Loading

சாகரனின் அமைதியை மட்டுமே பார்த்தவர்களுக்கு அவனது கோபம் பெரும் அதிசயம் தான். நிகழாத ஒன்று  இன்று நிகழ, அதிர்ச்சியில் ஆடிப் போனது அந்தக் குடும்பம்.

சேதுராமனுக்கே அவனது கோபம் விசித்திரமாக இருந்தது. அவரது கண் முன்னே வளர்ந்தவன், அமைதியை மட்டுமே கொண்டு வளர்ந்தவன், இன்று கோபத்தில் கத்த, அதிர்ந்து விட்டார்.

‘எதுக்கு இந்தக் கோபம் என்ன சொல்லிண்டேன்னு கத்தறான்?’

உள்ளுக்குள் கேட்டவரின் விழிகளோ பயத்தில்  தத்தளித்தன.

சாகரனுக்கோ அடக்க முடியாத கோபம்.எவ்வளவு முயன்று அவனது கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடிய வில்லை, அவனது கோபம் நியாயமானது ஆனால் அதை பெற்றவர்களும் புரிந்த கொள்ள வேண்டுமல்லவா ! அதற்காக தான் இந்தக் கோபம். அவனது கோபத்தின் காரணம் சேதுராமனின் எண்ணம் தான்.

“உனக்கும் என் பொண்ணுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிவைக்கலாம் இருக்கோம் சாகரா !” அவன் தலையில் பெரிய கல்லொன்றை வைக்க, கனம் தாங்காமல் பதறி விட்டான்.

“வாட் கல்யாணமா? எதுக்கு மாமா இவ்வளவு அவசரம்?” பதறிய படி கேட்க, சேதுவோ, வரதராஜனை பார்க்க, அவரோ சொல்லும் படி கண்ணைக் காட்டினார்.

“பத்தொன்பது வயசுல, அவாளுக்கு கல்யாணம் தேவையா? குழந்த முகம் மாறாத அந்தப் பொண்ண, என்னால்

ஆம்படையாளா நினைச்சி பார்க்க முடியல மாமா ! அவளுக்கு என்ன  மெச்சூரிட்டி வந்திடுத்துன்னு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைக்கறேள்?  வயசுக்கு வந்தா மட்டும், பெண்ணுக்கு கல்யாண பண்ண தகுதி வந்துடுமா? மனசளவுல அவ,  தன்னை தயார் படுத்திக்க வேண்டாமா? எதுக்கு இப்போ சீக்கிரமா கல்யாணம் பண்ண  துடிக்கறேள்?” பட்டென்று மனதில்  பட்டதை  கேட்டுவிட்டான் சாகரன். அவனுக்கு’ தவறாக பேசிவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லை, மாறாக,  நிம்மதி மட்டுமே நிலைத்தது. வாயை மூடிக் கொண்டு பூம் பூம் மாடாக தலையை ஆட்டி, தன் வாழ்க்கையை இடியாப்ப சிக்கலாக மாற்ற அவனுக்கு விரும்பம் இல்லை. இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், அதில் ஒருவராவது பேச வேண்டும் அல்லவா ! இல்லயே கையில்  தாலியை கொடுத்து.

எந்த நேரமும் கட்ட சொல்லலாம்.

“அது வந்து சாகரா !” எனத் தயங்கியவர், “என் பொண்ண ஒருத்தன் லவ் பண்ண சொல்லி டார்சர் பண்ணிண்டு  பின்னாடியே சுத்திண்டு இருக்கான். நானும் என் பொண்ணும் அவாகிட்ட சொல்லி பார்த்துட்டோம் கேட்கல, கொஞ்சம் பெரிய இடத்து  பையன் போல தெரியறது, அதான் எதுவும் ஒன்னு கிடக்கு ஒன்னு ஆகிடறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சுடலாம் தான்…” என்று தயங்க, அங்கே சாகரனின் சீற்றத்தை கண்டார் சேதுராமன்.

“உங்க பொண்ணு அவாள காதலிக்கறாளா மாமா?” அவன் கேட்க, ” இல்ல சாகரா ! அந்தப் பையன் தான் என் பொண்ணு பின்னாடி சுத்தறான். என் பொண்ணு யாரையும் காதலிக்கல !” பதட்டமாகச் சொன்னார்.

” நோக்கு என்ன பயம் மாமா?”

“இந்தக் காலம் அப்படி சாகரா ! நல்லா இருக்க பொண்ணை ஏமாத்தி, ஆசை வார்த்தை பேசி காதலிக்க வச்சுடுறா, வீட்ல ஒத்துக்கலேன்னா, பொண்ண இட்டுண்டு போயிடுறா? குடும்ப மானமே போயிடுறது. வேற என்ன பண்றது சொல்லு ?” எனவும்.

“ஓ…” என்ற பதிலே அவனது கோபத்தை எடுத்து சொல்லியது, “அப்போ உங்க பொண்ணு ஓடிப் போயிடுவான்னு சொல்றேளா

மாமா !” எனவும் அந்த வாக்கியத்தை தாள முடியாமல் கத்தி விட்டார்.

“என் பொண்ணு அப்படி பண்றவா இல்ல. அவளை தப்பா பேசாத !”

“எது நானு…? நீங்க  தானே சொன்னேள். இந்தக் காலமே சரியில்ல , ஆசை வார்த்தை பேசி மயக்கிடுறானு, இட்டுண்டு போயிடுறான்னு. அப்போ உங்க பொண்ணு மேல  நம்பிக்கை இல்லாமத் தான அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க  நினைக்கறேள்” என்றதும் வாயடைத்து போனார்.

“பதில் சொல்லுங்கோ மாமா ?”

அவர் தலை குனிய, “உங்களுக்கே உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்லை. நேக்கு எப்படி உங்க பொண்ணு மேலே நம்பிக்கை வரும்? கல்யாணத்துக்கு அப்றம்,  அவன் விடாம அவகிட்ட ஆசை வார்த்தை பேசி, அவளை இட்டுண்டு போனா, என்

குடும்ப மானம் போகாதா மாமா?”

“சாகரா ! இது அப்பத்தம், என் பொண்ணு சொக்க தங்கம், அவா அப்படி பண்றவா கிடையாது ” கண்ணீரோடு சொல்ல, ”    நிறுத்துங்கோ மாமா ! அப்படி கிடையாது சொல்றவா தான், பொண்ணுக்கு  கல்யாணம் பண்ணி வைக்கணும் துடிக்கறேளா? பெத்தவா என்னைக்கும் பொண்ண நம்பறதே கிடையாது? அவா எங்க போயிடுவாளோ பயத்துலே அவளை சந்தேக பட்டுண்டு, அவாளுக்கு விருப்பம் இருக்கான்னு கூட கேட்காம கல்யாணம் பண்ணி வச்சு புருஷனோட அனுப்பிடுறது.

ஏன் கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாளா மாமா? சரி மாமா, இப்போ உங்க பொண்ண நேக்கு கட்டிவைக்கறேள், நான் வேற ஒரு பொண்ணோட தொடர்ப்புல இருந்தால் என்ன பண்ணுவேள்?” என்றவன் கேட்க,

“சாகரா !நீ வரதராஜன் வளர்ப்பு தப்பு பண்ணமாட்டே, நேக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு !” என்றவரின் பதிலை கண்டு  சிரித்தவன், “அப்போ சேதுராமன் வளர்ப்பு மேலே நம்பிக்கை இல்லையா மாமா?” எனவும் அதிர்ந்தவருக்கு சப்பென அறைந்தாற் போல இருந்தது.

“மாமா, எப்பயும் பொண்ணுங்க பெத்தவா கண் பார்வையில இருந்தால்,  தப்பு பண்ண மாட்டாள். அதுக்காக கண் கொத்தி பாம்பா பார்த்துட்டு இருக்கவும் நான் சொல்லல, அவாளோடையும்  நேரத்தை செலவிடுங்கோ கொஞ்சம் பேச்சு சுதந்திரம் கொடுங்கோ, பயந்து நடுங்கி சொல்ற விஷயத்தை தைரியமா சொல்ல விடுங்கோ! கல்லூரியில நடக்கற விஷயத்தை அவளா சொல்லும் படி உரிமை குடுங்கோ பொண்ணுங்க இப்படி தான் அடக்க ஒடுக்கமா, வீட்ல சத்தம் போட்டு பேசக் கூடாது சிரிக்கக் கூடாதுன்னு அடக்கி வைக்கறனால வெளியே யார் அந்த சுதந்திரத்தை கொடுக்கறாளோ  அவாளை நம்புறா, அவா தனக்கு சரியானவா நினைக்கறா, அவா கூப்பிட்டதும் போயிடுறா, அதே சுதந்திரத்த நீங்க கொடுங்களேன் உங்களுக்கு துரோகம் பண்ண நினைக்க மாட்டாள் !  கல்யாணம் பண்ணி வைக்க போறோம் முடிவு பண்ணின்னா மட்டும் போதாது  ரெண்டு போராட சம்மதத்தையும் கேட்கணும்   மாமா, அவாகிட்ட நீங்க கேட்டிங்களா உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கான்னு?” அவன் கேட்டதும், அவர் தலை குனிய,

 “உங்க பொண்ண, முதல்ல  நீங்க மதிங்கோ, அவ விருப்பத்தையும்  கொஞ்சம் கேளுங்கோ, உங்க விருப்பமே சரினு ஆணாதிக்கத்தை பெத்த பொண்ணு கிட்ட காட்டாதீங்கோ, அப்றம் அவ மானத்தை வாங்கிட்டான்னு தம்பட்டம் அடிக்காதீங்கோ ! நான் எதாவது தப்பா

பேசிருந்தால் மன்னிச்சிடுங்கோ மாமா  எனக்கு இப்பதைக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை” எல்லாருக்கும் சொல்வது போல சொல்லிவிட்டு தனதறைக்குச் சென்றான்.

போகும் சாகரனை மெச்சுதலோடு பார்த்தார் வரதராஜன், ஆனால் அந்தப் பார்வை மாறாப் போவதை அறியாமல்.

மறுநாள் விடிய வழமையான வேலைகள் நடந்தேற, நிழலியும் சாகரனும் அதிதியைப் பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு அவரவர் வாகனங்களில் அலுவலகம் வந்தனர். மூவரும் தங்கள் பணியில்  மூழ்கி இருந்தனர். சாகரன் ரெஸ்ட் ரூம் சென்றிருக்க, நிழலியின் மேசையில் இருந்த அவனது போன் ஒலித்தது. அவளும் யாரென பார்க்க, “sandal”என்றிருக்க, எடுத்து காதில் வைத்து, “ஹலோ ” என்றாள்.

அங்கே சற்று அமைதிக்கு பின், “சாகரன் இல்லையா? நீங்க யாரு?” என ஒரு பெண்ணின் குரல் கேட்க,  முதலில் அதிர்ந்தாள். பின் நிதானமாக, “நான் அவரோட பிரண்ட் அவர் வந்ததும் பேச சொல்றேன்” என்றதும் அங்கே சரியென்று சொல்ல, இருவரும் போனை வைத்தனர்.

அவள், அந்தப் போனையே வெறித்து கொண்டிருந்தாள். அங்கு வந்தவன் அதைக் கண்டு,

“என்ன நிழலி, என் போனையே பார்த்துண்டு இருக்க?  யாரும் கூப்பிட்டிருந்தாளா ?”என கேட்க, “ம்ம்… sandal(சாண்டல்)  தான் கூப்பிட்டுருந்தா நீ வந்ததும் சொல்றேன் சொன்னேன். காலை கட் பண்ணிட்டா !” என்றதும், “ஓ” என்றவன் எந்த அதிர்ச்சியையும் காட்டாது, போனை எடுத்து கொண்டு வெளியே சென்று அவளுக்கு அழைக்க, அழைப்பு எடுக்க பட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் அதுவும் சிரித்து சிரித்து.

அதைக் கண்டவளுக்கு  எரிச்சலாக இருந்தது. ‘யாரு அவ?  சாகரன உரிமையா அழைக்கறா? ‘ என்று யோசித்தவள், நகத்தை கடித்தாள், பின் விழிகளை விரித்து, “ஒருவேள அவன் காதலிக்கற பொண்ண இருக்குமோ !”மனம் சற்று  கேள்வி கேட்டு பீதியடைந்தது,

‘இருந்தாலும் ஏன் என் கிட்ட கூட  சொல்லல? இத்தனை வருஷம் பிரண்டா இருக்கோம் இதக்கூடவா சொல்லல தோணலைல இவனுக்கு !’ எனக் கோபம் கொண்டவள் வினாடிக்கு ஒரு முறை சாகரனை பார்த்தாள். அவள் பார்ப்பதையும் பார்த்து விட்டு மேலும் சந்தானத்துடன் பேசினான்.

நேற்று சாகரன்  பேசியதை, சேதுராமன் தன் மனையாளிடமும் மகளிடமும் பகிர, இருவருக்கும் அவன் மேல்  மதிப்பும் மரியாதையும் வர, சேதுராமனிடம் அவனது எண்ணை கேட்டு வாங்கியவள் காலையிலே அவனை போனில் அழைக்க,  வேலையில் இருப்பதாக கூறி வைத்தவன் “சாண்டல்” என்று  அவளது பெயரை ஆங்கிலத்தில் சேவ் செய்து வைத்திருந்தான். இப்போது மீண்டும் அழைத்து, அவனுடன் வெகு நேரம் பேச, இவளுக்கு தான் கோபம் அதிகமாகி கொண்டே போனது. ‘ஏன்?’ என்று அவளுக்கும் தெரியவில்லை. ஒருவழியாக பேசி முடித்துவிட்டு உள்ளே வந்தவன் அவளருகே உள்ள நாற்காலி அமர்ந்தான்.

அவள் முகம் கடுகடுவென இருக்க, இவனுக்கோ அவளது முகத்தைப் பார்க்க பார்க்க, உள்ளே சில்லென்று இருந்தது. “என்ன நிழலி, எதுக்கு இந்தப் பார்வை?”

” உன்னை கொஞ்சுறதுக்கு தான் !” என்றாள். “அப்படி என்ன நல்ல விஷயம் பண்ணிண்டேன், கொஞ்சனும்ங்கற ?”உதட்டில் எழுந்த சிரிப்பை மறைத்தவாறு கேட்க, அவள், அவனை கோபமாக பார்க்க, “ஓகே ஓகே கூல் கூல் பேபி என்னாச்சு ஏன் இப்படி முறைக்கற?”

“பின்ன முறைக்காம என்ன பண்ணுவாங்கலாம்? யார் அந்தப் பொண்ணு? உன்னை உரிமையா கூப்பிடுறா? வர வர  நீயும் எல்லா விஷயத்தையும் மறக்கறேல?” முகத்தை திருப்பிக் கொள்ள,

அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி

“சந்தான லட்சுமி, என் தோப்பனார் பிரண்டோட பொண்ணு, நேக்கு தெரிஞ்ச  பொண்ணு, அதான் போன் பண்ணினாள். அப்றம் எங்களுக்குள்ள என்ன இருக்குனு சீக்கிரமா நோக்கு சொல்றேன் கொஞ்சம் பொறேன் டி” என்றவன் தன் வேலையை பார்க்க, அவளோ, அவன் சொன்னதையே அசைப்போட்டவளுக்கு ‘ தன்னிடம்  உள்ள பொருளை யாரோ பறிப்பது போல இருந்தது. சாகரனை இன்னொருத்திக்கு சொந்தமாக நினைக்க, அவளுக்கு சக்தி இல்லை. முகம் சற்று வாடிப் போனது. உள்ளே சிறு பதட்டம் எழுந்து. எங்கே அவளை காதலிக்கிறேன்று கூறிவிடுவானோ ‘ என்ற பயம் உள்ளே குடைய,  அவளது முகத்தினை பார்த்து கொண்டிருந்தவனுக்கு பேரானந்தம் இதை தானே அவனும் எதிர்பார்த்தான்.

“அடியே அசடு பட்டர்பண் ! இது தான் உண்மையான காதல்ன்னு உன் மர மண்டைக்கு எப்போ புரியுமோ ! சீக்கிரமா என் காதலை சொல்லி உனக்கு புரிய வைக்கறேன்டி என் மக்கு மண்டோதரி !” என உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

இங்கோ, உணவு இடைவேளை வர, பள்ளியில் மாணவர்கள் சாப்பிட அமர்ந்தனர். அதிதி,தன் டிப்னை திறக்க இருக்கும் போது ஆதர்ஷன் வந்ததை ஆசிரியர் கூற, வேகமாகச் சென்றாள்.

இன்று திட்டுவாள் என்று எண்ணியவனுக்கு மாறாக அதிதி புன்னகைக்க, குழப்பங்களோடு அருகே சென்றான். “ஹாய் ” என்றாள். ஆச்சரியத்துடன், “என்னை மன்னிச்சுட்டியா டார்லிங் ?”எனக் கேட்டான்

“மன்னிக்கல ” என்றாள் பட்டென.

“என்ன ?”என்பது போல பார்க்க, சிரித்து விட்டு, ” சாரி, உன்கிட்ட கோபமா பேசிட்டேன். நிழலின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், அவள ஹர்ட் பண்ணலே எனக்கு கோபம் வந்திடுச்சு உன்னை திட்டுனேன் சாரி !” என்றாள் கெஞ்சிய படி, அவளயே பார்த்திருந்தவனுக்கு கணிக்க முடியவில்லை குழந்தையின் இந்த மாற்றத்தை.

“நான், உன்ன பார்க்க வந்த விஷயத்தை உங்க அம்மா கிட்ட சொல்லலையா  டார்லிங் ?”

“இல்ல சொல்லல, சொன்னா, என்னை  உன் கூட

பேச விட மாட்ட, அப்றம் அவளுக்கு கோவம் வந்து மறுபடியும் ஃபீவர் வரும் அதான் சொல்லல”என்றாள். அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

“பிரிண்ட்ஸ்?” அவள் கையை நீட்ட, அவனும் கையை பற்றிக் கொண்டான். பின் இருவருமாக நிறைய கதைகள் பேச, அவளும் பேசிக் கொண்டே இருந்தாள். தனது டிபன் பாக்ஸை எடுத்து அவனிடம்  கொடுத்து ஊட்டி விட சொல்ல,  அவனும் ஊட்டி விட்டான்.

“சாரி டார்லிங் !” என்றான். “எதுக்கு?” என்பது போல அவனை பார்க்க, “உன்னை இத்தனை நாள் பார்க்க வராம இருந்ததுக்கு” என்று மெய்யாகவே வருந்தி தான் சொன்னான். அவளது பேச்சு அவனை ஈர்த்து இருந்தது.

“இட்ஸ் ஓகே, நாளைக்கு வருவீயா?” எனக் கேட்க , “கண்டிப்பா தினமும் வருவேன், என் டார்லிங் பார்க்க ”  என்று நெற்றியில் இதழ் பதித்தான்.

“சீக்கிரமா நீ, நான் , நிழலி ஒண்ணா இருக்கணும் பேபி !”போற போக்கில்  தனது திட்டத்தை கூறவிட, அதை கப்பென்று பிடித்துக் கொண்டவள் சாகரனிடம் சொல்லிவிட, அவனது திட்டத்தை ஓரளவு கணித்தான்.

நாட்கள் தன் வேகத்தை கூட்டியது, ஆதர்ஷனும் அதிதியும் நெருங்கி பழக, அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தையும் திட்டத்தையும் கரந்து சாகரனிடம் சொன்னாள். இது ஒருபக்கம் இருக்க,  கேஸ் விஷயம் ஒரு பக்கம். சென்றது.

அடுத்த ஹியரிங் வர, தீர்ப்பு என்னவோ அந்த ஊர் மக்களுக்கு சாதகமாக வந்தது.  நிழலியே திகைத்து நின்றாள்.

“குப்பை கிடங்கை அகற்ற நீதிமன்றம் உத்ரவிட்டது.

சுற்று சூழல் அதிகாரிகளுக்கும் காவல் அதிகாரிளும் கண்டனம் தெரிவித்த நீதி மன்றம், மனித கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு அபாரம் விதித்து,  மேலும் இது தொடர்ந்தால் லைசன்ஸ் பறிக்க பட்டு மருத்துவமனை மூடப்படும்” என்று தீர்ப்பு வழங்க,

நிழலி அழுது விட்டாள், அவளை தெய்வமாக பார்த்த மக்கள்,  அவளுக்கு நன்றி தெரிவித்த கையோடு,  ‘கண்டிப்பா ஊருக்கு வரும்படி’ அன்பு கட்டளையிட்டுச் சென்றனர். சாகரனையும் அச்சுவையும் ஆரத்தழுவி  தன் மகிழ்ச்சியை பகிர்ந்தாள். மேலும், தன் குடும்பத்திடம் பகிர, அவர்களும் ‘ ட்ரீட் ‘ கேட்க, தருவதாக கூறி சாகரனையும் அச்சுவையும் வீட்டிற்கு அழைத்தாள். அர்ச்சனா மறுத்து விட்டு வீட்டிற்கு செல்ல, அதிதியை அழைக்க , சாகரனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்தாள்.

தினமும் உணவு நேரத்தில் அதிதியை பார்க்க ஆதர்ஷன்  வருவது, சாகரனுக்கு தெரியும், ஆனால் இன்று அதை மறந்தான். சாகரனும் நிழலியும் அதே நேரத்தில் தான் அதிதியை வீட்டிற்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்திருந்தனர்.

அதிதியின் வகுப்பிற்கு அருகே வந்தவர்களுக்கு, அதிதி யாருடனோ சிரித்து பேசி உணவை வாயில் வாங்கிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. ‘யாரென?’  நிழலி சந்தேகமாக பார்க்க, அப்பொழுது, சாகரனுக்கும்  நியாபகமும் வர,  தலையில் கை வைத்து நின்றான்..

வேகமாக வேமாக முன்னே சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சி, ஆதர்ஷனுடன் தன் மகளை கண்டதும், “அதிதி !” என கோவமா

அழைத்தவள், அவளை ஓங்கி அறைய, கீழே விழுந்தாள்.

“நிழலிலிலி …!” என  சாகரனும்  ஆதர்ஷனும் ஒரு சேர கத்தினார்கள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்