Loading

அத்தியாயம் – 26

நிலா கோபமாக, “இப்போ எதுக்கு என்னை இப்படி இழுத்துக்கிட்டு ரூமுக்கு வந்தீங்க?” என்றாள். விக்ரம், “நீ அங்க என்ன காரியம் பண்ண பார்த்த” என்றான். 

நிலா, “நான் என்னமோ பண்ணிட்டு போறேன் அது என்னுடைய இஷ்டம். நீங்க ஏன் தேவை இல்லாமல் என்னுடைய விஷயத்தில் தலையிடுறீங்க” என்றாள்.

விக்ரம், “அதுல என்ன எழுதி இருக்குன்னு உனக்கு தெரியுமா?” என்றான். நிலா, “என் சித்தி எல்லாமே என்கிட்ட சொல்லிட்டாங்க” என்றாள். 

விக்ரம், “உன் சொத்து மொத்ததையும் எழுதி வாங்க பார்க்கிறாங்க. அதை சொன்னாங்களா உன் சித்தி” என்றான். 

நிலா, “ஓஹோ இப்ப தான் தெரியுது நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு. என்னுடைய சொத்துக்காக தானே அதனால் தான் இப்படி பயப்படுறீங்க” என்றாள்.

விக்ரம், “என்ன உளறிக்கிட்டு இருக்க. உன் சித்தி உன்னை ஏமாத்தி கையெழுத்து வாங்க பார்க்குறாங்க”. 

“அதை தான் நான் சொல்ல வந்தேன் எனக்கு ஒன்னும் உன் சொத்து மேல் ஆசை இல்லை” என்றான். 

அவன் பேசி முடிக்கும் முன்னே நிலா, “எனக்கு தெரியும் என் சித்தி எதுக்காக கையெழுத்து கேட்டாங்க என்று”. 

“அதேபோல நீங்க எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக் கிட்டிங்கன்னும் இப்போ நான் தெரிஞ்சுகிட்டேன்”. 

“உங்கள மாதிரி ஒரு மனுஷனை நான் பார்த்ததே கிடையாது” என்று கோபமாக கொள்ளை புறம் சென்று விட்டாள்.

வழக்கம் போல் சக்தி குடித்துவிட்டு அரையை நோக்கி சென்றான். சுஜிதா இன்னைக்கு நம்பல பிரண்ட்டா வேறு ஏத்துக்கிட்டான்.

இன்னைக்கு ண்டிப்பா குடிக்க மாட்டான் நினைக்கிறேன் என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அப்பொழுது சரியாக சக்தி கதவை திறந்து கொண்டு, “என்னுடைய முதல் பெண் தோழியே” என்று சிரித்துக் கொண்டு குளறியபடி அவளைப் பார்த்து கை நீட்டிக் கொண்டு இருந்தான். 

சுஜிதா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். சக்தி அவள் கைகளை இழுத்து பிடித்து குலுக்கிக் கொண்டு இருந்தான். 

சுஜிதா தன் கையை உருவிக்கொண்டு கோபமாக கொல்லைப்புறம் சென்று விட்டாள்.

அங்கு நிலா அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருந்தால். 

சுஜிதா, “ஹே நிலா இந்த நேரத்தில் இங்க என்ன வாக்கிங் போய்கிட்டு இருக்க. நீ இன்னும் தூங்கலையா?” என்றாள் தன் கவலையை மறைத்துக் கொண்டு. 

நிலா, “இல்லடி எனக்கு தூக்கம் வரலை. ஆமா நீ இங்க என்ன பன்னிட்டு இருக்க இன்னும் சக்தி மாமா வீட்டுக்கு வரலையா?” என்றாள்.

சுஜிதா சலிப்பாக, “இப்போ தான் வந்தாங்க” என்றாள். இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தவர்கள் ஒரே சமயத்தில் உன் வாழ்க்கை எப்படி போகுது?” என்றார்கள். 

பிறகு இருவரும் சிரித்துக் கொண்டார்கள். நிலா, “என் வாழ்க்கை பற்றி தான் உனக்கே தெரியுமே நான் சொல்ல என்ன இருக்கு”. 

“எனக்கு பிடிச்ச மாதிரி எதுவும் அமையாது சரி அதை விடு நீ சொல்லு உன் வாழ்க்கையில் என்ன நடந்துச்சு?” என்றாள்.

சுஜிதா, “அது வந்து” என்று இழுத்தாள். நிலா, “உண்மையை சொல்லு டி உன் வாழ்க்கையில் என்ன தான் நடந்துகிட்டு இருக்கு. உனக்கு பிடிக்கலைன்னா நீ டைவர்ஸ் பண்ணிடு”.

“சக்தி மாமா ரொம்ப முரட்டுத்தனமா தான் இருப்பாங்க. உன்னோட சந்தோஷமே போயிடும் இந்த வீட்டில் இருந்தா” என்றாள்.

சுஜிதா சிரித்துக் கொண்டு, “நான் சந்தோஷமா இல்லைன்னு எப்போ சொன்னேன் உன்கிட்ட. இந்த கல்யாணம் எனக்கு பிடிக்காமல் தான் நடந்துச்சுன்னு நான் எப்போ சொன்னேன்” என்றாள். 

நிலா அதிர்ச்சியாக அவளைப் பார்த்து, “என்ன டி சொல்ற. உனக்கு புடிச்சா இந்த கல்யாணம் நடந்துச்சு” என்றாள்.

சுஜிதா, “ஆமா எனக்கு புடிச்சு தான் இந்த கல்யாணம் நடந்துச்சு. நான் சக்தியை நம்ப காலேஜ் படிக்கும் போதில் இருந்தே காதலிச்சிட்டு இருந்தேன்”. 

“அதனால் தான் உன் கிட்ட கூட சொன்னேன் சக்தியை உன் கழுத்தில் தாலி கட்ட விட மாட்டேன் பயப்பிடாதே என்று” என்றாள்.

நிலா, “நீ உண்மையா தான் சொல்றியா இல்லைனா சக்தி மாமா உன்ன மிரட்டுச்சா எல்லார்கிட்டயும் உனக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்ல சொல்லுச்சா”.

“எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லிட்டு. நம்ம விக்ரம் கிட்ட சொல்லி சக்தி மாமாவை பாத்துக்கலாம் எதுக்கும் பயப்படாதே” என்றாள். 

சுஜிதா, “நான் சொல்றது எல்லாம் சத்தியம் டி. முதல் முதலில் சக்தியை எனக்கு எப்போ புடிச்சுச்சுன்னு தெரியுமா?”. 

“உன்னை ஒரு பையன் டிஸ்டர்ப் பண்றான்னு சொல்லி சக்தி அந்தப் பையனை மிரட்டி விட்டார் பாத்தியா அதோட அந்த பையன் கூட உன் பின்னாடி வர்றதே கிடையாது அப்போதான் எனக்கு அவங்கள பிடிச்சுது”. 

“அதுக்கு அப்புறம் உனக்காக தினமும் காலேஜ் வாசல்ல காத்துகிட்டு இருப்பாங்க. உனக்கு எது பிடிக்கும்னு யோசிச்சு யோசிச்சு உன் சக்தி மாமா பண்ணுவாங்க”.  

“ஆனால் அவங்க எது பண்ணாலும் நீ பயப்படுவ. நீ பயப்படுவதை பார்த்து அவங்க ரொம்ப மனசு கஷ்டப்பட்டாங்க உனக்கு தெரியுமா? ஒருநாள் அவங்க பிரிண்ட் கிட்ட பேசும்போது நான் கேட்டேன்”. 

“சக்தி என்ன சொன்னார் தெரியுமா? நிலா என்னை பார்த்தாலே பயப்படுறா ஒரு வார்தை கூட பேச மாட்டுக்குறா அவ மட்டும் என்னை ஏத்துக்கிட்டா நா இந்த அடில் தடில் கூட விட்டுடுவேன் அவளுக்காக”. 

“ஆனா அவ என்னை புறிஞ்சுக்கவே மாட்டிக்குறா என்று மனசு கஷ்ட பட்டு சொல்லிக்கிட்டு இருந்தாங்க”. 

“அவர் உன் மேல வச்சிருந்த பாசத்தை பார்க்கும் போது எனக்கே பொறாமையா இருந்துச்சு. நான் என் மனசுல எப்படி எல்லாம் எனக்கு புருஷன் வரணும் என் மேல எந்த அளவுக்கு பாசத்தை காட்டணும்னு நினைச்சு ஆசைப்பட்டேனோ அது எல்லாம் உன் மாமா உன்கிட்ட பண்ணிக்கிட்டு இருந்தாங்க”.

“நீ எவ்வளவு திட்டி முறைத்தாளும் உன் பின்னாடியே சுத்து வந்தாங்க. அதை பார்க்கும்போது எனக்கு தெரியாமலே என் மனசுல சக்தி வந்துட்டாங்க” என்றாள் சந்தோஷமாக. 

நிலா, “ஆனா சக்தி மாமா என்னை எப்பயும் மிரட்டிட்டே இருப்பாங்கலே” என்றாள். சுஜிதா, “அது நீ அவங்களை வேண்டா என்று சொல்ல சொல்ல அவங்களுக்கு காதலை விட பிடிவாதம் வந்துடுச்சு”. 

“உன்ன கல்யாணம் பண்ணி ஆகணும் நினைச்சுட்டாங்க. அதனால் தான் அப்படி நடந்துக்கிட்டாங்க”.

“இன்னொரு விஷயம் தெரியுமா காதலிச்ச பொண்ணு வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா யாராக இருந்தாலும்”.

“கோபத்தில் அந்த பொண்ணை கொல்லனும் இல்லைன்னா அவன் புருஷன் கிட்ட இருந்து பிரிக்கனும் இப்படித் தான் நினைப்பாங்க”.

“ஆனால், சக்தி உனக்கு கெட்டது எதுவுமே நினைக்காமல் இனிமே உன்னை பாக்கவே கூடாதுன்னு நினைச்சாங்க”. 

“உன் சித்தி சக்தி கிட்ட நிலாவை பழி வாங்கணும் அப்படின்னு சொல்லி வெச்சிருக்காங்க. அப்போ கூட சக்தி கெட்ட விஷயமா எதுவுமே யோசிக்கல”.

“நானும் சக்தியும் சந்தோஷமா இருந்தா அதை பார்த்து நீ கஷ்டப்படுவ இவ்வளோ பாசமா இருக்கவனை நம்ப மிஸ் பன்னிட்டோமே அப்படின்னு நீ கவலைப்படுவ நெனச்சுக்கிட்டு இருக்கான்”. 

“ஆனால் இந்த கல்யாணம் நடந்தது என்று” அன்று நடந்ததை சுருக்கமாக கூறினாள். கண்டிப்பா என்னோட சக்தியை நான் மாத்துவேன்” என்றாள் உறுதியாக. 

நிலா, “சரி அப்புறம் ஏன் இப்போ இந்த நேரத்துல இங்க வந்த. நீ சந்தோஷமா தானே இருக்க” என்றாள். 

சுஜிதா, “அது வந்து தினமும் சக்தி குடிச்சிட்டு தான் வீட்டுக்கு வராங்க. இன்னைக்கு காலையில் நீ வந்ததுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரண்ட்ஷிப் ஸ்டார்ட் ஆச்சு”. 

“அதனால் இன்னைக்கு குடிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கும் குடிச்சிட்டு தான் வந்து இருக்காங்க. அவங்க என்கிட்ட இன்னும் ஃப்ரீயா பேச கூட மாட்டேங்கறாங்க”. 

“அதை நினைச்சால் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எப்ப பாத்தாலும் அக்கா அக்கானு உன் சித்தி பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காங்க”. 

“உன் சித்தி சொல்ற வேலையை செஞ்சு கிட்டு அப்படியே நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டு இருக்காங்க. ஒரு பொறுப்பே இல்லாம இருக்காங்க”. 

“என்கிட்ட பேசினால் தானே என்னுடைய காதல் அவங்களுக்கு புறியும்” என்று வருத்தப்பட்டாள்.

நிலா, “சரி கவலைப்படாதே சக்தி மாமா கண்டிப்பா மாறுவாரு” என்றாள் ஆறுதலாக. 

பிறகு இருவரும் தூங்குவதற்காக சென்று விட்டார்கள். காலையில் நிலா கையில் சுட சுட பில்டர் காபியுடன் விக்ரமை எழுப்பிக் கொண்டிருந்தாள். 

விக்ரம் கண்களை திறந்தவன் கனவில் மட்டும் நல்லா தான் சிரிச்சு காபி எடுத்துகிட்டு வந்து கொடுக்குற. 

அதுவே நான் கண் முழிச்சிட்டா அப்படியே எதிர்மாறாக என்னை பாத்து முறைச்சுக்கிட்டே இருக்க என்று உளறிக் கொண்டிருந்தான். 

விக்ரம் முகத்தருகே நிலா சொடக்கிட்டு, “இது நிஜம் தான். நான் தான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வந்திருக்கேன்” என்றாள் சிரித்த முகமாக. 

விக்ரம் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தவன், “என்ன திடீர்னு நீ காபி எடுத்துட்டு வந்து என்னை எழுப்பி விட்ற”. 

“அதுவும் நைட்டு தான் என் கிட்ட சண்டை போட்டுட்டு போன. இப்போ இப்படி பண்ணிக்கிட்டு இருக்க நம்பவே முடியலையே” என்று அவளை குறுகுறு என பார்த்தான்.

நிலா சிரித்த முகமாக, “காபி ஆறுது சீக்கிரம் எடுத்து குடிங்க” என்றாள். 

விக்ரம், “இது போல் நீ எனக்கு காபி கொடுத்து எழுப்பி விடனும் என்று எனக்கு ரொம்ப நாள் கனவு தெரியுமா” என்று கூறிக்கொண்டு காபியை பருகினான். 

நிலா அவன் குடித்து முடிக்கும் வரை அவனைப் பார்த்து பல்லை காட்டிக் கொண்டே இருந்தாள்.

விக்ரம் சந்தோஷமாக அவனும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். பிறகு விக்ரம் குடித்து முடித்த பின் நிலா, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்றாள். 

விக்ரம் அவளை முறைத்துக் கொண்டு, “ஹெல்ப்பா? அதுக்காக தான் இப்போ எனக்கு காபி எடுத்துட்டு வந்தியா” என்றான். 

நிலா லேசாக சிரித்தபடி ஆமா என்று தலையை அசைத்தால். விக்ரம், “என்னன்னு சொல்லு அப்புறம் அதை செய்ய முடியுமா முடியாதா என்று நான் சொல்றேன்” என்றான். 

நிலா, “அது வந்து சுஜியும், மாமாவும் கல்யாணம் பண்ணிக் கிட்டாங்க இல்ல. அவங்க லைஃப்ல கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. அவங்க ரெண்டு பேரையும் தனியா எங்கேயாவது அனுப்பி வைக்கணும்”. 

“அப்போ தான் அவங்களுக்குள்ள எல்லாமே செட் ஆகும். இங்க இருந்தா சக்தி மாமா சித்தி பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காரு”. 

“அதனால் சுஜி கிட்ட சரியா பேச கூட மாட்டேங்குறாரு. சுஜி ரொம்ப கவலை படுறா” என்றாள்.

விக்ரம் தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்தவன், “தனியாக அனுப்பனும்னா எங்க அனுப்பலாம் காட்டுக்கு அனுப்பி வைப்போமா” என்றான். 

நிலா அவனை பார்த்து முறைத்து கொண்டு, “இல்ல ஹனிமூன் அனுப்பி வைக்கணும்” என்றாள். 

விக்ரம் மனதுக்குள் சூப்பர் ஐடியா சுஜிதாவை சொல்லி பேசாமல் நம்பளும் ஹனிமுனுக்கு கிலம்பிட வேண்டியது தான. 

தனியா நான் கூப்பிட்டா கண்டிப்பா இவ வரவே மாட்டா என்று யோசித்து ஒரு முடிவு செய்தான்.

விக்ரம், “அவங்கள அனுப்பலாம் ஆனால் நம்ப அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னால் சக்தி எங்கேயுமே போக மாட்டான்”. 

“சோ உன் சித்தியை விட்டு சொல்ல வைக்கனும் ஹனிமூனுக்கு போக சொல்லி. அதுக்கு கொஞ்சம் செலவாகுமே” என்றான்.

நிலா, “கணக்குல வச்சிக்கோங்க நா அப்புறம் தர்றேன்” என்றாள். 

விக்ரம், “ஐய உன்கிட்ட காசு யாரு கேட்டா. நான் உனக்காக உன் பிரண்டை ஹனிமூனுக்கு அனுப்புனா நீ எனக்காக ஒன்னு பண்ணனும் உனக்கு சரினா சொல்லு உன் சித்தி கிட்ட நான் பேசுறேன்” என்றான்.

நிலா, தயங்கியபடி நான் என்ன பண்ணனும்?” என்றாாள். விக்ரம், “உனக்கு சரின்னு சொல்லு உன் சித்தி கிட்ட நான் பேசுறேன்” என்றான் மறுபடியும். 

நிலா வேறு வழி இன்றி, “சரி ஆனால் ஒரு விஷயம் மட்டும் தான் உங்களுக்காக நான் பண்ணுவேன்” என்று ஒப்புக் கொண்டால். 

விக்ரம் குதுகலமாக ஜெயலட்சுமியை காண சென்று விட்டான். 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இங்க நிலா பிரச்சனை … அங்க சக்தி பிரச்சனை … ரெண்டு பேரும் எப்போ ஒண்ணு சேருவாங்களோ …

    இதான் சாக்குன்னு விக்ரம் ஹனிமூன் கிளம்பிட்டான் … ஜாலி தான் …