Loading

சாந்தி பேசிவிட்டு எதுவும் தெரியாதது போல் அறைக்கு சென்று விட நன்றாக விடிந்ததும் ஊருக்கு செல்கிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார்…. சைத்து தன் கவலையை மறைத்து விட்டு எப்போதும் போல் இருப்பதாய் காட்டி கொண்டு இருந்தாள்…. வெளியில் சிரித்த முகமாக இருந்தாலும் உள்ளுக்குள் செத்து கொண்டு இருந்தாள்….

திருமணம் முடிந்து ஒரு நாள் ஆகி இருக்க திலீப் திவ்யாவை கட்டாயப்படுத்தி மணாலி ஹனிமூன் அனுப்பிவைத்தாள்அந்த நாள் வாசு வேலையாய் வெளியில் சென்று இருக்க அவளவனுக்காக ஒரு கடிதம் எழுதினாள்அதை எழுதும் போதே அவள் கண்கள் எல்லாம் கலங்கி போய் விட்டதுஅவனை விட்டு செல்வதாய் முடிவு எடுத்துவிட்டாள் தான்ஆனால் அதை நினைக்க கூட அவளால் முடியவில்லை…. ஆனால் அவனின் நன்மைக்காக அவனை விட்டு விலக வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்….

அந்த கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்தவள் இளவரசியின் பாசத்தை தன்னால் இனி அனுபவிக்க முடியாது என நினைத்து இன்றே அவரின் மொத்த பாசத்தையும் அனுபவிக்க கீழே சென்றாள்அங்கு அவர் அவளுக்காக அவளுக்கு பிடித்த போலி செய்து கொண்டு இருந்தார்இவளை பார்த்ததும் பாப்பா வா வா இந்த உனக்கு பிடிச்ச போலிசாப்பிடு என்று கூறி ஊட்டிவிட்டார்அவளுக்கு அவரின் பாசத்தில் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது

அதை அவரிடம் காட்டாமல் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு இருந்தாள்.. அன்று இரவு சக்கரவர்த்தியின் கையால் இரவுணவை முடித்து விட்டு கொஞ்ச நேரம் இளவரசியின் மடியில் படுத்து கொண்டு இருந்தவள் வாசு வந்ததும் அவனுக்கு பரிமாற கிளம்பினாள்அவனுக்கு தன் கையால் உணவை ஊட்டி விட்டவள் இனிமேல் அவனுக்கு இது போல் ஊட்ட முடியாதே என நினைத்து கலங்கி போய் இருந்தாள்

வாசுவிற்கு கல்யாண வேலையில் விட்ட வேலைகளை பார்க்கவே அவனுக்கு சரியாய் இருந்தது…. இரவு உணவை முடித்து விட்டு வாசு சைந்தவி இருவரும் உறங்க செல்ல வாசு அவளை அணைத்து கொண்டு சோர்வில் நன்றாக உறங்கிவிட்டான்….

அவளும் அவனின் அருகாமையை நன்றாக அனுபவித்து கொண்டு உறங்கிவிட்டாள்அடுத்த நாள் காலை வாசு சீக்கிரம் எழ தன்னை அணைத்து கொண்டு உறங்கும் தன்னவளை பார்த்ததும் சட்டென புன்னகை தந்தெடுத்ததுஆனால் இந்த புன்னகை இரவு வரை கூட தொடர முடியாது என அவனிடம் யார் சொல்வது…..

அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து குளித்து விட்டு வழக்கம் போல் அவளுக்கு குறிப்பு எழுதி வைத்து விட்டு அவனின் கம்பெனிக்கு சென்று விட்டான்அவன் சென்ற அடுத்த நொடி எழுந்த சைந்தவி போகும் அவனை கண்களால் நிரப்பி கொண்டாள்

அடுத்து எழுந்து அவனுக்கு தெரிவது போல் தான் எழுதிய கடிதத்தையும் இன்னொரு பொருளையும் வைத்தவள் எப்போதும் போல் தயாராகி கீழே சென்று இளவரசி கையால் உணவை உண்டு விட்டு அவர் அறைக்கு சென்றதும் குடும்ப போட்டோவையும் அவனும் அவளும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவையும் மட்டும் எடுத்து கொண்டு இளவரசியிடம் தான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு காரை எடுத்து கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்….

அனைவரும் அப்போது தான் அவளை கடைசியாக பார்த்ததுஅதன் பின் அவள் எப்படி கல்லூரியில் இருந்து கிளம்பினாள் என்றே தெரியவில்லை

ஒரு வருடம் கழித்து

கேரளா மலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமம்அங்கு ஐந்திலிருந்து பத்து குழந்தைகள் ஒரு வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தனர்அனைத்துக்கும் ஐந்து முதல் பதினைந்து வயது இருக்கும் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தான்

அனைவரும் அமர்ந்து ஆர்வமாக படித்து கொண்டு இருக்க ஒருத்தி சோகமாவே அமர்ந்து இருந்தாள்அந்த குழந்தைகள் எதோ சந்தேகம் கேட்டால் மட்டும் அவர்களுக்காக சொல்லி கொடுத்தாள்அவர்களையே படிக்க செய்தாள்….

ஒரு ஒருமணி நேரம் படித்தவர்கள் அவளிடம் சொல்லி கொண்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்இவள் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தவள் அதன் பின் எழுந்து இரவு உணவை சமைக்க ஆரம்பித்தாள்எட்டரை மணியளவில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழையவாங்க அப்பாமுகம் கழுவிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்குறேன்….” என்று கூறி அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்க சென்றாள்

அவரும் முகம் கழுவிட்டு வர இருவரும் உட்காந்து சாப்பிட ஆரம்பித்தார்….. “பாப்பா எத்தனை நாள் இங்கயே இருப்பஇந்த இடத்தை விட்டு ஊருக்குள்ள கொஞ்சம் வாடா…. இந்த இடத்துக்கு வந்து ஒரு வருஷம் ஆக போகுதுஆனா நீ இந்த இடத்துக்கு வந்ததுக்கு அப்பறம் நீ வெளியுலகத்துக்கு போகவே மாட்டிங்குற…. எனக்கு நீ இங்கயே இருக்குறத பாத்தா எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்குடா ம்மா…” என்று கவலையாக கூறினார்….

அப்பா நீ..நீங்க கவலை படாதீங்க…. எனக்கு வெளிய போக பிடிக்கல ப்பாஇங்கயே நல்லா ….இருக்கு.. இங்க இருக்குறவங்களுக்கு புதுசு ப்….புதுசா சொல்லி தர எனக்கு பிடிச்சு இருக்கு ப்பா.. இந்த ஊரு இந்த மக்கள் இந்த இடம் எனக்கு ரொரொம்ப பிடிச்சு இருக்கு ப்பாஅங்க வெளிய போனா பல பேரை பார்க்கனும்அங்க இருக்குறவங்க என்னை நார்மலா பாக்க மாட்டாங்க…. ஆனா இங்க என்னை அப்படியே ஏத்துக்குறாங்க ப்பாஇந்த முமுகத்தை பார்த்து முகம் சுளிக்குறது இல்லநான் பேபேசுறதை பாத்து என்னை கேலி பண்றது இல்லஎனக்கு இங்கயே பிடிச்சு இருக்கு ப்பாநான் இங்கயே இருக்கேன் ப்பா…” என்று கெஞ்சலாக திகிக் திக்கி கூறி முடித்தவள் உண்ட பாத்திரத்தை எடுத்து கொண்டு உள்ளே சென்றாள் சைந்தவி….

அவளையே கவலையுடன் பார்த்து கொண்டு இருந்தார் குருசைந்தவியின் அப்பாஅவளின் உண்மையான அப்பா

திருச்சி..

வாசுவின் வீடு….

இரவு பத்து மணி ஆகியும் வீட்டிற்கு வராத தன் மகனுக்காக காத்து கொண்டு இருந்தார் இளவரசிஇந்த ஒரு வருடத்தில் மிகவும் ஓய்ந்து போய் இருந்தார்அவருக்கு துளி கூட சைந்தவியின் மேல் கோபமில்லைதன் மகனின் நன்மைக்காக தன் வாழ்க்கையையும் அழித்து கொண்டு எங்கேயோ போய் அமர்ந்து இருப்பவளை நினைத்து அழுது கொண்டு தான் இருந்தார்

பத்தரை மணிக்கு நிதானமாக வீட்டிற்கு வந்த வாசு தனக்காக அமர்ந்து இருக்கும் தாயை கூட கண்டுகொள்ளாமல் அறைக்கு சென்றுவிட்டான்.. அவரும் அவன் வந்துவிட்ட நிம்மதியில் உறங்க சென்றுவிட்டார்

வாசு இந்த ஒரு வருடத்தில் இப்படி தான் ஆகிவிட்டான்ஏற்கனவே இறுக்கமாக இருப்பவன் இன்னும் தன்னை இறுக்கி கொண்டான்யாரிடமும் ஒரு வார்த்தை பேசுவது இல்லைஎதற்கு எடுத்தாலும் கோவம் கோவம் கோவம் மட்டும் தான்வீட்டில் உள்ளோரே இவனிடம் தற்போது பேச பயப்படுகின்றனர்….

இப்போது அறைக்கு சென்ற வாசு அங்கு சிரித்த முகமாய் இருக்கும் தன்னவளை பார்த்துஅம்மு அம்முஎன்னை விட்டு போயிட்டல … நான் வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டல…. எனக்கே என்கிட்டயே ஒரு வருஷமா கண்ணாமூச்சி ஆடுறஎன் கண்ணு முன்னாடி நீ வந்த அவ்வளவு தான் அம்மு…” என்று கோவமாக கூறுவதாக நினைத்து எப்போதும் போல் தான் கூறினான்அவளிடம் மட்டும் அவனின் கோவம் எடுபடுவது இல்லை

ஆனால் அவனின் கண்களில் சிவப்பு நிறத்தில் இருந்ததுநேராக தன் அறையில் இருக்கும் மது பாட்டிலை எடுத்தவன் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்… (பி.கு : மது அருந்துதல் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்)

அவன் நிம்மதியாக தூங்கி ஒரு வருடம் ஆகி விட்டதுஅவள் இல்லமால் உறங்க முடியாமல் மதுவின் உதவியை தான் நாடினான்அவன் குடிப்பது வீட்டில் இருப்பவருக்கு கூட தெரியாதுஏற்கனவே வேதனையில் இருப்பவர்கள் இது தெரிந்தால் மேலும் வருத்தப்படுவர் என நினைத்து மறைத்துவிட்டான்

ஆனால் அவர்களுக்கு தெரிந்து தான் இருந்ததுஅவன் அறையை சுத்தம் செய்ய சென்ற போது அறையில் இருக்கும் மதுவை பார்த்து இளவரசி சக்ரவர்த்தி கதறிவிட்டார்அவனிடம் பேசவே பயமாக இருந்ததுஅவர்களையம் ஒரே பார்வையில் தள்ளி நிறுத்தி இருந்தான்அவனிடம் யாருமே பேச முடியவில்லை..

திலீப் மற்றும் கவினிடம் மட்டுமே இரண்டொரு வார்த்தை மட்டும் பேசிக்கொண்டு உள்ளான்கவின் சென்னையில் இருந்து குடும்பத்துடன் திருச்சி வந்து விட்டான்பெரியவர்கள் அனைவரும் சைந்தவி சென்றதில் இருந்து கவலையில் ஆழ்ந்து விட்டனர்.. எனவே அவன் திருச்சி வந்துவிட்டான்

சைந்தவி வீட்டை விட்டு சென்ற ஒரு மாதத்தில் திவ்யா மாசமாக இருக்கிறாள் என தெரிய வந்தது.. அதன் பின் தான் வீட்டில் கொஞ்சம் மகிழ்ச்சி மீண்டதுஅவளின் எட்டு மாதத்தில் திலீப் திவ்யாவின் மகன் இந்த உலகிற்கு வந்து இருந்தான்தற்போது அவனுக்கு தற்போது நான்கு மாதம் நடந்து கொண்டு இருக்கிறதுவீட்டினர் குரலை நன்றாக அடையாளம் கண்டு கொண்டு உள்ளான்.. மற்றவர் குரல் கேட்டால் என சத்தமிடுபவன் வாசுவின் குரல் கேட்டால் போதும் அவன் குரல் கேட்கும் இடம் பார்த்து துள்ள ஆரம்பித்து விடுவான்வாசு சிரிக்கும் ஒரே ஆள் அவனிடம் மட்டும் தான்…. இந்த நான்கு மாதத்தில் வாசு அவனை பத்து தடவை கூட பார்த்து இருக்க மாட்டான்…. ஆனால் அவனை நன்றாக அடையாளம் கண்டு உள்ளான் அந்த குட்டி வாண்டு….

தற்போது மது அருந்தி விட்டு படுக்கைக்கு சென்றவன் உறங்க முடியாமல் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததை பார்க்க ஆரம்பித்தான்

(அப்படி என்ன ஆச்சுனு அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம்…. படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி…)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்