
அத்தியாயம்- 37
இரவு நேரம் விக்ரம் வீட்டிற்கு வரும் சமயம் நிலா அவனுக்காக வாசலிலே காத்துக் கொண்டு இருந்தாள்.
அவன் கார் வந்து நின்ற சத்தத்தில் ஓடி சென்று, “வந்துட்டிங்கலா” என்றாள் அவள் ஏக்கம் அவள் முகத்திலே தெரிந்தது.
விக்ரம், “காரில் இருந்து இறங்கி எதுக்கு டி இங்க ஓடி வந்து நிக்கிற. நானே உள்ள தானே வர போறேன்” என்றான்.
நிலா, “அது வந்து சும்மா தான் வந்தேன்” என்றாள் சமாலிப்பாக. விக்ரம், “மேடம் என்ன ரொம்ப மிஸ் பண்ணிங்க போலயே” என்று கேட்டுக் கொண்டு அவள் தோள்பட்டையின் வளைவில் கை போட்டான்.
நிலா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. உள்ள வாங்க நிறைய உங்களுக்காக சமைச்சு வச்சிருக்கேன்”.
“சாப்பிட்டு எல்லாத்துக்கும் டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. முதல்ல போய் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்று அவனை மேலே ரூமுக்கு அனுப்பி வைத்தாள.
நிலா அடுப்பாங்கரையை நோக்கி சென்றாள். அவசரம் அவசரமாக குளித்து விட்டு கீழே இறங்கி வந்த விக்ரம், “நிலா என்ன வீட்ல யாரையுமே காணோம்” என்றான்.
நிலா, “அது வந்து எல்லாரும் சாயங்காலத்துக்கு மேல் தான் வெளியே போனாங்க”.
“ஏதோ ரிசப்ஷன் இருக்குன்னு போய் இருக்காங்க. அத்தை, மாமா, சித்தி எல்லாருமே போயிருக்காங்க” என்றாள்.
விக்ரம், “வீட்டில் தனியாவா இருந்த எனக்கு முன்னாடியே போன் பண்ண வேண்டிதானே. நான் இன்னும் சீக்கிரமா வந்து இருப்பேனே” என்றான்.
நிலா, “அதனால் தான் சொல்லல” என்று டேபிள் மேல் பல விதமான டிஷ்களை அடுக்கி வைத்தாள். விக்ரம், “இவ்வளவும் எனக்காகவா செஞ்ச” என்றான்.
நிலா, “ஆமா உங்களுக்காக தான் செஞ்சேன். ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை” என்றாள்.
விக்ரம், “என்ன பிரச்சனை?” என்றான். நிலா, “எல்லா டிஷ்ஷும் உங்களுக்காக பார்த்து பார்த்து செஞ்சேன்”.
“ஆனா உங்களுக்கு எந்த டிஷ் பிடிக்கும்னு எனக்கு சரியா தெரியல அதனால் எனக்கு பிடிச்ச எல்லா டிஷ்ஷையும் செஞ்சு வச்சுட்டேன்” என்றாள்.
விக்ரம் அவளை பார்த்து, “எல்லாரும் புருஷனுக்காக சமைச்சா புருஷனுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு கேட்டு சமைப்பாங்க”.
“ஆனா நீ உனக்கு பிடிச்சதை எல்லாம் சமச்சு போட்டு என்னை கொடுமை பண்ணிக்கிட்டு இருக்க”.
“நீ வீட்ல யார்கிட்டயாச்சும் கேட்டுட்டு சமைச்சு இருக்க வேண்டியது தானே” என்றான் சீரியஸாக கூறுவது போல் வேண்டுமென்றே அவளை வம்புக்கு இழுக்க.
நிலா, “கேட்கலாம் என்று தான் நினைத்தேன் அதுக்குள்ள எல்லாரும் வெளியில் போயிட்டாங்க அப்புறம் எப்படி நான் கேட்கிறது” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
நிலா பிறகு சாப்பாட்டுகளை எல்லாம் பரிமாறினாள். முதலில் ஆலு பரோட்டாவும் கிரீமி சிக்கனமும் எடுத்து வைத்தள்.
அதைப் பார்த்த விக்ரம், “என்னடி காம்பினேஷன் இது இப்படி யாராவது ஆலு பரோட்டாவை கிரீம் சிக்கன் கூட போய் சாப்பிடுவாங்களா எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றான்.
நிலா, “ஆனா சின்ன வயசுல நீ ஸ்கூலுக்கு இதுதானே அடிக்கடி கொண்டு வருவ. உனக்கு இது தான் பிடிக்கும்னு சொல்லுவியே” என்றாள்.
விக்ரம், “அது சின்ன வயசுல இப்போ கிடையாது” என்றான். நிலா, சோகமான முகத்துடன் “பிடிக்காதா சரி இருங்க அப்போ வேறு வைக்கிறேன்” என்றாள்.
அதற்குள் விக்ரம், “அதான் வச்சுட்டியே அப்புறம் இதை யார் சாப்பிடுவா. நீ இதை சாப்பிடு அடுத்தது நான் சாப்பிடுகிறேன்” என்று அந்த ஆலு பரோட்டாவை அவன் கையாலேயே நிலாவிற்கு முழுமையாக ஒட்டி விட்டான்.
பிறகு நிலா அவன் பிளேட்டில் ஒரு கரி தோசை வைத்தாள். விக்ரம், “இது எல்லாம் தோசையா? பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு எனக்கு கீ ரோஸ்ட் மட்டும் தான் பிடிக்கும்”.
“இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது எனக்கு தோசை என்றாலே கீ ரோஸ்ட் மட்டும் தான்” என்றான்.
நிலா, “இதுவும் பிடிக்காதா ஆனா இது சூப்பரா இருக்குமே எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள்.
விக்ரம், “அப்போ சரி இதையும் நீயே சாப்பிடு” என்றான். நிலா அவனை பார்த்து முறைத்தாள்.
உடனே விக்ரம், “சரி சரி முறைக்காத நீ பாதி சாப்பிட்டு உனக்காக வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டு நான் பாதி சாப்பிடுகிறேன் போதுமா” என்றான்.
நிலா, “உங்களுக்காக நான் எவ்வளோ ஆசை ஆசையா செய்தேன் கடைசில பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களே சரி ஓகே” என்றாள்.
பிறகு விக்கிரம் பாதி தோசையை அவளுக்கு ஊட்டி விட்டு பாதி தோசை அவனும் சாப்பிட்டான். நிலா பிறகு சிக்கன் லாஃபாவை எடுத்து வைத்தாள்.
விக்ரம், “இது ஏதோ பரவாயில்லை அப்படிங்கிற மாதிரி இருக்கு ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொல்ல முடியாது” என்றான்.
நிலா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு இருந்தாள். அந்நேரம் வெளியில் சென்று இருந்த ராஜேந்திரன், ராஜலட்சுமி, ராதிகா என மூவரும் உள்ளே நுழைந்தார்கள்.
ராஜலட்சுமி, “என்னம்மா நிலா நீயே சமையல் எல்லாம் செஞ்சுட்டியா இப்போ தான் சாப்பிடுறீங்களா” என்றார்.
நிலா சிரித்த முகமாக, “ஆமா அத்தை இப்போ தான் இவங்க வந்தாங்க அதான் டிபன் வச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
ராஜேந்திரன், “என்னம்மா இன்னைக்கு எல்லாமே ரொம்ப வித்தியாசமான வாசனையா இருக்கு”.
“சூப்பரா சமச்சி இருக்க போலையே எனக்கும் ஒரு பிளேட் எடுத்து வைம்மா” என்று வந்து டேபிளில் அமர்ந்து கொண்டார்.
ராஜலட்சுமி, “இப்போ தானே ஃபங்க்ஷன்ல நீங்க சாப்பிட்டு வந்தீங்க மறுபடியும் சாப்பிட போறீங்க” என்றார்.
ராஜேந்திரன், “என்ன பண்றது என் மருமக வீடு மனக்கர அளவுக்கு சமைச்சு வச்சிருக்கா அதை டேஸ்ட் பண்ணனும் இல்ல வாசனையே எச்சி ஊறுது எனக்கு” என்றான்.
ராஜலட்சுமி, “ஆமா நிலா ஏன் இவ்ளோ அதிகமா சமைச்சு வச்சிருக்க நிறைய ஐட்டம்ஸ் பண்ணி இருக்க போலையே” என்றார்.
நிலா, “அது வந்து அத்தை இவங்களுக்கு எது பிடிக்கும்னு எனக்கு தெரியலை அதான் யோசிச்சு கொஞ்சமா 5 ஐட்டம்ஸ் கிட்ட பண்ணிட்டேன்” என்றாள்.
ராஜலட்சுமி அனைத்து ஐட்டங்களையும் பார்த்தவள், “பரவாயில்லையே விக்ரம்கு என்ன பிடிக்கும்னு தெரியாமலேயே எல்லாம் அவனுக்கு பிடிச்சதா சமச்சு இருக்க”.
“அதுவும் கரி தோசை அவன்னோட ஃபேவரிட் எத்தனை வேணாலும் சாப்பிடுவான்” என்றார்.
நிலா, “அப்படியா” என்றாள் அதிர்ச்சியாக விக்ரமை பார்த்து முறைத்தாள். விக்ரம் இஇஇஇ என்று பல்லை காட்டிக் கொண்டு இருந்தான்.
ராஜேந்திரன் அனைத்து டிஷ் கலையும் டேஸ்ட் பண்ணிவிட்டு, “எல்லாமே சூப்பரா செஞ்சிருக்க ம்மா”.
“அதுலயும் அந்த சிக்கன் லாஃப்பா சான்சே இல்ல அல்டிமேட்டா இருக்குமா” என்று கூறிவிட்டு சென்றார்.
நிலாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ராதிகா, இது என்ன பெரிய விஷயமா இப்பதான் youtube ல இது எல்லாமே வந்துடுச்சு ஊர்ல எல்லாருமே இதெல்லாம் பண்றாங்க அசால்டா”.
“இதெல்லாம் பார்க்க கொஞ்சம் சுமாரா இருக்க மாதிரி தான் தெரியுது” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.
பிறகு அனைவரும் அவர்கள் ரூமுக்கு சென்று விட நிலா விக்ரமை பார்த்து முறைத்து விட்டு கோபமாக அவளும் ரூமுக்கு சென்று விட்டாள்.
விக்ரம், “ஹே நிலா நில்லு ஒரு நிமிஷம் நில்லு” என்றான். நிலா, அதை எல்லாம் காதிலே வாங்காமல் கோபமாக சென்று கொண்டு இருந்தாள்.
விக்ரம் பின்னாடியே சென்றவன் ரூமுக்குள் சென்று கதவை சாத்திவிட்டு, “சும்மா சொன்னேன் டி என்று அவளை பின்னால் இருந்து கட்டி அனைத்தான்.
நிலா, “நான் உங்களுக்காக ஆசை ஆசையா சாயங்காலதில் இருந்து சமைச்சுக்கிட்டு இருந்தேன்”.
“எத்தனை டிஷ் செய்து இருந்தேன். ஹெல்ப்புக்கு கூட யாருமே இல்லாமல் நானே செய்தேன்”.
“எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு ஒன்னு கூட நல்லா இல்லைன்னு சொல்லிட்டிங்க” என்றாள்.
அவனை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளிவிட்டு. கைகளை கட்டிக்கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.
விக்ரம், “அவள் முன்பு சென்று சும்மா உன்னை டிஸ் பண்ணி பார்த்தேன் விளையாட்டுக்கு தாண்டி பண்ணேன்” என்றான் கெஞ்சுதலாக.
நிலா எதுவும் கூறாமல் மறுபடியும் திரும்ப நின்று கொண்டாள். விக்ரம், “சரி ஓகே சாரி டி எதாச்சும் பேசு” என்றான்.
நிலா, “அவ்ளோ சீக்கிரம் உங்களை மன்னிக்க முடியாது இன்னைக்கு என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டீங்க”.
“சோ நைட் ஃபுல்லா கிழேயே படுங்க” என்று விட்டு அவள் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவனும் வேறு வழி இன்றி கீழே படுத்துக் கொண்டான். விக்ரம் அவளிடம் கெஞ்சிக் கொஞ்சி அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான்.
ஆனால் நிலா அதற்கு இடம் கொடுக்க வில்லை. மறுநாள் காலையில் ராஜலட்சுமி தடபுடலாக சமையல்களை செய்து கொண்டிருந்தார்.
பிறகு ராஜலட்சுமி மித்ரா மற்றும் ஆதித்யாவுக்கு போன் செய்து, “இன்னும் ஏன் நீங்க வீட்டுக்கு வரவே இல்ல”.
“இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஃபங்ஷன் ஆரம்பிச்சுடும் ஞாபகம் இருக்கா இல்லையா”.
“உங்க அண்ணன் விக்ரம்கும் உங்க அண்ணி நிலாவுக்கும் இன்னைக்கு பங்க்ஷன் இருக்கு”.
“ரிசப்ஷன் அப்போவே நீங்க சரியா நிலா கிட்ட பேசாமல் போயிட்டீங்க காலேஜ் இருக்குன்னு”.
“டூ டேஸ்க்கு முன்னாடி வந்தா தானே நிலா கிட்ட ரெண்டு பேரும் சிரிச்சு பேசிகிட்டு சந்தோஷமா இருப்பீங்க” என்றார்.
பிறகு இருவரும் ஒன்றாக சரிம்மா திட்டாதே வந்துகிட்டு தான் இருக்கோம் கிட்ட வந்துட்டோம் வீட்டுக்கு வந்துருவோம் என்று போனை துண்டித்தார்கள்.
ஜெயலட்சுமி, “அவசர அவசரமாக அடியேய் சுஜிதா இன்னுமா நீ கெளம்புல சீக்கிரம் போய் துணியை மாத்திட்டு வா மணி ஆகுது. நிலாவை சீக்கிரமா போய் பார்க்க வேண்டாமா” என்றார்.
சுஜிதா, “உங்களுக்கு எப்போ நிலா மேல் பாசம் வர ஆரம்பிச்சிது” என்றாள் கேள்வியாக.
ஜெயலட்சுமி, “அது உனக்கு தேவையில்லாத விஷயம் என் பொண்ணு மேல் எனக்கு எப்போ வேணாலும் பாசம் வரும்” என்றார்.
சுஜிதா, “இப்போ நிலா உங்களுக்கு பொண்ணா வேற ஆக்கிட்டாளா”.
“உங்க பொண்ணுன்னா எப்படி உங்க பொண்ணு சௌமியா மாதிரி இப்போ நிலாவும் உங்க பொண்ணா ஆகிட்டாளா” என்றாள் நக்கலாக.
ஜெயலட்சுமி, “ரொம்ப அதிகமா பேசிகிட்டு இருக்க நீ” என்றார்.
பிறகு சக்தியை அழைத்து, “உன் பொண்டாட்டி கிட்ட வாயை அடக்க சொல்லு என்கிட்ட தேவையில்லாமல் பேசிக்கிட்டு இருக்கா”.
“எப்பயுமே நான் இதே போல் பொறுமையா இருக்க மாட்டேன்” என்று விட்டு அங்க இருந்து சென்றார்.
சக்தி, “என்ன டி பண்ணி வச்ச எங்க அக்கா கிட்ட ஏன் நீ சண்டைக்கு போற எப்போ பார்த்தாலும்” என்றான்.
சுஜிதா, “உங்க அக்கா கிட்ட நான் ஒண்ணுமே சொல்லல. அவங்க தான் சும்மா இப்படிலாம் பேசுறாங்க என்ன பத்தி” என்றுவிட்டு அவளும் ஒரு பக்கம் சென்று விட்டாள்.
சக்தி அமைதியாக ரூம்பில் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
இந்த ஃபங்ஷனுக்கு போகலாமா வேண்டாமா போறதுக்கு சுத்தமா விருப்பமே இல்லை.
அந்த நிலா என்ன சின்ன வயசுல இருந்து ரொம்ப அசிங்கப்படுத்தி இருக்கா.
என்ன தான் நான் அவ கூட பிரண்ட் ஆகணும்னு நினைச்சிருந்தாலும் அவ என்னை அவமானப் படுத்துற மாதிரி தான் நடந்துக்கிட்டா எப்பையும்.
நான் அவளை கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கைக்கு சந்தோஷம் தரலாம் நிணைத்தேன்.
ஆனால் அவ ஒரு வார்த்தை என்கிட்ட பேசக் கூட பயப்படுறா. என்ன பார்த்தா அவளுக்கு பேய் மாதிரி இருக்கா இல்ல பிசாசு மாதிரி இருக்கா.
இப்போ அவ பங்ஷனுக்கு நான் போகணுமா இங்க இருந்து கிளம்பி. எனக்கு என்ன வேற வேலை இல்லையா என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
சுஜிதா, நிலா வீட்டிற்கு செல்வதற்கு ஆர்வமாக தயாராகிவிட்டு. சக்தி, “நீங்க ரெடி ஆயிட்டீங்களா” என்று அவனிடம் வந்து பார்த்தால்.
சக்தி உட்கார்ந்து இருக்கும் நிலையை கண்டு சுஜிதா, “என்ன இன்னும் நீங்க இப்படியே உக்காந்து இருக்கீங்க”.
“காலைல தான் உங்க அக்கா திட்டிட்டு போனாங்க சீக்கிரமா கிளம்ப சொல்லி நானே ரெடியாகிட்டேன் நீங்க என்ன இன்னும் இப்படியே உக்காந்து இருக்கீங்க” என்றாள்.
சக்தி, “இல்ல நான் எங்கேயும் வரலை” என்றான். சுஜிதா, “ஏன் வரலை ரெண்டு பேருமே போகலான்னு தானே முடிவு பண்ணினோம்” என்றாள்.
சக்தி, “இல்ல நான் நல்லா யோசிச்சுட்டேன் நான் இங்கேயும் வரல” என்றான் ஒரே பிடியாக.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

