காதல் வெப்சைட் - மெல்லிய சாரலாய் காதல் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-மெல்லிய-ச/ Fri, 09 Feb 2024 23:36:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg காதல் வெப்சைட் - மெல்லிய சாரலாய் காதல் Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/காதல்-வெப்சைட்-மெல்லிய-ச/ 32 32 197060226 பூவிதழில் பூத்த புன்னகையே.. https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88%e0%ae%af/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88%e0%ae%af/#respond Fri, 09 Feb 2024 23:36:24 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88%e0%ae%af/   “டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”   இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “   சமைத்த உணவுகளை கூட உனது சித்தியால் உணவு மேசையின் மீது  எடுத்துக் கொண்டு வந்து வைக்க முடியாதா என்றார்  நம் கதையின் நாயகன் “தேவ மித்திரனின்” தந்தை “தீரன் ” .

The post பூவிதழில் பூத்த புன்னகையே.. appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

 

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”

 

இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “

 

சமைத்த உணவுகளை கூட உனது சித்தியால் உணவு மேசையின் மீது  எடுத்துக் கொண்டு வந்து வைக்க முடியாதா என்றார்  நம் கதையின் நாயகன் “தேவ மித்திரனின்” தந்தை “தீரன் ” .

 

 

 

“தேவா சிரித்துக் கொண்டே” வந்து அப்பா சமைத்து முடிந்து விட்டது அனைத்து உணவுகளையும் உணவு மேசையின் மீதும் வைத்து விட்டேன்.

 

இன்னும் அடுப்பை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வந்துவிட்டால் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என்றான்.

 

” டேய் நீ ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய்” உனது சித்தியால் சமைத்த உணவை கூட எடுத்துக் கொண்டு வந்து வைக்க முடியாதா ..

 

வேலைக்கு செல்பவனை வீட்டிலும் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

நீயும் எதுவும் பேசாமல் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாய் என்று தனது மகனிடம் கடிந்து கொண்டார் .

 

அப்போது அங்கு தேவாவின் சித்தியும் தீரனின் இரண்டாவது மனைவியும் மான “குழலரசி” வந்து நின்றார் .

ஆமாம் “உங்களது மகனுக்கு சப்போர்ட் செய்து கொண்டு என்னை திட்டவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதே  என்றார்” அரசி  .

 

 

  அதற்கு தீரன் ஆமாம் டி எனக்கு தூக்கம் வராது தான் உனக்கு அதனால் தான் தூக்கம் வரமாட்டேங்குது எனது மகனிடம் வேலை வாங்கவில்லை என்றால் . “வீட்டில் சும்மா தானே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் “

 

ஆனால் “வீட்டில் இருக்கும் வேலைகளை கூட உன்னால் பார்க்க முடியாதா “அவன் வெளியே ஆபீஸிலும் வேலை செய்து கொண்டு வந்து வீட்டிலும் உனக்கு ” வடித்துக் கொட்டிக் கொண்டிருக்க வேண்டுமா” என்றார் .

 

 

ஏன் சொல்ல மாட்டீர்கள் என்றார் அரசி கோவமாக “நானும் எனது பாருவும் ஆசையாக பெற்ற மகன் டி” அவன் என்றார் …

 

 

ஆமாம் எந்த நேரம் பார்த்தாலும் பாரு பாரு என்று சொல்லுங்கள் ஏன் சொல்லாமல் அதற்கு என்ன என்றார் தீரன் அதற்கு என்ன வா நீங்கள் இப்படி சொல்லி சொல்லியே தான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறீர்கள் என்றார் அரசி…

 

 

என்ன  நான் உன்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறேனா “பாரு இருந்திருந்தால் நீயும் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டாய்”.

” எனது மகனும் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டான்” என்றார் ..

 

 

“இல்லாதவளை பற்றி மட்டும் நொடிக்கு ஒரு முறை நினைத்து கொண்டு இருங்கள் உங்களுடனே இருக்கும் என்னை மறந்து விடுங்கள்” என்றார் அரசி..

 

 

“உன்னை நினைக்கும் படியாக ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்திருக்கிறாயா” என்று சொல் என்றார் ..

 

 

 

என்ன என்றார்  அரசி கோபமாக “எந்த நேரமும் இவனையும் இவனது அம்மாவையும் மட்டும் தான்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்னையும் எனது மகனையும் பற்றி யோசிக்கிறீர்களா என்று கேட்டார் அரசி.

 

 

தீரன் லேசாக சிரித்துக் கொண்டே உன்னைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொல் ஆனால் நான் எனது மகனை பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லாதே என்றார்..

 

 

“உங்களுடைய மகனா” அப்படி ஒருவன் உங்களுக்கு இருக்கிறான் என்று நினைப்பு இருக்கா என்றார் அரிசி .வாயை மூடு டி “எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று நினைவு எனக்கு இருக்கிறது

..

 

உனக்கு தான் உன் மனதில் உனக்கு ஒரு மகன் மட்டும் என்று நினைப்பு என்றார் ஆமாம் சொன்னாலும் சொல்லா விட்டாலும் எனக்கு ஒரு மகன் தான் என்றார் ..

 

“இந்த நினைப்பு தாண்டி நான் உன்னை விட்டு தூரச் செல்வதற்கு காரணம்” என்றார் இல்லை என்றால் மட்டும் நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருக்க போகிறீர்கள் பாருங்கள் என்று அரசி நக்கலாக கேட்டார்..

 

 

தீரன் தனது மனைவி அரசியை  முறைத்தார் அப்பொழுது “ஒருவன் ஓடி வந்து அப்பா எனக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா” இன்று கடைசி நாள் பணம் தாருங்கள் என்றான்..

 

 

 

அப்போது “அரசி டேய் உனக்கு தேவையானதெல்லாம் அவருடைய நினைவில் எப்படி டா இருக்கும் இவனுக்கு என்ன தேவை என்று தான் யோசிப்பார்” என்றார் ..

 

தீரன் அரசியை முறைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.அப்பொழுது தேவா சிரித்துக் கொண்டே “ஆது உனக்கு நான் நேற்று மாலையை எக்ஸாம் பீஸ் கட்டி விட்டேன்” என்றான் .

 

அண்ணா தேங்க்யூ அண்ணா என்றால் ஆனால் தான் என்று சொல்லிவிட்டு அவனை குனிய சொல்லி அவனது தாடையில் முத்தம் வைத்தான்.

 

 

“ஆது என்னும் ஆதர்ஷ்”

தீரன் குழலரசியின்  ஒரே மகன் அரசிக்கு தனது மகன் தேவாவை கொஞ்சுவது பொறுக்காமல் வயிறு எரிந்தது.

 

கோபமாக தனது மகனிடம்  “டேய் அவனையே கொஞ்சு டா”  நீயும் உனது அப்பாவே போல் “உன்னை பெற்ற தாய் இங்கு இருக்கேன் ஞாபகம் இருக்கிறதா” என்றார் ..

 

என்ன சொன்னீர்கள் என்று கேட்டான் ஆது “உன்னுடைய அம்மா “உன்னை பெற்றவள் “என்றார் அரசி ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்.

 

 

என்னைப் பெற்றவர் என்னை பெற்றது மட்டும் தான் நீங்கள் என்றான் டேய் ஆது என்னடா பேச்சு பேசுகிறாய் என்று தேவா கடிந்தான் தனது தம்பியை அண்ணா கொஞ்சம் பொறுங்கள்…

 

 

” என்னால் உங்களைப் போல் அமைதியாக எல்லாம் சென்று விட முடியாது என்றான்” ஆது . “அப்படி சொல்லுடா எனது இளைய மகனே” என்று சொல்லி தீரன் கைதட்டி சிரித்தார்..

 

 

 

அரசி தனது கணவனையும் தனது மகனையும் முறைத்தார் “அப்பனை போல பிள்ளை வந்து பிறந்து இருக்கிறது” நான் என்ன செய்வது என்றார்.

 

 

அம்மா ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “நீங்கள் அண்ணனையும் உங்களது மகனைப் போல் வளர்த்திருந்தால்” நன்றாக இருந்திருக்கும். அது மட்டுமில்லாமல் நீங்கள் சொன்னது போல் நீங்கள் என்னை பெற மட்டும் தான் செய்தீர்கள்..

 

 

என்னை முழுக்க முழுக்க வளர்த்தது அண்ணன் தான் அப்போது எனக்கு அப்பாவின் குணமும் அண்ணனின் குணமும் தானே இருக்கும் அந்த குணம் தானே வேலை செய்யும்…

 

 

 

“நீங்கள் சந்தோஷமாக வாழ்வதற்காக அண்ணனை எடுத்து எறிந்து பேசுவது சரியில்லை” என்றான். “நான் என்னடா அப்படி சந்தோஷமாக வாழ்ந்து விட்டேன்” என்றார் அரசி.

 

 

அம்மா போதும் எனக்கு நேரம் ஆகிறது உங்களிடம் பேசிக்கொண்டு நேரத்தை வளர்த்த நான் தயாராக இல்லை என்றான் அப்பொழுது தேவா “ஆது வா இன்று உனக்கு பிராக்டிக்கல் இருக்கிறது என்று சொன்னாய் நேரம் ஆகிறது பார்” சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் பள்ளிக்கு கிளம்ப பஸ் வந்துவிடும் என்றான் ..

 

 

 

ஆது சரி என்று விட்டு தனது தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆது சாப்பிட அமர்ந்தான் “தேவா அவனுக்கு சாப்பாடு போட்டு ஊட்டி விட்டான் அதில் தாயின் அன்பை முழுமையாக பெற்றான் ஆது”

 

 

அண்ணா நீங்களும் என்னுடன்  உட்கார்ந்து சாப்பிடுங்கள் உங்களுக்கும் மீட்டிங் இருக்கிறது என்று சொன்னீர்களே என்று கேட்டான்.

 

 

இல்லை டா நான் போய் கொள்வேன் ஒன்றும் பிரச்சனை இல்லை உனக்கு தான் முதலில் நேரமாகிறது நீ சாப்பிட்டு கிளம்பு என்றான் சரி என்று விட்டு சாப்பிட்டு எழுந்தான் ஆது..

 

தேவா அவனுக்கு என்னென்ன தேவை என்று பார்த்து பரிமாறி அவனை சாப்பிட வைத்து அவனுக்கு மதிய உணவும் லஞ்ச் பாக்ஸில் கட்டி வைத்து அவனை அழைத்துக் கொண்டு சென்று நேரத்திற்கு பஸ் ஏத்தி விட்டு வந்தான்…

 

 

 

தேவா ஆதுவை பஸ் ஏத்தி விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் தனது சித்தியிடம் “சித்தி சாப்பிடுகிறீர்களா உங்களுக்கு பிடித்த தேங்காய் சட்னி சாம்பார் வைத்திருக்கிறேன்” என்றான் அதற்கு அரசி தேவாவை முறைத்துவிட்டு ஒன்றும் தேவையில்லை .

 

 

எனக்கு பசிக்கும்போது நான் போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் அதற்கு கூட “உன்னை தான் வேலை வாங்குகிறேன் என்று உன் அப்பாவும் உன் தம்பியும் என்னிடம் ஏறிக்கொண்டு வருவார்கள்” ஒன்றும் வேண்டாம் என்றார் …

 

 

 

அரசி அவ்வாறு சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டார் தேவா தனது சித்தியை பார்த்து சிரித்து விட்டு அவனது அறைக்குச் சென்று “அலுவலகத்திற்கு நேரமாகுவதால் வீட்டில் போட்டு இருந்த உடைகளை கலைத்துவிட்டு அலுவலகம் செல்வதற்கு நேர்த்தியான உடை அணிந்து கொண்டு அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான்”..

 

 

“அவனது அறையில் இருந்து வெளியில் வந்தவனை தீரன் ஆசை தீர பார்த்து உச்சி முகர்ந்தார்” உன்னை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டேன் ..

 

 

என்னுடைய பாருவும் இதற்கு தான் ஆசைப்படுவாள் என்றவுடன் அரசி திரும்பி தனது கணவனை முறைத்தார் அப்பா கொஞ்சம் அமைதியாக இருங்கள் ..

 

 

ஏன் எப்பொழுது பார்த்தாலும் சித்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் “அம்மாவை பற்றி பேசினால் சித்திக்கு கோபம் வருகிறது என்று தெரிகிறது தானே” ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்றான் ..

 

 

“டேய் நான் அமைதியாக இருந்தாலும் உனது சித்தியின் வாய் அமைதியாக இருக்காது” நீ கிளம்பு சாப்பிட்டு விட்டு நேரமாகிறது பார் என்றார் ..

 

அவன் வேறு எதுவும்  பேசாமல் தனது “அன்னை பார்வதி தனது தந்தையால் அன்பாக பாரு என்று அழைக்கப்படும் பார்வதி” …

 

 

 

போட்டோவில் மாலை போட்டு இருப்பவரிடம் சென்று விளக்கேத்தி சாமி கும்பிட்டு விட்டு தனது அம்மாவை வணங்கி விட்டு உணவு மேசையின் மீது உட்கார்ந்து காலை உணவை சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு செய்ததை தனது சிறிய டிபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு அவனது அலுவலகத்தை நோக்கி சென்றான்…

 

 

 

போகும் “தேவாவை வன்மத்தோடு அரசியும் போகும் தனது மகனை வாஞ்சனையாக தீரனும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்”..

 

                           ×××××

 

 

 

“அடியே வருணி சீக்கிரம் எழுந்து விடு டி உன்னை எவ்வளவு நேரம் எழுப்புவது எட்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னாய் இப்பொழுது மணி 7:30.

 

 

8:00 மணிக்கு மீட்டிங் என்றால் 7:30 மணிக்கு எழுந்து “அவசர அவசரமாக காக்கா குளியல் குளித்துவிட்டு காக்கா போல் லேசாக கொத்திவிட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறாய்” சீக்கிரம் எழுந்து தொலை டி..

 

 

“உன்னை திட்டுவதை விட உனக்கு செல்லம் கொடுக்கும் உன் அப்பாவை தான் சொல்ல வேண்டும்”

 

 

என் மகளுக்கு எப்போது எழுந்து கொள்ள வேண்டும் என்று தெரியும் என்று எப்பொழுது பார்த்தாலும் உனது புராணத்தை பாடி கொண்டு இருக்கிறார்

என்று ” தனது ஆசை அருமை புதல்வி ஒரே மகளான வருணிகா”வை எழுப்பிக் கொண்டிருந்தார் கலைமணி…

 

 

 

வருணிகா சிரித்த முகமாக எழுந்து தனது தாயைப் பார்த்து லேசாக  முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே “கலை என்னை திட்டாமல் எழுப்ப உன்னால் முடியாது தானே” 

 

“எவ்வளவு தான் அப்பா உன்னிடம் கத்தி கத்தி சொன்னாலும் என்னை கத்தி எழுப்புவதை மட்டும் நீ  நிறுத்த மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்றாள்  

 

 

கலை தனது மகளை முறைத்து விட்டு ஏன் டி சொல்ல மாட்டாய் எல்லாம் உனது அப்பா தரும் இடம் மணி 7.30 ஆகப்போகிறது எட்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னாய் என்றார்…

 

 

“நான் சொன்னேன் தான்  அதற்கு பாசமாக கூட வந்து எழுப்பலாம்” ஆனால் “எந்த நேரம் பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே எழுப்புகிறாய்” அப்புறம் எப்படி அன்றைய நாள் நல்ல நாளாக எனக்கு முடியும் என்றாள்..

 

 

 

ஆமாம் “நான் உன்னை திட்டாமல் எழுப்பி விட்டால் மட்டும் உனக்கு அன்றைய நாள் நல்ல நாளாக  தான் நீ அமைத்துக் கொள்வாய் பார்”

 

 

” தினமும் ஏதாவது ஒரு வம்பு சண்டையை இழுத்துக் கொண்டுதான் இருக்கிறாய் ” இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு  என்றார்..

 

 

 

சீக்கிரம் எழுந்து கொள் டி ” தினமும் அவசரமாக எழுந்து காக்கா குளியல் தான் குளிப்பாய் என்றார் ” 

 

 

போதும் “அழகாக என்னை பெற்றுவிட்டு எப்போது பார்த்தாலும் என்னை காக்கா காக்கா என்று காக்கா உடனே ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் “என்று தனது தாயிடம் பழுப்பு காண்பித்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்..

 

 

 

நம் கதையின் நாயகி “வருணிகா” தனது தந்தை மாணிக்கம் தாய் கலைமணி இருவரும் தவமிருந்து பெத்த ஒற்றை புதல்வி இருவரின் செல்ல மகள்..

 

 

இப்படி “வீட்டிற்கு ஒற்றை மகளாக செல்ல மகளாக வளர்ந்த வருணி என்கிற வருணிகாவும் தனது பெற்ற தாய் இல்லாமல் தந்தையின் அன்பாலும் தனது சித்தியின் கொடுமையாலும் தனது தம்பி ஆதர்ஷ் என்கிற ஆ

துவின் பாசத்தாலும் வளர்ந்து கொண்டு இருக்கும் தேவா என்கிற தேவ மித்ரனும் வாழ்க்கையில் எவ்வாறு இணைய போகிறார்கள் என்பதே புவிதழில் பூத்த புன்னகையே “

 

 

தொடரும்…

 

அன்புடன் 

 

 

❣தனிமையின் காதலி❣

 

    The post பூவிதழில் பூத்த புன்னகையே.. appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88%e0%ae%af/feed/ 0 17303
    அபிநயம் காட்டும் ஆரணங்கே https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/#respond Sun, 31 Dec 2023 08:19:55 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/   அபிநயம் காட்டும் ஆரணங்கே!   “அனன்யா…”   “சொல்லு விஜய்…”   “நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?”   “கேளுங்க… என் கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கிறீங்க…”   “இது உன் பெர்சனல் அதான்…”   “ஓஹ்…”   “உனக்கு நிஜமாவே இந்த ஃபீல்ட்… அதாவது ஆக்டிங் பிடிக்குமா?” என்று நேரடியாகவே கேட்டான் விஜய்.   அவளோ அவனை பார்த்து இதழ் பிரித்து சிரித்து, “தாங்கஸ்…” எனக்

    The post அபிநயம் காட்டும் ஆரணங்கே appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

     

    அபிநயம் காட்டும் ஆரணங்கே!

     

    “அனன்யா…”

     

    “சொல்லு விஜய்…”

     

    “நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?”

     

    “கேளுங்க… என் கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கிறீங்க…”

     

    “இது உன் பெர்சனல் அதான்…”

     

    “ஓஹ்…”

     

    “உனக்கு நிஜமாவே இந்த ஃபீல்ட்… அதாவது ஆக்டிங் பிடிக்குமா?” என்று நேரடியாகவே கேட்டான் விஜய்.

     

    அவளோ அவனை பார்த்து இதழ் பிரித்து சிரித்து, “தாங்கஸ்…” எனக் கூறி இன்னும் சிரித்தாள்.

     

    “இப்ப ஏன் சிரிக்கிற…”

     

    “இதுவரை யாரும் இப்படி ஒரு குவஸ்டீனை கேட்டது இல்ல… அதான்…” என்றவள் தொடர்ந்து, “நீங்க கேட்ட குவெஸ்டீனுக்கு உண்மையான ஆன்சர் பண்ணனுமா? இல்ல பொய்யாவா?” என்று கேள்வியுடன் அவனை பார்த்தாள்.

     

    “ஹ்ம்ம்… பொய்யாவே ஆன்சர் சொல்லு…”

     

    “எனக்கு இந்த ஃபீல்ட் ரொம்ப ரொம்ப ரொம்பபபபப பிடிக்கும் விஜய்…”

     

    “என்ன சொல்ற… அப்போ உண்மையான ஆன்சர்?”

     

    “நான் சொன்னதுக்கு ஆப்போசிட் தான் உண்மையான ஆன்சர்…” என்று சொல்லி கண்ணடித்தாள் அனன்யா.

     

    “ஓகே… உனக்கு பிடிக்காத ஆக்டிங்கை நீ ஏன் செய்யறேன்?”

     

    “கம்பல்ஷன்..‌.”

     

    “வாட் கம்பல்ஷனா!” என்றான் அதிர்ச்சியாக!

     

    “ஏன் விஜய் ஷாக் ஆகறீங்க… ரிலாக்ஸ்!”

     

    “எனக்கு புரியல அனன்யா…”

     

    “என் வீட்டுல அப்பா ஒரு மிகப்பெரிய ஆஸ்கார் அவார்ட் வாங்கின ஆக்டர்… அம்மாவும் ஒரு சிறந்த ஆக்ட்ரஸ்… தேசிய விருதெல்லாம் நிறைய வாங்கி இருக்காங்க… அக்கா ஒரு வளர்ந்து விட்ட இளம் கதாநாயகி… இளைஞர்கள் மத்தியில் அதிக மவுசு கூட இருக்கு… இப்படி என்ன சத்தி இருக்குற எல்லாரும் ஆக்டிங் ஃபீல்ட்… சோ, என்னையும் கம்பல் பண்ணி இழுத்து விட்டுட்டாங்க…” என்று வெறுமையான குரலில் சொன்னாள் அவள்.

     

    மேலும், “எனக்கு இதுல சுத்தமா இன்ரெஸ்ட் இல்ல… ஆனாலும் கட்டாயத்தின் பேர்ல செஞ்சிட்டு வரேன்…” என்றாள்.

     

    “இது எல்லாம் கூட ஓகே… நீ ஏதாவது பங்ஷன்ல போட்டுட்டு வரும் டிரஸ் எதுலையும் நீ கம்ஃபர்ட்டபிளா இருக்க மாட்ட… அத ஏன் வியர் பண்ற…” என்று பல நாட்களாக தோன்றும் கேள்வியை இன்று கேட்டு விட்டான் விஜய்.

     

    “இதுவும் கம்பல்ஷன் தான் விஜய்… நான் போடற டிரெஸ்ஸில் இருந்து சாப்பிடும் சாப்பாடு வரைக்கும் எல்லாம் கம்பல்ஷன் தான்… சொல்ல போனா நான் காலையில எழுந்துக்கும் டைமில் இருந்து தூங்கும் டைம் வரைக்கும் எல்லாமே லிஸ்ட் இருக்கும்… இத பண்ணு… அத பண்ணாத… இப்படி இரு… இப்படி இருக்காத… இப்படி பேசு… அப்படி பேசாத… இப்படி எல்லாத்துக்கும் ஒரு ரூல் புக் இருக்கு… ஆரம்பத்துல இது எல்லாம் ரொம்பவே வெறுத்தேன்… எதையும் பண்ண மாட்டேன்னு அடம் பிடிப்பேன்… அப்படி செய்த அடுத்த நிமிஷம் லைனா ஃபோன் வரும்… அப்பா ஹிந்தியில திட்டுவார்… அம்மா தமிழ்ல திட்டுவாங்க… என் அக்கா இங்கிலிஷ்ல திட்டுவாங்க… அம்மா அப்பா ஆச்சும் பரவாயில்ல… அக்கா எல்லாத்தையும் பச்சையாவே கேட்டு திட்டுவா… இது எல்லாத்தையும் கேட்டு கேட்டு அப்படியே பழகி போச்சு விஜய்…” என்று உயிர்ப்பற்ற நிலையில் இருந்து பேசினாள்.

     

    “உனக்கு பிடிக்காது ன்னு சொல்லிட்டே ஆக்டிங்கை நீ ஆவ்சமா பண்றீயே அனன்யா…”

     

    “ரியல் லைஃப்ல நடிச்சி நடிச்சி… ரீல்ல செமயா நடிக்க கத்துக்கிட்டேன் போல விஜய்…” என்று விரக்தியில் கூறியவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.

     

    ‘இந்த குடும்பத்துல இப்படி ஒரு பொண்ணா!’ என்று வியக்கவும் செய்தான்.

     

    ஒரு கியூட் சாப்ட் ஆன காதல் கதையை பார்க்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க செல்லமே!

      The post அபிநயம் காட்டும் ஆரணங்கே appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/feed/ 0 16932
      கல்யாணமே! வைபோகமே! https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/#respond Wed, 30 Aug 2023 07:59:05 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/ கல்யாணமே! வைபோகமே! டீசர் 1                    “உன்ன வச்சுட்டு ஒன்னுமே பண்ண முடியாது ரோ… எல்லாத்தையும் காட்டி காட்டி குடுத்துடுற… போச்சு அம்புட்டும் ப்ளாப் ஆனது தான் மிச்சம்… அத்தனையும்  வேஷ்ட்… இனி எப்போ தான் அவ புடவை கட்டி நிக்குறத பார்க்கப்போறேனோ!… போடா…” என்று செல்லக்கோபத்தோடு உரையாடிக்கொண்டிருந்தவளின் இதழ்களும் முகமும் கொஞ்சம் கூட கடினத்தை காட்டவேயில்லை…                      “அவ புடவை கட்டி வந்து பங்சன்க்கு வர்றவனெல்லா அப்டியே தெரிச்சு

      The post கல்யாணமே! வைபோகமே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

      கல்யாணமே! வைபோகமே!

      டீசர் 1

       

                       “உன்ன வச்சுட்டு ஒன்னுமே பண்ண முடியாது ரோ… எல்லாத்தையும் காட்டி காட்டி குடுத்துடுற… போச்சு அம்புட்டும் ப்ளாப் ஆனது தான் மிச்சம்… அத்தனையும்  வேஷ்ட்… இனி எப்போ தான் அவ புடவை கட்டி நிக்குறத பார்க்கப்போறேனோ!… போடா…” என்று செல்லக்கோபத்தோடு உரையாடிக்கொண்டிருந்தவளின் இதழ்களும் முகமும் கொஞ்சம் கூட கடினத்தை காட்டவேயில்லை…

       

                         “அவ புடவை கட்டி வந்து பங்சன்க்கு வர்றவனெல்லா அப்டியே தெரிச்சு ஓடுறதுக்கா! அப்புறம் யாருக்காது சேதாரம் ஆச்சுன்னா நான் காம்பண்சேட் பண்ண முடியாதுப்பா…” என்று வாய்கிழிய பேசியபடியே இருந்தவனின் முன்னே நின்றவள் ஒருமாதிரி சிரித்துவைக்க, அப்பொழுது தான் தன் உணர்வு வந்து சுதாரித்தவனாய் தன் முதுகிற்கு பின்னே நின்றிருந்தவளை திரும்பி பார்த்து அசடு வழிந்தான்….

       

                      “ஹீஹீஹீ…. மாயா… என்னடி அதுக்குள்ள ரெடியாகி வந்துட்ட… மகி என்னமோ நீ புடவை கட்டிட்டு வரப்போறன்னு சொன்னா! நீ இப்டி டூ மினிட்ஸ் மேகி போல ஒரு டாப்ப மட்டும் போட்டுட்டு வந்து நிக்குற?…” என்று ஒன்றுமே தெரியாதவனைப் போல் கேட்க, 

        

                        “ஓவரா நடிக்காதா… நம்ம அல்ரெடி மகிக்கிட்ட மாட்டிக்கிட்டாச்சு… நீ ஷட் அப் பண்ணிட்டு கிளம்புற வழியப்பாரு…” என்று அவனை விரட்டிவிட்டு, “இந்த ட்ரெஸ் ஓகே தானே மகி…” என்று தோழியிடத்தில் பூவாய் புன்னகைத்து வைத்தாள்…

       

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

       

                        “உனக்கு கொஞ்சமாச்சும் சீரியஸ்னஸ் புரியுதா ரோ!… என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க?…” என்று கேட்டபடியே கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை கண்ணீர் வழிய பார்த்தபடியே கிட்டத்தட்ட கதறிக்கொண்டிருந்தாள் மாயா… இவளின் அதிகாரம் கலந்த குரலோசையில் மாயாவால் ரோ என்று அழைக்கப்பட்டவன் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக்கூட மறந்தவனாய் நின்றிருக்க, அவளுக்கு அருகினில் நின்றிருந்த மருத்துவர் மட்டுமே சூழ்நிலை உணர்ந்து,

       

                         “காம்டவ்ன் மாயா… இப்போ இருக்க உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு நீங்க அழக்கூடாது… ஸ்ரெயின் பண்ணிக்காதிங்க…” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்… ஆனால் அவளோ மருத்துவரின் வார்த்தைகளை கொஞ்சமும் ஏற்காதவளாய்…

       

                          “என்னால எப்டி டாக்டர் அழாம இருக்க முடியும்? எனக்கு இந்த முகத்தை பார்க்க பார்க்க மனசெல்லா அவ்ளோ வலிக்குது… பயமா இருக்கு… இந்த முகத்தோட எப்டி என் வாழ்க்கைய வாழப்போறேன்! எப்டி எல்லாரையும் ஃபேஸ் பண்ண போறேன்னு அவ்ளோ பயமா இருக்கு… இது எல்லாத்தையும் விட இந்த முகத்த வச்சுட்டு ஒருத்தி மாயா மாயான்னு அத்தனை பாசமா சுத்தி சுத்தி வருவாளே! இப்போ அவ இல்லையேன்னு நினைக்க நினைக்க வேதனையா இருக்கு…” என்று மழலையாய் மாறி தேம்பி தேம்பி அழுதவளை தேற்றக்கூட முடியாத நிலை தான் அனைவருக்கும்…

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😥😥

       

                        “ஹேய் மாமா… ஒருவழியா உன்னோட ஏஞ்சல் அப்பத்தா ஐயாவோட அறுபதுக்கு கெளம்பி வந்துட்டு இருக்கா போல…” என்று ஆரம்பித்தவனை வெட்கம் வழியும் புன்னகையோடு எதிர்கொண்டவன் அவனை சமாளிக்கும் விதமாய்,

       

                          “ஆரம்பிச்சுட்டியா? போய் பொழப்ப பாத்து புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வேலய பாருங்கடா… ஏன்டா என்கிட்டேயே ஒரண்டை இழுக்க வாரீங்க?…” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு நழுவிவிட வேண்டுமே என்கின்ற முனைப்போடு, “ஹோய்.. இந்தா அதாருப்போய் கழனிக்குள்ள ஆடுமாட ஓட்டிவுடுறது?… ஏலேய் ஏலேய் ஒன்னத்தேன் சொல்லிட்டு இருக்கேன்…” என்றபடியே ஓட,

       

                             “மாறா… என்கிட்டயே சாமாளிச்சுப்புட்டு ஓடுறியா? மகி மட்டும் வரட்டும் அப்புறமிருக்குது ரெண்டுபேத்துக்கும் கச்சேரி… போனமுறை என்னையும் என் பொண்டாட்டியையும் என்ன ஓட்டு ஓட்டுனிங்க?…” என்று கத்த, இவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே சிரித்தபடி சென்றவன்,

       

                            “அதெல்லா நடக்கும்போது பாப்போமுடேய்…” என்றுவிட்டு ஓடிவிட்டான்…

       

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

       

                         “அடேய் கலியாண வேல எம்புட்டு குமிஞ்சு போய் கெடக்கு நீயென்னடான்னா தேமேன்னு விட்டத்த விட்டத்த வெறிச்சு பாத்துக்குட்டு கெடக்குறவேன்… எழுந்திரிச்சு வாடா… உன் கூட்டாளிக எல்லா வாசல வாசல பாத்துக்குட்டு திரியுறாய்ங்க…” என்ற கணீர் குரலில் சட்டென்று சுதாரித்தவன் கண்கள் தாண்டி காதிற்குள் புகுந்து நமைச்சல் கொடுத்த  கண்ணீரை துடைத்துவிட்டபடி எழுந்து அமர, கும்மென்று இருந்த இருட்டு அறை பளிச்சென்று விளக்கொளியில் மின்னி அவனின் கண்களை கூசசெய்து இமைகளை மூடவைத்தது….

       

                              “ப்ச்… ஏம்ப்பத்தா இப்டி உசுர வாங்கிட்டு இருக்க? முடியல யாரும் வந்து தொந்தரவு பண்ணாதிங்கன்னு சொல்லிட்டு தானே வந்து படுத்துக்கெடக்கேன்… அதுக்கு பொறவும் வந்து இப்டி சதி பண்ணுறியே!…” என்று விழிகளை இறுக்க மூடியபடியே கத்த… அவனின் முகத்தையே விழியகலாது உற்று பார்த்தவர்,

       

                               “முடியலன்னு சொல்லிட்டு வந்து அழுதுக்குட்டு கெடந்தியாடா போக்கெத்தவனே!… எம்பேத்தி வந்துட்டாளாம் கூப்புடுறதுக்கு நீ போறியா இல்ல வேற ஆறயாச்சும் அனுப்பவான்னு கேக்கத்தேன் நான் வந்தேன்… போவ முடியாதுன்னா சொல்லு நாம்பாட்டுக்க வேற ஆள அனுப்பிவுடுறேன்… ரொம்பத்தான் சலம்பிக்கிட்டு….” என்று சொன்னது தான் தாமதம், வயதான கிழவி என்று கூட பார்க்காமல் கைகளில் கொத்தாக அள்ளி தூக்கியவன்,

       

                               “இப்ப முடியாதுன்னு எந்த கிறுக்கன் சொன்னதுப்பத்தா… நீ எதுக்கு முடியாத நேரத்துல படியேறி வர்றன்னு தான்… சத்தம்போட்டு ஒரு வார்த்த சொல்லியிருந்தா நானே துள்ளி துள்ளி ஓடி வந்துருக்க மாட்டேனா!..” என்று குதூகலிப்போடு சொல்லிவிட்டு, பூவைப்போல பத்திரமாய் அப்பத்தாவை மாடிப்படிகளில் தூக்கி வந்தபடியே கீழே இருந்த ஹாலில் இறக்கி விட்டுவிட்டு, சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல வெளிவாசலை நோக்கி பறந்திருந்தான்… 

         

        The post கல்யாணமே! வைபோகமே! appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/feed/ 0 15653
        பூ மகளின் காதல் எந்தன் நெஞ்சம் https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86/#comments Fri, 25 Aug 2023 17:41:38 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86/   “எதற்காக என் பின்னே வந்து  கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் ?”வார்த்தைகள் கோபமாக வெளியே வரவில்லை தான்’ ஆனாலும் அவனுடைய விழிகள் வெறுப்பையும் கோபத்தையும் உமிழ்ந்தது. அந்த கண்களில் தெரியும் அதீத கோபத்தையும் வெறுப்பையும் பெண்ணும் உணர்ந்துதான் இருந்தாள்.   உங்ககிட்ட ஒன்னு கேட்க வேண்டும்.   என்ன கேட்க வேண்டும்? சிடு ….. சிடுத்தான் ஆடவன்.   அவனுடைய கைகள் இரண்டும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்க

        The post பூ மகளின் காதல் எந்தன் நெஞ்சம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

         

        “எதற்காக என் பின்னே வந்து 

        கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் ?”வார்த்தைகள் கோபமாக வெளியே வரவில்லை தான்’ ஆனாலும் அவனுடைய விழிகள் வெறுப்பையும் கோபத்தையும் உமிழ்ந்தது. அந்த கண்களில் தெரியும் அதீத கோபத்தையும் வெறுப்பையும் பெண்ணும் உணர்ந்துதான் இருந்தாள்.

         

        உங்ககிட்ட ஒன்னு கேட்க வேண்டும்.

         

        என்ன கேட்க வேண்டும்? சிடு ….. சிடுத்தான் ஆடவன்.

         

        அவனுடைய கைகள் இரண்டும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்க தலையை மட்டும் அவ்வப்பொழுது திருப்பி அவளிடம் பேசிவிட்டு அடுத்த நொடியே தலையையும் திருப்பிக் கொண்டு வேலையில் கவனம் பதிக்க ஆரம்பித்து இருந்தான்.

         

        அவனுடைய செயல் பேதைக்கு எரிச்சல் அளித்தாலும் அவனிடம் இப்பொழுது தான் கேட்க வேண்டியதை கேட்க முடியாமல் தயங்கி படியே நின்று கொண்டிருந்தாள். “இவனிடம் பேசுவதற்கு பல நாட்களுக்கு முன்பே பேசி பயிற்சி கொண்டிருக்க வேண்டும் போல? எப்படித்தான் இப்படி எல்லாம் இவனால் மட்டும் பேச முடிகிறதோ?”

         

        “என்ன வேண்டும்?” தலையை திருப்பாமல் இந்த முறை சற்று குரல் உயர்த்தி கேட்க,

         

        அது….. அது வந்து

         

        அவள் பேசி முடிக்கும் முன்னரே “எது வந்து? என்னவென்று ஒழுங்காக சொல்லிவிட்டு கிளம்பு. எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நீ யோசித்து கொண்டு தான் பேசுவாய் என்றால்? வெளியே சென்று பொறுமையாக யோசித்து விட்டு வந்து பேசு. நீ பேசு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது”.

         

        இவன் என்ன மனிதனா? இல்லை கோபத்தாய்க்கு பிறந்த நெருப்பு முட்டையா? நினைத்தவள் சற்று தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை காட்டி ‘அங்கிருந்து எனக்கு நான்கு முட்டைகளை எடுத்து தருகிறீர்களா?’

         

        “அது என்ன முட்டை?” அவள் கையை நீட்டிய பக்கம் தலையை திருப்பி பார்த்தவன் அவளை முறைக்க ஆரம்பித்திருந்தான்.

         

        அவன் முறைப்பை உணர்ந்தவள் “அது வந்து எனக்கு சின்ன வயதில் இருந்து வளர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான்” தயங்கியபடியே கூற,

         

        ஏன் உனக்கு இந்த கோழி முட்டை வாங்கி வைத்து கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் வராதா? பாம்பு முட்டை எடுத்து தான் பாம்பு வளர்க்க வேண்டும் என்ற ஆசை வருதோ? ஏன் இந்த ஊரில் உனக்கு வேற யாருமே கிடைக்கவில்லையா? என்னைப் போய் அந்த பாம்பு புற்றில் கையை விட சொல்கிறாய்? உனக்கு வேண்டுமென்றால் நீ போய் எடுத்துக் கொள். பாம்பு குட்டியை வளர்க்க வேண்டுமாம்! இன்னொரு முறை இந்த பக்கம் வராதே! பைத்தியம்’ திட்டிவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் கவனத்தை பதிக்க,

         

        அவன் பாம்பு முட்டையை எடுத்து தர மாட்டேன் என்று கூறியதில் முகம் வாடியவள் அந்த புற்றையே பார்த்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

        • Select

        The post பூ மகளின் காதல் எந்தன் நெஞ்சம் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%aa%e0%af%82-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86/feed/ 1 15592