காலை எழுந்த வாசு தன்னை அணைத்து உறங்கி கொண்டு இருக்கும் தன் மனைவியை தான் கண் இமைக்காமல் பார்த்தான்… அவள் அழுவது அவனுக்கு மிகவும் வலித்தது… ஆனால் அவள் கேட்பது அவனால் தர இயலாதே… குழந்தை வந்தால் அவள் தான் அதிகம் பாதிப்பு அடைவாள்… தெரிந்தே அவளுக்கு எப்படி அவன் வலியை தருவான்…
அவன் இன்று சைந்தவியை பற்றி பேச மருத்துவரிடம் கேட்கலாம் என நினைத்த போது ஒரு அழைப்பு வர சைந்தவி எழுந்து கொள்ளாமல் ஆப் செய்து மெதுவாக தன்னிடம் இருந்து பிரித்து அவளை தலையணையில் படுக்க வைத்தவன் பால்கனி சென்று நின்று பேச ஆரம்பித்தான்… அங்கு அலைபேசியில் என்ன சொல்லப்பட்டதோ “வாட் யூஸ்லெஸ் பெலோவ்ஸ் வைங்க வரேன்… ஒன்னு கூட ஒழுங்கா மேனேஜ் பண்ண மாட்டீங்களா…” என்று திட்டி விட்டு குளித்து வந்தவன் சைந்தவியை தொந்தரவு செய்யாமல் ஒரு பேப்பரில் அவசர வேலை வெளியே சேர்கிறேன் என்று கூறி விட்டு கீழே சென்றான்…
அங்கு சக்கரவர்த்தி மட்டும் தான் எழுந்து இருந்தார்… “அப்பா ஸ்கூல்ல கன்ஸ்டரக்சன் பண்ணிட்டு இருந்தோம்ல அந்த பில்டிங் இடிஞ்சு விழுந்துருச்சு… நான் ரெண்டு நாள் முன்னாடி தான் போயிட்டு வந்தேன்… ஆனா இன்னிக்கு இடிஞ்சு விழுந்துருச்சு… என்னனு பாத்துட்டு வரேன் நான் வர லேட் ஆகும் ப்பா… அம்மா கிட்டயும் அம்மு கிட்டயும் சொல்லிடுங்க… நான் கிளம்புறேன்… நீங்க டென்ஷன் ஆகாம எப்பயும் போல வாங்க… அம்மா அம்மு ரெண்டு பேரு கிட்டயும் சொல்லாதீங்க.. நான் வரேன்…” என்று கூறி சென்று விட்டான்…
காரில் ஏறியவுடன் வாசுவின் முகம் அப்படியே மாறி இருந்தது.. அவன் முகமே கோவத்தில் சிவந்து இருந்தது… அரை மணி நேரத்தில் செல்ல கூடிய தூரத்தை கால் மணி நேரத்தில் சென்று சேர்ந்தவன் அங்கு நின்று இருந்த தன் ஆட்களிடம் கத்த தொடங்கிவிட்டான்..
“நேத்து நைட் இங்க யாரு டூட்டி பார்த்தது… எப்பயும் மூனு பேர் இருக்கனும்… அதோட சேர்த்து இங்க சைட்ல மூனு பேரு இருக்கனும்… நேத்து நைட் கம்மியா தான் இருந்து இருக்கீங்க அவங்க எல்லாம் எங்க… நாலு பேரு தான் இருக்கீங்க மத்த ரெண்டு பேரும் எங்க..” என்று கோவமாக கத்தினான்…
அவனின் பிஏவோ பயந்து கொண்டே “சார் நாங்க அவங்களை தான் தேடிட்டு இருக்கோம்.. சீக்கிரம் கண்டுபிடிச்சிடுறோம்…” என்று பயந்து கொண்டே கூறினான்..
“எனக்கு தெரியாது உமேஷ் இதுக்கு காரணமானவங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் என் கண்ணு முன்னாடி இருக்கனும்…” என்று கோவமாக கூறி விட்டு காரை எடுத்து கொண்டு எங்கோ சென்றுவிட்டான்…
ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அதை செய்தவர்களையும் பிடித்து அதற்கு காரணமானவர்களையும் அவனே கண்டு பிடித்து இருந்தான்… அவர்களை யாருக்கும் தெரியாமல் இருட்டு அறையில் அடைத்து வைத்தான்… முதலில் அதை செய்தவர்களை கண்டு பிடித்தவன் அடுத்து அதற்கு காரணமானவர்களையும் கண்டு பிடித்து இருந்தான்…
அங்கு அனைவரும் பயந்து கொண்டு இருக்க வாசுவோ கண்களில் கோவத்துடனும் நடையில் நிதானத்துடன் நடந்து வந்தான்… அவன் வர வர உள்ளே இருக்கும் பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது…
“என்ன விகாஷ் பயத்துல உடம்பு எல்லாம் நடுங்குது… நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல… அதுக்கே இப்படி நடுங்குற… நான் செய்ய வேண்டியதை செஞ்சா என்ன ஆவ…” என்று கேலியாக தான் கேட்டான்… ஆனால் அந்த கேலியே அவனுக்கு பீதியை கிளப்பியது…..
“அது வாசு தெரியாம பண்ணிட்டேன்“என்று அவன் கூறி முடிக்கவில்லை… அவனை உதைத்து “எது தெரியாம பண்ணது… அங்கு உள்ள ஆளுங்க இருந்து இருந்தா அவங்களுக்கு யாரு பதில் சொல்லுவா.. சொல்லு டா நீ சொல்லுவியா… சரி ஓகே உனக்கு ஒரு ட்ரைலர் காட்டலாமா… யாரும் இல்லாத வீட்டை இடிச்சாலும் எவ்வளவு வலிக்கும் அப்டினு” என்று கூறி அவனுக்கு போனில் ஒன்றை பார்த்தான்…
விகாஷ் ஆசை ஆசையாக கட்டி கொண்டு இருக்கும் கட்டிடம் தரைமட்டமாக ஆகும் காட்சி… அதை பார்த்து “வாசு வேண்டாம் வாசு… அது நான் ஆசைப்பட்டு என் அம்மாவுக்காக கட்டுறது… அதை எதுவும் பண்ணாத… இனிமே நீ இருக்குற இடமே வர மாட்டேன்… என் அம்மா எனக்காக குடுத்துட்டு போனது அந்த லேண்ட் மட்டும் தான் என்கிட்ட அவளோ சொத்து இருந்தும் எனக்கு என் அம்மா குடுத்த அந்த நிலம் ரொம்ப முக்கியம்… நிஜமா நீ இருக்க திசையே வர மாட்டேன்..” என கெஞ்சினான் விகாஷ்…
“ஓஹ் அப்போ நாங்க கட்டுனது… சும்மா விளையாட்டுக்கு கட்டுனோம்னு நினைச்சியா… இது மட்டும் நீ பண்ணலயே… நீ இன்னிக்கு என்ன பண்ண நினைச்சனு எனக்கு தெரியும்.. நீ கட்டிட்டத்தை இடிச்சது கூட எனக்கு பிரச்சனை இல்ல… ஆனா இன்னிக்கு நீ பண்ண நினச்சதுக்கு உன்னை கொன்னா கூட ஆத்திரம் அடங்காது… உன் அப்பா மாதிரி ஒருத்தருக்கு இப்படி ஒரு கிரிமினல் பையன்… பாவம்டா அவரு உன்னை பத்தி தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியல… இனிமே ஒழுங்கா இருக்க பாரு… இனிமே எதோ பண்ணலாம்னு நினைச்சா உன் உயிர் உன் உடம்புல இருக்காது… அண்ட் இன்னொரு விஷயம் நல்லா மூளைல ஏத்தி வெச்சுக்கோ… உன் பார்வை என் வைப் மேல பட்டா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது… ஒழுங்கா இருந்துக்கோ என்று கூறி அனுப்பி வைத்தான்…
பேசி மட்டும் அனுப்பவில்லை… கவனிக்க வேண்டியவற்றை கவனித்து தான் அனுப்பினான்… விகாஷ் வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபர்… அவனுக்கு வாசுவின் வளர்ச்சியின் மேல் சிறு காழ்ப்புணர்ச்சி எனவே வாசு கட்டி கொண்டு இருந்த கட்டிடத்தை இடித்து இருந்தான்… அது மட்டுமில்லாமல் வாசுவுக்கு சைந்தவியை மிகவும் பிடிக்கும் என அறிந்து அவளை கடத்த திட்டமிட்டு இருந்தான்… அதற்கும் சேர்த்து அடித்து உதைத்து தான் அனுப்பி இருந்தான்….
அதற்கு முன் அவனின் அப்பாவிடம் கூறி இருந்தான்… அவனின் அப்பா நிஜமாகவே நல்ல மனிதர் தான்… அவருக்கு அவனை பற்றி சொன்னவுடன் கஷ்டமாக இருந்தது.. அவரின் மனைவி இறந்த பின் அவனை நன்றாக தான் வளர்த்தார்.. ஆனால் கல்லூரியில் ஏற்பட்ட நட்பில் தான் மாறிவிட்டான்….
அவன் செய்வது அவருக்கு கொஞ்ச நாளாக காதுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது… இதில் வாசு சொன்னதும் அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது… அவரே “தம்பி நான் சொன்னா கேட்குற நிலைமையை மீறிட்டான்… நீங்களே அவனை அடிச்சாலும் சரி கை கால் உடைச்சி அனுப்பினாலும் சரி அவன் திருந்துனா போதும்…”என கூறிவிட்டார்…
அவரின் முகத்துக்காக தான் அவனை உயிரோடு விட்டது… ஆனால் வாசுவிற்கு துரோகம் செய்த இருவரை அடி பிரித்து எடுத்துவிட்டான்… அவனின் பிஏ பயந்து திலீப்பிற்கு அழைத்து கூறிவிட்டான்… அவன் வர ஐந்து நிமிடம் தாமதம் ஆகி இருந்தாலும் அவர்களை அடித்தே கொன்னு இருப்பான்… அவன் வந்து தான் கடினப்பட்டு இழுத்து கொண்டு போனான்…
“டேய் ஜிவி அமைதியாகு தப்பு பண்ண சொன்னவனை அமைதியா விட்டுட்டு பண்ணவனை போட்டு அடிச்சி இருக்க இவனுங்க வெறும் அம்பு தான்… கிளம்பு வீட்டுக்கு போகலாம்…” என்று கூறினான்…
“எதிரியை கூட மன்னிப்பேன் டா… ஆனா துரோகியை மன்னிக்க மாட்டேன்… என்கிட்ட வேலை செஞ்சிட்டு பணத்துக்காக துரோகம் பண்ணி இருக்காங்க… அவங்களை விட சொல்றியா…” என்று கோவமாக கேட்டான்…
ஆனால் அவனின் கோவம் பனி போல் கரைந்து இருந்தது அவனின் அம்முவிடம் வந்த அழைப்பினால்… அது வரை கத்தி கொண்டு இருந்தவன் அழைப்பை ஏற்று சொல்லு அம்மு… என்று மென்மையாக கூறினான்… திலீப் தான் அவனின் இந்த திடீர் மாற்றத்தில் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான்…
ஆனால் அழைத்தவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவன் அட்டென்ட் செய்து பேசியதும் வைத்துவிட்டாள்… இவனும் அந்த நிமிடமே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்… திலீப் தான் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான்…
அவன் கார் கிளம்பிய சத்தத்தில் நினைவு திரும்பிய திலீப் அடிபட்டு கிடந்தவர்களை வாசுவின் பிஏவுடன் சேர்ந்து வாசுவின் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வாசுவின் வீட்டிற்கு சென்றான்…
அங்கு அவன் செல்லும் போது வாசுவிற்கு சைந்தவி உணவை ஊட்டி கொண்டு இருந்தாள்… வாசுவின் கையில் கட்டு இருந்தது… காலையில் எட்டு மணிக்கு எழுந்த சைந்தவி வாசுவை தான் முதலில் தேடினாள்… ஆனால் மணியை பார்த்து விட்டு வெளியே சென்று இருப்பான் என நினைத்து விட்டு குளியலறை சென்று குளித்து விட்டு வெளியே வந்து தலை சீவும் போது தான் அவன் எழுதி வைத்ததை பார்த்தாள்…
அதன்பின் கீழே சென்றவள் சமையல் அறையில் இருந்த இளவரசியை பின்னிருந்து அணைத்து குட் மார்னிங் சொல்லி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டாள்… இளவரசி அவள் முகத்தை தான் பார்த்தார்… நேற்றின் சாயல் அவள் முகத்தில் இல்லாததை பார்த்து தான் நிம்மதி அடைந்தார்…
அவளிடம் நேற்று நடந்ததை பேசாமல் எப்போதும் போல பேசி கொண்டு இருந்தார்… திலீப் திவ்யா திருமண பேச்சை பற்றி இருவரும் பேசி கொண்டு இருந்தனர்… பத்து மணி ஆகியும் வீட்டிற்கு வராத வாசுவை பார்க்க வேண்டும் போல் இருந்தது… அது தான் அவனுக்கு யோசிக்காமல் அழைத்து விட்டாள்… ஆனால் அவனிடம் பேச மனது வரவில்லை…அது தான் அவன் பேசியதும் வைத்துவிட்டாள்.. அவளுக்கு தெரியும் அவன் வருவான் என… அது தான் சாப்பிடாமல் அமர்ந்து இருந்தாள்…
அவன் வீட்டிற்கு வரும் போது மாமியார் மருமகள் இருவரும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்… சைந்தவி இளவரசியின் மீது சாய்ந்து கொண்டு அமர்ந்து இருந்தாள்… அவன் உள்ளே வந்ததும் அவனை பார்த்த சைந்தவியின் கண்களில் அவன் கையில் இருந்து ரத்தம் தான் கண்ணில் தெரிந்தது… சைந்தவி அழைத்தவுடன் கை கழுவ கூட தோணாது வீட்டிற்கு கிளம்பிவிட்டான்… அந்த வலி கூட அறியவில்லை…
இளவரசியும் பார்த்ததும் பதறிவிட்டார்… அவனை அழைத்து வந்து காயத்திற்கு மருந்து போட்டு விட்டார்… சைந்தவி அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. அப்போது கூட ஒரு வார்த்தை பேசவில்லை… சமையலறை சென்று அவனுக்கு காலை உணவை போட்டு கொண்டு வந்தவள் எதுவும் பேசாமல் ஊட்ட ஆரம்பித்தாள்..
அப்போது தான் திலீப் வந்தது… எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்துவிட்டான்… வாசு சாப்பிட்டு விட்டு வந்ததும் இருவரும் பேச ஆரம்பிக்க இளவரசி அவளுக்கு ஊட்டிவிட்டார்… அவரும் அவனின் கை காயத்தை பத்தி பேசவில்லை… அவருக்கும் தகவல் வந்து இருந்தது கட்டிடம் இடிந்ததை பற்றி… அவருக்கு தெரியும் அதை செய்தவர்களை தான் கண்டுபிடித்து அடித்து விட்டு வந்துள்ளான் என… சைந்தவிக்கும் தெரிய வந்து இருந்தது… அது தான் இருவரும் எதுவும் பேசவில்லை…
திலீப் வீட்டிற்கு கிளம்பி இருக்க இளவரசியும் அறைக்கு சென்று இருந்தார்… சைந்தவி கோவமாக அறைக்கு சென்று இருக்க வாசு ஒரு பெருமூச்சு விட்டு அறைக்கு அவளை தொடர்ந்து சென்றான்… அங்கு அவள் கோவமாக பால்கனியில் நிற்க இவனும் அவள் பின் சென்று நின்றான்… ஆனால் அவளை தொடவில்லை… இவனும் அமைதியாய் இருக்க அவளும் அமைதியாய் இருந்தாள்..
பின் நீண்ட நேரம் கழித்து தான் “செஞ்சவங்க உயிரோட இருக்காங்களா இல்லை கொன்னுட்டீங்களா” என்று கோவமாக கேட்டாள்…
அவனோ “உயிருக்கு எல்லாம் ஆபத்து இல்ல அம்மு” என்று அவள் கண்ணை பார்க்காமல் கூறினான்.. எப்போதும் அவள் கண்ணை பார்த்து தான் எதுவாக இருந்தாலும் கூறுவான்…
“உங்க கிட்ட பல தடவை சொல்லிட்டேன் மாமா… இப்படி கோவப்பட கூடாதுனு… போலீஸ் கம்பளைண்ட் குடுத்துட்டு விட்டு இருக்கலாம்ல… ஆனா நீங்க கண்டிப்பா அமைதியா இருந்து இருக்க மாட்டீங்க… அவங்க உடம்புல உயிர் இருக்கும் ஆனா நடக்க முடியாம பண்ணி இருக்கீங்க… ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன் மாமா கோவத்தை குறைச்சிக்கோங்க நான் காலேஜ் கிளம்புறேன்” என்று கூறி விட்டு இளவரசியிடமும் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்று இருந்தாள்..
அவன் போகும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்… அவனும் கோவத்தை குறைக்க முயற்சி தான் செய்கிறான்… ஆனால் கோவத்தை குறைக்க அவனால் முடியவில்லை… கோவத்தை குறை என்று கூறுபவளே அவன் இன்னும் கோவப்பட காரணம் ஆகி இருப்பாள் என அறியாது கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்..
(அப்படியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
+1