Loading

இதழ் விரிக்காத அந்த மொட்டை பாதுக்காத்து, கயவன் கையில்,  சிக்கி கசங்கி மடியவிடாமல்  கைப்பற்றி உரியவனிடத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டது.  மருத்துவமனை  மெத்தையில் அதிதி உறங்கிக் கொண்டிருக்க, சற்று முன் மருத்துவர் சொன்ன பதில்   அவர்களுக்கு நிம்மதி அளித்தது “எந்த பிரச்சினையும் இல்ல,  மயக்கம் மருந்து அதிகம்  கொடுத்ததால, இன்னும் குழந்தைக்கு நினைவு திரும்பல, மத்த படி சி இஸ் பெர்ஃபெக்ட்”என்றார்.

அவர் சென்றதும் தன் மகளை ஆதுரமாய் பார்த்தவள், அவள் உடலை வருடினாள். அவளுக்கு ஒன்றுமில்லை என்று மூளை சொன்னாலும்,  நடக்க இருந்த பேராபத்தை என்னும் போதே முதுகுத்தண்டு சிலிர்த்தெழுந்தது.  கைகள் இரண்டும் நடுக்கத்தை கொண்டிருந்தன, கண்ணீர் நின்ற பாடு இல்லை.

“நிழலி, அதிதிக்கு ஒன்னுமில்ல.  ஜஸ்ட் ரிலாக்ஸ். நாம அதிதிய காப்பாத்திட்டோம் மா. அவ நம்ம கிட்ட தான் இருக்கா, டென்சன் ஆகாத ரிலாக்ஸ்  டி !” என்று அவளை அணைத்து  முதுகை வருடி கொடுத்தான் சாகரன்.

“முடியல சாகரா ! இன்னும் எனக்கு பயம் போகல, கையெல்லாம் நடுங்கிட்டே இருக்கு. நாம மட்டும் லேட்டா போயிருந்தா, அதிதிக்கு என்னா ஆயிருக்கும். நினைக்கவே உடல் எல்லாம் தூக்கி போடுது சாகரா ! அதிதிக்கு ஒன்னுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என அவனை அணைத்து அழுது சட்டையை நனைத்தாள்.

“ஏய் ! ஏன் டி இப்படி பேசுற ?அவளுக்கு எதுவும் ஆகல , ஆகாது , ஆகவும் விடமாட்டோம் . நீ அதையே நினைக்காத மா”அவளை மேலும் இறுக்கி அணைத்து கொண்டான்.

அவள் வாய்விட்டு சொல்லி அழுகிறாள். சாகரனோ,  உள்ளுக்குள் வைத்து புழுங்குகிறான். நானும் உடைந்து போய்விட்டால் நிழலியை யார் தேற்றுவது? என எண்ணியவன் அதிதியை  நினைத்து கண்ணீர் விட்டப்படி இருந்தான். ‘அந்தப் பிஞ்சை கூட களவாட எப்படி தான் மனசு வந்ததோ ? மனதில் துளிக் கூடவா ஈவு இரக்கம் இல்லை. என்ன செய்கிறோம் என்பது கூடவா ஒரு மனிதனுக்கு தெரியாது. காமவெறி கண்ணையும் மூளை சேர்த்து மழுங்கடித்து விடுமா? ச்ச என்ன ஜென்மங்கள் ஆண்வர்க்கத்துக்கே பேரசிங்கம் , அவமானம் அந்த அனுவை கொன்னதுல தப்பே இல்ல, இன்னும் துடிக்க துடிக்கக்  கொன்றுக்கனும் ‘ பல்லை கடித்து  முகத்தை இறுக்கினான்.

வாசு, உள்ளே வந்தவன், சாகரனிடம் ” பாடிய போஸ்ட்  மார்டம் பண்ண எடுத்துட்டு போயிருக்காங்க. நிழலியோட ஃபிரண்டு கிட்ட  பேசிருக்கேன்.அவங்க ஆதர்ஷனுக்காக ஆஜர் ஆகுறேன் சொல்லிருக்காங்க ” என்றான். பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் தான் ஆட்டினான். “அண்ணா, உண்மையிலே ஆதர்ஷன் தான் அனுவ கொன்னான? அங்க என்ன நடந்தது?” சந்தேகமாக  கேட்க, சாகரனின் அணைப்பில் இருந்த நிழலிக்கு அங்கு நடந்த  நிகழ்வே  நினைவிற்கு வந்தது.

வழக்கம் போல  பள்ளிக்கு செல்லும் வழியில்  அதிதியை அழைத்து செல்லும் கார் சென்றது. அதிதியுடன் பானுமதியும் உள்ளே இருந்தார். திடிரென கார் சடர்ன் பிரேக் போட்டு நின்றது.” என்னாச்சு அண்ணா?” எனவும்” தெரில மா பார்க்கிறேன் ” என்று இறங்கிய ஓட்டுநரை பின்னால் யாரோ தலையில் தாக்க, கீழே விழுந்தார்.  சத்தம் கேட்டு,  பானுமதியும் இறங்க, அவரையும் தாக்கி விட்டு, உள்ள மிரண்டு போயிருந்த அதிதியை தூக்கினர், அதிதியோ அவனது கையை கடிக்க, அவள் முகத்தில் மயக்கம் மருந்தை அடித்தனர்.

அவள் மயங்க, அவளை தூக்கி கொண்டு அனுவின் கெஸ்ட் ஆவ்ஸிற்குள் நுழைந்தவர்கள், அவளை மெத்தையில் கிடத்தி, அனுவிடம் சொல்லி விட்டு, வாசலில் காவலுக்கு நின்றனர் அந்த  இருவரும்.

அதிதி மெத்தையில் கிடக்க, அவளை பார்த்தவாறே கோப்பையில் இருந்த மதுவை பருகினான்

அனு. “அப்றம் என்ன அனு , நிழலிய மிரட்டி, இங்க வர சொல்லலாம?” ராக்கி கேட்க,

” இப்போதான் விஷயம் அவ காதுக்கு போயிருக்கும் கொஞ்சம் அலையட்டும் டா ! ” என்றவன் அதிதியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

அந்த அறையில்  ஒரு சின்ன அறையாக கண்ணாடி வைத்து அடைத்து இருக்க, அதில் ஆதர்ஷனை கட்டி போட்டிருந்தனர். கண்ணாடி தடுப்பு வழியே  தன் மகளை கண்டு துடித்தான். கைகால்கள் கட்டப்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் கண்ணீர் வடித்தான். ‘தான் செய்த பாவம் தான் தன் மகளை பாதிக்கிறதோ !’ என்று எண்ணி நொந்தான். தன் முழு பலம் திரட்டி முயற்சிக்க முடியாமல் தோற்றான்.

“உன்னால் முடியாது ராசா ! அந்த ரூம் ல இருந்து உன்னால் வெளிய வரவே முடியாது  ! நிழலிய ரேப் பண்றத நீ ஃப்ரீ சோ பார்க்க வேணாம் அதான் இந்த சென்டிங். பார்த்து என்ஜாய் பண்ணு !” என்றான்.

“டேய் !! உங்க கூட பிரண்ட்ஷிப் வச்சதுக்கு என் வாழ்க்கைய தான் அழிச்சீங்க, இப்போ ஏன்டா நிழலி வாழ்க்கையும் அழிக்கிறீங்க? அவளை விடுங்கடா !” உள்ளே  இருந்து கதறினான். கதவை அடைக்காமல் இருந்ததால் அவன் பேசுவது கேட்க,

” நீ வேணா  உனக்கு நடந்ததை மறந்து நல்லவன் ஆகலாம். நாங்க ஏன்டா திருந்தணும்? ராஜா மாதிரி வாழ வேண்டிய எங்களை அடிமை மாதிரி வாழ விட்டவள உன்னை போல சும்மா விட சொல்றீயா, அவளை இன்னைக்கு ஒரு வழியாக்குறேன் டா ! இன்னைக்கு அவ படுற கஷ்டத்த  வாழ்நாள் முழுக்க  மறக்கவே கூடாது. நினைச்சி நினைச்சி  நொந்து சாகனும் ” என்றவனின்  பேச்சில வக்கிரமே நிறைந்திருந்தன.

“போன் போடுறா !” என்றான் ராக்கியிடம்,  அவனும் நிழலியை அழைத்தான். காரில் இருவரும் அதிதியை தேடிய படி  இருந்தனர். நிழலியின் அலைபேசி அலற புது நம்பராக இருந்தது.  ஸ்பீக்கரில் போட்டாள். ” என்ன நிழலி உன் பொண்ணைத் தான் தேடிட்டு இருக்க போல?  ”  என எள்ளலுடன்  கேட்டான் “ஹலோ யார் நீ?”

” சொல்றேன் மா சொல்றேன். உன் பொண்ணு என் கிட்ட தான் இருக்கா, உன் பொண்ணு உனக்கு அப்படியே வேணும்ன்னா, நான் சொல்ற  இடத்துக்கு நீ வர, அதுவும் தனியா வர. உன் அல்லக்கை சாகரனையோ  இல்லை வேற யாரையோ  கூட்டிட்டு வந்த உன் பொண்ணு பொணத்தை தான் தூக்கிட்டு போவ”என்றவன் இடத்தை சொல்லி, போனை கட் பண்ணினான்.

வேகமாக அருகே இருந்த சாகரனை இறங்க சொன்னாள் நிழலி

“சாகரா !  நீ… நீ… இறங்கு நான் மட்டும் போறேன்” அவனை தள்ளாத குறையாக  போகச் சொல்ல, ” இரு டி , நீ மட்டும் போய் அங்க என்ன பண்ண போற நானு வரேன்” என்றான். ” அவன் சொன்னது உனக்கு  கேக்கலையா? என்னை தனியா தான் வர சொல்லிருக்கான். நீயும் கூட வந்தது  தெரிஞ்சது அதிதியை கொன்னுடுவாங்க, நீ…  போ… போ… நான் அதிதிய கூட்டிட்டு வரேன். இல்ல ரெண்டு பேரும் சாகுறோம் ” என்றாள் அவனை விரட்டிய படி, அதில் கடுப்பானவன்,

” நிழலி, கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு. நான் பின்னாடி ஒளிஞ்சுகிறேன். நீ தனியா வந்த மாதிரியே இருக்கட்டும் , அவன் வீடு வந்ததும் உள்ள போ, வீடியோ கால் ஆன் பண்ணு, உனக்கு எதுவும்ன்னா நான் உள்ள வருவேன் புரியுதா? ” எனவும் அவளுக்கும் அது சரியென பட, அவள் காரை ஓட்ட, இவன் பின்னே சாய்வாக அமர்ந்து  கொண்டான், நிழலி கரை எடுத்துக்  கொண்டு விரைந்தாள்.

இங்கோ, ஆதர்ஷன் தப்பிக்க வழி தேடி சுற்றி சுற்றிப் பார்த்தவன் , அங்கே பாட்டில்கள் நிறைய  இருக்க, அதில் ஒன்றை ட் காலால் தன் பக்கம்  உருட்டி கொண்டு வந்தவன் அதை உடைத்து அந்த துண்டுகளை வைத்து கட்டிய கயிறை அறுத்தான்.

அவர்களோ மது அருந்திக் கொண்டிருந்தனர். எப்படியோ கையிறு அருந்து விழுக, கதவை திறக்க  முயன்றான். இங்கோ அனு, அந்த அறைக்குள் தடுமாறி  வந்தவன், அதிதியை  வக்கிரமாய் பார்த்து நெருங்கி, அவள் கால்களை வருடினான். அதை கண்ட ஆதர்ஷன் துடித்து போனான். ” டேய் என் பொண்ண விடுங்க டா ! என் குழந்தைய விடுங்கடா கதற” இவனுக்கு கேட்க வில்லை.  அதிதியின் இரு  பக்கமும் கால்களை விரித்து தான் ஆடையை அவிழ்க்க சென்றவனை தள்ளி விட்டான் ராக்கி.

” என்ன டா பண்ற?” போதையிலும் பதறினான்.

” மெயின் டிஸ் வர வரைக்கும் எப்படி சும்மா இருக்கறது? அதான் சைட் டிஸ் சாப்பிடலாம் ” என்றான்.

“அது குழந்தை டா ! “

“குழந்த தான். ஆனா  பொண் குழந்தை டா !”  பெரிதாக சிரித்தான். ” வேணா அனு, நமக்கு தேவை நிழலி. அவளை எது வேணா செய். ஆனால் இந்தக் குழந்தைய  விட்று டா !” என்றான்

” என்னடா நீயும் இவன் மாதிரி நல்லவனாகிட்டியா? இதுவும்  நிழலிய பழிவாங்கறதான். உனக்கு இவ  வேணான்னா அமைதியா இரு !” என்றவன்  அதிதியின் அருகே சென்றான்.

“டேய் ராக்கி அவன் கிட்ட வேணாம் சொல்லுடா ! அது  குழந்தைடா வலி தாங்க மாட்டா டா !” என்று உள்ளிருந்தே கத்தினான். ராக்கிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை . அனு அவளை நெருங்கவும் ஆடியாட்கள் உள்ளே வர சரியாக இருந்தது. ” அந்த பொண்ணு வந்திருச்சு சார்” என்றான்.

“தனியா வந்திருக்காளா? இல்ல ஆள் கூட்டிட்டு வந்திருக்காளா ?” அனு ஆடையை சரி செய்து விட்டு  மெத்தையில் இருந்து இறங்கி அவன் அருகே வந்து கேட்க,

“தனியா தான் வந்திருக்கு” என்றான். “அவள வர சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க ” என்றான்.

நிழலியை உள்ளே விட்டு அவர்களை செல்வதை காரில் அமர்ந்தவாறே நோட்டம் விட்டான்  சாகரன். ஊரை விட்டு ஒதுக்கு புறமாக இருந்தது அந்த வீடு . அந்த இடத்தின் லொக்கேசனை காவல் துறையினருக்கு சேர் செய்தான்.

வீடியோ காலை ஆன் செய்தவாரே உள்ளே நுழைந்த நிழலியை வரவேற்றனர் ராக்கியும்  அனுவும். அவர்களை கண்டு அதிர்ந்தாள். “எங்களை இங்க நீங்க எதிர்பார்க்கலேல !” சத்தமாக சிரித்தான் அனு.

” எங்களை அசிங்க படுத்தி அவமான படுத்தின உன்னை மன்னிக்க நாங்க என்ன ஏசுவா !  உன்னையும் உன்  பொண்ணையும் சீரழிக்க தாண்டி இங்க வர வச்சிருக்கேன்” என்றவன் மேலிருந்து கீழ்வரை அவளை அளவெடுக்க, “ப்பா , எப்படி டி இன்னும் அப்படியே இருக்க?  ஆதர்ஷன் மேல பொறாமை கூட வந்தது இப்பையும் தான். முதல் அனுப்பவிச்சிட்டானேன்னு

அனுபவிஸ்தான். பரவாயில்லை, யோவ் ஆதர்ஷா, இன்னைக்கு நாங்க,உன் முன்னாள் காதலிய அனுபவிக்க போறோம், எதுவும் டிப்ஸ் இருந்தா கொடுயா?” என ஆதர்ஷனை பார்த்து கேட்க, அப்போது தான் அங்கு அறையில் கோபத்தில் சீறிக் கொண்டிருக்கும் ஆதர்ஷனை கண்டாள்.

“நிழலி, அதிதிய கூட்டிட்டு போ !” என்று கத்தினான்.  ஆனால் யார் காதிலும்  விழவில்லை. “அவன் பேசுறது கேக்காது. ஆனால் நாம பேசுறது அவனுக்கு கேட்கும், அது எதுக்கு இப்போ வா வந்த வேலையை பார்க்கலாம்” என்று அவள் முந்தானையை பற்ற, அவர்கள் ஆதர்ஷனை பார்த்து பேசும் போதே தனது இடது கையால் அங்கிருந்த அலங்கார பொருட்களில் இரும்பு பொருளை கையில் பிடித்திருந்தாள். தனது முந்தானையை பிடித்ததும், இடது கையால் அவனது தலையை தாக்க, கீழே விழுந்தான்.  “ஏஏய் !!!” எனக் கத்தி ராக்கி அவள் கையை பிடித்து கொண்டான். “இன்னும் திமிர் அடங்கலேல டி உனக்கு “என அவளை இழுத்து மெத்தையில் போட்டான்.

மெத்தையில் விழுந்தவள், அதிதியை கண்டு”அதிதி அதிதி … “அவளை எழுப்ப, அவள் எழுவே இல்லை , அவள் முடியை பற்றிய ராக்கி ” அவ, இப்போதைக்கு எழ மாட்ட,  வாடி ” என அவள் சேலையை பற்ற,  அவனை பின்னாடி வந்த சாகரன் அவனை எத்தினான்.

சாகரனை கண்டு அதிர்ந்தான்.

“நீ… நீ… ” என்றவன் அவனை பேசவிடாமல் அடியென அடிக்க, அனு சாகரனை பின்னால் தாக்கினான். அவன் தலையை பிடித்து திரும்பினான்.

அங்கே சண்டை நடக்க, நிழலி ஆதர்ஷனின் கதவை திறந்து விட  நால்வரும் சண்டையிட்டு கொண்டனர்.

“நிழலி அதிதிய  தூக்கிட்டு போ ! “சாகரன் கத்த, அவளும் அதிதியை தூக்கி கொண்டு செல்ல, அனு அவளை  முந்திக் கொண்டு போகவிடாமல் தடுத்தான். அவர்கள் குடித்து வைத்திருந்த பாட்டிலை உடைத்து வழிவிட சொல்ல மிரட்டினாள். அதை கண்டு பலமாக சிரித்த அனு,   அதிதியை தொட முயற்சிக்க, பாட்டிலை வைத்து அவன் நெஞ்சிலே குத்தி கிழித்தாள், வலியில் துடித்துடித்து அங்கே இறந்து போனான். இங்கோ ராக்கி, அவர்கள் அடித்த அடியில் மயங்கி இருந்தான்.

தன் மகளை கையில் வைத்தவாறே கதறி அழுதாள் நிழலி. இருவரும்  அங்கு வந்து சேர்ந்தனர். “நான் கொலை பண்ணிட்டேன் சாகரா, கொலை பண்ணிட்டேன் !” எனக் மடங்கி அழுத்தாள். “நீ பண்ணது கொலை  இல்ல தற்காப்பு டி  !” என்றான் சாகரன். அவள் பாட்டிலில் வலியும் துளி ரத்தத்தை பார்க்க பார்க்க ,மேலும் அழுகை வந்தது. ” நான் சரண்டர் ஆகறேன் சாகரா !  நீ அதிதிய தூக்கிட்டு விட்டுக்கு போ “என்றாள்.

“வேணாம் நிழலி ! நீ அதிதிய  தூக்கிட்டு போ, நான் இந்தக் கொலை பண்ணதா சரண்டர் ஆகுறேன்” என்று கையில் இருந்த பாட்டிலை வாங்க முயல அதற்குள் ஆதர்ஷன் அதனை வாங்கிருந்தான். இருவரும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

“இதுவரைக்கும்  என்னாலையும் இவனுங்கனாலையும் நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட நிழலி, போதும்.  நான் தண்டனை அனுபவிச்சா என்னோட போயிடும். நீ தண்டனை அனுபவிச்சா, அது அதிதியை பாதிக்கும். இதுவரைக்கும் நான் பண்ண தப்புக்கு எனக்கான தண்டனையா, இதை  ஏத்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து கிளம்புங்க” என்றான் அதற்குள் போலீஸூம் அங்கு வந்து விட, தானாக சென்று அவர்களிடம் சரண்டரானான். சாகரன் நிழலியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

பானுமதிக்கும் ஓட்டுநருக்கும் தலையில் கட்டுப் போட்டிருந்தனர்.

அதிதியை சுற்றி குடும்பமே இருக்க, அவள் மெல்ல கண்களை திறந்து அனைவரையும் சுற்றி சுற்றிப் பார்த்தவள், சாகரனை கண்டதும் அருகில் அழைத்தாள்.

“யாரு என்ன கடத்தினா சாகா?” எனக் கேட்கவும், அவன் நிழலியைப்  பார்க்க சொல்ல வேண்டாம் என்றாள்.

“யாரோ பணத்துக்காக தான்,உன்னை  கடத்திருக்காங்க பேபி “

“அப்படியா ! பணம் குடுத்துட்டு தான் என்னை காப்பாத்தினீங்களா? அவனுக்கு பனிஷ்மெண்ட் வாங்கி கொடுக்கலையா?” பாவமாக கேட்க,

“இல்ல பேபி, அவன் கிட்ட ஃபைட் பண்ணி  உன்னை காப்பாத்திட்டோம், அவனுக்கு சரியான பனிஷ்மெண்டும் குடுத்துட்டோம் பேபி !” என்றான்.

“ஹேய் சூப்பர் !  நீ தான்  ஃபைட் பண்ணி என்னை காப்பாத்தினியா சாகா?” என அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில்.

“இல்லம்மா, நானும் ஃபைட் பண்ணினேன் தான். ஆனால்  உன்னை காப்பாத்துனது உன் அம்மா தான். உன் அம்மா சச்ச பிரேவ் வுமேன்… அவங்க கிட்ட இருந்து நீ, தைரியத்தை கத்துக்கணும் பேபி !” என்றான். அவள் தன் தாயைப்  பார்க்க, அவளோ கண்ணீர் விட்ட படி தன் மகளை பார்த்தாள்.

” உன் மேல கோவமா தான் இருந்தேன். நீ என்னை காப்பத்தினதுனால் உன்னை மன்னிச்சு விடுறேன்” என்றதும் நிழலிக்கு கோவம் வரவில்லை தன் மகள் கிடைத்ததே போதும் என்று இருந்தது. அவளது வழமையான பேச்சைக் கண்டதும் மாறி மாறி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“பயந்துட்டியா?”

“ஆம் ” எனத் தலையாட்டி அழுதாள். “சாகா,  இருக்கும் போது பயப்படலாமா? ” என்று கண்ணீரை துடைத்து விட்டாள்.  இருவரையும் அருகே அழைத்து கட்டிக் கொண்டாள் அதிதி.  அந்த மூவரையும் கண்டு குடும்ப  மொத்தத்திற்கும் நிம்மதி வர, அவர்களை அங்கே விட்டு மற்றவர்கள் வெளியே வந்தனர்.

இரண்டு நாள் கழித்து கேஸ் கோர்டிற்கு வந்தது. முன் விரோத காரணமாக  குழந்தை கடத்தி வைத்திருந்த தன் நண்பர்களிடம் இருந்து குழந்தை மீட்டுக்கும் போது, நடந்த கலவரத்தில் தன்னை தாக்க வரும் போது தற்காப்பிற்க்காக அனிருத்தை கொன்றதாக, ஆதர்ஷன்  வாக்கு மூலம் கொடுத்தான். அவனுக்கு  மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கினார்கள். ராக்கி உயிரோட தான் இருந்தான், அவனும் குற்றத்தை ஒத்துக்  கொண்டதால் ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க இருவரும் ஜெயிலுக்குச் சென்றனர்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கணக்காக,  நிழலி சாகரனுடன் மன்றாடிக் கொண்டிருத்தாள்.

“இல்ல சாகரா, நமக்குள்ள ஒத்து வராது,நீ உன் வீட்ல சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க அதான் உனக்கு நல்லது. நான் உங்க குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டேன். உன் குடும்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்க  சாகரா ! ” எனவும் அவள் கன்னத்தில் சாகரனின் விரல்களின் தடம் பதிய,

” உன்னை மாதிரி என்னால் மாத்தி மாத்தி யோசிக்க முடியாது டி,  எனக்கு நீ வேணும்,  இல்லையா நான் கேனடாவுக்கே போறேன். இங்க இருந்தால் தான என்னை கல்யாணம் பண்ணிக்க  சொல்வீங்க கேனடாவுக்கே போறேன் யாரும் வேணாம் எனக்கு !” கோபத்தில் கத்தியவன் அருகே இருந்த சுவரில் தன்  குத்தி தன் கோபத்தை குறைக்க முயன்றான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்