Loading

வாசுவின் கேரளாவிற்கு சுற்றுலா வர அங்கு வீட்டில் சமைக்க வருபவரின் வற்புறுத்தலின் படி திருவிழாவுக்கு கோவிலுக்கு வந்த வாசு அங்கு சைந்தவியை எதிர்பாராமல் பார்த்தவன் அவள் வீட்டிற்கு செல்வதை பார்த்து அவள் பின்னால் சென்றான்அவனை யாரும் தடுக்கவும் இல்லை

கவினின் நண்பனிடம் ஏற்கனவே கூறி இருந்தனர்அவனும் கவினிடம் எதுவும் கூறாமல் அனைவரும் இங்கு வாருங்கள் என்று கூறினான்…. அவனிடம் பத்து மணி மேல் தான் கூறினான்…. அவர்களும் மாலை ஆறு மணிக்குள் வந்து விட்டனர்கவினின் நண்பன் அவர்களை எல்லாம் ஊர் மக்கள் உதவியுடன் கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டான்அவர்கள் வந்தது வாசுவிற்கே தெரியாது….

தற்போது சைந்தவி மனது பாரமாக இருப்பதால் நாற்காலியில் அமர்ந்து எதையோ வெறித்து கொண்டு இருந்தவள் தன் மடியில் பாரமாக இருப்பதாய் போல் உணர்ந்து குனிந்து பார்த்தாள்சத்தியமாக அவள் அங்கு வாசுவை எதிர்பார்க்கவே இல்லை

மாமாஎன்று அவளுக்கே கேட்காத குரலில் அவள் அழைத்தாள்ஆனால் அவனுக்கு கேட்டதே அவளின் குரலை இரண்டு வருடங்கள் கழித்து கேட்கிறானே அந்த குரலே அவனை கலங்கடித்ததுசைந்தவி அவள் மடியில் ஈரத்தை உணர்ந்தவள் அவன் அழுகிறான் என்று உணர்ந்தாள்அவன் அழுவதை பார்த்து பதறியவள்மாமாஎன்று அவனை தன்னிடம் இருந்து பிரிக்க பார்த்தாள்ஆனால் இன்னும் இன்னும் அவளுடன் ஒன்றினான்

அவளும் அவனை எழுப்பாமல் அவனின் தலையை கோதினாள்சிறிது நேரம் கழித்து அவனை தன்னிடம் இருந்து பிரித்தாள்…. ஆனால் அவனை நிமிர்த்த கூட முடியவில்லைஅவள் எழுப்ப எழுப்ப அவன் மேலும் மேலும் அவளிடம் ஒன்றினான்

அவளால் அழுகையை அடக்க முடியவில்லைஅவன் மீதே சாய்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள்அவளின் அழுகைக்கு பின் தான் தன்னிலை மீண்ட வாசு அம்மு என்று அவளை அழைத்தான்நாற்காலியில் இருந்து தலையில் அமர்ந்தவள் அவனை அணைத்து கொண்டே இத்தனை நாள் அடக்கி வைத்து இருந்த பாரத்தை அவனிடம் கொட்டினாள்

அவனால் அதை கேட்கவே முடியவில்லை… “அம்மு இங்க பாரு அம்முஅழுகாத என்னால நீ அழறதை கேட்க முடியல அம்முஇங்க ரொம்ப வலிக்குது அம்முப்ளீஸ் அழுகாத அம்முஎன்று அவளில் கண்ணீரை துடைத்து விட்டான்

அவள் தன்னவன் தன் கண்ணீரில் கலங்குகிறான் என அறிந்து மெல்ல மெல்ல தன் அழுகையை துடைத்தாள்இருவரும் தங்கள் பிரிவை அணைப்பின் மூலம் தீர்த்து கொண்டனர்சைந்தவி தான் செய்தததுக்கு விளக்கம் சொல்ல வரஅம்மு வேண்டாம்நீ எனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்என்கிட்ட கூட நீ மன்னிப்பு கேட்க கூடாதுநீ எந்த காரணத்துக்காக என்னை விட்டு வந்தியோ அது உண்மையே இல்லை அம்முஉனக்கு எந்த குறையும் இல்ல அம்மு…” என்று கூறியவன்இனிமே எந்த பிரச்சனை சண்டை வந்தாலும் என்னை விட்டு போகாத அம்முரொம்ப வலிக்குதுநீ இல்லாம நான் நானாவே இல்லை…” என்று கூறியவன் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்

அவன் கூறியதை கேட்டுமாமா என்னால குழந்தை பெத்துக்க முடியுமாஇல்லை நான் சமாதானம் ஆகணும்னு பொய் சொல்றியா..”. என்று கேட்டாள்..

இல்லை அம்மு உண்மை தான்என்று அவளுக்கு தேவையானவற்றை மட்டும் கூறினான்

அவன் கூறியதை ஏற்று கொண்டவள் அப்போது தான் அவன் முகத்தில் இருக்கும் தாடி.. அவனின் கண்ணில் கீழ் இருக்கும் கரு வளையம்அவன் கண்கள் அவள் கிடைத்த சந்தோசம் இருந்தாலும் அவன் முகம் இன்னும் இறுக்கமாக தான் இருந்தது….

அவள் அவன் முகத்தை தடவிஇந்த தாடி இந்த இறுக்கம் எல்லாம் என்னால தானு மாமாஉன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ரொம்ப சா(ரி)….” என்று அவள் மன்னிப்பை கேட்பதற்குள் அவளின் வார்த்தையை தன்னக்குள் வாங்கி இருந்தான்

சிறிது நேரத்தில் விட்டவன்அம்மு வெளிய போலாமாநீ இங்க எப்படி வந்தஎன்று கேட்டான்

அவளுக்கு அப்போது தான் குருவின் ஞாபகம் வந்தது… “ச்சோ மாமா அப்பாஅப்பாவை மறந்துட்டேன்…. திருவிழா எல்லாரும் இருப்பாங்கநீங்க எப்படி இங்க..” என்று கேட்டாள்

அவள் கேள்வியை தவிர்த்துஅம்மு அப்பாவா…” என்று குழப்பமாக கேட்டான்…. வேறு யாரையோ அப்பா என்று அழைக்கிறாள் என்று தான் நினைத்தான்அவன் அவளின் அப்பாவை பற்றி யோசிக்கவே இல்லை….

மாமா ஒரு ரெண்டு நிமிஷம் அப்பா மாத்திரை போடனும் நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று மாத்திரையை எடுத்து கொண்டு வெளியேற பார்த்தவளை தடுத்தவன் தானும் வருவதாய் கூறினான்அவளும் சரி என்று கூறி அழைத்து சென்றாள்….

அனைவரும் கோவிலில் தான் இருந்தனர்கவினின் நண்பன் அனைவரையும் குருவிடம் அறிமுகப்படுத்தினான்குருவை இளா அம்மா மட்டும் தான் பார்த்து உள்ளார் அதுவும் ஒரு தடவை தான் பார்த்துள்ளார்அவருக்கு அவரை அடையாளம் தெரியவில்லைஆனால் கொஞ்சம் சைந்தவியின் முக ஜாடைபார்த்ததும் அவருக்கு சிறு சந்தேகம் எழுந்தது….

இருந்தும் உண்மை தெரியாமல் எதுவும் பேச கூடாது என அமைதியாகி விட்டார்அந்த ஊர் தலைவர் தான் பேச ஆரம்பித்தார்தங்களிடம் அவள் எவ்வாறு வந்தால் என கூறி இங்கு வந்ததில் இருந்து அவள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததையும் கூறினார்

அதற்குள் சைந்தவி அங்கு வந்தவள் யாரையும் கவனிக்கவில்லை நேராக குருவிடம் சென்றவள் அப்பா மாத்திரை சாப்பிட்டீங்களாமுதல் சாப்பிடுங்க என்று கூறியவள் அப்போது தான் அனைவரையும் பார்த்தாள்இளா அம்மாவை பார்த்து அத்தம்மா என்று கூறி கொண்டு போனவள் அங்கிருக்கும் கல் தடுக்கி கீழே விழ பார்த்தாள்அதை பார்த்த இளா அம்மா தானே முன்னால் வந்து அவளை தாங்கி இருந்தார்அவளின் நெற்றியில் முத்தமிட்டவர் தன் பிரிவை அந்த ஒற்றை முத்தத்தில் காட்டி இருந்தார்

நடந்ததை பற்றி யாரும் எதுவும் பேசவில்லைஅனைவரும் சைந்தவியை கொஞ்சம் கடிந்து அவளை கொஞ்சிவிட்டு செல்ல திவ்யா மட்டும் எதுவும் பேசாமல் குழந்தையையும் அவளிடம் காட்டாமல் அவள் அருகில் வரும் போது தள்ளி சென்றுவிட்டாள்அனைவருக்கும் திவ்யாவின் கோவம் தவறாக தெரியவில்லைவாசு கோவம் என்னும் முகமூடி அணிந்து தன் சோகத்தை வெளிப்படுத்தி இருந்தான்ஆனால் திவ்யா அவள் விட்டு சென்றதை ஏற்று கொள்ளவே முடியவில்லைஅவளை கண்டதும் அவளின் கோவம் வெளியே வந்து இருந்தது

குருவின் வீடு சிறிய வீடாக இருப்பதால் அங்கு நிறைய பேர் தங்க முடியவில்லை…. எனவே தலைவர் வீட்டிலும் வேறு இருவர் வீட்டிலும் தங்கினர்அங்கிருதோர் அவர்களை எந்த முக சுழிப்பும் இன்றி பார்த்து கொண்டனர்

குரு சைந்தவி தங்கி வீட்டிற்கு வாசு மற்றும் சைந்தவி சென்றனர்கதவை அடைத்த சைந்தவிக்கு நீண்ட நாள் கழித்து அவனுடன் தனியாக இருக்க கூச்சமாக இருந்ததுமுதலில் அதை கவனிக்காதவன் பிறகு அதை கவனித்துஅம்மு என்னை பார்த்தா பயமா இருக்காஎன்று கேட்டான்அவள் இல்லை என தலையாட்டஅப்புறம் ஏன் அம்மு என் முகத்தை பாக்க மாட்டிங்குறஎன்று கேட்டான்அவள் எதுவும் கூறாமல் படுக்கையை கீழே விரித்து போட்டவள்மாமா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. இங்க கட்டில் எல்லாம் இல்லைபாயில தான் படுக்கனும்எனக்காக அட்ஜஸ்ட் பண்ணுங்க…” என்று கொஞ்சம் கெஞ்சலாக கூறினாள்..

அம்மு அது எல்லாம் பிரச்சனை இல்லைஎன்னை ஏன் பாக்க மாட்டிங்குற.. என் மேல எதோ கோவமா என்று கேட்டாள்

ஐயோ மாமா கோவம் எல்லாம் இல்லைகொஞ்சம் கூச்சமா இருக்குஅது தான்.. நீங்க தூங்குங்கநான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என்று கூறி அங்கிருக்கும் தடுப்புக்கு பின் சென்றவள் நைட்டி அணிந்து கொண்டு வந்தவள் அவன் அருகில் படுத்தாள்அவன் அவளை நெருங்கி படுத்தவன் அவளின் மார்பில் தலை சாய்ந்து உறங்க ஆரம்பித்துவிட்டான்

அவளும் நீண்ட நாள் கழித்து நிம்மதியாக தன்னவன் அருகாமையில் உறங்க ஆரம்பித்தாள்

(அப்டியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சிஇன்னும் ரெண்டு மூணு எபில கதை முடிஞ்சிடும் பிரெண்ட்ஸ்சைலன்ட் ரீடர்ஸ் அப்டியே உங்க கருத்தையும் சொல்லிட்டு போனா ஹாப்பி)

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்