Loading

அத்தியாயம் 6

 

இங்கு வயலூரில் காலையிலயே நிலாவை ஒரு வழி ஆக்கிககொண்டிருக்கிர்ரார்கள். இவர்கள் அவளை படுத்தியது வரை யாரோ கல்யாணியின் சொந்தம் இன்று அவரது மகள் ரித்திகாவை பெண் பார்க்க வருகிறார்கள் என்பது தாய் மகள் செய்யும் அலப்பறைகளில் இருந்து தெரிந்து கொண்டாள். ஆனால் இவ்வளவு அலப்பறையிலும் அந்த வீட்டின் தலைவன் யாருக்கு வந்த விருந்தோ என்று எப்போதும் போல் அவரது வேலையை பார்த்து கொண்டிருந்தார். அதற்கும் தாய் மகள் இருவரிடமும் வாங்கி கட்டிக்கொள்கிறார். இருந்தும் மனிதன் அதே அமைதியான தோற்றத்துடன் தான் இருக்கிறார். அவருக்கும் இன்று யாரோ வருகிறார்கள் என்று தான் தெரியும் அது யாரென்று எல்லாம் தெரியாது. தெரியும் போது மனிதனின் முகம் போகும் போக்கை அப்போது பார்க்கவேண்டுமே . 

 

இதோ இவள் இன்று செய்யும் அனைத்து வேலைக்கும் காரணமானவர்கள் வாசலுக்கு வந்துவிட்டதன் காரணமாக வண்டி ஹாரான் சத்தம் உள்ளே உள்ளவர்களுக்கு கேட்க கல்யாணி வாசலுக்கு வந்து வரவேற்றார். வண்டியிலிருந்து பூபதி தாத்தா, சிவகாமி, அவராது கணவர், பிறகு ரேணுகா, அவளது கணவர் அருள்வேந்தன் இவன் வேந்தனின் தம்பி. அதன் பின்னே பைக்கில் நமது நாயகன் மற்றும் நமது குட்டி வாண்டு கிருஷ்ணாவும் வந்து கொண்டிருந்தார்கள். இதோ அவனின் தங்கை தேவகி அவளது கணவர் ராஜேஷ் அவர்களது 2வயது மகன் குகன்  உடன் அவளும் அங்கு வந்து சேர்ந்தாள். அனைவரையும் கல்யாணி வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். கல்யாணி, வாங்க வாங்க.. உட்காருங்க. அப்பா வாங்க அண்ணா அண்ணி கருணாகரன் தான் இவர்களை பார்த்து அப்படியே ஷாக் ஆகி நின்றிருந்தார். கல்யாணி தான் ஏய் வந்தவங்களுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடு. ஒரு வேலை பாக்காம அப்டியே ஜம்பமா அடுப்பைடிலயே நிக்க வேண்டியது என்று அவளை சிறிது வசைப்பாடி விட்டு அவர்களை பார்த்து சிரித்து வைத்தார். இதை  கேட்ட நிலா தான் கசந்த சிரிப்பை உதிர்த்து விட்டு வந்தவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் எடுத்து கொண்டு வந்தாள். ஹாலில் இருந்த சிவகாமி மற்றும் ரேணுவை பார்த்தவளுக்கு தான் ஏன் என்று தெரியாமல் அவள் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது. அதை சிவகாமியும் கவனித்தார். அவளை கவனித்த அருளும் அடியே ரேணுகா என்று அவன் அவள் காதருகில் அழைக்க அவளோ என்னய்யா என்று சிறிது எரிச்சளுடனே கேட்க. ஏண்டி கொஞ்சம் மரியாதையா கேளுடி என்று அவன் பாவம் போல் கேட்க. அவளோ பொண்டாட்டிய ஒரு மாசம் தவிக்க விட்டுட்டு போனவனுக்கெல்லாம் என்னயா மரியாதை வேண்டி கிடக்கு என்று அவள் சொல்ல ஏன் செல்லம் இப்டி கோவப்படற என்று கேட்க. அவனை நன்கு முறைத்து விட்டு இப்போ என்ன இதுக்கு கூப்ட அத மட்டும் சொல்லு அத விட்டுட்டு என்று அவள் அடுத்த வார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே அம்மா தாயே இப்போ இந்த பேச்சை விடு அந்த புள்லையா பாரு என்று நிலாவை நோக்கி கை காட்ட அவளை இவள் நிமிர்ந்து பார்த்ததும் இவள் கண்களிளும் ஒரு நிமிடம் மின்னல் வெட்டி சென்றது. அருள் தான் நிலாவையும் ரேணுவையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான். இந்த கேப்பில் அங்கு எல்லாரும் சிறிது அறிமுக படலதை நிகழ்த்தி இருந்தனர். அங்கு கல்யாணி பூபதியை தவிர வேறு யாருக்கும் இந்த சமந்தம் மனதிற்கு மகழ்ச்சி அழிக்கவில்லை. மற்ற அனைவரும் கடமைக்கு இருக்கும் போது தேவகியின் குழந்தை புது இடம் மற்றும் பயணக்களைப்பு காரணமாக அழ ஆரம்பித்தது. அவனை சமாதான  படுத்த தேவகி சிவகாமி ரேணுகா என்று அங்கு உள்ளே அனைவரும் முயற்சி செய்து விட்டார்கள். ஆனால் அவன் அழுகையை நிறுத்துவதாக தெரியவில்லை. உடனே அங்கேயே ஜூஸ் கிளாஸ் வாங்க நின்றிருந்தவள் அம்மா குழந்தைய குடுங்கமா நான் சமாதான படுத்தி தாரேன் என்று சிவகாமியிடம் இருந்து வாங்க போக. அதற்குள் கல்யாணியோ வேலைக்காரி நீ எங்க வீட்டு பிள்ளையை தூக்க போறியா என்று அவள் கோவத்துடன் சொல்ல பூபதி இது தப்புமா என்று பேசுவதற்கு முன்பே ராஜேஷ் பிள்ளையை வாங்கி இந்தாமா நீ குழந்தையை வெளில கூட்டிட்டு போயி விளையாட்டு காட்டுமா என்று வாங்கி குடுத்தான். நிலாவிடம் குழந்தையை கொடுத்து விட்டு கல்யாணியை கோவமாக முறைத்துவிட்டு தேவகியிடம் காய ஆரம்பித்து விட்டான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்