Loading

“சம்ம… ” என சொல்ல வந்து பின் ‘ அப்படி அழைப்பது இப்பதைக்கு நாகரீகம் இல்லை ‘எனக் கருதிய பானுமதி. “அண்ணா ! பிள்ளைங்க ஆசைப்படுறாங்க, அதைவிட அவங்க சேர்ரதுக்கு எதுண்ணா முக்கியமா இருந்திட போகுது? வாழப் போறவங்களுக்கு மனசு ஒத்துப் போனா போதுமே.  என் பொண்ணு, உங்க சம்பிரதாயத்துக்கு கட்டுப்பட்டு, பழக்கம் வழக்கம் எல்லாத்தையும் சீக்கிரமா கத்துப்பா, கொஞ்சம் யோசிங்க அண்ணா !”

“என்ன தான் கர்ணன் பிராமணன்னு சொல்லி வித்தைகளை கத்துண்டாலும் அவன் சத்திரியன் சத்திரியன் தான். ஒருக்காலும் பிராமணனா ஆக முடியாது ” என்று இலைமறைகாயா கூறினார்.

“ஆனா , நான் உயிருள்ள, உணர்வுள்ள மனுஷி நம்புறீங்க தானப்பா ?” எனக் கேட்க, புரியாம பார்த்தார்.

“என்னப்பா பார்க்கிறீங்க, உங்க இனம் ,  உங்க வழக்கம்னு பேசிட்டே போறீங்க, ஆனால் அதுக்கும் மேல நானும்

சாகரனும்,உணர்வு, வலி நிறைந்த மனுஷங்க உங்களுக்கு தோணலையா ப்பா ! வழக்கம் , இனம், சொல்லி, எங்களை பிரிக்க நினைக்கிறீங்களே ! உங்க பொண்ணுங்க , உங்க மாட்டுப் பொண்ணு, உங்க மனைவி எல்லாரும் பழக்கவழக்கங்கள்  தெரிஞ்சுகிட்ட தான் பிறந்தாங்களா?!” எனக் கேட்கவும் அமைதியானார்.

“பொறக்கும் போது  எல்லாம் தெரிஞ்சு பொறக்கறது இல்லப்பா ! வளரும் போது தான் எல்லாத்தையும் கத்துக்கிறாங்க. என்னாலையும் உங்க வழக்கத்தை கத்துக்க முடியும், ஆனா உங்கள போல இந்த இனம் தான் என்ற அடையாளத்தோடு நான் பொறக்கலப்பா ! ” முகத்தில் அடித்தாற் போல பேச, அவருக்கு தான் முகம் செத்து விட்டது.

“சாகரனுக்கு நான்ன்னா ரொம்ப இஷ்டம், எனக்குன்னா  உயிர கூட யோசிக்காம குடுப்பான். அந்தளவு என் மேல உயிரா இருக்கான். எனக்கும் அவன்ன்னா ரொம்ப இஷ்டம், எங்க காதல் ஏன்ப்பா உங்களுக்கு புரியல !

சரிப்பா,  கல்யாணம்ன்னா என்ன ?” என அவரை பார்த்து கேட்க, அவரோ பதில் சொல்ல தடுமாறினார்.

“ரெண்டு மனச இணைக்கறது தானே கல்யாணம். ரெண்டு மனசு   ஒத்துப்போய், இல்லற வாழ்கையில் கடைசி வரைக்கும் பிரியாம ஆதர்ஷ தம்பதிகளாக வாழனும்றதுக்கு தான கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. இல்லை உங்க பழக்கவழக்கம் தெரிஞ்ச பொண்ண, கல்யாணன்ற பேர்ல வேலைக்கு ஆள் எடுக்கிறீங்களா சொல்லுங்க பா?” என அவரை பார்த்து கேள்வி கேட்க, திணறிப் போனார்.

“நான் கேட்கற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியலேல. உங்களுக்கு உங்க கெளரவும் முக்கியம், பெத்த பையன் வாழ்க்கை  எப்படியோ போனால் பரவாயில்லேல !” என எள்ளலுடன் கேட்க, அவர் வாயை திறக்கவே இல்ல.

“சரிபா நான் சாகரன் கிட்ட பேசறேன். இனிமே என்னை பார்க்க வராத, உன் வீட்ல சொல்ற பொண்ணை பார்த்து கல்யாணம் பணிக்க சொல்லிடுறேன். அவனும் நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம்  பண்ணிக்கிறேன் சொன்னா,  நான் சொன்னபடி இனி அவன் வாழ்க்கையில நான் வரவே மாட்டேன். ஆனால் அவன் மறுத்துட்டா ! என் சாகரன, என் கிட்டயே கொடுப்பீங்களா?”எனக் கேட்க,

அவரும் சாகரனை எப்படியாவது ஒத்துக்க வைக்கலாம் என்ற கடைசி நம்பிக்கையில் ” சரி இதுக்கு ஒத்துக்கிறேன், சாகரனை வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கறேன். முடியலன்னா உன் சாகரன உனக்கே கொடுக்கறேன்” என வாக்கு கொடுக்க,  அவள் கண்ணீல் மிளிர்ந்த நம்பிகையும் கர்வத்தையும் கண்டு ஒரு நொடி ஆடித்தார் போனார்.

“நான் வரேன் ” என்று கிளம்ப, ” இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்ப்பா அவனுக்கு தெரிய வேணாம்”என்றாள் . ஏதுவும் சொல்லாது சென்று விட்டார்.

”  ஏன் டி அவர்கிட்ட இப்படி பேசன?  மனுஷன்  ஏதாவது செய்து  சாகரன ஒதுக்க வைக்கப் போறார்” என்று பதற,

“இல்லம்மா, இவர் கிட்ட இப்படி தான் பேசணும், இறங்கினா ரொம்ப தான் மேல போவார். இவர் என்ன பண்ணாலும் சாகரன் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான். அந்த நம்பிக்கையில் தான் அவர் செலஞ்சு பண்ணினேன். நான் பண்ணினது சரிதான மாமா?” கிருஷ்ணனை பார்த்து கேட்டாள்.

” சரி தான் மா, ஆனா, சாகரன் மனசு உடைச்சிடாத. அவன் கிட்ட பக்குவமா  பேசி புரியவை !” என்றார்.

மறுநாள் சாகரன் அலுவலகத்து  முன்பாக வந்து அமர்ந்திருக்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். எப்பயும் சிரித்த வண்ணமாய் இருக்கும் அவனது வதனம் வாடி இருக்க? அதனைக் கண்டு அவள் மனம் துடித்தது. அவனை நெஞ்சசொடு அணைத்து  ஆறுதல் சொல்ல வேண்டுமென்று அவளையும் மீறி அவளது செல்கள் துடிக்க, மனதையும்  மூளையும் சமன் செய்து, ‘பொறுமை ‘ என்றாள். ‘ இந்த பிரிவின் வலியை  கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் , பின்னால் சுகமாக வாழலாம் சாகரா ‘. அதை  தன் மனதுக்குள்ள சொல்லிக் கொண்டு அவன் அருகில் வந்தாள்.

“சாகரா  என்னாச்சு?!” எனவும் அமர்ந்த வாக்கில் அவளிடையை கட்டிக் கொண்டு அதில் முக புதைத்தான். ” முடியல டி என்னால, ஏன் என் அப்பா  என் காதலை புரிஞ்சக்க  மாட்டிக்கிறார்னு தெரியல ! நீ இல்லம்மா எனக்கு வாழ்க்கையே இல்லனு சொல்லிட்டேன்.  அவருக்கு  அவர் கெளரவம் தான் முக்கியம். அப்போ எனக்கு என் காதல் தான் முக்கியம்,   நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றவனை நினைக்கையில் அழுகை முட்டிக் கொண்டு வர, வேறு வழியின்றி, பேச ஆரம்பித்தாள்.

” நீ விட்டுக்கு கொடுத்து தான் ஆகணும் சாகரா  !” என்று அடுத்த இடியை இறக்க, “அணைப்பிலிருந்தே அவள் முகம் பார்த்து ” என்ன சொல்ற ?”

“நான் உனக்கு வேணாம் சாகரா ? உன் குடும்பத்துக்கு  நான் ஒத்து வர மாட்டேன். நீ உங்க  அப்பா பார்க்கற  பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ ! அதான்  உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது” என்று கூறி முடிக்க விருட்டென எழுந்தவன் கோபத்தில் என்ன செய்வதென்றே  தெரியாமல் அவளை அடித்து இருந்தான்.

” உன்னை மாதிரி என்னால் மாத்தி மாத்தி யோசிக்க முடியாது டி,  எனக்கு நீ வேணும்,  இல்லையா நான் கேனடாவுக்கே போறேன். இங்க இருந்தால் தான என்னை கல்யாணம் பண்ணிக்க  சொல்வீங்க கேனடாவுக்கே போறேன் யாரும் வேணாம் எனக்கு !” கோபத்தில் கத்தியவன் அருகே இருந்த சுவரில் தன்  குத்தி தன் கோபத்தை குறைக்க முயன்றான்.

“சாகரா !” என பதறி அவன் கைப்பற்ற வந்தவளை தடுத்தவன், ” இந்த காயத்த விட,  உள்ள இருக்க காயம் ரொம்ப வலிக்குது டி”என்று  நெஞ்சை குத்திக் கட்டினான்.

“யாருக்குமே என் காதல் புரிய போறது இல்லேல. எல்லாருக்கும் அவங்கவங்க  முடிவு தான் முக்கியம்ன்னா,  எனக்கு என்  முடிவ தான்  முக்கியம், என் காதல்ல நான் யாருக்கும் புரிய வைக்க போறதில்ல ..

இங்க இருந்தால் தானே கல்யாணம் பண்ணிக்க சொல்வீங்க, உங்க யார் கண்ணுலையும் படாத தூரம் போயிடுறேன். அதிதிய பார்த்துக்க, அவளோட ஆசைய ஒரு அப்பன்னா, என்னால  நிறைவேத்த  முடியல !” என வலியில்  கண்ணீர் வடித்தவன் வெளியே விறுவிறுவென்று சென்றவன், திரும்ப வந்து அவளை இழுத்து இதழ் பதித்து, வெகு நேரத்துக்கு பின் விட்டவன், ” வலிக்குது டி ரொம்ப !!” என்று அவளிடம் தற்போதைக்கு மருந்து எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

‘ ஒரு வாரம் பொறுத்துக்கோ டா இந்த வலியை !’ என்றவளுக்கு பயமும் கூடியது. விபரீதமாக எதுவும் செய்து கொள்வானோ என்ற அச்சம் வேறு அவளை ஆட்டிப் படைத்தது.

அவன் கோபமாக வீட்டுக்கு வர, அங்கே,  மண்ணெண்ணெய் எடுத்து தன் மேல் ஊத்திக் கொண்டு தற்கொலை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார் வரதராஜன். “ஏண்ணா, அப்பா !! ” எனக் கத்த கத்த மண்ணெண்ணையை தலையில் ஊத்திக் கொண்டு நின்றார். சத்தம் கேட்டு வந்தவன் அவரது நிலையை கண்டு அதிர்ந்தான்.

“நான் எதுக்கு டி உயிரோட இருக்கணும் என் பேச்சுக்கு இங்க மதிப்பு இல்லாத இடத்துல நான் எதுக்கு இருக்கணும்? அவனுக்கு அந்தப் பொண்ணு தான  முக்கியம் நம்ம குல கோத்திரம் எதுவும்   முக்கியம் இல்லேல  ! நான் போறேன்டி, அதுக்கு பிறகு அவாளை மருமகளை நடுவீட்டுல உட்கார வைங்கோ !”  என்றவர் கத்த, “அப்படி சொல்லதேள்ண்ணா !” சாகரா உன் அப்பாவா காப்பாத்துடா !” கண்ணம்மா அழ, வேகமாக அவரிடம் கேனை பறித்தவன், ”  நீங்க ஏன்ப்பா சாகனும், நான் சாகறேன்ப்பா ! என்னால் நிழலிய விடுத்து யாரையும் கல்யாணம் பண்ணி உணர்வு இல்லாத பொணமா  வாழ்றத்துக்கு பொணமா போறதே நல்லது. உங்க கெளரவமும் போகாம இருக்கும், நான் போறேன் பா . நீங்க செத்தால்  நஷ்டம் எங்களுக்கு பா ! நான் செத்தா யாருக்கும்  நஷ்டம் இல்லப்பா !உங்களுக்கு மூணு பசங்க, பேர புள்ளைங்க இருக்காங்க , அம்மா  இருக்காங்க, அவளுக்கு குடும்பம் இருக்கு. எனக்கு யாருப்பா இருக்கா? என்  ஆசைக்கு விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத இடத்துல நான் ஏன் இருக்கணும் ? ” என்று அதை வாங்கி தன் மேல்  ஊத்திக் கொண்டவன், “நான் போறேன்ப்பா !” சிரித்த முகத்துடனே , அவர் கையில்  இருந்த தீப்பெட்டியை எடுத்து பத்த வைத்து செல்ல, அவரோ அவன் இவ்வாறு செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை உறைந்து போய் நின்றார். ரகுராம் தான் அவன் கையில் இருந்த தீப்பெட்டியை தட்டிவிட்டான்.

” என்ன முட்டாள் செயல் இது? ஏன் மாமா இப்படி பண்றேள் ? சாகரனை இழந்து தான் உங்க கெளரவத்த, உங்க இனத்த, ஜாதிய நிலை நாட்ட போறீங்களா ? அப்படி தான் பண்ணுவேன்னு சொன்னால்  இந்தாங்கோ பிடிங்கோ அவனை நீங்களே கொல்லுங்கோ ! அப்படியே எங்களை சேர்த்து எரிச்சிடுங்கொ உங்களுக்கு மருமகனாவோ மகளாவோ இருக்க எங்களுக்கு அசிங்கமா இருக்கு. அந்த அசிங்கத்தோடு வாழறத்துக்கு உங்க கையாலே எங்களுக்கும் கொள்ளி வச்சிடுங்கோ !” என்றான்.

“அத்திம்பேர் சொல்லறது சரிதான், ஜாதி, கெளரவம் பார்க்கிற இந்த வீட்ல நாங்க இருக்க பிடிக்கல எங்களையும் கொன்னுடுங்கோ !” என்றான் சங்கரன்.

” அவ,  ஆசைப்பட்ட பொண்ணை கட்டிவைங்கப்பா ! எங்களுக்கு தம்பி வேணும்ப்பா !” இருவரும் அழுக, கண்ணம்மாவோ, அவரிடம் முந்தானை நீட்டி, ” என் புள்ள உயிர பிச்சை போடுங்கோ !” என்று கெஞ்சி அழுதே விட்டார்.

அவர் அமைதியாக, சாகரனை அழைத்துக் கொண்டு பின் புறமாக, அவன் தலையில் தண்ணீரை  ஊத்திக்கொண்டு தாணும் ஊத்திக் கொண்டு உள்ளே  பேசாது வீட்டினுள் நுழைந்தார்.அவனையும் அவன் அறைக்கு அனுப்பிவைத்தனர்.

நடக்கூடத்தில் அமைதியாக  அமர்ந்திருந்தார் .  மற்றவர்களும் அமைதியாக  இருந்தனர்.

நிழலியோ மனசு கேளாமல் சாரதிக்கு அடித்து சாகரனை பற்றி கேட்க, சாரதி சொன்ன விஷயத்தை கேட்டு, அதிர்ந்து அடித்து பிடித்து ஓடி வந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு இருந்தாள். அவரை கண்டு எல்லாரும் எழுந்து நிற்க, வரதராஜனோ , தலை குனிந்தார்.

“உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தது சாகரனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க தான். அவனை கொல்ல இல்லப்பா  ! ஏன் எங்களை இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க?  என் சாகரனை எங்கிட்ட  கொடுத்திருங்க,  நான் சந்தோஷமா பார்த்துகிறேன்.  உங்க வழக்கத்தை எல்லாம் நான் கத்துக்கிறேன் நீங்க சொல்றத செய்றேன். நீங்க சொன்னது போல சாகரனை எனக்கு கொடுங்க ! இதுக்கு மேல நீங்க மனுசு இறங்கலன்னா  சொல்லுங்க சேர்ந்தாவது  செத்து போறோம், ஆனா, அந்தப் பாவமும் உங்களை தான் சேரும் ! ப்ளீஸ் ப்பா ! என்னை ஏத்துகோங்க… ” அவர் முன் கைகூப்பி நிற்க,

“நான் வாக்கு கொடுத்தா, மீற மாட்டேன்.சாகரன் உனக்கு தான் வீட்ல பெரியவாள வரச் சொல்லு” என்று உள்ளே சென்று விட,  அனைவருக்கும் அங்கே சந்தோசம். அவள் கண்ணம்மாவை  பார்க்க, அவர் வா என்று அழைக்க, ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.

“உங்களுக்கு என்னை பிடிக்கும் தான? இல்ல சாகரனுக்காக என்னை ஏத்துகிறீங்களா?” கண்ணீரை துடைத்துவாறு கேட்டாள்.

“எப்போ உன்னை முதல் முறைய பார்த்தேனோ ! சாகரனை தேடி வந்த அழுது நின்னப்ப, உனக்காக பரிதாப பட்டேன். அதே, அவரோட அனுமதி இல்லாமல் உள்ள வரமாட்டேன் சொல்லி ரோசமா நின்னப்பையும் பிரச்சனை நாங்க சொன்னப்போ முடிச்சு குடுத்தப்பவே உன் குணம் எனக்கு பிடிச்சது. நீ சாகரனுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கனு அவன் சொன்னப்ப உடல் சிலிர்த்தது. நீ தான் சாகரனுக்கு சரியானவ தோணுத்து, உன் தைரியம் நேக்கு  ரொம்ப பிடிக்கும், என் தோப்பானார் சொல்ற படி நீ இருக்கறனால் நேக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். இப்போ நீ என் மாட்டுப் பொண்ணா வரது எனக்கு ரொம்ப சந்தோசம், என் பேத்தியை  பிடிக்கும் ” என்றார்.

“தேங்க்ஸ் மா !” என்றவள் மற்றவர்களை பார்க்க, ” என்னை பார்க்காதே, நாம் ஆல்ரேடி உன்னை என் தங்கையா ஏத்துண்டேன்” சாரதி சொல்ல, “அப்போ நோக்கு முன்னமே எல்லா விஷயமும் தெரியுமா சாரதி?” ரகுராம் கேட்க, “ஈஈ… சாகரனை ஆசிஸ்டெண்ட் போக சொன்ன  ஐடியாவே நான் தான் குடுத்தேன் ” என்று காலரை தூக்கிவிட,

“பேருக்கு  ஏத்து வேலை தான் பார்த்துருக்கேள் !” என்றாள் வேதிகா அர்ஜுனனுக்கு  சாரதியாக கண்ணன் உதவியது போல இந்த சாகரனுக்கு சாரதியானான் பார்த்தசாரதி.

“எங்க வீட்டுக்கு ரெண்டு புது சொந்தம் வர போறது ஏத்துக்காம இருப்போமா? முதல் யோசித்தோம் தான் .  உங்க ரெண்டு  பேரோட காதலை பார்க்கும் போது சேர்த்து வைக்கறத்துல தப்பே இல்ல… ஷேமமா இருங்கோ ! ” என்றான் ரகுராம்.

“தேங்க்ஸ் அண்ணா ! ” என்றவள் சாகரனை தேட, “அவன்அவன்  ரூம்ல்  இருக்கான்  போய் பாருமா !” என்று கண்ணம்மா அனுப்பிவைத்தார்.

மேலே அவன் அறைக்கு சென்றாள். கதவு லேசாக சாத்தி இருந்தது. திறந்து உள்ளே வந்தவள், அவன் கட்டிலில் கண்களில் கைவைத்து மறைத்து படத்திருந்தான்.

அவன் அருகில் அமர்ந்து, தலையை வருட, அது முழுவதும் ஈரமாக இருக்க, தன் முந்தானையை எடுத்து துவட்ட யாரென  கையெடுத்து  பார்க்க, நிழலியை அங்கு கண்டு பதறியடுத்து எழுந்து அமர்ந்தான்.

“நீங்க இங்க எப்படி?”

“ஏன் வரக்கூடாதா?” என்று மீண்டும் தலையை துவட்டச் செல்ல தட்டிவிட்டான். ”  போடி,  நீ தான் எனக்கு ஒத்து வர மாட்டான். வீட்ல பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க  சொல்லிட்டு, இப்ப ஏன் வரக் கூடாதா கேக்குற? போடி ! “செல்லமாக முகத்தை திருப்பிக் கொள்ள,

“நான் என்ன பண்ணட்டும் சாகா, உங்க அப்பாக்கு நம்ம காதல் புரியனும் ஒரு வாரம் டைம் கொடுத்தேன்” என்று நடந்ததை சொன்னவள், “மனுசன் இப்படி பண்ணுவார் நினைக்கல அதவிட , நீ இப்படி பண்ணுவ நினைக்கவே இல்லடா, நீ சொல்லிட்டு போகும் போதே  உள்ளுக்குள் ஒருவித பயம் இருந்தது அதான் சாரதி அண்ணாக்கு போன் போட்டேன், அவர் விஷயத்தை  சொன்னதும், எனக்கு உயிரே இல்ல, அதான் ஓடி வந்துட்டேன். என்ன சொன்ன,  உனக்கு யாருமில்லையா,  அப்போ நான் யாருடா?பொண்டாட்டி புள்ளைனு நாங்க எதுக்கு டா இருக்கோம்? ராஸ்கல் இன்னொரு வாட்டி யாரும் இல்லேன்னு சொல்லிப்பார் அப்ப இருக்கு உனக்கு !” எனப் பொய் கோபம் கொள்ள, அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

“லவ் யூ டி பட்டர்பண்,  எங்க நீயும் என் காதலை புருஞ்சுக்கலை நினைக்கும் போது சாகணும் தான் தோணுச்சு, அதான் அப்பா கிட்ட நானே சாகுறேன் சொன்னேன்” அவன் அணைப்பில் இருந்து தலையை நிமிர்த்தியவள், அவன் வாயை அடைத்தாள். “சாரிடா ! எனக்கு வேற வழி தெரியல” என்றவள், அவள் இதழை ஒற்றியெடுத்து எழ முயல, அவன் பிடி வலுவானது.

“சாகரா விடு ! கீழ  எல்லாரும் இருக்காங்க” என நெளிந்தாள். ” கீழ தான இருக்காங்க” என்று அவளை மெத்தையில் கிடத்தி மேலே படர்ந்தான்.

” இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்” என்றாள் அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்து, “எதெல்லாம்?” என்று கழுத்து வளைவில் முகம் புதைத்து முன்னேற, பாவையவள் கைகள் தானாக  நெஞ்சிலிருந்து முதுக்கு முன்னேறியது.

“சாகரா… !” என கீழே அழைக்க, அவனை தள்ளிவிட்டு எழுந்தாள். ” ஃபிராடு டா நீ அப்படியே மயக்கி, உன் பக்கம் சாய வைக்கற? ” சேலையை சரி செய்து விட்டு, எழுந்து நின்றாள், அவள் கையை பிடித்து கொண்டவன், இனிமே இந்த அறையில் தான்  நீ, நான், அதிதி.

அப்ப,  அப்ப  திருட்டு  முத்தம் ,  அணைப்பு,  இப்படி கட்டில்ல சின்ன விளையாட்டுன்னு , கொஞ்சம் சண்டை, சமாதானம் , நிறைய  காதல் எல்லாமே இருக்கும் என் கூட , இந்த உலகத்தில வாழ தயாரா மிஸஸ் சாகரன்?”

“எப்போவோ தயார் மிஸ்டர் நிழலி” என்று சிரிக்க, அவள் கையில் முத்தமிட்டான், அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள். பின் அவனை கஷ்டப்பட்டு கீழே அழைத்து வந்தாள். அனைவரும் அவனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தனர். அனைவரின் முன் வழிந்தவன், “அம்மா !” எனக் கட்டிக்  கொண்டான்.

“யோவ் சாகரா ! இன்னும் அம்மா முத்தானையை பிடிக்காம பொண்டாட்டி முந்தானை பிடிடாப்பா !” எனவும் இருவர் வெட்கம் கொள்ள, அங்கே சிரிப்பலைகள் தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்