Loading

அத்தியாயம் 20

 

ஐந்து நாட்கள் கழித்து கண்மணி பாடசாலை வந்திருந்தாள்.

 

அவள் வந்து விட்டாள் என்று பியூனினால் அஸ்வந்துக்கு தகவல் கூறப்பட்டது.

 

அவனும் அவளை சந்திக்க சென்றான். அவளிடம் திருமணமானதை சொல்லவும் இல்லை, தன் மனைவிக்கு என்று கேட்காமல் வேகன்ஸி இருக்குமா என்று மட்டும் விசாரித்துக் கொண்டான்.

 

அவளும் சோசியல் எடுக்க ஆள் வேண்டும் என்று சொல்லி, நாளை நேர்லேயே அழைத்து வந்து டீனை சந்திக்குமாறு கூறினாள்.

 

அவளுக்கு நன்றியை சொல்லிவிட்டு எப்போதும் போல் சிறிது நேரம் அவளுடன் நேரத்தை செலவழித்தவன் வீட்டிற்கு வரும்போது யோசனையாகவே வந்தான்.

 

பார்கவியிடம் இதை எப்படி கூறுவது, இத்தனை நாட்களில் சாப்பிட்டாயா என்று கூட அவன் கேட்டதில்லை.

 

அவனைக் கண்டாலே தீண்ட தகாதவனை போல் அவள் தள்ளி நிற்க, இவனுக்கு எங்கிருந்து பேச்சு வரும்.

 

ஆனால் இன்று பேசித்தான் ஆக வேண்டும். அவளை சரி செய்ய வேண்டியது அவன் பொறுப்பு ஆயிற்றே. என்னதான் இருந்தாலும் அவன் மனைவி அவள் தானே.

 

எப்போதும் போல வீட்டிற்கு வந்து அவன் அறைக்குள் நுழைந்து கொள்ள, சோஃபாவில் அமர்ந்து, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள் அவனைப் பார்த்ததும் எழுந்து சென்று பால்கனியில் நின்று கொண்டாள் .

 

அஸ்வந் அலட்டிக் கொள்ளாமல் குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வந்தவன் பால்கனிக்கு சென்றான்.

 

அவன் அவளை நோக்கி வருவது தெரியவும் அவளது உடலில் சிறிய விரைப்பு. ‘எதுக்கு இவன் இங்க வரான்..எப்பவும் போல டிவி பாத்துட்டு தூங்க வேண்டியது தானே…’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள்.

 

அஸவந் அவளில் இருந்து சற்று இடைவெளி விட்டு நின்றவன் “கவி என் ஆஃபீஸுக்கு பக்கத்துல ஒரு ஸ்கூல் இருக்கு.. அங்க சோசியல் எடுக்கறதுக்கு ஒரு டீச்சர் வேணும்.. உனக்கு வேலைக்கு போக இஷ்டம்னா நாளைக்கு கிளம்பி ரெடியா இரு..

 

…உன்ன கூட்டிட்டு போய் டீன் கிட்ட பேசி சேத்து விடுறேன்…” என்று தகவல் மட்டும் சொன்னவன் அறையை விட்டு வெளியேறி விட்டான் சாப்பிடுவதன் நிமித்தம்.

 

அன்று இரவு முழுவதும் பார்கவி யோசித்தாள். அவளுக்கும் அந்த வீட்டில் இருப்பது நிம்மதியாக மூச்சு எடுக்க முடியாமல் மூச்சு குழாயை ஏதோ இருக்கி பிடித்தது போன்று மூச்சடைத்தது.

 

எனவே தனக்கு ஒரு மாற்றம் வேண்டும். தன் மனதுக்கு ஒரு மாற்றம் வேண்டும். அவளுக்கு பிடித்த ஆசிரியை வேலை, சென்றால் என்ன என்று தான் தோன்றியது. முடிவெடுத்து விட்டாள்.

 

காலையில் நேரத்துக்கு எழுந்து, தனது பைலுடன் தயாராக நின்று இருந்தாள் பார்கவி.

 

அஸ்வந்துக்கு அவளை பார்த்ததுமே புரிந்தது, வேலைக்கு செல்ல முடிவெடுத்து விட்டாள் என்று.உதட்டில் சிறிய புன்னகையும் வந்தது. எதுவும் கூறாமல் அவன் முன்னே நடக்க, இவள் அவன் பின்னே சென்றாள்.

 

செவ்வந்தி இருவரையும் பார்த்துவிட்டு மனதில் எதையோ நினைத்து சந்தோஷமாக “பார்கவியோட வெளிய கிளம்பிட்டியா..?” என்று அஸ்வந்திடம் கேட்க

 

“அம்மா அது என் ஆஃபீஸ் பக்கத்துல ஒரு ஸ்கூல் இருக்கு இல்லையா.. அங்க பார்கவிக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு.. அது விஷயமாக நேர்ல பாத்து பேசிட்டு வந்துடுறோம்…” என்று சொல்ல

 

செவ்வந்திக்கு சற்று விருப்பமில்லை. அவள் இயல்பாக இருந்தால் முழுமனதோடு ஏற்றுக் கொண்டிருப்பாரோ என்னவோ.

 

அவள் இயல்பை மீறிய அசாத்திய அமைதியும், அவளது விலகலும், வேலைக்கு சென்றால் இந்த குடும்பத்தை விட்டு இன்னும் இன்னும் விலகிவிடுவாளோ என்று தான் தோன்றியது.

 

இருந்தாலும் தன் மனதில் இருப்பதை கூறாமல் “பத்திரமா போயிட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அவன் கார் கதவை திறந்து விட, காரில் ஏறாமல் “எந்த ஸ்கூல்னு சொன்னா.. நான் பஸ்ல வந்துடுறேன்…” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு

 

“ப்ளீஸ் கவி கார்ல ஏறு.. இன்னைக்கு மட்டும் நான் உன்ன கூட்டிக்கொண்டு போய் மூவ் பண்ணி விடுறேன்.. அதுக்கப்புறம் என்ன வேணும்னாலும் பண்ணிக்க…” என்று சொல்ல காரின் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள்.

 

கண்களை உருட்டி பெருமூச்சை இழுத்து விட்டவன், காரை எடுத்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு, பாடசாலைக்கு வந்து கண்மணியை சந்தித்தான்.

 

“குட் மார்னிங் கண்மணி!..”

 

“குட்மார்னிங் அஸ்வந்!.. இவங்க தானா அந்த பொண்ணு…?” என்று பார்கவியை சுட்டி காட்டிக் கேட்க

 

“ஆமா இவங்க பார்கவி…”

 

“பார்கவி இவங்க கண்மணி.. என் ஃப்ரெண்ட்…” என்று சொல்லி இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

கண்மணி சிநேகமாக புன்னகைத்து “ஹாய்” என்று சொல்ல

 

பார்கவியும் மெலிதாக உதட்டை விரித்து “ஹாய்” என்று சொன்னாள்.

 

“சரி முதல்ல டீன பாத்துடலாம் வாங்க…” என்றவள் முன்னே நடக்க, அவளை பின்தொடர்ந்தனர் இருவரும்.

 

கண்மணி மட்டும் உள்ளே சென்று தகவலை சொல்லிவிட்டு வெளியே வந்தவள்

 

“பார்கவி நீங்க மட்டும் போங்க.. சின்னதா ஒரு இன்டர்வியூ.. ஆல் த பெஸ்ட்…” என்று சொல்லி உள்ளே அனுப்பி வைக்க, மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்து தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள் பார்கவி .

 

வெளியே சற்று தள்ளி அஸ்வந்துடன் பேசிக்கொண்டிருந்தாள் கண்மணி. அப்போது கண்மணியின் தோழியான மாளவிகா அங்கு வந்தாள்.

 

“அடடா.. என்ன இத்தன நாள் பிரிஞ்சி இருந்த கதையெல்லாம் இன்னைக்கு போயிட்டு இருக்கா…” என்று கேட்க

 

அவளை கண்களால் கண்டித்தாள் கண்மணி. அவள் அஸ்வந்தை ஒருதலையாக காதலிப்பது தெரிந்தது மாளவிகா மட்டுமே.

 

“சும்மா இருக்க மாட்ட.. சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்..நம்ம ஸ்கூல்லுக்கு சோசியல் டீச்சர் தேவ இல்ல.. அஸ்வந்துக்கு தெரிஞ்ச பொண்ணு இன்டர்வியூக்கு வந்திருக்காங்க.. அதுதான் இங்க நிக்கிறோம்…” என்று கண்மணி சொல்ல

 

“தெரிஞ்ச பொண்ணுனா.. ரிலேட்டிவா…?” என்று மாளவிகா கேட்க

 

அஸ்வந் மெல்லிய புன்னகையுடன் “விஷயம் தெரியாதா என்ன?…” என்க

 

“என்ன விஷயம்?…” என்று இரு பெண்களும் புரியாமல் பார்க்க

 

“சோ சாரி.. நான் சொல்லல பார்கவி என்னோட வைஃப்.. கல்யாணம் ஆகிடுச்சு…” என்று சொல்ல கண்மணிக்கு அதிர்ச்சி தான். மாளவிகாவும் அதிர்ச்சியாக கண்மணியை பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

 

மாளவிகாவோ “என்னங்க திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க…?” என்று கேட்க

 

“சாரிங்க எனக்கே கல்யாணத்துக்கு டூ வீக்ஸ் முன்னாடி தான் தெரியும்.. நான் ப்ரெண்ட்ஸ் யாரையுமே கூப்பிடல.. அதுலயும் கண்மணி லீவு அது தெரியும்.. கண்மணி கூட ஃபோன் காண்டாக்ட் கூட இல்ல, சோ என்னால யாருக்கும் சொல்ல முடியல…”என்று சொல்ல

 

கண்மணியோ “ஓஹோ!.. சாரி நீங்களும் சொல்லலையா, எனக்கும் தெரியல.. நான் லீவுல இருந்தேன்.. எனிவே ஹாஃப்பி மேரீட் லைஃப்…” என்று சொல்லி கையை நீட்ட

 

அவனும் கையை நீட்டிக் குலுக்கி கொண்டான். மாளவிகாவும் வாழ்த்து சொல்லிவிட்டு “ஒரு நிமிஷம்.. நான் கண்மணிக்கிட்ட முக்கியமான விஷயம் கேட்கத் தான் வந்தேன்.. கண்மணி ஒரு நிமிஷம் என் கூட வா…” என்று அவளை கெஞ்சலாக பார்த்து கேட்க

 

கண்மணிக்கு புரிந்து விட்டது, தனியாக ஏதோ பேச வேண்டும் என்று அழைக்கின்றாள் என்று. “வன் செகண்ட்…” என்று அஸ்வந்திடம் சொன்னவள் அவளுடன் தள்ளி சென்றாள்.

 

அஸ்வந்திற்கு கேட்காத தூரம் வந்தவர்கள் “கண்மணி என்னடி இது.. திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சுன்னு வைஃபோட வந்து நிக்கிறாரு.. அப்பவே சொன்னேன் வாய திறந்து சொல்லி தொலைன்னு.. ஒரு வருஷமா லவ் பண்ணுனேயே.. இப்ப பாரு.. முதல்லேயே சொல்லி இருந்தா கல்யாணம்னதும் உன்ன பத்தி யோசிச்சிருப்பார் இல்ல…” என்று அவளிடம் ஆதங்கமாக கேட்க,

 

“எனக்கு மட்டும் தெரியுமாடி.. அவர் அண்ணாக்கு தானே கல்யாணம்னு சொன்னாரு.. அவரோட அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் ப்ரொபோஸ் பண்ணலாம்னு தான் இருந்தேன்.. இப்டி திடீர்னு வந்து என் தலையில இடிய போடுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல..

 

…விடு எனக்கு கொடுத்து வைக்கல.. அவர் கூடவே இருக்கும் போது சொல்லிடலாம்னு நினைப்பேன்.. ஏதோ தடுத்துக்கிட்டே வந்துச்சு.. இதுக்காகத்தான் போல.. நல்ல வேள நான் சொல்லல…”

 

“எப்டி உன்னால சாதாரணமா எடுத்துக்க முடியுது.. அவர அந்த அளவுக்கு நேசிச்சியே.. அவருக்காக தானே தினமும் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்த.. உங்கிட்ட அவ்ளவு குளோசா பேசினாரு, பழகுனாரு, எப்டி இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..உன் ஞாபகம் கொஞ்சம் கூடவா வரல…”என்று தூரத்தில் நின்று இருந்த அஸ்வந்தை பார்த்தபடி மாளவிகா சொல்ல,

 

“ஏய் என்னடி.. நாங்க லவ் பண்ண மாதிரி பேசிட்டு இருக்க.. வீட்ல சொல்லி இருப்பாங்க.. சரின்னு சொல்லி இருப்பாரு.. விடு இதுதான் நடக்கணும்னு விதி போல…” என்று இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க,

 

இன்டர்வியூ முடித்துவிட்டு வெளியே வந்த பார்கவி இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, வேலை கிடைத்த சந்தோஷத்தில் நன்றி சொல்லலாம் என்று அவர்களை நெருங்க,

 

கண்மணி மாளவிகா பேசியது நன்றாகவே காதில் விழுந்தது. “இது வேறயா.. இன்னும் என்னெல்லாம் இருக்கோ…” என்று சலித்துக் கொண்டவள் “எக்ஸ்கியூஸ் மீ..” என்று அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப,

 

அவளைப் பார்த்த கண்மணிக்கு சற்று பதட்டம் தான். தாங்கள் பேசியதை கேட்டிருப்பாளோ என்று. ஆனால் பார்கவி அப்படி ஒரு செய்தி தன் காதில் விழவில்லை என்பது போல்,

 

“தேங்க்யூ சோ மச்.. வேலை கிடைச்சிருச்சு…” என்று அவளுக்கு நன்றி சொல்ல

 

“ஐயோ.. எதுக்குங்க.. அஸ்வந் கேட்டிருந்தாங்க.. அதே நேரம் இங்க வேகன்ஸி இருந்துச்சு.. நான் ஜஸ்ட் சொல்லத்தான் செஞ்சேன்.. காங்கிரஸ்.. எப்ப இருந்து வர சொல்லி இருக்காங்க…”

 

“நாளையில இருந்து ஜாயிண்ட் பண்றதா சொல்லிட்டேன்…”

 

“வாவ் சூப்பர்.. அப்புறம் இவ மாளவிகா.. நம்ம கூட தான் வொர்க் பண்றா.. மேக்ஸ் டீச்சர்…” என்று அவளை அறிமுகப்படுத்தி வைக்க,

 

“ஹலோ..” என்று மாளவிகாவிடம் பார்கவி சொல்ல

 

அவளும் “கங்க்ராஜுலேஷன்.. அப்போ நாளைல இருந்து நம்ம சேந்து வேலைய போறோம்…” என்று புன்னகையுடன் சொன்னாள்.

 

மூன்று பெண்களும் பேசிக் கொண்டிருக்க, பார்கவி வெளியே வந்ததை கவனித்த அஸ்வந் அங்கு வந்து சேர்ந்தான்.

 

“என்னாச்சு கவி…?” என்று கேட்க அவள் பதில் சொல்லவில்லை

 

பார்கவி அமைதியாக இருக்கவும் கண்மணி தான் “வேலை கிடைச்சிருச்சு அஸ்வந்.. நீங்கதான் ரீட் வைக்கணும்.. நாளைல இருந்து வைஃப கூடவே கூட்டிட்டு சுத்த போறீங்க.. என்று அவளது மனவேதனையை மறைத்துக் கொண்டு கிண்டல் செய்ய,

 

“ஓய் கண்மணி சும்மா ஒட்டாத.. பக்கத்துல ஆஃபீஸ் என்றதால டெய்லி நான் தான் கூட்டிட்டு வரணும்னு இல்லையே.. அப்புறம் ரீட் தானே நாளைக்கு வச்சிட்டா போச்சு.. என்ன வேணும்னு கேளு.. டெய்லி நீ தானே எனக்கு சாப்பாடு தார, நாளைக்கு நான் வாங்கி தாரேன்…”

 

“அது நாளைக்கு யோசிச்சு சொல்றேன்.. இப்ப கிளாசுக்கு டைம் ஆச்சு, பாய் அஸ்வந்.. பாய் பார்கவி நாளைக்கு பாக்கலாம் …”என்று சொல்லி விடைபெற்று கண்மணிசெல்ல, மாளவிகாவும் புன்னகையுடன் தலையசைத்து விட்டு அவளுடன் சென்றுவிட்டாள்.

 

அவர்கள் சென்றுவிட விறுவிறுவென்று பாடசாலையை விட்டு வெளியே வந்த பார்கவி அந்த வழியாக வந்த ஆடோவை நிறுத்தி அதில் ஏறி விட்டாள்.

 

ஆஃபீஸ் பக்கத்தில் என்பதால் வைஃபை கூடவே கூட்டி வரவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை என்று அஸ்வந்த் சொன்னது கோவமா… இல்லை தனியாக செல்வது அவள் ஏற்கனவே எடுத்திருந்த முடிவா என்பது அஸ்வந்துக்கு புரியவில்லை.

 

தான் கண்மணியிடம் கூறிய கோபத்தினால் தான் அவள் செல்கிறாள் என்று நினைத்து பின்னோடு வந்து அவன் கூப்பிட்டதெல்லாம் அவள் காதில் விழவில்லை.

 

வீட்டின் முகவரியை சொல்லி கிளம்பி விட்டாள். அஸ்வந் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இருந்தது. காலையிலேயே காரில் ஏறச் சொல்ல, இல்லை பஸ்ஸில் வருகின்றேன் என்றவள் கண்டிப்பாக தினமும் தனுடன் வரமாட்டாள் என்பது அவனது யூகம்

 

அவனது யூகம் சரிதான். அவனுடன் ஒரே காரில் அருகில் அமர்ந்து வந்தது அவளுக்கு ஏதோ போல் இருந்தது.

 

தன் மனதை அசௌகரியபடுத்தும் எதையும் இனி அவள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. எத்தனை வலிகளையும் எத்தனை சங்கடங்களையும் தான் அவளும் தாங்கிக் கொள்வாள்.

 

தான் கூப்பிட கூப்பிட செவிமடுக்காமல் செல்பவளை நினைத்து ஆயாசமாக இருந்தது.

 

“பாக்க புசுபுசுனு ரசகுல்லா மாதிரி இருக்கா.. சாஃப்டா இருப்பானு நினைச்சா.. இவ்ளோ டெரரா இருக்கா.. பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது.. இப்பவே கண்ண கட்டுதே கடைசி வரைக்கும் என் நிலைம.. ராஜமாதா!…” என்று தன் தாயை நினைத்து பல்லை கடித்துக் கொண்டவன், பக்கத்திலிருந்த தன் அலுவலகத்துக்கு சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்