்.
ஜெயலட்சுமிக்கு உள்ளுக்குள் எரிந்தாலும் வெளியே சிரித்த முகமாகவே நின்று இருந்தார்.
நிலா, “சுஜிதாவை கட்டி அணைத்து எப்படி இருக்க? நல்லா இருக்கியா? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டி” என்றாள். சிறிது நேரம் கழித்து, “சித்தி வாங்க உள்ள வாங்க” என்றாள்.
பிறகு நிலா அனைவருக்கும் ஜூஸும், ஸ்னாக்ஸும் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
விக்ரம், ராஜேந்திரன், ராஜலட்சுமி, என அனைவரும் வந்து வாங்க வாங்க என்று கூப்பிட்டார்கள்.
ராதிகா, “எப்படா நாங்க பங்ஷனுக்கு கூப்பிடுவோம்னு சில பேர் எதிர் பார்த்துக்கிட்டே இருப்பாங்க போலையே”.
“கூப்பிட்ட உடனே காலங் காத்தாலேயே வந்து உட்கார்ந்து இருக்காங்க” என்றார் குத்தலாக.
அதில் நிலா முகம் வாடி போனது. அதை கவனித்த விக்ரம் ராதிகாவை பார்த்து முறைத்தான் உடனே ராதிகா அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜலட்சுமி, “சரி நீங்க எல்லாம் நிலா கூட பேசிக்கிட்டு இருங்க எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாங்க போயிட்டு வந்துடரோம்” என்று அடுப்பங்கரையை நோக்கி சென்று விட்டார்.
பிறகு நிலா, விக்ரம், சுஜிதா என அனைவரும் பேசிக் கொண்டே இருக்க சக்தி அப்பொழுது தான் வீட்டிற்குள்ளே நுழைந்தான்.
விக்கம், “வாங்கி சக்தி உள்ளே வாங்க” என்றான் சிரித்த முகமாக. சக்தி நேராக வந்தவன் சுஜிதா பக்கத்தில் அமர்ந்தான்.
நிலா மெல்ல மெல்லமாக விக்ரம் பின்னால் சென்று விக்ரம் கையை பிடித்துக் கொண்டாள். இதை சுஜிதா கவனித்துக் கொண்டே இருந்தாள்.
விக்ரம், “இப்போ மேடம்கு கோபம் போயிடுச்சா நீங்களே வந்து என் கையை பிடிச்சு இருக்கீங்க” என்றான். அவள் மனநிலையை புரிந்து கொள்ளாமல்.
பிறகு நிலா அங்கு நிற்க முடியாமல், “இதோ வந்துடரேன் சித்தி” என்று மாடிக்கு அவள் ரூமுக்குள் சென்று விட்டாள்.
விக்ரம் அவள் பின்னாடியே சென்றவன், “என்ன ஆச்சு? இப்போ எதுக்கு நீ ரூமுக்கு வந்த” என்றான்.
நிலா, “இல்ல டிரஸ் மாத்துரத்துக்கு தான் வந்தேன்” என்றாள் சமாளிப்பாக.
விக்ரம், “அப்படியா சரி சரி அப்போ நீ டிரஸ் மாத்திட்டு வா நான் கீழே இருக்கிறேன்” என்று அவன் சென்று விட்டான்.
பிறகு நிலா ஏதோ ஒரு யோசனையோடவே இருந்தால். இந்த ஃபங்ஷனுக்காக ராஜலட்சுமி நலாவுக்கும், விக்ரமுக்கும் ஒரே கலறில் துணி எடுத்து கொடுத்து இருந்தார்.
அதை நிலா அணிந்து கொண்டு ராஜலட்சுமி கொடுத்த அனைத்து நகைகளையும் போட்டுக்கொண்டு இருந்தால்.
நிலாவுக்கு இவ்வளவு நகை போட பிடிக்கா விட்டாலும் நேற்று இரவு ராஜலட்சுமி தூங்குவதற்கு முன்பு அவள் கையில் 100 சவரன் நகையை கொடுத்தார்.
ராஜலட்சுமி, “இது விக்ரம் அம்மாவோட நகை இது மொத்தமா உனக்கு சேர வேண்டியது நீ தான் போடணும்” என்று கையில் கொடுத்ததார்.
வேறு வழியின்றி மொத்தத்தையும் அணிந்து கொண்டு நகை கடையில் விளம்பரத்திற்கு வருவது போல் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
அந்த சமயம் ரூம் கதவு படபடவென தட்டப்பட்டது.
நிலா இவ்வளவு ஸ்பீடா துருவ் தட்ட மாட்டானே என்று யோசித்தவள் ஒரு வேலை சக்தி மாமாவா இருக்குமோ என்று உள்ளுக்குள் பயம் வந்தது.
மறுபடியும் ஸ்பீடாக கதவு தட்டப்பட்டது பயந்து கொண்டே சென்றவள் கதவை மெதுவாக திறந்தாள்.
அங்கு மித்ரா மற்றும் ஆதித்யா நின்றிருந்தார்கள். மித்ரா, அண்ணி என்று ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.
மித்ரா, “செம்ம க்யூட்டா இருக்கீங்க அண்ணி பொம்மை மாதிரி இருக்கீங்க”.
“எங்க அண்ணா எப்படி தான் உங்களை தேடி கண்டுபிடிச்சாரோ தெரியலை ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள்.
ஆதித்யா, “ஆமா அண்ணி இந்த மித்ரா நிறைய பொய் சொல்லுவா தான் ஆனா உங்க விஷயத்துல உண்மைய சொல்லி இருக்கா. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றான்.
நிலாவுக்கு அப்பொழுது தான் உயிரே வந்தது போல் இருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

