
வீடே வெகு நாட்களுக்கு பின் மகிழ்ச்சி கடலில் தத்தளித்திருந்தது. அங்கே கல்யாண வேலைகள் மடமடவென நடந்தேற., கல்யாணம் ஆடம்பரமாக இருக்க வேண்டாம் என்று நிழலி மறுத்திவிட்டதால் எளிமையாகவே வைக்க முடிவு செய்திருந்தனர் இருவீட்டாரும்.
அன்று சாகரனின் தந்தை வரதராஜன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட, அனைவருக்கும் தாள முடியாத சந்தோஷம். அந்தச் சந்தோஷத்தை, நிழலி வீட்டில் தெரிவிக்க, ஜோடியாக சிரித்த முகமாக இருவரும் வர, அவர்களை கண்டு பெரியவர்கள் கண்கள் கலங்க , சிறியவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.
“அப்பா ! மாமா ! அத்தை ! எங்க அப்பா கல்யாணதுக்கு ஒத்துக்கிட்டார் . உங்களை வந்து பேச சொன்னார்”என்று சாகரன் சொல்ல, பானுமதி அழுது விட்டார்.
‘மகளின் வாழ்க்கை அதிதியோடு முடிந்து விடுமோ ‘என்ற அச்சம் அவரை தினமும் ஆட்டிப்படைக்க, அந்தக் கோபத்தை தான் நிழலியிடம் காட்டினார். சாகரனின் வருகைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு நம்பிக்கை வந்தது.
முதல் நாள் வந்த அன்றே, சாகரன் பானுமதியிடம் நடந்த உண்மைகளை எல்லாம் கூறினான். அதில் அதிர்ந்தவருக்கு அழுகை மட்டுமே வந்தது. ” எனக்கு பயமெல்லாம் அவ வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு தான்ப்பா ! ஒரு பிரண்டா அவ மனசை மாத்தி , கல்யாணத்துக்கு ஒத்துக்க வை சாகரா !” என அவன் கரம் பற்ற,
” ஃபிரண்டா ஒதுக்க வைச்சு, நானே உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆன்டி. நான் உங்க பொண்ண விரும்புறேன். அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்று அவன் காதல் கதையை கூறியவன், ” நான் உங்களுக்கு வாக்கு தரேன், நிழலியோட மனசை மாத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சி, நான் அவளை கல்யாணம் பண்ணி, நான், நிழலி, அதிதினு வாழ்வோம் ஆன்டி” அவருக்கு வாக்குறுதி கொடுத்தவன், இன்று நிறைவேற்றி விட்டு நிற்பதை கண்டு பெருமை பொங்க பார்த்தார்.
” நீ சாதித்துச்சுட்ட மருமகனே ! எங்கிட்ட பண்ண பிராமிஸ் நிறைவேத்திட்ட, ரொம்ப நன்றி ப்பா !” என கைஎடுத்து கும்பிட, ” ஐயோ அத்தை ! எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு, என் ஃபிரண்டா அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும், அதே நேரம் என் காதல் எனக்கு வேணும் போராடினேன் அவ்வளவு தான் அத்தை. இனி நோ அழுகை ஒன்லி ஹாப்பி தான் ” அவர் கண்ணீரை துடைத்தான்.
தன் மகளிடம் வந்தவர், “என்னை மன்னிச்சிடு டி , உன்னை ரொம்ப நோக்கடிச்சிட்டேன்” என அழுக , அவரை கட்டிக் கொண்டாள்.
“அப்பாடா இப்பதான் ஹாப்பிய இருக்கு ! சட்டுபுட்டுன்னு அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அனுப்பி விடுங்க , அப்ப தான் என் ரூட் கிளியர் ஆகும், இல்லே ஒரே மேடையில அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் கல்யாண வச்சாலும் எனக்கு ஓகே தான்! ” என்றான் தோளை அசட்டையா குலுக்கி விட்டான் வாசு.
” அதெல்லாம் கிடையாது கிடையாது, அவ படிச்சு முடிச்சதும் ஒரு வருஷம் வேலைக்கு போனதுக்கு அப்றம் தான் கல்யாணம்” என்று சன்னமாக நிழலி கூற, ” எதே ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணமா ? ஏய் நீ வாடி, நாம லீவ்விங் டூகேதரா வாழ்ந்துட்டு, அப்றம் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பணிக்கலாம்” என மிருவை அழைக்க,
“அடிங்கு , லீவ் டூ கேதராமே !” அவனை அடிக்க வர, ” சாகரன் பின்னால் ஒளிந்தான். ” பேசாம அவனுக்கே முதல் முடிச்சு விடுங்கோ ! பய ரொம்ப அவசரமா இருக்கான்” எனவும், “ஒரு ஆணோட மனசு ஆணுக்கு தான் யா புரியும். இங்க இருக்கிறவனுங்களுக்கு மனசே இல்லயா” என்றவன் கிருஷ்ணனின் முறைப்பில் வாயடைத்தான்.
” ஆமா, எங்க என் பேபி?” என சாகரன் கேட்கவும் ” சாகா ! “என்று அவள் வரவும் சரியாக இருந்தது. அவளை தூக்கி சுத்தியவன், ” பேபி ஆசைப்பட்டது போல நீ, நான், நிழலினு நாம ஒண்ணா இருக்கப் போறோன்டா “என அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். ” நிஜமா வா” எனக் கேட்டு அவளும் முத்தம் வைத்தவள்.
“என் பொண்ணு தான்ப்பா என் காதல்ல முதல்ல புரிஞ்சு கிட்டாள், ஒரு சிலருக்கு புரிய வைக்கறதுக்குள்ள போதும் ஆயிருச்சு, அந்த மக்கு மண்டோதிரியோட எப்படி தான் வாழ போறேன் தெரியல” எனப் பெருமூச்சை இழுத்து விட்டான்.
அவன் விலாவில் குத்தியவள் , ” நான் மக்கு மண்டோதிரியா உனக்கு இருக்குடா !”என்றாள். ” ஆ” எனவலியில் அலறினான்.
” அத்திம்பேர் , உங்க நல்ல நேரம் எல்லாம் முடிந்திடுத்து, இனி உங்களுக்கு சனி தோஷம் தான்” என மித்து கிண்டல், அவனுக்கு பல அடிகள் விழுந்தன.
மறுநாள் , கிருஷ்ணன், தென்றல், விக்ரமன், பானுமதி, வெண்மதி என பெரியவர்கள் இவரும் சாகரன் வீட்டிற்கு சென்றனர். அங்கே அவர்களை குறையில்லாமல் உபசரித்தார், கண்ணம்மா.
கிருஷ்ணன் தான் பேச ஆரம்பித்தார், “முதல் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றவர் ஆரம்பிக்க, அவர் அவரை புரியாமல் பார்த்தார் வரதராஜன்.
“நம்ம பசங்க, அவங்க வாழ்க்கைய அவங்களே தேர்ந்தெடுத்துட்டு, அதுக்காக பெத்தவங்கள எதிர்த்து நிற்கும் போது நம்ம மனசு எவ்வளவு கஷ்டப்படும் பெத்தவனா என்னாலையும் உணர முடியுது, இவங்க முடிவால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க அதுக்கு தான் இந்த மன்னிப்பு” என்றிட வரதரின் மனம் கொஞ்சம் கனிந்தது.
“நிழலியோட அப்பா ஸ்தானத்துல இருக்கறது நானும் மாமாவும் தான். நாங்க தான் அவளுக்கு எல்லாமே, நீங்க கல்யாணத்துல என்ன எதிர்பார்கிறீங்களோ அதை சொல்லுங்க அதன் படி நாங்க செய்றோம்” என்றார் கிருஷ்ணன்.
“எனக்கு நகை பணம் எல்லாம் கேட்டு வாங்கற பழக்கமில்ல, என் மூத்த மாட்டு பொண்ணுக்கு கூட இதை செய்ங்க அதை செய்ங்க நாங்க கேட்கல, உங்க விருப்பம் தான் நீங்க பொண்ணுக்கு என்ன செய்றதா இருந்தாலும் சரி, நான் அதுல தலையிட போறதில்ல, ஆனா, கல்யாணம் எங்க முறைப்படி தான் நடக்கணும். அத மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். கல்யாணச் செலவை பாதி பாதியா ஏத்துக்கலாம்” என்றிட கிருஷ்ணன் தன் அக்காவை பார்க்க சரியென்று தலை ஆட்டினார் பானும். இவர்களும் ஒத்துக் கொண்டார்.
“அதானே, எங்க உங்க அப்பா திருந்திட்டாரோன்னு நினைச்சேன். இல்லேன்னு ப்ரூப் பண்ணிட்டார் பார்” சாரதி சாகரனின் காதை கடிக்க “சும்மா இருங்கோ அத்திம்பேர்”என்று சாரதியை அடக்கினான்.
“அப்றம் இன்னொரு விஷயம்…” பானுமதி இழுக்க, அவருக்கு புரிந்தது தான். இருந்தும் அவரே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்.
“அதிதி…”என அவர் இழுக்க, ” தாயையும் சேயையும் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம், குழந்தையும் எங்களோட இருக்கட்டும்…” கத்திரி போல பேச்சை முடித்துக் கொண்டார்.
“அப்றம் உங்க சம்மத்தோட இன்னொரு விஷயம் சொல்லனும்…” கிருஷ்ணன் இழுக்க, “சொல்லுங்கோ !”
“மாப்பிள்ளையை எங்க கம்பெனிக்கு ஜி.எம் ஆக்கிருக்கோம், நான் எம்.டி யா இருக்க தான் சொன்னேன் அவர் வேணாம் சொல்லிட்டார். அதான் ஜி.எம் ஆகிருக்கோம், உங்க கிட்டையும் சொல்லிடலாம்னு”
“ரொம்ப சந்தோசம், நான் கூட வேற வேலைக்கு போக சொல்லலாம் இருந்தேன். ரொம்ப நன்றி” என்றார். மேற்கொண்டு பேசியவர்கள், கல்யாணத்த தேதியையும் முடிவு செய்தனர். சாகரனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அனைத்தையும் கிருஷ்ணன் வந்து நிழலியிடம் சொல்ல, அவளுக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், தன் வீட்டுப் பெரியவர்கள் மனதில் ஏதேனும் நெருடல் இருக்கிறதா என தெரிந்து கொள்ளவே கேட்டாள், ” உங்க எல்லாருக்கும் இதுல சம்மதம் தான? இல்ல எனக்காக பிடிக்காம ஏத்துக்கிறீங்களா? சித்தப்பா உங்களுக்கு ஒகேவா? அத்தை உனக்கு?” என பதற, ” உனக்கு ஒரு நல்லது நடந்தால், அது எங்களுக்கு சந்தோசத்தை தான்டா குடுக்கும். இனி நீ எத பத்தியும் கவலை படக்கூடாத, கல்யாணப் பொண்ணு களையோட சிரிச்சு முகமா எப்பையும் இருக்கணும். எங்களுக்கு அது போதும்” விக்ரமன் கூற அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
” ஆமா, யார கேட்டு அவன ஜி.எம் ஆக்குனிங்க? அவன் என் ஆசிஸ்டெண்ட் , என் ஜூனியர் . என் கிட்ட கேட்காம எப்படி ஆக்குனீங்க?” என வீட்டை கலகலப்பாக முயன்றாள்.
“அடியே ! இன்னும் என்ன அவன் இவன் சொல்லி , மரியாதையா கூப்பிடு !” பானுமதி அதிட்ட,
” எப்படி கூப்பிட ?”என அவளும் அசட்டையாக கேட்டாள்.
” வாங்கோண்ணா போங்கோண்ணா , இருங்கோண்ணா சாப்பிடுங்கோண்ணா தான் சொல்லணும். ஆனா, பாரு எப்படி தான் கல்யாணமானதுக்கு அப்றம் அண்ணா கூப்பிடுறாளோ?” என சலித்துக் கொண்டான் மித்து.
“அதுக்கு பெட்டர் நான் சாகரனே கூப்பிடுறேன் ! ப்பா என்னவோ என்னால் அப்படி நினைச்சு பார்க்க முடியல !” என்றாள். ” அதானே அவன நீ புருஷனா வா பார்க்கற நீ? அவன் என் அசிஸ்டெண்ட் ஏன் ஜி.எம் வேலை கொடுத்தீங்க வேற கேக்குற ? உண்மையிலே அண்ணனை கல்யாணம் பண்ணி அவரை என்னவா மாத்த போறீயோ !” வாசு புலம்ப , ” ரொம்ப தான் டா உன் அண்ணன் மேல் அக்கறை !”
“பின்ன என் இனம்டா !” என காலரை தூக்கி விட்டுக்கொள்ள, ” பார்த்தீயா மிரு !” என திரும்ப, அவளோ சோகத்தின் உருவாய் இருந்தாள்.
” ஏன்டி இங்க எல்லாரும் சந்தோசமா இருக்கோம் நீ மட்டும் ஏன் சோகமா இருக்க?”
“இல்லக்கா நீ எவ்வளவு தான் எங்களை கண்டிச்சாலும், பாசமான அக்கா நீ . உன்னை பிரியறத நினைச்சா கஷ்டமா இருக்குக்கா !” அவள் அழுக,
” டேய் மித்து, வாசு கேமிரா எதுவும் இருக்கா பாருடா, இல்ல ரீல்ஸ் எதுவும் பண்றாளா? பாருடா ! இவ இப்படி சீரியஸ்ஸா பேசுற ஆள் இல்லையே !” என அவளை கலாய்க்க, ” போக்கா , உனக்கு விளையாட்டு தான். நான் சீரியஸ பேசுறேன் ” எனக் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
அவளை அணைத்து கொண்டவள், ” அழாத மிரு, அக்கா எங்க போயிட போறேன். இதே மதுரை தான். ஸோ நீ கார் எடுத்துட்டு அங்க வா, இல்ல நீ போன் பண்ணு நாங்க இங்க வரேன். நாமென்ன பானுமதி , வெண்மதி போல அதிர்ஷ்டமா பண்ணிருக்கோம் ஒரே வீட்ல மருமகளாக போக, நீ கூட ஓகே , நான் தான்” என பெரு மூச்சை விட்டவளுக்கு கண்ணீர் மட மட வென வர”என்னை அனுப்பி வைக்கறீங்கள” கேட்டவளை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டனர் அவளது அம்மாக்களும் அத்தையும் குட்டி பாச போராட்டமே நிகழ்ந்தது.
அதன் பின் நாட்கள் கல்யாணத்தை நோக்கி சென்றது. இரு வீட்டாரும் சேர்ந்து நகை துணி எடுக்க மதுரை டவுனுக்கு சென்றனர்.
அவளுக்கு முகூர்த்த பட்டுத் தேர்வு செய்ய , நிழலியை முன்னிருத்தி விட்டு, பெண்கள் ஆடையை தேர்வு செய்ய, பாவம் சாகரனின் ஆசை அங்கு நங்கென்று மிதிக்கப் பட்டது. அவளும் எப்படியாவது அவன் ஆசைக்கு இணக்கம் கொடுக்க முயல, ம்கூம் தோல்வியை தழுவியது.
“என்னமா சேலை முன்னாடி இருக்கு நீ பின்னாடி திரும்பி பார்த்துண்டே இருக்க ? எடு ! ” என்றாள் வெண்ணிலா, ” அக்கா, சாகரன், நான் தான் செலக்ட் பண்ணுவேன் சொன்னான். அதான்” இழுக்க, புரிந்தவள் போல , சற்று நகர்ந்து கொள்ள, கண்ணாடி வழியே இருவரும் முகூர்த்த பட்டை தேர்வு செய்தனர்.
“இதெல்லாம் அதர பழசு அண்ணா !” வாசு சொல்லி தலையில் அடிக்க, ” காதல் கூட பழசு தான் டா, அதுக்காக காதலிக்காம இருக்க முடியுமா? அது போல தான் இதுவும்” என்றான்.
” மச்சான், இப்போ சார்வால் காதல் மூட்ல தான் இருக்கார், கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருப்பார். நீங்க கண்டுகாதேள்” சாரதி சொல்ல,
“ஏன் அத்திம்பேர் நீர் கூட இப்படி தானே இருந்தேள், வேதா வேதானுட்டு நான் ஏதாவது சொன்னேனா? போங்க அங்குட்டு என் ஆத்துகாரிய சைட் கூட அடிக்க விட மாற்றேள்.” என சலித்து கொள்ள, அனைவரும் உதட்டைப்பிதுக்கி கொண்டு நகன்றனர். கலகலப்பாக நாட்கள் சென்றன.
முகூர்த்த நாளும் வர, சாகரன் வீட்டு முறைப்படி தான் கல்யாணம் நடக்க இருந்தது. சன்னியாசியாக காசி யாத்திரைக்கு செல்ல இருந்து வீம்பு செய்யும் சாகரனை மித்து, பொண்ணு தருவதாக சொல்லி சில சடங்குள் செய்து அவனை உள்ளே அழைத்து மேடையில் நிற்க வைத்தனர்.
அவனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேற போவதை எண்ணி அவன் கண்கள் கலங்கின.
அரக்கு பட்டில் மடிசார் கட்டி பல மாலைகள் இட்டு , பூச்சுடி, மங்கையவள் மலர்ப்பாதங்களை எட்டு வைத்து மேடையை நோக்கி வந்தாள்.
விக்ரமன் அமர, அவர் மடியில் நிழலி அமர, மந்திரங்கள் பல ஓதினாலும், நல்ல நேரம் வந்தாலும், அவளிடம் சம்மத்தை கேட்க, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், தாலியை காட்டி, “ஓய் மாமி என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?” எனக் கேட்க, அம்பக நீர் மடை திறந்த வெள்ளம் போல் வர, தலையை அசைத்து தன் சம்மத்தை அவள் மொழிய, எழுந்து நின்று அவள் கழுத்தில் தாலி கட்டியவன் , நெற்றியில் குங்குமத்தோடு இதழையும் பதித்தான். இதர சடங்குகள் முடிந்து பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிப் பெற்றனர். பின் அவர்களை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டிவிட்டனர். பாலும் பழமும் சாப்பிட வைத்தனர்.
இளைஞரணி எல்லாரும் மணமக்களை தங்கள் இழுப்பிற்கு இழுத்து விளையாட வைத்தனர்.பின் சாகரனுடன் தன்
வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தனர்.
விளக்கேற்றி கடவுளை வணங்கினார்கள் சொந்தபந்தங்களை எல்லாம் இரவு பந்தி போட்டு அனுப்பி வைத்தனர். மணமக்களின் தனிமைக்கு, அறையை தயார் செய்தனர்.
பின் நிழலியின் குடும்பம் செல்ல இருக்க, கண்ணீர் தடங்களுடன் கட்டிணைத்து விட்டு சென்றனர். பானுமதி, அதிதியை இன்று மட்டும் அழைத்து போவதாக கேட்க, மறுத்திவிட்டான் சாகரன்.
அவர்களும் சென்று விட்டனர்
நல்ல நேரத்தில் நிழலியை அலங்காரம் செய்து அழைத்து சென்ற வெண்ணிலா,
“நான் சொன்னேன், உன் புருஷன் தான் கேட்கல… இன்னைக்கு எல்லாம் நடந்த மாதிரி தான்” என்று தலையில் அடிக்க,”என்னாச்சுக்கா?”
“அந்த கூத்த நீயே போய் பாருமா !” அவளை அங்கே விட்டுட்டு கீழே இறக்கினாள். ‘ஏன் அக்கா சலிச்சுட்டு போறாங்க?’ என கதவை திறந்து உள்ளே சென்றவள், கதவை தாழிட்டு திரும்ப, மெத்தையின் மேல் இருந்த அலங்காரத்தை எல்லாம் கலைத்து குப்பையில் கொட்டி விட்டு, அதிதியுடன் மெத்தையில் விளையாடிக்கு கொண்டிருந்தான் சாகரன்.
முதல் கண்கள் கனிந்து அவனை காதலாய் பார்த்தவள், தலையில் அடித்துக் கொண்டாள், “ஏன் கூட விளையாட வேண்டிய நேரத்துல இவ கூட விளையாடிட்டு இருக்கான் பாரு! “எனக் கடிந்தவள், பாலை சாகரன் அருகில் இருந்த மேசையில் வைத்து அவனை இடித்தாள். அவள் இடித்தது கூட தெரியாமல் இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்திருந்தனர் சாகரனும் அதிதியும்
‘ இது தேராது?’ என்ற எண்ணிக் கொண்டவள் அதிதியின் பக்கம் வந்து படுத்தாள். “நான் ராக் பேப்பர் சிஸ்ஸர் விளையாடுறோம். நிழலி நீயும் வரீயா? ” எனக் கேட்டான் சிறு குழந்தை போல, “வேணாம் வேணாம் சாகா, நல்லா இருக்காது, பேபி, நீ நாங்க எவ்வளவு ஸ்கோர் பண்றோம் கெளண்டு பண்ணிட்டே வா !” என்றவள் மீண்டும் விளையாட்டை தொடர, “ஏதே நான் கெளண்ட் பண்ணனுமா? நான் உங்க ரேஃபிரி பாரு !” என சலித்து கொண்டு, திரும்பி கொண்டாள்,
“என்னாச்சு நிழலி தூங்க போறீயா? ” சாகரன் கேட்க, ‘இப்போவாது கேட்டானே !’
“ஆம்மா…!” என்றாள்.
“சரி தூங்கு” என்று மீண்டும் விளையாட்டை தொடர, ‘ கொய்யால ‘ எனக் கோபமாக அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்தவள், அசதியில் லேசாக கண்ணை மூடினாள். நேரம் கழித்து, ஏதோ அந்தரத்தில் இருப்பது போலிருக்க, கண்ணை முழித்து பார்த்தவள் விழிகளை விரித்தாள். சாகரன், அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.
“என்னடி பட்டர்பண், அதுக்குள்ள என்ன தூக்கம்? நமக்கு இன்னைக்கும் முதலிரவு டி, தூங்கற !”
“ஓ இப்போ தான் சாருக்கு முதலிரவு தெரிஞ்சதா?” என சற்று குரலை உயர்த்த, ” ஏன்டி கத்தற? எந்திருக்க போறா?”
என்றவன் கீழே விரித்த போர்வையில் அவளை படுக்க வைத்தான்.
” இன்னைக்கு மட்டும் அவளை வெண்ணிலா அக்கா கிட்ட விட வேண்டியது தான?”
“முதல் நாளே அவளை ஏமாத்த விரும்பல டி, அவள் எதிர்பார்த்து இருப்பா, நாம மூணு பேரும் ஒண்ணா இருக்க போறோம்னு. ஆனா முதல் நாளே நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா படுக்க போறத அவ பார்த்தால் ஏங்குவா, என் பொண்ணு எதுக்கு ஏங்க கூடாது. ஏன் முதல் குழந்தை இருந்தும் ரெண்டாவது குழந்தை பெத்துக்கறது இல்லையா? அவங்களை வச்சுண்டு யாரும் ரொமான்ஸ் பண்ணலையா என்ன? அது போல தான் இதுவும், அவளுக்கு முன் எதுவும் காட்டிக்க கூடாதுனு தான் விளையாட்டுல கவனம் வச்சேன் ! எனக்கு ஒன்னும் தெரியல திட்டின தான !” எனக் கேட்க, அவளுக்கோ கண்கள் கலங்கி பேச்சடைத்தது அவன் கழுத்தில் முகம் புதைத்தவள், “லவ் யூ ஐயங்கார். நீ மட்டும் வரமா போயிருந்தால் அதிதிக்கு அப்பா பாசமே கிடைக்காம போயிருக்கும், நான் ஏன்டா முன்னாடியே உன்னை காதலிக்கல, உன்னை மட்டுமே காதலிச்சு, உன்னை கல்யாணம் செஞ்சு உனக்கு மட்டும் என்னை நான் கொடுத்திருப்பேன். நான் தப்பு பண்ணிட்டேன் சாகரா !”எனக் கண்ணீர் வடிக்க, அவள் கண்ணீரை துடைத்தவன்,
இதழில் முத்தம் மிட்டு, “பழச பேசுற நேரம் இது இல்ல டி, இனி எல்லாம் நமக்கான பக்கங்கள், அதுல நம்ம காதல் அத்தியாயங்களை மட்டும் எழுதுவோம் என்ன?” எனவும் தலையை ஆட்டினாள் நாணம் கொண்டு,
“எழுத ஆரம்பிக்கலாமா?” என மீண்டும் கேட்க, அவள் சம்மதமாய் முத்தமிட்டு தொடங்க, தன் முத்தங்களை பதிக்க ஆரம்பித்தான். கழுத்து வரைக்கும் மென்மையான முத்தங்களை பதிக்க, அவன் சட்டைய கொத்தோடு பற்றியவள்,
“சைவ முத்தம் கொடுத்தது போதும் எனக்கு அசைவ முத்தம் தான் வேணும், எனக்கு அசைவம் தான் பிடிக்கும் நோக்கு தெரியாதா?”
“நான் சைவம் நோக்கு தெரியாத பட்டர்பண்?” எனவும் அவள் முறைக்க, “ஆனால் அசைவம் செய்வேன் பிடிச்சவங்களுக்காக” நாக்கை உதட்டு மேடையில் தொட்டு குறும்பாக சொல்லியவன், தன் மனையாளுக்காக அசைவ விருந்தை அங்கே சமைத்தான்.
அடங்காத அவனது காதல் காற்றை மயக்கி, தன்னில் மையல் கொள்ள வைத்தவன், அங்கே காதலோடு மோகம் கொண்டு புது சூறாவளியை உருவாக்கினான் அவர்களது இல்லற வாழ்கையில்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1

