About

salma amjath khan

எழுத்துகளின் மேல் இருந்த மோகம் எழுதுவதில் மாறி எழுத தொடங்கிவிட்டேன். எனக்கென ஒரு அடையாளம் இல்லாததால் அந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிகரமாக பயணித்து வருகிறேன். விரைவில் அந்த அடையாளத்தை அடைவேன் என்ற நம்பிக்கையில் நான், சல்மா அம்ஜத் கான்.

salma amjath khan
3

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

பழி தீர்க்க வந்தாயோ காதலியே - டீசர்

"ப்ரீத்தி ஆர் யூ ஸ்யூவர்?""எனாஃப் நவீன். நாம் இதை பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணியாச்சு. ஐ கான்ட் சேன்ஜ் மை...

Reviews

பாரங்கும் பார்த்ததில்லை

பாரங்கும் பார்த்ததில்லை இவள் போல் ஒரு வசியகாரியைபேசும் பேச்சைவிடஎழுதும் எழுத்தால் செய்வினை செய்திடுவாள்வசியம் செய்திடுவாள்மனமும் நிறையவைத்து கண்முன் நிகழவும் வைத்திடும் இவள் கதைஇவளோ எழுதும் எழுத்தால் இயற்றிடுகின்றாள் இன்னொரு கீதை..

காதலில் நித்தமும் நனைகிறேன்

ரொம்ப அழகா இருந்துச்சு கிளைமாக்ஸ். பார்க்கும் போது என்ன உணர்வு தோன்றும் தெரியாது. ஆனால் படிப்பதற்கு காமம் என்ற ஒன்றை தாண்டி அந்த காதல் அழகாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்னு தோணுது. உங்கள் ஆழமான காதலில் நித்தமும் நனைகிறேன். அருமை.

ரசிக்க தூண்டும் ஊடல்

இந்த ஸ்டோரி முடியுறதுக்குள்ள எங்க எல்லாரையும் காதலிக்க வச்சிருக்கீங்க போல. அழகான காதல். ரசிக்க தூண்டும் ஊடல். மோதலில் ஆரம்பிக்கிறது எந்த காதலும் சுவாரஸ்யம் தரும் பொக்கிஷம் தான்.

so cute and Lovely story

sema love story. first தியா கல்யாணம் வேணாம்னு சொல்ற காரணங்களை கேட்டப்ப என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுதேன்னு தோணுச்சு. ஆனால் அதுக்கு சரண்யா சொல்ற விளக்கங்களும் உதாரணங்களும் ரொம்ப அழகாய் இருந்தது அதை கேட்டு தியா மனசு மாறுனதும் நிம்மதியா இருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் தியா பண்ண அலம்பல் செம.ஸ்வேதா பற்றிய flashback எதிர்பார்க்காதது.இது எல்லாத்தையும் தூக்கி சாப்டற மாதிரி கடைசியில ஆதி தியாவை பார்த்ததுல இருந்து நடந்த்தை சொல்லும் போது அட பாவி ன்னு ஒரு feel ஏற்படறத தடுக்க முடிலபா பய புள்ள என்னா வேல செஞ்சிருக்கு இது தெரியாம ஆதிய வேற firstல எல்லாம் திட்டிகிட்டி இருந்தேன் SO sad.அதி,தியா Jodi so cute and lovely. Lovely story

இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும்

உங்க கதையை படிக்கும்போது இதழில் புன்னகை இருந்துக்கொண்டே இருக்கும் அவ்வளவு அருமையாக காதல் சொல்லி இருக்கிறீர்கள்.

Interview Questions

எழுத்துகளின் மேல் தீராக்காதல். ஆன்லைன் கதைகளை விட புத்தகத்தின் மீது நாட்டம் இருந்த நேரமது.  சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை வாங்கி வந்த நாளே முடிந்துவிடுபவள். அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்தேன். என் வகுப்பிற்கு புதிய பேராசிரியர் வந்திருந்தார். அவர் பெயர் கண்மணி. எங்களிடம் எங்கள் பெயர், எதிர்கால இலட்சியம், பொழுதுபோக்கு என கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நான் என்னை பற்றி கேட்கும் போது நான் ஒரு புத்தகபுழு என்றேன். "வாவ். சூப்பர் எந்த மாதிரியான புத்தகங்களை விரும்பி படிப்பீர்கள் என கேட்டார். அதற்கு நான் எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பேன். சுஜாதா , ராஜேஷ் குமார், ரமணி சந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன்,கல்கி,வசுமித்ர போன்ற தமிழ் எழுத்தாளர்களின் வாசிப்பும், ரவீன்ந்தர் சிங் , சுதீப் நகர்கர், துர்ஜாய் தத்தா, டேல் கார்ஜின், ஷேக்ஸ்பியர், சிட்னி ஷெல்டன், டால்ஸ்டாய் போன்ற ஆங்கில புத்தகங்களையும் விரும்பி படிப்பேன் எனவும் கூறினேன்.
அதற்கு அவரும் சிறந்த எழுத்தாளர் தான். நீ என்றாவது எழுதியது உண்டா ? என கேட்டார். இல்லை என என் தலையை ஆட்டிய போதும் ஏன் எழுத கூடாது என்ற கேள்வி மனதில் அந்நொடியே எழுந்தது. குழப்பத்துடனே உட்கார்ந்தேன். நான் தனிமையை அதிகம் விரும்புபவள், முழு நேரமும் கற்பனை உலகில் வலம் வருபவள். நான் ஏன் என் கற்பனைக்கு உயிர் ஊட்ட கூடாது என யோசித்தேன். அவர் கேட்ட ஒரே ஒரு கேள்வி என்னுள் பல கேள்வியை எழுப்பி ஐந்தே நிமிடத்தில் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவை ஆழமாக வேரூன்றியது.

எழுத்துப்பிழை என்னைப் பொறுத்தவரை பிழையே இல்லை. "ஏனினெல் எத்துழுகக்ள் தறாவக இக்ருகும் பசட்தித்லும் நமாம்ல் புந்ரிது கொள்ள முயுடிம்." இந்த எழுத்துகளை போல். ஆனால் கருத்துப்பிழை நம்மை அறியாமலே அடுத்தவர் வாழ்வில் அது பிரச்சனையாக முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு வாசகர் ஒரு கதையை வாசிக்கும் போது தன்னையும் அந்த உலகத்தில் புகுத்தி விடுகிறான். அந்த கதையுடன் அவனும் நகர்கிறான். அவனுடைய சிந்தனை எல்லாம் எழுத்தாளர் எப்படி கூறுகிறாறோ அப்படியே இருக்கும். ஒரு பெரிய ட்ரக் டீலரை கூட ஹீரோவாக காட்டும். விளைவு என்ன? ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் நாயகன் ஒரு அடங்கா பிடாரியை திருமணம் செய்து அவளை மிரட்டி மிரட்டி அவனின் அடிமை ஆக்குவான். இது கதைக்கு நன்றாகவே நன்றாக இருந்தது. யோசித்துப் பாருங்கள். இதுவே நீங்களோ உங்கள் அண்ணனோ தம்பியோ நம் அவளை திருத்தி அடிமையாக்குவேன் என ஒரு அடங்காபிடாரியை திருமணம் செய்தாள் என கூறினால் அவர்களின் நிலை.  

ஒரு வருணணையே எடுத்துக் கொண்டால், இளம் பச்சை நிற பட்டில் இளமஞ்சள் பார்டர் வைத்த புடவை அவளுக்கு அம்சமாக பொருத்தி இருந்தது. என்ற ஒரு வருணனை வாசகரின் மனதில் நன்றாக இருக்குமோ நாமும் வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் ஓடும். இதில் என்ன இருக்கிறது இது கருத்துப்பிழையா எனக் கேட்டால் இல்லை தான்.   ஆனால் வோட்காவுடன் ரெட் ஒயினை சேர்த்தால் வரும் சுவை வேறு எதிலும் வராது என கூறினால் ஒரு ஆணின் மனதில் ஏற்படும் மாற்றம் என்ன? எனவே எழுத்தாளர்களின் கருத்துப்பிழை கவனிக்க வேண்டிய ஒன்று.

விமர்சனங்களும் பேனாவுமே என்னை செதுக்கும் சிற்பியும் உளியும்