Loading

 

அந்த டாக்டர் இளா அம்மாவின் பள்ளி தோழி தான்…. அது மட்டும் இல்லாமல் அந்த டாக்டரின் கணவரும் சக்ரா அப்பாவின் தோழன் தான்… ஆனால் அவர் டாக்டர் ஹேமாவிற்கும் அவருக்கும் கல்யாணம் முடிந்து ஐந்து வருடத்தில் ஒரு விபத்தில் உயிர் இழந்துவிட்டார்… அவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் தான்….

அவர் கணவர் இறந்த சமயம் தான் சக்ரவர்த்தி மருத்துவமனையை ஆரம்பித்து இருந்தார்.. வீட்டின்னுளே இருந்தால் அவர் இன்னும் கஷ்டப்படுவார் என எண்ண சக்ரா அப்பாவும் இளா அம்மாவும் ஹேமாவை வற்புறுத்தி மருத்துவமனை பொறுப்பை அவரிடம் கொடுத்தனர்…

 

அவரும் முதலில் நல்லபடியாக தான் பார்த்து கொண்டார்… ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அவரை இன்றி எதுவும் நடக்காது என அவரே நினைத்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்….

இது இருவருக்கும் தெரிந்தாலும் அமைதியாக தான் இருந்தனர்…. ஆனால் கடைசி முடிவு அவர்கள் இருவருடையதாக தான் இருந்தது…

அதே போல் மருத்துவரின் மகளும் வாசுவும் ஒரே கல்லூரி தான்… என்ன வாசு அவரின் மகளுக்கு சீனியர்…. அவள் கல்லூரியில் வசந்த் என்னும் மாணவனை காதலித்தாள்அவனும் அவளை காதலித்தான்ஆனால் அவன் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன்எனவே தன் சொந்த காலில் நிற்கும் போது தான் கல்யாணம் என கூறிவிட்டான்

ஒரு தடவை வசு உன்னை பாக்கனும் போல இருக்கு டாஆனா நீ நான் பாக்க முடியாத இடத்துல இருக்க.. சீக்கிரம் வா டாநான் அத்தை கிட்ட பேசுனேன்.. அவங்களும் உன்னை ரொம்ப மிஸ் பன்றாங்க வசு மிஸ் யூ அண்ட் லவ் யூ வசு என கூறிக் கொண்டு இருந்தாள்

அதை கெட மருத்துவரோ தன் மகள் வாசுவை தான் காதல் செய்கிறாள் என தவறாக நினைத்து கொண்டார்….சரியாக வாசு சைந்தவி கல்யாணத்தை பற்றி அனிருக்கும் தெரிய வரும் போது அவரின் மகளின் காதலனுக்கு விபத்து ஏற்பட்டு இருந்ததுஅதை நினைத்து அவள் அழுது கொண்டு இருந்தாள்இவரோ வாசு தன் மகளை ஏமாற்றியதால் தான் அழுகிறாள் என நினைத்து பழிவாங்க நினைத்து தான் அனைத்தையும் செய்து முடித்தார்

இதில் அவருடன் இன்னொருவரும் கூட்டுஅதுவும் யாரென்று சீக்கிரம் தெரிந்துகொள்ளல்லாம்அப்போது அவரின் மகளும் வர இதை தெரிந்த கொண்ட அவளும்அம்மா லூசா நீங்க.. நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்உங்க கிட்ட இதை சொல்ல ட்ரை பண்ணேன்ஆனா அதை நீங்க கேட்க தயாரா இல்லைச்சே நீங்க இவளோ மோசமா இருப்பிங்கனு நான் நினைக்கவே இல்லைநான் வாசுவை ஒரு அண்ணனா தான் பாத்தேன்.. சொலல் போனா இத்தனை வருஷத்துல ஒரு பத்து தடவை கூட பேசி இருக்க மாட்டேன்நான் என் வசுவை அதாவது என் வசந்த்தை மட்டும் தான் லவ் பண்றேன்பண்ணுவேன்

வாசு முன் நின்றவள்அண்ணா அம்மா இப்படி பண்ணுவாங்கனு நான் நினைக்கல அண்ணாநேநேக அவங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு பிரச்சனை இல்லபோலீஸ் கிட்ட ஹான்ட்ஓவர் பண்ணாலும் எனக்கு பிரச்சனை இல்லைஇனிமே எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன கூறிவிட்டு சென்றுவிட்டாள்

இளவரசி சக்ரவர்த்தியும் எதுவும் பேசாமல் சென்று விட வாசு தான் அவரை கொலைவெறியுடன் முறைத்தான்…. கவின் தான்வாசு நமக்கு இப்போ பாப்பா தான் முக்கியம்இவங்களை நான் பாத்துக்குறேன்இப்போ நீ பாப்பாவை போய் தேடு..” என்று அவனை போக சொல்லிய கவின் அவரை போலீசில் கம்பளைண்ட் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றான்அவள் காணாமல் போய் ஒரு நாள் ஆகி இருக்க திலீப் திவ்யாவிடம் எதுவும் யாரும் கூறவில்லை….

அவள் எங்கு இருக்கிறாள் என்றே தெரியவில்லைஎப்படி கல்லூரியில் இருந்து சென்றாள் எனவும் தெரியவில்லைசிசிடிவியில் எதோ தடயம் கிடைக்கிறதா என்று பார்த்து கொண்டு இருந்தனர் வாசுவும் கவினும்திலீப் திவ்யா கல்யாணத்திற்கு அடுத்த நாள் வசந்தி எதோ சைந்தவியிடம் பேசிக் கொண்டு இருந்ததுஅவர் எதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருப்பது போல் இருந்ததுகடைசியில் சைந்தவி வெற்று சிரிப்பு சிரித்து விட்டு வீட்டினுள் வருவது போல் இருந்தது….

உடனடியாக சைந்தவியின் வீட்டிற்கு கிளம்பினர்…. இருவரும் கொஞ்சம் கோவமாகவே கிளம்பினர்இதை கவனித்த காதம்பரி தானும் அவர்களுடன் சென்றாள்….

அங்கு வசந்தியின் வீட்டுற்கு சென்ற போது அவர் மட்டும் தான் வீட்டில் இருந்தார்என்றும் வராத வாசு இன்று வந்தது அவருக்கு ஆச்சர்யமாய் இருந்தது… “வாங்க மாப்பிளைவாங்க தம்பி வா ம்மா..” என்று கூறி வரவேற்றார்

வாசு கோவத்துடன்அன்னிக்கு அம்மு கிட்ட என்ன சொன்னிங்க தோட்டத்துல….” என்று கேட்டான்

அவரோ நான் எதுவும் சொல்லல என மழுப்பினார்அவன் மீண்டும்நீங்க அவ கிட்ட பேசுனா வீடியோ இருக்குஎன்ன பேசுனீங்கனு தெரியலஅதை மட்டும் சொல்லுங்கஇப்பயும் அம்முவோட அம்மானு தான் மரியாதையா கேட்டுட்டு இருக்கேன்….” என்று கோவமாக கூறினான்

அவரும் சொல்ல ஆரம்பித்தார்அன்று சைந்தவி தூக்கம் வராமல் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்அப்போது தன் அருகில் அரவம் கேட்டதும் யாரென்று திரும்பி பார்த்தாள்அங்கு வசந்தி நின்றதும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக தான் இருந்தாள்அவரே பேச ஆரம்பித்தார்

உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுனு எனக்கு தெரியும்.. இது எல்லாம் இங்க இருக்குறவங்களுக்கும் தெரியுமா தெரியலஅவங்க வீட்டுக்கு ஒரு வாரிசு வேண்டாமா…. இப்போ சரினு சொல்லலாம்அதுக்கு அப்பறம் அவங்க அந்த பையனுக்கு வேற கல்யாணம் ஏற்பாடு செய்ய கூட வாய்ப்பு இருக்குஅதுக்கு முன்னாடி நீயே அந்த பையனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிடுஉங்க அக்காவுக்கு அவரை ரொம்ப பிடிக்குமாம்அவ உன்னை இந்த வீட்டை விட்டு எல்லாம் போக சொல்ல மாட்டாநீயும் இந்த வீட்டுலையே இருக்கலாம்இந்த வீட்டுக்கும் வாரிசு வந்துடும்…. நீ என்ன சொல்றஒரு வாரம் எடுத்துக்கோயோசிச்சு சொல்லுஎன்று கூறினார்

அவள் அதற்கு எந்த பதிலும் கூறாமல் வேற்று சிரிப்பு சிரித்து விட்டு அறைக்கு சென்றுவிட்டாள்ஐவரும் பெட்ரா பெண்ணிடம் இப்படி பேசுகிறோம் எண்ணம் இல்லாமல் ஊருக்கு கிளம்பிவிட்டார்…. இதை அவரும் கூறி முடித்தவுடன் பக்கத்தில் இருந்த டேபிளை கோவமாக உதைத்தான்அவனின் கோவத்தில் அது உடனடியாக உடைந்து விட்டது….

அவனின் கோவத்தில் வசந்தி ஒரு அடி பின்னாடி நகரத்து விட்டார்…. காதம்பரி தான்அவ உங்க பொண்ணு தானுபெத்த பொண்ணு கிட்ட போய் அவ புருஷனுக்கு அவ அக்காவை ரெண்டாவது கல்யாணம் பண்ண சொல்றிங்க…. நீங்க என்னங்க சொல்றது உங்க பெரிய பொண்ணை கல்யாணம் பண்ணதும் நீயும் அங்க இருக்கலாம்னு சொல்றிங்கஅந்த வீடு மட்டுமில்ல.. எல்லாமே சைந்தவிக்கு மட்டும் தான்முதல் அவளால குழந்தை பெத்துக்க முடியாதுனு உங்க கிட்ட யாரு சொன்னாஎன கோவமாக கேட்டாள்

அவர் அமைதியாய் இருக்கசொல்லுங்கஅவளுக்கு குழந்தை பிறக்காதுனு எங்களுக்கே தெரியாதுஉங்க கிட்ட சைந்தவி சொல்ல வாய்ப்பு இல்லஉண்மையை சொல்லுங்கமுதல் அவளுக்கு குழந்தை பிறக்காதுனு சொன்னேதே உண்மை இல்லைஅவளால குழந்தை பெத்துக்க முடியும்…. உண்மையை சொல்லுங்கநீங்க அமைதியா இருக்குறது பார்த்தா இது உங்க பெரிய பொண்ணு தான் காரணமா இருக்கும் போலஉண்மையை சொல்லுங்கஎன்று கோவமாக கேட்டாள்

அவரும் ஆம் என ஒத்துக்கொண்டார்அந்த நேரம் சஹானாவும் வர வாசுவை பார்த்ததும்வாங்க வாங்கஏன் நின்னுட்டே இருக்கீங்கவந்து உட்காருங்க…”என்று கை பிடித்து அமர வைக்க பார்த்தாள்

அவளை தன்னை தொட விடாமல் செய்தவன்ஏய் உண்மையை சொல்லுநீ தானு அந்த பேக் ரிப்போர் ரிசப்சன் குழந்தை கிட்ட கொடுத்து கொடுக்க சொன்ன… வெக்கமா இல்லைகல்யாணமானவனை அதுவும் சொந்த தங்கச்சி புருஷனை அடைய நினைக்குறநீ எல்லாம் ஒரு பொண்ணா…”. என்று வெறுப்புடன் கேட்டான்

ஆமா வாசு.. நான் உங்களை முன்னாடி இருந்து விரும்பிட்டு இருக்கேன்நடுவுல இவை வந்து கல்யாணம் பண்ணா நான் அமைதியா இருப்பேனாநீங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போனப்ப நானும் அங்க தான் இருந்தேன்அந்த டாக்டர் பேசுவதை நானும் கேட்டேன்அது தான் அவங்க கிட்ட கேட்டு ரிப்போர்ட் வாங்குனேன்அவளை நீங்க பாத்துட்டே இருப்பிங்ககல்யாண நேரத்துல தான் அவளை கவனிக்காம இருப்பிங்க.. அது தான் அன்னிக்கு கொடுத்தேன்அது தான் அவளால குழந்தை பெத்துக்க முடியாதுனு தெரிஞ்சு போயிடிச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கஅவளும் அந்த வீட்டுலையே இருந்துட்டு போகட்டும் ஒரு ஓரமா.. நான் எதுவும் சொல்ல மாட்டேன்..” என்று திமிருடன் கூறினாள்……

ஏய்என்று கை ஓங்கியவன்உன்னை எல்லாம் தொடுறதே வேஸ்ட்…. உன்னை தொட்டா கூட என் அம்முவுக்கு நான் செய்யுற துரோகம்இதுக்காக தண்டனை கண்டிப்பா உனக்கு கிடைக்கும்…” என்று வெறுப்புடன் கூறியவன் வசந்தியை பார்த்துஅம்மு நீங்க பெத்த பொண்ணு தானு…. நீங்க எல்லாம் அம்மானு சொல்ல கூட தகுதி இல்லாதவங்க…. உங்க கூட பேசுறதே வேஸ்ட்….” என்று கூறியவன் வெளியேறிவிட்டான்

கவினும் காதம்பரியும் ஒரு அற்ப பார்வை இருவரையும் பார்த்து விட்டு அவர்களும் கிளம்பி விட்டனர்அதன் பின் இறுக்கமானவன் தான் அனைவரிடமும் கோவ முகம் தான்மிகவும் இறுகி விட்டான்எதற்கு எடுத்தாலும் கோவம் கோவம் கோவம் மட்டும் தான்காலை வேலை என திரிபவன் இரவு மதுவுடன் உறங்க ஆரம்பித்துவிட்டான்

இங்கு சைந்தவியோ அவனின் ஞாபகத்தில் உறக்கம் வரமால் மௌனமாக அழுது கொண்டு இருந்தாள்அவளுக்கு அவனின் அரவணைப்பு மிகவும் தேவைப்பட்டது…. இந்த இரண்டு வருடம் அவள் நிம்மதியாக உறங்கியதை கை விட்டு எண்ணி விடலாம்ஆனால் அவனுடன் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்….

 

 

( அப்படியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி)

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்