Loading

அந்த கொளுத்தும் வெயிலில் ஒருவனை போட்டு அடி வெளுத்து கொண்டிருந்தான் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் வைத்து அடிவாங்குபவனோ அண்ணா விட்ருங்கனா. தெரியாம பண்ணிட்டேன் இனி பண்ண மாட்டேன் அண்ணா. ஆ…. அண்ணா கை கை என்று வலியில் கத்தி கொண்டிருக்கும் போதே அந்த கையை உடைத்து விட்டான் அவன். அவன் தான் நம் நாயகன் ஈஸ்வர வேந்தன்.

அழகிய அந்த  வேந்தனூர் கிராமத்தில் வசிக்கும் ஆணழகன்.  நம்ம தமிழ்நாட்டு கலர்ல முறுக்கு மீசையுடன் ஆறடி உயரத்தில் கருப்பு சட்டை அதே கலர் பார்டர் வைத்த வெள்ளை வேஷ்டியுடன் இருந்தான். சுருக்கமா சொல்லனும்னா. நம்ம கிராமத்து ஹீரோ மெட்டிரியல் நம்ம ஈஸ்வர வேந்தன். என்னை கொஞ்சம் சிரிக்க கொள்ள காசு கேப்பாப்ல நம்ம சாரு. மத்தபடி  பக்கா ஹீரோ தான். அங்கு ஒருவனை அடித்து வெளுத்துவிட்டு வீட்டுக்கு  வரும் போது வரும் வழியில் எல்லாம் வணக்கம் அண்ணா வணக்கம் தம்பி…. என்று பலர் அவனுக்கு வணக்கம் வைக்க அந்த வணக்கத்தை எல்லாம் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லலாமல் ஏற்று கொண்டு அந்த கிராமத்தின் பெரிய வீடானா ஈஸ்வரன் மாளிகைக்குள் உள்ளே கால் வைக்கும் போதே பெரிப்பா என்று வந்து அவன் காலை கட்டிக்கொண்டான் அவனது தம்பி மகன் கிருஷ்ணன்.  அவனை கீழே குனிந்து  தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு என்ன வேணும் கிருஷ்ணா குட்டிக்கு என்று கேட்க. அவனோ  எனக்கு பெரியம்மா வேணும் என்று கேட்க. அவன் கேட்ட நொடி அவன் கண்கள் கோபத்தை தத்தெடுத்த்து இருந்து அமைதியாக ம்ம் பெரியம்மா வேணுமா ஆமா யார் உன்கிட்ட இத கேட்க சொன்னா என்று அவன் கேட்க. கிருஷ்ணாவோ அங்கு அடுப்படியில் சொல்லாதே சொல்லாதே என்று சைகை காட்டும் அம்மாவையும் அவனது அப்பத்தாவையும் அழகாய் கைகாட்டிவிட்டான். அவர்கள் தான் என்று.

உள்ளேயோ அத்தை… என்னட்டி உங்க அருமை பேரன் நம்மள போட்டு குடுத்துட்டான் அத்தை இன்னைக்கு எது எது உடைய போகுதோ தெரியல. அட விடுட்டி இன்னைக்கு நமக்கு ரெண்டுல ஒன்னும் தெரிஞ்சாகனும் என்று அவர் சொல்ல. அவளோ அதுக்கு  என்று அவள் பயத்துடனே அவரை நோக்க ஏட்டி பயப்படாத என்க. அவளோ   உங்களுக்கு என்னை அத்தை நீங்க பெத்த புள்ள கல்யாணம் பண்ணதுக்கு நீங்க உங்க உயிர தியாகம் பண்ணலாம் நான் எதுக்குத்த பண்ணனும் என்று அவள் அப்பாவியாய் கேட்க. சும்மா இரு புள்ள கூறுகெட்ட தனமா பேசாத என்று விட்டு. அவனோ கிருஷ்ணாவிடம் வெளிய தோட்டத்துல போய் விளையாடு என்று சொல்லி பையில் இருந்து சாக்லேட் குடுத்து கீழே இறக்கி விட்டு அவர்களிடம் போக அவன் நெருங்கி வரும் போதே அத்தை என்னட்டி பெரிய மாமா வராங்க என்னை மன்னிச்சுக்கோங்க அத்தை ஏன்ட்டி என்று கேட்க வேந்தன் அம்மா என்று பல்லைகடித்துக்கொண்டு கூப்பிட.. ஏட்டி ரேணு என்று அவர் திரும்ப அவளோ அங்கு இல்லாமல் போக ஏய் ரேணு என்று கூப்பிட அவளோ பின் வாசல் வழியாக அத்தை கிருஷ்ணாவுக்கு சாப்பாடு குடுத்துட்டு வாறேன் என்று அங்கிருந்து மெதுவாக சொல்லிவிட்டு ஓடியே விட்டாள். பின் யார் அவனிடம் வாங்கி கட்டிக்கொள்வது என்று. வேந்தனோ அம்மா என்று அழைக்க அவரோ மனதில் இப்டி ஐடியா குடுத்தது மட்டும் இல்லாமல் இவன்கிட்ட மாட்டிவிட்டுட்டு போறியேட்டி இரு அத்தைன்ட்டு வருவளா பாத்துகிடுதே உன்ன. அவன் அவரையே உறுத்து விழித்தான். அவருக்கு தான் பயத்தில் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

அவர் இந்தாப்பா தண்ணீர் என்று அவனிடம் நீட்ட. அவனோ சின்ன பையன்கிட்ட என்னை சொல்லிகுடுக்கிங்க நீங்க என்று அழுத்தி கேட்க. இல்லப்பா என்று அவர் அடுத்து சொல்லும் முன்பே கையில் வாங்கிய தண்ணீர் சொம்பை தூக்கி எறிந்தான். அவர் ஏன் தம்பி என்று சிவகாமி கேட்கும் முன்னே ஈஸ்வரா என்று பெரியவரின் குரல் கேட்க கோவமான முகத்துடன் திரும்பினான் தாத்தா என்றான் அவரோ உங்க அம்மாட்ட கோவபடறதுனால ஒன்னும் ஆகப்போறது இல்லை ஈஸ்வரா. இன்னும் ஒரு மாசம் இருக்கு உனக்கு 30 வயசு முடிய. அதுக்குள்ள உனக்கு பிடிச்ச பொண்ணு யாரா இருந்தாலும் பரவாயில்ல கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வா. அப்டி இல்லனா அடுத்த நாள் உனக்கு ஏன் பேத்தி ரித்திகா கூட கல்யாணம் பண்ணி வச்சுடுவேன் இது தான் ஏன் முடிவு என்று அவர் சொல்லிவிட்டு போக அவனோ கோவத்தின் உச்சியில் நின்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்