Loading

வருடங்கள் செல்ல ஜூனியர்களாக இருந்தவர்கள் மூன்று வருடம் கடந்து நான்காம் வருடம் வந்து சீனியர்களாகி விட்டனர். கல்லூரியின் ஆயுள் நாட்கள் குறையவே நான்காமாண்டு மாணவர்கள் ஒரு வித பாரத்தோடு தான் அலைந்தனர்.

இதற்கிடையில் வரதராஜனின் தூரத்து சொந்தமான  கணேசனும்,

தன் மகளை அக்கல்லூரியில்  சேர்த்ததுமில்லாமல், சாகரனிடம் ‘ அவளை பார்த்து கொள்ளுமாறு ‘ கேட்டுக் கொள்ள, அவனும் ‘நான் பார்த்துக் கொள்கிறேன் சித்தப்பா’ என்று நம்பிக்கை அளித்தான்.

பூஜாவிடம், ‘உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேள்’ என்று கூறிவிட்டுச் சென்றான். சின்ன பெண் என்றாலும் பார்ப்பவரை  ஈர்க்கும் அழகு உடையவள் தான் பூஜா. அவளை பார்த்த நிமிடத்திலே காதலில்(காமதித்தில்) விழுந்தான் அனி. அவளிடம் நல்லவனாக (நடிக்க)பழக ஆரம்பித்தான். இவளும் அவனை, ‘நல்லவா ‘ என்று நம்பி நட்பாக பழக, சாகரனுக்கு  அவர்கள் பழகுவது  தெரிய வந்தது. அனியிடம் எச்சரிக்கை செய்ய சென்றவனின், காதில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் விழுந்தன.

” சாகரனை நினைச்சா, கொஞ்சம் பயமா இருக்குடா ! எங்க நிழலிய மடக்கிடுவானோ, அவளும் அவன் தான் வேணும் போயிடுவாளோன்னு  உள்ளுக்குள்ள அடிக்கடி இந்த எண்ணம் வருது !

ஒவ்வொரு நாளும் நைட் தூக்கம் வர  மாட்டேங்குது, இவங்க ரெண்டு பெரும் சேர மாதிரி

எனக்கு கனவா வருது !”என்று புலம்பினான் ஆதர்ஷன்.

“மச்சி, நான் சொல்றது மாதிரி செய், நிழலி உனக்கு தான் ” என்றவன், அவனிடம், ” நிழலியோட வெளிய போ , ரெண்டு நைட் ஸ்டே பண்ணு, ரெண்டு பேருக்குள்ள மேட்டர் முடி, அப்றம் அவ உன்னை விட்டுப் போகவே மாட்டா  டா !” என்று இழிவான யோசனையை அவனுக்கு கொடுக்க,  பதறிய ஆதர்ஷன். ” இதுக்கு நிழலி சம்மதிப்பாளா? அப்படியே சம்மத்திச்சு  எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு குழந்தை உண்டான என்னடா பண்றது ?”

“அடேய் இன்னும் எந்தக் காலத்துல இருக்க டா நீ ?இப்போதான் நிறைய டேப்லெட் இருக்கு, **** இருக்கு அதை யூஸ் பண்ணுடா !  எங்க கூட இருந்துட்டு இப்படி இருக்கீயே !  எனக்கெல்லாம் சான்ஸ் கிடைச்ச பூஜா கூடா ம்ம்ம்ம்” என்று கற்பனையில் மிதக்க ஆரம்பித்தான் அனி. ” மச்சி நானு ?” என்று இடையில் ராக்கியும் நுழைய,

“உனக்கும் பங்கு இருக்கு டா இப்ப தானே நல்லவனா நடிச்சிட்டு இருக்கேன் போக போக, அவளை கவுத்தி நம்ம வளையில விழ வச்சிடுவேன்” இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஆதர்ஷனோ அனி சொல்வதை பற்றி தான் யோசித்தான்.

ஆதர்ஷன்,  அனி , ராக்கியை போல அல்ல. அவனுக்கு தேவை நிழலி மட்டுமே அவள் தன்னோடு இருந்தால் போதும்.  சாகரனிடம் தோற்க கூடாது என்பதே அவனது எண்ணமே. ஆனால் அனி , ராக்கியுடன்  ஆதர்ஷன் இருப்பதால் அவனும் சாகரனுக்கு தவறானவனாகவும் அம்மூவரும் நரகத்தில் வாழும் அரக்கனை போலவும் தான் தெரிந்தார்கள்.

அவர்கள் மூவரிடமிருந்து இந்த இரு பெண்களை காக்க எண்ணினான். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தவன். பூஜாவிடம் அனியை பற்றிய உண்மையை மேலோட்டமாக சொன்னவன்,  நிழலி கொடுத்த புகைப்படத்தை காட்டினான்.  இருவரும் அவளை அவனிடம் இருந்து காப்பாத்த முயன்றனர்.

“பூஜா, நீ அவா நல்லவானு நினைச்சி பழகற. ஆனால் அவா நல்லவா இல்லம்மா !பெண்கள் விஷயத்தில ரெண்டு பெரும்  மோசமானவா ! அவா சகவாசம் நமக்கு வேணாம், படிப்ப மட்டும் பாருடா பூஜா !” அவளுக்கு நிதானமாக எடுத்து சொல்லி, அவளை நம்ப வைக்க நிழலியின் உதவியோடு கிடைத்த புகைப்படத்தையும் காட்டினான். அதில் அனி, பப்பில் ஒரு பொண்ணோடு உல்லாசமாக இருப்பது போல இருக்க முகத்தை சுளித்தாள்.

“மன்னிச்சிடுங்கோ அண்ணா ! நல்லா பேசறா, உதவி பண்றானு நினைச்சி தான் அவாட்ட பேசினேன். ஆனா, அவா இப்படி ஒரு எண்ணத்தில தான் எங்கிட்ட பேசிட்டு இருக்கான்னு நேக்கு தெரியாது ண்ணா ! யாரைத்தான் அண்ணா நம்பறது?” எனக் கேட்டு அழுதாள்.

நிழலி அவள் கையைப்பற்றி, ” உன்னையும் உன் பெத்தவாளை தவிர, மத்தவா எல்லாரையும்  ஒரு சந்தேக கண்ணோட தான் பார்க்கணும் பூஜா !மனுசங்க எப்போ வேணா மாறுவாங்க! யார் மேலையும் அதீத நம்பிக்கை வைக்காத, அதுவும் உனக்கு சுத்தமா பழக்கமே இல்லாதவா மேல வைக்காத, எதுவா இருந்தாலும் உன் அம்மா அப்பாகிட்ட பேசு, சொல்லு,  புரியறதா?”எனவும் அவளும் புரிந்தது போல தலையை ஆட்டினாள்.பூஜாவிற்கு அறிவுரை சொன்னவள் தான் ஆதர்ஷனை நம்பி ஏமாற போகிறாள் என்பதை அறியாமல் போனாள்.

அதன் பின், பூஜா, அனியுடன் பேசுவதில்லை, அவன் இளித்துக் கொண்டு நெருங்கி  நெருங்கி வந்தாலும் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக  விலகினாள். ஆனால் அவனோ அவளை விட வில்லை, காலை சுற்றின பாம்பாக அவளையே சுற்ற, உள்ளுக்குள்  அவளுக்கு  கிலிப் பிறந்தது. அவனிடம் தப்பிக்க எண்ண,  முடியாமல் போக, “நேக்கு உங்களோட பேசறது பிடிக்கலை, உங்கள நல்லவா நினைச்சேன். ஆனால் நீங்க  ரொம்ப மோசமானவான்னு அண்ணா சொல்லிட்டா !இனி எங்கிட்ட  வந்தேள் நான் பிரின்சி கிட்ட போவேன்” என்று கோபமாக பேசிவிட்டு செல்ல, அது வரை பாவமாக முகத்தை வைத்தவன் அவள் சென்றதும் மாற்றியவனின் முகம் இறுகியது.

” இந்த சாகரன் எதுக்கு டா என் வழியில கிராஸ் பண்றான்? கொஞ்சம் கொஞ்சமா நம்ம வழிக்கு வந்தவள

திசை திருப்பிட்டான் டா ! அவன.”  பற்களை கடித்தவன் அவனை அடிக்க செல்ல, ” அவன அடிக்க கூடாது மச்சி, அவமான படுத்தனும் அப்ப தான் நம்ம பக்கம் பயந்து கூட வர மாட்டான்” என்றான் ராக்கி.

“வர போற பொங்கல் ஃபங்கசன் அவனை வச்சி செய்வோம் டா !”என்றவன் திட்டத்தை கூற தன் கோபத்தை அடக்கியவன் ‘ சரி’ என்றான். இருவரும் அந்த நாளுக்காக காத்திருந்தனர்.

அந்த நாளும் வர, அழகு மயில் கழுத்திலிருக்கும் வண்ணத்தில் புடவை அணிந்து ஆண்களின் இதயத்தை சிதற வைத்தாள் நிழலி . இத்தனை நாள் கல்லூரியில் நடந்த அனைத்து விழாவிலும் சுடிதாரைப் போட்டு வந்து  ஆதர்ஷனை கடுப்படித்தால். இந்த முறை அவன்  அவள் காலில் விழுந்தது கெஞ்சி கேட்டதால் புடவை காட்டினாள்.

ஆனால்” அவளை ஏன்டா சேலை கட்ட சொன்னோம்” என்றானது ஆதர்ஷனுக்கு சாகரனின் பார்வையை  தவிர மற்ற ஆண்களின் பார்வையை அவளை மட்டுமே மொய்த்ததும் இல்லாமல்

அவனிடமே வந்து, “மச்சி, உன் ஆளு …” அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பற்றி கொண்டு வந்தது ஆதர்ஷனுக்கு .

அதிலும் அனியும் ராக்கியும் தங்கையாய் பார்க்க வேண்டியவளை காமமாக பார்த்தும் இல்லாமல் அவனிடம் ,” நீ குடுத்து வச்சவன்  டா !உன் உடம்பு முழுக்க மச்சம் மச்சி !”  என புகழ்வது, தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் பேசவது போல இருந்தன. அவனுக்கு அவர்களது பார்வை எண்ணம் தெரியாதா என்ன? அவன் அந்த இடத்தில் கூனி குறுகினான்’ இப்படி தானே மற்ற வீட்டு  பெண்களை பார்க்கும் போது அவங்க வீட்டுல இருக்கிறவங்க வேதனை படுவாங்க ‘ என்றது மனசாட்சி. அதை எல்லாம் உதறியவன் நிழலியை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்  என்று அவளை தேடி செல்ல, அவள் சாகரனோட இருப்பது தெரிந்தது.

நிழலி சாகரனிடம்  ” இந்த பீலீட்ஸ் ஒழுங்க எடுத்து விடேன் சாகரா ! ” எனவும் சட்டென அவனும் கீழே அமர்ந்து சரி செய்ய, ஏற்கனவே  கோபத்தில் இருந்தவனுக்கு மேலும் தூபம் போட்டது போல இருக்க, பல்லை கடித்தவன் அவர்களை நெருங்கினான்.

“சாகரா, நான் எப்படி இருக்கனு நீ சொல்லவே இல்லையே !” எனக் கேட்டாள், அதற்கு அவனும் அவளது புடவை மடிப்பை சரி செய்த படியே ” நான் வணங்கற அம்பாளை போல இருக்க நிழலி, உன்னை முதன் முதலா புடவையில் பார்த்தும் கையெடுத்து வணங்கனும் தோணுச்சு ” என்றான்.

அவனது பதலில் ஆதர்ஷனின் கால்கள் நின்றன. அவன் முகத்தில் சிறிதும்  நடிப்பு இல்லை,  அவனது பார்வை அவளது கண்களை தவிர வேறெங்கும் செல்ல வில்லை. அவனது கன்னியத்தை கண்டு வியந்தான்.

“அப்படியா அப்போது இந்த அம்பாள் காலில் விழுந்து வணங்கு பக்தா உன்னை ஆசீர்வாதம்  செய்கிறேன் ” என்று அவனை ஆசிர்வதிப்பது போல செய்கை செய்ய, அவளது காதினை திருகியவன், ” கொழுப்பு டி உனக்கு”செல்லமாக கடிந்தவன் மேலும் குனிந்து சரி செய்ய,

ஆதர்ஷனுக்கு சிறு கோபம் எட்டிப்பார்த்தது, அவர்களிடம் வந்தவன் “நிழலி என்னை கூப்பிடுருக்கலாம்ல ஏன் இவனை இதெல்லாம் செய்ய சொல்ற?” என பல்லை கடிக்க,

“முண்டம் உன்னைத்தான் டா முதல்ல கூப்பிட்டேன், உன் போன பாருடா !” என்றதும் தன் போனை பார்த்து

தலையில் கைவைத்தவன் “சாரி, சைலண்ட்ல இருந்ததுல தெரில” என்றவன், “சரி, உன் ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட வேண்டியது தான” என்றான்.

” நீ வரலனு, என் ஃப்ரெண்ட்ஸ தான் கூப்பிட்டேன்,  எங்க போனாளுங்களே தெரியல. சரினு சாகரனை கூப்பிட்டேன் வந்தான். அதான் அவன்கிட்ட ஹெல்ப் கேட்டேன். இப்போ என்ன? இது ஒரு சின்ன உதவி அவ்வளவு தான் !எங்க ரெண்டு பேர்குள்ளையும் எந்த தப்பான எண்ணமும் இல்ல !அண்ட் அவனும் என் ஃப்ரெண்ட் தான் “என்றாள் கோபத்தில்.

“ஐயோ ! நான் அதுக்கு சொல்லல டி வேற யாரும் உங்களை இப்படி பார்த்திட கூடாதுன்னு தான் சொல்லுறேன். உங்க மனசுல தப்பான எண்ணம் இல்ல தான் ஆனா  பார்க்கறவங்க தப்பா நினைப்பாங்க டி, பசங்க கண்ணுல விழுந்தால் போதும் அவ்வளவு தான், நம்ம மூணு பேரும் தான் அடுத்த டாபிக்கே அதுக்கு தான் சொன்னேன்” அவன் நிதர்சனத்தை சொன்னாலும் அவன் எப்படி ‘தன் காதலியின்  புடவையை இவன் தொடுவானா?’ என்ற கோபமும்  அதில் இருந்தது.

“எவன் என்ன பேசினாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்ல, அப்படியே பேசுன்னா அவன் வாயை உடைக்காம விட மாட்டேன்” அவள் எகிற, “அடியே அடாவடி அமைதியா இரு ! கொலை கேஸுல எங்களையும் சேர்த்து உள்ள போக வச்சிடாத ! வா நான் உன் கூட கொஞ்சம்  தனியா பேசணும் “என்றிட, அவனை சந்தேமாக பார்த்தான் சாகரன்.

அதை பார்த்த ஆதர்ஷனோ,

“யோவ் ! அவகிட்ட  பேச தானேன்யா போறேன், கடிச்சி திங்க போறது போல பார்க்கற? உன் பிரண்ட பத்திரமா கொண்டு வந்து உன்கிட்ட சேர்த்திடுவேன் சந்தேகமா பார்க்காத யா ” என சலித்து கொள்ள, சாகரன் தன் பார்வையை மாற்றாமலிருக்க நிழலியோ சிரித்து விட்டாள்.

“சிரிக்காத டி, பாடி கார்ட் மாதிரியே கூடவே இருக்கான். ரொமான்ஸா பேச வரும் போது நிழலினு கூப்பிட்டு கடுப்படிக்கறான். என் பொண்டாட்டி கிட்ட பேச இவன்கிட்ட  பெர்மிஷன் கேட்க வேண்டிய தலையெழுத்து”  என்று அவளை அழைத்துக் கொண்டு போனவன் அவன் காது பட  பேசியே அழைத்து சென்றான்.

“சும்மா இரு டா , அவன் காதுல விழுந்து கஷ்ட பட போறான் ” அவனை அடக்கினாள். ஆதர்ஷன் பேசியது காதில் விழுந்ததை கூட கவனிக்காமல்  ஆதர்ஷன் அவளிடம் தனியாக பேசவேண்டும் என்று சொன்னதையே எண்ணினான். அவளை கூட்டிக் கொண்டு போறவன்,  அவன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அடித்தளம் போட்டுவனோ ‘  என்று பயந்தான்.

ஆதர்ஷன்’ தவறானவன் ‘என்று அவளிடம் சொல்ல முடியவில்லை. எந்த ஆதரமின்றி அவனை பற்றி சொன்னால் அவள் எவ்வாறு நம்புவாள். அவனும் இதுவரை அவளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை தான் இருந்தாலும் அதே காரணம் காட்டி கண்டிப்பாக பரிதாமாக பேசி அவளது நம்பிக்கை மேலும் கூட்டுவான், அதே நேரம் தன்னை பற்றி அவள் தவறாக நினைக்கவும் செய்திடுவான்,

எப்படியாவது நிழலியை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் ஆனால் ‘எப்படி என்று ?’ என்றுவழி தெரியாமல் யோசித்தவன் நேராக ரெஸ்ட் ரூமில் நுழைய, அவனை பின் தொடர்ந்தனர் அனியும் ராக்கியும்.

தன் முகத்தை கழுவிக் கொண்டிருந்தவனின் பின்னே வந்து நின்றனர் இருவரும். அவர்களை கண்ணாடி வழியே பார்த்தவன் திரும்ப, அவனை கண்டு சிரித்த படியே நெருங்கினார்கள்.

” உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்? ஏன் என் வழியை மறைச்சிண்டு நிக்கிறேள். வழி விடுங்கோ நான் போகனும்” என்றவனை கண்டு நகைத்தவர்கள், “நீ கூட தான் எங்க வழிய மறைச்சிட்டு  நிக்கற ? எங்க வழில வர்றாம இருந்திருந்தா நாங்க ஏன் உன் வழியில வர போறோம் சாகரா !”என  இதழை வளைத்து ஏளனமாக சிரித்தனர்.

“என்ன பேசுறேள் நான் எப்போ உங்க வழில வந்தேன்? உங்க சாவகாசமே வேணாம்னு ஒதுங்கி தான நிக்கறேன், ஏன் என் தொல்லை பண்றேள்?”

“அப்படித்தான் நாங்களும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால், நீ அப்படி நடக்கலையே ! அந்தா பூஜா கிட்ட என்னை பத்தி ஏதோ சொல்லி அவளை என் கிட்ட பேச விடாம பண்ணிட்டேல. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை சாகரா ?அதான் உனக்கு நிழலி இருக்காளே ஆதர்ஷன் இல்லேன்னா நீன்னு அவளும் குஜாலா இருக்கா, நீயும் இன்னொருத்தவன் லவ்வரு தெரிஞ்சும் அவன் கூட கூத்து அடிச்சிட்டு தான இருக்க ! அப்படியே இருக்க வேண்டியது தான, எதுக்கு டா எங்க வழில வர? இல்ல அந்த பூஜா மேலையும் ஆசை வந்திருச்சா என்ன?” என அவன் பேசிக் கொண்டே போக, கோபம் கொண்டவன்,

அவன் சட்டையை பிடித்து தாக்க ஆரம்பிக்க, இருவரும் சண்டையிட்டு புரள ஆரம்பித்தனர்.

ராக்கி, அழைக்க அனியின் நண்பர்கள் உள்ளே நுழைந்தனர். சாகரனை  நால்வரும் பிடித்துக் கொள்ள, அவரது பிடியில் திமிறிய படி நின்றான்.

“மச்சி பார்க்கத் தான் டா ஒல்லியா , இருக்கான் ஆனா அடி …ப்பா ! பருப்பு சாதத்துக்கும் பவர் இருக்கும்மா டா !” எனக் கேட்டுக் கொண்டே தன் வாயில் வழியும் ரத்தத்தை துடைத்தான்.

“ரொம்ப அடியா மச்சி !”என அக்கறையாக வினவ, “மூதேவி அடிக்கும் போது என்னடா பண்ண? பன்னி பரதேசி !” எனத் திட்டியவன் சாகரனை நோக்கி வந்தான்.

“பூஜா கிட்ட  என்னத்த சொல்லி டா ! எங்கிட்ட பேச கூடாது சொன்ன?”

“உண்மை சொன்னேன். பெண்கள் மேல நீங்க வச்சிண்டு இருக்கற கேவலமான எண்ணத்தை சொன்னேன்… பெண்களை எல்லாம் சதையா பார்க்க உங்க பார்வை பத்தி சொன்னேன், அவாளை தவறான வழியில அடைய நினைக்கற உங்க எண்ணத்தை சொன்னேன் !” என்று சீறினான்.

“ஏன் மச்சி அந்த அளவுக்கு நாம மோசமான ஆளா என்ன?”என அனி ராக்கியை பார்த்து கேட்க, “நாம அப்படியெல்லாம் இல்ல மச்சி, ஏதோ நமக்கு பிடிச்ச பெண்ணை அனுபவிக்க நினைக்கறோம் அதுல என்ன தப்பு  இருக்கு ? இந்த நாட்ல பிடிச்ச விஷயத்தை செய்ய கூட  உரிமையில்லையா மச்சி ? ” பாவம் போல சொல்ல,

“அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி”என்று முகத்தை கொஞ்ச,

சாகரனோ முகத்தை சுளித்தவன், “பொண்ணுங்க வாழ்க்கைய அழிக்க நினைக்கற நீங்க எல்லா நல்லாவே இருக்க மாட்டேள். பொண்ண தொட்டவா எல்லாம் அழிவை தான் சந்திச்கிருக்கா, அதை மறந்திடாதேள் உங்களுக்கு ஒரு பேரழிவு  காதிண்டு இருக்கு !” என அவன் ஆவேசமாக பேச,

“என்னடா இவன் மகா பாரதத்துல வரது போல வசனம் பேசுறான். ச்ச” என்று சலித்தவன், அருகில் இருந்தவனிடம் புடவையை வாங்கியவன்.

“நீ சொன்னது போல எங்களுக்கு பேரழிவு வரட்டும் அதுக்கு முன்ன நாங்க பண்ண வேண்டியது பண்ணிடுறோம் “என்றவன் அவனது சட்டையை கழட்டினான்.

“விடுங்கோ டா” என்று துள்ளினான். “என்ன சாகரா, பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற நீ ஏன் ஒரு பொண்ணா மாற கூடாது? உன்னை பொண்ணா பார்க்கணும் எனக்கு ரொம்ப நாள் ஆசை  ! அதான் இன்னைக்கு அந்த ஆசைய நிறைவேத்திக்க போறோம்… எல்லாருக்கும் நீ ஹீரோவா இருக்கேல இனக்கு ஹீரோயினா இரு !”என்று அவனது வேட்டியை கழட்டினான்.

நால்வர் பிடியில் இருந்தவனால் எதுவும் செய்ய முடிய வில்லை, கண்களில் நீர் ததும்பியது. வேட்டியை கழட்டுயதும் கூனி குறுகினான்.

சரியாக இங்க இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.

“நிழலி நாம ரெண்டு  பேர் மட்டும் தனியா வெளிய போலாமா ஒரு டூ டேஸ்க்கு !!” என்றவன் கேட்க, நிழலியோ அவனது கண்களை மட்டுமே கூர்ந்து பார்த்திருந்தாள் பதில் கூறாது. அவனோ உள்ளுக்குள் எழுந்த பதற்றத்தையும் பயத்தையும் வெளியே மறைக்க கஷ்டப்பட்டு கொண்டே கேட்டு வைத்தான் அந்தக் கேள்வியை.

“என்னடி அப்படி பார்க்கற? நான் என்ன கேட்டுட்டேன் இப்படி போலீஸ் அக்கியூஸ்ட் பார்க்கறத போல பார்க்கற” சலிப்பாக கேட்டான்.

“இல்லே இதென்னா புதுசா இருக்கு? இப்படி நீ கேக்க மாட்டியே அதான் என்னவா இருக்கும் யோசிக்கிறேன்!” என்றாள்.

“என்ன சந்தேகப்படுறீயா நிழு !” என தாடையை இறுக்கினான். “சந்தேகப்படல, இருந்தாலும் ஒரு பொண்ணா  என் சேப்டியா பார்க்கணும் என்  பேரண்ட்ஸ் என்ன சொல்லுவாங்கன்னு எல்லாத்தையும் யோசிக்கறேன் உன்னை போல சட்டுனு என்னால முடிவுக்கு எடுக்க முடியாது  எனக்கு டைம் வேணும்” என்றாள்.

‘முடியாது என்று சொல்லாமல்  யோசிக்கணும் சொன்னதே அவனுக்கு பாதி நம்பிக்கை வந்துவிட்டது தன்னோடு வருவாள் என்று’

ஆனால், அவளோ யோசிக்கவே எத்தனை ஆண்டுகள்  எடுக்க போகிறாள் என்று அறியாமல் போகும் அந்த முட்டாளை நினைத்து சிரித்தது விதி,

 “ஒ.கே நிழலி எவ்வளவு டைம் வேணா எடுத்துக்கோ ! பட் பாசிட்டிவ் பதிலா சொல்லு “என்றான்.

“ம்ம்” கொட்டியவள் அமைதியாக இருக்க, அதற்குள் ஒருவன் ஓடி வந்து “அக்கா, சாகரன் அண்ணாவ, அனி அண்ணாவும் ராக்கி அண்ணாவும்  டீஸ் பண்ணிட்டு இருக்காங்க” என்றதும் ஆதர்ஷனை பொருட்படுத்தாது   ஓடிச்சென்றாள். பாய்ஸ் ரெஸ்ட்ரூம் என்று பாராமல்  உள்ளே நுழைய சாகரனுக்கு  சேலை கட்ட விட முயன்று கொண்டிருந்த அனியை அங்கே கிடந்த விளக்கமாரை எடுத்து அவன் முதுகில் சாத்தினாள்.

இருவரையும் சாத்தி எடுக்க, அனியின் நண்பர்கள் அவளை தடுக்க, அதற்குள் அங்கே அவளது வகுப்பு தோழர்கள் அவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.

“ச்சீ, *** பசங்களா, ஆம்பளைய இருந்தா அவனை எதிர்த்து நின்னு புடவைய கட்ட முயற்சி பண்ணுங்கடா. அவன் கையை பிடிச்சிட்டு கட்டிவிட நினைக்கற நீ எல்லாம் ஆம்பள? அன்னைக்கே உன்னை வார்ன் பண்ணேன்  என் சாகரனோட வழியில வராதீங்க, அவனை வம்பிழுக்க நினைக்காதீங்கனு.  பொறுக்கி நாய்களா !!!ச்சீ நீங்க இத கட்டிக்கங்க டா” அவர்கள் இருவரின் முகத்தில் புடவையை  தூக்கி வீசியவள், சாகரனை அழைத்து கொண்டு பிரின்சிபாலிடம் சென்றாள்.

அவரிடம் அனைத்தையும் கூற, அவரோ பயந்தார், “இதை பெருசு  பண்ணாத நிழலி, கல்லூரி பேர் தான் கெடும். அவங்க ரெண்டு பேர் பணக்கார வீட்டு பசங்க போலீஸ்கிட்ட போனாலும் கேஸ் எடுப்படாது மா. இதை இப்படியே விட்டுறலாம்”என அவர்  கெஞ்ச, அவரை துச்சமாக பார்த்தவள், மேலும்  பேச வர, அவளை தடுத்தவன் வெளியே அழைத்து வந்தான்.

“விடு நிழலி ! இந்தப் பணம், பயம் இருக்கற வரைக்கும் அவாளையும் ஒன்னும் பண்ண முடியாது.  இவாளாலையும் ஒன்னும் பண்ண முடியாது . எங்களை போல உள்ளவாக்கெல்லாம்  நியாயம் கிடைக்காது அதுவும் இவா கிட்ட கிடைக்காது ! நான் போறேன்” என உடைந்து போயிருந்தவனின் குரலும் அவ்வாறே இருந்தது.

தலையை தொங்க போட்டு படியே நடந்தான் பாதை எதுவும் அறியாமலே தன் கால்  போன போக்கில் உணர்வற்ற ஜடம் போல  செல்ல, அவனை பார்க்க  உள்ளுக்குள். ‘ எங்கே அவமானத்தில் எதையாவது செய்து கொள்வானோ ‘ என்று பயமெழ வேகமாக அவன் பின்னே சென்றவள், அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்தாள்.

முதலில் மறுத்துவன்,  பின் அமைதியாக அவள் பின்னே சென்றான்.  வீட்டில் யாருமில்லை அனைவரும் வெளியே சென்றிருந்தனர். அவனிடம்  தண்ணீரை நீட்டினாள். அவனோ எங்கோ வெறித்தான், அவன் கையை பற்றி அதில் திணித்தாலும் உணர்ச்சிகள் இல்லாமல் இருந்தான்.

“சாகரா , இப்படி இருக்காத டா ! ஏன் டா இப்படி இருக்க?  மனசுகுள்ள எதையும்

வச்சுக்காம, வெளியே கொட்டிடுடா இப்படி இருக்காத சாகரா !”அவனை உலுக்கவே  வாய்விட்டு கதற ஆரம்பித்தான்.

“நான் என்ன தப்பு செய்தேன்  நிழலி? ரொம்ப அசிங்கமா உணர்றேன் ! என்னை நினைச்ச எனக்கே எம்பாரிசிங்க இருக்கு !” கிளாஸை போட்டு உடைத்தவன் கோபத்தில் கத்த, அவனை அமைதி படுத்த, அவனை இழுத்து தன்னை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

அவளை இறுக அணைத்து அழுதவன், சட்டென தீயை தொட்டது போல விலகினான்.” நான் கிளம்புறேன் நிழலி !” அவளை பாராமல் கூறி சென்றவனை கரம் பற்றி தடுத்தவள்,

“ஏன் நீ மட்டும் தான் எனக்கு அப்பாவா இருப்பீயா ? நான் உனக்கு அம்மாவா  இருக்க  கூடாதா !! எனக்கு இப்படி நடந்தால் என்னை தேற்ற மாட்டியா? என்னை அணைச்சுக்க மாட்டியா? அதை தான நானும் பண்ணினேன். அம்மாவா நினைச்சு அணைச்சுக்க தப்பில்ல ” எனக் கூறக் கேட்ட, மாத்திரித்தில் அவளை அணைத்துக் கொண்டு அழுதான். அவனுக்கு அந்த சூழலில் அணைப்பு தேவையாக தான் இருந்தது. அவனை மடியில் போட்டு தலையை கோதினாள்,

“நீ இல்லேன்னா எல்லார் முன்னாடியும் ஆசிங்க பட்டிருப்பேன் டி. அவா என்னை கேவலமா ட்ரீட் பண்ணினது என் உடம்புல ஏதோ ஊர்றது போல இருக்கு  !என்னை என்னாலே காப்பத்திக்க முடியலன்ற எண்ணமே என்னை கொல்லுது நிழலி !” என அவள் மடியில் கண்ணீர் சிந்த,

 ” சாகரன் முட்டாள் தனமா யோசிக்காத, அந்த  நேரத்துல அவங்க பிடியில் இருந்த உன்னால் என்ன செய்திருக்க முடியும்?  உன் பலம் தெரிஞ்சு தான் ஆட்களை கூட்டிட்டு வந்திருக்கான். நீ எதையும் போட்டு குழப்பிக்காத. அவனுங்கள எப்படி பழிவாங்கனும் எனக்கு தெரியும். ப்ரின்சியே அவனுங்க ரெண்டு பேரையும்  காலேஜ் விட்டு வெளியேத்த வைக்கிறேன்.  நீ அமைதியா ரெஸ்ட் எடு  ! “என்றாள்.நேரம் கழித்து எழுந்தவன், “நான் வீட்டுக்கு போறேன் நிழலி” என்று முகம் தெளிந்தே வீட்டிற்கு போனான்.

மறுநாள் கல்லூரியில் நடந்த களேபரம் எதுவும் அறியாமல் வீட்டில் இருந்து கொண்டான் சாகரன். அனியும் ராக்கியும்  கல்லூரில் இருந்தால் எங்களுக்கு தான் கெட்டப்பெயர் என்று அவர்கள் இருவருக்கும் டி.சி குடுத்து அனுப்பி விட்டார் கல்லூரியின் முதல்வர், அனுப்ப வைத்து விட்டாள் நிழலி.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. தனது நண்பர்களின் கேவலமான செய்கைகள், பார்வைகள், பேச்சுக்கள் அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டுள்ளான் ஆதர்ஷ்.

    நாம் தவறிழைக்காமல் இருப்பது எத்தனை முக்கியமோ அதனினும் முக்கியம் நம்மை சுற்றி இருப்போரும் தவறிழைக்காமல் பார்த்துக்கொள்வது. தவறானவர்கள் என்றால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது.

    ஆதர்ஷ் நிழலியை பற்றி அவன் நண்பர்கள் பேசிய கொச்சை பேச்சுகளுக்கு வினைபுரியவில்லை. ஆனால், இயல்பாகவே சாகரன் மீதான பொறாமையில் அவன் நட்பாய் பழகுவதில் கோபம் கொள்கின்றான்.

    சாகரனையும் அவனது நண்பர்கள் போல என்று நினைத்து கொண்டான் போல.

    தீய நண்பர்களுடன் நட்பை தொடருபவனை நிழலி எவ்வாறு நம்பினாலோ? தன்னையே கொடுக்கும் அளவு!

  2. நிழலி சூப்பர் மா .. தப்பை தட்டி கேட்கிற .. அழகா நட்போட எல்லை தெரிஞ்சு பழகுற .. ஆனா இந்த ஆதர்ஷன் கிட்ட தெரியாம மாட்டிகிட்ட .. அவன் உண்மையிலேயே லூசு தான் இந்த மாதிரி கேவலமான ஃப்ரெண்ட்ஸ் கூட போய் பழகுவானா ..