
“சாகா, ஏன் கோபப்படுற நான் ராங் பண்ணிட்டேனா?” பயந்த விழிகளோடு கேட்கும் அதிதியை கண்ட பின் தன் முகத்தை மாற்றியவன், அவளை தனக்குள் புதைத்து, “அச்சச்சோ ! என் அதிதி பேபி, குட் கேர்ள் ஆச்சே, எப்படி ராங் பண்ணுவா? அதிதி குட்டி பண்ணது அபசலூட்டிலி கரெட். என் அதிதி குட்டி தைரியமானவளாச்சே ! உன் கிட்ட அவனால வாலாட்ட முடியுமோ?” அவளைப் பாராட்ட, முகம் மலர்ந்து அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டது.
“அவன் தான் என் அப்பா வா சாகா?”என பாவம் போல அவன் முகம் பார்த்து அவள் கேட்க, அந்த வாடிய பிஞ்சு முகத்தை கண்டவனுக்கு வேதனை நெஞ்சை அடைத்தது, அவளை இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டவனுக்கு அவளிடம் ‘ இனியும் மறைக்க வேண்டாம்’என்று எண்ணம் தோன்றியது.
தந்தை யாரென தாயால் தான் குழந்தைகள் தெரிந்தது கொள்கிறார்கள். ஆனால் இங்கோ ஒரு தாயுமானவால் தெரிந்து கொள்கிறாள்.
மனிதனாக கூட மதிக்க முடியாத அற்புத பதரை எல்லாம் தந்தை என்று சொல்ல வேண்டிய நிலமைக்கு வந்ததை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான் சாகரன். இதற்கு தானும் ஒரு காரணம் மனம் மறக்காமல் அவனுக்கு சுட்டி காட்ட, தன்னை தானே ஒரு கணம் கண்டித்து கொண்டான்.
கண்களில் தேங்கிய நீரை இரு விரலில் துடைத்து விட்டு, அவளை தன் மடியில் அமர்த்தி, “இப்போ, நான் சொல்ல போறதை கவனமா கேட்கணும் பேபி, அப்றம் நோக்கு இந்த விஷயம் தெரியும்ன்றத நிழலிகிட்ட காட்டிக்க கூடாது ஒகேவா ?” என்று கேட்டுக் கொள்ள, “ஒகே சாகா “என்றதும், தன் தாடையை இறுக்கியவனுக்கு சொல்லக் கூட பிடிக்கவில்லை இருந்தும் வேறுவழியின்றி சொல்ல ஆரம்பித்தான்.
“அவன் தான் உன் அப்பா பேபி ! அவன் மட்டும் நிழலிய ஏமாத்தாம, இருந்திருந்தால் நீயும், அப்பா , அம்மானு குடும்பத்தோட ஹாப்பியா இருந்திருப்ப, இப்படி சிங்கிள் பேரண்ட் பொண்ணா இருந்திருக்க மாட்ட, உன்னையும் உன் அம்மாவையும் விட அவனுக்கு பணம் தான் முக்கியமா போச்சு, அதான் உங்களை வேணாம் சொல்லிட்டு போயிட்டான் ?”என்று பல்லை கடித்தான். அதிதி, அவனை மலங்க மலங்க விழித்தாள்.
“இந்த ரெண்டு டைமண்ட விட்டுட்டு மணி தான் முக்கியம் அவன் போயிட்டான் பேபி !”அவளுக்கு புரிய வைத்தவன், ‘அவள் வருத்தப்படுவளோ’ என்று அவள் முகத்தையே பார்த்திருந்ததான். ஆனால் அவளோ மாறாக புன்னகைத்தாள்.
“என்ன பேபி ஸ்மயில் பண்ற? உனக்கு ஃபீலிங் இல்லையா?” எனக் கேட்கவும் உதட்டை பிதுக்கி இல்லை என்றாள்,’ஏன்?’
என்பது போல புருவ முடிச்சுகளுடன் அவளை ஏறிட,
அதை கண்டவள் இரு புருவங்களை நீவி விட்டு, ” ஆதர்ஷன் எங்களை வேணான்னு சொல்லிட்டு போனதுனால தான், இந்த டைமண்ட் எங்களுக்கு கிடைச்சிருக்கு “என்று நாடியை பிடித்து பெரிய மனுசி தோரணையில் பேச, பேசற்று வியந்து போனான்.
“சாகா, எங்க மிஸ் சொல்வாங்க, ஒரு விஷயம் நம்மள விட்டு போகதுன்னா, ஃபீல் பண்ண கூடாதாம், அதை விட பெட்டராக நமக்கு கிடைக்கும் சொல்வாங்க. அதுனால் ஆதர்ஷனை விட பெட்டரா, சாகரன் எனக்கு அப்பாவா கிடைச்சிருக்கான் !”குதூகலிக்க, அது அவனையும் தொற்றிக் கொள்ள, அவளை மீண்டும் அணைத்து முத்தங்களிட்டான்.
கறைப்படியா, அந்தத் தூய அன்பு கிடைக்க, தான் எவ்வளவு குடுத்து வைத்து இருக்கணும், அள்ள அள்ள குறையாத அன்பை குடுக்கும் அதிதி என்னும் அட்சய பாத்திரத்தை என்றும் இழக்கக் கூடாதென்று உள்ளுக்குள்ளும், அவளை வெளியவும் பற்றி கொள்ள, அவன் கண்களில் கண்ணீர் சாரைசாரை வழிய, “சாகா, ஏன் அழற?” கண்ணீரை துடைத்து விட்டது அந்தப் பிஞ்சு கையை பிடித்து முத்தம் வைத்தான். “எப்பையும் உன்னை, யாருக்காகவும் இழக்க மாட்டேன் பேபி” என்றவன் தன் முகத்தை துடைத்து விட்டு, “பேபி, நம்ம ஒரு கேம் விளையாடலாமா?”
“என்ன கேம் சாகா?”ஆர்வமாக கேட்டாள். “அது, இப்போ எதுக்கு ஆதர்ஷன் உன்னை தேடி வந்தான்ற விஷயத்தை தெரிஞ்சக்கணும்?
நிழலிய ஹர்ட் பண்ணிட்டு, எதுக்கு உன் கிட்ட நான் தான் உன் அப்பா னு சொல்லி பாசம்
காட்டணும்? இதுக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கு, அவன் பின்னாடி யாரோ இருக்காங்க, அதை நாம கண்டு பிடிக்கணும் இல்லையா?” எனவும் “ஆம்” என்று தலையை ஆட்ட, ‘அதுனால, நாம் என்ன பண்ண போறோம்ன்னா, அவன் கிட்ட நடிக்க போறோம்” என்றதும், “நடிக்க போறோமா?”
” ம்ம்ம், எஸ், அவனை ஏத்துக்கறது போல அவகூட பேசி, அவனோட திட்டம் என்ன நாம் தெரிஞ்சுக்கணும், அதுல இருந்து நம்ம நிழலியை காப்பாத்தனும் பேபி ஓகே வா?” எனவும் அதற்கு புரிந்தது போல, “ம்ம்… சூப்பர் சாகா” என்றதும், ” அவன் இனி உன்னை பார்க்க வந்தால் அவன்கிட்ட” சாரி “கேட்டு பிரண்ட்ஸ் போல பேசணும் சரியா?”எனவும் தலையை ஆட்டியது.
“அவன் என்ன சொன்னாலும், அப்படியே எங்கிட்ட சொல்லணும், இது நமக்கு குள்ளே இருக்கட்டும் நிழலிக்கு தெரிய கூடாது டீல்?” என் கை முஷ்டியை மடக்கி நீட்ட, அவளும் அதே போல செய்தாள். அவளது நெற்றியில் முத்தமிட்டவன், அவளை வகுப்பில் விட்டுவிட்டு அழுவலகம் நோக்கி சென்றான்.
நிழலி இங்கே டென்சனாக இருந்தாள், அந்த ஊர்மக்களுக்காக வாதடபோவது என்னவோ நிழலி தான் ஆனால் அவளோ,சாகரனை திட்டிக் கொண்டிருந்தாள், ‘என்ன தான் அதிதி கிட்ட பேசுவானோ ?கோட்டுக்கு போகனும், சீக்கிரமா வரணும் எண்ணம் இருக்கா? நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி திரியிறான்’ அவனை உள்ளுக்குள் திட்டு கொண்டிருக்க, அவனோ விசிலடித்த படியே அமர்த்தலாக வர, “உனக்கு அறிவு இருக்கா ஐயங்கார் “என்று ஆரம்பித்தவள் கிழிகிழியென கிழிக்க, காதில் கைவைத்தவன் அர்ச்சனாவை பார்க்க, அவளோ கேலியாக சிரித்து கொண்டிருந்தாள்.
அவளை முறைத்தவன் மீண்டும் நிழலியை பார்க்க அவளோ திட்டுவது நிறுத்தவில்லை,
“நிழலிலிலி…”என பெருங்குரலில் கத்த, அவனை கண்டு விழித்தாள். அவளை அணைத்துக் கொண்டான்,
“ரிலாக்ஸ் நிழலி, உன்னால் முடியும். கண்டிப்பா இந்தக் கேஸ்ல வாதாடி அவங்களுக்கு நியாயம் கிடைக்கும் படி செய்வ !உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு பேபி”என்று அவளது தலையை ஆதுரமாய் தடவிக் கொடுத்தான்.
“எனக்கு பயமா இருக்கு சாகரா?”என சற்று முன் கத்திக் கொண்டிருந்தவள் அடங்கி, அவன் கைக்குள் இருப்பதை கண்டு வாயை பிளந்தாள் அர்ச்சனா.
நிழலியின் முகத்தை கையில் தாங்கியவன், “என் நிழலி தைரியமானவளாச்சே ! திறமையா பேசி ஜெயிச்சுட்டு வருவ பேபி”என்று நெற்றியில் இதழை பதிக்க, அவனை அணைத்து கொள்ள, வாயை பிளந்த அர்ச்சனாவை கண்டு நாக்கை துருத்தி காட்டினான்.
மூவருமாக கோட்டிற்கு கிளம்பினார்கள், அங்கே ஊர்மக்கள் சிலர் வந்திருக்க , அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு காத்திருந்தனர் அவர்களது கேஸ் வருவதற்காக,
கேஸ் எண்ணை அழைக்க, நிழலி , சாகரன் , அர்ச்சனா மூவரும் உள்ளே சென்றனர். நீதிபதி முன் நின்றவள், தன் வாதங்களை முன் வைத்தாள்.
அவ்வூரையும் அழிக்கும் திடக் கழிவுகளையும், மனித கழிவுகளையும் முறையாக எரிக்காமல், அதை அப்படியே கொட்டிச் செல்வதும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் எடுத்துக் கூறினாள்.
மனித கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் முறைப்படி பிரித்து, அதை எரித்து அழிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யாது, மனிதர்கள் வசிக்கும் இடத்தில் கொட்டிவிடுகிறார்கள், அது காற்றில் பறந்து பொது மக்கள் செல்லும் பாதையிலும், குடிக்கும் நீரிலும் விழுவதும், விவசாய நிலத்தில் விழுவதுமாக, மருத்துவ கழிவுகளில் இருந்து வரும் நச்சுத் தன்மை நிறைந்தவை, காற்றில் கலந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களும் நோய்வாய் படுவதையும் அதற்கான ஆவணங்களையும், அவ்வாறு மனித கழுவுகளை கொட்டும்
குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளை குறிப்பிட்டு கூறியிருந்தவள், இதற்கு சம்பந்தப் பட்ட சுற்று சுழல் பாதுகாப்பு அதிகாரிகளையும் கவனிக்கும் படியாக தன் வாதத்தையும் முன் வைத்தாள்.
வழக்கை விசாரித்த நீதிபதி,
தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு பின் சொல்வதாக முடித்துக் கொண்டார். அனைவரும் வெளியே வர,
“நம்பிக்கை வைங்க நமக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும்” என்று அந்த ஊர் பெரியவர்களிடம் மீண்டும் நம்பிக்கை கொடுத்தவள், “அடுத்த ஹியரிங் அன்று வந்தால் போதும்” என்று உரைத்து விட்டு மனச் சோர்வுடன் நடந்தாள்.
அர்ச்சனாவும் சாகரனும் அவளை பார்த்து கொண்டனர், மூவரும் காரில் ஏற, அங்கே பெரும் அமைதி நிலவியது.
” வர வர நிழலி இன்விசிப்பில் ஆகுறாங்க ஏன்னு நோக்கு தெரியுமா அச்சு ?” காரில் பின் சீட்டில் அமர்ந்த இருவரையும் பார்த்து முன்னே ட்ரைவர் பக்கத்துல அமர்திருந்த சாகரன் கூற, கண்களில் தனது வலது கையை வைத்து மறைத்து சீட்டில் சாய்த்திருந்தவள் அவன் கேள்வியை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அச்சுவோ,’ இப்படி கன்ஸபட்டே குடுக்காம கேள்வி கேட்டா என்னயா பதில் சொல்றது?”என்று புலம்பியவள், ‘என்ன சொல்ல?’ என்று திருதிருவென்று முழிக்க,
“இல்ல அச்சு, எதையும் தைரியமா ஃபேஸ் பண்ற நம்ம நிழலி மேடம் இப்போ எல்லாம் சும்மா சும்மா முகத்தை தொங்க போட்டு திரியிறாங்க, தைரியமான நிழலி இன்விசிப்பில் ஆகிடுறாங்க, அதான் ஏன்னு நேக்கு தெரியல நோக்கு தெரியுமா?” என்று தன் கேள்விக்கு விளக்கம் கொடுக்க, அச்சுவிடம் கேட்க, அவளோ திரும்பி நிழலியை பார்க்க, நிழலி பதில் சொல்லாமல் மௌனம் காத்தாள்.
“காமான் நிழிலி, என்ன ஆச்சுன்னு இப்படி ஃபீல் பண்ற ? எந்த கோர்ட் தான் உடனே தீர்ப்பு தந்திருக்கு சொல்லு? நிலுவையிலே நிறைய கேஸ் இருக்குமா, இதுல புதுசா வந்த கேஸ்க்கு மட்டும் தீர்ப்பு வந்திடுமா என்ன? நீ ரொம்ப பேராசை படுற நிழலி !”என்றான் கேலியாக.
“போராசை இல்ல சாகரன் நியாயமான கோரிக்கை இது? கேஸோட விவரம் புரியாம காலம் தாழ்த்துறது சரியா? அந்த ஊரே சுடுகாடா மாறினத்துக்கு அப்றம் தான் தீர்ப்பு வரும் போல, அதுவும் நமக்கு சாதகமா வரும்றது சந்தேகம் தான் ” என்று முகத்தை இறுக்கமாக வைத்தாள்.
“சில் மா, நம்ம வேலை சரியா செய்தால், அந்தப் பெருமாள் பலன் தருவா ?”
“நான் முறையிட்டது நீதிபதி கிட்ட தான? பெருமாள் எப்படி பலன் தருவா ஐயங்கார்? ஒருவேள ஜட்ஜூக்கும் பெருமாளுக்கும் கனெக்சன் இருக்குமோ? இது தெரியாம கோர்ட் வாசலை மிதிக்கறாங்களே மக்கள், கோர்ட் வாசலை மிதிக்காதீங்கோ கோவில் வாசலை மிதிங்கோ பலன் கிடைக்கும்னு பெரிய வாசகமா கோவில் எழுதி போடணும் என்ன சாகரா?” எனக் கேலி செய்ய , அவளை திரும்பி முறைத்தவன், “கொழுப்பு டி உனக்கு !” என்று முகத்தை வெட்டிக் கொள்ள இரு பெண்களும் சிரித்து விட்டனர்.
மாலையாகிட சாகரன் தன் வீட்டிற்கு வந்தான். அங்கே நடுக்கூடத்தில் சேதுராமனும் வரதராகஜனும் அமர்ந்திருக்க, சங்கரனும் உடன் இருந்தான். வீட்டிற்குள் நுழைந்த சாகரனை வரவேற்றார் சேதுராமன்.
“வாங்கோ மாப்பிள்ளை !” என்றிட அவன் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்.’ ஐயோ இவரா? கொஞ்ச நாள் கூட சந்தோஷத்தை நிலைக்க விட மாட்டேளா பெருமாளே? எதுக்கு வந்திருக்காரோ !” என்றெண்ணி உள்ளே பயந்தவன் அதை முகத்தில் காட்டாது சிரித்து கொண்டே , “வாங்கோ மாமா, செத்த இருங்கோ வந்துடுறேன்” என்று மேலே சென்றவன், ஆடையை எடுத்துக் கொண்டு பின்பக்கமாக சென்று குளித்து விட்டு உள்ளே வந்தவன் அவர்கள் முன் அமர்ந்தான்.
வரத ராஜன் சங்கடத்தோடு இருந்தார், “சொல்லுங்கோ மாமா” என்றான்.பேச தயங்கியவர்,” கேஸ் என்னாச்சு மாப்பிள்ளை?”
“தீர்ப்பை ஒத்தி வச்சிருக்காங்க மாமா”என்றான்.
“இதெல்லாம் சரி வருமோ ? இவன் எப்போ தீர்ப்பு சொல்றது நீங்க எப்போ வக்கீல் ஆகறது? நேக்கு இது சரினு படலை மாப்பிள்ளை? நீங்க மாசம் மாசம் கைக்கு வருமானம் வரது போல வேலைக்கு போனாதான குடும்ப நடத்த முடியும்? அது மட்டுமில்ல , உங்களுக்கும் என் பொண்ணுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் இருக்கோம் மாப்பிள்ளை”என்று அவன் தலையில் குண்டை தூக்கிப் போட, “வாட்?”என அதிர்ந்து விட்டான் சாகரன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1

