
அத்தியாயம்-07
அந்த உயர்ரக நவீன கட்டிடமதில் பலர் கூடியிருக்க, தோழமைக் கூட்டத்தின் நிறுவனத்து புதிய கிளைக்கான துவக்க விழா துவங்கயிருந்தது. அழகிய இளம் ஊதா நிறத்தில் பல வர்ண கண்ணாடி ஜமிக்கிகளின் வேளைப்பாடு கொண்ட, நீண்ட பாவாடையும், பட்டும் படாமல் இடை எட்டிப்பார்க்குமளவு இடைவேளி கொடுத்து, வலை துணியில் முக்கால்கை வைத்த சட்டையும் அதேபோன்ற வலையால் ஆன துப்பட்டாவும் என இருந்த சோலியில் அம்சமாக இருந்தாள் ஜான்வி.
ஜான்வி உடுத்தியதை போன்றே இளநீல நிறத்தில் அகா உடுத்தியிருக்க, விஷ்வேஷ் இளம் ஊதா நிறத்தில் கோர்ட் சூட்டும், துருவன் இளநீல நிறத்தில் கோர்ட் சூட்டும் அணிந்திருந்தான்.
உடன் வந்த ஜேன்சி மூலம் இந்த கிளையை துவங்க அவர்கள் பட்ட கஷ்டங்களை அறிந்துகொண்ட நால்வருக்கும் ‘நாம இவ்வளவு கஷ்டப்பட்டா இதை திறக்குறோம்?’ என்ற பிரம்மிப்பு இருந்தது. அவர்கள் தொழில் துறை நண்பர்கள் யாவரும் வந்துகொண்டிருக்க, ஜேன்ஸி உதவியோட அவர்களை அறிந்துகொண்டிருந்தனர்.
அவர்களது அழைப்பை ஏற்று அங்கு வந்த ராஜ், “கங்கிராஜீலேஷன்ஸ் ஃப்ரண்ட்ஸ்..” என்று தன் வாழ்த்துக்களைக் கூற, அகாவின் பார்வை அவன் பின்னே அகர்ணனைதான் தேடியது. துருவன்,
“தேங்கியூ மிஸ்டர்.ராஜ்” என்று பூங்கொத்தை வாங்க, ஒருவித ஏமாற்றம் தொனித்த முகத்தை சட்டென மாற்றிக் கொண்ட ராஜ் புன்னகைத்தான்.
“மிஸ்டர் அகர்ணன் வரலையா?” என்று அகா வினவ,
“ஹா.. ஹா” என்று சிரித்த ராஜ், “அவன் அவனோட ஃப்ரண்ட பிக்கப் பண்ணிட்டு வர்றதா சொல்லிட்டான்” என்றார்.
அகநகைக்கும் விஷ்வேஷ்வரனுக்கும் ‘இதொன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்லையே’ என்று தோன்ற, அங்கு அகர்ணனும் அமிர்தப்ரியாவும் வந்து சேர்ந்தனர்.
நண்பர்கள் இருவரும் ஒன்றுபோல ‘பீச்’ நிறத்தில் உடையணிந்திருக்க, உள்ளே நுழையவிருந்த அமிர்தாவை நிறுத்திய அகர், அவளது கலைந்து முன்நெற்றியில் தவழ்ந்த முடியை சரிசெய்து, ‘ஆல் தி பெஸ்ட்’ என்பதுபோல் கைகாட்டி சிரிக்கவும் பாவை நாணத்துடன் அவன் தோளில் இரண்டு அடிவைத்தாள்.
இதனைக் கண்ட அகா மற்றும் விஷ்ஷின் முகத்தில் அழகியதோர் புன்னகை தோன்ற, அவர்கள் முன் வந்தவர்களில் அமிர்தப்ரியா, “எல்லாருக்கும் ட்ரெஸ் கரெக்டா இருக்கா மேம்?” என்று ஜான்விகாவிடம் கேட்டாள்.
“பெர்ஃபெக்டா சூட் ஆயிடுச்சு ப்ரியா. உன் டிசைனிங்ல குறை சொல்ல முடியுமா?” என்று ஜான் கூற,
“தேங்கியூ மேம்” என்றாள்.
விஷ்வேஷும் அகர்ணனும் கைகுலுக்கிய வண்ணம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அகாவின் விழிகள் அவளையும் மீறிய நிலையில் அகர்ணனைப் பருகியது.
அவனது திராவிட நிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்திற்கு அந்த பீச் நிற கோர்ட் சூட் அத்தனை கச்சிதமாக இருந்தது. பொத்தான் அணியப்படாது திறந்திருந்த கோர்டிற்குள் அவன் உடலோடு ஒட்டிய சட்டை அவனது திண்ணிய மார்பினை பறைசாற்ற, ஒரு நொடி மூச்சுக்குத் திணறிய பாவை, பின்பே தன் பார்வை உணர்ந்து விழி தாழ்த்தினாள்.
‘ச்ச! நா.. நான் ஏன் இப்படி முழுங்குற போல பார்க்குறேன்’ என மனதோடு தன்னை திட்டிக் கொண்டவளிடம் வந்த அகர்ணன், “அவி..” என்க,
சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
“தேங்ஸ் ஃபார் தி ட்ரெஸ்” என்று அவன் கூற,
“உங்களுக்கு இது நல்லா சூட் ஆகுது” என்று உள்ளார்ந்த குரலில் கூறினாள்.
சன்னமான புன்னகை ஒன்றைக் கொடுத்தவன், “தேங்ஸ்” என்று கூற, அடுத்து என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை.
ஆனால் ‘அவன் தன்னிடமிருந்து நகராமலிருக்க ஏதேனும் பேசவேண்டுமே?’ என்ற எண்ணம் மட்டும் அவளை அலைக்கழித்தது.
அவளுக்கு சிரமமின்றி அவனே, “யூ லுக்கிங் காட்ஜியஸ் அவி. இந்த லைட் ப்ளூ உனக்கு நல்லா சூட் ஆகுது” என்று கூற,
அவளுள் சில பட்டாம்பூச்சிகளின் படபடப்பு.
காற்றாகிப் போன குரலை சரி செய்தவள் தன் நன்றியைக் கூற ஒரு பதில் புன்னகையைக் கொடுத்தான்.
அங்கு மனதில் மூண்ட தயக்கங்களை ஒரு பெருமூச்சோடு ஒதுக்கிய அமிர்தப்ரியா, வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த விஷ்வேஷ்வரன் அருகே சென்றாள். அவனது மிடுக்கான தோரணையைக் கண்டு எப்போதும் எழும் ரசனையுடன் தற்போது ஒரு பயமும் வந்தது அவளுக்கு. பாவம் அவன் ஒரு காமெடி பீஸ் என்பது இந்த அமிர்தாவுக்குத் தெரியாதே!
அவனிடம் வந்தவள், “வி..சா..சார்” என்று அழைக்க, மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் இவள் புறம் திரும்பினான். பாவையவள் எழிலில் ஒரு நொடி தன்னை மறந்து சொக்கிப் போனவன், பின்பே தனது நாடகத்தை நினைவு பெற்றவனாக, “எஸ் ப்ளீஸ்” என்று இரும்பாகிப் போன குரலில் வினவினான்.
சுற்றி இருந்த இரண்டு மூன்று நபர்களை தயக்கத்தோடு பார்த்தவள், “ட்..ட்ரெஸ் எல்லாமே ஓகே தானே சார்?” என்று வினவ,
அவள் தன்னிடம் தனியே பேச எண்ணுவதைப் புரிந்து கொண்டவன், “ம்ம்.. இவ்ரிதிங் இஸ் குட். வாங்க உங்க பேமென்ட செட்டில் பண்ணிடுறேன்” என்றபடி அழைத்துச் சென்றான்.
அங்குள்ள அவர்கள் அறைக்கு வந்தவன் ஜேன்சியை அழைக்க தனது அலைபேசியை எடுக்க, “சார் சார்… உன்..உங்க கூட தனியா பேசணும்” என்றாள்.
அவளை ஏற இறங்க பார்த்தவன், “எஸ்” என்க,
“சார்.. உங்களுக்கே தெரியும். நா.. நான் உங்கள சீரியஸா லவ் பண்றேன். எ.. என்கிட்ட உங்களுக்கு என்ன பிடிக்கலைனு சொல்லுங்க. நான் மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை வேணாம்னு சொல்லாதீங்க” என்றாள்.
‘அய்யோ டார்லிங்.. சும்மாவே நான் காமேடி பீஸு.. நீயோ ஒரு அழகிய ரோஸு.. இப்படி வந்து பேசாதே நான் க்ளோஸு.. இதெல்லாம் வெறும் ஜுஜுலிகா ட்ராமா க்ளாஸு’ என்று மனதோடு பேசியவன் சிரிக்காமல் இருக்க எடுத்த போராட்டத்தில் முகத்தை கோபமாகக் காட்ட இயலாது தவித்தான்.
“ஏன் எதுவுமே பேச மாட்றீங்க” என்று அவள் கூற, சிரிப்பு வந்தவன் சட்டென அவளுக்கு முதுகு காட்டி நின்று இடையில் கைவைத்து கோபத்தை பெருமூச்சாக வெளியிடுவது போல் பாவனை செய்தான். ஆனால் உண்மையில் அவன் வெளியிட்டது அவனது சிரிப்பை.
“ஏன் உங்களுக்கு என்மேல இப்படி ஒரு கோபம்? நான் உங்கள என் ஆழ்மனசுல இருந்து காதலிக்குறேன். இதை நான் என்ன செஞ்சா புரிஞ்சுப்பீங்க?” என்று அவள் வினவ,
“ஏ!” என்றான்.
ஆடவன் உடல் குலுங்குவதைக் கண்டவள், “ஏன் இவ்வளவு கோவம் என்மேல?” என்று கூற, ‘உடல் துடித்து நடுங்குமளவு கோபம் கொள்ள நான் என்ன பண்ணேன்?’ என்று எண்ணினாள்.
‘அடப்பாவி.. அடியே லூசே.. சிரிப்ப அடக்க முடியலைடி.. இதை கூட புரிஞ்சுக்காத மக்காடி நீ? பரவாயில்லை நீ மக்கா இருக்குறது எனக்கு எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு’ என்று எண்ணியவன், “ப்ச்.. இங்க பாரு அமிர்தா. எனக்கு உன்மேல அப்படி எந்த அபிப்ராயமும் இல்லை” என்கையில் அவனுக்கே அது வலியைக் கொடுத்ததோ!?
‘ச்ச.. இந்த நாடகம் தேவை தானா?’ என்று அவனுக்குத் தோன்ற, ‘எவ்வளவு தூரம் போகுதோ பார்ப்போம்’ என்று மனம் கூறியது.
“ஆனா நீங்க என்னை பார்த்த பார்வையில் நான் காதலைப் பார்த்தேன். இப்போ இல்லை.. ரெண்டு வருஷம் முன்னவே பார்த்தேன். ஏன் நீங்க மறைக்குறீங்கனும் எனக்கு தெரியும். ப்ளீஸ் கண்டதையும் யோசிக்காதீங்க சார். நான் உங்களைத் தான் மனமார விரும்புறேன்” என்றாள்.
“வாட்? நான் எதையும் நினைச்சுட்டு சொல்லலை” என்று அவன் கூற,
“இல்ல.. ரெண்டு வருஷம் முன்ன நியூஸ்ல வந்ததை நினைச்சு தான நீங்க வேணாம்னு சொல்றீங்க?” என்றாள்.
ஒன்னுமே புரியாமல் விழிபிதுங்கி நிற்பவனைப் பார்த்தவள், “ப்ளீஸ்.. அதையே யோசிக்காதீங்க” என்றாள்.
‘அடி அத்த பெத்த லூசே.. நான் முழிக்குறது உனக்கு யோசிக்குற மாதிரியா இருக்கு?’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க,
“ப்ளீஸ்.. மத்தவங்க நினைக்குற போல நான் உங்கள தப்பா நினைக்கமாட்டேன்” என்றாள்.
‘அய்யோ.. உருப்படியா சொல்லுமா சப்டைட்டில் இல்லாத வேற மொழி படம் போல பேசுறா. போடி நான் அந்த கூகுள் மண்டையனயே கேட்டுக்குறேன்’ என்று எண்ணியவன்,
“ப்ளீஸ் லீவ் திஸ் அமிர்தா” என்றுவிட்டு விறுவிறுவெனச் சென்றான்.
செல்பவனையே விழிகளில் கண்ணீருடன் பார்த்தவள் “என்ன செஞ்சா தான் என்னை ஏத்துப்பீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க” என்று காற்றோடு முணுமுணுத்தாள்.
ஜேன்ஸியை தேடி வந்தவன் அது அகாவுடன் பேசுவதைக் கண்டு, “ஏ ஜே.. என்ன பத்தி டூ இயர்ஸ் முன்ன எதும் நியூஸ் வந்துச்சா?” என்று வினவ,
“ஆமா சார்” என்றது.
சுற்றி முற்றி பார்த்து அருகில் யாருமில்லாததை உறுதி செய்தவன், “என்ன நியூஸ்?” என்க,
கையில் ஜூஸை வைத்து உரிந்து கொண்டே ஜான்வி அவர்களை நெருங்கினாள்.
“நீங்களும் ஜான்விகா மேடமும் கல்யாணம் பண்ணிக்கப்போறதா ஒரு ஃபேக் (fake) நியூஸ் வந்தது” என்று ஜே கூறவும், ஜுஸை ஸ்பிரே செய்தவள், “ஏதே” என்க, கூட்டத்தில் ஒரு சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.
ஜேன்சி மற்றோரு ரோபோட்டிற்கு சிக்னல் அனுப்பி அந்த இடத்தை துடைக்க வைத்திட,
“அடேய் என்ன எழவுடா இது?” என்று முகத்தை அஸ்டகோணத்தில் வைத்துக் கொண்டு விஷ் கூறினான்.
“டேய் மாங்கா இந்த ரியாக்ஷன்ல இந்த கேள்விய நான் தான் கேட்கணும்” என்று ஜான் கூற,
“ரொம்ப முக்கியம்..யாரோ என்ன ரியாக்ஷனோ குடுத்துக்கோங்கடா.. முதல்ல முழுசா நான் கதை கேட்டுக்குறேன். நீ சொல்லு ஜே” என்று அகா ஆர்வத்தோடு கேட்டாள்.
“ஆமா மேம்.. ஜான் மேடமும் விஷ் சாரும் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் லிவின்ல இருந்ததாகவும் நியூஸ் வந்தது. அதுக்கப்றம் அது ஃபேக்னு அந்த நிருவனமே மன்னிப்பு கேட்டு பேனல்டியும் கட்டினாங்க. அந்த சமையம் தான் ப்ரியா மேம் கூட சார்க்கு ப்ரபோஸ் பண்ணி இருந்தாங்க. அது தெரிஞ்சு சிலர் அத வச்சும் சாரையும் ப்ரியா மேன்மையும் கூட தப்பா பேசினாங்க” என்று ஜே கூற, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தனர் ஜானும் அகாவும்.
விஷ்வேஷுக்குத் தான் ஒன்றும் புரியாத நிலை. “இப்ப எதுக்கு சோட்டா பீம்ல வர்ற சூனியக்காரி போல சிரிக்குறீங்க?” என்று விஷ் வினவ,
“உன்னையும் ஒரு பிரபலமா மதிச்சு ப்ராப்ளம் க்ரியேட் பண்ணி உன் வாழ்க்கைல கும்மி அடிச்சு விளையாடிருக்கானுங்க பாரு.. அப்ப அவனுங்க எம்புட்டு மானங்கெட்ட பயலுகளா இருக்கணும்?” என்று கூறி சிரித்தனர்.
‘பே’ என விழித்தான், “அடியே.. உன்னயும் என்னையும் வச்சு தப்பா பேசிருக்கானுங்க.. உனக்கு கோவமே வரலையா?” என்று வினவ,
“ப்ளடி லூசே.. கண்டவன் கண்ட விதமா பேசினதுக்கு நான் ஏன்டா வருத்தப்படணும்? குத்தமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். நமக்குள்ள அப்படியான எந்த உறவும் இல்லை. நானும் நீயும் நல்ல நண்பர்கள் அப்படிங்குற புரிதல் நமக்கு இருக்கு. அதனால சீரியல் ஆக்டர்ஸ் போல கிலிசரின் இல்லாம கண்ணீர் வடிக்க என்னாலலாம் முடியாது” என்றாள்.
ஜான் கூறியவற்றை கேட்ட அகாவுக்கு சில நிமிடங்கள் முன் அகர்ணன் தன்னையும் ப்ரியாவையும் வைத்து தவறாக வந்த செய்திக்கு இதே புரிதலோடு இருவரும் கடந்து வந்ததை பெருமைபட கூறியது நினைவில் வந்து போனது.
அழகிய புன்னகை ஒன்றை சிந்திய அகா இருவரையும் நோக்க, ஜானை தோளோடு அணைத்து விடுவித்தவன், “பரவால ஜான்.. ஆர்வக் கோலாறா இருந்தாலும் சிலசமயம் தெளிவா பேசுற” என்று கூறினான்.
“நீ என்ன புகழுறியா இல்ல பழிக்குறியா?” என்று புரியாமல் கேட்டவளைப் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்போடு,
“வஞ்சப்புகழ்சி அணி கேள்விப்பட்டதில்ல? புகழ்வதுபோல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும்” என்றான்.
அதில் அகா வாய்விட்டு சிரிக்க, ஜான் விஷ்ஷை முறைக்க என்று கலகலப்பாகச் சென்றது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கலகலப்பான நண்பர்கள் நால்வரும்.
விஷ் rhyming dialogues செம
🤣🤣 அவரு காமெடி பீஸ்னு அவரே ஒத்துக்கிறாரு.
Last lifeline ல அவ தான் என் lifeline range ku சுத்திட்டு இந்த life line ல அவளா வந்து காதல் சொல்லியும் இப்படி விளையாட்டு காட்டற.
Rumour கேட்டதும் ஜான் reaction super 🤣🤣 இதுக்கு நான் தான் வருத்தப்படனும்.
“நமது நட்பை பற்றி நமக்கு தெரியும் மற்றவர்கள் என்ன சொன்னால் என்ன” என்ற தெளிவு.