
அத்தியாயம் 29
சுஜிதா பின் சீட்டில் அமர்ந்து இருந்த நிலா, விக்ரமை பார்த்தவள், “ஹேய் நிலா நீயும் அண்ணாவும் வரீங்கன்னு என் கிட்ட சொல்லவே இல்லையே” என்று கை அசைத்தாள்.
சக்தி அவள் கைகளை இறுக்கமாக பிடித்து அவன் பக்கம் இழுத்தான், “அவங்க கிட்ட பேசாதே” என்றான். சுஜிதா, “சரி சரி நான் பேசல என்னை கொஞ்சம் விடுறீங்களா” என்றாள்.
பிறகு தான் சக்தி அவளை தன் நெஞ்சோடு பிடித்திருந்ததை கவனி அவன் கைகளை சட்டென்று எடுத்துக் கொண்டான்.
சுஜிதா மௌனமாக சிரித்தாள். சக்தி, “சரி வா இங்க இருந்து போகலாம்” என்று சீட் பெல்ட்டை கழட்டுவதற்கு முயற்சி செய்தான்.
அதற்குள் பிளைட் டேக் ஆப் ஆக போகிறது என்று கூறினார்கள். சுஜிதா, “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க இப்படி எல்லாம் பண்ண கூடாது ஃப்ளைட் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க”.
“உங்களுக்கு அவங்களை தானே பிடிக்கலை. நீங்க என் கூட தானே இப்போ வெளியே வந்து இருக்கீங்க”.
“அவங்களை எல்லாம் மறந்திருங்க உங்களுக்காக நான் இருக்கேன்”.
“இந்த இடத்தில் நம்ம இரண்டு பேர் மட்டும் இருக்கிறதா நினைச்சுக்கோங்க” என்றாள்.
சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
லண்டன் சென்றடையும் வரை நிலா விக்ரமிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவன் பேசியதற்கும் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு இவர்கள் பயணம் தொடர்ந்தது.
விக்ரம் அவன் புக் செய்த ஹோட்டலுக்கு அனைவரையும் கூட்டிச் சென்றான்.
சக்தி, “இவனுடன் எல்லாம் நான் வரமாட்டேன்” என்று வம்பு செய்தாலும் சுஜிதா அவனை பேசி சமாதானம் செய்து ரூமுக்கு அழைத்துச் சென்றாள்.
ஒரு நாள் முழுக்க பயணித்ததில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு சோர்வாக படுத்து விட்டார்கள்.
காலையில் நிலா உறங்கிக் கொண்டு இருந்தாள். விக்ரம் தூக்கம் கலைந்து எழுந்தவன் நிலா சோஃபாவில் உறங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.
அவள் அருகில் சென்று டார்லிங் இன்னையோட உன் லைஃப் மாறபோகுது உன்மை எல்லாம் இன்னைக்கு நான் கட்டாயம் சொல்லிடுவேன்.
அதுக்கு அப்புறம் நம்ப வாழ்க்கை சந்தோஷத்திலேயே நிறைந்திருக்கும் என்று அவளை பார்த்து நினைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட சென்றான்.
அந்த சமயம் சரியாக தூக்கம் கலைந்து நிலா கண் விழித்தாள். விக்ரம் இவ்வளவு நெருக்கத்தில் குறுகுறு என பார்ப்பதை பார்த்தாள்.
பதட்டமாக அவனை தன் கைகளைக் கொண்டு தள்ளி விட்டு, “என்ன பன்னிட்டு இருக்கிங்க. உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க”.
“என் மனசுல நீங்க இல்லை அவ்வளவு தான். என்னை நெருங்க முயற்சி பண்ணாதீங்க. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது”.
“இவ்வளோ அசிங்கமா நடந்துக்குறிங்க ச்சீ” என்று கோபமாக அங்கிருந்த பாத்ரூம்குள் சென்று விட்டாள்.
சுஜிதா குளித்து தயாராகி வெளியே சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று சக்தியை கூப்பிட்டாள்.
சக்தி, “நான் எங்கேயும் வரலை எல்லாம் அந்த ஜெயா அக்காவ சொல்லணும் இது எல்லாம் விக்ரம் ஏற்பாடு என்று தெரிஞ்சும் என்னை இங்க அனுப்பி இருக்கு”.
“எனக்கு இங்க வந்ததே பிடிக்கலை அப்படி இருக்கும் போது வெளியில் செல்ல எப்படி நான் விக்ரம் கூட சேர்ந்து வருவேன்” என்றான்.
சுஜிதா, “எது எப்படியோ இப்ப நம்ப இங்க வந்துட்டோம் இந்த ஊர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்”.
“வெளிய பாருங்க செமையா இருக்கு எப்படி சில் சில்லுனு இருக்கு பாருங்க. நீங்க யாருக்காகவும் வரத் தேவையில்லை.
“இப்போ நம்ப ரெண்டு பேரும் தான் பிரண்ட்ஸ் ஆகிட்டோம்ல எனக்காக வாங்க ப்ளீஸ் ப்ளீஸ்” என்றாள் அழகாக.
சக்தி, “சரி உனக்காக ஒத்துக்குறேன். ஆனா நம்ம தனியா போகலாம் எங்க வேணாலும் அந்த நிலா விக்ரம் வரக்கூடாது நம்ப கூட” என்றான்.
சுஜிதா, “சரி அது எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று குதுகலமாக அங்கிருந்து ஓடினாள். சுஜிதா நிலாவை பார்க்க சென்றாள்.
நிலா பாத்ரூம்குல் இருந்ததால் விக்ரமை பார்த்து, “அண்ணா நாங்க வெளியே போறோம் நீங்களும் நிலாவும் தனியா வெளியே போயிட்டு வாங்க” என்றாள்.
விக்ரம், “ஏன் எல்லாரும் ஒண்ணா போகலாமே” என்றான். சுஜிதா தயங்கியபடி, “இல்ல எனக்கு சக்தி கூட தனியா போகணும் நிறைய பேசணும்னு ஆசையா இருக்கு” என்றாள்.
விக்ரம் சிரித்த முகத்துடன் சரி என்றான். விக்ரம் நிலாவை வெளியே செல்ல அழைத்தான். நிலா, “எங்கேயும் வரமாட்டேன்” என்றாள்.
விக்ரம் எவ்வளவு கூறியும் நிலா எங்கேயும் செல்லாமல் அந்த ஒற்றை அரையிலே அமர்ந்திருந்தாள்.
விக்ரம் வேறு வழியின்றி அவனும் அங்கேயே இருந்தான்.
சுஜிதா அன்றைய நாள் முழுக்க மன நிறைவோடு சந்தோஷமாக இருந்தாள். அவள் ஆசைப்பட்டு கேட்பதை எல்லாம் சக்தி வாங்கி கொடுத்திருந்தான். அவளுடன் சேர்ந்து சக்தி சிரித்து பேசினான்.
கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட இது போல் இவர்கள் ஒன்றாக இருந்தது கிடையாது என்பதால் சுஜிதா இன்றைய நாளையே கொண்டாடிக் கொண்டிருந்தாள்.
கல்லூரி பருவத்தில் அவனை காதலிக்க நினைத்த நாளில் இருந்து அவள் கண்ட கனவு இது.
சக்தியுடன் கைகோர்த்து நடப்பதும், அவனுடன் சேர்ந்து ஜூஸ் குடிப்பதும், அவனுடன் சிரித்துப் பேச வேண்டும் என்று பல கனவுகளை கண்டு கொண்டிருந்தாள். அது மொத்தமாக இன்று நிறைவேறியது.
சக்தி மனதிலும் சந்தோஷம் நிறைந்திருந்தது. சுஜிதாவுடன் இருக்கும் நேரங்களை எல்லாம் அவனும் ரசிக்க ஆரம்பித்தான்.
ஆனால் இது காதல் என்று அவன் அறிவுக்கு எட்டவில்லை. நேரம் போனதே தெரியாமல் இருவரும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் ஹோட்டலுக்கு திரும்பும் வேலையில் மாலை நேரத்தை தாண்டி இருந்தது.
பனித்துளிகள் ஆரம்பமாகியிருந்தது ஹோட்டலுக்குள் நுழையும் பாதையில் இருபுறமும் பூக்களும் புல்களும் நிறைந்திருந்தது.
அதன் மேல் எல்லாம் பனித்துளிகள் பட்டு ஆங்காங்கே வெள்ளையாக பூக்கள் பாதி மறைந்து பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
சுஜிதா, “என்னால இதுக்கு மேல் நடக்க முடியாது கால் ரொம்ப வலிக்குது” என்று அங்கு இருக்கும் ஓர் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
சக்தி பக்கத்தில் சென்று அமர்ந்தவன், “சரி அப்போ கொஞ்ச நேரம் இந்த பனித்துளிகளை எல்லாம் ரசிச்சிட்டு அப்புறமா ரூமுக்கு போகலாம்” என்றான்.
சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டு இருக்க பிறகு சக்தி, “ரொம்ப சில்லுனு இருக்கு கெலம்பலாமா” என்றான். சுஜிதா, “என்னால நடக்க முடியாது நான் வரமாட்டேன்” என்றாள்.
சக்தி, “என்னால இதுக்கு மேல எல்லாம் உனக்காக இங்க உட்கார்ந்திருக்க முடியாது” என்று அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு நடந்து சென்றான்.
சுஜிதா இதை துளி அளவும் எதிர்பார்க்க வில்லை. திடிரென்று சக்தி தூக்கியதில் பயந்து சக்தி சட்டை காலரை இருக்கி பிடித்துக் கொண்டான்.
மனதுக்குள் முதல் முறை என்னை தூக்கும் பொழுது திட்டிக்கொண்டே சென்றான்.
ஆனால் இன்று தூக்கும் பொழுது சந்தோஷமாக செல்கிறான் என்று யோசித்தாள்.
இவளை ரூமில் விட்டுவிட்டு சக்தி, “இங்கேயே இரு நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரேன்” என்று சொல்லி பக்கத்தில் எங்கேயாச்சும் சரக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டு சென்றான்.
இந்த குளிர்க்கு சரக்கு அடிச்சா செம்மையா இருக்கும் என்று நினைத்து சென்றவன் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அளித்தது அந்த கடை.
சக்தி கொஞ்சமா குடிக்கலாம் தப்பு இல்லை என்று நினைத்து குடிக்க ஆரம்பித்தான். ஆனால் அது கொஞ்சம் ஓவராக போனது.
மாலை நேரம் நெருங்கியதும் பனிப்பொழிவு ஆரம்பம் ஆனது.
விக்ரம் ஜன்னல் வழியே அந்த காட்சியை பார்த்தவன், “நிலா அங்க பாரு அந்த கார்டன் எப்படி அழகா இருக்கு பாரு”.
“பிளவர்ஸ் மேல் எல்லாம் ஸ்னோவா இருக்கு நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அங்க வர்றியா” என்றான்.
நிலா, “எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க” என்றாள்.
விக்ரம், “இல்ல அந்த பிளேஸ் தான் கரெக்டா இருக்கும் ப்ளீஸ் அங்க வாயேன் இதுக்கு அப்புறம் உன்னை நான் எங்கேயும் கூப்பிட மாட்டேன்” என்றான். நிலா, சரி என்று சென்றாள்.
குளூரில் கைகட்டியபடி நிலா நின்று இருந்தாள். அங்கு இருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டு. விக்ரம், “சூப்பரா இருக்குல்ல பிளேஸ்” என்றான்.
நிலா அவனை திரும்பி பார்த்து, “இதை சொல்வதற்கா இங்க கூட்டிட்டு வந்தீங்க. இதை நீங்க அங்கேயே சொல்லி இருக்கலாமே” என்றாள்.
விக்ரம், “இல்ல இல்ல வேறு ஒன்னு சொல்லணும் எப்படி சொல்றதுன்னு தெரியலை” என்றான்.
நிலா எதுவும் கூறாமல் அமைதியாக அனைத்தையும் ரசித்தபடி நின்றிருந்தாள். அந்த இடத்தில் நிற்கும் போது பணி துளிகள் மேலே படபட மனம் நிறைய சந்தோஷமாக இருந்தது.
விக்ரம், “நிலா நான் என்னுடைய லைஃப்ல நடந்த ஒரு லவ் ஸ்டோரி தான் சொல்ல போறேன் எனக்கு சின்ன வயசுல ஒரு ஃப்ரெண்ட் இருந்தா”.
“ஒரு கட்டத்துல அவளை விட்டுட்டு நான் ஃபாரின் போக வேண்டியதா ஆகிடுச்சு. ஆனா ஃபாரின் போனதுக்கு அப்புறம் கூட நான் அவ கிட்ட பேசிகிட்டு தான் இருந்தேன்”.
“அவங்க வீட்ல ஒரு சின்ன பிராப்ளம் ஆகிடுச்சு அதனால் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவ என்கிட்ட பேசுவதையே நிறுத்திட்டா”.
“அதோட நான் ரொம்ப உடைஞ்சு உட்காந்துட்டேன். என் லைஃப்ல அப்போ நானும் சின்ன பையனா இருந்ததுனால் என்னால் அழுவதை தவிர வேற ஒன்னும் பண்ண முடியலை”.
“அவ என்னை விட்டு போனதும் லைப்ல இருந்த சந்தோஷம் மொத்தமா என்னை விட்டு போயிடுச்சு” என்று நிலா கூறிய அதே கதையை இவனும் கூறினான்.
“என்னோட அம்மா என்னை துருவ் அப்படின்னு தான் கூப்பிடுவாங்க”.
“அந்த பெயர் அந்த பொண்ணுக்கு மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் அந்த பெயர் தெரியாது இப்போ வரைக்கும்” என்றான்.
நிலா அதிர்ச்சியாக விக்ரமை பார்த்து, “அந்த பொண்ணு பெயர்?” என்றாள். விக்ரம், உதட்டோரம் மெல்லிய புன்னகையை சிந்தினான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்பாடா ஒருவழியா விக்ரம் பழைய கதையை சொல்லிட்டான் ..