Loading

மிரண்ட விழிகளால் தனக்கு எதிரே இருந்த,  சின்னவளை அளவிட ஆரம்பித்தான் ஆதர்ஷன். நிழலியின் சாயலே அதிகமென்றாலும்,  தன் சாயல் கொஞ்சம் ஒட்டி இருப்பதை கண்டு ஒரு சிறு கர்வமும் வந்த நொடி மறைந்தது. அந்தச் சிறு முகத்தில் எத்தனை கோபங்கள்?! சிறு மிளகுக்குள் இருக்கும் காரத்தை போலே,

ஆசையாய் அவளை தூக்க நெருங்கிய ஆதர்ஷனை ஒரு விரல் நீட்டி ” என்னை தொடாத ! ” என்றாள்.

‘தன்னை பற்றி தெரிந்திருக்குமோ ! தன்னை கண்டதும் யாரென கேட்பாள்? ‘என்று எண்ணியவனுக்கு மாறாக கிடைத்தது என்னவோ அதிர்ச்சி தான்.

“நான் உன் அப்பா அதிதி !”மீண்டும் அவளை நெருங்க, “அப்பா வா?” என்று கேட்டே அதிர்ந்தாள்.

‘ஆதர்ஷன்’ பெயரைக் கேட்டதும் அவள அதிர காரணம், வாசுவும், மிதுவும் தான். அவர்கள் இருவரும் ஆதர்ஷனின் பெயரை சொல்லி  திட்டிக் கொண்டிருந்தனர்.  அவனால் தான் நிழலிக்கு காய்ச்சல் வந்தது என்று அவர்களுக்கு பேசிக் கொள்ள, அதை கேட்டவளுக்கு ஆதர்ஷன் மேல் கோபம், அதான் அவனை எட்ட நிக்க சொன்னாள்.

மத்தப்படி அவளுக்கு இப்படி ஒரு தகப்பன் இருப்பது கூட தெரியாது. இதுவரைக்கும் நிழலி,  அதிதியிடம் அவளது தந்தை யாரென சொன்னதும் இல்லை அவளும் கேட்டதுமில்லை. ஆனால் அதிதிக்குள் தந்தைக்கான ஏக்கம்  இல்லாமல் இல்லை. தந்தையின் தேவை  ,  முக்கியம் என்ன என்பது பள்ளியில் தன்னுடன் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை கண்டு  தான் தெரிந்து கொண்டாள்.

இருந்தும் நிழலியிடம் சொல்லவோ  கேட்கவோ  பயமும், அவள் மேல் கொண்ட பாசத்தினாலும் எப்பவும் தந்தையை பற்றி கேட்க மாட்டாள். ஆனால் சூழ்நிலை மாறி சாகரனுக்காக அவளிடம் கேட்கலாம். இப்போ கதைக்கு வருவோம், ஆதர்ஷனிடம் “அப்பாவா? எனக்கு அப்பானு யாருமில்லயே, எனக்கு அம்மா மட்டும் தான்”என்றாள் பட்டென்று.

‘ தன்னை பற்றி தெரியாமத்தான் எட்ட நிக்க சொன்னாளா? ம்ம் அதானே யார் வளர்ப்பு தி கிரேட் அட்வோகேட் நிழலி வளர்ப்பாச்சே !’ அவளை  நினைத்து  உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான் தன்னை அறியாமலே.

“டார்லிங்  ! நான் தான் உன்னை பெத்த அப்பா !  உன்னோட பயலாஜிகள் ஃபாதர். நீ என் பொண்ணு, அப்பா கிட்ட வா !” என்று மீண்டும் அழைத்தான்.

‘அப்பாவா ! சாகரனை தான அப்பாவா நினைச்சிட்டு இருக்கோம், இது என்ன புது கேரக்டர் ? இவனால பிரோப்லம் வருமா சாகரனுக்கும் நிழலிக்கும். இவனை என்ன பண்ண?’ என யோசிக்க,

“என்னை நீ நம்பலையா?” எனக் கேட்க ,  ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள். தனது பர்சில் இருந்த இரு போட்டோக்களையும் எடுத்து காட்டினான்.

“பாரு,  நான் தான் உன் அப்பா ! என்னை உன் வீட்ல எல்லாருக்கும் தெரியும் அதிதி, அவங்க கிட்ட  கேட்டு பார், உன் அப்பா ஆதர்ஷன் தான் சொல்வாங்க. நான் தான் உன்னோட உண்மையான  அப்பா ! என் கிட்ட வா ! ” என்றான்.

“என் அப்பான்னா, இத்தனை நாள் ஏன் என்னை தேடி வரல ?” எனக் கேட்டு அவனை மறுதரமும் அதிர வைத்தாள்.

“தினமும் நீ , உங்க வீட்ல  இருந்து வெளிய வரும் போது பார்ப்பேன் டார்லிங்!அப்றம் ஸ்கூல்ல விட்டு வெளியே வரும் போது பார்ப்பேன். உன்னை பார்க்க வீட்டுக்கு வந்தால் உன் அம்மா பாக்க விடாம பண்றா? நான் என்ன டார்லிங் பண்ண?” என்று பாவமாக முகத்தை வைத்தான் அவள் நம்ப,

ஆனால் அதிதியோ கேடிக்கு கேடியாச்சே !அவனை சும்மா விடுவாளா  என்ன? கேட்டாள் ஒரு கேள்வி , “ஓ… வெளிய நின்னு பாத்தீயா? அப்போ !இப்ப மட்டும்  வாட்ச் மேன்  உன்னை உள்ள விட்டாரா என்ன?” அவன் முகத்தில் சப்பென்று அறைந்தது போல  கேட்டாள்.

அவனோ ‘ பே ‘ வென விழித்தான். “என்ன பார்க்கற? இப்போ தான் என்னை பார்க்க வாட்ச் மேன் உள்ள விட்டாரா? இத்தனை நாள் என்னை ஸ்கூல்ல வந்து பார்க்கணும் தோணலையா உனக்கு? இப்போ மட்டும் என்னை பார்க்க ஏன் வந்த? நீ வந்து,  எங்கிட்ட,  நீ தான் அப்பானு சொன்னா, நானும் உன்னை அப்பானு சொல்லனுமா? நிழலி வந்து உன்னை காட்டி இது தான் உன் அப்பானு சொல்லச் சொல்லு  , அப்பானு சொல்றேன். இப்போ நீ கிளம்பு ! ” என்றதும்.

‘இந்த வயசுல எனக்கு பேச்சே வரலன்னு எங்க அம்மா சொல்லும் இது என்ன இவ்வளவு பேசுது? அந்தத் திமிரு பிடிச்சவ பெண்ணாச்சே ! பேசலேன்னா தான் ஆச்சர்யம்’ என பல்லை கடித்துக் கொண்டவன் அவளை பார்க்க, அவனை விட அதிக அளவில் கோபமாக இருந்தாள், “உன்னால் தான் நேத்து நிழலிக்கு காய்ச்சல் வந்துச்சி, நீ அவளை ஹர்ட் பண்ணிருக்க.  அவ கிட்ட ஒழுங்கா சாரி கேளு, அப்றம் அவளை எப்போதும் டிஸ்டர்ப் பண்ண கூடாது புரிஞ்சதா? அப்றம் என்னையும் ” என்று மீண்டும் எச்சரித்து விட்டுச் செல்ல,

இங்க என்ன நடந்தததென்று புரியாமல் விழித்தான். ‘அவளுக்கு காய்ச்சலா? அவளால் மத்தவங்களுக்கு தான் காய்ச்சல் வரும். முதல் அட்டெம்ப்ட் ஃபெயில்லா ! ” என தலையில் அடித்து திரும்பி நடந்தான்.

மாலையாகிட, பானுமதி வந்து அதிதியை அழைத்து கொண்டு வீட்டிற்குச் சென்றார். வீட்டிற்கு வந்தவள்,  உடையை மாற்றி, தாயிடம் செல்லாம் கொஞ்சி விளையாடி விட்டு படிக்க அமர்ந்தாள்.

“ஃபாதர்” என்ற வார்த்தையை புத்தக்கத்தில் கண்டதும் இன்று ஆதர்ஷனின் வருகை எண்ணி பார்த்தவள் நிழலியிடம் ‘சொல்லலாமா? வேணாமா?’ என்று யோசித்தவள், ‘சொல்ல வேணாம், ஏற்கெனவே இவளுக்கு அவனால் தான் முடியாம வந்தது. அதுனால சொல்லக் கூடாது. சாகா கிட்ட சொல்லலாம் என்று முடிவு பண்ணியது.

இங்கோ சாகரன் வானத்தை பார்த்துக் கொண்டே அதிதியை  எண்ணி அவளது பேச்சை  நினைத்து  சிரித்து கொண்டிருந்தான். “என்ன சாகரா , நிலாவ பார்த்து சிரிக்கறீயா? இல்ல நிழலிய நினைச்சு சிரிக்கறீயா? “சாரதி கேட்க, “ரெண்டும் இல்ல அத்திம்பேர்,  என் பொண்ண நினைச்சு

சிரிச்சேன்” என்றதும் “பொண்ணா?” என்று வாயை பிளக்க,

“ஆமா அத்தி ! என் பொண்ணு அதிதி”என்று அவளை பத்தியும் அவள் பேசியதையும் அவனிடம் கூற,

“பெருமாளே ! அந்தக் குட்டி இவ்வளவு பேசுதா? நம்ம கேசவனை விட வாய் போலையே !பரவாயில்லை  உன் காதலுக்கு  பெரிய சப்போர்ட் இருக்கு. சீக்கிரமா நிழலி கிட்ட காதலை சொல்லுடா அம்பி! இல்ல,  அந்த லட்சுமி  தான் உனக்கு ஆயிடபோகுது” என்று எச்சரிக்க,

“நாளைக்கு  சொல்லலாம்  இருக்கேன் அத்தி !” என்றவன் மீண்டும் வானத்தை வெறித்தான்.

இங்கோ கொதித்து போன அனு கத்திக் கொண்டிருந்தான். ” இவனை வச்சிட்டு ஒரு கொலை கூட நம்மலால பண்ண முடியாது போல டா, அவ போ’ ன்னு சொன்னாலாம் இவரும் வந்துட்டாராம். அவள டிஸ்டர்ப் பண்ணக் கூடாது சொன்னால் அப்படியே விட்டுடு வந்துடுவீயா?”

“எனக்கு இந்த பிளான் ஓர்க் கவுட் ஆகும் தோணல டா ! அதிதி, நான் வந்ததை, நிழலி கிட்ட சொன்னா? நம்ம கதை முடிஞ்சது. வேற பிளான யோசிப்போம் டா” என்றவனை  இருவரும் கொலை வெறியுடன் பார்த்தனர்.

“உன்னால ஒரு பிளானை ஒழுங்கா பண்ண முடியுதா டா ! நான் தான் அப்பா ன்னு சொன்னதும் உடனே ஓடி வந்து உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுப்பாளா?  உன்னை பத்தி நிழலி, அவகிட்ட என்னன்ன சொல்லி வச்சாளோ ! அதான் உன்னை பார்த்ததும் தள்ளி  போயிருக்கா. உடனே நீயும் இந்த பிளான் சொதப்பல் விட்டுருவீயா? அவளை கவுக்க முயற்சி பண்ண மாட்டியா? நிழலிய

லவ் பண்ண வைக்க ரெண்டு வருஷம் நாய் மாதிரி பின்னாடி சுத்தி காரியத்தை

சாதிக்கல, அவளையும் காதலிக்க வைக்கல !. அப்போ ஆத்தா பின்னாடி சுத்தின, இப்போ மக பின்னாடி சுத்துடா. அவளை கொடுமை பண்ணனும் முடிவு பண்ணா மட்டும் போதுமா இறங்கி அதுக்கான வேலைய பார்க்க வேணாமா? நீ இப்படி இருக்கறதுனால தான் உன்னை எல்லாரும் ஆம்பளயே இல்லைனு சொல்லிட்டு திரியிறான்”என்றதும், கண்கள் சிவக்க வெறிக் கொண்டவனாய் அவனது சட்டையை பிடித்தான்.

“அனு இன்னொரு வாட்டி அந்த வார்த்தைய சொன்ன உன்னை கொன்னு பொத்தச்சுடுவேன் டா” என்று கர்ஜிக்க,

“நானா அந்த வார்த்தைய சொல்றேன். உன்னை ஆம்பளையே இல்லேன்னு சொல்ல வச்ச நிழலியை அவளை எதுவும் பண்ணிடாத, ஆனா, என் சட்டைய  பிடி டா? உன்னை இந்த நிலமைக்கு ஆளானாக்குனவள எப்படி கொடுமை பண்ணலாம் யோசி? எப்படி  பழிவாங்கலாம் யோசி ? அதை விட்டுட்டு என் மேல் உன் கோபத்தை காட்டாத !” என்றவன் ஆவேசமாக பேசி கையை தட்டி விட்டான். சற்று யோசித்தவன், என்ன நினைத்தானோ விருட்டென்று சென்று விட்டான்.

ராக்கி கண்ணசைவில் அனுவிடம் பொறுமையாக இருக்கச் சொன்னான்.

ஆதவன் கரம் அண்டமெங்கும் விரிய விடியலை கொடுத்தான்.  காய்ச்சல் சரியானாதால், மறுநாள் , நீதிமன்றத்தில்

கேஸ் ஹியரிங் வருவதால், அலுவலகம் செல்ல புறப்பட்டாள்,

அதிதியை சாப்பிட சொன்னவள் தனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டு கோப்புகளை பார்த்துக் கொண்டிருக்க, அவள் வாயருகே ஒரு கரம் உணவை நீட்ட, சட்டென  யாரென்று பார்க்க பானுமதி தான்.

“இப்போ தான்  காய்ச்சல் சரியாகிருக்கு,ஒழுங்கா  சாப்பிடாம உடல்ல சத்து வேற இல்ல ஒழுங்க சாப்டு ஆபிஸூக்கு போய் உன் வேலைய பாரு !” என்று  ஒவ்வொரு விள்ளலாக ஊட்ட, அவரையே பார்த்தவளுக்கு கண்கள் கலங்கின. அதை துடைத்து விட்டு கோப்புகளை பார்க்க, அவரும்  ஊட்டிய வண்ணமே இருந்தார்.

மற்றவர்கள் புன்னகையோடு பார்த்திருந்தனர்.

பின் அதிதியை அழைத்துக் கொண்டு சென்றாள். காரை நிறுத்தி விட்டு, உள்ளே அவளை அழைத்து செல்ல, அங்கே அவர்களுக்கு முன்னாடி சாகரன்  நிற்க, அடுத்து என்ன அங்கே அப்பா மகள் பாசப் போராட்டம் தான் அது நமக்கு. நிழலிக்கோ, நட்பு போராட்டம்.

‘முடியல டா சாமி ரொம்ப தான் பண்ணறானுங்க,  ஊர்ல இல்லாத நட்பு !’ என்று அலுத்துக் கொண்டாள் நிழலி.

“எங்கயோ பெர்னிங் ஸ்மெல் வருத்துல பேபி? ” என நிழலியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற, அவளும் வாயில் கைவைத்து சிரித்தவள், “அசிடிட்டி யா இருக்கும் சாகா !ஈனோ சரியா இருக்கும் உன் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லு” என்றாள் மேலும் அவளை வம்பிழுத்தாள்.

“யூ… அவன் கூட சேர்ந்து என்னையே நீ வம்பிழுகிறீயா? நைட் ‘நிழலிலிலி… ‘ வந்து கைகால்ல போட வருவேல, பாரு டி உன்னை தனியாக தூங்க வைக்கறேன்” என்றிட,

“பரவாயில்ல எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்,  அப்றம்” என இழுக்க, “பேபி” என்று அவனழுத்த, கப்சிப் என்று வாயை முடினாள். இருவரும் திருட்டு முழியுடன் நிழலி முன் நின்றனர்.

“ஏய் ! என்ன ரெண்டு பெரும் எதையோ மறைக்கிறீங்க? உண்மைய சொல்லுங்க” என மிரட்ட, இருவரும் ஒரு சேர “ஒன்னில்லையே !” தலையை இடப்பக்கம் வலப்பக்கமாக ஆட்டினர்.

அவள் ஏதோ கேட்க வர, அதற்குள் அவளுக்கும் போன் வந்திட, எடுத்து தனியாகப்  பேசச் சென்றாள்.

“சாகா, உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும், நாளைக்கு நீ என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர்றீயா? நிழலிக்கு நான் சொல்ல போறது தெரிய வேணாம்” என்றாள் தீவிரமாக.

“சரி பேபி” எனவும் அவள் வரவும் சரியாக இருக்க இருவரும் அவளை விட்டுட்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

“சாகா, உனக்கும் அதிதிக்கும் என்ன சீக்ரேட் எனக்கு தெரியாமா?”

“அப்பாவுக்கு பொண்ணுக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது” என்று அமர்த்தலாக சொன்னவனுக்கு அப்போது தான் புரிந்தது தான் உளறி வைத்ததை , “செத்த டா சாகரா ! இப்படி உளறிட்டீயே !இந்த ராட்ஸசி என்ன கேட்பாளோ !” அவளை பார்க்க, அவளோ விழி தெறிக்குமளவிற்கு முறைக்க

” என்ன சொல்லிட்டேன் இப்படி முறைக்கற? உனக்கு நான் ஃப்ரெண்ட்டா  இருந்தாலும் என்னை நீ அப்பாவா  நினைக்கும் போது, அதே போல என் ஃப்ரெண்டும் என்னை அப்பாவா நினைக்கறா நானும் அவளை மகளா பார்க்கறேன்.

‘ஏ குட் பாதேர் இஸ் ஏ குட் ஃப்ரெண்ட் , ஏ குட் ஃப்ரெண்ட் இஸ் ஏ  குட் பாதர்’ ஸோ நான் அவளுக்கு நான் ஃப்ரெண்ட் ஆஸ் வேல் ஆஸ் ஃபாதரும் கூட ,போதுமா விளக்கம் போய் வேலைய பாரு !” அவளை பதில் பேச விடாமல் வாயை அடைத்து விட்டு சென்றான். அவளும் ‘பே’ என விழித்து நின்றாள். அன்றைய நாள் முழுவதும் உழைக்க, சொல்ல வந்த காதலை கேஸ் முடிந்ததும் சொல்லலாம் என்று விட்டுவிட்டான்.

அடுத்த  நாள் காலையில் நிழலி கோட்டிற்கு சென்று விட, அதிதியை சாகரன், பள்ளிக்கு அழைத்து சென்றான். அவனிடம் ஆதர்ஷனை பற்றி சொல்ல, கண்கள் சிவக்க, கை முஷ்டியில் தான்  கோபத்தை கட்டு படுத்த முடியாமல் நின்றான்.

அதிதியே பயந்து போனாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்