
அத்தியாயம் – 30
விக்ரம், “அந்த பொண்ணு பெயர் என்று மெதுவாக நிலா” என்று கூறினான்.
அவன் கூறிய அடுத்த நொடி நிலா கோவமாக அவன் கண்ணத்தில் அறைந்து அவனை எட்டி தள்ளினாள்.
அதில் விக்ரம் இரண்டு அடி பின் நகர்ந்து நின்றான். விக்ரம் ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான்.
நிலா, “நீ எல்லாம் மனுஷன் தானா. உனக்கு மனசாட்சியே இல்லையா. நான் உன்கிட்ட தானே என் காதலைப் பற்றி சொன்னேன்”.
“நீ அதையே என்கிட்ட மிஸ் யூஸ் பண்ண பார்க்குறியா? நீ எல்லாம் மனுஷனே கிடையாது. உன்ன மாதிரி ஒருத்தன நான் பார்த்ததே கிடையாது” என்றாள் ஆக்ரோஷமாக.
விக்ரம், “அது இல்ல நிலா நான் சொல்றதை கேளு” என்றான். நிலா தன் கைகளை தூக்கி எதுவும் பேசாதே என்று காண்பித்தாள்.
நிலா, “இதுக்கு மேல் எதுவும் பேசாத. நீ இப்படிப்பட்டவன் என்று நான் நினைச்சு கூட பார்க்கலை”.
“உன்ன பார்த்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு” என்று அவள் கூறும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
விக்ரம் மனசு உடைந்து, “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு அதுக்கு அப்புறம் பேசு” என்றான்.
நிலா, “இதுக்கு மேல் நான் எதையும் கேட்கிறதா இல்லை. இப்போ பெருசா என்ன சொல்லிடப் போற. உன்னால் என்ன சொல்லிட முடியும்”.
“அந்த சின்ன வயசு பையன் நீ தான். அந்த பொண்ணு நான் தான். அப்படின்னு சொல்லப் போற அதானே”.
“ஆனா இவ்வளவு சீப்பா நீ நடந்துப்பன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நீ கொஞ்சம் டீசன்ட்டான ஆளுன்னு தான் நான் நெனச்சேன் இது வரைக்கும்”.
“ஆனா இந்த நிமிஷம் சொல்றேன் நீ மனுஷனே கிடையாது. என் முன்னாடி நிக்காத தயவு செஞ்சு இங்க இருந்து போயிடு என்னை கொஞ்சம் தனியா விடு” என்று கத்தினாள்.
விக்ரம் கோவமாக குரலை உயர்த்தி, “ஒரு நிமிஷம் வாய மூட்ரியா” என்று கர்ச்சுக்கும்படி கத்தினான். நிலா, “அதில் பயந்து கப்சிப் என்று ஆகிவிட்டால்.
விக்ரம், “நான் சொல்றது ஏன் டி உனக்கு புரிய மாட்டேங்குது. சத்தியமா நான் சொல்றது எல்லாமே உண்மை தான்”.
“நான் ஒரு பொருள் ஒன்னு உன்கிட்ட காட்டுறேன் அதை நீ பார்த்தினா கட்டாயம் நான் சொல்றதை நீ நம்புவ” என்று அவளை அழைத்துக் கொண்டு ரூமுக்கு சென்றான்.
அவன் பேக்கில் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான். நிலா அமைதியாக அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
விக்ரம் அனைத்து துணிகளையும் எடுத்து கீழே கலைத்து போட்டு தேடிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் தேடும் பொருள் அவனுக்கு கிடைக்கவில்லை. நிலா, “என்ன எதாச்சும் கிடைச்சுதா?” என்றாள் நக்கலாக.
விக்ரம் தயங்கியபடி, “எனக்கு எடுத்து வச்ச மாதிரி தான் ஞாபகம் இருக்கு. ஆனால் காணோம்” என்றான். நிலா, “அப்படி என்ன எடுத்து வச்சீங்க?” என்றாள்.
விக்ரம், “நிலா அது வந்து நம்ம சின்ன வயசுல விளையாடும் போது தென்னை மரம் ஓலையில் ஒரு வாட்ச் மாதிரி செஞ்சோம் ஞாபகம் இருக்கா”.
“நீ கூட அதை எனக்கு கொடுத்த வச்சுக்க சொல்லி. நான் இன்னும் அதை பத்திரமா தான் வச்சிருக்கேன்” என்றான் ஆர்வமாக.
நிலா, “ஓஹோ அப்படியா ஆனா எனக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரி நினைவிலேயே இல்லையே” என்றாள். விக்ரம், “என்ன நம்பு டி” என்றான்.
நிலா, “போதும் பிலிஸ் விட்டுட்டு உன்னை நான் எப்படி நம்ப முடியும். எத வச்சு நம்ப சொல்றீங்க என்ன அடைய மட்டும் தான் நீங்க பார்க்கறிங்க”.
“இன்னைக்கு காலையில் கூட என்கிட்ட தப்பா நடந்துக்க தானே பார்த்தீங்க”.
“ஆனா அதுக்குள்ள எனக்கு தூக்கம் கலைந்தது நாள் உங்க முக மூடி எனக்கு தெரிஞ்சது” என்று அழுதுகொண்டே அங்கிருந்து ரூமுக்கு ஓடினாள்.
விக்ரம் செய்வதறியாது அந்த கார்டனில் ஒருபுறம் இருந்த பெஞ்சில் அமர்ந்து நிலா பேசிய வார்த்தைகளை யோசித்து கவலை பட்டுக் கொண்டிருந்தான்.
இனி என்ன செய்து இவளை நம்ப வைக்கிறது. நான் என்னென்னமோ நினைச்சேன் கடைசியில் எல்லாம் இப்படி போய் முடிஞ்சிடுச்சே.
அவளுக்கு என் மேல் துளி அளவு கூட நம்பிக்கையே இல்லையா. நான் அவளை ஏமாத்த பார்க்கிறேன் என்று அவ நினைச்சுக்கிட்டு இருக்கா.
அவளுக்கு எப்படி நான் நிரூபிக்கிறது எனக்கு ஒண்ணுமே புரியலையே என்று தலையை கோதிய படி இரவு முழுக்க அங்கேயே அமர்ந்து விட்டான்.
சக்தி ஒரு மணி நேரம் கழித்து ரூமுக்குள் சென்றான். அவனின் நிலையை கண்டு சுஜிதா கோபம் அடைந்தாள்.
சக்தி தள்ளாடியபடி குளறிய வார்த்தைகளுடன், “சுஜி பேபி நீ இன்னும் தூங்கலையா?” என்றான்.
சுஜிதா, “இப்ப எதுக்கு நீங்க இப்படி குடிச்சிட்டு வந்தீங்க. என்கிட்ட இதுக்கப்புறம் குடிக்க மாட்டேன் என்று தானே சொன்னீங்க” என்றாள் மூக்கை மூடிக் கொண்டு.
சக்தி, “ஆமா குடிக்க கூடாதுன்னு தான் நான் நினைச்சேன். ஆனா நான் என்ன பண்றது என் மனசுல நிறைய கவலை இருக்கே” என்றான்.
சுஜிதா, “அப்படி என்ன கவலை வந்துச்சு உங்களுக்கு இன்னைக்கு முழுக்க என் கூட சந்தோஷமா தானே இருந்தீங்க” என்றாள்.
சக்தி, “ஆமா நான் சந்தோஷமா தான் இருந்தேன் எனக்கு கிடைச்ச முதல் பெண் தோழினா அது நீ மட்டும் தான்” என்று சிரித்தான்.
சுஜிதா, “சிரிக்காதீங்க இப்படி எனக்கு எரிச்சலா இருக்கு. உங்களுக்கு என்ன அப்படி கஷ்டம் வந்துச்சு குடிச்சா அந்த கஷ்டம் எல்லாம் போயிடுமா”.
“இந்த போதை போயிடுச்சுனா அதுக்கு அப்புறம் மறுபடியும் உங்க மண்டைக்குள்ள வந்து நிக்க தானே போகுது அந்த கஷ்டம் எல்லாம்” என்றாள்.
சக்தி எதுவும் கூறாமல் அமைதியாக கட்டிளில் அமர்ந்து கொண்டான்.
சுஜிதா, “முதலில் சொல்லுங்க அப்படி என்ன கஷ்டம் என்று நானும் தெரிந்து கொள்கிறேன்” என்றாள்.
சக்தி, “அது வந்து நான் நிலாவ எவ்ளோ காதலிச்சேன்னு உனக்கு தெரியுமா?”.
“நான் சின்ன வயசுல இருந்தே என்னோட அக்கா வீட்டுக்கு அப்போ அப்போ வந்து தங்குவேன். அப்போத்தில் இருந்தே நிலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்”.
“ஆனா நான் சும்மா நிலாவை எப்பவும் வெறுப்பேத்திக்கிட்டே இருப்பேன் எனக்கு ஏதேனும் வேலை செய்ய சொல்லி”.
“அவள் செய்ய மாட்டேன் என்றால் அக்கா கிட்ட சொல்லிவிட்டு விடுவேன் என்று மிரட்டுவேன்”.
“நிலா நான் அவளை எங்கே அக்கா கிட்ட மாட்டி விட்டு விடுவேனோ என்று பயத்தி நான் சொல்ற எல்லாத்தையும் பண்ணுவா”.
“நானும் சந்தோஷமா தான் இருந்தேன். அவளும் என்கிட்ட அப்போ எல்லாம் எவ்வளோ வேலை நான் சொன்னாலும் செஞ்சுக்கிட்டு என்கிட்ட நல்லா தான் பேசுவா என்ன பார்த்து பயப்படவே மாட்டா”.
“ஆனா அதுக்கு அப்புறம் ஒரு நாள் நிலா தனியா உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா”.
“அப்போ நான் அவகிட்ட என்னன்னு கேட்கும்போது இந்த இருட்டு அறையில் தனியா இருக்க பயமா இருக்கு”.
“ஆனா ஜெயா சித்தி என்னை தனியா இருக்கனும் சொல்லுறாங்க. நான் பெரிய பொண்ணு ஆகிட்டேன்னு சொன்னாங்க எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு”.
“எங்க அம்மா என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது அப்படின்னு சொல்லி ரொம்பவே அழுதா”.
“எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அவ அழுவதை பார்க்கும் போது”.
“அதனால் நிலா கிட்ட நீ அழாதே நான் பக்கத்து அறையில தான் இருப்பேன் உனக்கு பயமா இருந்தா என்னை கூப்பிடு நான் வரேன் அப்படின்னு சொல்லிட்டு நான் போயிட்டேன்”.
“மறுநாள் காலையில் நான் அவளை பார்க்கறதுக்காக போனேன். அப்போ என்ன பார்த்ததும் அவ பயந்தா”.
“ஏன் என்று எனக்கே தெரியாது. நான் நேத்து நைட்டு பேசின வரைக்கும் அவங்க அம்மாவ நெனச்சு தான் அவ அழுதுகிட்டு இருந்தா”.
“ஆனா அடுத்த நாள் காலையில் என்ன பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சுட்டா. அதுக்கு காரணம் கூட எனக்கு தெரியாது”.
“நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் அவகிட்ட பேசுறதுக்கு. ஆனா அவ என்கிட்ட பேசக்கூட தயாராவே இல்ல”.
“அதோட நான் அக்கா வீட்ல இருந்து போயிட்டேன். அப்புறம் அவ காலேஜ் சேர்ந்த புதுசுல தான் நான் அக்கா வீட்டுக்கு வந்தேன்”.
“அப்போத்தில் இருந்து நிலா என்னை பார்த்தாலே பயப்பட ஆரம்பிச்சுட்டா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவே மாட்டா”.
“நானே பேச போனாலும் அவ பயந்துகிட்டே நிப்பா எனக்கு அவள பார்க்க பாவமா இருந்துச்சு”.
“அவளை எப்பவுமே அழ விடாம அவ வாழ்க்கைக்கு ஒரு துணையா நான் எப்பவுமே இருக்கனும்னு முடிவு பண்ணேன்”.
“அதனால் அவ பின்னாடி நான் சுத்திகிட்டு இருந்தேன். அவளை கல்யாணம் பண்ணனும் அப்படின்னு”.
“ஆனா அவ கடைசி வரைக்கும் என்னை பார்த்து பயந்துக்கிட்டே தான் இருந்தாலே தவிர என் கிட்ட பேசாம இருக்குறதுக்கு என்ன காரணம் என்று கூட அவ என்கிட்ட சொல்லவே இல்ல”.
“கடைசில அவ விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிட்டா. நான் அவ பின்னாடி சுத்துனதுக்கு ஒரு அர்த்தமே இல்லாம போச்சு”.
“நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளை எவ்வளவு சந்தோஷமா பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்னு தெரியுமா”.
“அவ கண்ணில் இருந்து ஒரு சொட்டு தண்ணி வராம அவளை எப்பவுமே என் கையில வச்சு தாங்கணும்னு நினைச்சேன்”.
“அவ கடைசி வரைக்கும் என்ன நம்பி என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கவே இல்ல”.
“அதனால் தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டிய சந்தோஷமா வச்சு பாத்துக்கிட்டா அவ அதை பார்த்து புரிஞ்சுக்குவா இல்ல நான் கெட்டவன் இல்லை அப்படின்னு”.
“உனக்கு விக்ரமை பத்தி தெரிஞ்சும் நீ என்கிட்ட எதுவுமே சொல்லல அப்படின்ற கோவத்துல தான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம அந்த நேரத்துல உன் கழுத்துல தாலி கட்டிட்டேன்”.
“உன்னோட வாழ்க்கையும் சேர்த்து வீணாக்கிட்டேன்” என்று கூறிக் கொண்டே போதையில் மயங்கி விட்டான்.
சுஜிதா அவனை சரியாக மெத்தையில் படுக்க வைத்தவள் குழம்பியும் போனால். இன்னைக்கு முழுக்க என் கூட சந்தோஷமா தான் இவன் நடந்துகிட்டான் நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.
ஆனா இப்படி கடைசியில் குடிச்சிட்டு வந்து இன்னைக்கும் நிலாவ பத்தியே பேசுறான்.
என் மேல் இவனுக்கு காதல் வந்த மாதிரி தான் எனக்கு தோணுச்சு ஆனா இவன் இப்படி நடந்துகிறான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சக்திக்கு டைம் குடுத்தா மாறிடுவான் சுஜி .. நிலா ஏன் இப்படி பண்ண .. பாவம் விக்ரம் .. எவ்வளவு ஆசையா இருந்தான் ..