Loading

அத்தியாயம் 5 

 

இதோ அழகான விடியல் இந்த விடியல் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்க்கு ஒவ்வொரு வெளிச்சத்தை கொடுக்க போகிறது எப்படி என்று பார்ப்போம். 

 

இதோ  பூபதி பாண்டியன். வேந்தனின் தாத்தா. அவர் சொன்னது போல் அவரது மகள் வீட்டிற்கு கிளம்புவதற்கு  ரெடியாகி வந்து வீட்டின் ஹாலில் வந்து அமர்ந்தார். அவரை பார்த்தவுடன் சிவகாமி வேகமாக வந்து அவருக்கு தேவையான தேநீரை கொடுத்துவிட்டு திரும்ப அவர் அம்மா சிவகாமி, சொல்லுங்க மாமா என்றார். அம்மா இன்னைக்கு மதியம் சாப்பாடு எதுவும் பண்ண வேண்டாம்மா என்று அவர் கூற சிவகாமியோ ஏன் மாமா எதுவும் வெளில போறிங்களா என்று கேட்க. போறீங்களா இல்லமா இன்னைக்கு நம்ம எல்லாரும் போறோம். எங்க மாமா நம்ம ஈஸ்வர்னுக்கு பொண்ணு பாக்க என்று அவர் சொன்னஉடனே அவருக்கு ஒரு நிமிடம் இதயம் வேலை செய்யவதை நிறுத்தி விட்டது.  அவரோ பயந்து கொண்டே வீட்டை சுற்றிலும் பார்க்க இவர்கள் பேசுவதை வயலுக்கு போயி தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்த வேந்தன் கேட்டதன் விளைவு வெளியே அழகுக்காக ரேணுகா வாங்கி வைத்த ரோஜா செடியை காலால் உதைத்து விட்டிருந்தான். அந்த சத்ததில் தான் வீட்டை சுற்றி பார்த்த சிவகாமி வெளியில் பார்த்தார். அவருக்கு தான் அய்யோ என்றானது. இப்போது இவனை எப்படி சமாளிப்பது என்று. பூபதியோ இப்போ எதுக்கு ஈஸ்வரா எல்லாத்தையும் இப்டி போட்டு உடைச்சிகிட்டு இருக்க என்று பெரியவர் கேட்க அவனோ அவரை சிறிதும் சட்டை செய்யாது தனது அம்மாவை முறைத்துவிட்டு மாடிஏறி அவனது அறைக்கு சென்று விட்டான். 

 

கீழே நின்ற சிவகாமி தான் பூபதியிடம் மாமா உங்க பொண்ணு இன்னும் சென்னையில் தான இருக்காங்க மாமா. அங்காய நம்ம போக போறோம் என்று கேட்க. அவரோ அவள் ஏன் பொண்ணு மட்டும் இல்லமா உனக்கு நாத்துனரும் கூட. அவள் இப்போ வயலூர்க்கு வந்துட்டாமா என்று அவர் சொன்னவர். அவள் ஏதோ அறியாமல் தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டா அதுக்காக அவளை வெறுத்துட முடியாதேமா அதுக்காக தானேமா இத்தனை வருசமா அவள் கூட பேசாம இருந்திங்க இங்க கூட அவளை நான் அவாளோட பிறந்த வீட்டுக்கு கூட வரக்கூடாதுணு சொல்லி தண்டனை குடுத்துருக்கேன் என்று அவர் சொல்ல. 

சிவகாமியோ, அப்படி இருந்த நீங்க ஏன் மாமா உங்க பேத்திய என்னோட பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நெனைக்கிங்க. என்று அவர் கேட்க. 

பூபதியோ, என்ன தான் அவள் தப்பு பண்ணிருந்தாலும் அவளோட பொண்ண அவள் ரொம்ப நல்லாவே வளத்துருக்காமா ரித்திகா அப்டியே நம்ம மாப்பிளை மாதிரிம்மா ரொம்ப பொறுமை. எல்லாரையும் மதிக்கிற குணம் என்று அவகிட்ட நிறைய நல்ல விஷயங்கள் இருக்குமா என்று அவர் புகழ்ந்து சொல்ல. 

சிவகாமியோ,  விஷத்துக்கு பொறந்தது எப்படி அமிர்தமா இருக்கும். இவருக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்த ஈஸ்வரன் தான் எங்க ஈஸ்வரண காப்பாத்தணும் கடவுளே என்று யோசித்துகொண்டே சிவகாமி அமைதியாக இருந்தார். 

பூபதியோ, என்னமா ஒண்ணுமே பேசாம அமைதியாய் இருக்க என்று கேட்க. அவரோ அப்டிலாம் இல்லை மாமா ஈஸ்வர்னுக்கு இதுல விருப்பம் இல்லை. உங்களுக்கே தெரியும் அவன் சின்னத்துல இருந்து அவனுக்கு பிடிக்காத எதையும் அவன் செய்றது இல்லை. இப்போ அவனுக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சும் நம்ம இப்டி பண்றது சரியா வரும்னு தோணல மாமா. அதுவும் அந்த புள்ள டவுன்ல வளர்ந்தவ என்று அவர் மறுபடியும் யோசைணையுடனே இழுக்க அவரோ அவரின் முடிவில் தெளிவாய் இருக்க இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டு சமையல் கட்டுக்குள் சென்றுவிட்டார். 

 

மேலே வந்த வேந்தனுக்கு அவனது கோவத்தை கட்டுப்படுத்தும் வழிதான் தெரியவில்லை. அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்து ஆஆ… என்று தலையை பிடித்து கொண்டு கத்தியவன் கண் மூடி அந்த உடைந்த பொருட்களின் நடுவிலே படுத்தான். அவனது எண்ணங்கள் எல்லாம் அவனது 18 வயதில் சந்தித்த பெண்ணவளை சுற்றியே இருந்தது. அந்த நினைப்பினூடே மாமா உனக்கு என்ன பிடிக்குமா என்ற மந்தகாச குரல் அவன் காதுகளில் கேட்க. கண்ணை மூடிக்கொண்டே உன்ன மட்டும் தான்டி பிடிக்கும் என்று அவன் வாய்விட்டே புலம்ப அங்கு அவனது என்னத்திலோ அப்போ ஏன் மாமா என்னை கூட்டிட்டு போகாம இருக்க. இங்க ரொம்ப கஷ்டமாக இருக்கு மாமா நான் உன் பக்கத்துல தான் இருக்கேன். இன்னைக்கு என்ன வந்து கூட்டிட்டு போறியா மாமா நீ. ம்ம் கூட்டிட்டு போரேன் கண்ணம்மா. நான் வரேன் உன்ன கூப்பிட என்று அவன் புலம்பிக்கொண்டு இருக்க.  வெளியில் கதவு தட்டும் சத்தத்தில் தான் கண்ணை திறந்தான்.. வெளியில் விடாமல் பெரிப்பா. பெரிப்பா கதவை திறங்க என்று கதவின் அருகில் நின்றுக்கொண்டு தட்டி கொண்டும் கத்தி கொண்டும் சிறியவன் இருக்க. அதுவரை இருந்த கோபம் வருத்தம் எல்லாம் அந்த மழலையின் குரலில் தனிவதை உணர்ந்தான். அவனை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது அவனது தம்பி மகன் தான். இதோ கதவை திறந்து என்னடா தங்கம் என்று அவனை தோளுக்கு மேல் தூக்கி கொஞ்ச அவனோ பெரிப்பா இன்னைக்கு வெளில போறோமா ஆச்சி உன்னைய கெளம்பி வர சொன்னுச்சு. நீ வரியா நம்ம போவோம் என்று அவன் ஆசையாய் கேட்க. ம்ம் போலாமே என்னோட தங்கத்தை கூட்டிட்டு போவோம் சரியா. கிருஷ்ணாவோ, ஐய்.. ஜாலி இன்னைக்கு அப்பாவும் வராங்களா பெரிப்பா அம்மா ரொம்ப பிஸி நம்ம எல்லாரும் போவோம் பெரிப்பா என்று அவன் சொல்ல ம்ம் போவோம். நீ போயி ஆச்சிகிட்ட ரெடி ஆகு. அம்மாவை தொந்தரவு பண்ணாத சரியா என்று சொல்லிவிட்டு கீழே இறக்கி விட்டான். 

அவனோ சரி பெரிப்பா என்று அவனது ஆச்சியிடம் ஓடி விட்டான். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்