Loading

அத்தியாயம் 24

சக்தி அதிர்ச்சியாக, “அக்கா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க. இப்போ எதுக்கு இவளை நீ அடிக்க போற” என்றான். 

ஜெயலட்சுமி, “என்னடா புது பொண்டாட்டிக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துட்டியா?”. 

“உன்னை தூக்கி வளர்த்த என்னையவே கேள்வி கேட்கிற, என் கையவே பிடிக்கிற உன் பொண்டாட்டியை நான் அடிக்க கூடாதா? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா” என்றாள்.

சக்தி, “அக்கா நான் அப்படி சொல்ல வரலை. நீ எதுக்கு இப்போ அவளை அடிக்க போற? அவ பாவம் தானே” என்றான். 

ஜெயலட்சுமி கோபமாக, “அவ என்னையே எதிர்த்து பேசுறா அவளை என்ன சும்மா விட்டு வைக்க சொல்றியா?” என்றாள். 

சக்தி, “சரி அக்கா நீ கோபப்படாதே” என்றவன் சுஜிதாவை திரும்பி பார்த்து “நீ அக்கா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உள்ள போ” என்றான்.

சுஜிதா கைகட்டிய படி, “நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? நான் எதுவும் தப்பு பண்ணலையே” என்றாள். 

சக்தி, “ஒரு மன்னிப்பு தானே அதுல உனக்கு என்ன வந்திடபோகுது கேட்டுட்டு போயேன்” என்றான்.

சுஜிதா, “தப்பு பண்ணாம என்னால் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க முடியாது” என்று உள்ளே சென்று விட்டாள். 

சக்தி, “அக்கா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த பிரச்சனையை இதோட விடு” என்று அவனும் சென்று விட்டான்.

ஜெயலட்சுமி சொடக்கிட்டு சக்தியை கூப்பிட்டாள், “இது வரைக்கும் நிலாவை நான் பல முறை அடித்து இருக்கிறேன்”. 

“ஆனால், அப்போ எல்லாம் நீ எதுவும் கேட்டது கிடையாது. இப்போ என்ன பொண்டாட்டி மேல் பாசம் வந்துடுச்சா?” என்றாள். 

சக்தி, “அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று சென்று விட்டான். ஜெயலட்சுமி கோபமாக, “இவளுக்கு முதலில் ஒரு முடிவு கட்டனும்” என்று முணுமுணுத்தாள். 

சுஜிதா அவள் அறைக்கு சென்று கட்டிலில் முட்டி கட்டிய படி அமர்ந்து இருந்தாள். 

அங்கு வந்த சக்தி, “இன்னைக்கு உன்னை அடிக்க விடாமல் அக்கா கிட்ட இருந்து காப்பாத்திட்டேன்”. 

“ஆனா இன்னொரு வாட்டி அக்காவை எதிர்த்து இப்படி எல்லாம் பேசாத அது நல்லதுக்கு இல்லை” என்றான்.

சுஜிதா இருந்த கோபத்தில், “நீ அப்படியே ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காத. உன் அக்கா என்னை அடிக்க வந்தாங்க நீ வந்து தடுத்த அது எல்லாம் சரி தான்”. 

“ஆனால், என்னை எதுக்கு மன்னிப்பு கேட்க சொன்ன. அங்க என்ன நடந்துச்சு என்று உனக்கு தெரியுமா? இல்லைன்னா நீ தான் அதைக் விசாரிச்சுயா?”. 

“எல்லாத்தையும் கேட்டுட்டு என் மேல் தப்பு இருக்குன்னு நீ சொல்லி இருந்தா கூட நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். ஆனா நீ என்ன பண்ண?” என்றாள் சரவெடியாக. 

சக்தி, “அது வந்து என்ன இருந்தாலும் அக்கா பெரியவங்க தானே தப்பு யார் மேல் இருந்தால் என்ன. ஒரு சின்ன மன்னிப்பு அதுல என்ன வந்துட போகுது உனக்கு. நிலா இது வரைக்கும் அக்காவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது” என்றான்.

சுஜிதா, “அதனால் தான் உங்க அக்கா அவ தலையில் ஏறி மிளகாய் அரைச்சுகிட்டு இருந்தாங்க” என்றாள். 

சக்தி, “ஏய்” என்று கோபமாக தன் ஒற்றை விரலை நீட்டி, “போதும் நிறுத்து இதுக்கு மேல் பேசிகிட்டு இருக்காத அப்புறம் நடக்கிறதே வேற” என்று அங்கிருந்து சென்று விட்டான்.

சுஜிதாவுற்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அவள் மனதில் இருக்கும் அனைத்தையும் அந்த டைரியில் எழுதி வைப்பாள். 

அது போல் இன்றும் நடந்ததை எழுதிக் கொண்டு இருந்தாள். என்ன தான் ஜெயலட்சுமியை தைரியமாக எதிர்த்து பேசினாலும் அவளுக்குள்ளும் சிறு அச்சம் உண்டு. 

சுஜிதா மனதுக்குள் எனக்காக நீ உன் அக்காவை எதிர்த்து நின்றதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு. 

ஆனா நீ நேத்து ஃபங்ஷனில் நிலாவுக்காக என்கிட்ட அன்பா நடந்துக்கிட்ட மாதிரி நடிச்சதை நினைக்கும் போது தான் ரொம்ப எரிச்சலாக இருக்கு. 

ஆனா கண்டிப்பா நீ ஒரு நாள் எனக்காக மாறுவ. நிலா மேல் உனக்கு இருக்கிறது காதலே இல்லை என்று நான் உனக்கு புறிய வைப்பேன்.

இப்போ எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு. எப்போ நீ எனக்காக உன் அக்காவை எதிர்த்தியோ அப்போவே நீ மாற ஆரம்பிச்சிட்ட என்று நினைத்து கொண்டாள்.

நிலா எப்பொழுதும் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்தாள். அந்த கம்பெனி மேனேஜர் நிலாவை அழைத்தார். 

நிலா, “என்ன சார்?” என்றாள். அந்த மேனேஜர், “உங்கள வேற கம்பெனிக்கு ஷிப்ட் பண்ணி இருக்கேன்” என்றார். 

நிலா, “ஏன் சார்? திடீர்னு” என்றாள். அந்த மேனேஜர், “அது எங்களோட பர்சனல் நீங்க இப்போ ஸ்டார் பில்டர்ஸ் கம்பெனிக்கு போனால் போதும்” என்றான். 

நிலா, “சார் நம்ப கம்பெனிக்கும் அந்த கம்பெனிக்கும் சம்பந்தமே இல்லையே சார் அங்க போய் நான் என்ன ஒர்க் பண்றது” என்றாள். 

அந்த மேனேஜர், “நீங்க அந்த கம்பெனிக்கு போனால் போதும். நீங்க என்ன ஒர்க் பண்ணனும் என்று அந்த கம்பெனி மேனேஜர் சுந்தர் சொல்லுவாங்க” என்றான்.

நிலா வேறு வழியின்றி அங்கு சென்றாள். ரிசப்ஷனுக்கு சென்று, “மேனேஜர் சுந்தரை பார்க்கணும்” என்றாள் . 

அந்த ரிசப்ஷன் ஈஸ்ட் சுந்தருக்கு போன் செய்து கேட்டுக் கொண்டு, “நேரா உள்ளே போங்க மேடம்” என்று மூன்று மஞ்சள் ரோஸ் வைத்தது போல் ஓர் பொக்கே வை கையில் கொடுத்தாள். 

நிலா, “ஐயையோ என்னை யாரோ என்று நினைச்சு பொக்கே கொடுக்குறீங்க” என்றாள். 

அந்த ரிசப்ஷன் ஈஸ்ட், “இல்ல மேடம் சுந்தர் சார் உங்ககிட்ட இத கொடுக்க சொன்னார்” என்றாள். 

நிலா ஒன்றும் புரியாமல் அந்த பொக்கேவை கையில் வாங்கிக் கொண்டு. இந்த சுந்தர் சார் யாருனே நமக்கு தெரியலையே. 

எதுக்கு நம்ம கிட்ட இதை தர சொல்லணும். ஒரு வேளை இது இந்த கம்பெனியோட வழக்கமாக இருக்குமோ. 

எதுவாக இருந்தால் என்ன எனக்கு பிடிச்ச எல்லோ ரோஸ் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு. 

அப்போ இந்த கம்பெனியில் எல்லாமே எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கும் நினைக்கிறேன் என்று யோசித்துக் கொண்டே சுந்தரை காண உள்ளே சென்றாள் .

நிலா மேனேஜர் கேபின் முன்னால் நின்று டக் டக் என்று கதவை தட்டினாள். சுந்தர், “எஸ் கம்மிங்” என்றார். 

நிலா மெதுவாக உள்ளே சென்று, “குட் மார்னிங் சார்” என்றாள். சுந்தர் நிமிர்ந்து அவளை பார்த்து லேசாக தலை அசைத்தான். 

நிலா, “அவள் ரெஸ்யூமை சுந்தரத்திடம் நீட்டி என்ன இந்த கம்பெனிக்கு ஷிப்ட் பண்ணி இருக்காங்க சார்” என்றாள். சுந்தர் அதற்க்கும் ம்ம்ம் என்று தலை அசைத்தான். 

நிலா யோசனையாக அவன் முகத்தை உற்றுப் பார்த்து, “சார் நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே” என்றாள்.

சுந்தர் இல்லை என்று தலை அசைத்தான். நிலா, “உங்களை நான் அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கு. நான் நிறைய இடத்தில் உங்களை பார்த்து இருக்கிறேன்”.

“நீங்க எல்லா இடத்திலும் என்னை பார்த்துட்டே தான் இருந்தீங்க. ஐ திங்க் நீங்க என்னை ஃபாலோ பண்ணி இருக்கீங்க” என்றாள். 

சுந்தர் அதற்கும் ம்ம்ம் என்று தலையசைத்தான்.

நிலா கோபமாக, “எவ்வளவு திமிர் இருந்தா என்னை ஃபாலோ பண்ணி இருப்பீங்க. இப்போ என்னை உங்க கம்பெனிக்கே வர வச்சிருக்கீங்களா” என்று சரமாரியாக கத்த ஆரம்பித்து விட்டாள். 

சுந்தர், “வெயிட் வெயிட் வெயிட் நான் உன்னை ஃபாலோ பண்ணதுக்கும், நீ இந்த கம்பெனிக்கு வந்ததுக்கும் எல்லாத்துக்கும் காரணம் நான் இல்லை என்னோட எம் டி”. 

“நீ போய் எம் டி மீட் பண்ணு உனக்கு என்ன ஜாப் என்று அவர் சொல்லுவார்” என்றான். 

நிலா, “நான் இந்த கம்பெனியில் வேலை செய்வேன் என்று வேற உனக்கு நினைப்பா. இன்னைக்கு இருக்கு உன்னுடைய எம் டி க்கு” என்று கோபமாக எம் டி ரூம்பை நோக்கி சென்றாள். 

அவள் பாட்டுக்கு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். விக்ரம் ஒய்யாரமாக நாற்காலியில் சாய்ந்த படி தலையின் பின்புறம் கைகட்டிய படி கால் மேல் கால் இட்டு வாயில் விசில் ஊதியபடி இருந்தான். 

நிலா கோவமாக உள்ளே சென்றவள். அவனைப் பார்த்தவுடன், “நீயா” என்று அதிர்ச்சியாகி போனாள். 

விக்ரம் கண்களை திறந்து அவளைப் பார்த்தவன் யாரோ போல், “ஒரு ஸ்டாப் எம் டி யை பார்க்க வரும் போது கதவை தட்டிட்டு வரணும் என்ற மேனர்ஸ் கூட உங்களுக்கு தெரியாதா” என்றான்.

நிலா கோபமாக, “உங்களுக்கு ரொம்ப மேனஸ் இருக்கா? எனக்கே தெரியாம என்னை நீங்க ஃபாலோ பண்ணி இருக்கீங்க. இது தான் உங்க மேனசா” என்றாள்.

விக்ரம் கூலாக, “உனக்கு தெரியாமல் பண்ணா தான் அது பெயர் ஃபாலோ. யாராச்சும் சொல்லிட்டு ஃபாலோ பண்ணுவாங்களா” என்று சிரித்தான். 

நிலா அவனை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள். விக்ரம் அவள் முகத்து அருகில் சென்று, “ஒரு எம் டி யை பார்த்து இப்படி எல்லாம் சைட் அடிக்க கூடாது” என்றான். 

நிலா அவனைப் பார்த்து பல்லை கடித்த படி, “யார் யாருக்கு எம் டி. நான் இந்த கம்பெனியில் வேலை பார்த்தால் தான் நீங்க எனக்கு எம் டி ஆக முடியும்”. 

“இது உங்க கம்பெனி என்று தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் இங்கே ஒரு நிமிஷம் கூட வேலை செய்ய மாட்டேன்”. 

“எனக்கு வேலையும் தேவையில்லை ஒன்னும் தேவையில்லை” என்று அங்கிருந்து செல்ல முன் வந்தாள்.

விக்ரம் கை தட்டினான். அந்த சத்தத்தில் நிலா நின்று திரும்பி பார்த்தாள். 

விக்ரம், “என்ன மேடம் காலையில் என்னமோ நீங்களே சம்பாதிச்சு உங்க செலவை பாத்துக்க போறேன்னு சொன்னீங்க”. 

“இப்போ வேலையே வேண்டாம் என்று போறீங்க. அப்புறம் எப்படி உங்க செலவை எல்லாம் நீங்க பார்த்துப்பீங்க” என்றான் அவளை ஏற்றி விடுவதாக என்னி.

நிலா, “இந்த உலகத்திலே நீங்க மட்டும் கம்பெனி வச்சி இல்ல. இன்னும் நிறைய கம்பெனி இருக்கு. நான் வேற கம்பெனிக்கு சென்று வேலை பார்த்துக்கிறேன்” என்றாள். 

விக்ரம், “ஒரு நிமிஷம் இந்த கம்பெனியை தவிர உங்களுக்கு வேறு எங்கேயும் வேலை கிடைக்காது”.

“நீங்க அப்படியே வேலை கிடைச்சு போனாலும் அந்த கம்பெனியில் இருந்தும் இங்க தான் உங்களை ஷிப்ட் பண்ணி விடுவாங்க இப்போ வந்தீங்களே அதுபோல்” என்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வீட்ல உன் டார்ச்சர் போதாதுனு ஆபீஸ்ல டார்ச்சரா விக்ரம் 🤣🤣🤣🤣 ரெண்டு ஜோடிகளும் நல்லா முட்டிக்கிறாங்க