
அத்தியாயம்-02
ஓர் கண்ணாடி மேஜையை சுற்றி நால்வரும் அமர்ந்திருக்க, ஜே வந்தது. அதனிடம் நால்வருக்கும் குளம்பி கேட்கும்படி கூறிவிட்டு அகா தோழர்கள் புறம் திரும்ப, மூவரும் பேவென இருந்தனர்.
“யாரு அகா அந்த குட்டி கட்ட மட்ட” என விஷ் வினவ,
“அது என்னோட ரோபோட்டாம். நானே வாங்கினேனாம். பேரு(பெயர்) ஜேன்ஸி. நான் ஜேனு கூப்பிடுவேன்” என அகா கூறவும்,
“என்னடி நடக்குது இங்க? காலைல எழுந்தா எதோ பலபலனு பாலீஸ் போட்ட ரூமுள்ள அந்தரத்துல தொங்குற பெட்டுல கிடக்கேன். பாத்ரூமெல்லாம் பார்த்து அது என்ன ஏதுனு ஒரு மண்ணும் புரியல. எங்க ஆத்தாவ கூப்பிட்டா அவங்க இப்படி தான் ஒரு குட்டிய அனுப்பி விட்டாங்க. அது என்னடானா யூடியூப் செலிப்ரிட்டி பாத்ரூம் டூர் காட்டின மாதிரி சுத்தி காட்டுது” என ஜான் படபடவென புலம்பிக் கொட்டினாள்.
“எங்கம்மாலாம் நைட்டீ போட்டு கூட நான் பார்த்ததில்ல. இங்க நல்லா லுக்கா ஜீன்ஸ் போட்டுட்டு இருக்காங்க” என துரு கூற,
ஒரு பெருமூச்சு விட்ட அகா, “நம்ம அம்பது வருஷம் தாண்டி வந்திருக்கோம். ஆனா நமக்கு மட்டும் தான் அது நினைவிருக்கு” என்றாள்.
“ஏ என்னடி ஹாரி பாட்டர் கதை போல மாயாஜால கதை உருட்டுற” என ஜான் கேட்க,
“ஏ.. விளையாடலை. அது தான் உண்மை. நம்ம அம்பது வருஷம் தாண்டி வந்திருக்கோம்” என அகா கூறினாள்.
சட்டென ஏதோ நினைவு பெற்றவனாக “ஏ அகா.. நம்ம நைட்டு கார்ட்ஸ் விளையாடிட்டு இருந்தப்போ நான் சொன்னது நினைவிருக்கா?” என துரு வினவ,
“ம்க்கும்.. நேத்து என்ன சாப்டனு கேட்டாளே யோசிப்பா” என விஷ் அகாவை வாரினான்.
“தொரைக்கு மட்டும் நினைவிருக்கோ?” என அகா வினவ,
“ம்ம் இருக்கே.. ஆனா நான் சொல்ல மாட்டேன். அத என் நண்பன் சொல்லுவான். மச்சான் நீயே சொல்லுடா” என துரு தோளில் தட்டி கூறினான்.
‘அய்யோ’ என தலையில் அடித்துக் கொண்ட துருவன் “ஏ.. ராபரி, ரேப், லஞ்சம் இதுலாம் இன்னும் அம்பது வருஷம் ஆனாலும் மாறாதுனு நான் சொன்னேன்ல?” என்க,
“அப்போ நம்ம பியூச்சர் எப்படி இருக்குனு நமக்கு காட்டுறபோல இப்படி நடந்திருக்கா?” என ஜான் வினவினாள்.
யோசனையான முகத்துடன் இருந்த அகா “ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும் அது தான் உண்மைனு எனக்கு தோனுது” என்க,
“அப்ப நம்ம இனிமே இந்த உலகத்துல தான் வாழுவோமா?” என விஷ் கேட்டான்.
அவர்கள் கேட்ட குளம்பியும் வந்துவிட, மௌனத்தின் துணையோடு யோசனையாக அதை குடித்து முடித்தனர்.
ஒரு இயந்திர மனிதன் வந்த “மேம் யுவர் பில்” என்றுவிட்டு செல்ல, அதை திறந்து பார்த்த அகா “ஏதே?” என கத்தியபடி எழுந்து நின்றாள்.
அவள் எழுந்ததில் பதறிக் கொண்டு மீதி மூவரும் எழுந்திட, கடையில் இருப்போர் யாவரும் அவர்களையே பார்த்தனர்.
“மேம்.. யூ நீட் எனிதிங்?” என அந்த ஊழியர் இயந்திரம் வினவ,
பயப்பிராந்தியோடு முழித்தவள் “ஜ..ஜேன்ஸி?” என்றாள்.
அந்த இயந்திர மனிதன் “கோட் நம்பர் சொல்லுங்க மேம் கான்டேக்ட் பண்றேன்” என்க, அதற்குள் ஜே அங்கு வந்தது.
அந்த இயந்திர மனிதன் செல்லவே நால்வரும் அமர, “ஏ பைத்தியம் எதுக்கு கத்தின?” என்று துரு வினவினான்.
“அடேய் நாலு காப்பி தானடா குடிச்சோம்?” என்றவள் “ஏ தீனிமூட்ட.. எதயும் ஆர்டர் பண்ணிருக்கியா என்ன?” என ஜானிடம் கேட்டாள்.
“ஏன்டி நான் இருக்க டென்ஷனுக்கு இப்ப ஆர்டர் பண்ணி சாப்பிடதான் ஆச பாரு” என ஜான் வினவ,
“அப்றம் ஏன்டா நாலு காப்பி இருபதாயிரம் போட்டிருக்கானுக?” என்றவள் கேள்வியில் தற்போது மீதி மூவரும் “ஏதே?” என எழுந்து நின்றனர்.
“சார், மேம், கொஞ்சம் சத்தம் இல்லாம உட்காருங்க. உங்களுக்கு என்ன வேணும்?” என ஜே வினவ,
நடுநடுங்க அந்த பில் கார்டை ஜேவிடம் கொடுத்த அகா “இந்த பில்ல கட்டணும் ஜே..” என்கவும்,
“அவ்ளோதானா மேம்?” என்ற ஜே அதை ஸ்கேன் செய்து தன் முன் வந்த ஒளித்திரையில் எதையெதையோ தட்டி “கட்டியாச்சு மேம்” என்றது.
“என்னது கட்டிட்டியா? யார் அக்கவுன்ட்லருந்து கட்டின?” என அவள் வினவ,
“உங்க அகக்வுன்ட் தான் மேம்” என்றது.
“எது? என் அக்கவுன்டா? அதுல மொத்தமே அம்புட்டு கூட இருக்காதே?” என அவள் பதற,
“இல்ல மேம்.. உங்க அக்கவுன்ட்ல ஒரு கோடியே அம்பத்தி ஒன்பது லட்சத்தி ஏழுபத்தி ஓராயிரத்தி எண்ணூத்தி அறுபத்தி அஞ்சு ரூபா இருக்கு” என்று ஜே கூறியது தான் தாமதம், நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்திட்டாள்.
“ஏ..ஏ..அகா” என அவள் அருகே இருந்து துரு அவளைக் குலுக்க,
“மச்சான்.. எல்லாம் போச்சுடா. என் வீட்டுக்கு ரயிடு வர போறானுவடா.. போச்சு போச்சு எல்லாமே போச்சு. எப்படி இம்புட்டு பணம்னு கேட்டா பதிலுக்கு நான் எந்த கடைய ஏறி இறங்குவேன்” என ஒப்பாரி வைத்தவள் வாயை துரு கப்பென மூட,
“டாக்ஸ் எல்லாம் ப்ராப்பரா கட்டியாச்சு மேம்” என ஜே கூறியது.
அதில் சட்டென சடென் பிரேக் அடித்த ஒப்பாரியுடன் அதைப் பார்த்தவள் “அடேய்.. என்னாடா உளறுற? நா எங்கடா வேலைக்கு போறேன் சம்பாதிக்க? எப்புட்றா இம்புட்டு பணம் என்கிட்ட?” என மீண்டும் ஒப்பாரியை ரெசியூம் பட்டனை தட்டிவிட்டது போல் அவள் துவங்க,
“நீங்க தான் சொந்தமா கம்பெனி வச்சிருக்கீங்களே மேம்” என்றது.
இதில் அவள் திடுக்கிட்டு ஜேவை நோக்க, “அடி பாதகத்தி” என ஜான் கத்தியதில்,
“ஏ சத்தியமா எனக்கு தெரியாதுடி” என்றாள்.
அதற்குள் அவர்கள் ஆர்பாட்டம் பொறுக்காமல் அந்த கடையின் இயந்திர பணியாள் வந்து அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு செல்ல,
“ஏ ஜே.. முதல எங்களை எங்களுக்குனு எதும் பிரைவேட் இடத்துக்கு கூட்டிட்டு போ” என்றாள்.
நாள்வரும் சென்று அகாவின் காரில் ஏறியதும் ஜே வண்டியை இயக்க, “என்னடா நடக்குது இங்க? எந்திரன் படத்துல வர்ற மாதிரி சிட்டி ரோபோ கூட சுத்துது. மாடன் ஹை டெக்கா உலகம் மாறி கிடக்கு. தட்டை ஸ்கேன் பண்ணா தான் வாசப்படி தாண்ட முடியுமுங்குது, சொந்தமா கம்பெனி வச்சிருக்கேனுங்குது, அம்புட்டுக்கும் மேல என் அக்கவுன்டுல லட்ச கணக்குல பணம் இருக்குனு சொல்லுது.. டேய் நெஞ்சு வலியே வந்துடும் போலயேடா” என புலம்பியபடியே அகா வந்தாள்.
ஓர் நீண்ட, நெடிய கட்டிடத்தை அந்த மகிழுந்து அடைய, நால்வரும் வாய்பிழந்தபடி இறங்கினர்.
“இ..இது?” என அகா வினவ,
“நம்ம கம்பெனி மேம்” என்றது.
கட்டிடத்தின் உச்சியில் ‘AJVT Construction’ என்ற பலகை மின்னிக் கொண்டிருந்தது.
அவர்கள் உள்ளே செல்ல, வேலையாட்கள் மரியாதை நிமித்தம் ‘குட் மார்னிங் மேம்.. குட் மார்னிங் சார்’ என்றுவிட்டுச் சென்றனர்.
அவர்களுக்கென்ற தனியறை ஒன்றினுள் நுழைய தானாக ஏசி இயங்கி குளிரை பரப்பியது. அனைத்தயும் பிரம்மை பிடித்தார் போல் பார்த்தபடி நால்வரும் அமர, “இது யாரு கம்பெனி?” என விஷ் வினவினான்.
“இது அகா மேம், ஜான் மேம், துரு சார் அன்ட் நீங்க நாலு பேரும் சேர்ந்து ஸ்டார்ட் பண்ண கம்பெனி. சவுத் இன்டியால டென்த் பிலேஸ்லயும் ஸ்டேட் லெவ்ல்ல சிக்ஸ்த் பிலேஸ்லயும் டிஸ்டிரிக் லெவல்ல முதல் பிலேஸ்லயும் நம்ம கம்பெனி தான் இருக்கு சார். நான் தான் உங்க நாளு பேருக்கும் பொதுவான பர்சனல் செகரட்டரி ஜேன்ஸி. என்னை அகநகை மேம் கம்பனி ஸடார்ட் பண்ண வருஷம் தான் வாங்கினாங்க” என ஜேன்ஸி கூற,
“நீ எம்புட்டு?” என ஜான் வினவினாள்.
“நா ஃபிப்டி ஃபைவ் லாக்ஸ் பாட்டி ஃபைவ் தௌசன்ட் மேம்” என ஜே கூற,
“அடியாத்தி..” என நெஞ்சில் கை வைத்த அகா “ஆமா.. என்கிட்ட எப்படி இம்புட்டு பணம்?” என்றாள்.
அவள் தலையில் அடித்த துரு, “இம்புட்டு பெரிய கம்பெனிய நம்மோடதுனு சொல்லுது.. அப்போ அக்கவுன்டுல கோடி கணக்குள இருக்குறதுல என்ன அதிசயம்?” என்றான்.
“எஸ் சார்.. உங்களுக்கு இந்த கம்பெனி மூலம் நிறையா சம்பாத்தியம் உண்டு. உங்க நாலு பேரோட, ஷேர், வர்க், டாக்ஸ் எல்லாத்தையும் நான் தான் ஹான்டில் பண்ணுவேன்” என ஜே கூற நால்வரும் அதிர்ந்து, ஓய்ந்து போன நிலையில் அதை வெறித்தனர்.
“அப்ப இவனுங்க அக்கவுன்ட்ல எம்புட்டு பணம் இருக்கு?” என அகா வினவ, மூவருக்குமே ஒரு கோடியே அம்பது லட்சத்தை ஒட்டிய தொகை வங்கியில் இருந்தது.
“ஜே.. உனக்கு நான் சொல்றது புரியுமானு தெரியலை.. ஆனா சொல்றேன். எங்களுக்கு இங்க என்ன நடக்குதுனே புரியலை. நாங்க 2023 ஆம் ஆண்ட சேர்ந்தவங்க. எப்படி 2074க்கு வந்தோம்னே தெரியலை. எங்களுக்கு இது கனவு போல இருக்கு. இங்க உள்ள ரூல்ஸ் எதுமே புரியலை. எதை நம்புறதுன்னே தெரியல” என அகா கூறினாள்.
அவள் முகத்தை ஸ்கேன் செய்த ஜே அவள் சோகமாக இருப்பதை உணர்ந்து தனது இயக்கத்தில் பரிவான குரல் மற்றும் அபிநயத்தை உருவாக்கிக் கொண்டது. “சாரி மேம். இது 2074 தான். நீங்க இங்க தான் இருக்கீங்க. நீங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்ட்ஸ். ஒன்னாவே படிச்சு ஒன்னா கம்பெனி துவங்கி நல்லா நடத்திட்டு வரும் இளம் தொழிலதிபர்கள்” என ஜே கூற நால்வரிடமும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
சிலநிமிட மௌனத்திற்கு பின் “நமக்கு நம்ம நிலமை தெரிஞ்சாலும் நம்ம இப்ப இருக்குறது இங்க தான். எனக்கும் துரு சொல்ற போல அன்னிக்கு நம்ம பேசிகிட்டத வச்சு நம்ம இந்த இயர்க்கு டிராவல் ஆகிருக்கோம்னு தோனுது. இங்க இருந்து நம்ம இயர்க்கு போக ஏதாவது ஒரு வழியாவது இருக்கும். பார்ப்போம்” என விஷ் கூற,
“ஆமாடா.. அன்னிக்கு நம்மகிட்ட இல்லாத எல்லாம் இப்ப இருக்கு. இது எதோ நமக்கு உணர்த்துது. எனக்கு என்னமோ நம்மகிட்ட தான் நம்ம இங்கிருந்து போறதுக்கான விடை இருக்குற போல தோனுது. நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது ஏதோ இங்க இருக்கு. பார்ப்போம்” என ஜான் கூறினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர்
Thank you so much akka 🥰😍❤️
Very interesting 😍😍
Utube celebrity bathroom tour காட்டுவது போல சொல்லுது 🤣
யார் இந்த குட்டி கட்ட மட்ட 😝
Time travel எப்படி நடந்தது என்றே புரியாமல் நால்வரும் குழப்பத்தினில்.
ஐம்பது வருடங்களுக்கு பிறகான உலகம். இதில் அவர்கள் எதனை அறிந்து கொள்ள காலம் இங்கே அழைத்து வந்ததோ!
அடுத்தடுத்த அத்தியாயங்கள் படிக்க ஆவலாக உள்ளது.
ஹாஹா😝 ஆமா சிஸ்.. புது உலகம் புரியலை பிள்ளைகளுக்கு😝 காலம் அதை அறிய வந்தார்கள் என்பதை உணர்த்தும் சிஸ்😍 உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️