Loading

அத்தியாயம்-08

 

அந்த விழா இனிதே முடிய, கண்ணீரோடு நின்றிருந்த தோழியை மனம் வருந்த பார்த்துக் கொண்டிருந்த அகர்ணன், “ஜஸ்ட் சில் ப்ரியா.. ஹீ நீட் ஸம் டைம்” என்க, 

 

“என்னடா டைம்? நம்மல வச்சும் தான் நியூஸ் வந்தது. அதுக்கு நம்ம அதையேவா நினைச்சுட்டு இருந்தோம்? சும்மா இருக்குற காதல மூடி மறைக்க நொண்டி சாக்கு சொல்லிட்டு சுத்துறார்.‌ இவரெல்லாம் என்னை லவ் பண்ணி நான் நல்லா அலைய விட்டிருக்கணும்” என்றபடி தன் கண்ணீரைத் துடைத்தாள்.

 

அதில் வாய்விட்டு சிரித்தவன், “இது முன்ஜென்மத்துல நடந்திருக்கும் போல. அதான் இப்ப பழிவாங்குறார்” என்ற அகர்ணன்,

 

 “ப்ரியா.. நம்ம மேரேஜ் பண்ணிக்கப்போறோம்னு மட்டுமே தான் தப்பான செய்தி வந்தது. ஆனா அவருக்கு அப்படி இல்லை. ஜான்விகா மேடம் கூட லிவின்ல இருக்குறதாகவும்; நீ ப்ரபோஸ் பண்ணது தெரிஞ்ச சிலர் உன்னை அவர் செகேண்ட் ஹேண்டா வச்சுக்க போறதாகவும் செய்திகள் வந்தது. அப்படி இருக்க அவரால அதை எப்படி அக்செப்ட் பண்ணிக்க முடியும்?” என்றான்.

 

“அகர்.. அது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சுடா. இன்னுமா வெளிய வர முடியலை? நானே அதை ஒரு விஷயமா எடுத்துக்கலைனு தானே சொல்றேன்?” என்று விடாது பிடித்துத் தொங்கும் தோழியை இதற்கு மேலும் பேச்சுக் கொடுத்து சமாளிக்க இயலாது என புரிந்தவன், தன் தோள் வளைவில் நிறுத்தி, 

 

“இந்தா” என்று சட்டைப் பையிலிருந்து ஒரு இனிப்புக்கட்டியை எடுத்துத் தந்தான்.

 

“சாக்லேட் கொடுத்து ஏமாத்த பார்க்குறியா?” என்று பாவம் போல் கேட்டவளைப் பார்த்து இதழ் சுழித்தவன், 

 

“வேணாம்னா போ” என்க, 

 

“ஏ ஏ..” என்றபடி அதை பிடுங்கிக் கொண்டாள். 

 

அதில் சிரித்தபடி அவள் தலை கலைத்தவன் கையில் சுளீரென அடித்தவள், 

 

“ஹேர் ஸ்டைல குழைக்காத” என்று கூற, 

 

“அய்ய.. பொல்லாத ஹேர் ஸ்டைல்” என்றான்.

 

இவர்களது பேச்சை சன்னமான புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகா, “சோ கியூட்ல?” என்க, 

 

விஷ்வேஷ்வரன் ‘ஆம்’ என்பதுபோல் தலையசைத்தான். 

 

அகர்ணனை கண்கள் மின்னப் பார்த்தவள் மனதினுள் அவனிடம் ஏதோ ஒன்று தன்னை ஈர்ப்பது போன்ற உணர்வு. அந்த உணர்வை ரசித்தாள் அத்தனை இனிப்பாகத்தான் இருந்தது. ஆனால் தானிருக்கும் சூழலும் சிக்கலும் எடுத்துரைக்கும் மனம் சட்டென அந்த இனிப்பை விட்டு அமிலம் பட்டதாய் துடிக்கின்றது.

 

அதில் பெருமூச்சோடு தலைகுனிந்தவள் முன் வந்த ராஜ், “அகநகை.. ஹேப்பி டு பீ அ பார்ட்னர் வித் யூ.. யூ ஆல். நைஸ் பார்டி (உன்.. உங்க எல்லாருடனும் தொழில் சார்ந்த நட்பு வைத்துக் கொண்டதில் மகிழ்கிறேன்)” என்க, 

 

“தேங்கியூ மிஸ்டர் ராஜ்” என்றாள். 

 

ஜான்விகா மற்றும் துருவனும் அங்கே வந்திட, ப்ரியாவை சமாதானம் செய்து அகர்ணனும் வந்தான். 

 

“ஓகே பை (bye)” என்ற ராஜ் கைநீட்ட, சட்டென அதை பற்றிக் குலுக்கிய துருவன், “தேங்கியூ ஃபார் கமிங் மிஸ்டர் ராஜ்” என்றான். 

 

அதில் புன்னகையுடன் தலையசைத்த ராஜ் அகர்ணனைத் திரும்பிப் பார்த்து, “என்ன மேன் என் கூட கார்ல வரியா?” என்று வினவ, 

 

“யா சார்” என்றவன், தோழியைப் பார்த்து தலையசைத்தான்.

 

பதிலுக்கு தலையசைத்தவள், “மேம்.. சார்.. டிசைனிங் பண்ணதோட வர்க் முடிஞ்சதுனு விடாம என்னையும் இன்வைட் பண்ணதுக்கு தேங்ஸ்” என்க, 

 

‘ம்கும்.. உன்னை இன்வைட் பண்ணதானடி அவன் பார்டியே வச்சான்’ என்று அகாவும் ஜானும் நினைத்துக் கொண்டனர். 

 

“இட்ஸ் அவர் ப்ளஷர்” என்று துருவன் கூற, 

 

“தேங்கியூ சார்” என்றவள் நண்பனுக்கும் தலையசைத்துவிட்டு தன்னவனை வலி நிறைந்த பார்வை ஒன்று பார்த்துவிட்டுச் சென்றாள்.

 

யாவரும் புறப்பட்டபின் தோழர்கள் நால்வரும் ஜேவுடன் புறப்பட, அகா மற்றும் விஷ்வேஷின் மனங்கள் மட்டும் இருகொல்லி எறும்பாக தவித்தன. 

 

‘அவரை நான் காதலிக்கிறேனா? இது எப்படி சரிவரும்? ஏன் இவர் மேல எனக்கு இப்படி ஒரு உணர்வு? இந்த உலகத்துல இருந்து நான் திரும்பி என் உலகத்துக்கு போயிட்டா இந்த உறவு என்ன ஆகும்?’ என்று அகா மனதோடு புலம்ப, 

 

‘நாம செய்றது சரிதானா? அவள அழவச்சு பாக்குறோமே.. இது தேவை தானா?’ என்று அவன் மனம் எண்ணியது.

 

இருவரும் பின்னிருக்கையில் சைலன்டாக இருக்க, ஜான்விகாவும் துருவனும் கசகசவென பேசிக் கொண்டே இருந்தனர்.‌ 

 

திடீரென இருவருக்கும் கைகலப்பாகி “டேய்.. குடுடா..” என்று இவள் கத்த, 

 

“முடியாது போ லூசு” என்றான். 

 

“ஏய்.. குடுடா..” என்றவள் அவன் முடியைப் பிடித்து இழுக்க, 

 

“ஆ..” என்றவன் கத்தியவன் சத்தத்தில் திடுக்கிட்ட அகா மற்றும் விஷ் நடப்புக்கு வந்தனர். 

 

“டேய்” என்று இருவரும் கத்தியதில் துருவனும் ஜானும் இருவரையும் திரும்பிப் பார்த்தனர்.

 

“எதுக்குடா இப்படி கத்துறீங்க?” என்று அகா வினவ, 

 

கையில் இருந்த ஒற்றை சாக்கிலேட்டை காட்டிய துருவன், “பிடுங்குறாடி” என்றான். 

 

அதில் சொத்தென தலையில் அடித்துக் கொண்ட விஷ், “அடேய்.. ஏன்டா இப்படி??” என்று வினவ, 

 

“ஏன் மச்சி… இன்னும் நமக்கிந்த பிச்சைக்கார குணம் போகலையோ?” என்று ஜான் சீரியஸாக துருவன் காதருகே வினவினாள். 

 

அதில் யாவரும் பக்கென சிரித்துவிட, அந்த ஒற்றை இனிப்புக்கட்டியை ஒருவர் மாற்றி ஒரு கடித்து பங்கிட்டு உண்டனர்.

 

அதில் ஒரு திருப்தியான புன்னகை ஒன்று அவர்கள் முகத்தில் வந்துப் போக, அகாவும் விஷ்ஷும் தங்கள் எண்ணங்களிலிருந்து தற்காலிகமாக விடுபட்டனர். 

 

யாவரும் அவரவர் வீடு திரும்பிவிட, மறுநாளின் பொழுது விடியாது இன்றைய இரவு முடியாது இந்த நிமிடம் நின்றுவிடாதா என்ற எண்ணத்தோடு உறக்கம் கொண்ட அகநகை காலை விழித்துக் கொண்டாள். எப்போதும் போல் தயாராகியவள், ஜேன்ஸியுடன் ஜான்விகா வீட்டிற்கு செல்ல, தோழர்கள் யாவரும் அங்கு வந்து கூடினர்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாவரும் ஜான் வீட்டில் தங்கள் பொழுதை கழிக்க வந்திருந்தனர். காலை உணவை முடித்துக் கொண்ட யாவரையும் பார்த்த ஜான், “ஏ.. காலைல சாப்ட தட்ட ஸ்கேன் பண்ணாதானே வெளிய வரமுடியும்? எப்படி அப்றம் வந்தீங்க?” என்று வினவினாள்.

 

“மார்னிங் வெளிய சாப்பிடுற ஐடியா இருந்தா டைமிங் செட் பண்ணிட்டு எங்க போய் சாப்பிடுறோமோ அங்க பிளேட்ட ஸ்கேன் பண்ணி ஜே மூலமா வீட்டுல உள்ள மிஷினுக்கு அனுப்பிடணும்” என்று அகா கூற, 

 

“ஏ ஆத்தி.. எம்பூட்டு பிராஸஸ்” என்றாள். 

 

“சரி வாங்க எங்கயாவது வெளிய போகலாம்” என்று விஷ் கூற, 

 

“எங்க போக?” என்று துருவன் கேட்டான்.

 

“டேய் தெரிஞ்ச ஊருக்குத்தான் எங்க போகனும்னு பிளான் வேணும். தெரியாது இடத்துக்கு கால் போற போக்குல போனா புதுசா எதாச்சும் கண்ணுல படும்” என்று ஜான் கூற, மூவரும் வாய்விட்டு சிரித்தனர். 

 

“அப்போ கார்ல போகலையா?” என்று விஷ் வினவ, 

 

“வேணாம்டா.. நடந்தே போகலாம். நமக்கு இதுலாம் செட்டே ஆகாத போல இருக்கு” என்று அகா கூறவும், “ஆமா அகா.. புதுசா இருக்கு. அதுவும் அந்த கோர்ட் சூட்லாம் போட்டுட்டு ஆஃபிஸ் போனா எனக்கே ஏதோ சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி இருக்கு” என்று துருவன் கூறினான்.

 

“சந்தடி சாக்குல உன்னைய ஹீரோனு சொல்லிக்குற பாத்தியா?” என்று ஜான் கலாய்க்க, 

 

“அம்மா தாயே.. நான் காமெடியன் தான்.. உன்னைய பக்கத்துல வச்சுகிட்டு ஒருவார்த்த பேச முடியுதா..” என்றான். மீண்டும் கலகலப்பாக சிரிப்பொலி பரவ, ஜேன்ஸியுடன் சேர்ந்து புறப்பட்டனர்.

 

சில நிமிடங்கள் பேசியபடியே நடந்துகொண்டிருந்த தோழமை கூட்டம், ஒரு குறிப்பிட்ட தெருவிற்குள் நுழையப் போக, சில இயந்திர மனிதர்கள் வந்து தடுத்தனர். 

 

நால்வரும் அவர்களைப் புரியாமல் பார்க்க, அவர்கள் நால்வரையும் பரிசோதனை செய்தனர் அந்த இயந்திர மனிதர்கள். 

 

“ஏ.. கூசுது.. கைய எடு குட்ட மண்ட” என்று குலுங்கிய விஷ் துள்ளி குதிக்க, 

 

“அடச்சீ கம்முனு இருடா. பொம்பளபிள்ளைங்க நாங்களே சைலெண்டா இருக்கோம்.‌ இவன் இந்த குதி குதிக்குறான்” என்று ஜான் கூறினாள். 

 

ஜேன்ஸியிடம் வந்து பேசிய அந்த இயந்திர மனிதன் அதனிடமிருந்து எதையோ வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே விட்டது.

 

அங்கு சுற்றிலும் மாட்டு படம் கொண்ட பெரிய பெரிய விளம்பர அட்டைகள் தாங்கிய தொழிற்சாலைகள் இருக்க, “ஏ ஜே.. என்னது இதெல்லாம்? எதுக்கு நம்மல செக் பண்ணிட்டு விடுறாங்க?” என்று துரு கேட்டான். 

 

“இது கௌ ஃபார்மிங் பேக்டரீஸ் (மாடு உற்பத்தி ஆலயம்) ஏரியா சார். இங்க சோதனை பண்ணாம விடமாட்டாங்க. என்கிட்ட என்னோட கீ கார்ட் வாங்கிட்டுப் போனாங்க. அதை வச்சு தான் என்னோட பவர் நான் திரும்ப ஆக்ஸஸ் பண்ணிக்க முடியும். என்னைப் போன்ற இயந்திர மனிதர்கள் வைச்சு இங்க எந்த தொழிற்சாலைகளையும் சேதப்படுத்திடக் கூடாதுனு அதை வாங்கிட்டுப் போறாங்க. இந்த தெருவை நம்ம கடந்ததும் அதை ரிடர்ன் பண்ணிடுவாங்க” என்று ஜே கூற, 

 

“கௌ ஃபார்மிங்கா.. அப்படினா?” என்று ஜான் வினவினாள்.

 

“இதுக்கு தான் கொஞ்சமாச்சு ஜுவாலஜி படிக்கனுமுங்குறது” என்று துரு கூற, 

 

“அடேய்.. இது இங்கிலீஷ்டா” என்று விஷ் கூறியதில் யாவரும் தலையில் அடித்துக் கொண்டனர். 

 

“மாட்டு உற்பத்தி தொழிற்சாலை சார். இதை தொழிற்சாலைனும் சொல்லலாம் லேப்னும் சொல்லாம்.. ரெண்டும் ஒன்னாவே இருக்கும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்ன நம்ம நாட்டுல மாடுகளோட எண்ணிக்கை ரொம்பவும் குறைஞ்சு போச்சு. நம்ம செய்த பெரிய தப்பு நம்ம நாட்டு மாடுகளை வெளி நாடுகளுக்கு வித்தது. அதை வாங்கி நிறையா ஹைபிரிட் வெரைட்டி மாடுகளை உருவாக்கி நமக்கே கொள்ளை லாபத்துக்கு அவங்க விற்க துவங்கினாங்க”

 

“இதை புரிஞ்சுக்காம நம்ம மக்கள் மாட்டை பார்த்துக்க முடியாததாலும் வறுமைனாலும் அதுகளை வித்துட்டாங்க. இந்தியால மாட்டோட எண்ணிக்கை பத்து வருடங்கள் முன்பு பெரிய சரிவ அடையவும் தான் இருக்கும் மாடுகளை வைத்து மாடுகளை தயாரிக்க ஆரம்பிச்சாங்க” என்று ஜே கூற, 

 

“தயாரிப்பாங்களா? என்னடா சொல்ற?” என்று அகா வினவினாள்.

 

“ஆமா மேம்.. ஒரு ஆண் மாட்டு விந்தனு பெண் மாட்டோட உயிரணு எடுத்து செயற்கையா கருவை உருவாக்கி அதை மாட்டுக்குள்ள செலுத்தி மாடுகளை உருவாக்குவாங்க. இப்படி உருவாக்கப்படும் மாடுகள் அதிக அளவு பால் கொடுக்கக்கூடியதா இருக்கும். ஆனா வலிமை இருக்காது சீக்கிரம் செத்துடும். அதே வலிமை மிக்க மாடுகள் நிறையா பால் தராது. விவசாயத்துக்கு இந்த மாதிரி பால் அதிகம் கொடுக்காத பசு மற்றும் காளை மாடுகள உற்பத்தி செஞ்சு விப்பாங்க” என்று ஜேன்ஸி கூற, 

 

“டெஸ்டியூப் பேபி போல டெஸ்டியூப் காஃப் (கன்று) போலயே” என்று ஜான் கூறினாள்.

 

“ம்ம்.. இந்த டெஸ்டியூப் பேபி முறை சில வருடங்கள் முன்ன மனிதர்கள் செய்தாங்க. அதை தான் இப்போ மாடுகளுக்கு அப்ளை பண்றாங்க. இப்போ இயற்கையா மாடுகள் உருவாகுறதே இல்ல. இப்படி உருவாகும் மாடுகளோட வலிமை ரொம்பவும் குறைவா இருக்குறதால மாடுகளால இனப்பெருக்கம் செய்ய முடியுறதில்லை. பால் உற்பத்தி அதிகம் வேணும்னு அதுக்கான மரபணுவை அதிகளவு தூண்டுவதால் அது மற்ற சில குணங்களை ரொம்பவும் குறைச்சிடுது. அதனால மாடுகளோட வலிமை மிகவும் குறையுது”

 

“அதனால பால் குறைவாகவும் வலிமை அதிகமாகவும் தயாரிக்கும் மாடுகளை தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்துவாங்க. அப்படியான மாடுகளை விவசாயிகளுக்கு வித்துடுவாங்க. அவங்களுக்கு விவசாயத்தில் உழுதல், உரமிடுதல்னு எல்லாத்துக்கும் இப்ப நவீன கருவிகள் வந்துட்டாலும் மாட்டோட பயன்பாடுகளும் இருக்கத்தான் செய்யுது. அதனால தான் இந்த விற்பனை முறை. சீக்கிரம் இந்த மாடுகள் இறந்து போனாலும் அந்த உடலிலிருந்து வேண்டிய அத்தனையும் எடுத்து வெவ்வேறு விதமா பயன்படுத்திடுவாங்க”

 

“அதாவது மாட்டுத்தோல் லெதர் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், இறைச்சி பதப்படுத்துப்படும் உணவுகளை விநியோகம் செய்யும் தொழிற்சாலைகளுக்கும், எலும்புகள் உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குனு இறந்த மாடுக்கான மதிப்பு ரொம்ப அதிகம். இது அத்தனையையும் வேண்டிய நிறுவனங்களுக்கு விற்க ஏலம் நடத்த ஒரு நிறுவனம் இருக்கு. அதிக விலை கொடுத்து வாங்கிட்டுப் போக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருவாங்க. சில சமயம் சரிசமமா பங்கிட்டும் விற்பாங்க” என்று ஜேன்ஸி நீண்ட விளக்கம் கொடுத்து யாவரையும் விழிபிதுங்க வைத்தது.

 

“நம்ம இங்க உள்ள போய் பார்க்க முடியுமா?” என்று துருவன் வினவ, 

 

“உள்ள சிஸ்டம் ரூம் மட்டும் தான் நம்ம போய் பார்க்க முடியும். அங்க நிறுவனத்தில் நடக்கும் செய்முறைக்கான வரைபடம் அன்ட் சில காணொளிகள் இருக்கும். அதை மட்டும் தான் நமக்குக் காட்டுவாங்க. முழு விவரங்கள் வெளிய சொல்லப்படாது” என்று ஜேன்ஸி கூறியது. 

 

“சரி பரவாயில்லை நம்ம போய் பார்க்கலாம்” என்று ஜான் கூற, 

 

அதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொண்ட ஜே அவர்களை உள்ளே அழைத்துச் சென்றது. 

 

அவர்களது அலைப்பேசிகள் யாவும் வெளியே ஓர் லாக்கரில் வைக்கப்பட்டு, அவர்கள் வந்ததன் அடையாளக்குறியீட்டாய் கைரேகைகள் பதியப்பட்டு என பல சோதனைகளை முடித்த பின்பு தான் உள்ளே அனுமதித்தனர். விந்தணு மற்றும் கருமுட்டையை மாடுகளிடமிருந்து சேகரித்து டெஸ்டியூப் முறையில் கரு உற்பத்தி செய்து மாடுகளுக்குள் செலுத்தும் முறையினை காணொளியாகக் காட்டிய இயந்திர மனிதன் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்கள் தயாரித்த மாடு உற்பத்தி செய்த பாலைக் கொடுத்தனர்.

 

அதை குடித்த நால்வருக்கும் சக்கரைத் தண்ணீர் குடித்தார் போன்றே இருந்தது. முகம் சுளிக்காது குடித்து முடித்து வெளி வந்தவர்களில் விஷ், “சக்கரதண்ணி மாதிரி இருக்கேடா.. இதையா பாலுனு குடிக்குறானுங்க? வந்த அன்னிலருந்து நம்ம பாலே குடிக்கலையோ?” என்று வினவ, 

 

“குடிச்சிருப்போம்.. பர்பஸா அதோட சுவைய உணர்ந்திருக்க மாட்டோம்” என்று அகா கூறினாள்.

 

“ம்ம்.. நாட்டு மாட்டுப்பால் குடிச்சு பழகிய நமக்கு ஹைபிரிட் பால் வந்ததே புதுசு தான்‌. இது மொத்தமா வேற! அதனால நமக்கு அதோட சுவை பிடிக்காதது இயல்பு தானே” என்று ஜான் கூற, 

 

“ம்ம்.. கரெக்ட் ஜான்.. நாட்டு மாட்டுப்பால் குடிச்ச நமக்கு இது பிடிக்கலை. இதை குடிச்சு வளரும் பிள்ளைகள் நாளைக்கு புதுசா மாடே இல்லாம இவனுங்களா தயாரிக்கும் பாலை குடிக்கும் நிலைமை வந்தா அதை வெறுப்பாங்க” என்று துருவன் கூறினான்‌.

 

“யப்பா டேய்.. வாய மூடுடா.. நீ ஏற்கனவே அம்பது வருஷம் முன்ன போனாலும் இப்படி தான் இருக்கும்னு சொன்னதுக்கு காலச்சக்கரம் நம்மள இங்க கொண்டாந்து விட்டுடுச்சு. மறுக்கா அம்பது வருஷம் முன்னலாம் என்னால போக முடியாது” என்று விஷ் பதற, 

 

யாவரும் வாய்விட்டு சிரித்தனர். 

 

“ஆனா துரு சொல்றதும் உண்மை தான்டா. கேட்கவே ஆச்சரியமா இருக்கு” என்று அகா கூறியபடி நடக்க, 

 

“அத சொல்லு அகா.. விட்டா இவனுங்க புள்ள குட்டியவே உருவாக்கி கொடுப்பானுங்க” என்றாள்.

 

“ஏ ஆத்தே” என்று தலையில் கைவைத்த விஷ் எங்கோ வெறித்தபடி விழிக்க, அவன் விழித்த திசை கண்ட மூவருக்கும் விழிகள் பிதுங்கி வெளியே விழுகாத குறையாக கண்கள் விரிந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அகர்ணன் மீதான ஈர்ப்பு இதயத்திற்கு இதம் அளித்தாலும் அவர்கள் இப்போதிருக்கும் இக்கட்டான சூழ்நிலை மீதான பயமும் குழப்பமும் சூழ்ந்துள்ளது அகாவை.

    விரும்பி நேசித்தவள் பின்னாலேயே சுற்றிவிட்டு இப்பொழுது அவளை சுற்றலில் விட்டு ரசிப்பது சரியா தவறா என்ற குழப்பத்தில் விஷ்.

    மாடுகள் தயாரிப்பு தொழிற்சாலை. 🥺 பிற்காலத்தில் சாத்தியமற்றது என்றெல்லாம் கூற முடியாது. அதிக வாய்ப்புள்ளது.

    துருவ் மீண்டும் பின்வரவிருக்கும் அம்பது வருட கால கனவை கூறிவிட்டானே, திரும்பவும் காலப்பயணம் செய்துவிடுவரோ!