Loading

அத்தியாயம்-37

 

பாவையவளைக் கோபமாய் பார்த்தபடி அந்தக் குளத்தின் அருகே உள்ள பாறையைப் பிடித்துக் கொண்டவன் மேலேற முயற்சிக்க, 

 

“நா.. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுங்களா?” என்று இளநகை கேட்டாள்.

 

“ஒன்னும் வேணாம் தெய்வமே” என்றபடி எழுந்தவன், 

 

“காலை மட்டும் தான்டி நனைக்கலாமானு கேட்டேன்.. இப்படி என்னை மொத்தமா குளிப்பாட்டிட்டியே” என்று கூறியபடி கைகளை உதற, 

 

“சாரி துரு.. மேல பாம் ட்ரீய பார்த்து எக்ஸைட் ஆயிட்டேன்” என்று பாவம்போல் கூறினாள்.

 

தன் சட்டையைக் கழற்றி அதிலிருந்த தண்ணீரை அவன் பிழிய, அவன் செயலில் சற்றே திணறியவள், சட்டெனத் திரும்பி நின்று கொண்டு சாதாரணமாக மேலே பார்ப்பதைப் போல் காட்டிக் கொள்ள, தற்செயலாய் அவள் புறம் திரும்பியவன் அப்போதே தனது செயல் உணர்ந்தான்.

 

மெல்லிய வெட்கம் அவனில் அப்பிக் கொள்ள, அதில் தன் ஈர தலையைக் கோதி சிலுப்பிக் கொண்டவன் அச்சட்டையையே மேலே போர்த்திக் கொள்வதைப் போல் போட்டுக் கொண்டு, 

 

“அருவிக்கு மேல போக பாதை இருக்கானு பார்க்கனும்டா. மேலே போயிட்டாலே நாம மத்தவங்களை ஈசியா கூப்பிடலாம்” என்றான்.

 

மெல்ல மெல்ல தயங்கியபடி திரும்பியவள் அவன் தன் தயக்கத்தை உணர்ந்து செயலாற்றியது புரிய, சிறு பெருமூச்சுடன் “ம்ம்.. எப்படி போக?” என்றாள்.

 

“உன்னைக் கேட்டா? நீ என்னைக் கேட்குற?” என்றவன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டான். 

 

அவன் புறமாகச் செல்லும் தன் பார்வையை முற்றுமாகத் தவிர்க்க முயன்றவளும் தேடிப் பார்க்க, அருவிக்கு ஒருபுறம் பாறைகளே சற்று கரடு முரடான பாதை அமைத்திருப்பது தெரிந்தது.

 

இருவருமாய் ஒன்று போல் “அதோ..” என்று கரம் நீட்டி, அதில் சிரித்துக் கொள்ள, “போவோமா?” என்றான்.

 

இளநகை மெல்ல தலையசைக்க, “எவ்வளவு எக்ஸைட்டானாலும் அதை உள்ளுக்குள்ளயே வச்சுக்க.. நீ உணர்ச்சிவசத்த அடக்கு..” என்று வடிவேல் பாணியில் கூறியவன், “அங்கருந்து எனக்கு ஜலக்கிரிடைலாம் கொடுத்துடாத தாயி..” என்று கெஞ்சும் குரலில் கூற, 

 

அதில் வாய்விட்டுச் சிரித்தவள் அருள்பாலிப்பது போல் கைக்காட்டி, “தாங்கள் கேட்பதையே கொடுத்திட சித்தமாய் உள்ளோம்” என்று சிரித்தாள்.

 

அதில் “வாலு..” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “வா” என்க, 

 

இருவருமாக அப்பாதையில் ஏறினர். 

 

மிகவும் சிரமமாக இருந்த பாதை இருவர் கரங்களையும் கோர்த்துக் கொள்ள வழிவகுத்திட, சில, பல நிமிடங்களில் அருவியின் உச்சியை அடைந்தனர்.

 

அங்கிருந்து சுற்றி முற்றி பார்த்தவன், “டேய் வெளக்கெண்ண..” என்று கத்த, 

 

அருகில் இருந்தவள் அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். 

 

“அடேய் தீபட்டி தலையா.. துருவனும் இளாவும் அந்த அருவிய கண்டு பிடிச்சுட்டோம்” என்று துருவன் கத்த, 

 

இளநகை அவனைப் பேவென்று பார்த்தாள்.

 

“என்ன லுக்கு? நீயும் கத்து.. அப்பதான் வருவானுங்க” என்று கூறியவன், “டேய் டபரா வாயா.. விஷ்வேஷ்வரா..” என்று கத்த, 

 

“விஷ்.. ப்ரியா..” என்று இளநகையும் கத்தினாள்.

 

பத்து நிமிட தொடர் கதறலுக்குப் பின், “வாய மூடுடா நாயே” என்று விஷ்வேஷின் குரல் பின்னிருந்து கேட்க, இருவரும் திரும்பினர். ப்ரியாவிடமிருத்து வாங்கிய ‘பேம்பூ காப்டர்’ உதவியுடன் பறந்து வந்து சேர்த்திருந்தனர்.

 

“என் மண்டை தீப்பெட்டி போலவாடா இருக்கு? அதென்ன வாயி? ஆங்..‌டபரா வாயி.. அப்படியாடா இருக்கு என் வாயி” என்று விஷ்வேஷ் கத்த, 

 

“ரொம்ப முக்கியம் இப்ப இது?” என்று கேட்ட ப்ரியா, “அடுத்த க்ளூ கிடைச்சுதா?” என்றாள்.

 

“அடியே.. உன் புருஷன இன்சல்ட் பண்ணவன சட்டைய பிடிச்சு கேட்காம..” என்று விஷ் ஆவேசமாய் பேச, 

 

“இந்தா நல்லா பிடிச்சு பிழிஞ்சு கேளு” என்று ஈர சட்டையைச் சுரீரென அவன்மீது தூக்கி வீசினான்.

 

“அம்மே..” என்று அது முகத்தில் மோதிய வலியில் கத்தியவன் அடுத்து பேசுவதற்குள், “அய்யோ டேய்.. விஷ்வேஸ்வரா… காப்பாத்துடா” என்ற சத்தம் விஷ்வேஷின் காதுகளை மரணிக்க வைத்தது.

 

“வந்துட்டாடா என் காத வாங்குறதுக்குனே..” என்று காதுகளைப் பொத்திக் கொண்ட விஷ் மற்றும் மற்றவர்களும் மேலே பார்க்க, நான்கு ஃபீனிக்ஸ் பறவைகள் தத்தமது வாயில் ஒருவரை கவ்விக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

 

அகநகை, அகர்ணன் மற்றும் மதிக்கு அந்தப் பறவைகள் தங்களை சரியான அருவிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பது புரிந்தது. ஆனால் ஜான்விகாவிற்கு புரியவுமில்லை, புரியவைக்க இயலவுமில்லை.

 

அதன் விளைவே கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டு வருகின்றாள். 

 

பறவைகள் நால்வரையும் கீழே இறக்க, அரண்டடித்து விலகி அதனுடன் வாய் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

 

“பேசாம இவளைக் கொன்னுட்டு மதிக்கு வேற பொண்ணு பாத்துடுவோம்டா..” என்று விஷ்வேஷ் கூற, 

 

“வேற பொண்ணுக்கு என்ன அவசியம்.. அந்தா வருதே” என்று துருவன் கூறினான்.

 

அனைவரும் திரும்பிப் பார்க்க, ஓடோடி வந்த கரடி மதியை கட்டிக் கொண்டு நாவால் அவன் கன்னம் வருடித் தன் அன்பை பொழிந்தது. 

 

அதில் அனைவரும் கலகலவெனச் சிரிக்க, தனது வாக்குவாதத்தை ஃபீனிக்ஸிடம் முடித்துக் கொண்டு வந்த ஜான்விகா, “நீ ஏன்டா பாடி பில்டிங்கு போஸ் குடுக்குற மாதிரி நிக்குற?” என்று கேட்டுவிட்டு மறுபக்கம் பார்க்க, விஷ்வேஷ் அவன் சட்டையை உதறிக் கொண்டிருந்தான்.

 

“அட புத்தி கெட்ட பிஸ்கெட்டுகளா..” என்று எண்ணிய ஜான் ப்ரியாவிடம் சென்று ஒரு புது சட்டையை வரவைத்துக் கொண்டு அவனிடம் நீட்டி, “இதுதான் சாக்குனு ஆள் முன்னாடி ஃப்ளீம் காட்டுறியாக்கும்” என்க, 

 

“அடியே..” என்று அவள் வாயை மூடியவன், ப்ரியாவிடமிருந்து டேப்பை வாங்கி அதை ஜான்விகாவின் வாயில் ஒட்டி,

 

“ஷ்ஷ்” என்பதுபோல் வாயில் விரல் வைத்தான்.

 

அவனவள் சற்றே தள்ளி நிற்பதில் பெருமூச்சு விட்டவன் அதை உடுத்திக் கொள்ள, 

 

கரடியிடமிருந்து வந்த மதி, “க்ளூ கிடைச்சுடுச்சா?” என்று கேட்டான்.

 

“இல்லைடா.. அந்த இருபால் பறவை எதுனு தெரியலை. இளா படிச்ச மாதிரி தான் இருக்குனு சொல்றா. எதும் வித்தியாசமான பறவை கண்ணுக்குப் படுதானு பாருங்க. அதைப் பார்த்தா எதும் நினைவு வருதானு பார்ப்போம்” என்று துருவன் கூற, அனைவரும் சரியென்று தேடினர்.

 

‘எதுக்கு எல்லாம் விட்டத்தயே பாத்துட்டு நடக்குறானுங்க..? டேய் வுழுந்து முட்டிய கிட்டிய பேத்துகிடாதீங்கடா.. இதைச் சொன்னா நம்மள பைத்தியம்னு சொல்வானுங்க.. எனக்குக் காது இல்லை அதுகளுக்கு புத்தி இல்லை’ என்று மனதோடு புலம்பியபடி சுற்றி முற்றி பார்த்த ஜான்விகா கத்தி அழைக்க முயற்சிக்க அத்தோ பரிதாபம் அவள் வாய்தான் பூட்டிடப்பட்டுள்ளதே.

 

முன்னே சென்று கொண்டிருந்த தன் கணவன் தோளை அவள் சுரண்ட, “ஜானுமா.. கம்முனு வா..” என்றபடியே விட்டத்தில் எதைத் தேடுகின்றோம் என்றே தெரியாமல் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.

 

‘அட லூசு புருஷா’ என்று எண்ணியவள் நங்கென்று அவன் மண்டையில் கொட்ட, 

 

“ஆ…” என்று கத்தினான். 

 

“அட ராமா.. புருசனும் பொண்டாட்டியும் சிப்ட்டு போட்டுச் சாவடிக்குறானுங்களே” என்று புலம்பியபடி திரும்பிய விஷ்வேஷ், 

 

“என்னடா உங்களுக்குப் பிரச்சினை?” என்று கத்த, 

 

“ஏன்டி கொட்டின?” என்று அழாத குறையாக மதி கேட்டான்.

 

தூரத்தில் குறிப்பிட்டு “ம்ம்..ம்ம்..” என்க, 

 

சடாரென்று அவள் வாயில் ஒட்டியிருந்த டேப்பை உறிந்தான். 

 

“அடப்பாவி புருஷா..” என்று மீண்டும் அவள் கத்த, 

 

“ஈஸ்வரா..” என்று விஷ்வேஷ் காதைப் பொத்த, 

 

“சாரிடி.. நீ பண்ணதுக்கு நான் பண்ணது முடிஞ்சு.. அகைன் நோ ரிவென்ஞ்” என்று மதி கெஞ்சினான்.

 

“இதுக புருஷன் பொண்டாட்டியா இல்ல பால்வாடி கொழந்தைகளாடா?” என்று அகர்ணன் புலம்ப, 

 

துருவன், “இதுலாம் கம்மி அகர்ணன்.. இதுக அலுச்சாட்டியமெல்லாம் ரொம்ப ஜாஸ்தி.. ஷப்பா தாங்க முடியாது” என்றான்.

 

அங்கு “சரி பொழச்சு போ” என்ற ஜான்விகா தூரத்திலிருக்கும் மரத்தைக் காட்டி, “அதுக்கு மேல ஒரு பறவை தெரியுதா?” என்க, 

 

அனைவரும் அதைத் தேடி தங்கள் கண்களைச் சுழல விட்டனர்.

 

“ஹேயா.. கிரோஸ்பீக்” என்று இளநகை கூச்சலிட, 

 

“அந்தோ அந்தப் பறவை பேர் (பெயர்) ரோஸ் பிரெஸ்டட் கிரோஸ்பீக் (rose breasted grosbeak). அதோட ஒரு பக்கம் ரெட் கிளர்ல இருக்கு. அது ஆண் பகுதி, இன்னொரு பக்கம் யெல்லோ கலர்ல இருக்கும். அது பெண் பகுதி” என்று ஜான்விகா கூறினாள்.

 

“உனக்கு எப்புடி ஜானுமா இதெல்லாம் தெரியும்?” என்று மதி சைகையோடு வினவ, 

 

“யாரோ வாட்ஸாப் ஸ்டேடஸ்ல வச்சு பார்த்துருக்கேன்டா” என்றாள்.

 

“பாரேன்.. ஸ்டேடஸ் கேப்ல ஒரு அறிவு” என்று அகர்ணன் கூற, 

 

அந்த உயர்ந்த பனை (lodoicea muldivica) மரத்தின் உச்சியில் சிறு கூடமைத்து அதில் அப்பறவை அமர்ந்திருப்பது ஜான்விகாவின் கண்களுக்கு மிகத் துள்ளியமாகத் தெரிந்தது.

 

“ஏ அம்மாடி.. என்னா ஒசரத்துல இருக்கு” என்று ப்ரியா கூற, 

 

“என்ன ப்ரியா நீ? நீ நினைச்சா கொண்டு வர முடியாததா?” என்று துருவன் கேட்டான்.

 

தன் கைகளைத் தட்டிய அகநகை, மேலே சென்று அதை எடுப்பதற்கு ஏதுவானதை வரவழைக்கும்படி சைகை செய்ய, 

 

“அவ்வளவு பெரிய ஏணிக்கு எங்க போக?” என்று கேட்டாள்.

 

“ப்ரியா.. நம்மூருலலாம் மரமேறி தேங்கா பறிக்க ஒரு கயிறுபோலக் கட்டிப்பாங்கள்ல? அது குடு ஏறிடுவோம்” என்று விஷ் கூற, சில நிமிடங்களில் அதைக் கொண்டு வந்தாள்.

 

வழக்கம்போல் நமக்கு மரமேறவென்றே வாய்த்த ஜீவனான ஜான்விகா புலம்பியபடி ஏறி அதன் கூட்டிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து கொடுத்தாள்.

 

அதில் உள்ள ‘எனக்குக் கொடு உனக்குக் கொடுப்பேன்’ என்ற தகடை அகா அழுத்த ‘உலகின் மெய்யென்ற பொய்’ என்றிருந்தது. 

 

அதையே யாவரும் உச்சரிக்க, “சன் ரைஸஸ் இன் தி ஈஸ்ட்) Sun rises in the east)” என்று அகர்ணன் கூறினான். 

 

அந்தப் பெட்டியை திறக்கும் சக்கரம் மேலே எழும்பி ‘கிரிக்’ என்ற ஓசையைக் கொடுக்க, அதை அகா திருகியதும் பெட்டி திறந்து கொண்டது.

 

‘ஏ எப்புட்ரா’ என்பதைபோல் யாவரும் அகர்ணனை நோக்க, “அதுதான யூனிவர்சல் ட்ரூத்..? ஆனா உண்மைலயே சூரியன் உதயமும் ஆகுறதில்லை, அஸ்தமனமும் ஆகுறதில்லை. பூமியோட சூழற்சிக்கு ஏற்பதான் அப்படி தென்படுது” என்று அகர்ணன் கூறினான்.

 

“அப்ப நமக்குச் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது பொய்யா கோபால்?” என்று மதி கேட்க, 

 

“கண்டிப்பா பொய் தான்.. ரிங்கா ரிங்கா ரோஸஸ் கூட ஒரு ஆங்கில ஒப்பாரி பாடல் தான்” என்று அகர்ணன் கூறினான்.

 

“அடப்பாவிகளா.. இம்பூட்டு இருக்காடா? நீங்க அறிவாளி தான் அகர்ணன்” என்று துருவன் கூற, 

 

“எங்க மாமா எப்போமே அறிவாளி தான்.. கல்யாண விஷயத்துல மட்டும் கோட்டை விட்டுட்டாரு..” என்று இளநகை கூறினாள்.

 

அதில் அகா அவளை முறைக்க சிரித்தபடி தகடை எடுத்துத் துருவன் கையில் கொடுத்துப் படிக்கக் கூறினாள்.

 

‘ஈரைம்பது அடிதாண்ட,

ஓடுநீர் ஏந்தலாகும்

அயிலையின் காவலில்

ஆறடி ஆழத்தில

ஓர் நாளுக்கோர் முறை

புவிகான மேலேறும்

சூழேந்திய ஆண் கூட்டில்

அடுத்த துப்பு உள்ளதுவே!’

 

என்று இளநகை வாசிக்க, யாவரும் புரியாத மொழி படம் பார்த்ததைப் போல் விழித்தனர்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்