Loading

அத்தியாயம் – 16

நிலா எழுந்திரிக்க முயற்சி செய்ததால் விக்ரமின் பிடி மேலும் மேலும் இறுகி போனது. 

நிலா ‍ அதிலிருந்து வெளிவர எவ்வளவு முயற்சித்தும் அவளால் முடியவில்லை, “என்னை விடுங்க” என்று வாய்விட்டு சொன்ன பின் விக்ரம் சிரித்துக் கொண்டே அவளை கீழே இறக்கி விட்டான்.

இருவரும் கட்டிலில் இருந்து இறங்கியவுடன் நிலா, கைகள் விக்ரமின் கன்னத்தை பதம் பார்த்தது. 

அதில் விக்ரம் அதிர்ச்சியாக, “ஏய்” என்று கத்தி நிலாவை அடிக்க கை ஓங்கினான். ஆனால் அடிக்காமல் கைகளை முறுக்கி உதறினான். 

நிலா கோவமாக, “உங்க மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க இஷ்டத்துக்கு நடந்துக்கிறீங்க எனக்கும் உயிர் இருக்கு”.

“என்னோட மனசுல என்ன இருக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் இந்த மாதிரியெல்லாம் நடந்துக்கோங்க” என்றாள்.

விக்ரம், புரியாமல் அவளை பார்த்தான். நிலா, “என் மனசுல வேறு ஒருத்தன் இருக்கான்” என்றாள். 

விக்ரம் மனதுக்குள் அன்று சுஜிதா சிறு வயதில் நிலா ஒருவனை காதலித்ததாக சொன்னது நினைவில் வந்தது. 

நிலாவை வெறுப் பேற்றுவதற்காக வேண்டும் என்றே அப்படியா என்று அதிர்ச்சியாகுவது போல் பாவனை செய்தான். 

நிலா ஆமா என்று தலை அசைத்தாள். விக்ரம், “ஆனால் அதற்கு என்னால் ஒன்றும் பண்ண முடியாது. நான் உன்னை பல வருஷமாக ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான். 

நிலா, “என்னது பல வருஷமாகவா? இது வரைக்கும் நான் உங்களை பார்த்ததே கிடையாதே” என்றாள். 

விக்ரம், “அதெல்லாம் அப்படித் தான் நான் என் பிஏ வச்சி உன்னை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்” என்றான். நிலா எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தாள். 

விக்ரம் நிலா முகத்தின் அருகே குனிந்து, “ஆனால் உனக்கு ஒரு சின்ன வயசு காதல் கதை இருக்குன்னு கேள்விப்பட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டே.

மேலும் பேச்சை தொடர்ந்தவன், “சின்ன வயசு காதல் எல்லாம் ஒரு காதலே கிடையாது அதனால் நீ எல்லாத்தையும் மறந்திடு” என்றான் வேண்டும் என்றே. 

விக்ரம் எதிர் பார்க்காத வண்ணம் நிலா மறுபடியும் அவன் கன்னத்தில் அறைந்து விட்டால். 

நிலா ஒற்றை விரலை நீட்டி, “எவ்வளவு திமிர் இருந்தா என் கிட்டயே இப்படி சொல்லுவ. என்னோட காதல் சின்ன வயசுக்காதல் தான்”. 

“ஆனால், அதோட ஆழம் ரொம்ப ரொம்ப அதிகம் உங்களுக்கு அதெல்லாம் சொன்னால் கூட புரியாது” என்று விட்டு நிலா கோபமாக அழுதுக் கொண்டே குளியல் அறைக்குள் சென்று விட்டால். 

அத்துடன் இருவரும் பேசிக்கவே இல்லை. விக்ரம் என் மேல் இன்னும் எவ்வளவு காதல் வச்சிருக்கா என்று சந்தோஷமாக இருந்தான்.

மத்திய வேலை உணவை அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது ராஜலட்சுமி, “விக்ரம், நிலா நீங்க ரெண்டு பேரும் இப்பவே ரெடியாக ஆரம்பிச்சுடுங்க”. 

“அப்போது தான் இவ்னிங் ரிசப்ஷனுக்கு தயாரா இருக்க முடியும் சீக்கிரமா கிளம்பிடனும்” என்றார். 

விக்ரம், “நிலாவை தயார் பண்ணுவதற்காக பார்லரில் இருந்து ஆட்கள் வருவாங்க. நீங்க மண்டபத்து வேலையை மட்டும் பார்த்துக்கோங்க”. 

“நிலாவும் நானும் நேரத்துக்கு தயாராகிடுவோம்” என்று விட்டு நிலா கையைப் பிடித்து கொண்டு மேலே அறைக்கு சென்று விட்டான்.

வாசலில் இருந்து மித்ரா, “என் அண்ணியை கூட்டிட்டு போறதுலேயே இருக்காதீங்க” என்று குரல் கொடுத்தாள். 

விக்ரம், திரும்பிப் பார்த்தான் மித்ரா ஓடிவந்து விக்ரமை கட்டி அணைத்து “அண்ணா மிஸ் யூ சோ மச்” என்றாள். 

விக்ரம் மித்ரா தலையை தடவியபடி, “மீ டூ டா” என்றான். 

பிறகு மித்ரா, “பார்த்தியா நான் எப்படி டைமுக்கு வந்துட்டேன். ஆனா அந்த ஆதித்யாவை பாரு இன்னும் வரவே இல்ல. அவன் எப்படியோ கடைசி நேரத்துக்கு தான் வருவான்” என்றாள்.

ஆதித்யா, “வாய மூடு டி குட்டி சாத்தான்” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான். 

விக்ரம், “நீயும் வந்துட்டியா” என்று சந்தோஷமாக அவனையும் கட்டி அணைத்தான். 

பிறகு மித்ரா, “சரி சரி நேரமாச்சு நீ போய் தயாராகுர வேலையை பாரு”. 

“நானும் அண்ணியும் தயாராகிட்டு உன்னை வந்து பார்க்கிறோம்” என்று விக்ரம் பதிலுக்கு கூட எதிர் பார்க்காமல் நிலாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

மித்ரா ஒரே பெண் பிள்ளை என்பதால் அந்த வீட்டின் செல்ல பிள்ளை ஆகிபோனாள். 

ஆதித்யா, “அண்ணா உங்களுக்கு நான் இருக்கேன் வாங்க நம்பளும் அவங்களுக்கு டஃப் கொடுக்குற மாதிரி ரெடியாகிட்டு வரலாம்” என்று விக்ரமை அழைத்தான். 

விக்ரம் சிரித்துக் கொண்டே சரி என்று தலை அசைத்தான். ராஜலட்சுமி, ராஜேந்திரனை பார்த்து “நம்ப பசங்களை பாத்தீங்களா எப்படி ஒத்துமையா இருக்காங்க பார்க்கவே சந்தோஷமாக இருக்கு”. 

“மித்ராவும், ஆதித்யாவும் வந்ததுக்கு அப்புறம் தான் வீடு களை கட்டுது. ஆனால், என்கிட்ட ஒரு வார்த்தை கூட ரெண்டு பேருமே பேசவில்லை”.

“ஒருத்தி அண்ணின்னு சொல்லி நிலா கூட போயிட்டா. இன்னொருத்தன் அண்ணன்னு சொல்லி விக்ரம் கூட போயிட்டான்”. 

“ஆக மொத்தத்துல என்னை யாருமே கண்டுக்கவே இல்லை” என்று வருத்தமான குரலில் கூறினார்.

ராதிகா கிடைத்த நேரத்தில் எல்லாம் கெடா வெட்டுவது போல், “ஆமாம், அக்கா அந்த விக்ரம் நம்ம பசங்களை எல்லாம் எப்படி மாத்திட்டான்னு பார்த்தியா” என்றாள்.

ராஜலட்சுமி அவளை முறைத்துப் பார்த்தார். ராதிகா அமைதியாக அங்கிருந்து சென்று விட்டார்.

மத்தியத்திற்கு மேல் நிலாவை அலங்கரிக்க பார்லரில் இருந்து ஆட்கள் வந்து அவள் அழகுக்கு மேலும் மேலும் அழகூட்டினார்கள். 

விக்ரம் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த மெருன் கலர் புடவையை அணிந்து அதற்கு ஏற்றார் போல் டைமண்ட் நகைகளை அணிந்து பல பலவென மின்னுவது போல் முகத்தில் சில பல மேக்கப் எல்லாம் போட்டு அவளை இளவரசி போல் தயார் செய்தார்கள்.

விக்ரம் பக்கத்து அரையில் நிலா புடவைக்கு ஏற்றது போல் மெருன் கலரில் கோட் சூட் அணிந்து தாடி எல்லாம் டிரிம் செய்து தலைகளை அழகாக வாரி இளவரசன் போல் ரெடியாகி இருந்தான்.

விக்ரம் கண்ணாடி முன்னாடி நின்று சரியாக ரெடி ஆகி விட்டோமா என்று பார்த்துக் கொண்டிருந்தான். 

ஆனால், ஆதித்யா விக்ரமை தள்ளிவிட்டு, “கொஞ்ச நேரம் நீ ஓரமா போய் உட்காரு அண்ணா நான் ரெடியாகிக் கிட்டு இருக்கிறேன்ல” என்றான். 

விக்ரம் ஆதித்யாவை முறைத்து பார்த்தான். ஆதித்யா சிரித்துக் கொண்டே, “என்ன இப்படி பாக்குற. நீ ஒரு ஓரமா தானே மண்டபத்தில் நிற்க போற நீ எப்படி இருந்தால் என்ன”. 

“ஆனால் நான் என்ன அப்படியா சொல்லு நாலு பொண்ணுங்க வருவாங்க அவங்க கிட்ட நாலு வார்த்தை பேசுவேன் எல்லாரும் என்னை பார்ப்பாங்க. இப்போ சொல்லு நான் தானே அழகா இருக்கணும்” என்றான்.

விக்ரம் ஏற இறங்க அவனைப் பார்த்து, “ஒரு அண்ணன் கிட்ட பேசுற பேச்சாடா இது” என்றான். 

ஆதித்யா, “நீ வயசுல வேண்டும் என்றால் எனக்கு அண்ணனாக இருக்கலாம். ஆனா நம்ம ரெண்டு பேரும் என்னைக்குமே நண்பர்கள் மாதிரி தான்”. 

“சரி வா நம்ம போயிட்டு அண்ணி எப்படி இருக்காங்கன்னு பார்க்கலாம்” என்று விக்ரம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நிலா ரூம் கதவை தட்டினான். 

மித்ரா, “ஒரு நிமிஷம்” என்று குரல் கொடுத்தாள். ஆரியன் மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டே இருந்தான். விக்ரம், “சும்மா இருடா கிளம்பிட்டு வர போறாங்க” என்றான்.

ஆதித்யா, “அண்ணா அவங்களை விட்டால் நாள் முழுக்க கிளம்பிட்டே தான் இருப்பாங்க. நம்ம இப்படி கதவை தட்டிக்கிட்டே இருந்தாள் தான் சீக்கிரம் கிளம்புவாங்க” என்றான். 

மித்ரா கதவை திறந்து, “சும்மாவே இருக்க மாட்டியா டா. கதவை தட்டிக்கிட்டே இருக்க ரெடி ஆகிட்டு தானே இருக்கோம்” என்று முறைத்தாள். 

ஆதித்யா, “நீ முதல்ல ஓரமா போ டி பேய் மாதிரி கிளம்பி நிற்கிற இதுல இன்னும் வேற உனக்கு டைம் தேவையா” என்று கலாய்த்தான்.

மித்ரா அவனை முறைத்து கொண்டு, “விக்ரம் அண்ணா நான் பேய் மாதிரியா இருக்கேன்?” என்றாள். 

விக்ரம், “அவன் ஒரு பைத்தியம். அப்படி தான் பேசுவான் நீ கன்டுக்காத” என்றான். 

மித்ரா, “சரி சரி அண்ணியை பார்த்துட்டு மேக்கப் எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றாள்.

நிலாவை திரும்பிப் பார்த்த விக்ரம் சுற்றி நடப்பதையே மறந்து அவளை விழுங்கும் படி பார்த்துக் கொண்டே இருந்தான். 

நிலா தலை குனிந்த படி நின்று இருந்தாள். மித்ரா, “அண்ணி நீங்களும் அண்ணாவை பாருங்க எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்க” என்றாள்.

நிலா இதுக்கு அப்புறம் நான் பார்த்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் கேட்காத வண்ணம் முனு முனுத்தாள். ஆனால் அது சரியாக விக்ரம் செவியில் மட்டும் சென்றடைந்தது விட்டது. 

அதை கேட்ட விக்ரம் மௌனமாக சிரித்துக் கொண்டு நான் தான் துருவ் என்று உனக்குத் தெரியும் பொழுது நீ எப்படி என்கிட்ட நடந்துக்குவ அப்படின்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆவலாக இருக்கு என்று அவள் கண்களை பார்த்து ரசித்துக் கொண்டே நினைத்தான்.

ஆதித்யா, “மித்ரா நான் சொல்ல மறந்துட்டேன் அம்மா நம்ப இரண்டு பேரையும் கீழே கூப்பிட்டாங்க” என்றான். 

மித்ரா, “அப்படியா? சரி நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடறேன் இல்லனா அம்மா கத்திட்டே இருப்பாங்க” என்று அங்கிருந்து ஓடி விட்டாள். 

ஆதித்யா, “விக்ரம் காதில் ரொம்ப வழியுது தொடச்சுக்கோ” என்றான். ஆனால், விக்ரம் அதை சட்டை செய்யாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டே இருந்தான். 

ஆதித்யா தலையில் அடித்துக் கொண்டு நடத்து நடத்து என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.

பிறகு விக்ரம் கதவை சாத்திவிட்டு நிலா அருகில் வந்தவன், “நீ இந்த சேலையில் ரொம்ப அழகா இருக்க. வானத்தில் நிலவு ரொம்ப அழகாக இருக்கும் ஆனா அதை விட நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க டார்லிங்” என்றான். 

நிலா எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள். விக்ரம், “சரி ஓகே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லவா?” என்றான். நிலா என்ன என்று அவனை உற்றுப் பார்த்தாள்.

விக்ரம், “உன் சக்தி மாமாவுக்கும் இன்னைக்கு தான் ரிசப்ஷன்” என்றான். 

நிலா, “அப்படியா?” என்று விட்டு எந்த ஒரு முக பாவனையும் இன்றி அமைதியாக இருந்தாள். 

விக்ரம், “உன் மாமாக்கு ரிசப்ஷன் எங்கன்னு தெரியுமா?” என்றான். நிலா, “அது எங்க நடந்தா எனக்கு என்ன எப்படியோ நான் போக போறது இல்லையே” என்றாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சர்ப்ரைஸ் பண்ணிகிட்டே இரு … எப்போ பா நீ தான் அந்த துருவ் அப்படின்னு சொல்ல போற … ரிசப்ஷன்ல என்ன கலவரம் நடக்க போகுதோ … நிலா எல்லார் கிட்டயும் பயந்துகிட்டு விக்ரம் கிட்ட மட்டும் எகிறுது … புருஷன் அப்படிங்கிற பயம் வேணாமா 😜