
கை முஷ்டியை முறுக்கியவன், ஆதர்ஷன் முன் நிழலியை அடிக்க கூடாதென்று முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் அடித்த அடியில் கீழே விழுந்து கிடந்த அதிதியை தூக்கி கொண்டான் சாகரன்.
ஆதர்ஷனை தீயாக முறைத்தவள் அதிதி பக்கம் திரும்பி, “உனக்கு என்னடி கொள்ளை வந்தது? இவன் கூட பேசி, கொஞ்சிட்டு இருக்க? இவன் யாருன்னு தெரியுமா உனக்கு? கண்டவன் கிட்ட எல்லாம் சிரிச்சு பேசிட்டு இருக்க? இதை தான் உனக்கு சொல்லிக் கொடுதேன்னா? “அவளிடம் கத்த பயத்தில் உடல் நடுங்க சாகரனுக்குள் ஒடுங்கினாள். அவளது நடுக்கத்தையும் பயத்தையும் சாகரனும் உணர்ந்தான்.
“ஸ்டாப் பிட் நிழலி ! நான் ஒன்னும் கண்டவன் இல்ல, அதிதியோட அப்பா ! மைண்ட் இட் !”என்றதும் எள்ளலுடன், “சே அக்கேன், சே அக்கேன்” என்று முன்னேற, அவன் இரண்டடி பின்னே சென்றான். “என்ன சொன்ன திரும்ப சொல்லு !” என மீண்டும் மீண்டும் கேட்க, அமைதியாக இருந்தவன், பதில் சொல்ல முடியாமல் திணறினான்.
“அதிதியோட, அப்பான்னு இப்போ தான் தெரி(ளி)ஞ்சதா மிஸ்டர் ஆதர்ஷன். இதுக்கு முன்ன, உன் முன்னாடி வந்து உன் குழந்தைன்னு கதறுன அப்போ தெரியலேல, அதிதி உன் பொண்ணுன்னு. அப்போ என்ன சொன்ன?” எனக் கேட்க, தன் தவறால் கூனிக் குறுக்கினான்.
” முதகெழும்பு இல்ல புழு நீ ! ச்ச உன்ன பார்க்கவே அருவருப்பா இருக்கு. இப்பையும் நீ ஒரு கோழைன்னு நிரூபிச்சிட்ட ஆதர்ஷன். அதிதி வைச்சு உன்னால என் கூட சேரவும் முடியாது, பழிவாங்கவும் முடியாது. இனியும் கோழை மாதிரி முதுகுல குத்தாம எங்கிட்ட நேரா மோத ட்ரை பண்ணு ! வா சாகரா !”என்றவள் முன்னே நடக்க, சாகரன் எந்த உணர்வையும் காட்டாது பின் சென்றான்.
ஆதர்ஷனுக்கோ நிழலி திட்டினத்தை விட, அதற்கு முன் அதிதி, பேசினதே ஓடியது. கொஞ்சம் கொஞ்சமாக அதிதியுடன் உண்டான நெருக்கும் பழிவாங்கும் எண்ணத்திரையை விலக்கியது. நிழலி ஏற்றுக் கொள்கிறாளோ இல்லையோ அதிதியின் பாசம் போது என்றளவுக்கு வந்து விட்டான். அவளது பொய்யான பாசம் கூட அவனை மாற்றியது.
தாய் தந்தை நண்பர்களென அவனது மனதையும் எண்ணத்தையும் மாற்றினார்களே தவிர, அவனது குணத்தை அல்ல அவனுள் புதைக்கப்பட்ட நல்ல குணங்கள் அதிதியால் மட்டுமே வெளியே கொண்டு வரப்பட்டன. அதிதியின் பாசத்தால், தான் இழந்தது எத்தனை பெரிய பொக்கிஷம் என்பது காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டான்.
ஆனாலும் பயனின்றி போனது.
சாகரனின் அணைப்புக்குள் விம்மி அழுகும் அதிதியை பார்க்க பார்க்க கோபம் பொத்துக் கொண்டு வந்தது நிழலிக்கு. எதுவும் பேசாதிருந்தாள்.
கடும் கோபம் கொண்டவனோ, அதிதியை அணைத்து தான் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். “அண்ணா, வண்டிய ஆபிஸ்க்கு விடுங்க” என்று கட்டளை இட்டு சாளரத்தின் வழியே வெளியே நோக்கினாள்.
அலுவலகம் வரவும் வேகமாக உள்ளே சென்றாள். சாகரனு நிழலியை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்.
“சாகரா, அவளை இறக்கி விடு !” என்றாள் பல்லை கடித்த படி. ” மாட்டேன்” என்றான் திமிராக, “சாகரா, அவளை இறக்கி விடு, ஏய் ! இறங்கி டி”என்று ஆத்திரத்தில் கத்த, அதிதி, “மாட்டேன்”என்று அவனது கழுத்தை கட்டிக் கொண்டு, மேலும் அவனுக்குள் புதைந்தாள் “இறங்குனு சொல்றேன்” அவளது கையை பிடித்து இழுக்க, சாகரனின் கை நிழலியின் கன்னத்தில் பதிந்தது.
கன்னத்தில் கைவைத்து அதிர்ச்சியாக அவன் முகம் நோக்கினாள் நிழலி, “இந்த அறை அங்க உனக்கு விழுந்து இருக்க வேண்டியது. அவன் முன்னாடி உன்னை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தான் அடிக்காம விட்டேன். எதுக்கு டி என் பொண்ண அடிச்ச? அவ என்ன பண்ணிட்டான்னு அடிச்ச நீ? உனக்கு என்ன உரிமை இருக்கு ?” என அவள் அதிதியின் தாயென்று மறந்தும் அவளிடம் எகிறினான் தாயுமானவன்.
“அவள அடிக்க எனக்கு உரிமை இல்லையா? அவ என் பொண்ணு சாகரா? அவ தப்பு பண்ணா தாயா கண்டிக்க எனக்கு உரிமை இருக்கு !”
“அவ என்ன தப்பு பண்ணான்னு அவள கண்டிக்கற?
“அவ என்ன தப்பு பண்ணான்னு உனக்கு தெரியாதா சாகரா? இது என் குழந்தையே இல்லன்னு சொன்னவன் கிட்ட சிரிச்சு பேசிட்டு இருக்கா, அது தப்பு இல்லையா?”
“அவ கிட்ட, ஆதர்ஷன் தான் உன் அப்பான்னு சொல்லி வளர்த்தியா டி? இல்ல அவ போட்டோ காட்டி இவன் தான் உன் அப்பன், இவன் வந்தால், இவன் கூட பேசாதன்னு சொன்னீயா டி? இதெல்லாம் சொல்லாம விட்டது உன் தப்பு. தன்னோட அப்பா யாருனே தெரியாம ஸ்கூல்ல, அவ கூட படிக்கற பிரண்டஸ் கிண்டல் பண்ணும் போது, பொறுத்து போய் உன்கிட்ட சொல்லாம தனக்குள்ளே பூட்டி வச்சிருக்க இந்த பிஞ்சு தான் தப்பு பண்ணாளா ? உனக்கு ஒன்னுன்னா, தாங்கிக்காத இவ, ஆதர்ஷன், உன்னை ஹார்ட் பண்ணான்னு வாசு பேசிறத கேட்டுண்டு இவள பார்க்க வந்த அன்னைக்கு ஆதர்ஷன் கிட்ட என்னையும் என் அம்மாவையும் டிஸ்டரப் பண்ணாத சொல்லிருக்கா, இந்த குழந்தையா தப்பு செஞ்சது? அதிதிய ஆதர்ஷன் கூட பேச சொன்னது நான் தான்” என்று முடித்தான், அதிர்ந்தாள்.
“என்ன சொல்ற சாகரா?!”
“ஆமா, நான் தான் அதிதி கிட்ட சொல்லி ஆதர்ஷன் கிட்ட பேச சொன்னேன். உன்கிட்ட சொன்னா, மறுபடியும் உனக்கு முடியாம வந்திடும் என் கிட்ட சொன்னாள், நான்தான் அவன்கிட்ட பேச சொன்னேன்” விளக்கம் கொடுக்க, “ஓ, அப்ப நீயும் எங்க அம்மா கூட சேர்ந்து என்னை அவன் கூட சேர்த்து வைக்க பிளான் பண்றீங்க அப்படி தான?” எனக் கத்த,
“நிறுத்து நிழலி ஒரு தடவ பண்ண தப்ப திருப்பி என்னை பண்ண சொல்றீயா ?நேக்கு உன்னை ஆதர்ஷன் கூட சேர்த்து வைக்கற எண்ணம் இல்ல, இத்தனை நாள் அதிதிய பார்க்க வராத ஆதர்ஷன், இப்போ அவளை பார்க்க வர ரீசனை தெரிஞ்சுக்க தான் அவன் கிட்ட அதிதியை பேச சொன்னது. இவ மூலமா உன்னை கல்யாணம் பண்ணி உன்னை பழிவாங்க தான் அவன் அதிதிய தேடி வந்திருக்கான். நானும் அதிதிய அவன் கூட பொய்யா தான் பழக சொன்னேன்.. எப்பயும் நம்ம அதிதி அவன் கூட போக மாட்டா ! இதெல்லாம் ஒரு டிராமா “என அவன் முடிக்க, அதிதியோ அடுத்த அடியை இறக்கினாள், “இல்ல சாகா, நான் ஆதர்ஷன் அப்பா கூட போறேன்” என்றதும்,
இருவருக்கும் உலகம் சூழல்வது நின்றது போல இருந்தது. “அதிதி குட்டி என்ன சொல்ற நீ? உன்னை நடிக்க தானடே சொன்னேன் அவன் கூட போகணும் சொல்ற ஏன் டா? “அவளை இறக்கி விட்டு அவளுயரம் முட்டிப் போட்டு அமர்ந்தவன், அதிர்ச்சி மாறாமல் கேட்க, “சொல்லு அதிதி அவன் கூட ஏன் போகனும் சொன்ன?” என மீண்டும் கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
“இது தேவையா சாகரா, அவன் என்ன வார்த்தை சொல்லி மயக்கி வச்சானோ ! அவன் கூட போகணும் சொல்றா !”என்றவள் அதிதியை தன் பக்கம் திருப்பி, ” உனக்கு அம்மா வேணாமா? அவன் தான் வேணுமா ?உன்னை அடிச்சதுக்கு அம்மா சாரி கேட்டுகிறேன், அதுக்காக அவன் கூட போகணும் நினைப்பீயா? என் மேல கோவம்ன்னா நாலு அடி கூட அடிபேபி அம்மா விட்டு போகணும் நினைக்காத, உனக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கேன்” என அவள் முடிக்கும் முன், அதிதி, “அதுக்காக தான் போறேன் சொன்னேன்” என்றாள்.
இருவரும் புரியாமல் பார்த்தனர், “நான் உன் கூட இருக்கறனால தான் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டிகிறீயாம், அதான் நான் ஆதர்ஷன் கூட போயிட்டா நீ சாகாவ கல்யாணம் பண்ணிப்பேல” என்று அவள் தலையில் இடியை இறக்க,
“உனக்கு இத யாரு டி சொன்னா?” அவளை உலுக்கினாள் நிழலி, “என்கிட்ட யாரும் சொல்லல, அன்னைக்கு பானுவும் கிருஷ் தாத்தா பேசிக்கறத கேட்டேன். உனக்கு சாகாவ பிடிக்கும், சாகாவும் உன்னை விரும்புறான், இதுல நான் தான் உனக்கு இடஞ்சல இருக்கேன்னு, நான் இல்லேன்னு நீ சாகரன கல்யாணம் பண்ணிப்பேல” எனவும் அவள் சாகரனை பார்க்க, அவனுக்கு இது அதிர்ச்சி தான் அவளது குற்றம் சாற்றும் பார்வையை தாளாதவன் அதிதியை கண்டு,
“உனக்கு இந்த சாகா அப்பா வேணாமா பேபி? நீ ,நான் நிழலி ஒன்னா இருப்போம் சொன்னது பொய்னு நினைக்கிறீயா? நீ இல்லாம, நான் நிழலி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதிதி. எனக்கு நீயும் நிழலியும் ஒன்னு. யாருக்காகவும் உங்க ரெண்டு பேரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் பேபி.இது பிராமிஸ். நோக்கு அவன் கூட போகணும்ன்னா போ, ஆனால் நீ இல்லம்மா நிழலி நான் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன் . இன்னைக்கும் என்னைக்கும் நீதான் என் பொண்ணும் அது நான் நிழலி கல்யாணம் பண்ணாலும் பண்ணலேன்னாலும் அதுக்கு அப்புறம் உன் இஷ்டம் “என்று வழிந்த கண்ணீரை துடைக்க, அவன் கண்ணீரை துடைத்தவள்” மாட்டேன்ப்பா, உன்ன விட்டு போக மாட்டேன் …” அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழ, அவள் உச்சியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.
இதெல்லாம் உணர்வற்ற ஜடம் போல பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் பல வகையான கேள்விகள் , கோபங்கள் எழுந்தாலும் அதையெல்லாம் உணர்தத முடியாமல் மூளை கட்டிப்போட்ட படி அதிர்ச்சியில் நிறுத்தி வைத்திருந்தது.
அவள் நிலையை எண்ணி கவலை கொண்டவன், அதிதியை விலகி, நிழலியின் கையை பற்ற, தீயைத் தொட்டது போல, வேகத்தில் தட்டி விட்டவள், “தொடாத ! என்னை தொடாத. இத்தனை நாள் உன்னை என் நண்பனா, என் அப்பா வா தான் பார்த்தேன் ஆனா நீ…!” என அவள் முடிக்க,
“ஆனா, நான்… சொல்லு டி , சொல்லு, நான்?” எனக் கேட்க பதில் பேச முடியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பினாள். அவளை தன்பக்கம் திருப்பி, “பதில் சொல்ல முடியலேல, ஆமாம் டி நான் உன்னை காதலிக்கறேன், நீ பாவாடை தாவணி போட்ட வயசுல இருந்து உன்னை காதலிக்கறேன்… அந்த வயசுல, நீ என்னை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறீயா ஐயங்கார்ன்னு என் கிட்ட கேட்ட, பதில் சொல்ல முடியாம அந்த வயசுல வெட்கப்பட்டு ஓடினேன். ஆனா உன்னைப் பார்த்த கணத்துலே நீ தான், என் ஆம்படையாள், நீ தான் எனக்கு எல்லாம் முடிவு பண்ணினேன்” நடந்த அனைத்தையும் கூற முடிக்க,
அதிர்ச்சி தான் அவள் முகத்தில்.
“ஆதர்ஷன், கிட்ட உன்னை விட்டு கொடுக்க முடியாம தவிச்சேன் டி, நீ அவன் கூட தான் வாழப் போறேத நினைச்சிண்டு தான், நான் கேனடா போக முடிவு எடுத்தேன். நேக்கு நீ அவனோட வாழறத பார்க்க சக்தி இல்ல. ஆனா நான் திரும்பி வந்தப்ப, நீ எனக்கானவளா , எனக்காக பிறந்தவளா கல்யாணம் பண்ணிக்காம இருந்த, அந்தப் பெருமாள் நேக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததா, நினைச்சுண்டு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் முடிவு பண்ணினேன். வந்த முதல் நாளே, ஆண்ட்டி கிட்டயும் சொல்லிண்டேன். என் காதல் வாசுக்கு, மித்துக்கு, மிருக்கு, ஏன் அதிதிக்கு கூட புரிஞ்சது, நோக்கு ஏன் டி புரியல? ஆனா நானும் உன்கிட்ட என் காதலை சொல்லிருக்கணும் நிழலி. கேஸ் முடிஞ்சது சொல்லனும் நினைச்சிண்டு இருந்தேன், ஆனால் அதுக்குள்ள இப்படி நடந்திருத்து ! ஐ லவ் யூ நிழலி ! ஐ லவ் யூ சோ மச் எனக்கு நீ வேணும், இந்த ஜென்மத்தில் உன்னை தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் சொன்னது போல எனக்கு நீயும் அதிதியும் ஒன்னு தான். ரெண்டு பேரும் நேக்கு வேணும் யோசிச்சு , நல்ல உன் முடிவா சொல்லு !” என்றவன் அதிதியிடம், ” நீ, இந்த அப்பா கூட தான் இருக்கணும். நோக்கு நான் மட்டும் தான் அப்பா !என்னைக்கும் நீ இதை மாத்தக் கூடாது பேபி” அன்பு கட்டளை போட்டவன் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு போனான். அவன் பேச்சில் அங்கே சமைந்து விட்டாள் நிழலி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1

