Loading

பாகம் -36

 

சக்தி, “ஏய் குட்டி கத்திரிக்கா இங்க வா கொஞ்சம்” என்றான். சுஜிதா, “அவன் அருகில் சென்று என்ன? “ என்றாள். 

 

சக்தி, “நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் நம்ம ஊருக்கு போயிட்டு வந்ததில் இருந்து நாள் முழுக்க நீ மந்திரிச்சு விட்ட மாதிரியே சுத்திக்கிட்டு இருக்க”. 

 

“ஏதாச்சும் பிரச்சனையா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் உனக்கு உதவி பண்றேன்” என்றான். 

 

சுஜிதா அவனை நிமிர்ந்து பார்த்தாவள், “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள். 

 

சக்தி அவளை விடுவதாக இல்லை, “பொய் சொல்லாத நான் தான் உன்னை பார்த்தேனே”.

 

“நீ பாட்டுக்கு போற நீ பாட்டுக்கு வர என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ பேசவே இல்லை” என்றான்.

 

சுஜிதா, “ஓஹோ… அப்போ நான் உன்கிட்ட பேசிலைன்னு நீங்க கவலைப்பட்டு இருக்கீங்க அப்படிதானே” என்றாள் சிறித்து கொண்டு. 

 

சக்தி, “இல்லையே நான் ஒன்னும் கவலைப்படலையே. நான் உன்கிட்ட சொன்னேனா கவலை பட்டேன்னு”. 

 

“இவ பெரிய பேரழகி இவ பேசலைன்னு நான் கவலைப்பட போறேன்” என்று மழுப்ப பார்த்தான். 

 

சுஜிதா, “எல்லாம் தெரியுது தெரியுது என்று” அவனை வேண்டு என்றே வம்புக்கு இழுத்தாள்.

 

சக்தி, “நான் உன்னை கூப்பிட்டதுக்கு காரணமே ஜெயா அக்கா அந்த நிலா வீட்டுக்கு ஃபங்ஷனுக்கு போகணும்னு கூப்பிட்டாங்க”. 

 

“அதுக்காக தான் நீயும் வரியான்னு கேட்க வந்தேன் வேறு ஒன்னும் இல்லை நீயே ஏதாச்சும் நினைச்சுக்காத” என்றான். 

 

சுஜிதா, “ஆமா என்கிட்ட கூட உங்க அக்கா சொன்னாங்க நாளைக்கு அங்க போகணும்னு” என்றாள். 

 

சக்தி, “எனக்கு அங்க போகவே விருப்பம் இல்லை. ஆனா அக்கா என்ன வந்தே ஆகணும்னு சொல்லுறாங்க” என்று சுஜிதாவிடம் புலம்பினான். 

 

சுஜிதா, “உங்களுக்கு ஏன் பிடிக்கல. நீங்க என் கூட தானே வர போறீங்க என்கூடவே இருக்க போறீங்க”. 

 

“அப்புறம் வீட்டுக்கு வந்துட போறோம். ஒரு டூ ஹவர்ஸ் தானே அங்க இருக்க போறோம். நானும் நிலாவை பார்த்து ரொம்ப நாள் ஆகுதுல”. 

 

“நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசியே ரொம்ப நாள் ஆகிடுச்சு. நம்ம அங்க போனா கொஞ்ச நேரம் நாங்க பேசிக்கிட்டு இருப்போம்” என்றாள்.

 

அவள் கூறிய வார்த்தையில் சக்திக்கு எப்போதும் கோபம் வந்து விட்டது. 

 

சக்தி, “உன்கிட்ட நான் எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன். அவ கிட்ட பேசாத பழகாதன்னு ஆனா நீ கேக்கவே மாட்ட இல்ல”. 

 

“அவ கூடவே தான் சுத்துவன்னு சொல்ற இல்ல. எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல அவளை பார்த்தாலே எனக்கு கோவம் கோவமா வருது” என்றான். 

 

சக்தி, “நீ அவளை பத்தி இப்படி பேசும் போது எனக்கு இன்னும் கொஞ்சம் கோவம் வருது என்ன வேண்டாம் பிடிக்கலைன்னு தூக்கி போட்டுட்டு போனவ அவ”. 

 

“ஆனால் நீ அவளுக்கு போய் பிரண்டா சுத்திக்கிட்டு இருக்க” என்று கோவமாக அங்கிருந்து சென்று விட்டான்.

 

ஜெயலட்சுமி யாருக்கோ செல்போனில் அழைத்து, “இன்னைக்கு சாயங்காலம் பத்திரம் என் கைக்கு வந்திரும்”. 

 

“நீங்க வந்து வாங்கிட்டு போயி அதை நான் சொல்ற மாதிரி என் பெயரில் எழுதி மாத்திடுங்க அதுக்கப்புறம் இருக்கு எல்லாருக்கும்” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள். 

 

ராஜேந்திரன்னும், ராஜலட்சுமியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

 

ராஜேந்திரன், “விக்ரம் மனசுல அப்படி என்னதான் இருக்குன்னு எனக்கும் தெரியலை”. 

 

“ஆனா அது உனக்கு தெரிந்திருக்கும் என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கு”. 

 

பல வருஷம் ஆகிடுச்சு ஆனா அது என்னன்னு நீயும் சொல்ல மாட்டேங்குற அவனும் வாயை திறந்து சொல்லவே மாட்டேங்குறான்”. 

 

“அன்னைக்கு காலைல என் கிட்ட நல்லா தான் பேசிட்டு ஸ்கூலுக்கு போனான்”

 

“நைட்டு நான் வரும் போது என் கிட்ட ஏதோ சொல்ல வந்தான் ஆனா நீ அவனை பேச விடல. அதோட அவன் இப்போ வரைக்கும் என்கிட்ட பேசவே இல்ல”. 

 

“எதாச்சும் சொன்னா தானே தெரியும். அதை சரி பண்ணவும் முடியும். இப்படி ரெண்டு பேருமே என்கிட்ட சொல்லாம இருந்தா நான் என்ன பண்ண முடியும்”. 

 

“நானும் பல வாட்டி உன்கிட்ட கேட்டுட்டேன் நீ தெரியலைன்னு மட்டும் தான் சொல்ற” என்றான் மனம் உடைந்து.

 

ராஜலட்சுமி, “அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க சீக்கிரமே நம்ம பையன் நம்ம கிட்ட பேசுவோம் எனக்கு நம்பிக்கை இருக்கு”. 

 

“இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததுமே அவன் பாதி மாறிட்டான் என்கிட்ட பேசவும் ஆரம்பிச்சிட்டான் கொஞ்சம் கொஞ்சம்”

 

“அது சரி அதை விடுங்க விக்ரமோட அப்பா கார் ஆக்சிடென்ட் கேஸ் என்ன ஆச்சு? யார் கொலை பண்ணாங்க என்ற இன்ஃபர்மேஷன் உங்களுக்கு தெரிந்ததா” என்றாள்.

 

ராஜேந்திரன், “இல்லம்மா நம்ப வக்கிலும் தேடிக்கிட்டு தான் இருக்காங்க ஆனா யாரு அந்த கொலையை பண்ணி இருப்பாங்கன்னு கண்டுபிடிக்கவே முடியலை”

 

“கார் ஆக்சிடென்ட் ஆகும்போது இரண்டு அடி தள்ளி ஒரு கடை இருந்திருக்கு அந்த கடையில் சிசிடிவி கேமராவும் இருந்திருக்கு”. 

 

“நம்ம போயிட்டு ஃப்பூட்டேச் கேட்கும் போது வேற யாரோ வந்து இப்பதான் வாங்கிட்டு போனதா சொல்லிட்டாங்க”. 

 

“அதுக்கப்புறம் யாரு ஏன் பண்ணாங்க எதுவுமே தெரியலை” என்றார். 

 

ராஜலட்சுமி, “சரி இப்பதான் விக்ரமுக்கு 27 வயசு ஆயிடுச்சு இல்ல அவன் கிட்ட இந்த கேச பத்தி எல்லாம் சொல்லிடலாம்ல” என்றாள்.

 

ராஜேந்திரன், “அது எப்படி சொல்ல முடியும். அவன் மனசு கஷ்டப்படாதா அவனை பொறுத்த வரைக்கும் இது ஒரு ஆக்சிடென்ட்டா தான் இருக்கு”. 

 

“இது ஒரு கொலைன்னு தெரிஞ்சா தன்னோட அப்பாவை கொலை பண்ணவனை நானே போய் கொலை பண்ணுறேன்னு கட்டாயம் விக்ரம் சொல்லுவான்”.

 

“அப்புறம் அவன்னோட ஃப்யூச்சரே போயிடும். நான் அவன அண்ணன் பையனா பாக்கல என்னோட பையனா பாக்குறேன்”. 

 

“என் பையனா இருந்து தப்பான வழியில் போனா நான் விடமாட்டேன்” என்றான். 

 

ராஜலட்சுமி மனதுக்குள் இந்த விஷயத்தைப் பற்றி ராகுல் கிட்ட நீங்க சொன்னாலே அவன் உங்க மேல எந்த தப்பும் இல்லை அப்படின்றதை புரிஞ்சுப்பான். 

 

ஆனா நீங்க அவன் மனசு கஷ்டப்படும் ன்னு சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சிருக்கீங்க. 

 

நீங்க சொல்லாததுனால் தான் அவன் உங்க கேரக்டரியே தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கான். 

 

அது உங்களுக்கு தெரிஞ்சா நீங்க உடைஞ்சு போயிடுவீங்க‌. அதனால் தான் நான் உங்ககிட்ட கூட சொல்லாம இருக்கேன்” என்று நினைத்து வருத்தப்பட்டார்.

 

காலையில் கண் விழித்த நிலா பக்கத்தில் விக்ரம் உறங்கிக் கொண்டு இருப்பவனை பார்த்தால்.

 

அவன் கன்னத்தில் கை வைத்து உனக்காக நான் எத்தனை வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா. 

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பயத்தோடவே நான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். 

 

இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.

 

விக்ரம் சட்டென்று அவளை இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டான். 

 

நிலா, “அச்சச்சோ நீங்க எப்போ எழுந்திங்க. நீங்க தூங்குறீங்கன்னு நினைச்சேன்னே” என்றாள் வெக்கத்தோடு. 

 

விக்ரம், “நீ எழுந்துகிறதுக்கு முன்னாடியே நான் எழுந்துட்டேன்”. 

 

“ஆனா உன்ன இங்கேயே விட்டுட்டு தனியா எழுந்து போக மனம் இல்லாம அப்படியே சும்மா படுத்துட்டு இருந்தேன்” என்றான்.

 

நிலா, “ஐய்யோ முடியல போதும் நான் கிளம்புறேன்” என்று கட்டிலில் இருந்து கீழே இறங்க சென்றாள்.

 

விக்ரம், “அவள் கையைப் பிடித்து இழுத்தவன் என்ன ஒரு முத்தத்தோடு நிறுத்திட்டு போற அவ்வளவுதானா”. 

 

“நான் நினைச்சேன் ஒரு பத்து பதினஞ்சு முத்தம் கொடுப்பேன்னு. ஆனா நீ ரொம்ப கஞ்சமா இருக்கியே” என்றான்.

 

நிலா அவன் தாடையைப் பிடித்து ஆட்டியவள் ரொம்ப ஆசை தான் என்று குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.

 

பிறகு விக்ரம் மனமே இல்லாமல் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்.

 

நிலா, “இன்னும் எவ்வளவு நேரம் தான் நீங்க இந்த ரூம்புக்குள்ளயே கிளம்பி கிட்டு இருக்கப் போறிங்க”. 

 

“நீங்க கண்ணாடி முன்னாடி நின்டு மூணு மணி நேரம் ஆச்சு. காலைல 11 மணிக்கு மேல் கம்பெனிக்கு போனா ஓனரே இப்படி பொறுப்பு இல்லாம இருந்தால்”.

 

“அந்த கம்பெனி என்ன ஆகுறது ஸ்டாஃப் எல்லாம் எப்படி கரெக்ட் டைம்க்கு வருவாங்க” என்றாள்.

 

நிலா புறம் திரும்பிய விக்ரம் அவள் கழுத்து வளைவில் கை போட்டு கொண்டு, “டார்லிங் ஓனர் எத்தனை மணிக்கு வேணாலும் போகலாம்”.

 

“நான் இல்லைனாலும் ராஜேஷ் அங்க எல்லாத்தையும் பார்த்துப்பான் ஒன்னும் பிரச்சினை இல்லை”. 

 

“நான் இன்னைக்கு லீவ் கூட போட்டுக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றான். 

 

நிலா, “அவன் கைகளை தள்ளிவிட்டு ஒன்னும் தேவையில்லை லீவ் போட்டு என்ன பண்ண போறீங்க”.

 

“நாள் முழுக்க இந்த ரூம்குள்ளேயே உட்கார்ந்திருக்க போறீங்க. சீக்கிரம் போய் கிளம்புங்க மணி ஆகுது” என்றாள்.

 

விக்ரம், “நான் போய்தான் ஆகனுமா” என்றான். நிலா, “மிஸ்டர் துருவ் நீங்க போய் தான் ஆகனும் வேற வழியே இல்லை” என்றாள்.

 

வேறு வழியின்றி விக்ரம் ஆபீசுக்கு சென்றான். பாலாஜி, “என்னடா நீ ப்ரொபோஸ் பண்ண சீனை பார்த்து ஒரு மாசத்துக்கு ஆபீஸ் பக்கமே வரமாட்டேன்னு நினைச்சேனே”.  

 

“பரவாயில்லையே இன்னைக்கே வந்துட்ட எனக்கு ஆச்சரியமா தான் இருக்கு” என்றான்.

 

விக்ரம், “அட போடா நானே சோகமா வந்து இருக்கேன்” என்றான். 

 

பாலாஜி, “என்னடா ஆச்சு மறுபடியும் சோகமா? உனக்கும் நிலாவுக்கும் ஏதாவது சண்டையா?” என்றான்.

 

விக்ரம், “சண்டை எல்லாம் ஒன்னும் இல்லடா. இன்னைக்கு ஒரு நாள் லீவு போடலாம் ஜாலியா வீட்ல இருக்கலாம் ன்னு நினைத்தேன்”. 

 

“ஆனா நிலா என்ன புடிச்சு ஆபிஸ்க்கு துரத்தி விட்டுட்டா வீட்டுல இருந்தா இன்னும் ஜாலியா என் டார்லிங்கை பாத்துக்கிட்டே இருந்திருப்பேன்”. 

 

“இப்போ பாரு இங்க வந்து கரடி மாதிரி இருக்க உன் முகத்தை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதா இருக்கு எல்லாம் என் நேரம்” என்றான்.

 

பாலாஜி, “ரொம்ப திமிரு தாண்டா உனக்கு பாத்துட்டே இரு நானும் காதலிச்சு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி காட்டுறேன்”. 

 

“இந்த கரடி முகத்தையும் காதலிக்க ஒருத்தி இல்லாமலா போய்ட போறா” என்றான்.

 

விக்ரம், “போடா போய் முதல்ல ஆபீஸ்ல இருக்க வேலைய பாரு” என்றான். பிறகு இருவரும் ஆபீஸ் வேலைக்குள் மும்மரமாக நுழைந்து விட்டார்கள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்