About

சுந்தரி செழிலி

இலக்கற்று நேரம் எனும் வாய்ப்பை பயன்படுத்தாமல் உலகம் எனும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நான் வாசிப்பின் மூலம் நீந்த ஆரம்பித்தேன். நீந்தி நீந்தி கவிதை எனும் சிறு படகினை பிடித்து எழுத்துலகில் என் பயணம் ஆரம்பமானது. அவ்வாறே கதை எனும் துடுப்பினை நேர்த்தியாக போட முயற்சித்து வெற்றி என்னும் கரையை எதிர்நோக்கி இப்பொழுது பயணித்து கொண்டிருக்கிறேன். அப்பயணத்தில் காதல், நட்பு, குடும்பம், புனைவு, மர்மம், சமூகம் சார்ந்து இதுவரை நான்கு நாவல்கள், ஒரு குறுநாவல், ஏழு சிறுகதைகள் எழுதியுள்ளேன். மேலும் தொடரும். என் பயணம் என்னால் மட்டும் தொடர்வது அல்ல. என்னை ஊக்குவித்த, ஊக்குவிக்கின்ற, ஊக்கிவிக்க போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்புக்கு - sundharisezhili2020@gmail.com இதுவரை எழுதியவை : நாவல்கள் 1. கனவினில் வந்த கள்வனே 2. மௌனமாய் எரிகிறேன் காதலிலே 3. உருவமறியா உயிர் காதலே 4. அகமெல்லாம் அவள் முகமே குறுநாவல் 1. இது காதல் சாபமா..? சிறுகதைகள் 1. விடியலாய் வந்தவளே 2. ஜுனிட்டர் காதலி 3. நெஞ்சில் முளைத்த பூவே 4. சிநேகமாய் நீ சிரித்துக்கொண்டே நான் 5. கானலாய் என் கல்லூரி நாட்கள் 6. தீட்டல்ல திட்டமே 7. சிங்கப்பெண்ணே

சுந்தரி செழிலி
12

Completed Books

2

Ongoing Books

Thoorigai Novels

சுவையோடு சுவடு - சுந்தரி செழிலி

­குட்டி குட்டி நிலாக்களாய் நீ..!உனை உடைக்கும் நொடி என்மனமுடைந்து ஏக்கமாய் நோக்கும் நான்..!கவலையில்...

Kindle

கனவினில் வந்த கள்வனே

இது எனது முதல் நாவல். கனவில் தோன்றியவனிடம் காதல் வயப்பட்டு தன் காதலனை நிஜத்தில் தீவிரமாக தேடும் ஓர்...

மௌனமாய் எரிகிறேன் காதலிலே...! : பாகம் - 1

காதல் ரொம்ப புனிதமானது. காதல் என்னும் உணர்வு நமக்குள் வந்தாலே நாம் நாமாக இருப்பதில்லை. காதல் அவ்வாறு...

மௌனமாய் எரிகிறேன் காதலிலே...! : பாகம் - 2

ரௌத்திரன் மேல் ஒருதலையாக காதல் கொண்ட நம் கதை நாயகி மலர்நிதி அவ்வப்பொழுது சில பல அர்ச்சனைகளையும்...

உருவமறியா உயிர் காதலே..: அன்பின் தேடல்

காதல்... காதல் என்றாலே அது ஒரு மாயம் மந்திரம் போல் தான். எப்பொழுது நிகழும்? எவ்வாறு நிகழும்? ஏன் நிகழ்கிறது?...

அகமெல்லாம் அவள் முகமே

பொதுவாகவே நாம் எதன்மீது தீராக் காதல் கொண்டோமோ அதனை நாமே வேண்டாம் என்று கூறும் நிலையை விதி ஏற்படுத்தி...

விடியலாய் வந்தவளே...!

ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு ஆணின் வாழ்க்கையிலும் எதிர்பாரமல் நிகழ்ந்த நிகழ்வு அவர்களின் வாழ்வை...

வந்தாய் ரட்சகனே..!

பெண்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் ரட்சிக்க வந்த ரட்சகன் இவன்.

Youtube

செவிக்குள் செழிலி

சிந்தையின் வழியே செதுக்கிய என் கவிதை மற்றும் கதைகளை என் குரல் மூலம் தங்களின் செவி வழியே செலுத்துவதற்காக...

Reviews

மௌனமாய் எரிகிறேன் காதலிலே விமர்சனம்

Wow Sis sema story ♥ தீரன்-நிதி ரெண்டு பேரும் செம ஜோடி & அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச லவ் வேற லெவல். ஹீரோ நேம் 'ரௌத்திரின்' ரொம்ப வித்தியாசமாவும்அழகாகவும் இருக்கு.தீரன்-நிதி, ராஜா-ஹர்ஷு, கார்த்திக்-வல்லீனா& ஆயூஷ்-செலீனா இவங்க எல்லாரோட ஜோடி& லவ் செம சூப்பர் .......... எனக்குஆயூஷோட கேரக்ட்டர் ரொம்ப பிடிச்சியிருந்ததுவில்லனா இருந்தப்பவும் சரி அவன் வில்லன்இல்ல நல்லவனா இருக்கிற வில்லன்னுசொன்ன அப்பவும் சரிமுக்கியமா ஆயூஷ்க்கு இப்படி ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும்னு எதிர் பார்க்கலை அதை விட முக்கியமாக அவங்க ரௌத்திரனோட அண்ணனா இருப்பாங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல குது. கதை தொடக்கத்துல எவ்ளோ கெத்தா இருந்த ரௌத்திரனா இப்படி மாறி போனான் அட கடவுளே எல்லாம் காதல் படுத்தும் பாடு முக்கியமா அவனோட நிதி படுத்துன பாடு.. ரொம்ப அழகான காதல் கதை & தலைப்பும் ரொம்ப அழகா இருக்கு.. VeryNice Story and Happy Ending..

அகமெல்லாம் அவள் முகமே விமர்சனம்

வாவ் வாவ் வாவ் வாவ் மிக மிக மிக மிக அருமைஅருமை அருமையான கதை இசைத்தமிழ்-சாதனா குன்கு இசை அவன் காதலை சொல்ல எனக்கு வார்த்தை பாத்தாது அழகு அழகு அழகு அவ்ளோ அழகு அவன் காதல் முழுக்கு இசைதமிழ் இசை மீது வைத்திருந்த காதலின் வெளிப்படு பாடகன் என்று உருப்பெற்று அந்த முதல் காதலில் வெற்றி பெற்றது அருமைல்குசாது மேல் வைத்திருந்த காதலையும் அவளோட காதலை முதலில் மாறுத்துததும் அதனையும் புரிஞ்கிட்டு அவளை தொந்தரவு செய்யாமல் விலகி இருந்து அவன் காதலை அவளுக்கு உணர்த்தும் போதும் அதன்பின்பு அவ உணரும் தருணம் அவளுக்கு ஏற்படும் பிரச்சினையால் அதைப் வெளிப்படுத்தாமல் மறைத்த போதும் அதையும் உணரந்துட்டு அவளுக்கு ஏற்பட்ட பிரச்சினையைத் அறிந்துக் கொண்டு பிளான் பண்ணி அவளுக்கு புரியவைத்து அவளைப் தன் ணையாக கைகோர்த்த விதம் அருமைசாதனாஇசையின் மேல் உள்ள காதலை உணர்ந்த போது அவளுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அதைப் மறைத்து.அவன் நல்ல இருக்குனும் என்று நினைத்து அவகாதலை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டு தவிப்பதும் பின் இசையின் பிளான் படி அவனுக்கு ஏற்பட்ட வெளிப்படுத்தி உணர்ந்தாது சூப்பர் குழுபிரச்சினையின் போது அவள் காதலைகவின்-பாரு 😍 ராங் காலில் நட்பு வளர்த்து ஒருவரைப் ஒருவர் பார்க்காத காதல் வளர்த்து அந்த காதல் கை கூடிய விதமும் அருமை சானா பாருவின் நட்பும் இசை கவின் நட்பும் நட்பின் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த புரிதலும் நம்பிக்கையும் கதைக்கு அழகு சோர்த்தது சேகர் முகி காதலும் இசையின் அம்மா வள்ளியின்ஜாலியான ஆக்டிவ் அம்மா மகன் பாசமும் அருமைமொழி கனி அவர்களின் நன்றி கடனாக மொழியின் கடைசி ஆசையை நிறைவேற்றசாது வின் காதலையும் அவளுக்கு உள்ளபிரச்சினையைய் கதையாக எழுதி இசைக்கு தெரியப்படுத்தியதும் அருமை.மொழி அவங்ககேரேக்டர் வேற லெவல்இன்னும் இது போன்ற நிறைய கதைகளைக் எழுத்துனும் என்று வாழ்த்துகிறேன்

உருவமறியா உயிர் காதலே விமர்சனம்

அருமை அருமை அருமையான காதல் கதைஉருவமறியா உயிர் காதல் கதையின் தலைப்புக்கு அர்த்தம் முழு கதையையும் வாசித்த பின்பு தா புரிகிறது. அக்னி ழகரன் தகுகு இவர்களின் காதலும் காதலின் மேல் உள்ள நம்பிக்கையும் அருமைநித்தின் நிர்மலாநிர்மலா சரியான கேடி தா எல்லாம் தெரிஞ்சிட்டு தெரியாம மாதிரி கமுக்கமா இருந்து இருக்க. இவர்களின் ஜாலியான காதல் அபாரமாக இருந்தது ஸ்ருதி நல்லவள் தா கூட இருந்த பிரபாகரனால்தா இப்படி மாரி இருக்கபிரபாகரனுக்கு குடுத்துருக்கு தண்டனை இதுவரை பார்க்காத கேக்கதா டெக்னிக்பயன்படுத்தியது வேற லெவல்அருமையான டுவிஸ்ட் நிறைந்த சுவராஸ்யமானகாதல் கதை .நிறைவானசந்தோஷமான மனம் நிறைந்த முடிவு குஇதுபோல் நிறைய கதைகள் எழுதுனும் என்றுவாழ்த்துகிறேன் எழுத்தாளரே.

கனவினில் வந்த கள்வனே விமர்சனம்

கனவுகாதல் ரொம்ப அருமையா இருந்தது சகி😍😍நேத்தே படிச்சிட்டேன் கமெண்ட் 2 லைன் போட கூடாதுன்னு டைம் எடுத்து பண்றேன் COZ அவ்ளோ நீட் அண்ட் perfect😍மேகா அவ்வளவு cute டு பச்ச புள்ள 😘 அவள் காதல் ல எவ்ளோ உருதி ஜஸ்ட் awesomeமுக்கியமா ஹீரோ name சொல்லாம வச்ச epili ல சூப்பர் அ இருந்தது 😘😘வருண் செம and சுரேஷ் வேற லெவல் பிள்ளையார்க்கு கொடுத்த dialogs ல அவ்ளோ சூப்பர் அ இருந்தது.. 💜💜💜 and நகைச்சுவை அ அள்ளி தெளிச்சிருக்கிங்க சுரேஷ் கலாய்க்குற மொமெண்ட் ல வேற லெவல் 😍என்ன ஒரு வருத்தம் சுரேஷ் க்கும் சுஜி க்கும் சேர்த்து கல்யாணம் பண்ணிருக்கலாம்... அவங்களுக்கு இவங்க தானே எல்லாம்.சுஜி தீ most best of one 😍😍பிரண்ட் காகா and பிரண்டா எப்படி பாத்துக்கலாம் எப்படி சமாளிக்கலாம் னு அவ்ளோ அழகா செஞ்சுருப்பாகணேஷ் வில்லன் னு நெனைச்சா என்ன மாதிரி தங்கம் யா அவரு... எல்லாருமே positive அந்த பொண்ணுக்கு பிடிக்கல நெனைச்சு எவ்ளோ கண்ணியமா நடந்து கிட்டாங்க...  எல்லா ஆணும் இப்படி இருந்த எவ்ளோ நல்லா இருக்கும் Ganesh HatsOff uவருண் மேகா ப்ரோபோசல் சீன் ல மாஸ் and சுஜி சுரேஷ் ப்ரோபோசல் சீன் கிளாஸ்😍😍அந்த ஹாஸ்பிடல் சீன் and சுரேஷ் சுஜி ஊருக்கு போன சீன் ல Goosebumps தான்இன்னும் சொல்லிட்டே போவேன்...காதல் கனவா போற இந்த காலத்துல கனவு காதல் கை கூடுனது மிக்க மகிழ்ச்சிஇன்னும் நெறைய கதை எழுதுங்க உங்க எழுத்து உங்களை செம்மை படுத்தும் 😍😍😍😍 நீங்க உங்கள உங்க எழுத்து மூலமா உலகத்துக்கு அறிமுக ஆகா என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகி❣️❣️❣️❣️

Interview Questions

இயல்பாகவே நான் ஒரு கதைப் பிரியை. வாசிப்பின் மேல் ஆர்வம் கொண்டவள். பல நல்ல கதைகளை வாசித்து வியந்து நானும் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்தவள் தான் நான். கவிதையில் ஆரம்பித்த என் பயணம் இப்பொழுது கதைகளிலும் தொடர்கிறது.

எழுத்துப்பிழைகள் என்னைப் பொருத்தமட்டில் இயல்பே.. அவசரகதியில் தட்டச்சு செய்யும் பொழுது வரும் பிழைகளை, முழுவதையும் தட்டச்சு செய்துவிட்டு ஒருமுறை சரிபார்த்து திருத்திக் கொள்ள வேண்டும். கருத்துப் பிழைகள் கண்டிப்பாக கூடாது. கருத்துப்பிழைகள் கதைக் கருவையே சிதைத்து விடும் என்பது என் கருத்து.

தோன்றுவதை எல்லாம் தோன்றும் நேரமே செய்து முடிப்பது சால சிறந்தது.

இப்பொழுதுவரை நான் எழுதிய அத்தனைக் கதைகளும் காதல், குடும்பம், சமூகம், பேன்டஸி சார்ந்த கதைகள் மட்டுமே. அதனால் இதனைத் தவிர மற்ற பிரிவுகள் எனக்கு சற்று சங்கடமான பிரிவுகளே. மிகவும் கடினமாக நான் கருதுவது வரலாறு சார்ந்த கதைக்களம்.

எதிர்மறை கதைகளை வாசிக்கும் பொழுதே மனம் கணத்துவிடும். வாசகியாக மட்டும் இருந்தபொழுது பலமுறை எழுத்தாளரை மனதிற்குள் திட்டக் கூட செய்திருக்கிறேன். எனவே நான் எழுத ஆரம்பிக்கும் பொழுதே எதிர்மறை கதைகள் எழுத வேண்டாம் என்று எனக்குள் முடிவு செய்துவிட்டேன். என் மனமும் என் வாசகர்கள் மனமும் கணத்துப்போவதை நான் விரும்பவில்லை.