அத்தியாயம் 7
தேவகி தான் கொஞ்சம் சும்மா இரு மாமா அவங்க அப்டித்தான் தெரியும்ல உனக்கு வீட்ல இருந்து வரும்போதே சொல்லி தான கூட்டிட்டு வந்தேன். அதுனால கொஞ்சம் அமைதியா இரு சரியா. நமக்கு இவங்க முக்கியம் இல்லை. இருந்து இருந்து இப்போதான் என் அண்ணன் பொண்ணு பார்க்கவே ஓகே சொல்லிருக்கான் அத போயி நம்ம ஏதாது பேச அது தடங்கல் ஆயிரக்கூடாது மாமா. உன் நண்பனுக்கு கல்யாணம் ஆகணும் அப்டிங்கிறத நெனைப்புல வச்சுட்டு நீ தயவு செஞ்சு உன் கோவத்தை குறை மாமா. அது தான் புள்ளைய வாங்கி அந்த பொண்ணுகிட்ட குடுத்திட்டுளா பின்ன என்ன. அந்த அத்தைய முறைக்கிறத நிறுத்து சரியா என்று அவன் காதருகில் பேசிவிட்டு மற்றவர்களை பார்த்து அவள் சிரிக்க அவர்களும் சூழ்நிலை கருதி அமைதி காத்தனார். கல்யாணிக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது இருந்தும் என்ன செய்வது காரியம் ஆகவேண்டுமே என்று அமைதியை கடைபிடித்தார். பூபதி தான் போயி பேத்திய வர சொல்லுமா என்று கல்யாணியிடம் கூற அவரோ எங்க இன்னும் மருமகன் வரல என்று கேட்க தேவராஜன் தான் அவன் பைக்ல பேரன கூட்டிட்டு வந்துகிட்டு இருக்கான் மா. இப்போ வந்துடுவான். நீ போயி உன் பொண்ண கூட்டிட்டு வா என்று அவர் சொல்ல. கல்யாணியோ என்ன அண்ணே என் பொண்ணுணு சொல்ற அவள் உன் மருமவ என் மருமவனு உரிமையா சொல்லு என்று அவர் சிரிப்புடனே அழுத்தி சொல்ல அவருக்கு தான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். என்ன அண்ணே இப்டி முழிக்கிரவா நீ இன்னும் பழசலாம் மறக்கலையோ என்று அவர் கேட்க. சிவகாமி எதோ பேச வாயிடுக்கும் முன் உள்ளே வந்த வேந்தன், நீங்க மறக்க கூடிய விஷயங்கள் எதுவும் பண்ணலயே பின்ன எப்டி மறப்பாங்க என்று கேட்டுக்கொண்டே வாசலில் இரு கைகளிலும் தம்பி மகன் மற்றும் தங்கை மகனுடன் வந்து நின்றான். அதில் கல்யாணிக்கு தான் முகம் கருத்து போனது. இதை கேட்ட கருணாகரனுக்கு தான் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிந்தது. பின்னே இருக்காதா அவர் மனைவி செய்த விஷயங்கள் அப்படி இருந்தும் அவள் மகளை அந்த வீட்டிற்கு சம்மந்தம் பேச வந்திருக்கிறார்களே இவர்களே என்ன செய்வது என்று அவரது விருப்பமின்மை அவர்களிடம் நாசுக்காக காட்டிவிட்டார். இருந்தும் பெரியவர் அனைத்தையும் சமாளித்து கொண்டு போகிறார். கல்யாணி தான் எதையும் முகத்தில் காட்டாமல் வாப்பா மருமகனே எப்டி இருக்க உள்ள வா என்ன வாசளோட நிக்கிற என்று அவர் அவனை வரவேற்க . இங்கு அருளும் ராஜேசும் தான் என்ன மச்சான் இந்த பொம்பள இப்டி மான ரோஷமே இல்லாம இருக்கு என்று அருள் கேட்க. ராஜேஷோ ஆமாடா மாப்பிளை நான்கூட உன் குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வந்தா பிறகு தான் அதுளா தேவைபடாதுணு பார்த்தா இவங்களுக்கு பேசிக்காவே அந்த குவாலிட்டிலா இல்லை போல என்ன பண்ரது என்று அவன் வருத்தப்பட்டு சொல்ல அருள் தான் அவன் தொடையில் யாரும் பார்க்காத வண்ணம் நறுக்கென்று கிள்ளிவிட்டு இருடி என் தங்கச்சி கிட்ட உன்ன இன்னைக்கு கோத்து விடல நான் உன் மாப்பிளை இல்லை. இன்னைக்கு உனக்கு இருக்கு மாப்ள என்று சொல்லிவிட்டு சமத்தாக இருந்துவிட்டான். அவன் அருகில் இருந்த ரேணுதான் அவனை முறைத்து கொண்டு இருந்தாள் அவளை பார்த்து ஈஈ… என்று இழித்து விட்டு பெண் பார்க்கும் படலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்.