Loading

அத்தியாயம் 22

 

வெறும் 48 கிலோ எடையுடைய பூஞ்சை தேகம் கொண்டவள் 90 கிலோ எடையுடைய அவனை எவ்வாறு தாங்குவாள்.

 

அவன் விழுந்த வேகத்திற்கு உடல் வலிக்க, “அம்மா” என்று அவள் கத்திய வார்த்தையை வெளியே வராமல் முத்தத்தால் அடைத்து இருந்தான் அவள் இதழ்களை.

 

“ம்ம்.. ம்ம்ம்.. ஹூம் நா… விடு..மு.. ம்ஹும்…”அவளது முனகல்கள். அவனை கட்டுப்படுத்த முயன்றாள். அவனிடம் அத்தனை ஆக்ரோஷம், அத்தனை வேகம், அத்தனை அழுத்தம்.

 

“மனித இரத்தம் இல்லாமல் காய்ந்து கிடந்த வேம்பையருக்கு கண்ணில் பட்ட இரத்தத்தை உறிஞ்சி குடிக்க அத்தனை வெறிவருமே, அந்த வெறி அபஜித்திடம் இருந்தது.

 

கண்களை இறுக மூடி, நெற்றியை சுருக்கி, கைகளினால் அவன் தோளில் அழுத்தத்தை கொடுத்து, தன் வலியை பொறுத்துக் கொண்டாள் பூம்பாவை.

 

மேலும் மேலும் ஆழ்ந்து வன்முத்தம் வழங்கிக் கொண்டிருந்தவன், அவள் இதழிலிருந்து குருதியின் சுவை தென்பட்ட பின்னர் தான் “ச்ப்” என்ற சத்தத்துடன் அவள் இதழிலிருந்து தன் அதரங்களை பிரித்துக் கொண்டான்.

 

அவளது சுருங்கி, மூடி இருந்த இமைகள் சற்று தளர்ந்து மெதுவாக விழிகளை திறந்து அவனை பார்க்க, “பரவாயில்ல எல்லா விதத்துலயும் என்ன தாங்குவ போல…” என்று அவன் சொல்ல

 

ஓங்கி விட்டாள் ஒரு அறை. சத்தம் அவன் காதில் (கொய்ங்) என்று விழுந்தது. “ஸ்ஆ..” என்று கன்னத்தை ஒற்றை விரலால் வருடியவன், கன்னக்குழிகுள் சதைகளை உள் இழுத்து, இதழை குவித்து அவளை பார்த்தவன், அவளிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.

 

அவளும் ஒருவாறு விலகி இருந்த உடையை சரி செய்துவிட்டு, கஷ்டப்பட்டு காலை மடித்து எழுந்து அமர்ந்தாள்.

 

அவள் முகத்தைப் உற்றுப் பார்த்து “சரி சொல்லு.. ஏன் இப்டி பண்ண?…” என்று கேட்க அவள் அவனை முறைக்க

 

“என்ன?.. நீ கேட்க வேண்டிய கேள்விய நான் கேட்கிறேன்னு பாக்குறியா.. உனக்கு நல்லா தெரியும், என்ன அவாய்ட் பண்ணா உனக்கு பனிஷ்மென்ட் வேற விதமா இருக்கும்னு.. தெரிஞ்சு தானே பண்ணனுன.. அதனால இது விஷயம் இல்ல..

 

…எதுக்கு இப்டி பண்ணனுன என் ஃபோன் நம்பர ப்ளோக் பண்ணிட்ட.. எப்டியும் வீட்டுக்கு தேடி வருவேன்னு, கதவு ஜன்னல் எல்லாம் சாத்திட்ட.. காலேஜ்ல வச்சு உன்ன தூக்கிடுவேன்னு உன் அப்பா கூட வந்துட்டு போன..

 

…என்கிட்ட இருந்து ஓடி ஒழியிரயா.. இல்ல என்ன பார்த்ததுமே துள்ளி குதிக்கிற உன் காதல் மனசு கிட்ட இருந்து ஓடி ஒழியிரயா…” என்று கேட்க

 

“யாருக்கு யார் மேல காதல்.. உங்கள பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. திரும்பத் திரும்ப புரிஞ்சிக்காம ஏன் இப்டி ஹெட்ஸ்ட்ராங்கா பிஹைவ் பண்றீங்க…” என்று அவள் ஆத்திரமாக கேட்க

 

“என்ன தான்டி உனக்கு பிரச்சன.. எதுக்கு உன் மனச மறைக்கிற.. அதுதான் பார்கவிக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல.. இனி எல்லாமே நல்லதா நடக்கும்.. தயவு செஞ்சு என் ஃபீலிங்ச கொஞ்சம் புரிஞ்சுக்க பர்வி.. உன்மேல நான் பைத்தியமா இருக்கேன், அது உனக்கு புரியுதா இல்லையா?..” என்று அவன் கேட்க

 

“என்ன புரிஞ்சிக்கணும்.. நீங்க என் மேல பைத்தியமா இருக்கீங்களா?..என் அக்கா உங்களால ஒரு பைத்தியம் போல அவளையே தொலச்சிட்டு நிக்கிறா அது தெரியுமா?..

 

…எதுவா இருந்தாலும் என்கிட்ட மனசு விட்டு பேசுவா, இப்போ என்கிட்ட சரியா பேசறது இல்ல.. கல்யாணமான மறுநாள் அஸ்வந்த் மாமா எனக்கு கால் பண்ணி இருந்தாங்க என்ன சொன்னாங்க தெரியுமா..

 

…அக்கா முதல் நாள் இரவு வித்தியாசமா சிரிச்சு, அழுதுனு மாமா அவ கிட்ட கூட போக முடியாத அளவுக்கு நடந்துகிட்டானு சொன்னாரு.. இத்தன வருஷத்துல அக்கா அப்டி நடந்துக்கிட்டு நாங்க பாத்தது இல்ல அது அவ இயல்பும் இல்ல..

 

ஆனா அவ இப்போ எப்டிப்பட்ட மனநிலையில இருக்கான்னு தெரியுமா உங்களுக்கு.. நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க,

 

… ஒரு பொண்ணு கல்யாணம் ஆயிடுச்சுன்னா அதுக்கு முன்னாடி நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு, தூக்கி போட்டுட்டு புருஷன் கூட வாழ்ந்துட்டுவானா..

 

…காதல்னா உங்களுக்கு மட்டும் பெருசு.. காதலிக்கிற பொண்ணு மேல பைத்தியமா இருப்பீங்க.. பொண்ணுங்க கழுத்துல தாலி ஏறுன மறுநொடி எல்லாத்தையும் மறந்துட்டு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவாங்க அப்டித்தானே..

 

…ஆனா அது தான் இல்ல, என் அக்கா உள்ளுக்குள்ள செத்துகிட்டு இருக்கா..ஒவ்வொரு நிமிஷமும் அவ பழைய காலத்துக்கும் இப்போ இருக்குற நிகழ்காலத்துக்கும் நடுவுல மருகிகிட்டு இருக்கா..

 

…அவ அதுல இருந்து வெளியே வர அவ மனசோட எவ்ளவு போராட வேண்டி இருக்கும் தெரியுமா.. அப்டியே வெளிய வந்தாலும் முழுசா அதுல இருந்து மீண்டு வருவாளான்னு தெரியாது.. அவ மனச கொன்னு நமக்கு இந்த வாழ்க்கை வேணாம்..

 

…அவ மனச கொன்ன நாம, நம்ம காதலையும் கொன்னுட்டு வேற வேற ஆட்கள கல்யாணம் பண்ணிப்போம்.. நாம ரெண்டு பேரும் ஒன்னு சேர தேவையில்ல, நீங்க வேற ஒரு பொண்ண கட்டிக்கங்க.. நான் எங்க வீட்ல பாக்கிற பையன கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று சொல்ல

 

(நம்ம காதல கொன்னுடலாம்)னு சொன்ன அவள் வார்த்தையில் அவளை உற்றுப் பார்த்தவன்

 

“நம்ம காதல்.. இப்பதான் முதல் தடவையா உன் வாயிலிருந்து வருது.. அதுக்குள்ள கொன்னுடலாம்னு சொல்ற …” என்று விரக்தியாக சிரித்தவன்

 

“எனக்கும் பார்கவியோட மனசு புரியுது பர்வி.. ஆனா நானும் அதே மனநிலையில தான் இருந்தேன்.. பார்கவிதான் என் மனைவின்னு நினைச்சிட்டு இருந்த போ. நீ எப்டி எனக்குள்ள வந்தனே எனக்கு தெரியல..

 

… ஒரு முத்தம்.. அது மட்டும் காரணமானு கேட்டாலும் எனக்கு சரியா சொல்ல தெரியல.. ஆனா உன்ன தவிர வேற ஒருத்திய கண்டிப்பா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..

 

…நான் எப்டி பார்கவி என் மனைவி இல்லன்னு தீர்மானமா முடிவு எடுத்து, அதுல இருந்து வெளியே வந்தேனோ.. அதே மாதிரி பார்கவியும் என் நினைவுகள்ல இருந்து வெளிய வருவா.. அதுவரைக்கும் நம்ம காத்திருக்கலாம்…”

 

“நீங்க என்னமோ பண்ணுங்க.. இவ்ளவு சொல்லியும் உங்க பிடிவாதம் தான் உங்களுக்கு முக்கியம்னா, நான் ஒன்னும் பண்ண முடியாது..

 

…ஆனா நான் உங்கள காதலிக்கிறேன்னு முட்டாள் தனமா நினைச்சுக்காதீங்க.. அது ஏதோ வாய் தவறி வந்துருச்சு…” என்று சொன்னவள் தனது பையை எடுத்துக் கொண்டு எழுந்து நிற்க,

 

சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அவள் தோள் பையை பிடித்து இழுக்க, தடுமாறி அவன் தோள்கள் இரண்டில் கையை குற்றி, அவன் மீது மொத்தமாக விழாமல் சாய்ந்து நின்றாள்.

 

அவளை தன்னை விட்டு விலக விடாமல் இடையில் இரண்டு கையையும் வைத்து இருக்கியவன், “அப்போ உனக்கு என் மேல காதல் இல்ல அப்டித்தானே…”என்று கேட்க

 

“அப்டித்தான் நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீங்களா இழுத்து வச்சு கிஸ் பண்ணிட்டு, நான் பெருசா கோபப்படலைன்னு அத காதல்னு சொல்றீங்க.. உங்க கூட போராட முடியாம தான் நான் பேசாம போறது..காதலால இல்ல…”

 

“ஓஹோ…” என்று கேலியாக உதடை வளைத்தவன் “அப்போ உன் மனசுல நான் இல்ல.. நான் உன்ன கிஸ் பண்ணும் போது உனக்குள்ள எந்த ஃபீலிங்ஸ்ஸும் வந்தது இல்ல..

 

…இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான் தந்த முத்தத்த நீ வெறுத்த அப்டித்தானே..ஏன்டி பொய் சொல்ற நீ என் முத்தத்த ரசிச்ச, உருகி குழைஞ்ச.. இப்ப கூட ஏதாவது சண்ட போட்டுக்கிட்டு என் கூடவே இருக்கணும்னு உனக்கு தோணுது இது தான் நிஜம்…” என்று அவன் சொல்ல.

 

அவனை முறைத்தவள் “கற்பனை திறன் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சார், கொஞ்சம் குறச்சிக்குங்க.. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல…”

 

“சரி.. அப்போ அத ப்ரூப் பண்ணு…”

 

“ப்ரூப் பண்ணனுமா! சரி என்ன பண்ணனும்?…” என்று அவள் அலட்சியமாக கேட்க

 

“நான் இப்போ உன்ன கிஸ் பண்றேன்…”

 

“அத விட்டா உங்களுக்கு வேற என்ன தான் தெரியும்…”

 

“ஹலோ மேடம் சொல்றத பொறுமையா கேளுங்க.. ரொம்ப எல்லாம் இல்ல ஜஸ்ட் வன் மினிட், ஒரு நிமிஷத்துக்கு நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன்.. நீ என் முத்தத்துல மயங்க கூடாது.. உன் உடம்பு உருகி குழைய கூடாது.. பிடிக்காதவன் கொடுக்கிற பிடிக்காத முத்தம் தானே வெரப்பாவே நிக்கணும் டீலா…” என்று அவன் ஒற்றை கண்ணடித்து கேட்க

 

அவனது கண்களை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டவளுக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை தான்.

 

இருந்தும் ஒரு நிமிடம் தானே என்ற எண்ணத்தில் “சரி.. நான் ஒரு நிமிஷம் கல்லு மாதிரி இருந்துட்டேனா அதுக்கப்புறம் என்ன நீங்க டிஸ்டர்ப் பண்ண கூடாது…” என்று சொல்ல

 

அவளது இடையில் இருந்த கையை எடுத்து தூக்கி பிடித்தவன் “கண்டிப்பா உன்ன விட்டுட்டு எங்க அம்மா பாக்குற பொண்ணேயே கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று சொல்ல

 

அவள் அவனை முறைத்து பார்க்க,

 

“என்னாச்சு!.. நீ இதுக்கு சந்தோஷப்படணும்.. எக்ஸ்பிரஷன மாத்தி கொடுக்கிற…” என்றான் கொடுப்புக்குள் நாவை சுழற்றி

 

“நான் சாதாரணமாதான் பாத்தேன்.. உங்க கண்ணு சரியில்ல போல…” என்று அவள் சமாளிக்க

 

“ஹாஹா…” என்று அவன் கிண்டல் செய்ய

 

“போதும்.. நான் ரெடி…” என்று அவள் சொல்ல

 

அவளது கன்னம் இரண்டிலும் தன் கைகளை வைத்து, தன் முகத்தருகே அவள் முகத்தை இழுத்து, அவள் இதழ்களை மென்மையான பஞ்சு மிட்டாயை கவ்வும் லாபகத்துடன் கவ்விக் கொண்டான்.

 

அவ்வளவு தான் அவனது வன்முத்தத்தை தாங்கியவளால் இந்த மென் முத்தத்திற்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

 

அவனோ ஒற்றைக் கையை அவள் பின் தலையில் வைத்து தன் உதட்டோடு அவள் இதழை அழுத்திக் கொண்டவன், தன் இதழ்களுக்குள் அதக்கி இருந்த அவள் இதழ்களை அழுத்தி உறிஞ்சி இழுக்க, அவ்வளவுதான் பர்விதா கொஞ்சம் கொஞ்சமா தொய்ந்து, தன் முன்னழகுகள் உசர அவன் மீதே படர்ந்து விட்டாள்.

 

இருவருக்குமான சவால் முத்தம் சளைக்காமல் வெகு நேரமாக தொடர்ந்தது.

 

இதழ்களை விரித்து, இமைகளை மூடி, உடல் உருகி குழைய, அவன் மடியில் தஞ்சமாகி இருந்தாள் தாரகை.

 

அபர்ஜித்தை சொல்லவும் வேண்டுமா. இதற்கு மேலும் சுகம் உண்டா என்பது போல் அவளை இறுக்கி இழுத்து தனக்குள் அடக்கிக் கொண்டான்.

 

தனக்குள் மொத்தமாக அவளை புகுத்தி விடும் முயற்சி தான் அவனிடம்.

 

இதழ் வழியாக இந்திரலோகத்தில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது என்னவோ தொலைபேசி ஒலிதான் .

 

பர்விதா திடுக்கிட்டு தன் இதழ்களை பிரித்துக் கொள்ள, அபர்ஜித்தோ ‘ எந்த கரடி இந்த நேரத்துல…’ என்று மனதுக்குள் திட்டியவாறு பாக்கெட்டில் இருந்து ஃபோனை எடுத்து பார்க்க, அறிவழகி தான் .

 

காலை அட்டென்ட் செய்யாமல் கட் செய்தவன், பர்விதாவை பார்க்க, அவன் மடியில் அமர்ந்திருந்தவாறே சங்கடமாக நெளிந்தாள்.

 

அவள் கன்னத்தில் இச்சென்று முத்தம் வைத்தவன் “ஓய் பர்வி.. இப்ப புரியுதா.. உன் மனசுல நான் இல்லாமலா என் மடியில நீ உட்கார்ந்திருக்க…” என்று கேட்க

 

அவனை தள்ளி விட்டு எழுந்தவள் “சரி இப்ப என்ன.. ஒத்துக்குறேன் எனக்கும் உங்கள புடிச்சிருந்துச்சு.. ஆனா இப்போ இல்ல.. எனக்கு நீங்க வேணாம்.. நம்ம கல்யாணம் பண்ணிக்க தேவையில்ல..

 

…சாகுற வரைக்கும் என் அக்கா மனசுக்குள்ள மருகிகிட்டே இருப்பாள்.. அப்டி இருக்க நான் மட்டும் காதலிச்சவனேயே கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணுமா.. வேணாம், நானும் மனசுல உங்களையும் இன்னொருத்தன் மாங்கல்யத்த….”என்றவளால் அதற்கு மேல் சொல்ல முடியாமல்

 

அழுகையில் தேம்பி விட்டு, “அவ படுற வேதனைய நான் அனுபவிக்கணும்.. அவள இந்த நிலைக்கு ஆளாக்கின நீங்களும் அனுபவிக்கணும்.. அவளோட உணர்வுகள கொன்ன நம்ம சந்தோஷமா வாழ்ந்திட முடியாது…” என்று அவள் சொல்ல

 

“இப்ப மட்டும் நான் சந்தோஷமா இருக்கேனா பர்வி.. இதோ காதலிக்கிற பொண்ணு காதல சொல்லியும் என்னால சந்தோஷப்பட முடியல.. உன்ன தொட முடியாம,உன்னால உயிர்பெற்ற என் உணவுகள கட்டுப்படுத்த முடியாம..

 

… எவ்ளவு தவிச்சிட்டு இருக்கேன் தெரியுமா? என் காதல் கைகூடுமானு நிதம் நிதம் வெதும்பி சாகுறேன்..அது பார்கவி அனுபவிக்கிற கொடுமைக்கு சமமானதுதான்..

 

…ஆனா நான் சொல்றத புரிஞ்சுக்க பர்வி.. எல்லார் வாழ்க்கையிலையும் ஒரு ஆழமான காதல் அது எல்லாத்தையுமே மாத்திடும்.. என் மேல வந்தது கட்டாயக் காதல் நான்தான் வீட்டுல பார்த்த மாப்பிள்ளை என்றதால என்ன புடிச்சு போனதால வந்த காதல்..

 

…அது நீ சொல்ற மாதிரி அவ சாகுற வரைக்கும் எல்லாம் அவ மனசுல இருக்காது.. கண்டிப்பா அஸ்வந்த அவ புரிஞ்சுக்குவா.. அஸ்வந்தும் அவளும் சந்தோஷமா வாழ்வாங்க.. காதலையும் தாண்டி ஆழமானது கணவன் மனைவி பந்தம்..

 

…அது அவங்களுக்குள்ள அந்த காதல ஆழமா விதைக்கும்னு நான் நம்புறேன்.. நீயும் நம்பு.. நீ என்ன விட்டு விலகனும்னு நினைக்காத.. கொஞ்ச நாள் காத்திருப்போம்.. பார்கவிக்கு குழந்தை பிறந்தா அவ சந்தோஷமா இருக்கான்னு நீ நம்புவ இல்ல.. நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பல்ல…” என்று கேட்க

 

“ஓஹோ.. நீங்க என்ன பேசுறீங்கனு உங்களுக்கு புரியுதா.. கல்யாணமான ஒரு பொண்ணுக்கு குழந்த பிறக்கணும்னா காதல் இருக்கணும்னு அவசிய கிடையாது.. புருஷன் ஆசப்பட்டா போதும்.. குழந்த பிறந்தா அவ சந்தோஷமா இருக்கானு சொல்லிட முடியாது…” என்று சொல்ல

 

“காதல் இல்லாத பொண்ண ஆசைக்கா நெருங்குற ஆள் அஸ்வந் இல்ல..அவன் மனசுல காதல் என்ற ஒரு விஷயம் வந்தா மட்டும்தான் பார்கவி கூட அவனும் சேர்ந்து வாழ்வான்..

 

…பிடிக்கலனு சொல்ற பொண்ண கட்டாயப்படுத்தி அடைஞ்சு, குழந்தை கொடுக்கிற அளவுக்கு எல்லாம் எங்க அம்மா எங்கள வளர்க்கல.. அஸ்வந் அத பண்ணவே மாட்டான்… என்று சொல்ல

 

அவள் அவனை உறுத்து பார்த்த அந்த பார்வை. நீர் அருந்தாமலே அபர்ஜித்திற்கு புரையேறி விட்டது.

 

தலையில் தட்டிக் கொண்டவன் “ஹேய் முத்தம் தான்டி கொடுத்தேன்.. மொத்தமா முடிச்சுவிட்ட மாதிரி இந்த பார்வ பாக்குற.. நானும் எங்கம்மா வளர்ப்புதான்.. உன் சம்மதம் இல்லாம மத்த விஷயம் எல்லாம் நடக்காது…” என்று சொல்ல

 

“ஓஹோ நல்லாவே தெரியுது…” என்று தனது கசங்கியிருந்த ஆடையை விழிகளால் சுட்டிக்காட்டியவள்

 

“முக்காவாசி முடிச்சிட்டீங்க.. மீதி உள்ள கால்வாசி என்னால தான் தட பட்டு நிக்குது.. நான் மட்டும் உசாரா இல்லைன்னா அதையும் பண்ணிடுவீங்க…” என்று அவள் சொல்ல

 

வீராப்பாக எழுந்து நின்று ஷர்ட் கையை மடித்தவன் “என்னடி எப்ப பாரு காஜி மாதிரியே என்ன சொல்லிக்கிட்டு இருக்க.. இப்போ கேட்டுக்க நீயா என்ன தேடி வார வரைக்கும் இனிமேல் நானா உன்ன தேடி வர மாட்டேன்..

 

…எனக்கு நீ தான் வேணும் என்கிறத நான் ஆணி தனமா உனக்கு நிரூபிச்சிட்டேன்.. நான் உனக்கு வேணுமா என்றத நீ எனக்கு நிரூபி…” என்று கோவமாக கூறியவன்,

 

அவளை அழைத்துக்கொண்டு அவளது வீட்டின் அருகே விட்டு விட்டு சென்றான். காரை வேகமாக ஓட்டிக்கொண்டு போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பர்விதா.

 

 

 

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்