அத்தியாயம் 2
அம்மா என்று அழைத்துவிட்டு மேலே அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான். அங்கு அவன் அறையில் சன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டியிருந்தான். அங்கு ரேணுகா கிருஷ்ணாவுடன் விளையாடி கொண்டிருந்தாள். அவன் எண்ணமெல்லாம் அவனின் அழகியிடமே இருந்தது. இதோ இன்னும் ஒரு மாதம் முடிந்தால் அவளை சந்தித்து 11வருடங்கள் முடிந்து விடும். இதை யோசித்து கொண்டு நிற்க. வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவனது அம்மா தான் என்று தெரியும் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு கதவை திறந்தான். வெளியில் அவனது அம்மாவுடன் அப்பா தேவராஜானும் நின்றிருந்தார். அவனோ நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டான். அவன் பின்னே அவர்களும் உள்ளே சென்றனர். மறக்காமல் கதவை பூட்டி விட்டே உள்ளே வந்தார் சிவகாமி. எய்யா வேந்தா என்று அவன் அம்மா அழைக்க சன்னல் வழியே பார்த்து கொண்டு நின்றிருந்தான். அவரோ ஏங்க அவனை கூப்பிடுங்க என்று சொல்ல அவரோ எய்யா வேந்தா தாத்தா சொல்றத பத்தி என்னய்யா யோசிக்கிற என்று அவனது அப்பா கேட்க. அவனோ நிதானமாக திரும்பினான் அவனது முகம் இறுக்கத்துடனே இருந்தது. அதை பார்த்த பெற்றவர்களுக்கு தான் மனம் வேதனை கொண்டது. எனக்கு அவ வேணுமா. எனக்காக காத்துக்கிட்டு இருப்பா என்று அவன் சொல்ல. அவர்களோ இவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு நின்றிருந்தனர். அவனது அம்மா தான் இங்க பாருய்யா உனக்கே தெரியும் இந்த வீட்ல தாத்தா சொல்றதுதான் எல்லாமே ஆனால் என்று அவன் அம்மா ஆரம்பிக்கும் முன்னரே ஏன் வாழ்க்கையில் முடிவு எடுக்குற உரிமைய நான் யாருக்கும் குடுக்கலன்னு நெனைக்கிறேன் என்று அவன் கோவத்துடன் சொல்ல. சிவகாமியோ என்ன அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தார். தேவராஜன் தான் இங்க பாருய்யா உன்ன பெத்தவங்க நாங்க எங்களுக்கு உரிமை இருக்குனு நாங்க நம்புறோம்.. இங்க பாரு உனக்காக இவ்ளோ நாள் பொறுத்திருந்தோம் இதுக்கு அப்புறமும் அவதான் வேணும்னா நீதான் அவளை தேடி கண்டுபிடிக்கணும். இன்னும் ஒரு மாசம் இருக்குய்யா அதுக்குள்ளே கண்டுபிடி. அப்டி முடியலைன்னா நீ ரித்திகாவ கட்டிக்கோ அவ்ளோதான் என்றுவிட்டு சென்றுவிட்டார். சிவகாமி தான் இறுகிப்போய் நிற்கும் மகனிடம் யோசிச்சு பாருய்யா என்று தோளில் தட்டிகொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அவன் தான் தன் நிலையை நொந்து ஆஆ…. என்று கத்தினான். எங்கடியிருக்க என்ற வேதனையுடனே கண்மூடி கட்டிலில் சாய்ந்தான்.
இங்கு இவன் தேடலுக்கு சொந்தக்காரியோ சேவல் எழும்பும் முன்னே எழுந்தவள் இன்னும் வாயில் ஒரு சொட்டு தண்ணீர் படாமல் அந்த வீட்டில் ஓடி கொண்டிருக்கிறாள். ஏய்ய்… விளங்காதவளே எங்கடி போன என்று அந்த வீட்டின் பெரிய மனுஷி கல்யாணி கத்தி கொண்டிருந்தார். அவரது கத்தலுக்கு பயந்து இங்க இருக்கேனுங்க அம்மா என்று பயத்துடனே அவரின் அருகில் வந்து நிற்கின்றாள் நம் நாயகி நிலவழகி. பெயருக்கு எற்றார் போல அந்த நிலவின் நிறத்தில் இருப்பவள் அவள். ஆனால் அவளது அடையாளமோ வெளுத்து போன தாவணி கழுத்தில் ஒரு கருப்பு கயிரில் கோர்த்த ஒரு தங்க தாயத்து. நெற்றியில் ஒரு பொட்டு அவ்வளவே. இதோ வந்து நின்றவளின் கன்னத்தில் ஒரு அடியை பரிசாய் கொடுக்க. நிலாவோ அழுதுக்கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்தார். என்னடி பார்வை ஏன்ட்டி கூப்பிட்ட உடனே வரணும்னு தெரியாத உனக்கு ஆடி அசஞ்சு வந்து நிக்க வேலைக்காரா நாயி என்று திட்ட கண்களில் நீர் வழிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தாள். போ போய் ஏன் பொண்ண எழுப்பி சாப்பிட வர சொல்லு. இந்த அழுத மூஞ்சிய வச்சுக்கிட்டு போய் நிக்காத. உன் தரித்திரம் ஏன் பொண்ணுக்கு ஒட்டிக்கிடாம என்று அவர் சொல்ல இதோம்மா என்று அவர் சொன்ன பணியை செய்ய சென்றுவிட்டாள். மாடியில் போய் அவளது ரூம் கதவை தட்ட மேடம் ரித்திகா மேடம் என்று இவள் தட்ட அவளோ ஆற அமர ஒரு 15 நிமிடம் அவளை வெளியில் காக்க வைத்து விட்டே கதவை திறந்து வந்தாள் அவள். வேந்தனின் அத்தை மகள். வந்தவள் சீசீ… என்ன நீ வந்து எழுப்புர அம்மா எங்க என்று கேட்க இல்லை மேடம் அம்மா கிழ இருக்காங்க உங்கள மதியம் சாப்ட வர சொல்றாங்க மேடம் வரிங்களா என்று பணிவாய் கேட்டு அவள் நிற்க. ம்ம் சீ.. நீ போ நான் வாரேன் எனக்கு புடிச்சத எல்லாம் அங்க டேபிள்ள எடுத்து வை நான் வரேன். என்று கதவை பட்டென்று சாத்திவிட்டு சென்றுவிட்டாள். நிலாவுக்கு தான் மனதெல்லாம் ஒரே வலி என்று தான் என் வாழ்வில் விடியல் ஏற்படும் என்று. அவளுக்கு யார் சொல்வது அவள் பேச்சை மூச்சாய் நினைத்து ஒருவன் வாழ்வான் அவளுக்காக என்று.