
பாகம் – 23
விக்ரமை பார்த்து நிலா, “நான் சின்ன வயசில் தனிமையாக உணரும் நேரத்தில் தான் துருவ் எனக்கு நண்பனாக கிடைத்தான்”.
“என்னோட அம்மா என்னை விட்டு போன நேரத்தில் நான் உடைந்து இருக்கும் தருணத்தில் துருவ் எனக்கு ஆதரவாக இருந்தான்”.
“அவன் என் வாழ்க்கையில் இல்லை என்றால் இந்த நிமிஷம் நான் இருந்து இருப்பேனா என்று எனக்கே தெரியலை. அந்த அளவுக்கு என் வாழ்க்கையை நான் வெறுத்து இருந்தேன்”.
“ஆனால், எனக்காக துருவ் வருவேன்னு சொல்லி இருக்கான். அந்த ஒரு வார்த்தைக்காக தான் நான் உயிரோடவே இருக்கேன்”.
“எனக்கு நம்பிக்கை இருக்கு எனக்காக ஒருநாள் துருவ் வருவான் கண்டிப்பா வருவான். ஆனா நீ என்னோட சம்மதம் கூட கேட்காமல் எதுக்காக இப்படி என் வாழ்க்கையை வீணாக்கன”.
“இப்போ என்னோட துருவ் வந்து என்னை இந்த கோலத்தில் பார்த்தால் அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்” என்று அழுது கொண்டிருந்தாள்.
விக்ரம் அவள் தோள்பட்டையில் கை வைத்து, “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு” என்றான்.
நிலா கோவமாக திரும்பியவள் மறுபடியும் பளார் என்று விக்ரம் கன்னத்தை பதம் பார்த்து விட்டாள்.
நிலா, “இன்னொரு வாட்டி என்னை தொட்டு பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதிங்க என் வாழ்க்கையில் உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று ஒற்றை விரலை காட்டி மிரட்டுவது போல் கூறிவிட்டு சோஃபாவில் அழுது கொண்டே படுத்துக் கொண்டாள்.
விக்ரம் மனதுக்குள் நிலா அடித்ததை கூட சந்தோஷமாக நினைத்து கன்னத்தை தடவிக் கொண்டே பால்கனியில் போய் நின்று கொண்டான்.
விக்ரம் மனதுக்குள் அடிப்பாவி என் மேல் இவ்வளவு காதல் வச்சிருக்கியா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு தெரியும் நீ என்னை மறந்து இருக்க மாட்டனு.
ஆனா எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருந்துச்சு.
ஆனா இப்போ ஐயோ வானத்தில் பறக்கிறது போல் இருக்கு என்று நின்ற இடத்திலே ஒரு சுற்று சுற்றி தலையை கோதியபடி கண்கள் கலங்க சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.
இரவு முழுக்க தூங்காமல் நிலா அருகில் ஒர் நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்த படி அவளை ரசித்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
அப்படியே அந்த நாற்காலியிலே உறங்கியும் போனான். நிலா காலையில் லேசாக கண்களை திறந்தவள் விக்ரம் முகத்தை நெருக்கமாக பார்த்தவுடன் பதறிப் போனாள்.
இவன் ஏன் இப்படி என் பக்கத்தில் உட்கார்ந்து தூங்குகிறான் என்று கோபமாக அடைந்தவன்.
இவனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை போல நைட்டு அவ்வளவு தூரம் திட்டுனேன் என் மனசுல இன்னொருத்தன் இருக்கான்னு சொன்னேன்.
ஆனாலும் இப்படி என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கான். இவன் எல்லாம் என்ன ஜென்மம் என்று திட்டி முறைத்து விட்டு அவள் குளிக்க சென்று விட்டாள்.
குளித்து முடித்து வந்தவள் கண்ணாடியை பார்த்து தலையை துவற்றிக் கொண்டு இருந்தாள். அவள் கூந்தலின் ஈரம் சாரலை போல் விக்ரம் முகத்தை நினைத்தது.
அதில் தூக்கம் கலைந்து லேசாக கண்களை திறந்தவன் நிலா நிற்பதை பார்த்து தூங்குவது போலவே நடித்துக் கொண்டே நிலாவை ரசிக்க ஆரம்பித்தான்.
நிலா மெதுவாக கூந்தலை உதறிவிட்டு பொட்டு வைத்து ஹேர் டிரையர் எல்லாம் போட்டு தலைவாரி விட்டு கீழே சென்றாள்.
விக்ரம் அவள் சென்ற பின் எழுந்து திமிர் விட்டபடி இந்த அளவுக்கு சந்தோஷமா என்னைக்குமே நான் கண் முழிச்சதே கிடையாது தேங்க் யூ டார்லிங் என்று அவளுக்கு காற்றிலே முத்தம் கொடுப்பது போல் சைகை செய்தான்.
நிலா கீழே சென்று பார்க்கும் பொழுது ராஜலட்சுமி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள்.
நிலா சென்று, “நான் பன்றேன் அத்தை நீங்க போய் உட்காருங்க” என்றாள்.
ராஜலட்சுமி, “அதெல்லாம் பரவாயில்லை இருக்கட்டும் மா. நீ சும்மா இரு நான் பார்த்துக்கிறேன் எல்லாத்தையும்” என்றாள்.
நிலா, “இல்ல பரவாயில்லை இதெல்லாம் எனக்கு பழக்கப்பட்ட வேலை தான் நான் நல்லா செய்வேன் எல்லாமே” என்றாள்.
ராஜலட்சுமி, “அப்படியா சரி நீ ஸ்வீட் மட்டும் பண்ணு மா” என்றார். பிறகு தயங்கியபடியே ராஜலட்சுமி, “சரி நேத்து சந்தோஷமா இருந்தீங்களா? ரெண்டு பேரும்” என்றாள் நாசுக்காக.
நிலா மனதுக்குள், “அதான் என் சந்தோஷமே போயிடுச்சே. இதுக்கு அப்புறம் நான் எங்க இருந்து சந்தோஷமா இருக்கிறது” என்று எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
ராஜலட்சுமி, “என்னம்மா அமைதியாவே இருக்க சந்தோஷமா இருந்தீங்க தானே இல்ல ஏதாவது பிரச்சனையா” என்றாள் படபடப்பாக.
அங்கு வந்த விக்ரம் வாசலில் நின்று ஒற்றை கையை சுவற்றில் வைத்த படி, “ஒரு பிரச்சனையும் இல்லை நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்” என்றான்.
நிலா அவனை கண்டுக் கொல்லாமல் தன் வேலையை பார்த்தாள். விக்ரம் அவளைப் பார்த்து கொண்டே இன்னைக்கு என்ன டிபன் என்றான்.
ராஜலட்சுமி, “எல்லாமே உனக்கு பிடிச்சது மட்டும் தான் டா” என்றார். ராஜலட்சுமி கண் கலங்கியபடி விக்ரம் கன்னத்தில் கை வைத்து, “நீ இதுபோல் சிரிச்சு பேசி எவ்ளோ நாளாச்சு டா கண்ணா” என்றாள்.
விக்ரம் அதற்கு எந்த பதிலும் கூறாமல், “நான் நிலா என்ன பண்றான்னு பார்க்க தான் வந்தேன்” என்று அதற்கு மேல் அங்கு நிற்காமல் டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்து கொண்டான்.
நிலா மனதுக்குள் பாரு எப்படி முரடனை போல் நடந்து கொள்கிறான். பெத்தவங்க கிட்ட கூட ஒழுங்கா பேச மாட்டுக்குறான். பாவம் இவங்க முகமே வாடிப் போச்சு என்று நினைத்துக் கொண்டேள்.
ராஜலட்சுமி நிலா அறியாத வண்ணம் கண்களை துடைத்துக் கொண்டு, “வா மா நிலா சாப்பாடு பரிமாறலாம்” என்று சென்று நிலாவை பரிமாறு மாரு கூறினார்.
நிலா அங்கு அமர்ந்திருந்த ராஜேந்திரன், மித்ரா, ஆதித்யா, ராதிகா என அனைவருக்கும் பரிமாறிக் கொண்டே வந்தாள்.
விக்ரமிடம் வந்தவுடன், “இவனுக்கு நான் பரிமாறணுமா” என்று அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
விக்ரம் நிலாவை பார்த்து சிரித்துக் கொண்டே கண்களால் சைகை செய்தான் சாப்பாட்டை பரிமாறு என்று. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அதை கவனித்த ஆதித்யா, “என்ன அண்ணி காலையிலேயே ரொமான்ஸா சீக்கிரமா அவன் தட்டில் சாப்பாட்டை வையுங்க இல்லனா அவன் இப்படித்தான் உங்கள பாத்துகிட்டே இருப்பான்”.
“டேய் அண்ணா இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகாது டா. இதெல்லாம் நீங்க ரூமுக்குள்ளேயே வச்சுக்கோங்க” என்று கிண்டல் செய்தான்.
பிறகு நிலா அவனுக்கு சாப்பாட்டை பரிமாறிவிட்டு தூரம் சென்று நின்று கொண்டாள்.
விக்ரம், நிலாவை வெறுப்பேற்ற எண்ணி அனைவர் முன்பும், “நிலா எனக்கு கொஞ்சம் சாம்பார் உற்று” என்றான்.
நிலா அப்படியே நின்று இருந்தாள். ராதிகா, “அடியேய் உன்ன தானே கூப்பிடுறான் காது கேட்கலையா வந்து பரிமாறு வா“ என்றார் அதட்டலாக.
நிலா வேறு வழி இன்றி அவனை முறைத்தபடி பரிமாறினாள். விக்ரம், சிறிது நேரம் கழித்து “நிலா எனக்கு இட்லி எடுத்து வை” என்றான்.
அனைவரும் விக்ரமையும் நிலாவையும் ஒருசேர பார்த்தார்கள். நிலா அனைவரையும் பார்த்து சிரித்த முகமாகவே அதையும் செய்தாள்.
விக்ரம் மறுபடியும், “நிலா எனக்கு” என்று ஆரம்பிக்கும் போதே நிலா யாரும் அறியாத வண்ணம் அவன் இடுப்பில் போக் ஸ்பூனை வைத்து விட்டாள்.
நிலா மெதுவான குரலில், “இப்போ மட்டும் நீங்க எழுந்து போகல இதை வச்சு ஒரே சொருகா சொறிகிடுவேன்” என்று மிரட்டும் தோணியில் கூறினாள்.
விக்ரம் கண்களை அகல விரித்து அவளை பார்த்து, “நோ நோ நோ” என்று அங்கிருந்து ஓடியே விட்டான்.
இதை எல்லாம் பார்த்த மித்ரா இவர்கள் ஏதோ ரொமான்ஸ் பண்ணுவதாக நினைத்து கீழே குனிந்தபடி சிரித்துக் கொண்டு இருந்தால். அனைவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.
பிறகு விக்ரம் ஆஃபீஸ்க்கு செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான். நிலா அவள் அறைக்கு சென்றவள் விக்ரமை துளி அளவும் சட்டை பண்ணாமல் அவளும் தயாராகிக் கொண்டிருந்தாள்.
விக்ரம், “நீ எங்க போற?” என்றான். நிலா, “நான் ஆபீஸ்க்கு போறேன் வீட்ல எவ்வளவு நாளைக்கு நான் சும்மாவே இருக்கிறது என் செலவுக்கு நான் சம்பாதிக்கணும் இல்ல” என்றாள்.
விக்ரம், “உனக்கு தேவையான எல்லாத்தையும் தான் நானே பண்ணி தரேனே. இதுக்கு மேல உனக்கு என்ன தேவை இருக்கு. உனக்கு எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் செஞ்சு தரேன்” என்றான்.
நிலா, “என்ன உங்க காசு பணத்தை காமிச்சு என்னை மயக்கிடலாம் நினைச்சுகிட்டு இருக்கீங்களா. அதுக்கெல்லாம் மயங்கர ஆள் நான் கிடையாது”.
“நீங்க கோடீஸ்வரனாவே இருந்தாலும் என் மனசுல துருவ்வை தாண்டி உங்களால் நுழையவே முடியாது” என்று அங்கிருந்து வாசலை நோக்கி நகர்ந்தாள்.
விக்ரம் கோபமாக, “நீ எங்கேயும் போகத் தேவையில்லை வீட்டிலேயே இரு” என்றான்.
நிலா வாசலில் நின்று திரும்பிப் பார்த்து, “அதெல்லாம் முடியாது உங்க கோபத்துக்கு எல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது” என்றாள்.
விக்ரம், “அப்படின்னா நான் ஒரு கம்பெனி சொல்கிறேன் அங்கு போய் வேலை பாரு வேற எந்த கம்பேனிக்கும் நீ போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்றான்.
நிலா, “உங்ககிட்ட நான் ஒன்னும் பர்மிஷன் கேட்கலையே” என்று அங்கிருந்து சரசரவென சென்று விட்டாள்.
சக்தி அன்று இரவு போதையிலே உறங்கி விட்டான். சுஜிதா வெளியே சென்று அனைத்தையும் நினைத்து அழுது கொண்டு இருந்தாள். அப்படியே விடிந்தும் போனது.
சுஜிதா வழக்கம் போல் எழுந்து குளித்து தயாராகி வேலை தேட சென்று விட்டாள். சக்தி மெதுவாக எழுந்தவன் அவனும் தன் நண்பர்களை காண சென்று விட்டான்.
மாலை நேரம் சுஜிதா வீட்டிற்குள் நுழையும் போதே ஜெயலட்சுமி கோபமாக, “எங்க போய் ஊர் சுத்திட்டு வர? அதுவும் யார்கிட்டயும் சொல்லாமலே” என்றாள்.
சுஜிதா, “நான் ஒன்றும் ஊர் சுத்த போக வில்லை. வேலை தேடி தான் போனேன். ஏற்கனவே நான் பெங்களூரில் வேலை பார்த்துகிட்டு இருந்தேன்”.
“ஆனா இப்போ பெங்களூர் போக முடியாத காரணத்தால் இங்கேயே வேலை தேடிக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
ஜெயலட்சுமி, “நீ ஒன்னும் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். வீட்டு வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என்றாள்.
சுஜிதா திமிராக, “வீட்டு வேலையை மட்டுமே பார்க்கத்தான் ஆள் வச்சிருக்கீங்களே. அப்புறம் எதுக்கு நான் போய் பாக்கணும்” என்றாள்.
ஜெயலட்சுமி, “அப்புறம் எதுக்கு டி என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த” என்றாள்.
நிலா அவளுக்கு சரிக்கு சரியாக, “நான் ஒன்னும் உங்க தம்பியை எனக்கு தாலி கட்ட சொல்லி கேட்கலை. அவரு விருப்பப்பட்டு தான் என் கழுத்தில் தாலியை கட்டினார்”.
“நீங்க போய் இந்த கேள்வியை உங்க தம்பியை பாத்து கேளுங்க நான் ஒன்னும் நிலா கிடையாது நீங்க சொல்ற எல்லாத்துக்கும் அடங்கி போறதுக்கு” என்றாள்.
ஜெயலட்சுமி, “ஏய் என்னையவே எதிர்த்து பேசுறியா நீ” என்று கைகளை ஓங்கிக் கொண்டு சென்றாள்.
அப்போது தான் உள்ளே நுழைந்த சக்தி, “அக்கா” என்று குரல் கொடுத்தபடியே சுஜிதா கன்னத்தில் கைப்படும் முன்னே ஜெயலட்சுமி கையை பிடித்திருந்தான். இதுவே முதல் முறை சக்தி இவ்வாறு நடந்து கொள்வது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன அக்காவை தடுத்துட்டு இவன் அடிக்க போறானா … உனக்கு அவ்வளவு நல்ல சீன் இல்ல சக்தி … துருவ் எப்போ சொல்லி நிலா எப்போ லவ் பண்ணி 🤔