
அத்தியாயம் – 3
திடீரென யாரோ பின்புறமாக கட்டி அணைத்ததில் பயந்து மூச்சு விட முடியாமல் திணறியபடி அவனை தள்ளிவிட்டு திரும்பினாள் சுஜிதா.
சக்தி அதிர்ச்சியாக பார்க்க சுஜிதா கோபமாக கையை ஓங்கிக் கொண்டு அவனை அறைய சென்றாள்.
சட்டென்று, அவள் கையைப் பிடித்த சக்தி, “யார டி அடிக்க வர்ற? ஏதோ தெரியாம கட்டி புடிச்சிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமா? போ போய் வேலையை பாரு“ என்று கையை தள்ளிவிட்டு செல்ல முன் வந்தான்.
உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற சுஜிதா, “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஒரு பொம்பள பிள்ளைய இப்படியா கட்டி பிடிப்ப. இப்படி பண்றதுக்கு அசிங்கமா இல்லையா உனக்கு” என்றாள்.
சக்தி, “நான் என்னுடைய நிலா குட்டின்னு நெனச்சு தான் உன்னை கட்டிப் பிடிச்சேன். அப்படியே நீ ரொம்ப பெரிய பேரழகி இவளை தேடி வந்து கட்டிக்கிறாங்க எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு போ டி“ என்றான்.
“அதானே உனக்கு தான் நாகரிகம் தெரியாதே…. அது தெரிஞ்சு இருந்தா இப்படி நிலாவை வற்புறுத்திருக்க மாட்டியே கல்யாணம் பண்ணிக்க சொல்லி”.
“பொறுக்கி பசங்களோடு சேர்ந்து சுற்றினால் இப்படி பொறுக்கி தனம் தான் பண்ணுவாங்க மானங்கெட்டவன்” என்று திட்டி முறைத்தாள்.
சக்தி, “ஏய், வாய மூடு டி. நிலா குட்டிக்கு என் மேல் அதிக பாசம் இருக்கு தெரியுமா?. ஒரு நாள் அவளே என்கிட்ட சொன்னா என் பின்னாடி சுத்தாதீங்க என் பின்னாடி சுத்துனா உங்க வாழ்க்கை தான் வீணா போகும்னு”.
“அவ என் வாழ்க்கையை பற்றி யோசிச்சு இருக்கா… அப்படின்னா என்ன அர்த்தம்? அவளுக்கு என் மேல் காதல் இருக்குன்னு தானே அர்த்தம்”.
“ஆனா, நிலாவுக்கு தான் அது புரிய மாட்டேங்குது. நீ போய் அவளுக்கு எடுத்து சொல்லு இதுதான் காதல் அப்படின்னு சொல்லு“ என்று குலரிய பாஷையில் பேசினான்.
சுஜிதா, “பைத்தியம் மாதிரி பேசாத டா அவளுக்கு உன் மேல் காதலும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. உனக்கு அவள பத்தி தெரியாது . அவ வாழ்க்கையில் காதலிக்கிற நிலைமையில் இப்போ அவ இல்ல”.
“அவ ஒரு பெரிய பிஸ்னஸ் வுமன் ஆகுரது தான் அவளோட கனவு. நிறைய சம்பாதிக்கணும் சொந்த காலில் நிற்கனும்னு அவளுக்கு பெரிய ஆசை எல்லாம் இருக்கு. இதெல்லாம் உனக்கு எங்கேயாவது தெரியுமா?”.
“இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்து அவளை கொஞ்சம் வாழ விடுங்க”.
“நீயும் உன் அக்காவும் சேர்ந்து அவ வாழ்க்கைய இப்படி நாசம் பண்றீங்களே” என்று சுஜிதா தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து வருந்தி கத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால், இதையெல்லாம் கேட்கும் நிலையில் தான் சக்தி இல்லையே. ஏனெனில், அவன் தான் ஏற்கனவே தள்ளாடிக் கொண்டு நின்றிருக்கிறான். இது எதுவும் அவன் செவியில் எட்ட வில்லை. பிறகு, எப்படி அவன் மூலையில் எட்டும்.
இவள் ஏதோ கத்திக் கொண்டிருக்கிறாள் என்பது போல் சக்தி, “போடி உனக்கெல்லாம் என்ன தெரியும் நானும் என் நிலா குட்டியும் சின்ன வயசுல இருந்து ஒன்னாவே வளர்ந்தோம் எங்க காதல் எங்களுக்கு மட்டும் தான் புரியும் போய் வேலையை பாரு போ“ என்று குளறலாக பேசிக் கொண்டே சென்றுவிட்டான்.
சுஜிதா அவன் சென்ற திசையை முறைத்து பார்த்து ‘திமிர் பிடித்தவன்’ என்று மனதிற்குள் வசைப்பாடினாள்.
அன்று இரவு அப்படியே சென்று விட மறுநாள் காலையில் நிலா சமையல் அறையில் கண்ணம்மாவுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டு இருந்தாள்.
ஹாலில் ஜெயலட்சுமி, ”ஏய் நிலா எனக்கு தலை எல்லாம் வலிக்குது காபி எடுத்துட்டு வா சீக்கிரம்” என்று குரல் கொடுக்க…
நிலா அடுத்த கனமே காப்பியை கையில் எடுத்துக் கொண்டு கடகடவென நடந்து சென்றாள்.
விக்ரம் தோட்டத்தில் மலர்களுக்கு நீரூற்றி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக சமையல் அறையை நோக்கி விரைந்துக் கொண்டிருக்க எதிரில் வேக எட்டுக்களுடன் வந்து கொண்டு இருந்த நிலா எதிர் எதிரே வந்த வேகத்திற்கு ஒரு நிமிடம் எங்கே இடித்து விடுவோமோ என்ற பயத்தில் இருவருமே தன் மார்புக்கு இடையே கைகளை குறுக்கிட்டு வந்த வேகத்திற்கு அங்கேயே தள்ளாடி இரண்டு சுற்று சுற்றி அப்படியே நின்றார்கள்.
நிலா அவளை அறியாமலே தன் மீன் போன்ற விழிகளால் விக்ரமை விழுங்கி விடும் படி அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
விக்ரம் அவளுக்கு சலைத்தவன் இல்லை என்பதை காட்டும் படி அவனும் கண்களை சிமிட்டாது எதையோ கூறிக் கொண்டு இருந்தான் கண் இமைக்கும் நொடியில்.
ஜெயலட்சுமி சிறு வினாடி கழித்து, “அடியேய், நிலா எங்க போய் தொலைஞ்ச? நான் காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு” என்று கர்ஜிக்கும் படி குரல் கொடுத்தார்.
அந்த குரலில் சுதாரித்து ஓர் அடி பின் வந்த நிலா, “மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க” என்று கூறி விட்டு மறு வார்த்தைக்கு எதிர்பாராமல் அடுப்படியை நோக்கி ஓடிவிட்டாள்.
விக்ரம் மனதில் இருபத்தி ஏழு வருடமாக இருந்த ஏக்கம் மொத்தமாக அந்த ஒரு நிமிட பார்வையில் தீர்ந்தது போல் ஏதோ ஓர் உணர்வு தோன்றியது.
விக்ரம் வெளியே சென்று விட்டான். ஆனால், அவன் நினைவு மொத்தமும் நிலாவை சுற்றியே இருந்தது.
கண்ணம்மாவின் அருகில் சென்ற நிலா, “அம்மா சித்தி கேட்ட காபி கீழ ஊத்திக்கிச்சு. அதனால், நான் வேறு காபி போட்டுடேன். நீங்க இதை எடுத்துட்டு போய் சித்தி கிட்ட தரீங்களா? நான் கொடுத்தா திட்டுவாங்க” என்று கெஞ்சுதலாக கேட்டாள்.
கண்ணம்மா சரி என்று காப்பியை எடுத்து சென்று, “ஜெயா மேடம் இந்தாங்க காப்பி” என்று நீட்டினார்.
ஜெயலட்சுமி முறைத்து பார்த்ததில் புரிந்து கொண்ட கண்ணம்மா, “நிலா பாப்பாக்கு உடம்பு சரியில்ல அதான் நான் எடுத்துட்டு வந்தேன்” என்று காப்பிய நீட்டிக் கொண்டே இருந்தார்.
ஜெயலட்சுமி, “சரி சரி துணி எடுக்க கடைக்கு போகணும் அவள சீக்கிரம் தயாராக சொல்லு” என்று காப்பியை எடுத்துக் கொண்டு தன் கணவருடன் உரையாடிக் கொண்டு இருந்தார்.
கண்ணம்மா, “அம்மாடி நிலா ஒரு சந்தோஷமான விஷயம். ஜெயா மேடம் உன்னை துணி எடுக்க கடைக்கு போக தயாராக சொன்னாங்க எனக்கு தெரிஞ்சு கல்யாணத்துக்காக தான் துணிமணி எல்லாம் வாங்க போறாங்க நினைக்கிறேன்”.
“இங்க இருக்கிற எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன். நீ போய் தயாராகு” என்று சந்தோஷமாக நிலாவை அனுப்பி வைத்தார் உண்மையான தாயை போல்.
நிலா கையை பிசைந்த படி ‘இப்போ நான் என்ன பண்றது என்னால் எப்படி தனியாக போக முடியும்’ என்று மனதுக்குள் குழம்பிக் கொண்டே இருந்தாள்.
அவள் முகத்துக்கு அருகே சொடக்கிடும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் சக்தியை கண்டு இரண்டு அடி பின் நகர்ந்து நின்றாள்.
சக்தி, “நிலா குட்டி இன்னுமா நீ ரெடி ஆகல. இங்க பாரு மாமா எப்படி ரெடி ஆகி வந்து இருக்கேன். சீக்கிரம் போய் நீ ரெடி ஆகிட்டு வா நம்ப கல்யாணத்துக்கு ஷாப்பிங் போறோம் ஷாப்பிங்…”.
“அதுவும், அக்காவோட ஆசிர்வாதத்தோட நம்ப கல்யாணத்துக்கு நம்ப இரண்டு பேருக்கும் புது துணி எடுக்க காஞ்சிபுரம் போறோம்”.
“நம்ம கல்யாணம் எப்படி அக்காவை மீரி நடக்கும் அப்படின்னு தானே நீ பயப்படுற நீ எதுக்கும் கவலைப்படாத நான் உன்ன கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்” என்றான்.
நிலா அவன் கூறிய எதற்கும் பதில் அளிக்காமல், “நான் போய் கிளம்பனும்“ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
சக்தி, ‘கல்யாணத்தை பற்றி பேசியதும் நிலா குட்டிக்கு பயம் போயிட்டு வெட்கம் வந்துடுச்சு போலயே’ என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.
நிலா செல்போனை எடுத்து சுஜிதாவுக்கு அழைப்பு கொடுத்தவள், “ஹலோ சுஜி நான் நிலா பேசுறேன். இங்க ஒரே பிரச்சனையா இருக்கு டி“ என்று மெதுவாக யாருக்கும் தெரியாமல் கூறிக் கொண்டு இருந்தாள்.
சுஜிதா, “என்ன டி ஆச்சு?” என்றாள் பதட்டமாக.
நிலா, “சித்தி என்ன கல்யாணத்துக்கு புடவை எடுக்க கடைக்கு கூப்பிடறாங்க” என்று அழுது கொண்டே கூறினாள்.
சுஜிதா, “நீ எதுக்கும் பயப்படாத நான் வரேன் உன் கூட கடைக்கு. ஆனா, என்னால இப்போ உன் வீட்டுக்கு எல்லாம் வர முடியாது நா வெளியே இருக்கிறேன்”.
“அதனால், நீ எல்லாருடனும் கிளம்பி கடைக்கு போ கடையில் நான் இருப்பேன் சரியா” என்று கடையின் பெயரை மட்டும் கேட்டுக் கொண்டு செல் போனை துன்டித்து விட்டாள்.
அனைவரும் காரில் ஏறிக்கொண்டு இருந்தார்கள். முன் சீட்டில் டிரைவர் மற்றும் ஜெயலட்சுமியும். பின் சீட்டில் மூன்று பேர் மட்டுமே உட்கார முடியும்.
அதில் ஒரு புறம் சக்தி அமர்ந்துகொள்ள பக்கத்தில் நிலாவை அமரும் படி கூறினான்.
விக்ரம், “அவளை தடுத்து நீங்க இந்த ஓரமா உட்காருங்க நடுவுல நான் ஒட்காந்துகரேன்” என்று நிலாவுக்கு இடம் கொடுத்தான்.
எல்லோரும் விக்ரமையே பார்க்க, “இல்ல பொதுவா பெண்களுக்கு நடுவில் உட்கார்ந்தால் வாந்தி வரும் சொல்லுவாங்க. அதனால், நிலா ஓரமா உட்கார்ந்துகட்டும்” என்று கூறினான்.
நிலா மனக்கணக்கில் ஒருவரிடம் இருந்தாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, “ஆமா எனக்கு நடுவில் உட்கார்ந்தால் வாந்தி வரும்” என்று ஒப்புக் கொண்டாள்.
ஜெயலட்சுமி, “எங்கேயாவது உட்காருங்க சீக்கிரம் கிளம்புவோம் மணி ஆகுது” என்றார்.
சக்தி, “இல்ல இல்ல முடியாது அப்போ இந்த வேலைக்காரன இந்த பக்கம் உட்கார சொல்லுங்க நா நடுவுல உட்கார்ந்துகிரேன்” என்று கூறி முடிப்பதர்குள் விக்ரம் காரில் அமர்ந்து கொண்டு நிலாவின் கையை பிடித்து யாருக்கும் தெரியாமல் இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்டான்.
ஜெயலட்சுமி, “சக்தியை முறைத்துக் கொண்டு வாயை மூடிட்டு உட்கார போரியா இல்லையா“ என்றார். சக்தி வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டான்.
விக்ரம் அருகில் நிலா ஒதுங்கி ஒதுங்கி அமர்ந்தாள். அவன் மேல் எங்கு கை, கால் பட்டு விடுமோ என்ற பயத்திலே உட்கார்ந்து இருந்தாள்.
அதை கவனித்த விக்ரம் சற்று சக்தியின் பக்கம் தள்ளி அமர்ந்தான். சக்தி கைகளை பின் பக்கமாக நிலாவின் தோள்பட்டையில் படும்படி நீட்டினான்.
விக்ரம் அதை கவனித்து சக்தியின் கை மேல் தலையை வைத்து தெரியாமல் அழுத்துவது போல் கையை ஆட்ட முடியாதபடி அழுத்திக் கொண்டான். சக்தி வெளியே சொல்ல முடியாமல் ம்ம்ம் என்று முனகினான்.
எதுவும் தெரியாதது போல் கண்களை மூடி கொண்டு விக்ரம் அமைதியாக படுத்து விட்டான். ஒரு மணி நேரம் கழித்து துணி கடையின் வாசலில் கார் நின்றது.
பிறகு, தான் விக்ரம் கைகளை விடுவித்தான். சக்தி தன் கையை அமுக்கியபடி இவன் என்ன சாதா வேலைக்காரன்னு நினைச்சா இவ்வளவு பலமா இருக்கிறான். நம்பளை விட பலமாக இருப்பான் போலயே என்று யோசித்தபடி கடைக்குள் சென்றான்.
அனைவரும் பட்டுப் புடவை செக்ஷனை நோக்கி விரைந்தார்கள். நிலா மட்டும் பார்வையாலே தன் தோழியை வலைவீசி கொண்டு இருந்தாள்.
அவள் பின்னாலே விக்ரம் ஒருபுறம் சக்தி ஒருபுறம் பாதுகாப்புக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் நிலா இல்லை. தன் தோழி வருவாளோ? மாட்டாளோ? என்ற பயத்திலேயே இருந்தாள்.
புடவை செக்ஷனில் சுஜிதா நின்று இருப்பதை பார்த்தவுடன் தான் நிலாவுக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
சுஜிதா சத்தமாக சிரித்துக் கொண்டே விக்ரம் மற்றும் சக்தியை பார்த்து, “என்ன நீங்க இரண்டு பேரும் என்னமோ நிலாவுக்கு பாடிகார்ட் மாதிரி வரீங்க” என்று கிண்டல் அடித்தாள்.
விக்ரம், “அது வந்து ஜெயா மேடம் தான் நிலாவை பத்திரமா பாத்துக்க சொன்னாங்க. ஏற்கனவே இரண்டு, மூணு தடவை ஏதோ கல்யாணம் எல்லாம் தடை பட்டுடுச்சாம்”.
“அதனால், எந்த பிரச்சனையும் இல்லாமல் நிலா பின்னாடியே இருன்னு என்கிட்ட சொல்லி இருக்காங்க” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட்டான்.
பிறகு, சுஜிதா அந்த இடத்தை வந்தடைந்தவுடன் நைசாக நழுவி விட்டான்.
விக்ரம் என்ன காலையில் இவ கண்ண பார்த்ததில் இருந்து எதையுமே யோசிக்க முடியலையே. இவலையே பாத்துட்டு இருக்கோம் என்று உதடுகள் முனுமுனுத்துக் கொண்டே சென்றான்.
அவனை பின்தொடர்ந்து சென்ற சக்தி, “இது எல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை புரிஞ்சுதா. உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் நீ என்ன பண்ணனும்னு அதை மட்டும் நீ பண்ணா போதும் நிலாவ பாத்துக்க எனக்கு தெரியும்” என்று இருவரும் பேசிக்கொண்டே இருக்க சுஜிதா நிலாவை அழைத்து சென்று விட்டாள்.
ஜெயலட்சுமி இவர்கள் செல்வதை பார்த்து, “ஏய் எங்க போயிட்டு இருக்க உனக்கு தானே கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்திருக்கோம். வா வந்து பாரு உன் வாழ்க்கையில் எதுவுமே நீ நினைச்ச மாதிரி நடக்கல இந்த புடவையாச்சும் உனக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கோ போ. உன் இஷ்டம் தான் இங்க” என்று கூறிவிட்டு. ஜெயா யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.
நிலா ஒரு புடவையை கையில் எடுத்து பார்க்க அவளுக்கு பின்பக்கம் சக்தி ஒரு புடவையும் விக்ரம் ஒரு புடவையும் எடுத்துக்கொண்டு வந்து நின்றிருந்தார்கள்.
இருவரும் ஒரே சமயத்தில், “நிலா இது நல்லா இருக்கா? உனக்கு“ என்று புடவையை நீட்ட நிலா திரு திரு என விழித்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் அது சுஜி யா தான் இருக்கும்னு … புடவைக்கே பிரச்சினையே … கல்யாணம் நடக்கிறதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை வருமோ