Loading

 

சைந்தவி இருக்கும் மலை கிராமம் ஐம்பது அறுவது மக்களை கொண்ட சிறிய கிராமம் தான்…. அவள் இங்கு வரும் போது அவளின் அப்பாவை காண்போம் என என்னவே இல்லை… கல்லூரியில் இருந்து கிளம்பியவள் முன் பக்கம் செல்லாமல் பின் பக்கம் வழியாக சென்று அங்கிருக்கும் கோவிலுக்கு தான் சென்றாள்… அங்கு சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் வழியில் இருக்கும் சிசிடிவியில் தெரியாமல் மறைந்து மறைந்து டவுன் பஸ் ஏறியவள் பஸ் மாறி மாறி திருச்சிக்கு வடக்கு பக்கம் இருக்கும் சேலத்திற்கு சென்றவள் அங்கு இருந்து கோவை சென்றாள்.. அங்கிருந்து கேரளா செல்லும் பஸ்சில் ஏறினாள்..

அந்த பஸ்சில் தான் குரு இரண்டு மூன்று மலைவாழ் குழந்தைகளுடன் இருந்தார்… அவளும் அவரை காணவில்லை… அவரும் காணவில்லை…

காலை உண்டவள் தான்… அதன்பின் உண்ணவே இல்லை…. தற்போது மணி ஆறுக்கு மேலாகி விட்டது…. திடீரென அவள் மயங்கி கீழே விழ பார்த்தாள்… அந்த பஸ்சில் ஒரு பத்து பேர் தான் இருந்தனர்… அதை பக்கத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணி பார்த்து அவளை தாங்கி பிடித்தார்… அங்கிருந்த அனைவரும் அவளுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப முயற்சிக்க அவளால் கண்ணை திறக்கவே முடியவில்லை… அவர்கள் குடும்பத்திற்கு அழைத்து சொல்லலாம் என அவள் கொண்டு வந்த பையில் தேட அங்கு ஒரு சில போட்டோ மட்டும் தான் இருந்தது…

அந்த போட்டோவை குருவுடன் வந்த குழந்தைகள் பார்த்து குருவை அழைத்து காட்டினர்…. அது குரு சைந்தவியை தூக்கி கொண்டு இருக்கும் போட்டோ…. அது எப்போதும் அவளுடன் இருக்கும் போட்டோ… வசந்திக்கு தெரியாமல் வைத்து இருந்த போட்டோ… அந்த போட்டோ குருவிடமும் ஒன்று உள்ளது… அவர் இருக்கும் வீட்டில் அந்த போட்டோ பெரிதாக பிரேம் போட்டு மாட்டப்பட்டு உள்ளது… அதனால் அனைவருக்கும் அந்த போட்டோவை நன்றாக தெரியும்…

அவருக்கு அவளை அடையாளம் தெரியவில்லை… அந்த போட்டோவை பார்த்து அவருக்கு கண்கள் பணித்துவிட்டது..

அந்த குழந்தைகளில் கொஞ்சம் பெரிய பெண் அவரிடம் “ஐயா இந்த போட்டோ தானு உங்க வீட்டுல இருக்கு….” என்று கேட்டாள்…

அவரும் ஆம் என தலையசைத்து அவள் அருகில் சென்றார்…. அவளுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை…. அந்த பஸ்சில் அவர் தினமும் சென்று வருவதால் அனைவருக்கும் அவர் பரிச்சயம்… அவள் கண் விழிக்கவே இல்லை…. அங்கிருக்கும் பெண்மணி அவளை தன் மீது சாய்த்து அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்பின் அவளுக்கு கொஞ்சம் கை கால் எல்லாம் தேய்த்து விட்டு மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்

அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்தாள் சைந்தவிமுதலில் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லைபின் சிறிது நேரம் கழித்து தான் வீட்டில் இருந்து வெளியில் வந்தது மயங்கியது என அனைத்தும் ஞாபகம் வந்தது….

பதட்டமாக அனைவரையும் பார்த்தவள் தன்னையே பார்த்து கொண்டு இருக்கும் குருவை பார்த்து அதிர்ச்சியாகி விட்டாள்அவளுக்கு பார்த்ததும் அது அவளின் அப்பா என தெரிந்துவிட்டதுசிறு வயதில் அவரை எப்படி பார்த்தாளோ அதே போல் தான் இருந்தார்கொஞ்சம் முடி எல்லாம் வெளுத்து இருந்தது…. மற்றபடி முக அமைப்பு எல்லாம் மாறவில்லை….

அவரை பார்த்து கல்கியவாறேஅப்பா….” என்று மெதுவாக அழைக்க அவர் வேகமாக வந்து “சவி குட்டி நீ எப்படி இங்க டாஉன் முகம் என்ன ஆச்சுடா…” என்று பரிதவிப்புடன் கேட்டார்

அவள் கொஞ்சம் தயக்கத்துடன் சுற்றி இருந்தவர்களை பார்க்க அங்கு இருந்த வயதான பெண்மணி ஐயாபாப்பா ரொம்ப சோர்வா இருக்காங்கநீங்க வீட்டுக்கு போய் சாப்பிட வெச்சு கேட்டு பாருங்கஎன்று கூறினார்அவரும் சரி என்று கூறினார்அடுத்த இரண்டு நிமிடத்தில் இறங்க வேண்டிய இடம் வர அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறி தான் அழைத்து வந்த குழந்தைகளுடனும் சைந்தவியுடனும் இறங்கினார்பஸ்சில் இருந்து இறங்கி அரை மணி நேரம் நடக்க வேண்டும்அவள் மிகவும் சோர்வாக தெரிய அங்கு இருந்த சிறிய டீ கடையில் அவளுக்கு டீ வாங்கி கொடுத்தார்

இரவானதால் அங்கு சாப்பிட எதுவுமில்லைஎனவே வீட்டிற்கு சென்று தான் உணவு சமைக்க வேண்டும்…. அதனால் அவள் டீ குடித்தவுடன் அவர்களை அழைத்து கொண்டு மலை கிராமம் நோக்கி சென்றார்அரை மணி நேரத்தில் அங்கு சென்று அடைய ஊர் மக்கள் புதுசாக இருக்கும் சைந்தவியை புரியாமல் பார்த்தனர்

குரு அவர்களிடம் என் பொண்ணு தான்என்னனு தெளிவா அப்புறம் சொல்றேன் என்று கூறி சைந்தவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்அவர் சென்றதும் அங்கிருந்த குழந்தைகள் தங்களுக்கு தெரிந்தவற்றை அங்கிருந்தவர்களிடம் கூறினர்.. அவர்களும் குருவே அனைத்தும் கூறுவார் என நினைத்து தங்கள் வீட்டிற்கு சென்றனர்

அந்த கிராமத்திலும் தலைவர் ஒருவர் உள்ளார்…. அவர் வீட்டில் இருந்து இருவருக்கும் உணவு சென்றதுஅவரும் மறுக்கவில்லை வாங்கி வைத்து கொண்டார்முதலில் அவளை முகம் கழுவி வர கூறினார்அவளும் முகம் கழுவி விட்டு வர அவரும் தன்னை சுத்தம் செய்து கொண்டு வர இருவரும் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்நீண்ட வருடங்கள் கழித்து தன் மகளுக்கு தன் கையால் உணவை ஊட்டிவிட்டார்….

அவளுக்கு கண் எல்லாம் கலங்கிவிட்டது…. இருவரும் உணவை உண்டு விட்டு ஒரு இடத்தில அமர்ந்தனர்…. அவள் அமைதியாகவே இருக்கசொல்லு சவி குட்டி நீ இப்படி இங்கவீட்டை விட்டு ஏன்டா வந்த…” என்று கேட்டு கொண்டு இருந்தவர் அப்போது தான் அவள் கழுத்தில் இருக்கும் தாலி உச்சியில் குங்குமம் காலில் மெட்டி என அனைத்தையும் கவனித்தார்

தொடர்ந்துஉனக்கு கல்யாணம் ஆகிடுச்சா சவி குட்டிஅவங்க வீட்டுல உன்னை கொடுமை செஞ்சாங்களா அது தான் வீட்டை விட்டு வெளிய வந்துட்டியா எதோ சொல்லுடா அப்பாவுக்கு பயமா இருக்குஎன்று கண் கலங்க கேட்டார்

அப்பா நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் இல்லைஎன்னை என் புகுந்த வீட்டுல ராணி மாதிரி இருந்தேன்.. என்று கூறியவள் குரு சென்றதில் இருந்து நடந்ததை அனைத்தும் கூறி முடித்தாள்

அவள் கூற கூற இடிந்து போய் விட்டார் குருதான் இருந்தால் தான் வசந்தி கோவமாக இருக்கிறார்.. தான் பிரிந்து போய் விட்டால் சரியாகி விடுவார் என நினைத்து தான் விலகி வந்தார்ஆனால் தான் பிரிந்து வந்த பின்னரும் தன் செல்ல மகளை வருத்தி உள்ளார் அதுவும் பெற்ற மகளிடமே உன் கணவனுக்கு வேறு திருமணம் செய் கூறும் அளவுக்கு மோசமாவர் என்று அவர் கனவினிலும் நினைக்கவில்லை

அவர் கலங்கியவாறேநான் உன்கூட இருந்து சவி குட்டிஇல்லனா உன்னை என்கூடவே கூட்டிட்டு வந்து இருக்கனும்நான் தப்பு பண்ணிட்டேன்என் தப்பு தான்என்று கூறு தன் தலையிலேயே கொஞ்சம் வேகமாக தட்டி கொண்டார்பின் அவரே சவி குட்டி அது தான் உன் புகுந்த வீடு உன்னை குழந்தை மாதிரி பாத்துக்குறாங்களேஅப்பறம் ஏன்டா அங்க இருந்து வந்தஇப்போ எவளோ டெக்னாலஜி வந்து இருக்குகொஞ்சம் வருஷம் ஆனாலும் குழந்தை பிறக்கும் டாவா நாளைக்கே அங்க போகலாம்என்று கூறினார்ஆனால் அவள் மறுத்துவிட்டாள்

அதன் பின் அந்த கிராமம் மட்டுமே உலகம் என இருந்துவிட்டாள்பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு கூட செல்லவில்லைஅங்கிருக்கும் பெண் குழந்தைகளுக்கு தேவையானவற்றை சக்கற்று கொடுத்து கொண்டு படிப்பு சொல்லி கொடுத்து கொண்டு இருந்தாள்….நாட்கள் இப்படியே சென்று இரண்டு வருடங்களாகி இருந்தது….

திருச்சி

அடுத்த நாள் காலை திலீப்பும் கவினும் வாசுவுடன் பேச அவன் அறைக்கு சென்றனர்…. அங்கு அவன் வெளியில் செல்ல தயாராகி கொண்டு இருந்தான்இருவரும் செல்லும் போது வெளிய வர திரும்பினான்இருவரும் வருவதை பார்த்து தலையசைத்து வரவேற்றான்…. “எத்தனை நாள் இப்படி பிசினெஸ் பிசினெஸ்னு இருப்ப வாசு.. கொஞ்ச நாள் எங்கயாவது ட்ரிப் போயிட்டு வாஒரு பத்து நாள் கொஞ்சம் எந்த டென்சனும் இல்லாம போய்ட்டு வா….” என்று கவின் கூறினான்

அவன் அமைதியாய் இருக்க கவினும் வற்புறுத்திஇன்னிக்கே நீ போய் தான் ஆகனும்நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்…. நீ கண்டிப்பா போய் தான் ஆகனும்என்று கூறினான்

அவனுக்கும் மனது போய் தான் ஆக வேண்டும் என உந்தியதால் சரி என்று ஒத்து கொண்டு திலீப் திவ்யா மகனை கொஞ்சிவிட்டு தேவையான உடையை எடுத்து வைத்து கொண்டு கேரளா நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்

(அப்படியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி…..)

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்