Loading

அத்தியாயம் 11

 

பொதிகை மலை மேகத்தை மயிலிறகை உலியாகக் கொண்டு செதுக்கி, மகரந்த காட்டிற்குள் மூழ்கி வந்த காற்றை உட் புகுத்தி உயிர் கொடுத்து, பெண் சிலையாக வடித்தது போன்று

 

மென்மெத்தையில் தலையணையில் ஒரு கையும், வயிற்றில் ஒரு கையுமாக விட்டத்தை பார்த்தபடி, காட்டன் டீ-ஷர்ட் & பைஜாமா என்று இரவு உடையில் உறங்கிக் கொண்டிருந்தாள் பர்விதா.

 

உள்ளே வந்த அபர்ஜித் “நமக்கு ஒரு பொட்டு தூக்கம் வரமாட்டேங்குது.. குடிச்சிட்டு சரி மட்டையாகலாம்னு பாத்தா.. என்னைக்கு குடிச்சிட்டு ஆள மாத்தி முத்தம் கொடுத்தேனோ அன்னைக்கு குடிய விட்டது..ஆனா இவ என்னடான்னா கும்பகர்ணன் மாதிரி குறட்ட விட்டு தூங்கிட்டு இருக்கா…” என்று சொன்னவன்

 

சத்தம் கொடுக்காமல் அவள் அருகில் சென்று, மெத்தையில் ஏறி தலையை ஒற்றை கையில் தாங்கி அவளைப் பார்த்தபடி படுத்து கொண்டான்.

 

அவளின் கஷ்டம் அவன் எங்கே அறிவான். முதல் தடவை முத்தமிட்டதையே மறக்க முடியாமல், சில நேரம் கனவுகளிலும் அந்த காட்சி விரிய, பாதி ராத்திரியில் தூக்கத்தை இழந்து அவள் தவித்த நாட்கள் எத்தனையோ…

 

அப்படி இருக்க அவன் கொடுத்த இரண்டாவது முத்தமும், ஐ லவ் யூ என்ற வார்த்தையும், அவளை நிம்மதியாக இருக்க விட்டிருக்குமா என்ன?

 

இந்த ஆறு நாட்களாக தூங்க முடியாமல் தவித்தவள், இன்று தான் தூக்க மாத்திரையின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றாள்.

 

அபர்ஜித்திற்கோ அவளைப் நினைத்தாலே மனது சிலிர்க்கும் இப்போது அவளை பார்த்தாலே உடலும் சிலிர்த்தது.

 

தன் கையில் விரைத்து நின்ற ரோம முடிகளை பார்த்தவன் “ப்பா.. ராட்சசி மொத்தமா என்ன கொள்ளை அடிச்சுட்டா.. என் மனசு, என் உடம்பு மொத்தமும் என் பேச்சக் கேட்க மாட்டேங்குது.. என்று செல்லமாக அவளை கடித்தவன்,

 

அவன் கையை தூக்கி ஒற்றை ஆட்காட்டி விரலால் அவள் நெற்றியைத் தொட்டு மெல்ல மெல்ல கீழே கோடு இழுத்தபடி இறங்க பர்விதாவிடம் எந்தவித அசைவுமே இல்லை.

 

அவள் மூக்கு, உதடு என்று வந்தவன் அந்த உதட்டிலே அழுத்தத்தைக் கொடுத்து, தன் பெருவிரலையும் பயன்படுத்தி அவள் இதழை குவித்து சுண்டி இழுக்க, அப்போதும் அவளிடம் அசைவில்லை.

 

‘என்ன இவ இப்படி தூங்குறா..’ என்று மனதில் நினைக்க, அவன் மனசாட்சியோ (இப்போ என்ன.. அவ எழும்பி, கத்தி ஊரையே கூட்டி, உன்ன போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு ஒப்படைக்கணுமா?.. அவ அமைதியா இருக்கும் போதே உனக்கு என்ன வேணுமோ அத பண்ணுடா..) என்று காதல் ராட்சசனாக கண்டமேனிக்கு ஐடியா கொடுக்க ,

 

அவன் பார்வையோ அவள் இதழ்களை முற்றுகை இட்டது. அவனை பித்தனாக்கி, சுத்த விட்ட இந்திரலோகத்து அமிர்த கலசம் அவை தானே. மெதுவாக அவற்றை நெருங்கி, மென்மையாக கவ்வி, வன்மையாக தேன் உறிஞ்சினான்.

 

உணர்ச்சி வேகத்தில் அவன் உடல் எடையை அவளில் சரித்து, அவள் மெல்லிடையில் கையை வைத்து அழுத்தம் கொடுக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு மூச்சு முட்டுவது போன்று இருக்க, லேசாக விழிப்பு தட்டியது.

 

ஆனால் உடனே கண்களை திறக்க முடியவில்லை. தன்னை யாரோ முத்தமிடுவது புரிந்தது. தூக்க மாத்திரை போட்டிருந்ததால், அது கனவா இல்லை நிஜமா என்று உணராத நிலையில் இருந்தாள் பர்விதா.

 

இருந்தும் அவள் பெண்மை உந்தித்தல்ல, கண்களை திறக்காமல் கைகளை எடுத்து அபர்ஜித்தின் மார்பில் வைத்து அவனை தள்ளி விட முயற்சித்தாள். திமிரி விடுபட முயற்சித்தாள்.

 

அவளின் எதிர்ப்பு விளங்க, அவள் இதழ்களை (சப்) என்று சத்தத்துடன் விட்டவன், அவள் முகத்தை பார்க்க, விழிகளை மூடித்தான் இருந்தாள். முழுதாக அவளுக்கு தூக்கம் கலையவில்லை என்பது புரிந்தது.

 

“விடு.. விடு..” என்று முணகலாக சொன்னவாறு அவன் நெஞ்சில் கையை வைத்துத் தள்ள, அவனோ தன் மூச்சுக்காற்று என்னும் ஏவுகணையை அவள் செம்பவள செவிகளில் மோதவிட்டவாறு

 

“பர்வி.. நான் தான் அபர்ஜித்…” என்று சொல்ல அந்த வார்த்தைகள் செவிவழிச் சென்று அவள் இதயத்தின் அடியாழத்தில் இறங்கியதோ என்னவோ… அடுத்த நொடியே அவள் எதிர்ப்புகள் நின்று போனது.

 

அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவள், இப்போது அழுத்தத்தை கொடுக்காமல் அப்படியே இருந்தாள். ஆபர்ஜித்தே இதை எதிர்பார்க்கவில்லை.

 

அவன் குரலை கேட்டதும் அவள் அவனை எதிர்க்கவில்லை. அவன் பெயரை சொன்னதும் அவன் ஸ்பரிசத்தை ஏற்றுக் கொண்டாளா?.

 

அவள் இதழில் இத்தனை நேரம் புதைந்து கிடந்த போது கிடைத்த இதத்தை விட, இப்போது ஆயிரம் மடங்கு இதத்தையும் சுகத்தையும் உணர்ந்தது அவன் மனது.

 

உள்ளமும் உடலும் காதலிலும் தாபத்திலும் துள்ளி குதிக்க, அவள் இதழ்களை தன் அதரங்களால் உரசியபடி “பர்வி..” என்று மோக குரலில் அவன் அழைக்க “ம்ம்..” என்ற மெல்லிய பதில் அவளிடம்

 

அவள் கீழ் இதழை பல்லால் கடித்து விடுவித்தவன் “கிஸ் பண்ணட்டுமா?..” என்று கேட்க “ம்ம்..” என்று அவளைக் கேட்காமலே ஒலித்தது அவள் நாதம்.

 

அவன் செய்யும் சில்மிஷங்கள் என்ன? அவளிடம் அனுமதி கேட்கும் முறை என்ன? முழுதாக நனைந்த பின் முக்காடு எதற்கு என்பது போல் இருந்தது அவன் செயல்.

 

மீண்டும் அழுத்தமாக ஆழமாக அவள் இதழ்களை தன் இதழ்களுக்குள் புதைத்துக் கொண்டான். இதழின் ஆழம் செல்ல செல்ல அவள் உயிரின் ஆழம் கண்டு கொண்டான்.

 

இதழ்கள் நான்கும் முட்டிக்கொள்ள, அவனின் ஒரு கை அவள் இடையில் சிருங்காரம் மீட்ட, அவன் கால்கள் அவள் கால்களுடன் நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.

 

அவன் மொத்த எடையும் அவள் மீது அழுந்த, தூக்கத்தில் நித்ரா தேவியின் பிடியில் இருந்தவளை மன்மத தேசம் அழைத்து சென்றிருந்தான் அபர்ஜித்.

 

அவன் முத்தத்தின் முழு வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல், மொத்தமாக தூக்கத்தின் பிடியில் இருந்து விழித்துக் கொண்டாள் பர்விதா. கண்களைத் திறந்தவளுக்கு அப்போதுதான் முழு உணர்வே வந்தது.

 

அவளை மொத்தமாக அவன் உடலினுள் சிறை வைத்து, இதழை சித்திரவதை செய்து கொண்டிருக்க, முழு பலம் கொண்டு அவனை பிடித்து தள்ளிவிட்டாள் பரவிதா.

 

மதுரசம் அருந்தியவன் போன்று மயக்கத்தில் இருந்தவன் கட்டிலின் மறுமுனையில் தள்ளி விழுந்தான். சற்று மிரட்சியுடன் திகைத்த விழிகளால் அவனைப் பார்த்து

 

“நீங்க எப்டி.. இ.. இங்க என்ன பண்றீங்க…? இன்று பதற்றமாக கேட்க

 

“ஹேய் ரிலாக்ஸ்.. பயப்படாத நான் தான்…”

 

“நீங்க தானா?.. அதத்தான் கேட்குறேன் நீங்க எப்டி இங்க…? என்று கதவை பார்க்க

 

“நீ டோர் லாக் பண்ணல.. லேசா திறந்துட்டு தான் வந்தேன்…” என்றான் அவன் தோள்களை குலுக்கி

 

“கதவ லாக் பண்ணலனா உள்ள வந்துருவீங்களா? அது எப்டி.. உங்கள வீட்ல யாராச்சு பாத்தா…” என்று அவள் பதற

 

“ஹேய் நீ முதல்ல சத்தம் போடாத.. உன் சத்தம் கேட்டு தான் யாராச்சும் வந்துட போறாங்க.. நான் உன்ன பாக்க தான் வந்தேன்…” என்றான் அவன்

 

“என்ன பாக்க எதுக்கு நீங்க வரணும்.. முதல்ல இங்க இருந்து போங்க.. என்ன என்ன பண்ணீங்க…?” என்று கேட்டு அவள் உதட்டை புறங்கையால் துடைக்க, எரிச்சலாக இருந்தது.

 

“ஸ்ஸ்ஸஆஆ..” என்று அவள் முனக “பர்வி என்னாச்சு…?” என்று அவன் அவள் அருகில் வரவும்

 

“தள்ளிப் போங்க.. கிட்ட வராதீங்க.. பண்றது எல்லாம் பண்ணிட்டு.. எதுவும் தெரியாதது போல எப்டி கேக்குறீங்க…?” என்று காட்டமாக கேட்டவள்

 

கட்டிலில் இருந்து இறங்கி இரவு விளக்கை அணைத்துவிட்டு, பிரகாசமான மின் விளக்கை போட்டு, கண்ணாடியில் தன்னைப் பார்க்க,

 

உதடு சிவந்து,வீங்கி இருந்தது. இரண்டு இடங்களில் அவனது பல் தடங்கல் வேறு, அவளது இரவு உடை கசங்கி, தலை கலைந்து, அவள் இருந்த கோலமே கூடல் முடித்த புது பெண் போன்று இருந்தது.

 

தன்னை கண்ணாடியில் பார்த்தவள் கண்ணாடியினூடே அவனை முறைத்து, எரிக்கும் பார்வையை அவன் பக்கம் திருப்ப,

 

‘ஐயோ காஞ்ச மாடு கம்பு மேல பாஞ்ச மாதிரி பாய்ஞ்சுட்டியேடா.. சேதாரம் ரொம்ப அதிகம் போலயே.. நீ வந்தது எதுக்கு.. நீ பண்றது என்ன.. போச்சு போச்சு தாம் தையான்னு குதிக்க போறா…’ என்று அவன் மனதுக்குள் அலற

 

“திருப்தியா இப்போ.. நீங்க வந்த வேலை முடிஞ்சுதா.. இப்டி உடம்புக்கு…” என்று அவள் ஆரம்பிக்க

 

“பர்வி ப்ளீஸ்.. தயவு செஞ்சு எந்த வார்த்தையும் விடாத.. உன்ன பாக்கணும் பேசணும்னு தான் டெய்லி காலேஜ் வந்தேன்.. நீ வரல.. சரின்னு நானே நேத்து வீட்டுக்கு வந்தேன் உன்ன பாக்க முடியல..

 

…என்ன பத்தி சொல்றதுக்கு.. என் மனசுல இருக்கிறத எக்ஸ்பிளைன் பண்றதுக்கு.. அதுக்கு கூட நீ எனக்கு ஸ்பேஸ் தரல.. நீ என் கண்ணுல இருந்து மறைஞ்சிட்டா விட்டுருவேனா?.. இல்ல உன் மீதான என் காதல் அழிஞ்சிடுமா?..

 

…உன்ன பாக்கணும், பேசணும், என்னால நீ காலேஜ் வராம இருக்க தேவையில்லனு உன்ன காலேஜ் வர சொல்லணும்னு தான் வந்தேன்.. ஆனா நான் என்னடி பண்ணட்டும்.. உன்ன பாத்தாலே எனக்கு எல்லாமே மறந்து போகுது..

 

…நீ யாரு, நான் யாரு.. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சுதா? இல்லையா? எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது பர்வி..

 

…உன்ன பாத்த அடுத்த நிமிஷமே நீ என்னோடவள், நான் உன்ன என்னவேணும்னாலும் பண்ணலாம் என்கிற அளவுக்கு, அப்டி ஒரு நினைப்பு எப்டி வருது எனக்கு தெரியல ..

 

…சாரி தப்பு தான்.. ஆனா நான் பர்மிஷன் கேட்டேன் தெரியுமா.. நீ கூட ஓகே சொன்ன…” என்று சொல்ல

 

புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள் “நான் ஓகே சொன்னேன்.. நீங்க கிஸ் பண்ண பர்மிஷன் கேட்டீங்க இல்ல.. சான்ஸ் கிடைச்சதும் யார் என்னனு பாக்காம இழுத்து வச்சு கிஸ் பண்ணுவாரு தானே நீங்க.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்…”

 

“அது.. நீ தூக்க கலக்கத்துல தான் ஓகே சொன்ன.. இருந்தாலும் ஓகே ஓகே தானே.. அதனால கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்.. அது இருக்கட்டும் நீ ஏன் இந்த ஆறு நாளா காலேஜ் வரல…?”

 

“உங்களுக்கு பயந்து ஒன்னும் நான் காலேஜ் வராம இல்ல.. எனக்கு ஸ்டடி ஹாலி டே…” என்று சொல்ல

 

சன்னமான சிரித்தவன் “டெய்லி காலேஜ் வாசல்ல போய் நிக்கிறேன் எனக்கு தெரியாதா.. உனக்கு கிளாசஸ் நடக்குதா இல்லையான்னு.. பார்டி பொய் சொல்லாத..என்ன அவாய்ட் பண்ண தான் நீ காலேஜ் வரல..

 

…ஆனா நீ என்ன அவாய்ட் பண்ணுன்னா நான் இதே மாதிரி உன்ன டெய்லி தேடி வருவேன்.. ஜஸ்ட் எனக்கு உன்ன பாத்தா போதும்.. ரெண்டு நிமிஷம் உன்கூட பேசுனா போதும்.. மத்தபடி நான் எதுவும் பண்ண மாட்டேன்.. ஆனா இந்த மாதிரி பண்ணுனேன்னு வை…” என்றவன்

 

கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கி, இடையோடு கை கொடுத்து அவனுடன் இறுக்கிக் கொண்டான். “இதே மாதிரி டெய்லி வருவேன்.. உன்ன என்னெல்லாம் பண்ண தோணுதோ பண்ணுவேன்.. எனக்கு எந்த பயமும் இல்ல..

 

…நீ இப்போ கூட கத்தலாம்.. எல்லாருமே பாக்கட்டும்.. எனக்கும் உனக்கும் மேட்டர் முடிஞ்சிடுச்சுனு சொல்லி உன்ன எனக்கு கட்டி வைக்க சொல்லுவேன்.. பர்ஸ்ட் திட்டுவாங்க, அடிக்க கூட செய்யலாம்.. போலீஸ்ல கூட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.. பட் ஐ டோன்ட் மைண்ட், எனக்கு தேவ நீ..

 

…அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்…” என்று புருவம் உயர்த்தி சொன்னவன், கண்ணாடி மேஜையில் இருந்த அவன் வாங்கி கொடுத்த சாக்லேட்டை பார்த்தேன்.

 

அது பிரிக்காமல் அப்படியே இருந்தது. மற்ற கையால் அந்த சாக்லேட்டை எடுத்தவன், “இது உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன்.. சாப்பிடல..?” என்று கேட்க

 

“நீங்க வாங்கி தந்ததால தான் சாப்பிடல…”

 

“ஓஹோ.. நான் வாங்கி தந்தா சாப்பிட மாட்ட.. இப்போ நீ இத சாப்பிடுறியா இல்லனா ஊட்டி விடட்டுமா?..”

 

“நீங்க ஊட்டி விட்டாலும் நான் சாப்பிட போறது இல்ல…”

 

“நான் ஊட்டி விட தான் போறேன்.. நீ சாப்பிட தான் போற…” என்றவன் அந்த சாக்லேட்டை பிரித்து, அவளை பார்த்துக் கொண்டே அவன் உதட்டின் அருகே கொண்டு செல்ல, அவளுக்கு புரிந்து போனது அவன் எவ்வாறு ஊட்டப் போகின்றான் என்று.

 

உடனே அவன் கையில் இருந்து அதை பறித்தவள் “நான் சாப்பிடுறேன்.. நீங்க இது போல திரும்ப பண்ண மாட்டேன்னு சொல்லுங்க…” என்று கேட்க

 

“நீ முதல்ல சாப்பிடு.. அதோட நாளையிலருந்து காலேஜ் வா.. வேற எங்கேயுமே நீ வர வேணாம், காலேஜ் வாசல்ல வச்சு உங்கிட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு நான் கிளம்பிடுவேன்…” என்று சொல்ல

 

“நீங்க பண்றது எல்லாம் தப்புன்னு உங்களுக்கு புரியலையா?..”

 

“தப்புன்னு தெரியாமலா பண்ணுவேன்.. தெரியுது தான், பட் ஐ காண்ட்.. எனக்கு நீ வேணும்.. நீ சம்மதம் மட்டும் சொல்லு ரெண்டு வீட்லயும் பேசி, பார்கவி மனசு நோகாத அளவுக்கு அவளுக்கு புரிய வச்சு, நம்ம கல்யாணத பண்ண வேண்டியது என் பொறுப்பு..

 

…நீயா ஓகே சொல்லிட்டேனா நான் நல்லவன்.. இல்லனா நீ ஓகே சொல்ற வரைக்கும் இப்டித்தான் டார்ச்சர் தொடர்ந்து கொண்டே இருக்கும்…” என்று அவன் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டி சொல்ல

 

“உங்கள ஃபர்ஸ்ட் டைம் பாக்கும்போது ஹீரோன்னு சொன்னேன்.. ஆனா வில்லன் மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க…”

 

“ஓஹோ என்னோட ஜூனியர் ஒருத்தி இருக்கா.. அவ கூட சொன்னா பொண்ணுங்களுக்கு ஆன்டி ஹீரோவ பிடிக்குமாம்.. ஃபர்ஸ்ட் ஹீரோவா தெரிஞ்சேன், இப்போ வில்லன்.. அப்போ நான் ஆன்டி ஹீரோ தானே…” என்று அவன் கண்ணடித்து கேட்க,

 

“மூஞ்சி.. கிளம்புங்க…” என்று அவள் திமிற

 

“உன்ன விடலாம் முடியாது.. நீ முதல்ல சாக்லேட் சாப்பிடு…” என்று அவன் சொல்ல

 

இழுத்து பெருமூச்சு விட்டவள் அந்த சாக்லேடின் ஒரு முனையை கடிக்க, அந்த சாக்லேடில் அவள் இதழ் அழுந்தி, உரசி, வெளியே வருவதை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன்,

 

அவள் ருசித்து அந்த இனிப்போடு எச்சிலை கூட்டி விழுங்கும் போது அவள் தொண்டைக் குழியில் கண் பதித்திருந்தவன் நா தாபத்தில் வறண்டு போனது.

 

“இந்த வைட் சாக்லேட்ல அப்டி என்ன இருக்கு.. உனக்கு ரொம்ப பிடிக்குது.. நானும் டேஸ்ட் பண்ணி பாக்கட்டுமா…?” என்று கேட்க

 

சலிப்பாக கண்கள் இரண்டையும் உருட்டியவள் “இந்தாங்க…” என்று அவன் புறம் அந்த சாக்லேட்டை நீட்ட, அவள் கையை வெளிப்புறமாக நீட்டி பிடித்தவன், குனிந்து அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்.

 

அவளுக்கோ உடல் துள்ளி அதிர்ந்தது. அவள் எச்சில் கலந்த அந்த வெள்ளை நிற சாக்லேட், அவன் தொண்டை குழிக்குள் இதமாக இறங்கியது.

 

அவள் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், அவள் இதழ் சுவையில் இன்பமாக கரைந்து கொண்டிருந்தவனுக்கு எங்கோ தூரத்தில் கோழிகள் ஒன்றாக சேர்ந்து அலறும் சத்தம் கேட்க, அவளிலிருந்து பிரிந்தவன்

 

“இந்த நேரத்துல என்ன சத்தம்…?” என்று கேட்க அவனை அவள் முறைத்துப் பார்க்க

 

“சரி நீ தூங்கு.. நான் என்னன்னு பாக்கிறேன்.. நாளைக்கு கண்டிப்பா காலேஜ் வார.. இல்ல நான் நைட்டுக்கு வந்துருவேன்…” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி விட்டு வெளியேறினான்.

 

வெளியேறியவன் அறிவழகி நின்ற இடத்தை பார்க்க, அது காலியாக இருந்தது. உடனே “என் அறிவே” என்று தலையில் அடித்துக் கொண்டவன் வீட்டை விட்டு வெளியே வர, அவன் எண்ணியது போன்று கோழியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது அறிவழகி தான்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்