
தன்னை தண்ணீர் வசம் ஒப்படைத்து விட்டு , சற்று முன் நிகழ்ந்த இதழ் போரை எண்ணியே நின்றிருந்தாள் நிழலி. இப்போதும் கூட, அவன் தன் இதழை சுவைப்பது போது ஒரு குறுகுறுப்பு வந்து போனது .தேகமெங்கும் ஆட்சி புரியும் மயிர்களெல்லாம் சிலிர்த்து நிக்க, தன் உடம்பில் ஏதோ நிகழ்வதை அவளே அறியாள். எவ்வளவு நேரம் அதிலே நின்றாளோ ! ” பேபி !” என அதிதியின் குரல் கேட்டு, நினைவுக்கு வந்தவள்…
“இதோ வரேன் பேபி ! டோர் லாக் பண்ணு” என்றவள் துவாலையில் தன்னை மறைத்து வேறொரு துவாலையில் தலையை துவட்டிக் கொண்டு கதவை திறக்க,
அதிதியோ, கதவை மூடி விட்டு மெத்தையில் அமர்ந்து சாகரனுக்கு அழைத்தாள். அவனும் தூக்க கலக்கத்தோடு வீடியோ காலை ஆன் செய்தான்.
“ஹாய் சாகா !” என டேப் வழியே கையை காட்ட, அவனும் தூக்க கலக்கத்தில் ” ஹாய் பேபி ! ” என்றான்.
வெளியே வந்த நிழலியும் ” யார் கிட்ட பேசிட்டு இருக்க? ” என நெருங்க, அவளோ கேமிராவை அவள் புறம் திருப்ப, பாதி தூக்கத்தில் இருந்தவனுக்கு மொத்த தூக்கம் வடிந்தது அவளது நிலையை கண்டு, அவளும் அவன் விழிப்பதைக் கண்ட பின் தான் தான் நின்றிருந்த கோலமறிய, ” அதிதிதிதி….” எனப் பல்லை கடித்துக் கொண்டு ஓரமாக நின்றாள்.
“வாட் பேபி ?” ஒன்று அறியாமல் தோளை குலுக்க, அவளை முறைக்க முடியாமல் தன் தலையை தானே அறைந்தவள், இரவாடை எடுத்து கொண்டு குளியலறையில் புகுந்தாள்.
இங்கே அவனோ நெஞ்சை நீவிக் கொண்டவன், ‘ சாகரா ! அம்மாவும் பொண்ணும் உன்னை கொல்ல பிளான் பண்றாங்க ஸ்டேடியா இருடா !’ மீண்டும் நெஞ்சை நீவி விட்டான்.
“என்னாச்சு சாகா ! ஹார்ட் வலிக்குதா ?” அவள் தவிப்போடு கேட்க, ” இல்ல பேபி, சாப்பாடு சேரல அதான், ஜீரணிக்க தடவி கொடுத்தேன். ஸ்கூல் விட்டு வந்துட்டியா பேபி ?” என விசாரித்தான். அவளோ அவனை முறைத்தாள், “என்ன பேபி ?”
“உன் கூட டூ சாகா !” முகத்தை திருப்பிக் கொள்ள, “ஏன் பேபி ?” எனக் கேட்டான் திகைத்துவிட்டு. ” இன்னைக்கு நீ உன் பிராமிஸ மீறிட்ட, ” என்னை பார்க்க வரவே இல்ல, உனக்கு நிழலி தான முக்கியம் நான் இல்லேல ” உதட்டைப் பிதுக்கி அழுவதை போல கண்ணை கசக்க, “ஐயோ பேபி அழக் கூடாது . எனக்கு எப்பையும் அதிதி பேபி ஃபரஸ்ட் நிழலி பேபி நெக்ஸ்ட் . உனக்காக வெயிட் பண்ணிண்டு இருந்தேன் பேபி, நீ வரவே இல்ல, வீட்ல அம்மா கூப்பிடுட்டா அதான் கிளம்பிட்டேன் பேபி, நாளைக்கு மார்னிங், நான் தான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டிண்டு போவேன்” என்று இவன் இங்கு வாக்கு கொடுக்க, அங்கே நிழலியே இடையில் கைவைத்து முறைத்தாள், அதை கண்ட அதிதி, வாயில் கைவைத்து சிரித்தாள்.
“எதுக்கு பேபி சிரிக்கிற?” எனவும், ” மாட்டினீயா உன் பாஸ் ஹார்ட் கார்ன் கிட்ட?” என டேப்பை அவள் புறம் திருப்ப, எப்போது வேணா பொறிய காத்து இருக்கும் அவர்களின் ஹார்ட் கார்ன் இருவரையும் முறைத்த வண்ணம் இருந்தாள்.
“அதிதி…” வெளியே மிரு அழைக்க ,டேப்பை நிழலியின் கையில் திணித்து விட்டு, ஓடிப்போனாள்.
‘ஐயோ மாட்டிவிட்டாளே ! இவளை எப்படி சமாளிக்க போறேனோ !’ உள்ளுக்குள் நொந்து கொள்ள, “என்ன என்னை எப்படி சமாளிக்கலாம் யோசிக்கிறீயா?” என சரியாக கேட்க, முதலில் “ஆமாம்” என்றவன் பிறகு”இல்லை “என்றான் அவள் முறைப்பில். ” உனக்கு அதிதி தான ஃபர்ஸ்ட் நான் நெஸ்ட் தான” என சிறு பிள்ளையாய் கோபம் கொள்ள, ” ஹேய் பட்டர்பண், நீ தான் எனக்கு ஃபரஸ்ட் அதிதி தான் நெக்ஸ்ட் பிராமிஸ்” என்றான்.
“மனசுல இருக்கறது தான் முதல் வரும், அப்றம் எல்லாம் சமாளிப்பு தான்…” என்று நொடித்துக் கொள்ள, “ஏய் பட்டர்பண் என்ன பாரேன்”ஹஸ்கி குரலி அவனழைக்க, திரும்பி அவனை பார்த்தாள். ” உனக்கு ஃபீலிங்ஸே இல்லையா டி உனக்கு முத்தம் குடுத்துண்டு வந்தது அப்றம் நான் நானா இல்ல டி. நீ பக்கத்துல இருக்கறது போல இருக்கு டி. இந்நேரம் நீ பக்கத்துல இருந்தா …”என்று அவளை நோக்க, அவளோ வெட்கி முகம் சிவக்க, “பார்த்துண்டேன் இருப்பேன் சொல்ல வந்தேன் டி” சட்டென ஏமாற்றம் அடைந்தது போல அவனை பார்க்க, ” ஏய் என்னாச்சு ஏன் இப்படி பார்க்கற? ஓ… ஒருவேல டேர்ட்டியா எதுவும் யோசிச்சீயா டேர்ட்டி கேர்ள் ?” எனவும் அவனை முறைத்து விட்டு வீடியோ காலை அணைத்தாள்.
அவள் மனமுணர்ந்த அவளது காதல் விடயம், அவள் மூளை அறிந்தும் அறியாமல் நடித்து தொலைக்கிறது. தலையைத் துவட்டிவிட்டு கீழே இறங்க,அங்கே அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.
அதில் கலந்து கொள்ள பிடிக்காமல் தனியாக காலாற தோட்டத்தில் நடந்தாள். அங்கே கிருஷ்ணனும் வந்தார்.” என் குட்டிமா தனியா இருக்க? உள்ள வந்து அவங்களோட இருக்கலாம்ல?” எனவும்.
” தனிமை தேவப்பட்டது மாமா அதான்?” என்றாள் தயங்கி, ” என்ன விஷயம் டா மாமா கிட்ட சொல்லு, நான் கிளியர் பண்றேன் ” எனவும் அவர் பக்கத்தில் அமர்ந்தவள் அவர் தோள் சாய்ந்து சாகரன் கூறியதை அனைத்தையும் கூற, “எனக்கு என்ன சொல்றதுனே தெரியல் மாமா?”
“உனக்கு அவனை பிடிச்சிருக்கா குட்டிமா?” அவள் அமைதியாக இருக்க, அவளது அமைதியே ஆமாம் என்று வெளிச்சம் போட்டு காட்ட, சிரித்தவர், ” அப்றம் என்னடா தயக்கம், அவன் கிட்ட உன் காதலை சொல்ல வேண்டியது தான !”
“பயமா இருக்கு மாமா ! ” என அவள் சொல்வதை கண்டு ஆச்சரியம் கொண்டவர், “அவன போல யோசிக்க முடியல மாமா , அவங்க அப்பா ஆச்சாரம் பார்ப்பார், எப்படி கெட்டு போன ஒருத்திய ,
குழந்தையோட இருக்க ஒருத்திய ஏத்துப்பாங்க? இவன் தான் குடும்பம் வேணான்னு சொல்றான். ஆனா, என்னால் அப்படி இருக்க முடியல மாமா !”
அவள் சொல்வதும் சரியென பட்டாலும் , தன் வளர்ப்பு மகளுக்கு இந்த வாழ்க்கை, இந்த வாய்ப்பு கைவிட்டு போகக் கூடாது என்றெண்ணினார் கிருஷ்ணன்.
“நான் வேணா அவங்க கிட்ட பேசுறேன். கையில கால்ல விழுந்தாவது அவங்கள சம்மதிக்க வைக்கிறேன் டா” என்றார்.
“மாமா” என அவள் தொண்டை அடக்க, “எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்” என்றவரை கண்டு கண்கள் கலங்க, அவரை அணைத்துக் கொண்டாள்.
” நீங்க கால்ல விழுந்து தான் நான் வாழனும் இல்ல மாமா ! எனக்கு சாகரன பிடிக்கும் தான். அதுக்காக அவன அவன் குடும்பத்துல இருந்து பிரிக்கற எண்ணம் எனக்கு இல்லை மாமா. எனக்கு அவன் கூட வாழனும் இருந்தால் வாழ தயார். எனக்கு அந்த குடுப்பனை இல்லைன்னாலும் எனக்கு ஒன்னும் இல்ல மாமா ! பார்க்கலாம், என் வாழ்க்கை எந்த திசையில் போகுதுன்னு “என்றவளுக்கு உள்ளே அத்தனை வலிகள். அவள் வலியை அவரால் புரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது..
தன் மகளுக்கு வளைகாப்பு என்பதால் கண்ணம்மாவும் வெண்ணிலாவும் வளைகாப்பிற்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க, வரதராஜனோ பேரனை கொஞ்சிக் கொண்டிருந்தார். சாகரனும் சங்கரனும், மற்ற வேலைகளை பார்க்க,
சாகரன், வரதராஜனிடம் வந்தவன், “அப்பா !” என்றான். “சொல்லு கண்ணா !”
“அப்பா, அக்கா வளைகாப்புக்கு என் ஃபிரண்ட் நிழலிய கூப்பிடட்டுமா?” என தயக்கமாக கேட்க, அவள் பெயரை கேட்டதும் கண்கள் விரிய, முகத்தில் ஒரு ஆச்சரியம் அது தன் மகன் அவ்வாறு கேட்பது? முதலில் யோசித்தவர், ” சரி கண்ணா கூப்பிடு ! அவாளும் வரட்டும்” என்றார் . அவன் முகத்தில் நிம்மதி ரேகை பரவ, ” அப்றம் உன் லாயர் கார்த்திக் சாரை கூப்பிடு கண்ணா !” என்றதும் படர்ந்த நிம்மதியும் பட்டுப்போக , முகத்தில் வியர்வை பூக்க, “அவா, ஃபேமிலியோட ஊருக்கு போயிருக்கா ப்பா, வந்ததும் ஒரு நாள் கூட்டிண்டு வரேன்” என்று சமாளித்தான்.
மறுநாள் சொன்னது போல அதிதியை பைக்கில் அழைத்து கொண்டு பள்ளியில் விட்டவன், நேராக அலுவலகம் வந்தான்.
அர்ச்சனா இன்று விடுமுறை எடுத்திருக்க, நிழலி மட்டுமே இருந்தாள். அவன் உள்ளே நுழைய, சிறு படப்படப்பு உள்ளே எழ, வெளியே காட்டிக் கொள்ளாது அமைதியாக சில கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அவனும் அவளருக்கே நாற்காலி இட்டு அலைபேசியை பார்த்து கொண்டிருக்க, கேஸ் விஷயமாக இருவர் வந்திருந்தனர்.
அவர்களை எதிரே அமரச் சொன்னவள் பிரச்சனையை கேட்க, அது நில மோசடியாக இருந்தது. அவர்களிடம் முழு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு சில பல தீர்வு சொன்னவள், மீறிச் சென்றால் கேஸ் போடலாம் என்று இரண்டு மணி நேரமாக வந்தவர்களுடன் பேசி வழிஅனுப்பி வைத்தவளுக்கு லேசாக தலை வலிக்க, சரியாக அவர்களுடன் வெளிய சென்றவன் காபியுடன் வந்தான்.
“தேங்க்ஸ் ஐயங்கார் ! தலை ரொம்ப வலிக்குது ” என்றவள் காபியைப் பருகினாள். “ரொம்ப வலிச்சதுனா வீட்ல போய் ரெஸ்ட் நிழலி !” என்றான்.
“ம்ம்… இன்னைக்கு வேலை எதுவும் இல்ல , பாதிலே வீட்டுக்கு போலாம் தான் இருக்கேன்” என்றாள்.
“ம்ம்… ” என்றவன், ” நல்ல ரெஸ்ட் எடு, நாளைக்கு நானே வந்து கூட்டிண்டு போறேன்” என்றான். “எங்க?” என்று சந்தேகமாக கேட்க, “எங்கவா? நாளைக்கு அக்கா வளைகாப்பு இருக்கு, நீயும் அதிதியும் ரெடியா இருங்கோ, நான் வந்து கூட்டிண்டு போறேன் சொன்னேனே மறத்துட்டியா?”
“எப்போ சொன்ன?”
“நேத்து முத்தம் கொடுத்ததுக்கு அப்றமா !” என்றவனை முறைத்தவள், “ஓ, அந்த டைம் நீ தான் நீயா இல்லேல ! சாரி பேபி” என்று வெட்கப்பட, அருகே இருந்து கோப்புகளை வைத்து சில பல அடிகளை கொடுத்தவளை,இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொள்ள, விழிகளை விரித்து அவனை பார்த்து மிரட்சியானாள், அவனிடமிருந்து எழ முயல, இடையை இறுக்க பற்றி எழாத படி பிடித்து கொள்ள, அவனிடம் திமிறினாள்.
“நிழலி…” அவள் காது மடல் கூச ,அழைக்க, தேகம் சிலிர்த்தெழந்ததை அவனும் அறிந்தான். “ரொம்ப யோசிக்காத, இது நம்ம வாழ்க்கை, நமக்கு பிடிச்ச மாதிரி தான் வாழனும். குடும்பம் முக்கியம் தான் அதைவிட நம்ம சந்தோசம் அதைவிட முக்கியம். எனக்கு நீ, அதிதியும் முக்கியம், அதிதிக்கு நீயும் நானும் முக்கியம், நமக்கு நாமே முதல் இம்போர்ட்டென்ஸ் குடுப்போமே !அப்றம் மத்தவங்க ஃபீல்ங்ஸ் யோசிக்கலாம் பேபி !” என்றான்.
“எப்படி உன்னால் முடியுது சாகரா, எனக்கு புரியல, நான் குடும்பத்தொட வாழ்ந்து பழகப்பட்டவ, நீயும் அப்படித்தான். இப்போ அந்த குடும்பத்தையே எப்படி உன்னால் தூக்கி போட முடியுது? நமக்கு வேணான்னு சொன்னாலும் நம்ம பசங்களுக்கு அவங்க தேவை. என் விருப்பம் இருக்கட்டும் முதல் உன் வீட்ல உன் காதலை சொல்லி சம்மதம் வாங்கி வீட்ல பேச சொல்லு. இல்ல ஏத்துக்கலேன்னா பிரண்டஸ் இருக்கலாம். என் சந்தோசம்னு என்னால செல்பிஸ் யோசிக்க முடியல சாகரா ! நான் நாளைக்கு வளைகாப்பு வரேன் அங்க உன்னால, உன் குடும்பத்துக்கு கிட்ட இவளை தான் காதலிக்கறேன். கல்யாணம் பண்ணிக்க போறேன் சொல்ல முடியுமா? சொல்லு. என் விருப்பம் மட்டும் போதும் சொல்ற இதான் என் விருப்பம். கதவை பூட்டிட்டு கிளம்பு சாகரா, நாளைக்கு நானும் அதிதியும் ரெடியாக இருப்போம் ” என்று அவன் கண்ணை பார்த்து இருப்பொருள் படக் கூறிவிட்டு விறுவிறுவெனச் சென்றுவிட்டாள்.
அவனோ மேசையில் கையை உண்டி தலையை தாங்கி அமர்ந்து விட்டான்.
மறுநாள், வேதிகா வீட்டில் அனைவரும் கூடி இருக்க, சாகரன் வந்து இருவரையும் காரில் அழைத்து கொண்டு போனான்.
மடிசார் கட்டிய மாமிகள் நிறைந்திருக்க ஆண்கள் கூட்டம் வெளியே நிரம்பி இருந்தது. சாகரனோடு அவளும் அதிதியும் வர, அனைவரின் பார்வையும் அவர்களை நோக்கி தான் இருந்தன.
உள்ளே அவளை போக சொல்லியவன் வெளியே ஆண்களோடு கலந்து கொண்டான். வெண்ணிலா, அவளை தன்னுடன் நிற்கவைத்து கொண்டாள், அதிதியை, வினிஷா, கேசவனுடன் விளையாடா அனுப்பி வைத்தாள்.
ராதிகாக்கும் வேதிகாக்கும் நிழலியை தெரியும் என்பதால் சிறு சிரிப்போடு வரவேற்றனர். வளைகாப்பு விழாவும் ஆரம்பிக்க, ஒவ்வொருவராக வந்து சந்தனம் குங்குமமிட்டு, வளையல் பூட்டி ஆசீர்வாதம் செய்து விட்டு சென்றனர். வேதிகாவை பார்த்த நிழலிக்கு, தன் தாயின் நினைவே வந்தது.
“இவ பண்ண அசிங்கத்துக்கு வளைகாப்பு ஒன்னு தான் டா கேடு” கிருஷ்ணனிடம் சொன்னது காது படவே கேட்டவளுக்கு அப்போதும் சரி இப்போதும் சரி நெஞ்சில் கணம் கூட, கண்கள் கலங்கின. எதற்காகவோ உள்ளே வந்த சாகரனுக்கு கண்ணில் பட்டது அவள் கலங்கிய கண்கள் தான். அவள் பார்க்கும் திசையை பார்த்து புரிந்தது கொண்டான்.
யோசனையோடு வெளியே சென்றான். அதன் பின் வேதிகாவிற்கு வளையல் போட நிழலியை அழைக்க, தயங்கியவள் பின் அனைத்தையும் செய்து இரு தங்கவளையல்களை அவளுக்கு பரிசாக கொடுத்தாள். அனைவரின் பார்வையும் அவள் மீது தன் இருந்தன. பின் வேதிகாவிற்கு ஒன்பது வகையான சாதத்தை ஊட்டி விட்டனர்.
பந்தி ஆரம்பிக்க, ஆண்கள் உண்டு பின், பெண்கள் அமர்ந்து உண்டனர். கடைசியாக வெண்ணிலா, ராதிகாவுடன் நிழலியும் உண்டாள். கண்ணம்மா, கேசவனுக்கும் வினிஷாவிற்கும் ஊட்டிவிடும் போது அதிதிக்கு ஊட்டி விட கண்களால் நன்றி நவல்ந்தாள் அவருக்கு. அவரும் அவளுக்கு சின்ன சிரிப்பை தந்தார்.
சாப்பிட்டு முடித்தவள், கைகளை கழுவிட்டு திரும்பும் போது சாகரன் கையில் வளையல்களோடு நின்றிருந்தான் ” என்ன ?” என கண்களால் அவள் கேட்க, அவள் கையை பற்றி வளையல்களை அணிவித்தவன்,
“மூத்த பிள்ளைக்கு வளைகாப்பு போடலேன்னா என்ன? ரெண்டாவது குழந்தைக்கு போடலாம் பேபி!” என்று குறும்பாக கூறி கண்ணடிக்க, அவன் கைகளில் இருந்து தன் கைகளை உறுவியவள், வெட்கம் கொண்டு அவனை தள்ளிவிட்டு, உள்ளே செல்ல. அவர்கள் இருவரையும் பேசிவதை கண்டு கொண்ட கண்ணம்மாவிற்கு பேரதிர்ச்சி, அவனும் திரும்பி உள்ளே செல்கையில் அவன் முன் நின்றார், “என்ன கண்ணா இது?” எனக் கேட்க, அவர் முன் தலைகுனிந்து நின்றான், “கண்ணா, அப்பாக்கு தெரிஞ்சா !”
“அம்மா நான்…” என ஆரம்பிக்கும் போதே உள்ளிருந்து வரதராஜன் கண்ணம்மாவை அழைத்தார்.
அவரும் அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார். அவனோ தலையில் அடித்து கொண்டு உள்ளே விரைந்தான்.
அங்கே சேதுராமனும் அவரது மனைவியும் இருக்க, அவருடன் வரதராஜனும் நின்றிருந்தார். கண்ணம்மா அவருடன் இணைய, எங்கே ‘உண்மைய சொல்லிடுவாளோ’ என்று பயம், சாகரன் பின்னே கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான்.
சரியாக,நிழலி, அதிதியை அழைத்துக் கொண்டு வரதராஜனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, அவர்கள் அருகினில் வந்தாள். அவ்வளவு தான் சாகரனுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான்.
“நான் கிளம்புறேன் ப்பா ” என்றாள். ” சாப்பிட்டேளா? குட்டி சாப்பிட்டாளா?” அதிதியை கொஞ்சியவாறு கேட்டார் வரதராஜன், “சாப்பிட்டோம்ப்பா” என்றாள்.
“வரதா, இவங்க யாரு?” என சேது கேட்க, “இவங்க, நம்ம சாகரானோட ஃபிரண்டு சேது. மா, இவர் சாகரனோட வருங்கால மாமனார். இவர் பொண்ணை தான் சாகரனுக்கு பேசி முடிஞ்சிருக்கோம்” என்றிட, அவளுக்கு இதயம் ஒரு நொடி துடித்து நின்றது. அவள் சாகரனை பார்க்க, அவனோ தலைகுனிந்து நின்றான். கண்ணம்மா அவள் முகத்தை தான் ஆராய்ந்தாள்.
“நோக்கு தெரியாதா மா? சந்தான லட்சுமி, என் மாட்டு பொண்ணு, படிச்சுண்டு இருக்கா !சாகரனும், அவா படிச்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம் சொல்லிருக்கான். அதான் இன்னும் கல்யாணம் வைக்கல, எங்க வீட்டுல அடுத்த விசேஷம் அதான். வந்திடுமா ” என்றார் சிரித்த வண்ணம்.
அவர் கூற கண்கள் கலங்கிட, இதயம் அடைக்க வார்த்தைகள் வெளி வர வம்பு செய்தன, “கண்டிப்பா, கல்யாணத்துக்கு வரேன் பா !” என்றாள் சின்ன சிரிப்போடு. ” இது உன் பொண்ணாமா ?” அதிதியை பார்த்து கேட்க, “ஆமாம் ” என்றாள்.” உங்க வீட்டுக்காரர் என்ன பண்றார் மா?”சேது ராமன் கேட்க, “இறந்து போயிட்டார்” என்று சாகரனை பார்த்து சொன்னவள், அவர்கள் பார்வையை கவனிக்காது
இருவரிடமும் விடைப்பெற்று, அதிதியை தூக்கிக் கொண்டு கிளம்பினாள். வேகவேகமாக காரில் அமர்ந்து வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட, பின்னால் அழைத்துக் கொண்டு வந்த சாரதியையும் சாகரனையும் அவள் கண்டு கொள்ள வில்லை..
நேராக வீட்டிற்கு வந்தவள் கோபம் கொண்டு அத்தனை பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்தாள். அதிதி, அவளை கண்டு மிரண்டு , பயந்து நடங்கிப் போனாள். நிழலியை யாராலையும் சமாளிக்க முடியவில்லை… அதிதி, சாகரனை அலைபேசியில் அழைத்து ” சாகா ” என்றதும் நிழலிக்கு கோபம் வர, அதை தூக்கிப் போட்டு உடைத்தாள்.
“இனி, உன் வாயில இருந்து சாகானு வார்த்தை வந்தது நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” காலியாக அவதரித்தவளை கண்டு அனைவருமே அஞ்சினர்.
“என்னாச்சு மா ஏன் இப்படி இருக்க?” கிருஷ்ணன் பயந்த படி கேட்க,
“நான் மறுபடியும் ஏமாந்துட்டேன் மாமா? சாகரன் என்னை ஏமாத்திட்டான் மாமா !” கத்தி கரைந்து அழுதாள்.
பள்ளிக்கு சென்ற அதிதியை யாரோ கடத்தியாக நிழலியின் அலைப்பேசி வழியே டிரைவர் சொல்ல, “அதிதி” எனக் கத்தி அழ தொடங்கினாள். சமாதானம் செய்ய வந்த சாகரனுக்கு பேரதிர்ச்சி தான். தலையில் கைவைத்து நின்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
10
+1
+1

